தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?
please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence
fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained
inside your message.
Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
Does it mean that Tamil has BORROWED from Prakrit?
When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE
<http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also
spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu"
(SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in
France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"),
although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
Please clarify!
Yours with every good wish
-- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
வினோத் ராஜன் a écrit :
>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில்
>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர்
>> காலத்திற்க்கு முன்பு.
>>
>
> ஆம்.
>
> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு
> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
>
> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
>
> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( <
> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை
> என்று நிறுவியுள்ளாரே.
>
> V
>
> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>> wrote:
>> இதோ
>>
>>
>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள்
>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
>>>
>>> நேயம் -- n <Pkt. nE-am < snEha
>>> 1) Love, affection; அன்பு.
>>>
>
>
>> அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
>>
>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே -
>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என்
>> அவதானம் .
>>
>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே
>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
>>
>> விஜயராகவன்
>>
>
>
Vijayaraghavan
On 4 Nov, 20:13, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-
> >> விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -
let us wait indeed for Vinodh's comment,
I was certainly influenced in my reading/interpreting
by my immersion in ancient texts.
The first time I saw (more than 20 years ago) the word "தாக்குதல்"
was when I tried to understand the following குறள் verse:
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
(குறள் 1082)
Best
-- jlc
விஜயராகவன் a écrit :
செல்வாக்கு, வசப்பாடு = influence
தாக்கம் = impact (ஒரோவழி influence ஆகும்)
-------
அணங்கு - சங்கத்தில் முக்கியச் சொல்.
வி. எஸ். ராஜத்தின் கட்டுரையில் (JAOS)
பேசாப் பொருள்கள் பல உள.
ஹார்ட்டும், நாமும் பேசியது நினைவிருக்கலாம்.
கணேசன்
On 4 Nov, 15:27, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> >> - Show quoted text -- Hide quoted text -
my complete misunderstanding of what Vinodh said
shows that it is quite difficult and tricky to switch from Classical or
medieval Tamil texts
(which is my field of research)
to Modern Tamil.
The *Tamil Lexicon* (page 1821) gives 6 meanings for தாக்கம். They are in
this order:
1.Attack, assault, hit
2. Reaction, counteraction
3. Force, strength
4. Onerousness
5. Swelling
6. Preponderance
[the full entry is: தாக்கம்¹ tākkam, n. < தாக்கு-. 1. Attack, assault, hit;
தாக்கு. Loc. 2. Reaction, counter- action; எதிர்தாக்குகை. (W.) 3. Force;
strength; power, as of blow, medicine or fire; momentum; வேகம். (W.) 4.
Onerousness, heaviness; கனத் திருக்கை. (யாழ். அக.) 5. Swelling; வீக்கம். (யாழ்.
அக.) 6. Preponderance; மிக்கிருக்கை. (W.)]
BUT, in Cre-A dictionary (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, Second edition,
2008), the presentation is quite different: The entry reads (on page 701):
**தாக்கம் /பெ./**
1. *(குறிபபிட்ட விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு;* impact; influence.
/உங்கள் கதைகள் வாசகனின் மனத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று
நினைக்கிறீர்கள்? // மேல்நாட்டுப் பண்பாட்டின் தாக்கத்தை அவருடைய பேச்சில் காண முடிகிறது./
2. (-ஆக, -ஆன) (இலங்) *மனத்தைப் புண்படுத்தும் அல்லது வேதனைக்கு உள்ளாக்கும் தன்மை; *
hurtful (speech, etc.). /உன் பேச்சு தாக்கமாக இருக்கிறது. // அவரிடம் கேட்ட
தாக்கமான கேள்விகளால் தலை குனிந்தார்/
I shall try to learn from that mistake and always verify with the Cre-A
dictionary what is unclear for me in the messages posted on that list.
Thanks for the tutorial!
-- Jean-Luc
Innamburan Innamburan a écrit :
I think I responded to you Via PM :
There was a thread in Min Tamil too ?
Anyways I will copy, paste my response here:
************************
Dear Jean,
தாக்கம் = Influence :-)
I had no idea that தாக்கம் also = Attack. Isn't that தாக்குதல் ?
