Fwd: கற்க கசடற

1,529 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 6, 2018, 1:28:58 AM7/6/18
to mintamil

---------- Forwarded message ----------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: 2018-07-05 12:10 GMT+05:30
Subject: கற்க கசடற
To: prog.hea...@gmail.com

                                                                                                                               கற்க கசடற
'கற்க கசடற ....' இக்குறள் பதங்கள் மணி அடிப்பதைப்போல நம் மனதில் பதிந்தவை தாம்.
கல்வியைக் கற்கும் முறை ,அதன் பின்னர் உள்ள கடமை பற்றிப் பேசும்  குறளின் முதற்பதங்கள் இவை .
ஒன்றேமுக்கால் அடிக்குள் உலகத்தை அளந்த உத்தமர் வள்ளுவர்.
அவரது வாக்கில் பொதிந்துள்ள பொருள் ஆழத்தைத் தோண்டிப் பார்ப்போம்.
கல்வியின் சிறப்பையும் அருமையையும் குறித்து  ஒரு தனி அதிகாரமே வகுத்துள்ளார் வள்ளுவர்.
'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று ஒளவையாரும் போற்றியது கல்வி.
                                                                                         "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
                                                                                           கண்ணென்ப வாழும் உயிர்க்கு " என்ற வள்ளுவரின் கூற்றை ஒத்தே ஒளவையாரும் பாடியுள்ளார்.
அக்காலத்தில் கல்வி என்றாலே அது எண்அடிப்படையிலோ அல்லது எழுத்து அடிப்படையிலோ அமைந்து இருதிறப்பட்டது என்று தெரிகிறது. 
எண் அடிப்படையில் அமைவது கணிதம் 
எழுத்து அடிப்படையில் அமைவது அரிச்சுவடியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் இயல், இசை, நாடகம்,மருத்துவம் முதலியவை .  
                                                                                         "கல்வி கரையில; கற்பவர் நாள் சில ;
                                                                                          மெல்ல நினைக்கிற் பிணிபல- என்னும் நாலடியாரின்  பாடலடிகள் இவ்வுலக வாழ்வில் நாம் கல்வி கற்பதற்கு ஏற்படும் இடுக்கண்களை அடுக்கிச் சொல்கின்றன.
கரையில்லாது பரந்து விரிந்த கல்வியைக் கற்க வாழ்நாள் போதாது. அது மட்டுமின்றி ஆழ்ந்து சிந்தித்தால் கற்பதற்கு ஏற்படும் 'பிணிகள் ' ;அதாவது தடைகள் ஏராளம்.உடல்நலம்,நோய்,பொருளாதாரம்,நேரம்,சட்டங்கள், விதிகள், வாய்ப்பு என இப்பிணிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  
                                                                                         "கற்கை நன்றே; கற்கை நன்றே ; பிச்சை புகினும் கற்கை நன்றே " என்று கல்விக்கு ஏற்படும் பொருளாதாரத் தடையை பிச்சை எடுத்தாவது தாண்ட வேண்டும் என்று வெற்றி வேற்கை  கூறுகிறது .      
தடைகளை மீறி நாம் கல்வியைக் கற்கும் போது குற்றமில்லாத கல்வியின் தேவையை   வள்ளுவர் உணர்த்துகிறார்.
'கற்க கசடறக் கற்பவை' என்ற தொடர் இதனை உணர்த்துகிறது.
நாகரிக உலகில் மனிதன் தேவைகளையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்ள பெருக்கிக்கொள்ள அறிவியல் துறைகளும் பல்கிப் பெருகி விட்டன.இதனால் ஒவ்வொரு  துறையிலும் ஏராளமான கிளைகள் .குறிப்பிட்ட ஒவ்வொன்றிலும் நுண்மாண் நுழைபுலம் பெற மனிதன் விழைகிறான்.
மருத்துவத்தில் துறைகள் பெருகப் பெருக நோய்களையும் பல ரகங்களாக நாம் அறிய இயல்கிறது.
பொறியியல் துறையின் பல பிரிவுகள் இன்று நவீன உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
