
திரு. காமு.சிதம்பரம் அவர்களை பிடிக்கவேண்டும். வைகறையில், இந்த இடுகை மகிழ்வூட்டியது; அறிவு வளர்த்தது; மொழியை போற்றியது; தொன்மை பாராட்டியது.இன்னம்பூரான்
அப்படியெல்லாம் அழமாட்டோம் ஹரி அண்ணா, ஒன்றின் தொடர்ச்சி மற்றதில் என்று
எடுத்துக்கொள்ளும் சித்த பரிபக்குவம் மிக்கவர்களின் குழுமம் இது.கேட்க
ஆவலாக உள்ளது; தொடருங்கள்.
தேவ்
ஹரிகி:
இந்தியமரபு என்பது ஒன்றுதான் என்று அறிவியலும் ஒத்துக்கொள்கின்ற
இக்காலத்தில் வெறுப்போடு பேசும் மாந்தரை நாம் ஏன் கணக்கில் கொள்ள
வேண்டும்?
நமது அறிவியல் சிந்தனை மரபைப் பற்றி நிரப்பச் சொல்லுங்கள்.
கேட்கத்தயாராயுள்ளோம். நீங்கள் இது பற்றியெல்லம் முன்பு தமிழ்.நெட்டில்
பேசியவை நினைவிற்கு வருகின்றன.
கண்ணன்