*************************
V
V
On Nov 5, 10:11 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> > 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
On Nov 4, 11:16 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> I had no idea that தாக்கம் also = Attack. Isn't that தாக்குதல் ?
>
தாக்கம் = Attack (hence, Impact, Influence, ...)
தாக்குதல் = to attack
NG
இந்த 'assault' எனும் சொல்லையும் தமிழர்கள் பிறழ்வுற்ற பொருளில்
பயன்படுத்துகின்றனர்.
"எங்க தலைவர் இம்மாதிரி பெரிய காரியங்களையெல்லாம் 'அசால்ட்டா' செய்வார்"
என்பது வசனம்.
இங்கு அசால்ட் என்றால் தாக்கு என்ற பொருள் அல்ல.
மிக எளிதாக, இலகுவாகச் செய்வார் என்று பொருள்படுகிறது.
இது எல்லா மொழிகளிலும் நடைபெறுகிறது.
உதாரணமாக ஜெர்மன் மொழியில் வேலை (உத்தியோகம்) என்பதற்கு arbeit
(அர்பைட்) என்ற சொல்.
இதே சொல்லை ஜப்பானியரும், அவர்களிடமிருந்து கொரியர்களும்
பயன்படுத்துகின்றனர். ஆனால் part-time job எனும் பொருளில்.
கண்ணன்
வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் தாக்கம்
பணவீக்க தாக்கம் - எளிய விளக்கம்.
நெருங்கி வரும் ஆபத்து ...நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம்
டோவ்ன்டப் (Downdap) வைரஸ் பல மில்லியன் கணனிகள் தாக்கம்
அரசியலில் என்.எஸ்.ஜி.யின் தாக்கம்
http://www.tamilish.com
Influence; Impact -
நவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்
சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்
சிறிய தாக்குதல் பெரிய தாக்கம்
ஒரு முடிவின் தாக்கம்
எனக்குள் ஒரு தாக்கம்
Attack -
ஆழிப்பேரலை தாக்கம்
மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது
யாழ்ப்பாண முகாம்களில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்த் தாக்கம்
வன்னிக் களமுனையில் வைரஸ் தாக்கம்
இலைச்சுருள் தாக்கம்
On Nov 5, 1:13 am, Jean-Luc Chevillard <jean-luc.chevill...@univ-paris-
"தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
தாக்கு - பிறவினை
??? - தன்வினை
தாங்கு
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே. (5.19.9.)
On Nov 5, 12:36 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 5, 12:29 am, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
>
> > ஒரு சந்தேகம்,
>
> > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
>
> > தாக்கு - பிறவினை
>
> > ??? - தன்வினை
>
> தாங்கு
>
தாக்கு-:தாங்கு-,
வாக்குதல்:வாங்குதல்
வீக்குதல்: வீங்குதல்
....
On Nov 5, 12:29 am, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
His hypotheses are influenced by Einstein's theories.
=
அவரது கருதுகோள்கள் ஐன்ஸ்டைனின் தத்துவத் தாங்கல் (=செல்வாக்கு) கொண்டவை.
வாங்கு - தன்வினை
??? - பிறவினை (வாக்கு ?!)
கேள்விகள் கேட்பதுதான் எவ்வளவு எளிது ? :)
வாங்குதல் = to bend
வாக்கு = Bend (the result by the action above)
(Nothing to do with Sanskrit Vaac-/vaak- as in vaakdevi = Saraswati)
In the case of this verse from Appar தேவாரம்,
the meaning given for தாங்குதல்
by traditional scholars
is "to protect".
See the English paraphrase by V.M. Subramanya Ayyar for this verse:
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
Civaṉ who has as a half Umai who gave birth to our Kaṭampaṉ
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
who dwells in the holy temple of Karakkōyil in beautiful Katampai (Kaṭampūr)
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
It is his duty to protect even me who is low and who is his devotee
என் கடன் பணி செய்து கிடப்பதே
my duty is to follow the path shown by his grace without ever thinking
with egotism even in a small measure "it is my action"
And see the பொழிப்புரை and the குறிப்புரை found on the <www.thevaaram.org>
site:
பொழிப்புரை
கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத்
திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து
தற்போதம் இன்றியே இருத்தல்.