விவசாயத்திலும் பலதுறைக்கல்வி பெருகி உணவுத் தேவையை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
இவை மட்டுமல்ல ---இரு துறைகள் ஒருங்கிணைந்து புதுத் துறைகளும் உருவாகி விட்டன.
உயிரியலும் வேதியலும்  சேர்ந்து உயிரிவேதியல் ...
உயிரியலும் இயற்பியலும் சேர்ந்து உயிரி இயற்பியல் ...
உயிரியலும் தொழில்நுட்பவியலும் சேர்ந்து உயிரித்தொழில்நுட்பவியல் ...
இவை ஒவ்வொன்றுக்குள்ளும் பல உட்பிரிவுகளும் உள்ளன.  
இப்படிக் கல்வியின் பல துறைகளையும் நாம் விரித்துக் கொண்டே செல்லலாம்.
இந்தக் கல்வியைக் கசடறக் கற்றவுடன் மனிதனுக்கு  நிம்மதியான வாழ்க்கை கிட்ட  இயலுமா?
இதுவே சிந்திப்பதற்கு உரிய கேள்வி ."கற்க கசடற கற்பவை  கற்றபின் 
                                                                       நிற்க அதற்குத் தக" என்னும் முழுக்குறளையும் நோக்கும் போது மேற்சுட்டிய வினாவுக்கு விடை கிடைக்கிறதா?
கற்றபின்பு செய்யவேண்டிய கடமை ஒன்று உண்டெனில் அது கற்றதன்படி நிற்பதாகும்.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளையும் நீதிகளையும் பற்றிய கல்வியே உண்மையான உயர்ந்த கல்வி என்று வள்ளுவர் எண்ணினார் என்பது இக்குறளின் மூலம் புலனாகிறது.
மனிதனின் முப்பெரும் தேவைகளான உணவு,உடை,உறைவிடம் முதலியவற்றைப் பூர்த்தி செய்யும் கல்வியையும், சுக வாழ்விற்கான மருத்துவக் கல்வியையும் விட உயர்ந்த கல்வி ஒன்று உண்டு என வள்ளுவர் எண்ணியுள்ளார்.அதனால் தான் அக்கல்வியைக் குற்றமறக் கற்று குறைவற நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்.
 இக்கல்வி புதிதாகத் தோன்றி வளர்ந்து வரும் மதிப்பீட்டுக்கல்வி ஆகும்.
மதிப்பீடு என்றால் என்ன?
வாழ்க்கை விழுமியங்கள் ...ஆங்கிலத்தில்'values'என்று சொல்வர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர் தர வாரா 
பணியுமாம் என்றும் பெருமை 
வாய்மை எனப்படுவது யாது ?
அடக்கம் அமரருள் உய்க்கும் 
அரண் எனப்பட்டதே இல்வாழ்க்கை 
தந்தை மகற்காற்றும் நன்றி 
மகன் தந்தைக்காற்றும் உதவி 
அன்பின் வழியது உயிர்நிலை 
நன்றி மறப்பது நன்றன்று 
சொற்கோட்டம் இல்லது செப்பம் 
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் 
ஒழுக்கம் விழுப்பம் தரும் 
பிறன்மனை நோக்காப் பேராண்மை 
சொல்லுக சொல்லிற் பயனுடைய 
மறந்தும் பிறன்கேடு சூழற்க 
இத்தகைய விழுமியங்களை நம் முன்னோர் வாய்மொழியாக பண்டை இலக்கியச் செல்வங்களில் எங்கும் பரக்கக்  காணலாம்.
அறிவுரை கேட்கப் பின்வாங்கும் இளையோர்க்கும் ,வளர் இளம் பருவத்தார்க்கும் இக்கல்வியைச் சுவைபட வழங்க  பல்கலைக்கழகங்களும் இன்று   முனைந்துள்ளன.    
இக்கல்வி போற்றப்பட்டால் ---
                                                         சுயகட்டுப்பாடுடையவனாக  மனிதன் திகழ்வான்.
                                                         குறைவில்லாத சமுதாயத்தைப் பார்க்க இயலும்
                                                         போரில்லாத உலகத்தை நாம் எதிர்நோக்க முடியும்.
                                                         சாதிச் சண்டையும் சமயச் சண்டையும் இல்லாத மனித மனங்களை நாம் உணர்ந்து இன்பமடைய முடியும்.
இக்கல்வியையே வள்ளுவர் கசடறக் கற்க ஆணையிடுகிறார்.
கற்றபின்பு அதன்படி நிற்க அறிவுறுத்துகிறார்.
போர்மேகம் சூழ்ந்துள்ள இன்றைய உலகில் மதிப்பீட்டுக்கல்வி பிஞ்சுக்குழந்தைகள் முதல் பழங்களாகிய முதியோர் வரை எல்லோர்க்கும் தேவையானது. 
கண்மணி 

