"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

4,324 views
Skip to first unread message

Krishnan S

unread,
Aug 20, 2013, 11:05:09 PM8/20/13
to tamil_ulagam, mint...@googlegroups.com
  "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''
      ==============================
=
 அறச்செயலைப் போதிப்பதற்காகவே உருவான ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்றான மணிமேகலை கூறும் செய்தி அற்ச்செயல்
 
சிலம்பின் தொடர்நிலைக் காப்பியம் மணிமேகலை;
சாத்தனார் யாத்தது ; பெளத்தம் சார்ந்தது.
காப்பியத் தலைவி மணிமேகலை;
மாதவி பெற்ற மகள்; துறவு செல்வி;
பசித்தவர்க்கு அன்னை.

மணிமேகலையை அவள் பெயர் கொண்ட தெய்வம் மணி பல்லவத் தீவில் விட்டது.
அங்கிருந்த தீவதிலகை என்னும் தெய்வம் தோன்றிப் பல்வேறு அறிவுரைகள்
கூறியது. அது பசியின் கொடுமையைப் பற்றி விவரித்தது.
யாருக்கு அன்னதானம் வழங்குதல் வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறியது.
பசித்தவர்க்கு அன்னை.
அவளுக்கு அபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி  கிடைத்தது.
அது....,

''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
  பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
  நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
  பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி "

 நீக்கும் பான்மையது; அள்ள அள்ளக் குறையாதது.
 அந்த அழுதசுரபியை ஏந்திய அருள்மகள் மணிமேகலை,

  ''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
  உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"

 என்னுந் தகைமையால்.

  "ஊர் ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்
  ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்"
 
   அவளுக்கு ஆபுத்திரன் கையிலிருந்த அமுத சுரபி கிடைத்தது.
தருமம் செய்வது பெரிதன்று; அதைத் தக்கோர்க்குச் செய்தல் வேண்டும் என்பதை
அடுத்து வரும் பாடல் மூலம் விளங்கும். இதனைத்தான் பாத்திரம் அறிந்து
பிச்சையிடு என்பார்கள்.

   ஆற்றுநர்க்கு அள்ப்போர் அறவிலை பகர்வோர்
   ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
    மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
   மண்டினி ஞாலத்து வாழ்வோர் கெல்லாம்
   ''உண்டி கொடுத்தோர் உயிர்
தானாகத் தேடி உணவு உண்ணத் தகுந்தவர்க்கு உணவை வழங்குவது என்பது
பெருமை பரவுதற்காகவோ அல்லது வேறு பயன் கருதி செய்வதற்கு ஒப்பாகும்.
இஃது அறத்தை விற்பதற்கு ஒப்பான வாணிகச் செயலாகும்

மாறாகத்தானே முயன்று தனது உணவைத் தேனே சம்பாதிக்க முடியாத ஒருவர்க்குத்
தரும் உணவு அவர்க்கு உயிர் கொடுத்தற்கு நிகரான செயலாகும்.இவ்வாறு செய்பவரின் வாழ்க்கையே செம்மையான சிறப்பான வாழ்க்கையாகும் என்று
தீவதிலகை தெய்வம் கூறி அவ்வழி நடக்க ஆணையிட்டு சென்றது


- மணிமேகலை-


--

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

chockalingam chockalingam

unread,
Aug 25, 2013, 3:51:12 AM8/25/13
to mint...@googlegroups.com, tamil_ulagam
miga arrumai

K R A Narasiah

unread,
Aug 25, 2013, 5:11:50 AM8/25/13
to mintamil, tamil_ulagam
நான் பெரிப்ளஸ் பற்றிப் பேசிகையில் குறிப்பிட்டது. 
அத ்58 வது பாரா இவ்வாறுள்ளது
58. Beyond Bacare there is the Dark Red Mountain, and another district stretching along the coast toward the south, called Paralia. The first place is called Balita; it has a fine harbor and a village by the shore. Beyond this there is another place called Comari, at which are the Cape of Comari and a harbor; hither come those men who wish to consecrate themselves for the rest of their lives, and bathe and dwell in celibacy; and women also do the same; for it is told that a goddess once dwelt here and bathed
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து 
கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சித் 
தென்திசைக் குமரி ஆடிய வருவோள்
மணிமேகலை 13: 5 -7 வரிகள்
பொருள்:
காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது, மனைவியாகிய சாலி என்பவள் கொழுநனுக்குப் பிழைபுரிந்தமையாலுண்டாம் தண்டத்திற்குப் பயந்து,  தென் திசையிலுள்ள குமரியின்கண் நீராடும் பொருட்டு வருகின்றவள்
நரசய்யா


2013/8/25 chockalingam chockalingam <cccl...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply all
Reply to author
Forward
0 new messages