குறிப்புரை:
நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும். கடம்பமலர் சூடும் முருகன். பெற்றவள் -
பார்வதி. பங்கினன் - பாகமாக உடையவன். தென் - அழகிய. தன்கடன் - அப்பெருமான் தன் கடமை.
அடியேனையும் - அடியவனாகிய என்னையும். உம்மை இழிபுணர்த்திற்று. தாங்குதல் -
காப்பாற்றுதல். என்கடன் - என்னுடைய கடமை. கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல்
என்பது சிறிதும் இன்றி இருத்தல்.
Best wishes
-- jlc
N. Ganesan a écrit :
> [...]
Dear NG,
In the case of this verse from Appar தேவாரம்,
the meaning given for தாங்குதல்
by traditional scholars
is "to protect".
இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.
வாங்குதல் = to bend
வாக்கு = Bend (the result by the action above)
(Nothing to do with Sanskrit Vaac-/vaak- as in vaakdevi = Saraswati)
பரம வைஷ்ணவனான கம்பன் இப்பொருள்படும்படி சொல்லியிருப்பானா?
ஜெகன்மாதாவான திருமகள் ”அகலுகில்லேன் என்று திருமகள் உறை மார்பா” என்று
சொல்லும்படியாக பரமனின் மார்பில் உறைபவளாயிற்றே. பரம பவித்ரமான இடத்தை
அன்றோ பரமன் அவளுக்கு அளித்திருக்கிறான். அப்படி இருக்கும் போது திருமகள்
வாசம் செய்கின்ற பாதம், அதுவும் அன்னையின் காலடியில் நாய் போல் கிடைக்க
வரம் வேண்டும் பரம பாகவதனான இளையாழ்வான் `பாதத்தில்` அன்னை உறைகிறாளா?
பொருந்தவே இல்லையே!
இந்த அபச்சாரத்தை கம்பன் செய்திருப்பான் என்று மனம் ஒப்பவில்லை. வேறு
பொருள் இருக்கும்.
அடியேன்.
பரம வைஷ்ணவனான கம்பன் இப்பொருள்படும்படி சொல்லியிருப்பானா?
ஜெகன்மாதாவான திருமகள் ”அகலுகில்லேன் என்று திருமகள் உறை மார்பா” என்று
சொல்லும்படியாக பரமனின் மார்பில் உறைபவளாயிற்றே. பரம பவித்ரமான இடத்தை
அன்றோ பரமன் அவளுக்கு அளித்திருக்கிறான். அப்படி இருக்கும் போது திருமகள்
வாசம் செய்கின்ற பாதம், அதுவும் அன்னையின் காலடியில் நாய் போல் கிடைக்க
வரம் வேண்டும் பரம பாகவதனான இளையாழ்வான் `பாதத்தில்` அன்னை உறைகிறாளா?
பொருந்தவே இல்லையே!
இந்த அபச்சாரத்தை கம்பன் செய்திருப்பான் என்று மனம் ஒப்பவில்லை. வேறு
பொருள் இருக்கும்.
அடியேன்.
எனக்கும் தெரியாது.
நான் முதலிலேயே தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ஒரே வினைச் சொல்லாக,
துணைவினை இல்லாமல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் இவற்றிலும் 'இடு'
என்ற வினை சேர்ந்து இருக்கிறது.
எனக்கும் தெரியாது.
நான் முதலிலேயே தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ஒரே வினைச் சொல்லாக,
துணைவினை இல்லாமல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
கேட்டிட்டான், சொல்லிட்டான், தந்திட்டான், என்றிட்டான் இவற்றிலும் 'இடு'
என்ற வினை சேர்ந்து இருக்கிறது.
இவையெல்லாம் துணைவினை சேர்ந்த தனிச்சொற்கள், அல்லது இரு செற்கள் சேர்ந்த
தனிச்சொற்கள் என்று வைத்துக் கொள்ளலாம். "இருவரும் சேர்ந்து தனியாக.."-
என்பதில் வரும் தனி போல. :-)
தனி ??
தன் - தனி ??
யோசித்தால் கேள்விகள்"தான்" வருகின்றன.
The one who attacks = தாக்குபவன்
The one who gets attacked = தாங்குபவன்.