தேமொழி

unread,
Jul 6, 2018, 2:02:51 AM7/6/18
to மின்தமிழ்
||  மனிதனின் முப்பெரும் தேவைகளான உணவு,உடை,உறைவிடம் முதலியவற்றைப் பூர்த்தி செய்யும் கல்வியையும், சுக வாழ்விற்கான மருத்துவக் கல்வியையும் விட உயர்ந்த கல்வி ஒன்று உண்டு ||

சுக வாழ்விற்கான என்பதைவிட நல  வாழ்விற்கான என்பது பொருத்தமாக இருக்கலாம் என்பது எனது கருத்து.

பொருள் ஒன்று என்றாலும் (சுகப்பிரசவம்), பொதுவான பயன்பாட்டில் சுகம் என்பதற்கும் நலம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. (நலம் பெற வேண்டும் நீ என்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு/நல்ல சுகமான தூக்கம் )

மருத்துவம் படிப்பது சுகமாக வாழ என்ற பொருள் எனக்கு வருகிறது. 

..... தேமொழி 

இசையினியன்

unread,
Jul 6, 2018, 2:20:14 AM7/6/18
to மின்தமிழ்
திரு கண்மணி அவர்களே,

வள்ளுவரின் கருத்துக்கள் சுருங்க தெளிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தாெடர்க.

சந்நியாசம் என்கிற வேதக்கருத்தைத் திருக்குறள் ஏற்கவில்லை. என கூறுகின்றனர் இது உண்மையா எனவும் ஒரு சுருங்கட்டுரை தந்திடுங்கள் என வேண்டுகிறேன்.

kanmani tamil

unread,
Jul 6, 2018, 2:33:38 AM7/6/18
to mintamil
நன்றி, தேமொழி .
 இது வானொலி நிகழ்ச்சிக்காக எழுதி அனுப்பிய கட்டுரை.
 அவர்கள் தம் கொள்கை&சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இன்னும் மாற்றங்களைச் செய்யச் சொல்வர்.
அதனால் தான் என் ஆசைப்படி எழுதியதை முதலில் மின்தமிழில் பதிவு செய்தேன்  .
உங்கள் கருத்து  ஏற்றுக் கொள்ளத்தக்கதே . மாற்றிக்கொள்கிறேன். 
கண்மணி             

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

PitchaiMuthu

unread,
Jul 6, 2018, 3:00:37 AM7/6/18
to Mintamil

எந்த வானாெலிக்கு என்பதை விட்டுவிட்டீர்!

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PLZZFVAu1lc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jul 6, 2018, 3:45:54 AM7/6/18
to mintamil
ALL INDIA RADIO,MADURAI.
காலை ஆறு மணிக்கு ஒலிபரப்பாகும் 'சான்றோர் கருத்து ' என்னும் நிகழ்ச்சி 
கண்மணி  

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PLZZFVAu1lc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Jul 6, 2018, 3:58:12 AM7/6/18
to mintamil
///சந்நியாசம் என்கிற வேதக்கருத்தைத் திருக்குறள் ஏற்கவில்லை. என கூறுகின்றனர் இது உண்மையா எனவும் ஒரு சுருங்கட்டுரை தந்திடுங்கள் என வேண்டுகிறேன். ///