So, for a thing to be influenced by something else
we can employ verbs - vayappaTal, Entutal, taaGgutal etc.,
சற்றே வேறுபடுத்திக் காட்ட,
தாக்கம் = impact
தாங்கல் = influence
என்று கொண்டால் மொழிபெயர்ப்புகளில் துல்லியம் மிகும்.
(இல்லையெனில், இராமகி குறிப்பிடுவதுபோல்,
ப்ராஜக்ட், ப்லான், .... எதுவானாலும் “திட்டம்”
என்பதுபோல் ஆகிவிடும்).
வாக்கு = வளைவு
வாங்கு- = வளைதல்
நா. கணேசன்
On Nov 5, 1:44 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> > என்க டன்பணி செய்து கிடப்பதே. (5.19.9.)- Hide quoted text -
அப்பப்ப,,
"கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது :-)
ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?
V
On Nov 5, 5:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ஏத்து-:ஏந்து- போன்ற தொடர்புடைய வினைச்சொற்கள் தாக்கு-:தாங்கு-
>
> The one who attacks = தாக்குபவன்
> The one who gets attacked = தாங்குபவன்.
>
> So, for a thing to be influenced by something else
> we can employ verbs - vayappaTal, Entutal, taaGgutal etc.,
>
> என்று கொண்டால் மொழிபெயர்ப்புகளில் துல்லியம் மிகும்.
On Nov 5, 3:00 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > வாங்குதல் = to bend
> > வாக்கு = Bend (the result by the action above)
>
வாக்கு² vākku , n. < வாங்கு-. 1. Bend; வளைவு. கோட்டிய வில்வாக்
கறிந்து (நாலடி, 395).
----------
நான் இங்கே குறிப்பிட்டது வடசொல் வாச்-/வாக்-/வசனம்/வாசகர்.... அல்ல
> > (Nothing to do with Sanskrit Vaac-/vaak- as in vaakdevi = Saraswati)
>
> It has everything to do with the Sanskrit vaac in many places. For
> instance,
>
> வாக்கினுக் கீசனையும் நின்
> வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்....
>
> (பாரதி, பாஞ்சாலி சபதம்)
>
ஆம். நிறைய வாக்-/வாச்- .... தமிழில் உண்டு.
போரின் தேவதை துருக்கை (தமிழில் கொல்லி- , கொற்றவை (< கொல்-),
வாக்தேவி ஏன் என்பதற்கு பழைய சமற்கிருத நூல்களில் இருந்தும்,
தமிழின் தொடர்பு பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரை:
Vāc as a Goddess of Victory in the Veda and her relation to Durgā
(2000)
http://repository.kulib.kyoto-u.ac.jp/dspace/handle/2433/48782
நா. கணேசன்
On Nov 5, 6:42 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> > தாக்கம் = impact
> > தாங்கல் = influence
>
> அப்பப்ப,,
>
> "கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது :-)
>
> ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?
>
இருக்கிற அர்த்தம் தான்:
> > > - Show quoted text -- Hide quoted text -
Look at this Tevaram:
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
Here "tAGgutal" = to bear in mind.
Appar's writings are influenced by Vedic texts.
அப்பரின் எழுத்துக்கள் வேதங்களின் கருத்துக்களைத் தாங்கியவை.
Here "tAGgutal" = to bear in mind.
NG
வேறு பயன்பாடுகள்,
தாங்க முடியவில்லை - பொறுத்துக் கொள்ள முடியவில்லை
அவனைத் தாங்க வேண்டுமா ? - கெஞ்சிக் கேட்க வேண்டுமா ?
தாங்கு - சுமை
தாங்குவதில் சுமை கைக்கு மேல் இருக்கும், தூக்கும் போது சுமை கைக்கு கீழ்
இருக்கும்.
வேடந்தாங்கல் ??
Is Irāvaṇaṉ used as a சுமைதாங்கி ?
- jlc
வி. சு. a écrit :
> [....]
>
> வேறு பயன்பாடுகள்,
>
> தாங்க முடியவில்லை - பொறுத்துக் கொள்ள முடியவில்லை
> அவனைத் தாங்க வேண்டுமா ? - கெஞ்சிக் கேட்க வேண்டுமா ?
> தாங்கு - சுமை
>
> [...]
On Nov 5, 3:01 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
>
> > On Nov 5, 12:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> > > 2009/11/5 வி. சு. <vijayakumar.subbu...@gmail.com>
> > ...
> > > > "தாக்குதலுக்கு உட்படு" என்பதை ஒரே வினைச் சொல்லில் சொல்ல இயலுமா ?
> > ...
> > > தாக்கப்படு. தாக்கம்பெறு (be influenced). தாக்கலுறு (be attacked).
> > தாக்கமடை
> > ...
>
> > இல்லை. இச்சொற்களில், படு, பெறு, உறு, அடை போன்ற துணைவினைகள் வந்துள்ளன.
>
> துணைவினை வந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லா? அப்படியும் இலக்கணம்
> சொல்கிறதா? வியப்பாகத்தான் இருக்கிறது. இது தவறென்றால், இதற்குரிய சொல்லை
> நீங்களே சொல்லுங்கள். கேட்டுத் தெளிந்துகொள்கிறேன்.
>
Look at this Tevaram:
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
Here "tAGgutal" = to bear in mind.
Appar's writings are influenced by Vedic texts.
அப்பரின் எழுத்துக்கள் வேதங்களின் கருத்துக்களைத் தாங்கியவை
> --
>> வேடந்தாங்கல் <<
சென்னைக்குப் பக்கத்தில் நீர் தேங்கி நிற்கும் குளங்களை (tanks) தாங்கல்
என்றே அழைப்பர். அய்யப்பன் தாங்கல், ஈக்காட்டுத் தாங்கல் போன்ற
இடப்பெயர்களை நோக்குக.
இராம.கி.
> ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்தன்னைத்
> தாக்கினான், விரலினாலே தலைபத்தும் தகர ஊன்றி;
> நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
> ஆக்கினார், அமுதம்ஆக---அவளிவணல்லூராரே.
> (தேவாரம், 4.59, 10)
சிவன் தாக்கினான், இராவணன் தாங்கினான்.
> Is Irāvaṇaṉ used as a சுமைதாங்கி ?
> - jlc
> வி. சு. a écrit :
> > [....]
> > வேறு பயன்பாடுகள்,
> > தாங்க முடியவில்லை - பொறுத்துக் கொள்ள முடியவில்லை
> > அவனைத் தாங்க வேண்டுமா ? - கெஞ்சிக் கேட்க வேண்டுமா ?
> > தாங்கு - சுமை
> > [...]- Hide quoted text -
On Nov 5, 6:42 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > சற்றே வேறுபடுத்திக் காட்ட,
> > தாக்கம் = impact
> > தாங்கல் = influence
>
> அப்பப்ப,,
>
> "கைத்தாங்கலா"ன்னு சொல்றாங்களே.. அப்ப அதை என்னப்பன்றது :-)
>
> ஏற்கன்வே இருக்குற வார்த்தையோட அர்த்தத்தை மாத்தி ஏன் குழப்பணும் ?
Not really.
Look at this Tevaram:
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
tAGku- "to bear". That can happen in a physical or abstract (mental,
non-physical) sense.
tAGkal = "influence" uses the Tamil verb, tAGku- in the abstract
sense.
Look at Tevaram verse: Aakkuur citizens "4 maRaiyOTu 6 aGkam pala
kalaikaL tAGkinAr"
- here, people are bearing in mind vedas etc.,
NG
-- jlc
N. Ganesan a écrit :
அகோ வாரும் பிள்ளாய்!!நல்லவேளை உரை அனுப்பினீர் நான் பிழைத்தேன் (நீர் பிழைத்தீர் என்று சொல்லவில்லை பாரும். அது பாகவத சம்பிரதாயம் ;-)நீர் என்ன எழுதுகிறீர்:கோபமடைந்த லக்ஷ்மணன், திருமகள் வாசம் செய்கின்ற தன்னுடைய பாதத்தால் அந்தக் கதவை எளிதாக எற்றி உதைத்துத் திறந்தான்.ஆனால் உரை என்ன சொல்கிறது. ”எல்லோராலும் விரும்பப்படுகிறவளான லக்ஷிமி, தான் விரும்பி வாசம் செய்யும் தாமரை மலர். இளையபெருமாள் பாதம் அண்ணனை ஒத்து தாமரை போல் உள்ளதாம். வெறும் தாமரை இல்லையாம். திருமகள் வாசம் செய்யும் தாமரை போல் உள்ளதாம்.”வித்தியாசம் இருக்குங்காணும்.
லக்ஷிமி இளையபெருமாள் பாதத்தில் வாசம் செய்பவள் இல்லை. அப்படி நினைப்பதே பாபம். அதுவும் கம்பன் அப்படியொரு அபச்சாரம் செய்பவனில்லை. அது கம்பராமயணத்திற்கே இழுக்காக அமையும். அவன் பூஜிக்கின்ற அன்னை சீதாதேவி. அவள் பெருந்தேவி. அவள் எப்படி இளையபெருமாள் பாதத்தில் வாசம் செய்வாள்? அப்படி எழுத அவன் மனம் எப்படி ஒக்கும்?மன்னிக்க.
மன்னிக்கவும் ஹரிகி.தாங்கள் சொல்வதுதான் அதன் பொருள் எனில் கம்பனை நான் என் மதிப்பிற்குரிய பெரியவர்கள் பட்டியலிலிருந்து கழித்துக்கட்டுகிறேன்.
On Nov 5, 5:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> இலக்குமியைக் குறிக்கும் ஓரிடம் இது:
> காக்கவோ கருத்து?' என்று, கதத்தினான்
> பூக்க மூரல் புரவலர் புங்கவன்
> தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
> நூக்கினான் அக்கதவினை நொய்தினால்
> (கிட்கிந்தைப் படலம், கிட்கிந்தா காண்டம்)
> இந்தப் பாடலுக்கு இதுதான் பொருள். ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது, என்ன
> சம்பிரதாயம் என்பது எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால்
> தெரிந்துகொள்கிறேன். சொற்பொருள் இதுதான். நான் கண்ட பொருள் சரியானதுதான்
> என்பதை வைமுகோ உறுதி செய்கிறார். (ஆமா, அபச்சாரம் என்று எழுதுவதே அபசாரம்
> இல்லையோ? தேவையில்லாத இடங்களில் ச்சாதீரும் ஓய்!)
>
ஹரிகி,
என் கருத்து ஒன்று. துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதியை
இன்றும் முப்பிடாரி அம்மன் என்று வழிபடுகிறோம்.
துர்க்கை-வாணி பூர்வசரிதத் தொடர்புகள் உள்ள
கட்டுரை (பார்ப்போலா) கொடுத்தேன். அதுபோல,
துர்க்கை-லக்குமி தொடர்புகள் உள்ள கட்டுரை
அறிஞர் ஒருவரால் எழுதப்பட வேண்டும்.
தாக்கணங்கு என்று இலக்குமியை
துர்க்கையாக வர்ணிப்பதாகப் படுகிறது.
திருப்பாவை நோன்பு என்பதும்
துர்க்கையை வழிபடுவது. (கொல்லிப்) பாவை
வழிபாடுதான் அது.
அன்புடன்,
நா. கணேசன்
* கைங்கர்யஸ்ரீ *
>> வால்மீகி *அந்தர்கத ஸ்ரீமான்*என்று சொல்கிறார் <<
*அந்தரிக்ஷகத ஸ்ரீமாந்*
‘லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:’ என்று இளைய பெருமாளுக்கும்;
தொண்டெனும் திருவை வளர்ப்பவர் என்னும் பொருளில்.
பசுமாட்டின் பின்புறம்,வில்வ இலையின் பின்புறம்,மங்கையரின் வகிடு,தாமரை
வனம், பசுஞ்சாணம்,மறை முழங்கும் இடம் இவையும் இலக்குமி உறையும் தலங்கள்.
காலக்ஷேபம் நடைபெறுவதற்காகக் குடில் ஒன்று அமைக்கச் செய்கிறார்
ஆளவந்தார்; மறையவர் புண்யாஹ வாசநம் நடத்துமுன் அதைப் பார்க்க ஆசை
கொள்கிறார் யாமுனாசார்யரின்
அருமைச் சீடரான மாறநேர் நம்பிகள்.முதலிகள் முதல் தினம் அவரை
அக்குடிலுக்கு அழைத்துச் சென்று காண்பிக்கின்றனர். அடுத்த நாள் செய்தி
அறிகிறார் ஆளவந்தார்; புண்யாஹ வாசநம் இனித் தேவையில்லை என்று உடனே
அறிவிக்கிறார்.
கைங்கர்ய ஸ்ரீ நிரம்பிய பாகவதரின் திருவடியின் ப்ரபாவம்
தேவ்
இங்கு எடுக்கப்பட்ட பாடலுக்குப் பொருள் சொல்ல வந்த ஸ்ரீ வை மு கோ அவர்களும் விளக்கத்தில் இலக்குவன் பாதத்தில் கைங்கர்யஸ்ரீ உறைவதைக் குறிப்பிடுகிறார். எனவே திருமகள் உறைகின்ற தாமரை மலர் போன்ற திருவடிகளை உடையவன் என்னும் போது தாக்கணங்கு என்பது திரு ஆகிய சிறப்பு பெயரைக் குறிக்கும் எனவும், தாளுக்கே நேராகச் சொல்லும் போது வீரமும், தொண்டாகிய பேறும் ஆகிய தாக்கணங்கு உறை தாள் என்றும் பொதுச்சொல்லாக்கிப் பொருள் கொள்ளுதல் தமிழ், வடமொழி இலக்கிய பிரயோகங்களுக்கு ஒப்பிய முறையாகும் என்று நினைக்கிறேன்.
ஹரிகி.அன்புடன்,
இரண்டு குழந்தைகளையும் தரதரவென்று இழுத்துக்கொண்டு வாருங்கள் இங்கே?
கருத்து கந்தசாமி-- ஞான் எதற்கு இருக்கிறேன், இதோ, முட்டிபோட்டு உட்கார்த்தியாச்சு?இனி என்ன செய்ய வேண்டும்?
இதோ, இந்த நெய் விழுதை இருவரும் அப்படியே வாயில் --ஆ, என்ன இப்படியா அவசரப்படுவது?
மெல்ல, மெல்லசாப்பிடுங்கள்.நெய் விழுது விழுதாய் வழித்துபோட்டாச்சா?.
இனி போய் விளையாடுங்கள். அட, உண்னி அப்பத்துக்கு அடுத்த சண்டையா?
எங்கே அந்த பிரம்பு?
----- Original Message -----From: Kamala Devi
தாக்கம் என்றால் என்ன அர்த்தம் ?
please clarify for me your use of the word "தாக்கம்" inside the sentence
fragment "ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு." contained
inside your message.
Does it mean that Tamil has been ATTACKED by Prakrit?
Does it mean that Tamil has been INFLUENCED by Prakrit?
Does it mean that Tamil has BORROWED from Prakrit?
When the famous French writer Marcel Proust (1871-1922) (SEE
<http://en.wikipedia.org/wiki/Proust>) uses the word "vétiver" (also
spelt "vétyver") inside his famous book "À la recherche du temps perdu"
(SEE <http://en.wikipedia.org/wiki/In_Search_of_Lost_Time>), nobody in
France thinks that French is being ATTACKED by Tamil (=French "Tamoul"),
although "vétiver" is a Tamil word (வெட்டி வேர்).
Please clarify!
Yours with every good wish
-- Jean-Luc (தமிழ் மாணவன், Paris)
வினோத் ராஜன் a écrit :
>> இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில்
>> இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர்
>> காலத்திற்க்கு முன்பு.
>>
>
> ஆம்.
>
> ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு
> தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
>
> இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
>
> நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( <
> கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை
> என்று நிறுவியுள்ளாரே.
>
> V
>
> On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>> wrote:
>> இதோ
>>
>>
>>> நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள்
>>> வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
>>>
>>> நேயம் -- n <Pkt. nE-am < snEha
>>> 1) Love, affection; அன்பு.
>>>
>
>
>> அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
>>
>> கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே -
>> அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என்
>> அவதானம் .
>>
>> உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே
>> மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
>>
>> விஜயராகவன்
>>
>
>