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின் "---இந்தக்குறள்  தான் அந்தக்கருத்துக்கு அடிப்படை ஆதாரம்.
பொருள் :
                  தலை,முகமெல்லாம் மழித்து விட்டு மொட்டை சாமியாராக வேண்டிய தேவை இல்லை .
                  எதையும் மழிக்காமல் எல்லாவற்றையும் வளர்த்து தாடி சாமியாராக வேண்டிய தேவையுமில்லை .
                  உலகம் பழி என்று சொன்னவற்றைச் செய்யாது இருந்தால் போதுமானது.
எனக்கு மிக மிகப் பிடித்த குறள் இது.
எப்பேர்ப்பட்ட 'தில்'லான பேர்வழி நம்ம திருவள்ளுவர்.
 'மழித்தல் ' என்ற ஒரு விஷயத்திற்குள் எவ்வளவு செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறார் பாருங்களேன்.
அவர் மிகச்சிறந்த சமூகச் சிந்தனையாளர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் ?  
அவரைச் சமயச் சங்கிலியால் கட்டுபவர் யாராக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட ஆசை என்று அதனால் தான் சொல்கிறேன்.
கண்மணி 

kanmani tamil

unread,
Jul 7, 2018, 1:59:07 PM7/7/18
to mintamil
உண்மைதான் இசையினியன் .
திடீரென்று நிலையத்திலிருந்து தொலைபேசி ஒரு வாரத்திற்குள் 6 உரைகள் தயார் செய்ய வேண்டும் என்றவுடன் ....
நான் ஏற்கெனவே குழந்தைகளுக்காக எழுதி வைத்திருந்த 3கட்டுரைகளைக் கொஞ்சம் நீ.....ட்டி அனுப்பி விட்டேன்.....
அவை பாமரருக்காக எழுதப்பட்டவை அல்ல.
'தொட்டிலுக்குள் சேய் ' என்ற கட்டுரை மட்டும் தான் புதிதாகத் தயார் செய்தது .அது பக்தி தொடர்பானது ;ஆதலால் அதற்குரிய நடை தேவைப்பட்டது.
இன்னும் ஒன்று பாதிவழியில் நிற்கிறது.....அது மாணவர் உலகிற்கேற்றது;ஆதலால் அதுவும் பாமர நடையினது இல்லை....முடித்தவுடன் பதிவேன். 
ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தான் எழுதியுள்ளேன்.
ஆனால் பாமரர்க்கு  நிச்சயம் இதைக் கேட்கும்போது அலுப்பு இருக்காது என்பது என் கணிப்பு. பார்ப்போம்....
நீங்கள் சொன்னவற்றை அடுத்த அடி எடுத்து வைக்கும் போது செய்கிறேன். 
கண்மணி 

2018-07-07 22:22 GMT+05:30 PitchaiMuthu <pitchaim...@gmail.com>:

திரு கண்மணி அவர்களே,

கட்டுரைக்கும், வானொலிப் பேச்சுரை வித்தியாசம் உண்டு அல்லவா?

இக்கட்டுரையை தென்கச்சியார் எழுதினால்  எப்படி எழுதுவார்? அவரை மனதில் வைத்து கட்டுரை எழுதுங்கள். உங்கள் நடையின் மற்றாெரு பரிமாணம் பிறக்கும்.

நம்ம இலங்கை வானாெலியின் கதாநாயகர்கள் மயில்வாகனம் எப்படி எழுதி இருப்பார்? இராஜா எப்படி வர்ணனை செய்து இருப்பார்? இலங்கை வானாெலியின் கதாநாயகி ராசேஸ்வரி சண்முகம் எப்படி கூறுவார்? அட நம்ம சிங்கப்பூர் வானாெலியின் அழகிய தமிழ் பாண்டியன் எப்படி எழுதியிருப்பார் என்றெல்லாம் மனதில் காெண்டு எழுதலாம்!

நம்மாேடு வாழும் அப்துல்கனீப், குன்றக்குடி அடிகளார் ஆகியாேரின் நடை மாதிரியைப் பயன்படுத்தலாம்.

சுருங்கக் கூறின்,

கண்மணி முன்னர் ஒரு பாமரன் வந்து நின்றால் அவனுக்கு எப்படி இக்கட்டுரையைச் சாெல்வீர்களாே அப்படி இருக்கனும் வானாெலி பேச்சுரை. கட்டுரை என்பதும் கூட வானாெலிக்கு சரியான பதம் இல்லை, பேச்சுரையாக இருக்க வேண்டும்.

மதுரை வானாெலியார் சாதாரண நடை எனும் பெயரில் அதிக ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்த விளைவர். சில நிகழ்ச்சிகளுக்கும் கூட ஆங்கில வார்த்தயைை வைத்து உள்ளனர் என்பது மேலதிகத் தகவல்.

---

இசையினியன்

unread,
Jul 8, 2018, 2:37:03 AM7/8/18
to மின்தமிழ்

நன்றி. நேர்மறையாக எடுத்துக் கொண்டீர். நன்றிகள்.

வானொலி நிலையத்தில் நான் கண்ட மூவர்,

மதிப்புமிகு சுப்ரா அவர்கள், ஜனரஞ்சிதமாக இருக்கணும் தம்பி என்பார்.
மதிப்புமிகு வடலூர் வாசகர் நமது படிப்பின் மேதமையை நேயர்களுக்கு திணிக்கக் கூடாது என்பார். இவ்விருவர் தற்போது திருச்சி வானொலில் உள்ளனர்.
ஐயா மகா சோமாஸ் கந்த மூர்த்தி தற்கால அறிவிப்பின் முன்னோடின்னு கூடச் சொல்லலாம். பேச்சு ஆளுமை இவரிடம் இருக்கும். ஐயா ஓய்வு பெற்று விட்டார். மதுரையில் உள்ளார் என நினைக்கிறன்.

kanmani tamil

unread,
Jul 8, 2018, 4:01:10 AM7/8/18
to mintamil
சுப்ராவையும் ,சோமாஸ்கந்தமூர்த்தியையும், கொடைக்கானல் வானொலி நிலையத்தில் நேரில் சந்தித்து உள்ளேன்.
சோமாஸ்கந்தமூர்த்தியின் மேற்பார்வையில் கோடை வானொலியில்  ஏழெட்டு உரைகளும் நிகழ்த்தியுள்ளேன். 
கல்லூரியில் தற்காலிக விடுப்புக்கு விண்ணப்பித்து கோடை வானொலியில் நிகழ்ச்சியில் பங்கெடுத்து விட்டு ......பின்னால்" நீ பங்கேற்ற வானொலி நிகழ்ச்சிகளுக்குரிய ஆதாரங்களைக் கல்லூரிக்குக்  கொடு; தேசீயத் தர நிர்ணயிக்குழுவிடம்  காட்டி 5நட்சத்திர அந்தஸ்து பெறவேண்டும்" என்றவுடன் .....
"அப்ப எனக்குப் பணிமேல் விடுப்பு கொடுங்கள்" என்று போராடி இருக்கிறேன். 
சுப்ரா தான் வருகைச்சான்றிதழ் கொடுத்தார்.
மதுரை வானொலியும் புதிது இல்லை.
கண்மணி      

PitchaiMuthu

unread,
Jul 8, 2018, 9:11:15 AM7/8/18
to Mintamil

நன்று.

அப்பாே தங்களின் உரையையும் தற்பாேது மின்தமிழாருக்கு பகிர வேண்டும் திரு கண்மணி.

கேட்பாெலி இருக்குமே?

On Jul 8, 2018 1:31 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சுப்ராவையும் ,சோமாஸ்கந்தமூர்த்தியையும், கொடைக்கானல் வானொலி நிலையத்தில் நேரில் சந்தித்து உள்ளேன்.
சோமாஸ்கந்தமூர்த்தியின் மேற்பார்வையில் கோடை வானொலியில்  ஏழெட்டு உரைகளும் நிகழ்த்தியுள்ளேன். 
கல்லூரியில் தற்காலிக விடுப்புக்கு விண்ணப்பித்து கோடை வானொலியில் நிகழ்ச்சியில் பங்கெடுத்து விட்டு ......பின்னால்" நீ பங்கேற்ற வானொலி நிகழ்ச்சிகளுக்குரிய ஆதாரங்களைக் கல்லூரிக்குக்  கொடு; தேசீயத் தர நிர்ணயிக்குழுவிடம்  காட்டி 5நட்சத்திர அந்தஸ்து பெறவேண்டும்" என்றவுடன் .....
"அப்ப எனக்குப் பணிமேல் விடுப்பு கொடுங்கள்" என்று போராடி இருக்கிறேன். 
சுப்ரா தான் வருகைச்சான்றிதழ் கொடுத்தார்.
மதுரை வானொலியும் புதிது இல்லை.
கண்மணி      
2018-07-08 12:07 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:

நன்றி. நேர்மறையாக எடுத்துக் கொண்டீர். நன்றிகள்.

வானொலி நிலையத்தில் நான் கண்ட மூவர்,

மதிப்புமிகு சுப்ரா அவர்கள், ஜனரஞ்சிதமாக இருக்கணும் தம்பி என்பார்.
மதிப்புமிகு வடலூர் வாசகர் நமது படிப்பின் மேதமையை நேயர்களுக்கு திணிக்கக் கூடாது என்பார். இவ்விருவர் தற்போது திருச்சி வானொலில் உள்ளனர்.
ஐயா மகா சோமாஸ் கந்த மூர்த்தி தற்கால அறிவிப்பின் முன்னோடின்னு கூடச் சொல்லலாம். பேச்சு ஆளுமை இவரிடம் இருக்கும். ஐயா ஓய்வு பெற்று விட்டார். மதுரையில் உள்ளார் என நினைக்கிறன்.

On Saturday, 7 July 2018 23:29:07 UTC+5:30, kanmanitamilskc wrote:
உண்மைதான் இசையினியன் .
திடீ�

N. Ganesan

unread,
Jul 8, 2018, 10:09:23 AM7/8/18
to மின்தமிழ்

On Friday, July 6, 2018 at 12:58:12 AM UTC-7, kanmanitamilskc wrote:
///சந்நியாசம் என்கிற வேதக்கருத்தைத் திருக்குறள் ஏற்கவில்லை. என கூறுகின்றனர் இது உண்மையா எனவும் ஒரு சுருங்கட்டுரை தந்திடுங்கள் என வேண்டுகிறேன். ///

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின் "---இந்தக்குறள்  தான் அந்தக்கருத்துக்கு அடிப்படை ஆதாரம்.
பொருள் :
                  தலை,முகமெல்லாம் மழித்து விட்டு மொட்டை சாமியாராக வேண்டிய தேவை இல்லை .
                  எதையும் மழிக்காமல் எல்லாவற்றையும் வளர்த்து தாடி சாமியாராக வேண்டிய தேவையுமில்லை .
                  உலகம் பழி என்று சொன்னவற்றைச் செய்யாது இருந்தால் போதுமானது.
எனக்கு மிக மிகப் பிடித்த குறள் இது.
எப்பேர்ப்பட்ட 'தில்'லான பேர்வழி நம்ம திருவள்ளுவர்.
 'மழித்தல் ' என்ற ஒரு விஷயத்திற்குள் எவ்வளவு செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறார் பாருங்களேன்.
அவர் மிகச்சிறந்த சமூகச் சிந்தனையாளர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் ?  
அவரைச் சமயச் சங்கிலியால் கட்டுபவர் யாராக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட ஆசை என்று அதனால் தான் சொல்கிறேன்.
கண்மணி 

இக்குறளில் வள்ளுவர் அவரது சமயம் சமணம் எனக் காட்டியுள்ளார்.

பெரியார் வள்ளுவருக்கு முதலில் தமிழ்நாட்டில் மாநாடு நடத்தியவர்.
அதில் பேசிய தமிழ் அறிஞர்களின் உரைகளைக் கூர்ந்து கேட்டுள்ளார்.
இதற்குப் பின்னர் தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்றோரைப் பற்றிக்
கருத்துகள் கூறியுள்ளார். வள்ளுவரது சமயக் கருத்துகள் - சமணம் - இருப்பதை
பெரியாரும் தெரிந்திருக்கிறார் என்பதற்கு அவரது உரைகள் சான்று.

நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PLZZFVAu1lc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jul 8, 2018, 1:22:36 PM7/8/18
to mintamil
///கேட்பாெலி இருக்குமே? ///

ஒளிபரப்பு முடிந்தவுடன் பதிகிறேன்.
கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages