என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா

3,156 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
May 14, 2012, 2:51:55 PM5/14/12
to மின்தமிழ், Subashini Tremmel
23 அல்லது 24 ஆண்டுகளுக்கு முன்னர்.. 
அவ்வப்போது தஞ்சாவூரிலிருந்து மலேசியாவிற்கு தனது அக்காவை, அதாவது என் அம்மாவைப் பார்க்க வரும் எனது மாமா சம்பத் கையோடு சில புத்தகங்களும் கொண்டு வருவார். கவிதை நூல்களும் இருக்கும், சித்தர் நூல்களும் இருக்கும். கதை, நாவல்களும் இவற்றுள் இருக்கும். பொதுவான வாசிப்பு நூல்களும் சில இருக்கும். ஒரு முறை இப்படி கொண்டு வந்த நூல்கட்டில் கந்தபுராணம், திருப்புகழ், என் சரித்திரம் மூன்றும் சேர்ந்திருந்தன. இவை மூன்றையும் அப்போதே விடாது படித்து முடித்ததால் இந்த நிகழ்ச்சி இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. அதிலும் கந்தபுராணம் நூலின் அட்டைப்படத்தில் மயிலின் மேல் இளம் முருகன் வேலுடன் அமர்ந்தவாறு இருக்கும் காட்சி கூட இன்னமும் மனதில் நிழலாடுகின்றது. ஆக, அப்போது முதன் முதலாக என் சரித்திரம் நூலை முழுதாகப் படித்து முடித்தேன். நூலிலிருந்த ஒரு சில செய்திகள் மட்டும் தான் ஓரளவு ஞாபகத்தில் இருந்தன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சென்றிருந்தபோது நான் புத்தகக்கடையில் தேடி என் சரித்திரம் நூலை வாங்கிக் கொண்டேன். வாசிக்கலாம் என நினைத்தால் அதற்கும் தகுந்த வேளை வரவேண்டும் போல.. இந்த முயற்சி தள்ளிக் கொண்டே போய்விட்டது. இந்த முறை விடுமுறையில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது இதனையும் எடுத்து வைத்துக் கொண்டேன்.

முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எனது புரிதலில் உணர முடிந்தது. 

நல்ல விஷயங்களை அதிலும் தமிழ் மொழி, தமிழ் நூல்கள் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, கலை பண்பாட்டுச் சிறப்புக்கள் மின்னாக்கம் என ஈடுபட்டு வரும் நம் குழுவினருடன் என் சரித்திரத்தை மீண்டும் பகிர்ந்து கொள்வது வாசிப்போருக்கும் நன்மை பயக்கும் என்பதால் இதனை ஒரு இழையாகத் தொடங்க வேண்டும் என்று நூலை வாசிக்கும் போதே மனதில் தோன்றியது. அதன் அடிப்படையில் அமைவதே இந்த இழை.

என்னிடம் தற்சமயம் உள்ளது 2008ம் ஆண்டில் வெளிவந்த 7ம் பதிப்பு. மொத்தம் 776 பக்கங்கள் அடங்கியது.

என் சரித்திரம் உருவான விதத்தையும் தெரிந்து கொள்வது நமக்கு பயனளிக்கும் அல்லவா? 1935ம் ஆண்டு மார்ச்சு 6ம் தேதி உ.வே.சா அவர்களின் 80ம் ஆண்டு பூர்த்தி சதாபிஷேகத்தின் போது கலந்து கொண்ட நண்பர்களின் எண்ணத்தில் இந்தக் கருத்து உதித்திருக்கின்றது. உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சரித்திரமே இவ்வளவு அருமையாக வந்திருக்கின்றதே. அவரது சுய சரித்திரதையும் உ.வே.சா அவர்கள் எழுத வேண்டும் என்ற நண்பர்களின் நோக்கத்தை உ.வே.சா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நண்பர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் குருந்தொகை பதிப்பிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதால் இந்த முயற்சி தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் பலர் இவருக்கு ஞாபகம் ஊட்டத் தவரவில்லை.

ஒரு நூலாக அமைத்து வெளியிட நீண்ட காலமாகும் என்பதால் ஒரு பத்திரிக்கையில் வாராவாரம் வரும் வகையில் பதியலாமே என்ற எண்ணம் நண்பர்களுக்கும் இவருக்கும் தோன்றியிருக்கின்றது. அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கை பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் அவர்களுடன் வந்து உ.வே.சா அவர்களுடன் பேசி வாரந்தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 1940 ஜனவரி முதல் சுயசரிதை எழுதும் பணி இவரது 85ஆவது அகவையில் தொடங்கியது. முதல் அத்தியாயம் 6.1.1940 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது.

இந்தத் தொடர் வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1942ம் ஆண்டு மே மாதம் வரையில் சுயசரிதம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 28.4.1942 அன்று உ.வே.சா அவர்கள் மறைந்தார்கள். உ.வே.சா அவர்கள் முன்னரே குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராதலால் அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 1942க்குப் பின்னர் பல தடங்கல்களைத் தாண்டி 1950ம் ஆண்டு உ.வே.சா அவர்களின் திருக்குமாரன் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சா அவர்கள் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராகவே இருந்திருக்கின்றார். 1898க்குப் பின்னர் தனது தந்தையார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து நூலாக வெளியிடும் எண்ணத்தை இவரது திருமகனார் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்கள் கொண்டிருந்ததாகவும் இந்த முயற்சி நடைபெறுவதற்கு முன்னரே அவர் மறைந்ததையும் சுட்டிக் காட்டி "நாம் செய்த தவக்குறைவால் அவரும் மறைந்தார்" என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகின்றார் திரு.ம.வே.பசுபதி. இது முற்றிலும் உண்மை! நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் எனக்கும் ஐயமில்லை.

உ.வே.சா எனவும் தமிழ்த்தாத்தா எனவும் அழைக்கப்படும் திரு.உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் திருக்குமாரன் சாமிநாதன் அவர்களின் வாழ்க்கையை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலில் அவரது குழந்தைப் பருவம்- தந்தையைச் சார்ந்திருந்து குடும்ப பொருளாதார சூழலுக்கேற்ப அமைந்த வாழ்க்கை, அவரது தமிழ்க்கல்வி மீதான காதல், இசைப்பயிற்சி போன்றவற்றை மையமாகக் கொண்டது. இரண்டாவது பகுதி மகாவித்துவான் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களின் மாணவராகச் சேர்ந்தது, கல்வி வாழ்க்கை, ஆசிரியருக்கும் இவருக்குமிடையிலான பேரன்பு, தமிழ்க் கல்வி, திருவாவடுதுறை ஆதினத்துடனான பழக்கமும் ஈடுபாடும் என்பதைக் கொண்டது. மூன்றாவதாக அமைவது திருவாவடுதுறை ஆதீனத்தில் முக்கியப் பணிகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதோடு கும்பகோணம் கல்லூரியில் பணி பின்னர் சிந்தாமணிப் பதிப்பு, சங்க இலக்கியங்கள், மணிமேகலை பதிப்பு என்பதாக அமைகின்றது.

இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. 

ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால் வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும் நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன். இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. 

தொடரும்...

அன்புடன்
சுபா

---------- Forwarded message ----------
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Date: 2012/5/13
Subject: லா பல்மாவில் நடையாக நடந்த கதை
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>

...

ஒவ்வொரு பயனத்தின் போதும் என் பயணப் பெட்டியில் சில நூல்கள் இருக்கும். இந்த முறை 3 நூல்களைக் கையோடு கொண்டு சென்றிருந்தேன். அவை மூன்றையும் படித்தாகி விட்டதில் எனக்கும் மகிழ்ச்சி. அதில் ஒன்று உ.வே.சாவின் "என் சரித்திரம்". 3 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நூல். இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஓலைச் சுவடி என பேச்சு ஆரம்பித்தாலே உ.வே.சா வின் பெயர் நம் மனக்கண் முன்னே ஓடும். அவரது சொந்த எழுத்திலேயே அவர் சரிதம் படிக்கும் போது சொல்லொணாத உவகை ஏற்படுகின்றது. வாசித்து முடித்த போது உ.வே.சா என்னும் ஒரு தமிழ்மாணவர்/அறிஞர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை எனும் ஒரு பேரறிஞர், உ.வே.சாவுக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்த விலை மதிக்க முடியாத அன்பு, இவர்களுக்கிடையிலான ஆசிரிய மாணவர் உறவு, தந்தை மகற்காற்றும் உதவி, சிந்தாமணி பதிப்புக்கு உ.வே.சாவின் தளரா முயற்சியும் உழைப்பும், திருவாவடுதுறை சைவ மடத்தின் பெருஞ் சிறப்பு, மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் தமிழ்ப்பணியும் சிறப்புக்களும், மணிமேகலை பதிப்பு, அக்காலத் தமிழ்க் கல்வியின் தரம் நிலை போன்றவை மிகத் தெளிவாக நம் கண் முன்னே தெரிகின்றன. அவ்வளவு உயிரூட்டமுள்ள வரிகள் ஒவ்வொன்றும். இதனை வாசித்த போது தனியாக ஒரு இழை தொடங்கி என் சரித்திரத்தில் என் மனதை கவர்ந்த சில பகுதிகளைப் குறிப்பிட்டு மின் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அந்த இழை விரைவில் தொடங்கும்.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Geetha Sambasivam

unread,
May 14, 2012, 8:26:36 PM5/14/12
to mint...@googlegroups.com
இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. //

நன்கு உணர்ந்து கூறும் வார்த்தைகள்.  இதைத் தமிழ்நாட்டின் பாடத்திட்டம் தயாரிப்போர் உணர வேண்டும்.  கல்லூரியிலே ஆரம்பிக்காமல் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் கால கட்டத்திலேயே ஆரம்பிக்கலாம். உங்கள் கருத்து மிகவும் அருமையான ஒன்று.

2012/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. 

தொடரும்...

அன்புடன்
சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
May 14, 2012, 8:29:10 PM5/14/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
என் அருமைத் தமிழ் மாணவியே, சுபாஷிணியே, மின்தமிழ்ப் பெண்ணே ... (இன்னும் சொல்ல விருப்பம்) I may get mushy that others can't understand it! :-) 

சொல்லுங்கள், சொல்லுங்கள் ... நீங்கள் உ.வே, சாவின் "என் சரித்திரம்" படித்தபடி.

அன்புடன்,
ராஜம் 

N. Ganesan

unread,
May 14, 2012, 9:49:26 PM5/14/12
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com
அன்புள்ள சுபா,

’என் சரித்திரம்’ பற்றி விரிவாக எழுதுங்கள்.

நூலைப் படிக்க விரும்புவோருக்கு
தமிழ் இணையப் பல்கலையின்
இந்த வலைக்கண் உதவும்.

என் சரித்திரம்

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள்
http://www.tamilvu.org/library/lA471/html/lA471ind.htm
பொருளடக்கம்:
http://www.tamilvu.org/library/lA471/html/lA471cnt.htm

நா. கணேசன்

Innamburan Innamburan

unread,
May 14, 2012, 11:06:29 PM5/14/12
to mint...@googlegroups.com
அப்பப்பா! நான் எழுத நினைப்பேன். அதற்குள் இந்த முனைவர் ராஜம் எழுதி விடுவார். அதற்காக நான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. உரிமை போராட்டம்.
ஸுபாஷிணி!
தமிழ்த்தாத்தா உனது கட்டுரையை மெச்சியிருப்பார். என்ன நேர்த்தி! என்ன விசாலம்!
அன்புடன், 
இன்னம்பூரான்

2012/5/14 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
May 15, 2012, 3:08:50 PM5/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. //

நன்கு உணர்ந்து கூறும் வார்த்தைகள்.  இதைத் தமிழ்நாட்டின் பாடத்திட்டம் தயாரிப்போர் உணர வேண்டும்.  கல்லூரியிலே ஆரம்பிக்காமல் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் கால கட்டத்திலேயே ஆரம்பிக்கலாம். உங்கள் கருத்து மிகவும் அருமையான ஒன்று.

உங்கள் கருத்துக்கு மிக்க  நன்றி.
மாணவர்களின் பள்ளிப்பாட திட்டத்தில் சில குறிப்பிட்ட நூல்களைச் சேர்க்க வேண்டியது மிக அவசியம் என்றே உணர்கின்றேன். நமது இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியம் தெரியாதவர்களாக சோழர் பாண்டியர் வரலாறு தெரியாதர்களாக, கோயில்கள் சிற்பங்களின் அருமை தெரியாதவர்களாக, பழம் நூல்கள் தமிழ்பெரியார்கள் பற்றி தெரியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமே.  தொடர்ந்து நமது கருத்துக்களைப் பகிர்ந்து வருவோம். 

சுபா
 
2012/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். கல்லூரிகளில் எல்லா நிலை மாணவர்களுக்கும் கட்டாய பாடம் என்று ஒன்று வைத்து படிக்க வேண்டிய சில முக்கிய நூல்கள் என பட்டியலிட்டால் இதனை கட்டாயம் அதில் இணைக்க வேண்டும் என்று நான் முன் மொழிவேன். இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. 

தொடரும்...

அன்புடன்
சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
May 15, 2012, 3:13:01 PM5/15/12
to மின்தமிழ், rajam, Subashini Tremmel

2012/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2012/5/15 rajam <ra...@earthlink.net>

என் அருமைத் தமிழ் மாணவியே, சுபாஷிணியே, மின்தமிழ்ப் பெண்ணே ... (இன்னும் சொல்ல விருப்பம்) I may get mushy that others can't understand it! :-) 

சொல்லுங்கள், சொல்லுங்கள் ... நீங்கள் உ.வே, சாவின் "என் சரித்திரம்" படித்தபடி.

இதைப் படித்தபோது மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்தது.  எனக்கு நானே  சிரித்துக் கொண்டேன். தமிழறிஞர்.. உங்களைப் போன்றோர் இப்படி சொல்வது எனக்கு எவ்வளவு ஊக்கமாக இருக்கின்றது தெரியுமா?

நிச்சயமாக தொடர்ந்து எழுதுகின்றேன். நூலில் நிறைய விஷயங்கள் உள்ளன. நிச்சயம் இப்பதிவு  தொடரும்.

சுபா

Subashini Tremmel

unread,
May 15, 2012, 3:15:06 PM5/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/15 Innamburan Innamburan <innam...@gmail.com>

அப்பப்பா! நான் எழுத நினைப்பேன். அதற்குள் இந்த முனைவர் ராஜம் எழுதி விடுவார். அதற்காக நான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. உரிமை போராட்டம்.
ஸுபாஷிணி!
தமிழ்த்தாத்தா உனது கட்டுரையை மெச்சியிருப்பார். என்ன நேர்த்தி! என்ன விசாலம்!

 இதனை வாசிக்கும் போது மிக சந்தோஷமாக இருக்கின்றது. மிக்க நன்றி.
என்னால் முடிந்த வரை தரம் குறையாத வகையில் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். 

Santhanam Swaminathan

unread,
May 15, 2012, 3:38:11 PM5/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
உ.வே.சா.வின் சுய சரிதை கமில் சுவெலிபிலால் மொழி பெயர்க்கப்பட்டு  ஆசியக் கல்விக் கழகத்தால் ஆங்கிலத்தில் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது என்னிடம் இருக்கிறது. ஆனாலும் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் படிக்கும்போது அந்த தமிழ் சுவை கிடைப்பதில்லை. சாம்பார் என்றால் ஐயர் வீட்டுக்குப் போகவேண்டும். மீன் குழம்பு என்றல் ஆச்சிவீட்டுக்குத்தான் போகவேண்டும்!!

The Story of My Life ( An autobiography of Dr U V Swaminatha Iyer, English Version Kamil V. Zvelebil, Part 1 and Part 2, Institute of Asian Studies, Madras, India, 1990)
 
Swami
020 8904 2879
07951 370 697

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Tuesday, May 15, 2012 8:15 PM
Subject: Re: [MinTamil] என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா

Karuannam Annam

unread,
May 17, 2012, 2:35:37 PM5/17/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel, நா. கணேசன்

2012/5/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எனது புரிதலில் உணர முடிந்தது. 
 
மிகவும் சரியான மொழி.
 
 உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நூலின் பெயர் என்ன? எந்தத் தகவலையும் உடன் தேடித் தரும் திரு கணேசனார் இtந்த நூலின் மின்பதிப்பு இருந்தால் தொடர்பு நல்க.
 
 அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 
 நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் ஐயமில்லை.

இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. 

ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால் வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும் நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன்.
 
இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா. 

தொடரும்...

அன்புடன்
சுபா

திருமிகு சுபா அம்மா.
   மிக அருமையான தொடக்கம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Subashini Tremmel

unread,
May 17, 2012, 2:45:52 PM5/17/12
to Karuannam Annam, mint...@googlegroups.com, நா. கணேசன்

2012/5/17 Karuannam Annam <karu...@gmail.com>

..

 உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நூலின் பெயர் என்ன? எந்தத் தகவலையும் உடன் தேடித் தரும் திரு கணேசனார் இtந்த நூலின் மின்பதிப்பு இருந்தால் தொடர்பு நல்க.

சில தகவல்கள் http://uvesalibrary.org/Tamil_thondu/uraibooks.htm உ.வே.சா நூலகத்தில் உள்ளன.

ஸ்ரீமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (முதல் பாகம்)

மகாவித்துவான் அவர்கள் 1815ஆம் ஆண்டு முதல் 1876ஆம் ஆண்டு வரை அறுபத்தொரு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் உலகிற்கு அளப்பரும் தொண்டுகள் ஆற்றிய கல்விக்கடல் ஆவார். இக்கல்விக் கடலின் வாழ்வுபற்றியதே இந்நூல். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் ‘முன்னோரும் தந்தையாரும்’ என்பது முதல் ‘புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்’ என்பது முடிய 24 கட்டுரைகளைக் கொண்ட 356 பக்க அளவுடையது இந்நூல். இம்முதல்பாகத்துள், உ.வே.சா. அவர்கள் மகாவித்துவானிடம் கல்விகற்கச் செல்வதற்குமுன் உள்ள வரலாறுகள் உள்ளன. இந்நூலின் முன்னுரையாக உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ள பகுதி மிக உருக்கமானது. நூலின் இறுதியில் சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி உள்ளது.

ஸ்ரீமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்
(இரண்டாம் பாகம்)

மகாவித்துவானின் வரலாறு கூறும் இரண்டாம் பாகமாகிய இந்நூற் பதிப்பு 1934ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. மகாவித்துவானின் வாழ்வின் பெரும் பகுதிச் செய்திகள் முதற் பகுதியிலேயே அடங்கிவிட்டன. அதாவது, 1815 தொடக்கம் 1870 வரை மகா வித்துவானின் வாழ்வு, முதற்பகுதியில் அடங்கி விட்டன. அப்பகுதியில் உ.வே.சா. அவர்கள், கேட்டறிந்த செய்திகள் அடங்கிய பகுதி. இரண்டாம் பகுதியாகிய இஃது, உ.வே.சா. அவர்கள் தாம் மகா வித்துவானிடம் கல்வி கற்றற் பொருட்டு அவரிடம் சேர்ந்தது முதல், மகா வித்துவான் சிவலோகம் அடைந்தது வரை அமைந்த வரலாற்றுத் தொகுப்பாகும். எனவே, இவ்வரலாற்றுப் பகுதி நேரிற் கண்டறிந்தவற்றின் தொகுதி என்பதால் முதற்பகுதியினும் மிகச் சிறப்பைப் பெறுகிறது.

..

திருமிகு சுபா அம்மா.
   மிக அருமையான தொடக்கம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

விரைவில் தொடர்கின்றேன். சில பழைய பதிவுகள் வெளியிட நினைத்து அவ்வேலையில் இப்போது இருகின்றேன்.  மண்ணின் குரல் மாத வெளியீடுகள் தாமதமாகிவிட்டது அல்லவா. :-)

சுபா
 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

N. Ganesan

unread,
May 17, 2012, 5:47:24 PM5/17/12
to மின்தமிழ்

On May 17, 11:35 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
> 2012/5/15 Subashini Tremmel <ksubash...@gmail.com>

>
>
>
> > முன்னர் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை
> > எனது புரிதலில் உணர முடிந்தது.
>
> > மிகவும் சரியான மொழி.
>
> >  உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின்
> > சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள்.
>
> இந்த நூலின் பெயர் என்ன? எந்தத் தகவலையும் உடன் தேடித் தரும் திரு கணேசனார்
> இtந்த நூலின் மின்பதிப்பு இருந்தால் தொடர்பு நல்க.
>
>

sorry for english. No e-book (yet). Tamil University reprinted the
book in 1986.

mANaakkanum, aasaanum
http://www.kalachuvadu.com/issue-79/katturai02.htm

NG

>
>  அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே
>
>
>
>
>
> > நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத
> > சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது.
> >  நமது தவக்குறைவால் மேலும் பல தகவல் பதிவாவதை நாம் இழந்திருக்கின்றோம்
> > என்பதில் ஐயமில்லை.
>
> > இவர் கடந்து வந்த வாழ்க்கை படிகள் இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகளுக்கு
> > முற்பட்டவை என்பதால் அக்கால வழக்கங்கள், தமிழ்க்கல்வியின் நிலை, தரம், சைவ
> > ஆதீனங்களின் தமிழ்ப் பணி, தமிழ் நூல் அச்சு பதிப்பாக்க முயற்சிகள் போன்றவை
> > பற்றி பல விஷயங்களை இந்த நூலின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.
>
> > ஒவ்வொரு பகுதியையும் படிக்கும் போது எளிய தமிழில் அவை அமைந்துள்ளமையால்
> > வாசகங்களோடு ஒன்றித்து போய் உ.வே.சாவின் உணர்வுகளையும் அறிந்து பயணிக்கும்
> > நிலையை ஒவ்வொரு அத்தியாயங்களை வாசிக்கும் போதும் உணர்ந்தேன்.
>
> > இந்த நூல் முழுமையிலும் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது
> > அனுபவத்தாலேயே உணர்த்துகின்றார் உ.வே.சா.
>
> > தொடரும்...
>
> > அன்புடன்
> > சுபா
>
> > திருமிகு சுபா அம்மா.
>
>    மிக அருமையான தொடக்கம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்
> அன்புடன்

> சொ.வினைதீர்த்தான்.- Hide quoted text -
>
> - Show quoted text -

K R A Narasiah

unread,
May 18, 2012, 4:55:18 AM5/18/12
to mint...@googlegroups.com
ஆனந்தவிகடன் தான் அவருகுத் தமிழ்த்தாத்தா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது.
இது வெளியிடப்பட்ட இதழ் 1935 பிப்ரவரி மாத்த்தினதாகும். 

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு நூல் என்னிடம் உள்ளது. ஆனால் மதுரையில்!

அதில் மிகச் சுவையாக எழுதப்பட்டுள்ள விஷ்யம் உ வே சா வின் எழுத்தாணி மறைக்கப்பட்ட விஷ்யமாகும்.

ஒரு இடத்தில் அவர் சொல்கிறார்: “இன்று சாதத்தில் நெய் இடப்பட்டது!”

வேங்கடேசன் என்ற அவரது இயற்பெயர் சுவாமிநாதனாக மாற்றப்பட்ட விவரமும் உள்ளது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தான் அப்படி மாற்றினார்!
நரசய்யா

2012/5/18 N. Ganesan <naa.g...@gmail.com>

Karuannam Annam

unread,
May 18, 2012, 6:10:43 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel, naras...@gmail.com, Narayanan Kannan
பெயர் பற்றிய மாற்றம் இரசிக்கவும் ஆராயவும் தக்கது ஐயா. அவரது இயற்பெயர் வேங்கடராமன் என்ற சாமிநாதன். சாமா என்று அழைத்திருக்கிறார்கள். சாமிநாதன் என்ற பெயர் அவரே மறந்தது.
தந்தையார் அவரை அழைத்துக்கொண்டு பிள்ளையவர்களைத் தரிசித்தபோது பிள்ளையவர்கள் தந்தையார் பெயரை வினவுகிறார். வேங்கடசுப்பன் என்ற வேங்கடராமன் என்ற போது பிள்ளையவர்கள் வேங்கடசுப்பன் என்ற பெயரைக் கேட்டு மகிழ்ந்துள்ளார். வேங்கடக்கடவுள் முருகன் என்பதற்கு அப்பெயரே சாட்சி என்று சுட்டியுள்ளார்.

பிற்பாடு பாடம் சொல்லும்போது தனித்திருந்தபோது ஐயரவர்களிடம் அவர் பெயர் பற்றிக் கேட்கிறார். பெயர் குலதெய்வப் பெயரான வேங்கடராமன் எனப் பதில் வருகிறது. சைவரான பிள்ளையவர்கள் மவுனம் சாதித்துவிட்டு வேறு பெயர் உண்டா என்று கேட்கிறார். ஐயரவர்கள் சாமா என்ற சாமிநாதன் என்றும் அழைப்பார்கள் என்கிறார். உடனே பிள்ளையவர்கள் மகிழ்ந்து இனிமேல் நான் உங்களைச் சாமினாதன் என்றே அழைப்பேன். நீங்களும் அவ்வாறே கூறிக்கொள்ளுங்கள் என்கிறார். சாமாவுக்குச் சாமினாதன் என்ற பெயரே காதுக்குப் புதிதாக இருக்கிறது. பிள்ளையவர்கள் சாமி நாதய்யர் என்றே அழைத்து வருகிறார்.
தமிழ்த்தாத்தா என்று தமிழுக்கே தாத்தாவானவருக்குக் குரு அருளால் சுவாமிநாதன் என்ற பெயர் நிலைத்தது.
பிள்ளையவர்கள் அணுக்கச்சீடர் சவேரிநாதருக்குச் சைவப்பெயர் வைத்த்தும் புதுப் பெயர் பெற்றவர் அதற்காக் கொண்டாடியதும் தனிக்கதை. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2012/5/18 K R A Narasiah <naras...@gmail.com>

Karuannam Annam

unread,
May 18, 2012, 6:33:41 AM5/18/12
to K R A Narasiah, mintamil
2012/5/18 K R A Narasiah <naras...@gmail.com>
சரியான த்கவல்.
நானும் கண்ணனும் வேங்கடகிருஷ்ணனுடன் (உ. வே சா வின் பெயரன்) அவர் “இடையன் வெட்டு அரை வெட்டு”  என்ற சொற்றொடருக்கு உ. வே. சா பொருள் கண்ட கதை சொன்னார்.
அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லையெனில் சொல்கிறேன்.
நரசய்யா

 நன்றி ஐயா. சொற்றொடர் பற்றி இயன்றபோது எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 அன்புடன் 
சொ.வினைதீர்த்தான்.

2012/5/18 Karuannam Annam <karu...@gmail.com>

Singanenjam Sambandam

unread,
May 18, 2012, 6:39:29 AM5/18/12
to mint...@googlegroups.com

நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதான புரத்திலிருந்து
வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ்
படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும்
அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று
மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன்
புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான்.
ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்து விட்டுப் போக
வந்தேன்.

உங்கள் பெயர் என்ன?”

என் பெயர் வேங்கடஸூப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்
என்றார் என் தந்தையார்.

வேங்கடஸூப்பனென்பது நல்ல பெயர். வேங்கட ஸூப்ர
மணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள்
கோயில் கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன்.
சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளி வருகின்றதே!
என்று நான் ஆச்சரியம் அடைந்தேன்.

நான் இவ்வாறு பாடம் கேட்டு வந்தபோது ஒருநாள் ஏதோ
விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “உமக்கு வேங்கடராமன்
என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார். நான், “வேங்கடாசலபதி
குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக் கடவுள்
பெயரையே கொள்வது வழக்கம்என்பதைத் தெரிவித்தேன். வேங்கடராமன்
என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப்
புலப்பட்டது.

உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?” என்று அவர் கேட்டார்.

எங்கள் வீட்டில் என்னை சாமாஎன்று அழைப்பார்கள்என்றேன்.

அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?”

அது முழுப் பெயரன்றே! சாமிநாதனென்பதையே அவ்வாறு மாறி
வழங்குவார்கள்.

அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது!
உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும்
இனிமேல் அப்பெயரையே சொல்லிக் கொள்ளும்என்று அவர் சொன்னார்.

நான் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன். வேங்கடராமனாக
இருந்த நான் அன்று முதல் சாமிநாதனாகி விட்டேன். பிள்ளையவர்கள்
விருப்பத்தின்படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே வழங்கலாயினர்.
அன்புகனிந்த அவர் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே எனக்கு
நிலைத்து விட்டது.

என் பெயர் மாறின சில நாட்கள் வரையில் எனக்குச் சிறிது கஷ்டமாக
இருந்தது. சாமிநாதையர்என்று யாராவது என்னை அழைத்தால் நான்
என்னைத்தான் அப்படி அழைக்கிறார்கள் என்பதை உடனே உணர்ந்து
கொள்ளவில்லை. என் காது வேங்கடராமன் என்றும் சாமா என்றுமே கேட்டுப்
பழகியிருந்தது. யாரேனும் என் பெயரைக் கேட்டால் வேங்கடராமன் என்றுசொல்ல வாயெடுப்பேன்; சட்டென்று மாற்றிக் கொண்டு சாமிநாதன்
என்பேன். நாளாக ஆகப் புதிய பெயரே வழக்கில் வந்தது.

நன்றி  - தமிழ் இணைய பல்கலைக்கழகம்  

2012/5/18 Karuannam Annam <karu...@gmail.com>
Message has been deleted

N. Ganesan

unread,
May 18, 2012, 8:11:49 AM5/18/12
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On May 18, 3:33 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:

> 2012/5/18 K R A Narasiah <narasiah...@gmail.com>

> > சரியான த்கவல்.
> > நானும் கண்ணனும் வேங்கடகிருஷ்ணனுடன் (உ. வே சா வின் பெயரன்) அவர் “இடையன்
> > வெட்டு அரை வெட்டு”  என்ற சொற்றொடருக்கு உ. வே. சா பொருள் கண்ட கதை சொன்னார்.
> > அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லையெனில் சொல்கிறேன்.
> > நரசய்யா

>  நன்றி ஐயா. சொற்றொடர் பற்றி இயன்றபோது எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

>  அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.

சு. வேங்கடகிருஷ்ணன் உவேசா கொள்ளுப்பெயரன்.

இடையன் எறிந்த மரம் - தமிழின் பழைய மரபுத்தொடர். பழமொழி 400-ல் வெண்பா
உள்ளது. சிந்தாமணியிலும், திருமங்கை மன்னர் பெரிய திருமொழியிலும்
பாடியுள்ளனர்.

உவேசா கட்டுரை இதோ:
http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

இடையன் வெட்டு அறாவெட்டு - தமிழ்ப் பழமொழி.

நா. கணேசன்

> > 2012/5/18 Karuannam Annam <karuan...@gmail.com>

> >> பெயர் பற்றிய மாற்றம் இரசிக்கவும் *ஆராயவும் தக்கது* ஐயா. அவரது இயற்பெயர்

> >> வேங்கடராமன் என்ற சாமிநாதன். சாமா என்று அழைத்திருக்கிறார்கள். சாமிநாதன் என்ற
> >> பெயர் அவரே மறந்தது.
> >> தந்தையார் அவரை அழைத்துக்கொண்டு பிள்ளையவர்களைத் தரிசித்தபோது பிள்ளையவர்கள்
> >> தந்தையார் பெயரை வினவுகிறார். வேங்கடசுப்பன் என்ற வேங்கடராமன் என்ற போது
> >> பிள்ளையவர்கள் வேங்கடசுப்பன் என்ற பெயரைக் கேட்டு மகிழ்ந்துள்ளார்.
> >> வேங்கடக்கடவுள் முருகன் என்பதற்கு அப்பெயரே சாட்சி என்று சுட்டியுள்ளார்.

> >> பிற்பாடு பாடம் சொல்லும்போது தனித்திருந்தபோது ஐயரவர்களிடம் அவர் பெயர்
> >> பற்றிக் கேட்கிறார். பெயர் குலதெய்வப் பெயரான வேங்கடராமன் எனப் பதில்
> >> வருகிறது. சைவரான பிள்ளையவர்கள் மவுனம் சாதித்துவிட்டு வேறு பெயர் உண்டா என்று
> >> கேட்கிறார். ஐயரவர்கள் சாமா என்ற சாமிநாதன் என்றும் அழைப்பார்கள் என்கிறார்.
> >> உடனே பிள்ளையவர்கள் மகிழ்ந்து இனிமேல் நான் உங்களைச் சாமினாதன் என்றே
> >> அழைப்பேன். நீங்களும் அவ்வாறே கூறிக்கொள்ளுங்கள் என்கிறார். சாமாவுக்குச்
> >> சாமினாதன் என்ற பெயரே காதுக்குப் புதிதாக இருக்கிறது. பிள்ளையவர்கள் சாமி
> >> நாதய்யர் என்றே அழைத்து வருகிறார்.
> >> தமிழ்த்தாத்தா என்று தமிழுக்கே தாத்தாவானவருக்குக் குரு அருளால் சுவாமிநாதன்
> >> என்ற பெயர் நிலைத்தது.
> >> பிள்ளையவர்கள் அணுக்கச்சீடர் சவேரிநாதருக்குச் சைவப்பெயர் வைத்த்தும் புதுப்
> >> பெயர் பெற்றவர் அதற்காக் கொண்டாடியதும் தனிக்கதை.
> >> அன்புடன்
> >> சொ.வினைதீர்த்தான்.

> >> 2012/5/18 K R A Narasiah <narasiah...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 18, 2012, 9:35:11 AM5/18/12
to mint...@googlegroups.com
இந்தக் கட்டுரையும் மரபு விக்கியில் இடம் பெற்றுள்ளது.

2012/5/18 Singanenjam Sambandam <singa...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 18, 2012, 9:51:49 AM5/18/12
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 2

 “ ”எப்போதும் சிவ பக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைபிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பிருக்கின்றேன். ” என்று உ.வே.சா என் சரித்திரத்தில் 6ம் அத்தியாயத்தில் கூறுகின்றார். 

உ.வே.சா அவர்களின் தந்தையாரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். உ.வே.சாவின் வாழ்க்கையில் அவர் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நின்றவர் அவர் தந்தையார். அவரைப் பற்றிய சில ஆரம்பகால செய்திகளை வாசிப்பதும் உ.வே.சாவின் இளமை காலத்தையும் வாழ்க்கைச் சூழலையும் தெரிந்து கொள்ள உதவும்.

உ.வே.சா அவர்களது தந்தையின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணிய ஐயர். இது வேங்கடசுப்பையரென்று வழக்கில் மறுவி விட்டது. முன்னோர்களின் பெயரை அது ஒத்திருந்தமையால் அவரை வீட்டில் எல்லோரும் ஸாமி என்றே அழைப்பார்களாம். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இருந்தனர். சகோதரரின் பெயர் ஸ்ரீநிவாஸ ஐயர். அவரை சின்னஸாமி என்றே அழைப்பார்களாம். இவர்கள் இருவருக்கும் உ.வே.சா அவர்களின் தாத்தாவே இளமையில் தமிழ் மொழியையும் வடமொழியையும் கற்பித்தார். பாட்டியார் சங்கீத ஞானம் கொண்டிருந்தமையால் தானே சங்கீதத்தைத் தாயாரிடம் கற்றுக் கொண்டார் உ.வே.சாவின் தந்தையார். பின்னர் கனம் கிருஷ்ணையாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டமைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகின்றேன்.

உ.வே.சா அவர்களின் தாயாரின் பெயர் ஸரஸ்வதி. அக்காலகட்டத்தில் திருமணம் செய்யும் போது மணமகன் வீட்டாருக்கே செலவு அதிகமாகுமாம். ஒரு மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது பெரிய காரியமாக 19ம் நூற்றாண்டில் இருந்திருக்கின்றது. இந்த 180 வருஷ கால இடைவெளியில் நிகழ்ந்துள்ள ஒரு சமூக மாற்றமாகவும் இதனைப் பார்க்கத் தோன்றுகிறது.இப்போது காலம் எவ்வளவோ மாறிவிட்டது அல்லவா?

உ.வே.சா குறிப்பிடுகின்றார். “ என் தந்தையாருக்குக் கலியாணம் செய்யும் பருவம் வந்தது. அக்காலத்தே இவ்விஷயத்தில் பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு அதிகம். விவாகச் செலவிற்கும் கூறை முதலியவற்றிற்கும் ஆபரணங்களுக்கும் பிள்ளை வீட்டுக்காரர்களே பணம் கொடுப்பது வழக்கம். ஒரு திருமாங்கலியம் மட்டும் பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுப்பார்கள். ஆதலின் கலியாண விஷயத்தில் இந்தக் காலத்தைப் போலப் பெண் வீட்டார் பொருளில்லையே என்ற கவலை கொள்ள மாட்டார்கள்.” 

மகனுக்குக் கலியாணம் முடிக்க வேண்டுமே என கவலைப்பட்ட பாட்டி செல்லத்தம்மாள் சும்மா இல்லாமல் மகன் வேங்கட சுப்ரமணியரை தனது சகோதரர் கனம் கிருஷ்ணைய்யரிடம் ஒப்புவித்தார். சங்கீதப் பாடமும் சொல்லிக் கொடுத்து திருமணமும் செய்து வைத்து இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒப்படைத்து விட்டார். அது வேங்கட சுப்ரமணியரின் வாழ்க்கையில் சங்கீத ஞானத்தையும் மணவாழ்க்கையயும் அமைத்து வைத்தது. 

உ.வே.சா அவர்களுக்குத் தனது தந்தையாரின் பால் அளவற்ற அன்புண்டு. தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது அவர் தனது நூலில் “இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச்சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு லௌகிகத் தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவ பக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது” என்கின்றார்.

இந்தக் குறிப்புக்கள் அனைத்தும் 6ம் அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்...

2012/5/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

23 அல்லது 24 ஆண்டுகளுக்கு முன்னர்.. 
அவ்வப்போது தஞ்சாவூரிலிருந்து மலேசியாவிற்கு தனது அக்காவை, அதாவது என் அம்மாவைப் பார்க்க வரும் எனது மாமா சம்பத் கையோடு சில புத்தகங்களும் கொண்டு வருவார். கவிதை நூல்களும் இருக்கும், சித்தர் நூல்களும் இருக்கும். கதை, நாவல்களும் இவற்றுள் இருக்கும். பொதுவான வாசிப்பு நூல்களும் சில இருக்கும். ஒரு முறை இப்படி கொண்டு வந்த நூல்கட்டில் கந்தபுராணம், திருப்புகழ், என் சரித்திரம் மூன்றும் சேர்ந்திருந்தன. இவை மூன்றையும் அப்போதே விடாது படித்து முடித்ததால் இந்த நிகழ்ச்சி இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. அதிலும் கந்தபுராணம் நூலின் அட்டைப்படத்தில் மயிலின் மேல் இளம் முருகன் வேலுடன் அமர்ந்தவாறு இருக்கும் காட்சி கூட இன்னமும் மனதில் நிழலாடுகின்றது. ஆக, அப்போது முதன் முதலாக என் சரித்திரம் நூலை முழுதாகப் படித்து முடித்தேன். நூலிலிருந்த ஒரு சில செய்திகள் மட்டும் தான் ஓரளவு ஞாபகத்தில் இருந்தன.

Subashini Tremmel

unread,
May 18, 2012, 9:58:28 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள திரு. சம்பந்தன்,

உங்கள் பதிவுக்கு நன்றி. ஆனால் இப்படி நூலின் பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்வதை  தவிர்த்து விடுவது நல்லது. முழு நூலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும் மின்னூலாக மற்ற இணையத்தளங்களில் உள்ளன என்பதை நான் அறிவேன். என் சரித்திரம் ஒவ்வொருவரும் வாங்கி படித்து தனது வீட்டு நூலகத்திலும் வைத்துக் கொள்ள வேண்டிய நூல் என நான் கருதின்றேன். இது கிடைக்காத ஒரு பழம் நூலல்ல. இன்றும் புத்தகக் கடைகளில் கிடைக்கும் நூல்.  இந்தப் பதிவை வாசிப்பவர்கள் இது வரை என் சரித்திரம் வாசித்திராவிட்டால் ஆர்வத்தால் நூலை காசு கொடுத்து வாங்கி  பதிப்பகத்தாரின் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என்பதே என் அவா.

சுபா

2012/5/18 Singanenjam Sambandam <singa...@gmail.com>

நாங்கள் 

Subashini Tremmel

unread,
May 18, 2012, 10:03:17 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இந்தக் கட்டுரையும் மரபு விக்கியில் இடம் பெற்றுள்ளது.

ஆமாம் திருமதி கீதா. அத்துடன் 22 மின்னூல்கள் திருவேங்கடமணி அவர்கள் முயற்சியில் நமது மின்னூல்கள்தளத்திலும் உள்ளன. இவை உங்களால் தட்டச்சப்பட்டு மரபு விக்கியிலும் இணைக்கப்பட்டுள்ளன. 

சுபா

--

sundaramurthy murthy

unread,
May 18, 2012, 1:29:19 PM5/18/12
to mint...@googlegroups.com
sister nice to read so many katturaigal. Pl see attachment
br sundramurthy

On Fri, May 18, 2012 at 7:33 PM, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:

2012/5/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இந்தக் கட்டுரையும் மரபு விக்கியில் இடம் பெற்றுள்ளது.

ஆமாம் திருமதி கீதா. அத்துடன் 22 மின்னூல்கள் திருவேங்கடமணி அவர்கள் முயற்சியில் நமது மின்னூல்கள்தளத்திலும் உள்ளன. இவை உங்களால் தட்டச்சப்பட்டு மரபு விக்கியிலும் இணைக்கப்பட்டுள்ளன. 

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Eraivan en nanban copy.jpg

Subashini Tremmel

unread,
May 26, 2012, 4:29:38 AM5/26/12
to Karuannam Annam, மின்தமிழ், Subashini Tremmel
திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களே,

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ள பற்றி நீங்கள்  கேட்டிருந்ததால் உங்களுடன் மேலும் ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்கின்றேன். நமது வலைப்பக்கத்தில் உள்ள நாகநந்தி மணிமண்டபப் பகுதியில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றிய ஒலிப்பதிவுகள் உள்ளன.
அவற்றை இங்கே காணாலாம், கேட்கலாம்.

அன்புடன்
சுபா

2012/5/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Karuannam Annam

unread,
May 26, 2012, 11:59:57 AM5/26/12
to Subashini Tremmel, mintamil, Hari Krishnan

2012/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களே,

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ள பற்றி நீங்கள் கேட்டிருந்ததால் உங்களுடன் மேலும் ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்கின்றேன். நமது வலைப்பக்கத்தில் உள்ள நாகநந்தி மணிமண்டபப் பகுதியில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றிய ஒலிப்பதிவுகள் உள்ளன.
அவற்றை இங்கே காணாலாம், கேட்கலாம்.

வணக்கம் திருமிகு சுபா
 திரு நாகநந்தியின் சொற்பொழிவு ஒலிப்பேழை கேட்டேன். தங்களுக்கும் திரு ஹரிகியின் பெருமுயற்சிக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் மிக நன்றி.
பிள்ளையவர்கள் தன் சீடர் திண்ணையில் மனைவி நினைவில் பாடிய பாடலை வீட்டின் உள்ளிருந்து கேட்டு மறு நாளே அவர் மனைவியை ஊரிலேஇருந்து வரவழைத்துக் குடித்தனம் வைத்ததும், கடனை அடைக்க வேண்டிய தருணத்தில் ஈட்டிய பொருளை சீடர் திருமணத்திற்குச் செலவளித்ததும் சீடன்பால் அவரது தந்தையனைய மனதை அறியத்தந்தன.
அதேபோல் பெங்களூருக்குப் பாடம் சொல்லச் சீடர்கள் அனவருடன் அழைத்தால் வருவதாகச் சொன்னதும் எங்கு சென்றாலும் சீடர் உணவு உண்டாரா என்று கவலைபட்டதும் உணவுக்கு ஏற்பாடு செய்ததும் அவரது தாயன்பைப் புலப்படுத்தின. 

பேராசான் பிள்ளையவர்கள் பற்றிய நாகநந்தி அவர்களின் பேச்சு கேட்கும்போது ஆசான் சீடன் உறவு ஒருவகையில் காலந்தோறும் நிகழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திரு நாகநந்தி திரு ஹரிகி உறவு பற்றிய எண்ணமும் மகிழ்ச்சி தந்தது.

ஒரு காலகட்டத்தின் வரலாறு பிள்ளையவர்களின் நூல்கள் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழின் தமிழரின் சொத்து அவரது பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள். தமிழன் சொத்தை அவன் அநுபவிக்காவிட்டால், படிக்காவிட்டால் வேறு யார் படிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எண்ணத்தக்கது.
உடலின் நோய்தீர நோய் வரலாறு, பரம்பரை வரலாறு தெரிய வேண்டுவது போல் உள்ளம் வளம் பெற, சமுதாயம் நலம் பெற தமிழின் வரலாறு தெரிய வேண்டும் என்ற ஆசிரியர் குரல் காதில் இன்னும் ஒலிக்கிறது.
மீண்டும் நன்றி.

Subashini Tremmel

unread,
May 27, 2012, 2:51:54 AM5/27/12
to Karuannam Annam, மின்தமிழ், Subashini Tremmel
இவ்வொலிப்பதிவைக் கேட்டு கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளயவர்களின் மாணாக்கர்கள் பால் உள்ள அன்பு என்பது கேட்கும் போதே எவ்வளவு வியக்கத்த தக்கதாக இருக்கின்றது? இந்த ஒலிப்பதிவுகளை நான் முதலில் கேட்ட போது பிள்ளையவர்களின் குணத்தைப் புரிந்து கொண்டதை விட என் சரித்திரம் நூலைப் படித்து உ.வே.சாவின் எழுத்தில் பற்பல இடங்களில் அவர் குறிப்பிடுவதை வாசித்த பின்னர் மீண்டும் கேட்கும் போது மேலும்ஆழமாக உணர முடிகின்றது. 

>>
பேராசான் பிள்ளையவர்கள் பற்றிய நாகநந்தி அவர்களின் பேச்சு கேட்கும்போது ஆசான் சீடன் உறவு ஒருவகையில் காலந்தோறும் நிகழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திரு நாகநந்தி திரு ஹரிகி உறவு பற்றிய எண்ணமும் மகிழ்ச்சி தந்தது. 
நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் :-)

சுபா

2012/5/26 Karuannam Annam <karu...@gmail.com>

coral shree

unread,
May 27, 2012, 3:01:24 AM5/27/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

நன்கு சுவையாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்..  நன்றி.

அன்புடன்
பவளா

2012/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Subashini Tremmel

unread,
May 28, 2012, 9:25:09 AM5/28/12
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 3

மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா அவர்களது மாதாமகரின் பெயர் கிருஷ்ணசாஸ்திரிகள் என்பது. வாழ்நாள் முழுதும் சிவ பூஜையும், ஜபமும், கர்மானுஷ்டானங்களுமே புரிந்து வருவது சாதாரண காரியமல்லவே! ஆனால் தனது தாத்தா சிவ பூஜையே கதியென்று இருந்தார் என்று சொல்லி வியக்கின்றார் உ.வே.சா.

"வண்டின் ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவ நாமத்திலே நான் இளமையில் ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம ஜபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ' நின்றும் இருந்தும் கிடந்தும்' அந்த ஜபத்தை செய்து கொண்டு வருகின்றேன்" என்று தனது 85ஆவது வயதில் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

"இளமையில் கிருஷ்ண சாஸ்திரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர ஜபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமந்தான். அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருஷ்ண சாஸ்திரிகளேயாவார்" என்கின்றார்.

கிருஷ்ண சாஸ்திரிகள் புதுக்கோட்டைக்கு அருகே ஆரணப்பட்டி என்னும் ஊரில் இருந்தவர். கைம்பெண்ணாக குழந்தைகளுடன் பிறந்த வீடு திரும்பிய தனது தமக்கையாரிடம் வீடு நிலம் ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு தன் மனைவியாருடன் சோழ நாட்டின் காவிரிக்கரை பக்கத்திலுள்ள ஊர்களில் சிவபக்தி செய்து வர எண்ணி புறப்பட்டு விட்டார். 

இறைவழிபாடு செய்து கொண்டு உடையார்பாளையம் வந்து சேர்ந்தார். உடையார்பாளையத்தில் அப்போது சமஸ்தானதிபதியாக இருந்த கச்சிக் கல்யாண ரங்கப்ப உடையார்ரிடம் தானாதிகாரியாக இருந்த ஸ்ரீசுப்பராய சாஸ்திரிகள் கிருஷ்ண சாஸ்திரிகளை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். சமஸ்தானத்தைச் சேர்ந்த இடத்தில் கிருஷ்ண சாஸ்திரிகளை நலமாக வைத்திருக்க ஏதாகிலும் உதவலாம் என்றெண்ணி அருகிலிருந்த கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருஷ்ண சாஸ்திரிகளுக்கும் இது மகிழ்ச்சியும் மன நிறைவும் அளிப்பதாகவே நிச்சயம் இருந்திருக்கும்.

இந்த கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயம் முதலாம் இராஜேந்திரன் கட்டிய கற்றளி கோயில். இக்கோயிலின் பெயர் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்பதாகும். சிற்பக்கலையின் அற்புதங்கள் நிறைந்தது இக்கோயில். மிகப்பெரிய வடிவத்தில் இறைவன் லிங்க வடிவத்தில் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளார். இந்த ஆலயத்திலேயே சிங்கக் கிணறு என்று குறிப்பிடப்படும் ஒரு தீர்ர்த்தமும் உண்டு. கங்கை வரை போர் செய்து சென்று அங்கே வென்று வந்த முதலாம் இராஜேந்திரன், தன்னிடம் தோல்வி கண்ட அந்த வட நாட்டு மன்னர்களின் தலையில் கங்கை நீரை ஏற்றிக் கொண்டு வந்ததாகக் கூறுவர். இந்த சிங்கக் கிணற்றில் அந்த கங்கை நீரை விடும்படி இராஜேந்திரன் பணித்ததால் இந்தச் சிங்கக் கிணறுக்கு கங்கை என்றும் ஒரு பெயர் உண்டு. 

இந்த கங்கை கொண்ட சோழீச்சுரத்தில் சேவகம் செய்து கொண்டிருந்த போது அவருக்கும் அவர் மனைவிக்கும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு முறையே லக்‌ஷ்மி, பாகீரதி. சரஸ்வதி எனப் பெயரிட்டனர். இதில் சரஸ்வதி என்பவரே உ.வே.சா அவர்களது தாயார். 

சில காலங்களுக்குப் பின்னர் அவர் தனது சுற்றத்தாருடன் மீண்டும் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் கங்கை கொண்ட சோழபுரத்தை விட்டு புறப்பட்டு மீண்டும் சூரிய மூலைக்குத் தன் குடும்பத்துடன் திரும்பினார். சூரியமூலையில் (சூரியமலையென்று தற்சமயம் வழங்குவதாக உ.வே.சா குறிப்பிடுகின்றார்) சிவ வழி பாடு செய்து கொண்டு நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு ஜீவித்துக் கொண்டு சிவ பூஜையே கதியென்று மீண்டும் தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். சூரியமூலைக்கு வந்த பின்னரும் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சுப்பலக்‌ஷ்மி, சிவராமையர், மீனாஷி ஆகியோர்.

இந்த காலகட்டத்தில் வேங்கடசுப்பையர், அதாவது உ.வே.சா அவர்களின் தகப்பனாருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடும் பெண் தேடலும் நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ண சாஸ்திரிகளைப் பற்றி கேளிவிப்பட்டிருந்தபடியால் அவரது மூன்றாவது மகளான சரஸ்வதியை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். உடையார் பாளையம் ஜமீந்தார் பொருளதவி செய்ய, பெற்றோர் இந்தத் திருமணத்தை இனிதே நடத்தி வைத்தனர்.  

குறிப்பு:இப்பதிவு தொடர்பான குறிப்புக்கள் 7 அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்..

சுபா

2012/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பகுதி 2

 “ ”எப்போதும் சிவ பக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைபிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பிருக்கின்றேன். ” என்று உ.வே.சா என் சரித்திரத்தில் 6ம் அத்தியாயத்தில் கூறுகின்றார். 

உ.வே.சா அவர்களின் தந்தையாரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். உ.வே.சாவின் வாழ்க்கையில் அவர் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நின்றவர் அவர் தந்தையார். அவரைப் பற்றிய சில ஆரம்பகால செய்திகளை வாசிப்பதும் உ.வே.சாவின் இளமை காலத்தையும் வாழ்க்கைச் சூழலையும் தெரிந்து கொள்ள உதவும்.

coral shree

unread,
May 28, 2012, 9:30:19 AM5/28/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அருமை சுபா. 

பிதாமகர் போல மாதாமகர் போல. எனக்கும் இந்த சொல் புதியது.. மிக அழகாக கோர்வையாகச் செல்கிறது உ.வே.சா அவர்களின் சரிதம். வாழ்த்துகள் சுபா. மிக நன்று.

அன்புடன்
பவளா

2012/5/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
May 28, 2012, 9:31:45 AM5/28/12
to mint...@googlegroups.com
தாய்வழி முன்னோர்களைக் குறிக்கும் சொல் மாதாமஹர் என்பது.  அமாவாசை, மஹாலய பக்ஷம் போன்ற முக்கிய தினங்களில் மாதாமஹர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.  

2012/5/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 3

மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

குறிப்பு:இப்பதிவு தொடர்பான குறிப்புக்கள் 7 அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்..

சுபா

Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Subashini Tremmel

unread,
May 30, 2012, 6:36:40 AM5/30/12
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 4

இசையுடன் தமிழ் செய்யுட்களைப் பாடி திருவாவடுதுரை ஆதீனகர்த்தரின் அன்பைப் பெற்றவர் உ.வே.சா அவர்கள். தமிழ் கற்க அவருக்கிருந்த ஆர்வம் அளப்பறியது. சங்கீதம் பயிற்சி என்பது இடையில் தடைபட்டாலும் பாரம்பரியமாகக் கற்ற இசை அவரது தமிழ்ப்பணிக்கு மெருகூட்டியது என்பதை என் சரித்திரம் நூலில் பல இடங்களில் வாசகர்கள் உணர முடியும். நந்தனார் சரித்திர கீர்த்தனம் இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியாரிடமும் ஒரு சில சமயம் இவர் பாடம் படித்திருக்கின்றார். 

இப்படி சங்கீதத்தில் நாட்டம் என்பது இவருக்கு தந்தையின் தாக்கத்தால் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. வேங்கட சுப்பையர் கனம் கிருஷ்ணையரிடத்தில் பாடம் கேட்டவர். ஆக கனம் கிருஷ்ணைய்யரைப் பற்றிய சிறு குறிப்பும் வழங்குவது தேவை என்று நான் கருதுவதால் அவரைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கனம் கிருஷ்ணையரைப் நமக்கு அறிமுகம் செய்யும் போது "சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்த புகழ் பெற்ற சங்கீத வித்துவான்களுள் ஒருவர்"  என்றே உ.வே.சா குறிப்பிடுகின்றார். இவர் தந்தை வழி சொந்தமும் கூட என்பதை 2ம் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். 

கனம் கிருஷ்ணையர் சங்கீத பரம்பரையில் பிறந்தவர். தன் தந்தையாரிடமும் அப்பால் தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்வானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பையரிடமும் சங்கீத பயிற்சி பெற்று பின்னர் சமஸ்தானத்து சங்கீத வித்வானாக ஆனார். தமிழ்நாட்டில் கன மார்க்கம் வழக்கத்தில் இல்லாத காலம் அது.அப்போது பொப்பிலி சமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா என்ற சங்கீத வித்வான் தஞ்சாவூர் சமஸ்தானத்துக்கு வந்து கன மார்க்கத்தைப் பாடிக் காட்ட அந்த இசையில் மயங்கிய அரசர் "இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் இந்தக் கனமார்க்க சங்கீத கலையைக் கற்றுக் கொண்டு வருகின்றீர்களா" எனக் கேட்க, கிருஷ்ணையர் தான் இந்தப் பய்ற்சி மேற்கொள்வதாகச் சொல்லி கபிஸ்தலமென்னும் ஊருக்குச் சென்று அங்கே இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வந்தர் ஒருவருடைய ஆதரவில் பொப்பிலி கேசவையாவிடம் கன மார்க்க சங்கீதத்தின் இயல்புகளைக் கற்றுக் கொண்டார். பின்னர் தஞ்சை சமஸ்தானம் திரும்பி அரசரின் அவையில் பாடிக்காட்ட அன்றிலிருந்து அவருக்கு கனம் கிருஷ்ணையர் என்ற பெயர் அமைந்தது.

கோபால கிருஷ்ண பாரதியாரும் கனம் கிருஷ்ணையரிடம் சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டிருக்கின்றார் என்ற செய்தியையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. 

கன மார்க்க சங்கீதத்தைப் பயிற்சி செய்ய நல்ல உடல் பலமும் தேக ஆரோக்கியமும் முக்கியமாம். தன் மகன் வேங்கட சுப்பையரை தனது தமையனார் கனம் கிருணையரிடம் செல்லத்தம்மாள் ஒப்படைத்தபோது வேங்கட சுப்பைய்யர் மிக மெலிந்ததேகத்தோடு இருந்ததாகவும் "இவனுக்கு புஷ்டி போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும், உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்" என்று சொன்னதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். "இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புஷ்டிப் படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாக காப்பாற்றிக் கொண்டால் போதும்" என்று சொல்லிவிட்டு சில நாட்கள் அங்கே தங்கியிருந்து வேங்கட சுப்பையரை சங்கீத குருகுலத்தில் விட்டு வந்தார் உ.வே.சாவின் பாட்டியார்.

கனம் கிருஷ்ணயர் வேங்கட சுப்பையரை அன்புடன் நடத்தினாலும் கண்டிப்புடனும் பயிற்சி கொடுத்து வளர்த்தார்.சமஸ்தானத்தில் கனம் கிருஷ்னையருக்கும் ஜமீந்தாரைப்போன்ற வரவேற்புதானாம். கனம் கிருஷ்ணையர் குதிரை மேல் சவாரி செய்து செல்வாராம். ஜமீந்தார் அன்பளிப்பாக வழங்கிய குதிரை அது.

முறையாக இரவும் பகலும் சங்கீதம் பயிற்சி பெற்றார் வேங்கட சுப்பையர். கனம் கிருஷ்ணையர் வித்வான்கள் அடங்கிய சபையில் பாடும் போது வேங்கட சுப்பையரும் இணைந்து பாடுவாராம்.. ஜமீந்தாருக்கும் வேங்கட சுப்பையர் மேல் அன்பு உண்டாகிற்று.

வேங்கட சுப்பையருக்கு திருமணம் செய்ய நினைத்து பெண் தேடிக் கொண்டிருக்கையில் கனம் கிருஷ்ணையருக்கு உடல் நிலை மோசமாகியது. ஆதலால் ஜமீந்தாரிடம் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு உடையார்பாளையத்தை விட்டு தனது சொந்த ஊராகிய திருக்குன்றத்திற்குச் சென்றார் கனம் கிருஷ்ணையர். திருக்குன்றத்திலேயே அவர் இறுதி காலம் அமைந்து. அதற்குப் பிறகு வேங்கட சுப்பையர் உடையார் பாளையம் திரும்பி சமஸ்தானத்திலே இணைந்து கொண்டார்.அப்போது ஜமீன்தார் கனம் கிருஷ்ணையருக்கு பிறகு அவரது ஸ்தானத்திற்கு ஒருவரை தேடிக்கொண்டிருக்க சாமா சாஸ்திரிகளின் குமாரராகிய சுப்பராயரென்னும் வித்துவானைத் தருவித்து அவரை சமஸ்தான வித்துவானாக நியமித்தார் ஜமீன்தார் . அப்போது வேங்கட சுப்பையர் சமஸ்தானத்து வித்துவான்களில் ஒருவராக இருந்து வந்தார்.

இந்த சங்கீத பயிற்சியும் அனுபவமும் வேங்கட சுப்பையருக்குப் பிற்காலத்தில் கதாக்காலட்சேபங்களும் இசைக் கச்சேரிகளும் நடத்தும் வாய்ப்புக்களை அமைத்துத் தந்தன. பலமான சங்கீத அஸ்திவாரம் கனம் கிருஷ்ணையரிடம் மேற்கொண்ட பயிற்சியினால் வேங்கட சுப்பையருக்கு அமைந்தது. இதுவும் அவர் செய்த சிவ பூஜையின் பலன்தானோ?

தொடரும்...
சுபா

2012/5/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 3

மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

Tthamizth Tthenee

unread,
May 30, 2012, 6:47:05 AM5/30/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது

மாதா மஹ, மாதுர்பிதா மஹ, மாதுர் ப்ரபிதா மஹ  என்று சொல்லித் தர்ப்பணம் செய்வோம்
 
அதே போல் பிதாமஹ, பிதுர்பிதாமஹ, பிதுர்ப்ரபிதா மஹ என்று சொல்லித்தான்
தர்ப்பணம் செய்வது வழக்கம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 30, 2012, 9:17:24 AM5/30/12
to mint...@googlegroups.com
கனம் கிருஷ்ணையர் குறித்த செய்திகளை இன்றே அறிந்தேன். நல்ல பகிர்வுக்கு நன்றி.

வேதம் ஓதுவதிலும் "கனம்" சொல்வது என்று உண்டு.  அவர்களை "கனபாடிகள்" என அழைப்பார்கள்.  அதற்கும் மிகுந்த பயிற்சி வேண்டும் எனவும், உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றும் கூறுவார்கள்.

2012/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 4

கன மார்க்க சங்கீதத்தைப் பயிற்சி செய்ய நல்ல உடல் பலமும் தேக ஆரோக்கியமும் முக்கியமாம். தன் மகன் வேங்கட சுப்பையரை தனது தமையனார் கனம் கிருணையரிடம் செல்லத்தம்மாள் ஒப்படைத்தபோது வேங்கட சுப்பைய்யர் மிக மெலிந்ததேகத்தோடு இருந்ததாகவும் "இவனுக்கு புஷ்டி போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும், உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்" என்று சொன்னதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். "இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புஷ்டிப் படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாக காப்பாற்றிக் கொண்டால் போதும்" என்று சொல்லிவிட்டு சில நாட்கள் அங்கே தங்கியிருந்து வேங்கட சுப்பையரை சங்கீத குருகுலத்தில் விட்டு வந்தார் உ.வே.சாவின் பாட்டியார்.

Subashini Tremmel

unread,
Jun 14, 2012, 3:27:28 PM6/14/12
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 5

சாமி மலையில் இருக்கின்ற கடவுள் நாமிநாதன். அந்த மூர்த்தியின் பெயரை நினைத்து இடப்பட்ட பெயரே உ-வே.சா அவர்களுக்கு வாய்த்தது, இவரை அனைவரும் சாமா என்றே பெயரைச் சுருக்கி அழைப்பார்களாம். ஐந்து வயதான போது உ.வே.சா அவர்களுக்கு வித்தியாப்பியாசம் செய்து வைத்தனர் இவர் குடும்பத்தினர். இவரது பாட்டனார் அரிச்சுவடி சொல்லி கல்வியைத் தொடக்கி வைத்தார். இப்படித்தான் இவரது கல்வி முதலில் தொடங்கியது.

இன்று நாம் காண்கின்ற பள்ளிக்கூடம் என்பதற்கும் இன்றைக்கு ஏறக்குறைய 180 வருஷங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நிலவிய கிராமத்துப் பள்ளிக்கூடம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு அல்லவா? அந்த வேறுபாட்டினை உ.வே.சா அவர்களின் பதிவுகளின் வழியாகவே தெரிந்து கொள்வதும் சுவையான ஒரு அனுபவமாக எனக்குத் தெரிகின்றது.

என் சரித்திரம் நூலில் 10ம் அத்தியாயத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்கம் கிடைக்கின்றது. காகிதப் பயன்பாடு புழக்கத்திற்கு வராத காலமது. பிற்காலத்திலாவது சிலேட் பயன்படுத்தி மாணவர்கள் எழுத்துப் பயிற்சி செய்வது வழக்கில் இருந்தது. ஆனால் உ.வே.சாவின் இளமைக் கால்த்தில் எழுத்துப் பயிற்சி என்பது மணலில் எழுதி பயிற்சி செய்வது தான். பிறகு மாணவர்கள் எழுத்தாணி பிடிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு ஓலைகளில் எழுத வேண்டும். அதிலும் ஓலைச்சுவடியில் பயிற்சி என்பது மாணவர்களின் சுய முயற்சியைப் பொறுத்தது. 

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் உ.வே.சா முதலில் நாராயணையர் என்பரிடம் தான் கல்வி கற்றிருக்கின்றார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடங்கள் எண்சுவடி, அரிச்சுவடி ஆகியவையே. இந்தப் பள்ளிக்கூடத்தில் அப்போது அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்திருக்கின்றனர்.

இந்த நாரயணையர் பற்றி இன்னூலில் வரும் விளக்கம் இந்த ஆசிரியரை நேரில் மணக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. ஏறக்குறைய முப்பத்தைந்து வயது உடைய அழகான வடிவம் உடையவர். ஆனாலும் உ.வே.சாவிற்கும் மற்ற பிள்ளைகளுக்கும் இவரைக் கண்டாலே பயம் உண்டாகுமாம். எல்லாம் நாராயணையரின் பிரம்பு செய்யும் மாயம் தான். உ.வே.சா சொல்கின்றார், “பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும் போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் ஞாபகம் வருகிறது”. அடித்தால் மாணவர்கள் பணிவார்கள். பயம் கல்வியை வளர்க்கும் என்ற கருத்து மேலோங்கியிருந்த காலம் அது!.

நாராயணையரின் அடியைப் பற்றி விளக்கும் போது ஒரு சம்பவத்தை உ.வே.சா நினைவு கூர்கின்றார். பிச்சுவைய்யர் என்ற பணக்கார வீட்டுப் பையன் ஒருவன்.. அதிகம் குரும்பு செய்பவன். பணக்காரர் என்பதால் கொஞ்சம் கூடுதல் அகங்காரமும் கர்வமும் உள்ளவன். அவனை அடக்கி ஆள்வது நாராயணையருக்கு முடியாத ஒன்றாகிப் போனது.அவருடைய பிரம்பு அவனிடம் எவ்வளவு வேலை செய்தும் பலன் கிடைக்கவில்லை.அதிக கடுமையான தண்டனைகளை விதித்திருக்கின்றார். ஆனால் பிச்சு அடங்கவில்லை.பின்னர் வாத்தியார் பிச்சுவை பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கிவிட்டாராம். 

இதனை உ.வே.சா அவர்கள் குறிப்பிடும் போது " அவன் பெற்ற விடுதலை நமக்கும் கிடைக்காதா? என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு. பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பதைப் பற்றி நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறு ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப் பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்னா? இராவிட்டால் என்ன?" என்று நயமாகக் கூறுகின்றார்.

இந்தத் திண்ணை பள்ளிக்கூடத்தில் சட்டாம் பிள்ளையாக நியமனமாக ஒரு மாணவர் கெட்டிக்காரராகவும் பலசாலியாகவும் இருக்க வேண்டியது முக்கியம். புத்திசாலியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை.ஆனால் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம்.  வாத்தியார் இல்லாத நேரத்தில் அவருக்குப் பிரதினிதியாக இருந்து மாணவர்களை அடக்கி ஆள்வது, பாடம் ஒப்புவிக்கச் சொல்லி கேட்பது போன்றவை இந்த சட்டாம்பிள்ளையின் வேலைகளில் அடங்கும். வாத்தியாரைக் கண்டு அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது போலவே இந்த சட்டாம்பிள்ளைகளுக்கும் பிற மாணவர்கள் அடங்கி பயந்து நடந்து கொள்வது அவசியம்.

உ.வே.சா இந்தச் சட்டாம்பிள்ளைகளைப் பற்றி குறிப்பிடும் போது இப்படிச் சொல்கின்றார். " சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய திண்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்." அந்தக் காலத்திலும் கூட இப்படியெல்லாம் இருந்திருக்கின்றதே என நினைக்கும் போது வியப்பு மேலிடுகின்றது!

இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அனுபவம் பெற்ற மாணவர்கள் புதிய இளம் மாணவர்களுக்குப் போதிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.
  
அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் காலை ஐந்து மணிக்கே தொடங்கி விடுமாம். நேரம் தாமதித்து வருபவருக்குப் பிரம்படி நிச்சயம். ஆக ஒவ்வொரு மாணவரும் வெகு சீக்கிரமே எழுந்து தம்மை தயார் படுத்திக் கொண்டு ஐந்து மணிக்கு முன்னரே வந்துவிடுவராம். எப்படி இருந்தாலும் பிரம்படி நிச்சயம். தாமதமாக வருபவருக்கு தாமதத்தை பொறுத்து பிர்ம்படியின் அழுத்தம் அமையுமாம். கொஞ்சம் தாமதம் என்றால் லேசான பிரம்பு தொட்டு விட்டுச் செல்வது போலத் தடவிச் செல்லும்.. தாமதம் என்றால் நல்ல அடி கையில் சுளீர் என்று கிடைக்குமாம். அதனால் முதல் நாள் பலத்த அடி வாங்கியவர்கள் மறு நாள் வெகு சீக்கிரமே வந்து விட பிரயத்தனம் எடுப்பார்களாம். முதலில் வந்து நிற்கும் மாணவானை வேத்தான் என்று பெயரிட்டு அழைப்பார்களாம். வேற்றான் என்பதன் மருவல் இச்சொல். 

உ.வே.சா இதனை விளக்கும் போது இப்படிச் சுவை பட சொல்கின்றார். " உபாத்தியாயரது கைக் கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப் பெருமை அல்லவா? சில சமயங்களில் நாமே இன்று முதலில் வந்து விட்டோம் என்ற பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும் தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோஷப்படக்கூடாதென்னும் நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான். அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும். "
இதனை வாசித்த போது உ.வே.சா அவர்கள் தனது இளமை ப்ராயத்து சம்பவங்களை மிக மிக அனுபவித்து தனது எண்ணங்களை மீண்டும் கோர்வையாக்கி அதனை நாமும் ரசிக்கும்படி எழுதியிருக்கின்றார் என்பதை வரிக்கு வரி உணர்ந்தேன்.

திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்பவை, இப்போது இருக்கும் பள்ளிகள் போல திங்கள் தொடங்கி வெள்ளி வரை நடைபெறும் வழக்கமெல்லாம் அக்கால வழக்கில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை பிரதமை அஷ்டமி ஆகிய தினங்களில் பள்ளிக்கூடம் இருக்காது. இந்த விடுமுறை நாட்களை வாவு என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா.
 
வாத்தியாருக்கு ஒவ்வொரு மாணவனும் மாதம் கால் ரூபாய் சம்பளம் தருவார்களாம். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தினம் தினம் ஆசிரியருக்கு ஏதாவது கொண்டு வந்து தருவார்களாம். அது ஒரு பொருளாக அதாவது விறகு, வறட்டி, காய் பழம் என ஏதாவது ஒன்றாக இருக்குமாம். பணக்காரர்கள் வீட்டுக் குழந்தைகள் வீட்டிலிருந்து வருஷத்திற்கான நெல்லும் வாத்தியாருக்கு சம்பளமாகக் கிடைக்குமாம். ந்வராத்திரி நேரத்தில் வாத்தியாருக்கு நல்ல வருமானமும் அமையும். இந்த பிரத்தியேக வருமானமானது மானம்பூ எனப்படும் (மகானோன்பு என்பது). அக்காலத்திலே வாத்தியாருக்கு கணக்காயர் என்ற ஒரு பெயரும் வழக்கில் இருந்துள்ளது. 

ஆசிரியர் என்பவர் சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து ஆராதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை என் சரித்திரம் பல உதாரணங்களுடன் நன்கு விளக்குகின்றது!

தொடரும்..

அன்புடன்
சுபா

2012/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 14, 2012, 4:20:48 PM6/14/12
to mint...@googlegroups.com
ஆனந்தத்துடன் படித்து வருகிறேன். நான் கூட பாட்டி துணையுடன் திண்ணை ப்ள்ளிக்கூடம் சென்று, வாத்தியாருக்கு வசவு வாங்கிக்கொடுத்து, பிரம்படியிலிருந்து தப்பி இருக்கிறேன். பாட்டி துணை பரமன் துணை. 
இன்னம்பூரான்

2012/6/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

coral shree

unread,
Jun 14, 2012, 8:04:29 PM6/14/12
to mint...@googlegroups.com
அன்பின்சுபா,

அற்புதமான பதிவு. திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றி வெகு சுவாரசியமான தகவல்கள் அளித்துள்ளீர்கள்..

// உ.வே.சா இந்தச் சட்டாம்பிள்ளைகளைப் பற்றி குறிப்பிடும் போது இப்படிச் சொல்கின்றார். " சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய திண்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்."  // நல்ல மேற்கோள்.. 

அந்த காலத்தில் குருகுலம் என்று சொல்வார்கள் இல்லையா. அதுகூட கிட்டத்தட்ட இந்த திண்ணைப்பள்ளிக்கூடம் போலத்தான் இருந்திருக்கும்.. குருவிற்கு பணிவிடைகள் செய்து கொண்டு அவரிடம் பாடமும் , வாழ்க்கைப் பாடமும் இரண்டும் ஒரு சேர படிக்கும் உயர்ந்த கல்வி முறை. நல்ல தொடர்.தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

அன்புடன்
பவளா.

2012/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Jun 14, 2012, 9:07:53 PM6/14/12
to mint...@googlegroups.com
அம்மையார் சுபா அவர்களுக்கு வணக்கம்.

உங்களது இழையில் சிறிது நேரம் உலாவினால் போதும்,   உ.வே.சா வுடன் ஒரு உலா வந்து விடலாம் போல் உள்ளது.

அன்பன்
கி.காளைராசன்

seshadri sridharan

unread,
Jun 16, 2012, 1:08:22 AM6/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
2012/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
//திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்பவை, இப்போது இருக்கும் பள்ளிகள் போல திங்கள் தொடங்கி வெள்ளி வரை நடைபெறும் வழக்கமெல்லாம் அக்கால வழக்கில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை பிரதமை அஷ்டமி ஆகிய தினங்களில் பள்ளிக்கூடம் இருக்காது. இந்த விடுமுறை நாட்களை வாவு என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா//

மலையாளத்தில் கருத்த வாவு என்று கிருஷ்ண பட்சத்தையும், வெளுத்த வாவு என்று சுக்கில பட்சத்தையும் குறிப்பர். இந்த வாவு < உவா என்ற நிலவைக் குறிக்கும் சொல்லின் திரிபு. உ. வெ. சா வின் இளமைக் காலத்தில் வாவு என்ற சொல் வழக்கிலிருந்தது போலும்.  

சேசாத்திரி 
.
 
Subashini Tremmel

unread,
Jun 16, 2012, 3:51:13 AM6/16/12
to seshadri sridharan, மின்தமிழ், Subashini Tremmel

2012/6/16 seshadri sridharan <ssesh...@gmail.com>

2012/6/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
//திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்பவை, இப்போது இருக்கும் பள்ளிகள் போல திங்கள் தொடங்கி வெள்ளி வரை நடைபெறும் வழக்கமெல்லாம் அக்கால வழக்கில் இல்லை. பௌர்ணமி, அமாவாசை பிரதமை அஷ்டமி ஆகிய தினங்களில் பள்ளிக்கூடம் இருக்காது. இந்த விடுமுறை நாட்களை வாவு என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா//

மலையாளத்தில் கருத்த வாவு என்று கிருஷ்ண பட்சத்தையும், வெளுத்த வாவு என்று சுக்கில பட்சத்தையும் குறிப்பர். இந்த வாவு < உவா என்ற நிலவைக் குறிக்கும் சொல்லின் திரிபு. உ. வெ. சா வின் இளமைக் காலத்தில் வாவு என்ற சொல் வழக்கிலிருந்தது போலும்.  

அப்படியா..? இப்போது இந்தச் சொல் ஏதாகினும் வகையில் தமிழர் பேச்சு வழக்கத்தில் உள்ளதா ?

சுபா

சேசாத்திரி 
.
 
seshadri sridharan

unread,
Jun 17, 2012, 1:28:36 AM6/17/12
to Subashini Tremmel, மின்தமிழ்
2012/6/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>
//மலையாளத்தில் கருத்த வாவு என்று கிருஷ்ண பட்சத்தையும், வெளுத்த வாவு என்று சுக்கில பட்சத்தையும் குறிப்பர். இந்த வாவு < உவா என்ற நிலவைக் குறிக்கும் சொல்லின் திரிபு. உ. வெ. சா வின் இளமைக் காலத்தில் வாவு என்ற சொல் வழக்கிலிருந்தது போலும்.  

அப்படியா..? இப்போது இந்தச் சொல் ஏதாகினும் வகையில் தமிழர் பேச்சு வழக்கத்தில் உள்ளதா ?//

மக்களின் சடங்குகள், பழக்கங்கள் மாறும்போது அவற்றுக்கான சொற்களும் அழிநது போகின்றன. வாவு அதில் ஒன்று.

rajam

unread,
Jun 17, 2012, 12:46:18 PM6/17/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
தமிழகச் செட்டியார்/நகரத்தார் வழக்கில் இந்த "வாவு" என்ற சொல் வழக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
முதுகலை வகுப்பில் படித்தபோது (1961-1963) இதைத் தெரிந்துகொண்டேன்.

Innamburan Innamburan

unread,
Jun 17, 2012, 1:27:36 PM6/17/12
to mint...@googlegroups.com
ஆமாம். காரைக்குடியில். குஜராத்தியிலும் அதே சொல். மெல்லிய திரிபு.

2012/6/17 rajam <ra...@earthlink.net>

seshadri sridharan

unread,
Jun 17, 2012, 10:01:03 PM6/17/12
to mint...@googlegroups.com
அந்த குசராத்திச் சொல்லைக் குறிப்பிடுங்களேன் ஐயா!

சேசாத்திரி

2012/6/17 Innamburan Innamburan <innam...@gmail.com>

Singanenjam Sambandam

unread,
Jun 18, 2012, 2:30:18 AM6/18/12
to mint...@googlegroups.com
திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறேன். இங்கே , கறுத்த வாவு என்பது மறை நிலாவையும் (அமாவாசை), வெளுத்த வாவு என்பது  நிறை நிலாவையும் (பௌர்ணமி) குறிக்கிறது. வாவு பலி என்பது திவசத் திதியில் தரப்படும் அர்ப்பணத்தையும்  குறிக்கிறது. வாவு பலி , குமரி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களிடையே பழக்கத்தில் உள்ளது. 

2012/6/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 18, 2012, 12:07:18 PM6/18/12
to மின்தமிழ், Subashini Tremmel
ஒரு சிறு குறிப்பு...
எப்படியோ எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன.  
" சாமி மலையில் இருக்கின்ற கடவுள் சாமிநாதன்" என இருக்க வேண்டும். சா மறைந்து விட்டது.

சுபா

2012/6/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 1, 2012, 6:12:25 AM7/1/12
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 6

உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்

தமிழும் சங்கீதமும் கற்று மகன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற மாபெரும் சிந்தனையுடனேயே இவரது அப்பா பல ஆசிரியர்களிடம் இவரை அழைத்துச் சென்று கல்வி அமைத்துத் தந்தார் என்பதை என் சரித்திரத்திரம் நூலின் முதற் பகுதிகள் அனைத்திலும் காண முடிகின்றது. அளப்பறிய முயற்சி அது. அந்த முயற்சிகளில் ஒன்றே சடகோபயங்காரிடம் இவரை அழைத்துச் சென்றதும் அவரது மாணவராக இவரைச் சேர்ப்பித்ததும். இதனை ஒட்டி உ.வே.சா அவர்கள் தனது இளமை பருவத்து சிந்தனையை நூலின் 13ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார்.

"என் பிதா சடகோபயங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விஷயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக் காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே. "

தற்கால கல்வி முறையைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நம்மிடையே உலவுகின்றன. கல்வி முறை என்பது எப்படிப்பட்டதாகினும் படிக்கின்ற மாணாக்கர் உள்ளத்திலே முதலில் கல்வியின் பால் தீராத காதல் வரவேண்டும். இந்த அதிதீவிர பற்றும் மோகமும் மாணாக்கரை மேலும் மேலும் ஆய்வுப்;பாதையில் சென்று அவர்களை அறிவினைத் தேடிச் சென்று அதன் வழி கல்வியைப் பெற்றவர்களாக உருவாக்கும். தற்கால சூழலில் பெற்றோரும் சமூகமும் ஒன்றாக இணைந்து பரீட்சையில் தேர்ச்சி பெறுதல் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து மனனம் செய்து ஒப்புவிக்கும் கருவிகளைப் படைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைப் பரவலாக காண்கின்றோம். உண்மையிலேயே அது மாணவரின் கல்வித் தேடலுக்குப் பாதையை அமைத்துத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே என் கருத்தாக அமைகின்றது.

உ.வே.சா ஒரு நல்ல மாணவர். மற்ற மாணவர்கள் உதாரணமாக எற்றுக் கொண்டு கல்வியில் முன்னேற இவர் ஒரு நல்லதொரு வழிகாட்டி. 

கல்வி.. கல்வி.. தமிழ்க் கல்வி என்று தேடியவர். ஆன்மாவின் தேடலாக அது அவருக்கு அமைந்தது. சடகோபயைங்கார் உ.வே.சா.அவர்களின் உள்ளத்தில் தமிழ் விதையை விதைத்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் அத்தேடலை செம்மைப் படுத்தி உ.வே.சாவின் தமிழ்கல்வியின் அடிப்படையை அமைத்துக் கொடுத்தார். 

தொடரும்...
சுபா

2012/6/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பகுதி 5

சாமி மலையில் இருக்கின்ற கடவுள் நாமிநாதன். அந்த மூர்த்தியின் பெயரை நினைத்து இடப்பட்ட பெயரே உ-வே.சா அவர்களுக்கு வாய்த்தது, இவரை அனைவரும் சாமா என்றே பெயரைச் சுருக்கி அழைப்பார்களாம். ஐந்து வயதான போது உ.வே.சா அவர்களுக்கு வித்தியாப்பியாசம் செய்து வைத்தனர் இவர் குடும்பத்தினர். இவரது பாட்டனார் அரிச்சுவடி சொல்லி கல்வியைத் தொடக்கி வைத்தார். இப்படித்தான் இவரது கல்வி முதலில் தொடங்கியது.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!

N. Kannan

unread,
Jul 1, 2012, 6:51:14 AM7/1/12
to mint...@googlegroups.com
ஒரு நூலுடன் கைகோர்த்து நடக்கவும் ஒரு திறமை வேண்டும்!

நடந்தாய் வாழி காவேரி! என்று இளங்கோ அடிகள் நடந்தது போல. தி.ஜாவும்,
சிட்டியும் நடந்தது போல் இதுவொரு புது முயற்சி.

கைகோர்க்கும் ஆள் பெரிய ஆளாக இருந்தால் கற்பதும் அதைப்பகிர்வதும் இன்னும்
சிறப்படைந்துவிடும். இங்கு நடை பயில்வது தமிழ்த்தாத்தாவுடன்!

நடந்தாய் வாழி! சுபா!

நா.கண்ணன்

2012/7/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> பகுதி 6

coral shree

unread,
Jul 1, 2012, 7:38:01 AM7/1/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பின் சுபா,

உ.வே.சா அவர்களின் வரலாற்றை மிக அழகாக கொண்டு செல்கிறீர்கள் .. வாழ்த்துகள். உ.வே.சா அவர்கள் தம் குருவின் பெயரை எழுத்தால் எழுதும் போதுகூட தம் கைகள் நடுங்குவதாகக் கூறுவாராம்... அந்த அளவிற்கு குருபக்தியில் மிக சிறந்த மகான் என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம்முடைய சொற்பொழிவில் ஒரு முறை சொல்ல்க் கேட்டிருக்கிறேன்.. தொடருங்கள் சுபா.. நன்றி.

அன்புடன்
பவளா

2012/7/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Jul 2, 2012, 3:27:19 AM7/2/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

இனிய சொற்களுக்கு நன்றி கண்ணன்.

இது வாசித்த போது மனதை பாதித்த ஒரு நூல் என்பதால் அந்த அனுபவத்தை, வாசித்தபோது மனதில் தோன்றிய சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள நான் செய்யும் ஒரு முயற்சி மட்டுமே.

சுபா

2012/7/1 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Jul 2, 2012, 3:27:55 AM7/2/12
to coral shree, மின்தமிழ், Subashini Tremmel
கருத்துக்கு நன்றி பவளா.

சுபா

2012/7/1 coral shree <cor...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 2, 2012, 3:32:26 AM7/2/12
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 7

கல்லூரி ஆசிரியர்களும் முனைவர் பட்டத்தைப் பெற்ற தமிழ் பேராசிரியர் பலரும் கூட தங்கள் வகுப்பு போதனைக்கு மட்டுமே தேவைப்படும் நூல்களை மட்டும் கற்கும் நிலையைத்தான் பெரும் பாலும் இப்போதெல்லாம் காண்கின்றோம். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவ்ர்கள் பலர் இருப்பதும் நம் அனுபவத்தில் சந்திக்கின்ற நிகழ்வுகளுள் அடங்குகின்றது. இது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது. 

கல்வி.. கல்வியை நோக்கிய தேடல் என்பவை ஆத்மார்த்தமானவை என்ற எண்ணம் மறைந்து வேலைக்கும் ஊதியத்துக்கும் மட்டும் தேவைப்படும் கருவியாக மட்டும் நினைக்குமொரு நிலையைப் பொதுவாகவேப் காண்கின்றோம். எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன, குடும்பத்தில் எத்தனை பேர் அந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கின்றனர் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒரு சிலரே புத்தகங்களை விரும்பும் மனிதர்களாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது. 

இப்போதெல்லாம் கணினி, இணையமயம்..என்ற வசதிகள் வந்து விட்ட நிலையில் இணையத்திலேயே நிறைய வாசிக்கலாம்... மின்னூல்கள், மின்னிதழ்கள் பல வந்து விட்டன என்ற போதிலும் கணினிக்குச் சென்றாலும் அங்கும் நம் தமிழ் மக்களின் சிந்தனையைப் பெரிதும் ஆக்கிரமித்திருப்பதாக இருப்பது சினிமாவும் அது சம்பந்தமான விஷயங்களுமாகத்தான் அமைகின்றன என்னும் கூற்றை புறக்கணிக்க முடியாது. இந்த சிந்தனையோடு என் சரித்திரத்தை நோக்கும் போது, அதில் உ.வே.சா அவர்கள், அவர் வாழ்க்கையில் சந்தித்த சில மனிதர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவர்களின் செயல்கள் நம் மனதைத் தொட்டுச் சென்று, வாசித்து பல மணி நேரங்களுக்குப் பின்னும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்து விடுகின்றன. அந்த வகையில் சடகோபையங்காரின் குணங்கள் நம் மனதில் அசைவினை ஏற்படுத்துவதால் அவரைப் பற்றியும் ஒரு பதிவில் குறிப்பிட வேண்டும் என்று கருதியதால் இந்தப் பதிவு அவரை விளக்குவதாக அமைகின்றது.

சடகோபையங்கார் வித்துவான்கள் பரம்பரையில் பிறந்தவர். வழிவழியாக கல்வி என்பது ஆழப்பதிந்த சூழலில் வளர்ந்தவர். அவரது பரம்பரையினர் அனைவரும் சண்பக மன்னார் என்ற குடிப்பெயரைத் தாங்கியவர்கள். இந்தக் குடிப்பெயர் இன்றும் வழக்கில் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.அவர் பரம்பரையில் சிலர் பாலஸரஸ்வதி ,பாலகவி என்ற பட்டங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்தவர்கள்.

சடகோபையங்கார் தமிழும் சங்கீதமும் ஒரே தரத்தில் வாய்க்கப் பெற்றவர். ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கே எழுந்து தனது காலைக்கடன்களை முடித்து பின்னர் தன் வீட்டின் திண்ணையின் மேல் கோடியில் புத்தகங்களோடு சென்று அமர்ந்து கொள்வாராம். எந்த நூலையாவது படித்து மகிழ்ந்தவாறே இருப்பாராம். சாலையில் செல்பவர்கள் அவர் திண்ணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவருக்கு வணக்கம் சொல்லிச் செல்வார்களாம். சிலர் அவரோடு வந்து அமர்ந்து கொள்வார்களாம். உடனே சடகோபையங்கார் அவர்களுக்கு ஏதாகினும் ஒரு தமிழ்ப்பாடலைச் சொல்ல ஆரம்பித்து விடுவாராம். பாடம் சொல்வது என்பதில் அவருக்கு அவ்வளவு பிரியமாம். பாடலைச் சொல்லி அதற்கு நயமாகப் பொருளையும் சொல்லி வந்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவாராம்.

இவரிடம் பாடம் கேட்கவென்றே பலர் இவரை வந்து பார்த்து கேட்டு இன்புற்றுச் செல்வார்களாம்.செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாஸ்திரத்திலும்  கம்பராமாயனத்திலும் அவருக்கு ஆராய்ச்சியும் ஞானமும் அதிகம் என்று உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். அந்த நூல்களிலுள்ள செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காக வியாக்கியாணம் சொல்லிக் கொண்டேயிருப்பாராம். இவரது பாடங்களைக் கேட்பவர்கள் நேரம் போகாமல் ஏதோ இனிய சங்கீத கச்சேரியைக் கேட்பது போல மயங்கி கேட்டு இன்புற்றிருப்பார்களாம்.

அவ்வப்போது வந்து பாடம் கேட்டுச் செல்வது மட்டுமல்லாலம் ஒரு சில மாணவர்களுக்கு முறையாகவும் சடகோபையங்கார் பாடம் சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரைப் பற்றிச் சொல்கையில் உ.வே.சா அவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார்.."தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்கு சலிப்பே உண்டாவதில்லை. "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்" என்பார்.

ஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடு நேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக் கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்த போது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இவர் யாருக்குப் பாடஞ் சொல்கின்றார்? கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்கமாட்டாரா? என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது. அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விஷயம் தெரியும். அப்போது "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்" என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?"

பிறர் தெரிந்து கொள்ள பாடம் சொல்கின்றோம் என்பதில் சொல்கின்ற நாமும் தெரிந்து கொள்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து அதனை செயல்படுத்தி பாடம் சொல்லி இன்பங் கண்டவர் சடகோபையங்கார். எழுதும் போது பல விஷயங்களைச் சிந்திக்கின்றோம். வாசிக்கின்றோம் என்பதால் வாசிக்கின்றவர்கள் மட்டும் பலன் அடைகின்றார்கள் என்றில்லாது சொல்லும் அல்லது எழுதும் நாமும் கற்கின்றோம் என்பதில் பலனடைந்தவர்களாக நாமும் ஆகின்றோம் என்பதும் மகிழ்ச்சியான ஒரு விஷயமல்லவா?

குறிப்பு: இத்தகவல்களை 14ம் அத்தியாயத்தில் காணலாம்.

தொடரும்..

அன்புடன்
சுபா

 2012/7/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பகுதி 6

உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்

Karuannam Annam

unread,
Jul 2, 2012, 6:13:03 AM7/2/12
to mint...@googlegroups.com

2012/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 7

 முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவ்ர்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது.
மிகவும் உண்மை.
தொட்டனைத்தூறும் என்பதனை உணரமறுக்கிறார்கள்.
 
எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன,
புதுமனை புகுவிழாவிற்கு அழைக்கிறார்கள். ஒவ்வொரு இடமாக வழிபாட்டு அறை, வரவேற்பு அறை, கழிப்பறை என்று பெருமையுடன் காட்டி மகிழ்கிறார்கள். நூல் வைக்குமிடம் ஒன்று இருப்பதில்லை.

பிறர் தெரிந்து கொள்ள பாடம் சொல்கின்றோம் என்பதில் சொல்கின்ற நாமும் தெரிந்து கொள்கின்றோம் பல விஷயங்களைச் சிந்திக்கின்றோம். வாசிக்கின்றோம் என்பதால் வாசிக்கின்றவர்கள் மட்டும் பலன் அடைகின்றார்கள் என்றில்லாது சொல்லும் அல்லது எழுதும் நாமும் கற்கின்றோம் என்பதில் பலனடைந்தவர்களாக நாமும் ஆகின்றோம்
ஒன்றைச் சொல்லும்போது கேட்கிறவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ சொல்கி்றவருக்கு இன்னும் தெளிவு ஏற்படும். எனது பயிற்றுனர் பணியில் உணர்ந்துள்ளேன்.
 
சடகோப அய்யங்கார் போன்று கற்பிக்கும் திறன் உள்ளவர்களால் கல்வி உலகு இருக்கிறது.
உவேசா சரித்திரத்தைத் தங்கள் சிந்தனையுடன் படிப்பது சுவை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Subashini Tremmel

unread,
Jul 2, 2012, 3:25:33 PM7/2/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/7/2 Karuannam Annam <karu...@gmail.com>
ஊக்கம் தரும் இவ்வினிய சொற்களுக்கு நன்றி திரு.சொ.வி. அவர்களே.

சுபா
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Pandiyaraja Paramasivam

unread,
Jul 2, 2012, 7:18:28 PM7/2/12
to mint...@googlegroups.com

கறுத்த வாவு, வெளுத்த வாவு என்பன சங்க காலத்திலிருந்து வழக்கிலிருந்து வருவன. எண் மதி நிறை உவா இருள் மதி போல - பரி 11/37 என்ற பரிபாடல் அடியைக் கவனியுங்கள். உவா என்ற சங்கச் சொல்லின் திரிபே வாவு என வந்திருக்கவேண்டும்.
2012/7/2 Karuannam Annam <karu...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Jul 2, 2012, 10:11:30 PM7/2/12
to mint...@googlegroups.com

2012/7/3 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>

மதி போல - பரி 11/37 என்ற பரிபாடல் அடியைக் கவனியுங்கள். உவா என்ற சங்கச் சொல்லின் திரிபே வாவு என வந்திருக்கவேண்டும்

உவா என்ற சொல் கம்பராமாயணத்தில் பயின்றிருக்கிறது.  உவாமதி என்று பற்பல இடங்களில் ஆளப்பட்டுள்ளது.

கலைஉவா மதியே கறியாக வன்
சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினள்....

சூர்ப்பணகையின் தாபத்தைக் குறித்த வர்ணனை.  பிறைச் சந்திரனைக் கறியாகத் தொட்டுக்கொண்டு மன்மதனைத் தின்றுவிடலாமா என்று நினைத்தாளாம்!

நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் உவா என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.  வாவு என்ற சொல் உவா என்ற பொருளில் ஓரிடத்திலும் பயன்படவில்லை.  வாவு வாசி, வாளியின் வாவுறும் செண்டு இயங்கு பரி என்று எங்கெல்லாம் வாவு தென்படுகிறதோ, அங்கெல்லாம் ‘தாவும்’ என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.

உவா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களுள், இந்தப் பாடல் குறிப்பிடத் தக்கது.  ராம ராவண யுத்தத்தின் கால எல்லையைக் குறிக்கும் பாடல்.

இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி
படை அவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து
கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு

இடை உவா (கிருஷ்ணபட்சத்து) அஷ்டமி திதி.  அன்று சுவேலமலையில் வந்திறங்கு அன்றைக்கே இலங்கையை முற்றுகையிட்டு, அரக்கர்களைக் கொன்று, கடை உவா (அமாவாசை)யன்று ராவணனைக் கொன்று..... (வைமுகோ உரையின் சுருக்கம்)

எனவே கம்பன் காலம் வரையில் கூட உவா என்ற சொல் திதி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.  கம்பன் காலத்தில் வாவு என்ற சொல்லுக்கு, தாவுகின்ற என்ற பொருள் மட்டுமே பெரிதும் வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும்.  அல்லது கம்பனுடைய பயன்பாட்டில் வாவு என்பது திதியைக் குறிக்கவில்லை.

--
அன்புடன்,
ஹரிகி.

Karuannam Annam

unread,
Jul 2, 2012, 11:05:00 PM7/2/12
to mint...@googlegroups.com

2012/7/3 Hari Krishnan <hari.har...@gmail.com>
கம்பனது பாடல் பதினாயிரம் என்றால் எடுத்தாண்ட சொற்கள் எத்தனையோ! சங்ககாலத்திலிருந்து தொடர்ந்து தமிழில் பயின்ற சொற்களைக் காத்து இடத்துடன் பொருள் விளங்கத் தந்தவன் கம்பன்.
கம்பனின் பாடல் சுவையென்றால் அதனை நண்பர் திரு ஹரிகி எடுத்தாண்டு விளக்குவது சி்றப்பினும் சிறப்பு.

Geetha Sambasivam

unread,
Jul 3, 2012, 1:41:12 AM7/3/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பண்டைய காலத்தில் தமிழ்ப் பயிற்சியோ, வடமொழிப் பயிற்சியோ எதுவானாலும் இசையோடு சேர்ந்தே இருந்திருக்கிறது.  இதை என் அம்மா வழித்தாத்தாவும் கூறி இருக்கிறார்.  பின்னர் வந்த மெக்காலே படிப்பு முறையில் தான் வெறும் மனனம் செய்து ஒப்புவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. :(

2012/7/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 6

உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் சங்கீதமும் தமிழும் சேர்ந்தே அமைந்திருந்தன. பிற்காலத்தில் தமிழ் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் ஆரம்ப கால வாழ்க்கையில் தமிழையும் சங்கீதத்தையும் இரண்டு முக்கிய அங்கங்களாகவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் அமைந்திருந்தன. ஆகினும் தமிழையும் சங்கீதத்தையும் ஒரே நிலையில் வைப்பது என்பதை விட ஒன்று மற்றொன்றிற்குத் துணை செய்வதாக அமைந்தது என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும்

கல்வி.. கல்வி.. தமிழ்க் கல்வி என்று தேடியவர். ஆன்மாவின் தேடலாக அது அவருக்கு அமைந்தது. சடகோபயைங்கார் உ.வே.சா.அவர்களின் உள்ளத்தில் தமிழ் விதையை விதைத்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் அத்தேடலை செம்மைப் படுத்தி உ.வே.சாவின் தமிழ்கல்வியின் அடிப்படையை அமைத்துக் கொடுத்தார். 

தொடரும்...
சுபா

Geetha Sambasivam

unread,
Jul 3, 2012, 1:46:24 AM7/3/12
to mint...@googlegroups.com
உண்மைதான்.  பொது அறிவு என்பதே இந்தக் காலத்தில் குறைவாகவே காணப்படுகிறது.  நூல்கள் படிப்பதை விடவும் தொலைக்காட்சி பார்ப்பதிலும், சினிமா விமரிசனங்களையும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைக் காண்பதிலுமே மக்கள் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.

2012/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 7

Dhivakar

unread,
Jul 3, 2012, 2:03:21 AM7/3/12
to mint...@googlegroups.com
சுபா,
இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். உவேசா எனும் மூன்றெழுத்தும் தமிழ் எனும் மூன்றெழுத்தும் ஒன்றேதான். ஒருவருக்கொருவர் துணை. அவர் கூறிய தமிழும் சங்கீதமும் போல.

ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்குத் தெரிந்து நண்பர்கள், உறவுகள் என்று பார்க்கையில் சங்கீதம் என்பது (கர்நாடக சங்கீதம்) கட்டாயப்பாடமாக பெரியவர்கள் வீட்டில் வைத்திருந்தனர். இப்போதெல்லாம் சினிமா சங்கீதம் ஆக்கிரமித்துவிட்டது.

தமிழோடு உறவாடி தமிழோடு பயணப்படும் இத்தொடர்  மிக முக்கியமானதொன்றாகும்.

அன்புடன்
திவாகர்

2012/7/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Jul 3, 2012, 12:01:35 PM7/3/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
"உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது. அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விஷயம் தெரியும். அப்போது "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்" என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?""

பொதுவாகவே   என் சிறு பிராயத்தில் கூட   உரக்க  சத்தம் போட்டுப் படிக்கும் வழக்கம் இருந்தது. கற்றலின் கேட்டல் நன்று  என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
 
நாம் கத்திப் படிக்கும்  போது  நம் காதுகள் அவற்றைக் கிரகித்து மூளைக்கு அனுப்பிவிடுமாம்.
 
அதனால்தான் கற்றலின் கேட்டல் நன்று   என்று சொல்வார்கள்.
 
அதனால்   திண்னையில்  தூண் எதிரே உட்கார்ந்து    உரக்கப் படித்தாலும் , அல்லது நாம் ஏற்கெனவே படித்ததை  உரக்க கூறினாலும்  அவை மீண்டும் ஒரு முறை  நம் மூளையில் பதியும் .
 
படிக்கப் படிக்க  சுவை கூடுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 5, 2012, 12:45:37 PM7/5/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இனிய சொற்களுக்கு நன்றி.

சுபா

2012/7/3 Dhivakar <venkdh...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Jul 5, 2012, 12:52:08 PM7/5/12
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 8

சடகோபையங்காரின் நிலையே பல தமிழ் புலவர்களுக்கும் அக்கால கட்டத்தில் பொதுவான நிலையாக இருந்தமை என் சரித்திரம் வாசிக்கும் போதே நன்கு உணர முடிகின்றது. புலமையும் வருமையும் இணைந்தே இருப்பவையோ என்ற கேள்வியும் மனதில் தோன்றி மறைகின்றது.

அனைவருக்கும் கல்வி என்ற நிலை அமைவது சுலபமான ஒன்றா என்றால் இல்லை என்பதே பதிலாக நிற்கின்றது. உ.வே.சா காலத்திலும் கூட கல்வியாகியது உயர்ந்த சாதி மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடிய விஷயமாக அமைந்திருந்தது என்பதனை கண்கின்றோம். கீழ்ச்சாதி மக்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறுவது என்பது அச்சு இயந்திரங்கள் பரவலாக வந்து கல்வி பொது மக்களுக்கும் கிடைக்கும் நிலை அரசியல் ரீதியாக மாற்றம் கண்ட பின்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்தது. இன்றளவும் அனைவருக்கும் கல்வி என்பது முழுமையாக நடைமுறைபடுத்தப்படுகின்றதா என்பது ஐயத்திற்குட்படுத்தப்பட வேண்டியதொரு விஷயமே. இந்த சூழலில் கல்வியை வணிகமாகவும் நோக்கும் நிலையும் பரவி விட்டது. அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் பால் மக்களின் நாட்டம் மிக அதிகரித்து பணத்தைச் செலவழித்து குழந்தைகள் கல்வியை திட்டமிடும் நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். நிற்க!

தொடர்ந்து சடகோபையங்கார் நிலையைப் பார்ப்போம். கல்வி.. வாசிப்பு.. பாடம் சொல்லுதல் என்பதிலேயே மனதைச் செலுத்தி அதிலேயே வாழ்ந்தவர் இவர். அரியலூர் சமஸ்தானத்தின் ஆதரவில் வாழ்ந்தவர். ஆகினும் அக்காலச் சூழலில் அரியலூர் சமஸ்தானத்தின் நிலை படிப்படியாக பொருளாதார நிலையில் சரிய ஆரம்பித்ததால் சமஸ்தானத்திலிருந்து வந்து கொண்டிருந்த பொருளாதார ஆதரவும் குறைந்து போயிற்று. இந்த நிலையில் சடகோபையங்கார் தனது சிஷ்யர்களின் உதவியைக் கொண்டே வாழ்க்கையை ஜீவித்து வந்தார்.

ஒரு சூழலை உ.வே.சா இப்படி விளக்குகின்றார். "குளிருக்குப் போர்த்திக் கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார். "துப்பட்டி வாங்கித் தரவேண்டும் லிங்க துரைசிங்கமே" என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார். "

வருமை புலவர்களை வாட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் பாடம் சொல்வது எப்படி? கவி எழுதுவது எப்படி? சிந்தனையில் ஆழ்ந்து போய் புதுமைகளைப் படைப்பது எப்படி. பொருளாதாரம் வாழ்க்கையின் அஸ்திவாரம் நிலைக்க தேவை என்றாகிவிட்ட காலகட்டத்தில் புலவர்களும் பொருளாதாரத்தைப் பார்க்கும் கண்களைப் பெற்றவர்களாக இருப்பது மிக மிக அவசியம் என்பதே உண்மை. முழுதாக பாடம் சொல்லிக் கொண்டும் ஆய்வில் இறங்கி நம்மை மறந்திருந்தால் நமது வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடும் என்ற விஷயமே நிதர்சனம். ஆக புலவர்களும் ஆசிரியர்களும் ஆய்விலும் பொது நலத்தொண்டிலும் ஈடுபடுபவர்களும் அடிப்படை வருமானத்தை என்றென்றும் தற்காத்துக் கொண்டேதான் ஏனைய காரியங்களில் ஈடுபட வேண்டியது நடைமுறைக்குப் பொருந்துவதாக அமைகின்றது.  

வருமை வாட்டி வதைக்கும் சக்தி படைத்தது; சில வேளைகளில் சிந்தனையை முடமாக்கும் சக்தியும் படைத்தது; வருமை நீங்கிய வாழ்வே புலவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தன்னை தன் சுய பிரச்சனைகளை மறந்து சிந்தனையில் மூழ்கி புதுமையைப் படைக்கவும், புத்தாக்கங்களை உருவாக்கவும் வல்லமையைத் தரக்கூடியது.

உ.வே.சா மேலும் இப்படிக் கூறுகின்றார். "மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக் கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும். அவர் செல்லும் போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது. இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். " 

இப்பகுதியை வாசித்து முடித்தபோது கனத்தமனத்துடன் இப்பக்கத்தில் குறிப்பெழுதி வைத்தேன். வருமை என்ற ஒன்றே ஆய்வாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக உண்மையாக நூல்களையும் ஆய்வையும் காதலிக்கும் நெஞ்சத்தினருக்கு வரக்கூடாது... ! வரக்கூடாது!

தொடரும்...

அன்புடன்
சுபா

2012/7/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பகுதி 7

கல்லூரி ஆசிரியர்களும் முனைவர் பட்டத்தைப் பெற்ற தமிழ் பேராசிரியர் பலரும் கூட தங்கள் வகுப்பு போதனைக்கு மட்டுமே தேவைப்படும் நூல்களை மட்டும் கற்கும் நிலையைத்தான் பெரும் பாலும் இப்போதெல்லாம் காண்கின்றோம். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குக் கூட தேர்ந்தெடுத்த ஒரு சில நூல்களில் மட்டும் கவனம் செலுத்தி அது முடிந்து பட்டம் கிடைத்த பிறகு புதிய நூல்களைத் தேடி எடுத்து தொட்டுப் பார்க்கும் ஆர்வம் குறைந்தவ்ர்கள் பலர் இருப்பதும் நம் அனுபவத்தில் சந்திக்கின்ற நிகழ்வுகளுள் அடங்குகின்றது. இது சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நோயாகத்தான் என் மனதிற்குப் படுகின்றது. 

கல்வி.. கல்வியை நோக்கிய தேடல் என்பவை ஆத்மார்த்தமானவை என்ற எண்ணம் மறைந்து வேலைக்கும் ஊதியத்துக்கும் மட்டும் தேவைப்படும் கருவியாக மட்டும் நினைக்குமொரு நிலையைப் பொதுவாகவேப் காண்கின்றோம். எத்தனை இல்லங்களில் புத்தக அலமாரி இருக்கின்றது? அதில் எத்தனை நூல்கள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை தரமான சிந்தனையை வளர்க்கும் நூல்கள் இருக்கின்றன, குடும்பத்தில் எத்தனை பேர் அந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கின்றனர் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒரு சிலரே புத்தகங்களை விரும்பும் மனிதர்களாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது. 

Innamburan Innamburan

unread,
Jul 5, 2012, 6:04:26 PM7/5/12
to mint...@googlegroups.com
நிதர்சனமான பேச்சு ஸுபாஷிணி. நான் அந்தக்காலத்து மனிதன். திண்ணை பள்ளிக்கூடத்தில் தான் வித்யாரம்பம், சம்பிரதாயமான நுழைவு, கள்ளர் பள்ளி என்றாலும். என் ஆசிரியர்களில் பெரும்புலவர்கள் இருந்தார்கள், வறுமையை காட்டிக்கொள்ளாமல். நம் சமுதாயம் கல்வியை போற்றியது. பரவ தவறி விட்டது. மேலோர்கள் அதிக்கம்.
இன்னம்பூரான்

2012/7/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Uthayakumar Gopalasingam

unread,
Jul 5, 2012, 9:01:00 PM7/5/12
to mint...@googlegroups.com
ஈழத்தில் உவாமாகாணம் என்று ஒரு மாகாணம் உள்ளது இதுவும் இராமாயணத்துடன் தொடர்புடையது குவேனி துரத்தப்பட்டப் பின்னர் தனது இரு குழநதைகளுடன் இங்கே வசித்தார் என்பது தொன்நம்பிக்கையாகும்.அது மட்டுமல்ல சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படுவதும் இங்கு தான்.
சீதைக்கு கோயிலும் இப்பொழுதும் இங்கு உண்டு.
இப்படிக்கு
கோ.உதயகுமார்

3 ஜூலை, 2012 4:05 am அன்று, Karuannam Annam <karu...@gmail.com> எழுதியது:

--

coral shree

unread,
Jul 5, 2012, 9:57:07 PM7/5/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

புலமையும்,வறுமையும் இணைந்தே இருப்பது மறுக்க முடியாத உண்மையாகவே இருந்தது... உ.வே.சா. அவர்களின் அந்தக்கால கல்வி முறையை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.. பல செய்திகளுடன் அருமையாக போகிறது தொடர்..

அன்புடன்
பவளா

2012/7/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Jul 6, 2012, 11:15:23 AM7/6/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

2012/7/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். " 

--
அன்பன்
கி.காளைராசன்
http://pulikkarai-iyanar.blogspot.in/

Subashini Tremmel

unread,
Jul 6, 2012, 4:05:47 PM7/6/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/7/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

நிதர்சனமான பேச்சு ஸுபாஷிணி. நான் அந்தக்காலத்து மனிதன். திண்ணை பள்ளிக்கூடத்தில் தான் வித்யாரம்பம், சம்பிரதாயமான நுழைவு, கள்ளர் பள்ளி என்றாலும். என் ஆசிரியர்களில் பெரும்புலவர்கள் இருந்தார்கள், வறுமையை காட்டிக்கொள்ளாமல். நம் சமுதாயம் கல்வியை போற்றியது. பரவ தவறி விட்டது. மேலோர்கள் அதிக்கம்.
நன்றி. 
திண்ணை பள்ளிக்கூடம் பற்றிய உங்கள் அனுபவத்தை நீங்கள் நிச்சயமாக எழுத வேண்டும் திரு.இன்னம்பூரான். இவ்வகைப் பதிவுகள் இக்காலத் தலைமுறையினருக்கு இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலை விளக்க வல்லவை. எழுதுங்களேன்.

சுபா

Subashini Tremmel

unread,
Jul 6, 2012, 4:06:52 PM7/6/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
உங்கள் பின்னூட்டங்கள் எழுதுபவருக்கு ஆர்வமளிப்பவை. நன்றி பவளா.

சுபா

2012/7/6 coral shree <cor...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 6, 2012, 4:07:35 PM7/6/12
to கி.காளைராசன், மின்தமிழ், Subashini Tremmel

2012/7/6 கி.காளைராசன் <kalair...@gmail.com>

வணக்கம்.

2012/7/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை. வறுமையில்லை. இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார். " 

உங்களையும் இழுத்துக் கொண்டாரா முனைவர் காளைராசன்.. ?

சுபா 

Subashini Tremmel

unread,
Jul 13, 2012, 5:03:17 PM7/13/12
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 9

உ.வெ.சா அவர்கள் வேங்கடராம சர்மன் என்ற பெயர் கொண்ட விஷயத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் இந்தப் பதிவில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

உபநயனம் பற்றியும் அது தொடர்பில் நடந்த விஷயங்களைப் பற்றியும் கூறும் அத்தியாயத்தில் சில சம்பவங்களை உ.வே.சா அவர்கள் நினைவு கூறுகின்றார். உத்தமதானபுரத்தில் தான் உபநயனம் நடைபெற்றிருக்கின்றது. அரியலூரில் தங்கியிருந்த குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இவரது அப்பா உத்தமதானபுரத்துக்கு உபநயனத்திற்காகவே வந்து சேர்ந்திருக்கின்றார். இப்போதெல்லாம் உபநயனம் என்பது வீட்டுக்கு வீடு வித்தியாசமாக நடைபெறும் வழக்கம் இருக்கலாம். இந்த உபநயனம் என்னும் சடங்கைப் போன்றே ஜெர்மானிய கத்தோலிக்க, ப்ரோட்டெஸ்டண்ட் குடும்பங்களிலும் இளம் பருவத்தில் ஒரு வகை ஞானஸ்தானம் என்பது நடைபெறுவதைக் காண்கின்றேன். இதைப் பற்றியும் இதன் தொடர்பில் இச்சடங்கைப் பற்றியும் வாய்ப்பமைந்தால் வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இப்போது உ.வே.சாவுக்கு உபநயனம் நடந்த கதையைப் பார்ப்போம்.

உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.

இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது அந்த வகையில் இச்சடங்கை முன்னிட்டு இவருக்கு வேங்கடராம சர்மன் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டு இப்பெயர் இவரது தகப்பனாருக்கும் ஏனைய பெரியோர்களுக்கும் பிடித்துப் போகவே இப்பெயரே இவருக்கு சில காலங்கள் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது. உ.வே.சா வேங்கடராம சர்மனாக சில காலம் அடையாளங் கொள்ளப்பட்ட கதை இது தான்.

உபநயனம் மட்டுமன்று .. எந்த சடங்காகினும் அதற்கு பொருட்செலவு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. உ.வே.சா காலத்திற்கு மட்டும் இன்னிலையில் விதிவிலக்கு இருந்திருக்கவா முடியும்? 

இவரது உபநயனத்தைப் பற்றியும் அதற்கு பொருளுதவி கிடைத்த விதத்தையும் உ.வே.சா இப்படிக் கூறுகின்றார். "அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவராகிய கொத்தவாசற் குமரப்பிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என் தந்தையாருடைய ஷேம லாபங்களை விசாரித்தார். பேசி வருகையில் என் உபநயனத்தைப்பற்றி அவர் கவலையடைந்திருப்பதையறிந்து" அது விஷயமான கவலை தங்களுக்கு வேண்டாம். உபநயனத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் தங்களுக்கு பணம் கிடைக்கும்" என்று வாக்களித்தார்..........

என் பிதா இன்ன தினத்தில் முகூர்த்தம் வைத்திருக்கின்றதென்று குறிப்பிட்டுக் கொத்தவாசற் குமர பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். முகூர்த்தத்திற்கு நான்கு தினங்கள் முன்னதாக அந்த உபகாரி இரண்டு வேளாளப் பிள்ளைகளை வேண்டிய தொகையுடன் அனுப்பினார். அவர்கள் வந்து பணத்தை என் தந்தையார் கையிலே கொடுத்தார்கள். அதை வாங்கும் போது என் தந்தையாரும் அருகிலிருந்த சிறிய தந்தையாரும் கண்ணீர்விட்டு உருகினார்கள்."

உ.வே.சாவின் உபநயனச் சடங்கு உற்றாரும் பெற்றோரும் மனம் நிறைவடையும் வகையில் நடைபெற்றிருக்கின்றது. உறவினர்கள் பலர் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு உபநயனச் சிறுவனாகிய வேங்கடராம சர்மன் என்ற புதுப் பெயர் பெற்றுக் கொண்ட உ.வே.சாவை வாழ்த்திச் சென்றிருக்கின்றனர். 

தொடரும்...

சுபா

2012/7/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பதிவு 8

சடகோபையங்காரின் நிலையே பல தமிழ் புலவர்களுக்கும் அக்கால கட்டத்தில் பொதுவான நிலையாக இருந்தமை என் சரித்திரம் வாசிக்கும் போதே நன்கு உணர முடிகின்றது. புலமையும் வருமையும் இணைந்தே இருப்பவையோ என்ற கேள்வியும் மனதில் தோன்றி மறைகின்றது.

அனைவருக்கும் கல்வி என்ற நிலை அமைவது சுலபமான ஒன்றா என்றால் இல்லை என்பதே பதிலாக நிற்கின்றது. உ.வே.சா காலத்திலும் கூட கல்வியாகியது உயர்ந்த சாதி மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடிய விஷயமாக அமைந்திருந்தது என்பதனை கண்கின்றோம். கீழ்ச்சாதி மக்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறுவது என்பது அச்சு இயந்திரங்கள் பரவலாக வந்து கல்வி பொது மக்களுக்கும் கிடைக்கும் நிலை அரசியல் ரீதியாக மாற்றம் கண்ட பின்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்தது. இன்றளவும் அனைவருக்கும் கல்வி என்பது முழுமையாக நடைமுறைபடுத்தப்படுகின்றதா என்பது ஐயத்திற்குட்படுத்தப்பட வேண்டியதொரு விஷயமே. இந்த சூழலில் கல்வியை வணிகமாகவும் நோக்கும் நிலையும் பரவி விட்டது. அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் பால் மக்களின் நாட்டம் மிக அதிகரித்து பணத்தைச் செலவழித்து குழந்தைகள் கல்வியை திட்டமிடும் நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். நிற்க!

Geetha Sambasivam

unread,
Jul 13, 2012, 9:40:09 PM7/13/12
to mint...@googlegroups.com
//உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.//

இப்போதும் அம்மான் என அழைக்கப்படும் தாய் மாமன் தோள் தூக்கிக் கொண்டு வந்தே பிரம்மோபதேசம் செய்யப்படுவதற்கு மருமகனை அமர்த்தி வைக்கும் வழக்கம் உண்டு. அதே போல் பாட்டனார் இருந்தாலும் கூட தாய் மாமனுக்கு எனத் தனி பஞ்சாதி சொல்லிச் சீர் வகைகளை தாய்மாமனின் பெயர், கோத்திரத்தோடு புரோகிதர் ஓதி விடுவார். தாய் மாமனுக்கு மிகவும் முக்கியத்துவம்.  முதன்முதல் காது குத்துகையிலும், மொட்டை அடிக்கையிலும் கூடத் தாய் மாமனுக்கே முதல் இடம்.

//இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.//

இது எல்லாருக்குமே வழக்கம் தான்.  எல்லாக் குடும்பங்களிலும் உபநயனத்தின்போதே சிறப்புப் பெயரான சர்மாவைச் சொல்லுவார்கள்.  சிலருக்குப் பிறந்தபோதில் இருந்த பெயரே இருக்கும்.  சிலருக்குப் பெயரை உபநயனத்தின் போது மாற்றுவார்கள்.  திருமணப் பத்திரிகைகளிலும், மற்றும் பெரியோருக்கு, "அபிவந்தனம்" செய்து நமஸ்கரிக்கையிலும் உபநயனப் பெயரான சர்மாவைச் சொல்லியே அறிமுகம் செய்து கொண்டு நமஸ்கரிப்பார்கள்.  என் கணவரின் தொட்டில் பெயர் பாலசுப்ரமணியன்.  உபநயனப் பெயர் தான் சாம்பசிவம்.  பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.

2012/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பதிவு 9

உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.

இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது அந்த வகையில் இச்சடங்கை முன்னிட்டு இவருக்கு வேங்கடராம சர்மன் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டு இப்பெயர் இவரது தகப்பனாருக்கும் ஏனைய பெரியோர்களுக்கும் பிடித்துப் போகவே இப்பெயரே இவருக்கு சில காலங்கள் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது. உ.வே.சா வேங்கடராம சர்மனாக சில காலம் அடையாளங் கொள்ளப்பட்ட கதை இது தான்.

Geetha Sambasivam

unread,
Jul 13, 2012, 9:42:09 PM7/13/12
to mint...@googlegroups.com
தஞ்சை ஜில்லாவில் திருமணம் ஆகி வீட்டிற்கு வரும் புது மருமகளுக்கும் பெயரை மாற்றும் வழக்கம் உண்டு.  இதில் திருவாரூர்ப் பக்கத்துக்காரர்கள் என்றால் வீட்டிற்கு மூன்று கமலாவும், நாலைந்து தியாகராஜன்களும் இருப்பார்கள்.  இப்போதெல்லாம் பெயரை மாற்றுவதில்லை.  என் நாத்தனாருக்கெல்லாம் பெயரை மாற்றினார்கள்.

2012/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
//உபநயன ஊர்வலம் வாகன ஊர்வலம் என்பது இல்லாமல் தான் நடைபெற்றிருக்கின்றது. பொதுவாகவே இச்சடங்கின் போது உபநயனம் பெறும் சிறுவனை அம்மான் தன் தோளில் ஏற்றிக் கோள்வாராம். மக்கள், பெண்களும் ஆண்களுமாக வாத்திய கோஷ்டியின் கோஷங்களுடன் ஊர்வலமாக்ச் செல்வார்களாம். இப்படிச் செல்லும் கோஷ்டி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்குமாம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படி வந்து நிற்கும் உபநயனப் பையனுக்கு ஆரத்தி எடுப்பார்களாம். இதே சடங்குதான் உ.வே.சா அவர்களின் இளம் ப்ராயத்திலும் இவருக்கு நடந்திருக்கின்றது.//

இப்போதும் அம்மான் என அழைக்கப்படும் தாய் மாமன் தோள் தூக்கிக் கொண்டு வந்தே பிரம்மோபதேசம் செய்யப்படுவதற்கு மருமகனை அமர்த்தி வைக்கும் வழக்கம் உண்டு. அதே போல் பாட்டனார் இருந்தாலும் கூட தாய் மாமனுக்கு எனத் தனி பஞ்சாதி சொல்லிச் சீர் வகைகளை தாய்மாமனின் பெயர், கோத்திரத்தோடு புரோகிதர் ஓதி விடுவார். தாய் மாமனுக்கு மிகவும் முக்கியத்துவம்.  முதன்முதல் காது குத்துகையிலும், மொட்டை அடிக்கையிலும் கூடத் தாய் மாமனுக்கே முதல் இடம்.

//இவர்களின் குடும்ப வழக்கத்தின் படி உபநயன காலத்தில் சிறப்பு பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.//

இது எல்லாருக்குமே வழக்கம் தான்.  எல்லாக் குடும்பங்களிலும் உபநயனத்தின்போதே சிறப்புப் பெயரான சர்மாவைச் சொல்லுவார்கள்.  சிலருக்குப் பிறந்தபோதில் இருந்த பெயரே இருக்கும்.  சிலருக்குப் பெயரை உபநயனத்தின் போது மாற்றுவார்கள்.  திருமணப் பத்திரிகைகளிலும், மற்றும் பெரியோருக்கு, "அபிவந்தனம்" செய்து நமஸ்கரிக்கையிலும் உபநயனப் பெயரான சர்மாவைச் சொல்லியே அறிமுகம் செய்து கொண்டு நமஸ்கரிப்பார்கள்.  என் கணவரின் தொட்டில் பெயர் பாலசுப்ரமணியன்.  உபநயனப் பெயர் தான் சாம்பசிவம்.  பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.

coral shree

unread,
Jul 13, 2012, 9:57:54 PM7/13/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

உபநயனம் பற்றி பல புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பல சடங்குகள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது போன்ற இடுகைகள் நினைவு கூரச்செய்வது நல்ல விசயம். அருமை, வாழ்த்துகள். தொடருங்கள்.

அன்புடன்
பவளா

2012/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Karuannam Annam

unread,
Jul 14, 2012, 1:24:20 AM7/14/12
to mint...@googlegroups.com

2012/7/14 coral shree <cor...@gmail.com>

உபநயனம் பற்றி பல புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பல சடங்குகள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் இது போன்ற இடுகைகள் நினைவு கூரச்செய்வது நல்ல விசயம். அருமை,
 
உபநயனம் பற்றியும் முன்முடி மழித்தல் பற்றியும் கம்பராமாயணப்பாடல்.
குடுமிக்கல்யாணம் தற்போது இல்லை என எண்ணுகிறேன். வழக்கம் தெரிந்த பெரியவர்கள் எழுதுங்கள்.
 
சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்ற.
‘இ(வ்)அளவது’ என ஒரு கரை பிறிது இலவா.
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்.
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. (கம்பர்..பால..127)(த.இ.ப)

சவுளம்:     குடுமிக்   கல்யாணம்    என்பர்     (தலை    முடி
திருத்துதல்).உபநயம் -உபநயனம். பூணூல்  அணிவித்தல்  (துணைக்கண்
என்பர்).  ஞானக்  கண்  பெறுதற்குரிய  சடங்கு   என்பர்.  தருகுற்று;
தரப்பெற்று  (செய்து).  இவ்வளவு:  இவ்வளவு  (இடைக்குறை)-   கரை:
எல்லை  (வேதத்துக்கு  எல்லை  இல்லை  என்பது  குறிப்பு).  இலவா:
(இல+ஆ)  இல்லது  ஆக.  கலைகள்  யாவும்  மறைப்   பொருளையே
விளக்குவதாதலின்  ‘’மறைவினொடு  ஒழிவறு  கலை’’  என்றார் அரன்.
அடியார்களின்   பாவத்தைக்   போக்குபவன்.    சவுளம்    மூன்றாம்
ஆண்டிலும்   உபநயனம்.   பத்தாமாண்டிலும்   செய்யப்படுவதென்பர்.
தவள்: என்பதன் திரிபு.

சவுளம்     முதலிய  சடங்குகளை  விதிப்படி நடத்தியபின் வசிட்ட
முனிவன் வேதம் மற்றும் கலைகள்  பலவற்றையும்  அரசகுமாரர்களுக்கு
கற்பித்தான் என்பது கருத்து. முனிவனுக்குச்  சிவன்  உவமை - முற்றும்
உணர்தலாலும் நால்வர்க்கு அறம் கூறியதாலுமாம்.                

மூன்று அடுக்குக்கு இருந்திருந்த உபநயன நியதி சுருங்கிவிட்டது போலும். எந்தக்காலத்தில், சூழலில் என்பதற்கு ஆய்வுகள் இருந்தால் அறிய விருப்பம். 
 
உ.வே.சாவின் உபநயனச் சடங்கு உற்றாரும் பெற்றோரும் மனம் நிறைவடையும் வகையில் நடைபெற்றிருக்கின்றது. உறவினர்கள் பலர் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு உபநயனச் சிறுவனாகிய வேங்கடராம சர்மன் என்ற புதுப் பெயர் பெற்றுக் கொண்ட உ.வே.சாவை வாழ்த்திச் சென்றிருக்கின்றனர்.
சுபா
சடங்குகளில் உற்றார் கூடுவது மகிழ்ச்சி.
இருபிறப்பு என்பதால் புதுப்பெயராக இருக்கலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Geetha Sambasivam

unread,
Jul 14, 2012, 1:43:59 AM7/14/12
to mint...@googlegroups.com
ரொம்பவே ஆசாரமான குடும்பங்களில் இப்போதும் குடுமிக் கல்யாணம் உண்டு.  அது தனியாக நடக்கும். உபநயனத்தின் போது முடியை மழித்தல்  அதுவும் முன் முடியை மழித்தல் என்பது ரிக், யஜுர் வேதக்காரர்களுக்கு மட்டுமானது.  சாமவேதக்காரர்களுக்கு உபநயனத்தின் போது முழு மொட்டை.  உபநயனத்திற்குப் பின்னர் அவர்கள் பிரார்த்தனைக்காகக் கூட மொட்டை போடக் கூடாது என்று ஒரு சம்பிரதாயம்.  தற்காலத்தில் யாரும் பின்பற்றுவதில்லை.  அதர்வண வேதக் காரர்களில் உபநயனம் என்றால் அது தனி.  ரிக், யஜுர்க்காரங்க அதர்வ வேதம் கற்பது என்றாலே மீண்டும் உபநயனம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றோ என்னவோ சொல்வார்கள்.  இது குறித்துத் தகவல் சேகரித்து வைத்திருக்கிறேன்.  அதைத் தேடிப் பார்த்துத் தருகிறேன்.  ஒருவேளை திரு திவா அவர்களால் இந்த இழை பார்க்கப் பட்டால் அவரால் இன்னும் அதிகமான தகவல்களை அளிக்க முடியும்.

2012/7/14 Karuannam Annam <karu...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Jul 14, 2012, 1:45:58 AM7/14/12
to mint...@googlegroups.com
மத்ராவில் (கிருஷ்ண ஜன்மபூமி) இருக்கும் பிரிஜ்பாசி பிராமணர்களில் ஆண் குழந்தைகளுக்கு இப்போதும் குடுமிக் கல்யாணம் மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குள்ளாக நடைபெறுவதோடு ஆண் குழந்தைகளின் உபநயனம் ஏழு வயதுக்குள்ளாக முடிந்துவிடும்.  தலை வளர்த்து தற்காலிக நாகரிகப் படி கிராப் செய்திருந்தாலும் பல இளைஞர்களிடமும் உச்சிக் குடுமியைப்பார்க்கலாம். வேத அத்யயனமும் அங்கே கட்டாயம்.

2012/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ரொம்பவே ஆசாரமான குடும்பங்களில் இப்போதும் குடுமிக் கல்யாணம் உண்டு.  அது தனியாக நடக்கும். உபநயனத்தின் போது முடியை மழித்தல்  அதுவும் முன் முடியை மழித்தல் என்பது ரிக், யஜுர் வேதக்காரர்களுக்கு மட்டுமானது.  சாமவேதக்காரர்களுக்கு உபநயனத்தின் போது முழு மொட்டை.  உபநயனத்திற்குப் பின்னர் அவர்கள் பிரார்த்தனைக்காகக் கூட மொட்டை போடக் கூடாது என்று ஒரு சம்பிரதாயம்.  தற்காலத்தில் யாரும் பின்பற்றுவதில்லை.  அதர்வண வேதக் காரர்களில் உபநயனம் என்றால் அது தனி.  ரிக், யஜுர்க்காரங்க அதர்வ வேதம் கற்பது என்றாலே மீண்டும் உபநயனம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றோ என்னவோ சொல்வார்கள்.  இது குறித்துத் தகவல் சேகரித்து வைத்திருக்கிறேன்.  அதைத் தேடிப் பார்த்துத் தருகிறேன்.  ஒருவேளை திரு திவா அவர்களால் இந்த இழை பார்க்கப் பட்டால் அவரால் இன்னும் அதிகமான தகவல்களை அளிக்க முடியும்.

Nagarajan Vadivel

unread,
Jul 14, 2012, 3:26:22 AM7/14/12
to mint...@googlegroups.com

Sacred Thread Ceremony

This introduces the male child to a teacher (guru) in order to receive education, marking the entry of the child into the Brahmacharya Ashrama (period of studentship), the first of the four stages of life. This samskara is performed from the fifth to the eighth year of age, when the male child is invested with a sacred thread (consisting of three strands) to be worn around the neck and waist. The three symbolize the following three debts that the child repays during his adult life: debt to one's parents, debt to one's guru, and debt to God.

The sacred thread is intended to be a constant reminder of one's individual duties and obligations. At the time of marriage and as a part of the wedding ceremony, the bridegroom is invested with three more strands of the sacred thread, which symbolize three more debts that he repays to his spouse. Thus the six-stranded thread around the neck of a Hindu is a reminder of the six debts that he must repay during adulthood.

(source:
The Hindu Mind - By Bansi Pandit. p 253-254)

Nagarajan

2012/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Jul 14, 2012, 4:40:48 AM7/14/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள கீதா,

நீங்கள் இந்தச் சுற்றுச் சூழலிலேயே இருப்பதால் இன்னமும் பல விஷயங்களை ஞாபகம் வைத்திருந்தும் நேரில் பார்த்தும் கேட்டும் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. இது உபநயனம் பற்றி  தெரிந்து கொள்ள எனக்கும் மிக உதவியாக உள்ளது. மலேசியாவில் உபநயனம் செய்யும் பழக்கம் அடியோடு விட்டுப் போன ஒன்றாகி விட்டது.

நீங்கள் தகவல் சேகரித்து உபநயனம் என்பதன் பொருள், அதனை எப்படிச் செய்வார்கள், எந்தெந்த குலத்தினர் அல்லது சமூகத்தினர் எவ்வவ்வகையில் செய்வார்கள் சடங்குகளின் தன்மை, இப்போதைய உபநயனச் சடங்கு முறை என சேர்த்து முழுமையான ஒரு கட்டுரை படைக்க வேண்டும் என்பது என் விருப்பம். நேரம் கிடைக்கும் போது இதனைத் தயாரித்துத் தாருங்களேன். ஒரு பாரம்பரிய சடங்கினைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள பலருக்கும்  இது உதவும்.
நன்றி.

சுபா

2012/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 14, 2012, 4:42:03 AM7/14/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பேரா.நாகராசன்.

யூத இனத்தில் இளம் பிராயத்தின் நடக்கும் இவ்வகைச் சடங்கு ஒன்று இருப்பதாக என்றோ வாசித்த ஞாபகம் உண்டு. நேரம் கிடைக்கும் போது தேடி பகிர்ந்து கொள்ள முடியுமா? நன்றி.

சுபா

2012/7/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 14, 2012, 5:10:31 AM7/14/12
to mint...@googlegroups.com
கட்டாயம் சுபா.  இப்போது ஜூலை 24-ஆம் தேதி ஆவணி அவிட்டம் எங்களுக்கு (சாம வேதக்காரர்களுக்கு) வருகிறது.  அந்தச் சமயம் வெளியிடும் வகையில் தயாரித்து அனுப்புகிறேன்.  சாதாரணமாக ஆவணி மாதம் தான் சாமவேத ஆவணி அவிட்டம் அமாவாசைக்குப் பின்னர் வரும்.  இம்முறை ஆடி மாதமே வந்துள்ளது.  அதன் பின்னரே ரிக், யஜுர் வேதக்காரர்களுக்கான ஆவணி அவிட்டம்.  ஆகவே அனைத்தையும் சேர்த்து எழுத முயல்கிறேன்.  நன்றி.

2012/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள கீதா,

நீங்கள் இந்தச் சுற்றுச் சூழலிலேயே இருப்பதால் இன்னமும் பல விஷயங்களை ஞாபகம் வைத்திருந்தும் நேரில் பார்த்தும் கேட்டும் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. இது உபநயனம் பற்றி  தெரிந்து கொள்ள எனக்கும் மிக உதவியாக உள்ளது. மலேசியாவில் உபநயனம் செய்யும் பழக்கம் அடியோடு விட்டுப் போன ஒன்றாகி விட்டது.

நீங்கள் தகவல் சேகரித்து உபநயனம் என்பதன் பொருள், அதனை எப்படிச் செய்வார்கள், எந்தெந்த குலத்தினர் அல்லது சமூகத்தினர் எவ்வவ்வகையில் செய்வார்கள் சடங்குகளின் தன்மை, இப்போதைய உபநயனச் சடங்கு முறை என சேர்த்து முழுமையான ஒரு கட்டுரை படைக்க வேண்டும் என்பது என் விருப்பம். நேரம் கிடைக்கும் போது இதனைத் தயாரித்துத் தாருங்களேன். ஒரு பாரம்பரிய சடங்கினைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள பலருக்கும்  இது உதவும்.
நன்றி.

சுபா

Nagarajan Vadivel

unread,
Jul 14, 2012, 6:43:54 AM7/14/12
to mint...@googlegroups.com

கி.காளைராசன்

unread,
Jul 16, 2012, 2:32:33 AM7/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

நேற்றும், நேற்று முன்தினமும் கோட்டையூரில் தமிழகத் தொல்லியல் கழகம் நடத்திய கருத்தரங்கில் 
Inline image 1

திரு.குப்பான் செட்டியார் அவர்கள், தன்னிடமிருந்த பழமையான நூல்களைக் கண்காட்சியாக வைத்திருந்தார்.
அந்நூல்களுள்,

Inline image 2
தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் சதாபிஷேக வரலாறு என்ற நூலும் இருந்தது.

அந்நூலைப் பார்த்ததும், தங்களது இந்த இழை நினைவிற்கு வந்தது.
நூலை விலைக்குக் கேட்டேன். “ எதுவும் விற்பனைக்கு அல்ல“ என்று கூறிவிட்டார்.

படம் மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.
Image1808.jpg
Image1849.jpg

Geetha Sambasivam

unread,
Jul 16, 2012, 2:44:57 AM7/16/12
to mint...@googlegroups.com
ஆஹா, இப்படி ஒரு நூல் வந்திருக்கிறதா?

2012/7/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>
Image1808.jpg
Image1849.jpg

Subashini Tremmel

unread,
Jul 16, 2012, 3:22:49 AM7/16/12
to கி.காளைராசன், மின்தமிழ், Subashini Tremmel

2012/7/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>

அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

நேற்றும், நேற்று முன்தினமும் கோட்டையூரில் தமிழகத் தொல்லியல் கழகம் நடத்திய கருத்தரங்கில் 
Inline image 1

திரு.குப்பான் செட்டியார் அவர்கள், தன்னிடமிருந்த பழமையான நூல்களைக் கண்காட்சியாக வைத்திருந்தார்.
அந்நூல்களுள்,

Inline image 2

முனைவர் காளை ராசன்  அவர்களே,
 
ஆச்சரியம். மிக்க மகிழ்ச்சி.
திரு.குப்பான் செட்டியார் அவர்களைத் தொடர்பு கொண்டு கேமராவில் பக்கங்களை மின்பதிப்பாக்கம் செய்து கொள்ள அனுமதி அளிப்பாரா என்று கேட்டுப் பார்க்க முடியுமா? அவருக்கு நமது த.ம.அ பற்றியும் நமது மின்னூல்கள் பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும் சற்று விளக்கம் கொடுத்து நமது பணிகளில் அவரும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் நூல்கள் அனைத்தையும் நாம் மின்னாக்கம் செய்து அவற்றை  திரு.குப்பான் செட்டியார் சேகரிப்பு என்ற தலைப்பிலேயே இணையத்தில் வெளியிட வகை செய்யலாம். வாய்ப்பு அமையும் போது முயற்சி செய்து பாருங்களேன்.

அன்புடன்
சுபா
தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் சதாபிஷேக வரலாறு என்ற நூலும் இருந்தது.

அந்நூலைப் பார்த்ததும், தங்களது இந்த இழை நினைவிற்கு வந்தது.
நூலை விலைக்குக் கேட்டேன். “ எதுவும் விற்பனைக்கு அல்ல“ என்று கூறிவிட்டார்.

படம் மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.

அன்பன்
கி.காளைராசன்

Image1808.jpg
Image1849.jpg

Innamburan Innamburan

unread,
Jul 16, 2012, 3:27:21 AM7/16/12
to mint...@googlegroups.com
யோவ் காளை! ஸுபாஷிணி சொன்னதை, தந்தி போல் பாவித்து, உடனே நிறைவேற்றவும்.
இன்னம்பூரான்

2012/7/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Image1849.jpg
Image1808.jpg

கி.காளைராசன்

unread,
Jul 16, 2012, 3:47:03 AM7/16/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/7/16 Innamburan Innamburan <innam...@gmail.com>

யோவ் காளை! ஸுபாஷிணி சொன்னதை, தந்தி போல் பாவித்து, உடனே நிறைவேற்றவும்.

அந்த ஒரு நூலை மட்டும் மின்னாக்கம் செய்யவேண்டி, 
அம்மா வள்ளி அவர்கள் நேரில் கேட்டுக் கொண்டும்,  திரு.குப்பான் அவர்கள் செவிசாய்க்க வில்லை.
பணம் ஏதும் எதிர்பார்க்கிறாரா? எனவும் தெரியவில்லை.
மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறோம்.

Karuannam Annam

unread,
Jul 16, 2012, 4:28:26 AM7/16/12
to mint...@googlegroups.com
எனக்கும் தொல்லியல் கழகம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள நேரம் வாய்த்தது. அமமா வள்ளியும் நண்பர் முனைவர் காளைராசனும் அன்புடன் வரவேற்றனர்.
நூல் கண்காட்சி அரிய சேமிப்பு. ரோஜா முததையா சேகரிப்பை ஒட்டியது. தனி மனித முயற்சி. திருவிளையாடல் புராணம் 300 வருடங்களுக்கு முந்தியது ஐந்நூறு ஓலைச்சுவடிகளைக் கொண்டது கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. செட்டி நாட்டு கும்பாபிடேக மலர்கள், 1900 ல் வந்த இதழ்கள் , சட்டம், இன்சூரன்சு, சினிமா நோட்டிசுகள் என்று பல தரப்பட்ட சேமிப்பின் ஒரு பகுதியைப் பார்வைக்கு வைத்திருப்பதாகச் சொன்னார் திரு குப்பன் செட்டியார் என்ற தனிமனித முயற்சியாளர்.
உ.வே.சா. சதாபிடேக மலர் கவர்ந்தது. மிந்தமிழ், மின்னாக்கம் பற்றி அவரிடம் பேசினேன். உ.வே.சா. எழுதியுள்ள நம் மின்னாக்கத்தில் வந்துள்ளவை போன்ற சிறு பதிப்புக்களும் அங்கு கண்டேன்.
மாலை இல்லம் வருவதாகக் கூறியுள்ளார். அவரிடம் பேசிவிட்டு அரிய நூல்கள் பிற விவரங்கள் பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
நண்பர் காளைராசனின் அன்பும் அவர் பிறர்பால் காட்டும் மதிப்பும் சாதாரண செல்பேசியில் நிழற்படம் எடுத்து அதனைத் தக்கபடி வெளியிடுகின்ற பான்மையும் மிகக் கவர்ந்தன, பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியதால் பகிர்ந்துள்ளேன்.
சொ.வி.
,   
 
2012/7/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>
Image1849.jpg
Image1808.jpg

Subashini Tremmel

unread,
Jul 16, 2012, 4:32:55 AM7/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நன்றி திரு.சொ.வி அவர்களே.

சற்று முன்னர் தான் நிகழ்ச்சியின் படங்களையும் ஒலிப்பதிவுகளையும் நண்பர் காளை அவர்கள் அனுப்புயிருந்தார்கள். அவற்றை இன்றே முழுமையாக்கி வெளியிட முயற்சிக்கிறேன். ஒன்று ஒரு நாள் ஓய்வு ..அதில் இப்பணியை முடித்து விடுகின்றேன்.

சுபா

2012/7/16 Karuannam Annam <karu...@gmail.com>
Image1849.jpg
Image1808.jpg

N. Kannan

unread,
Jul 16, 2012, 8:44:59 AM7/16/12
to mint...@googlegroups.com
மிக நல்ல இடுகை தம்பி!

இப்படியெல்லாம் முதுசொம் பாதுகாப்பு நடப்பதை நாம் எல்லோரும் அறிந்து
கொள்ள வேண்டுமென்ற அவாவில் இங்கு வெளியிட்டுள்ளமை பாராட்டற்குரியது.
எம்மால் ஏதேனும் உதவி செய்ய முடியுமெனில் காத்திருக்கிறோம் என்று
சொல்லுங்கள். திரு.குப்பன் செட்டியார் மின் மாளிகை ஒன்றை உருவாக்க
முடியும் என்று சொல்லவும்!

நா.கண்ணன்

2012/7/16 கி.காளைராசன் <kalair...@gmail.com>

>
> அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.
>
> நேற்றும், நேற்று முன்தினமும் கோட்டையூரில் தமிழகத் தொல்லியல் கழகம் நடத்திய
> கருத்தரங்கில்
>

> திரு.குப்பான் செட்டியார் அவர்கள், தன்னிடமிருந்த பழமையான நூல்களைக்
> கண்காட்சியாக வைத்திருந்தார்.
> அந்நூல்களுள்,
>
>

கி.காளைராசன்

unread,
Jul 16, 2012, 10:34:51 AM7/16/12
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்.

2012/7/16 Karuannam Annam <karu...@gmail.com>
மின்தமிழ், மின்னாக்கம் பற்றி அவரிடம் பேசினேன். உ.வே.சா. எழுதியுள்ள நம் மின்னாக்கத்தில் வந்துள்ளவை போன்ற சிறு பதிப்புக்களும் அங்கு கண்டேன்.
மாலை இல்லம் வருவதாகக் கூறியுள்ளார். அவரிடம் பேசிவிட்டு அரிய நூல்கள் பிற விவரங்கள் பகிர்ந்துகொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா,
அவரிடம் உள்ள நூல்கள் அனைத்தும் மின்னாக்கம் செய்வது அவசியம். 

///எம்மால் ஏதேனும் உதவி செய்ய முடியுமெனில் காத்திருக்கிறோம் என்று

சொல்லுங்கள். திரு.குப்பன் செட்டியார் மின் மாளிகை ஒன்றை உருவாக்க
முடியும் என்று சொல்லவும்!

நா.கண்ணன்/// 
ஐயா அவர்களின் மேற்கண்ட கருத்தையும் அவரிடம் தெரிவிக்கவும்.  இதனால் அவரிடம் உள்ள நூல்கள் அப்படியே அவரிடம் இருக்க, அவற்றில் உள்ள கருத்துகள் அனைத்தும் தமிழ்மரபு அறக்கட்டளை வழியாக அனைவருக்கும் சென்று சேரும்.  இதனால் அவருடைய எண்ணமும் ஈடேரும்.

அன்பன்
கி.காளைராசன்

நண்பர் காளைராசனின் அன்பும் அவர் பிறர்பால் காட்டும் மதிப்பும் சாதாரண செல்பேசியில் நிழற்படம் எடுத்து அதனைத் தக்கபடி வெளியிடுகின்ற பான்மையும் மிகக் கவர்ந்தன,
தங்களது அன்பிற்கு நன்றி ஐயா,

Subashini Tremmel

unread,
Jul 17, 2012, 5:15:21 PM7/17/12
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 10

தமிழகத்திற்கான எனது ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் நான் தவறாது கோயில்களுக்குச் சென்று வருவதுண்டு. அதிலும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையில் பற்பல ஊர்களில் கோயில்களைப் பார்த்திருக்கின்றேன். ஓவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு விதம். எது எதனினும் சிறந்தது என்று சொல்ல முடியாது திகைத்துப் போய் பல முறை வியந்து வியந்து பார்த்திருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் கோயில்களைப் பற்றி நான் அறிந்து கொள்ள விழையும் போது ஒரு புது விஷயம் காத்திருக்கும். எனக்கு இவ்வகைத் தேடலில் இன்றளவும் அலுப்பு தட்டவில்லை. இன்னமும் நிறைய கோயில்களை இதுவரை சென்றிராத ஊர்களுக்கெல்லாம் சென்று பார்த்து கண்டு மகிழ வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது.   

கோயில்களை வியந்து பார்த்து மகிழ்வுறும் அதே தருணம் கோயில்கள் பாதுகாப்பு, கோயில்களிலுள்ள சிற்பங்களின் பாதுகாப்பு, கோயில் சுற்றுப்புற பாதுகாப்பு, பராமரிப்பு, தூய்மை என்ற வகையிலும் தவறாமல் சென்று விடும் என் மனம். கோயிலுக்கு வருகின்ற மக்களின் சிந்தனையில் தங்களது வேண்டுதல், அது நிறைவேறுதல் வேண்டும், அதற்காக சில சடங்குகள் செய்தல் வேண்டும் என்ற எண்ணமே ஆழப்பதிந்து போய் விட்டமையினால் மக்கள் கோயிலைப் பற்றிய ஸ்தல புராணத்தை அறிந்து கொள்வது பற்றியோ, கோயில் வரலாற்றை அறிந்து கொள்வது பற்றியோ ஸ்தல விருட்சத்தைப் பற்றி அறிந்து கொண்டு சுவாமியைப் பற்றி பேசி மனம் மகிழும் நிலையிலில்லாத மாந்தர்களாக மாறிப்போய்விட்டனர் என்பது கண்கூடு. கோயில் கட்டிடக் கலையை ரசித்தல், கோயில் சிற்பங்களின் கவின் நயத்தை கண்டு களிப்பதில் ஈடுபடுதல் என்பதெல்லாம் இல்லாமல் சடங்குகள் சடங்குகள் என்று திளைத்துப் போய் இருப்பதையே பக்தி என்ற புரிதலோடு வாழ்க்கையில் கடைபிடிக்கும் நிலையில் பொதுவாகவே இக்கால மக்கள் இருக்கின்றனர்.

உ.வெ.சா. காலத்திற்குச் செல்வோம்.இன்றைக்கு ஏறக்குறைய 180 ஆண்டுகள். அவ்வளவே!

அவர் சொல்கின்றார்.
"ஸ்தலங்களைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் அக்காலத்தினருக்கு அதிக விருப்பம் இருந்தது. ஸ்தலத்தின் விருஷம், மூர்த்திகளின் திருநாமம், வழிபட்டவர்கள் வரலாறு, தீர்த்த விஷேஷம் முதலிய விஷயங்களை அங்கங்கே உள்ளவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் ஊர் சிறந்த ஸ்தலமென்றும் பலவகையான மகாத்மியங்களை உடையதென்றும் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. குன்னத்தின் ஸ்தல மகாத்மியங்களை என் தந்தையார் விசாரிக்கத் தொடங்கினார். நானும் அவற்றைத் தெரிந்து கொண்டேன். "

இந்த நிலை இன்று வந்தால் கோயில்கள் சிறப்புடன் வாழும்.

என் சரித்திம் வாசிக்கும் போது ஆலயங்கள் பற்றிய மேலும் ஒரு புதிய விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். அதாவது, சிறப்பான புகழ்பெற்ற ஒரு கோயில் இருந்தால் அதனைப் போலவே தங்கள் ஊரிலும் ஒரு அமைப்பினை அமைத்து மக்கள் வழிபடும் முறை இருந்திருக்கின்றது.  முன்னர் மலேசியாவில் பினாங்கில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில் கட்டியபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே அமைக்கின்றனரே என்ற எண்ணம் மனதில் எழுந்ததுண்டு. இது பொது வழக்குத்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன உ.வே.சாவின் வார்த்தைகள். 

" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்.

அன்றியும் கும்கோணத்துக்குக் கிழக்கே திருவிடைமருதூர் இருப்பது போலக் குன்றத்திற்குக் கிழக்கே வெண்மணி என்னும் ஊர் இருக்கிறது. திருவிடைமருதூருக்கு மத்தியார்ஜு னம் என்று பெயர். அதற்கு வெண்மையாகிய
இருதயாகாசத்தின் மத்தியென்று பொருள் செய்து, திருவிடைமருதூர் தகராகாசத்திற்குச் சமானமானதென்று தத்துவார்த்தம் கூறுவர் சிலர். (அர்ஜு னம்-வெள்ளை) வெண்மணி என்னும் பெயர் மத்தியார்ஜுனமென்னும் பெயரோடு ஒருவாறு ஒப்புமையுடையதாகவே, அவ்வூரில்  தோன்றிய கோயில் மூர்த்திக்கு ஆதி மகாலிங்கமென்ற திருநாமம் உண்டாயிற்று. மகாலிங்கமென்பது திருவிடை மருதூர் ஸ்வாமியின் திருநாமம். பிருகத் குச நாயகியென்பதே இரண்டிடங்களிலும் உள்ள அம்பிகையின் திருநாமம்."

ஆக புகழும் சிறப்பும் பெற்ற கோயில்களின் பிரதிகளாக புதிய கோயில்கள் எழுந்துள்ளமையும், மிக தூரப்பயணம் செய்யாமல் தங்கள் இருப்பிடத்திலேயே தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு கோயில் எழுப்பி வழிபட்டும் மகிழும் மக்களின் மன்ப்பாண்மையையும் இதன் வழி உணர்ந்து கொள்ள முடிகின்றது. 

இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே. விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!

தொடரும்...

குறிப்பு: இப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புக்கள் 16ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

2012/7/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பதிவு 9

உ.வெ.சா அவர்கள் வேங்கடராம சர்மன் என்ற பெயர் கொண்ட விஷயத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் இந்தப் பதிவில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

கி.காளைராசன்

unread,
Jul 18, 2012, 2:07:31 AM7/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2012/7/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்......
......இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். 

திருப்பூவணம்  பெயரில் உள்ள மற்றொரு ஊர்
  பாண்டியநாட்டின் வடபகுதியில் உள்ள இத்திருப்பூவணம்  நால்வர் பாடலும் பெற்றுச் சிறப்புடன் விளங்கிவருகிறது, இவ்வூரைப் போலத் தங்களது ஊரும் சிறக்கவேண்டும் என்ற எண்ணத்தில் “தென்பாண்டி நாடெனப்படும் நெல்லை நாட்டில் மற்றெhரு திருப்பூவணம் உண்டாயிற்று,   திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இந்த ஊரைத் ‘தென்திருப்பூவணம்‘ என்றார்கள்.  முள்ளி நாட்டுத் தென்திருப்பூவணம் என்று சாசனத்திற் குறிப்பிடுகின்றனர்.  இவ்வூர். தென்திருப்புவனம் என்னும் பெயரோடு அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ளது.  இங்குள்ள திருக்கோயிலும் ‘புஷ்பனேஸ்வரம்‘ என்றே வழங்குவதாகும்“ (அடிக்குறிப்பு 1).

இச் செய்தி கல்வெட்டு ஒன்றில் உள்ளது (அடிக்குறிப்பு 2)

அடிக்குறிப்பு (1) ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், பக்கம் 293 மற்றும் 294 (No. 475 of the Madras Epigraphical Collection fro 1916 ; T.A.S. Vol. 1Z, P.25) பதிப்பகத்தார் - பழனியப்பா பிரதர்ஸ்

அடிக்குறிப்பு (2) 

(A. R. No.  473 of 1929-30.)

Attur, Tiruchchendur Taluk, Tirunelveli District.

On a stone in the pavement of the amma shrine in the Somanathesvara temple.

This inscription dated in the 21st year of Jatavarman Sundara-Cholapandya is damaged at the end.  It registers some gift made by Lokaditta-kkuttan of the Bharadvaja-gotra, a resident of Arrur-Sendamangalam for burning a lamp in the temple of Somanathesvara alias Ten-Tiruppuvanamudaiyar at Arrur-Sendamangalam, a brahmadeya in Kuda-nadu, a subdivision of Uttamasola-valanadu.  Ten-Tiruppuvanam must have been so named after the god of the same name in the Ramanathapuram district. (Now in Sivaganga district.) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_151_to_175.html 

--
அன்பன்
கி.காளைராசன்

N. Kannan

unread,
Jul 18, 2012, 4:09:49 AM7/18/12
to mint...@googlegroups.com
2012/7/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

> கோயில்களை வியந்து பார்த்து மகிழ்வுறும் அதே தருணம் கோயில்கள் பாதுகாப்பு,
> கோயில்களிலுள்ள சிற்பங்களின் பாதுகாப்பு, கோயில் சுற்றுப்புற பாதுகாப்பு,
> பராமரிப்பு, தூய்மை என்ற வகையிலும் தவறாமல் சென்று விடும் என் மனம். கோயிலுக்கு
> வருகின்ற மக்களின் சிந்தனையில் தங்களது வேண்டுதல், அது நிறைவேறுதல் வேண்டும்,
> அதற்காக சில சடங்குகள் செய்தல் வேண்டும் என்ற எண்ணமே ஆழப்பதிந்து போய்
> விட்டமையினால் மக்கள் கோயிலைப் பற்றிய ஸ்தல புராணத்தை அறிந்து கொள்வது >பற்றியோ,> கோயில் வரலாற்றை அறிந்து கொள்வது பற்றியோ ஸ்தல விருட்சத்தைப் பற்றி >அறிந்து > கொண்டு சுவாமியைப் பற்றி பேசி மனம் மகிழும் நிலையிலில்லாத மாந்தர்களாக
> மாறிப்போய்விட்டனர் என்பது கண்கூடு. கோயில் கட்டிடக் கலையை ரசித்தல், கோயில்
> சிற்பங்களின் கவின் நயத்தை கண்டு களிப்பதில் ஈடுபடுதல் என்பதெல்லாம் இல்லாமல்
> சடங்குகள் சடங்குகள் என்று திளைத்துப் போய் இருப்பதையே பக்தி என்ற புரிதலோடு
> வாழ்க்கையில் கடைபிடிக்கும் நிலையில் பொதுவாகவே இக்கால மக்கள் இருக்கின்றனர்.

சுபா

இது ஒரு பரிணாம வளர்ச்சியென்று காண்கிறேன். சாமி மேலேயிருந்து வரம்
கொடுக்கும் என்பது அடிப்படை நம்பிக்கை. படையல் கொடுத்து, பலி கொடுத்து
சாமியைக் குஷிப்படுத்தி வேண்டியதை சாதித்துக்கொள்ளும் வழக்கம் பழங்குடி
வாழ்வில் ஆரம்பமாகிறது. இதை இப்போதும் நாம் கிராம தேவதை வழிபாட்டில்
காணலாம்.

பின் அதையே யாகங்கள், யக்ஞங்கள் என்று கொஞ்சம் விரிவு படுத்தி பூஜாரிகளை
(வைதீகர்களை) முன் வைத்து செய்தனர். இதுவும் இன்னும் நடக்கிறது. இவை
நலினமுற்றால் தேவர்களுக்கு சாப்பாட்டு கிடையாது. கல்கி புராணத்தில் எல்லா
தேவர்களும் கலியில் யாரும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றுவதில்லை என்று
பிரம்மாவிடம் முறையிடுகின்றனர்.

இவைகளை அப்படியே குறியீட்டு முறையில் ஒரே இடத்திற்குக் கொண்டு போகும்
முயற்சிதான் கோயில்கள், ஆகமங்கள். அங்கும் படையலுண்டு ஆனால் அதற்குப்
பெயர் ’பிரசாதம்’. அங்கும் ‘பலி’ உண்டு, ஆனால் உயிர்ப்பலி கிடையாது
சோற்று உருண்டையுண்டு (கிறிஸ்தவ சம்பிரதாயத்தில் கூட ‘திருப்பலி’ எனும்
சொல்லாட்சி காண்க). யக்ஞமுண்டு, ஆனால் அத்ம நிவேதனமாக. வேண்டுதலுண்டு அது
பக்தியாக. இப்படிக் கோயில் என்பது ஒரு உச்ச கட்ட குறியீட்டுச் செயற்பாடு.
இதை முறையாக நிர்வகித்தால்தான் ‘அந்தப் பொருளில்’ அது செயல்படும். ஆனால்
கோயிலிலும் மக்களாட்சி முறைமை வந்த பின், பொது மக்கள் கிராம தேவைகளை
எப்படி நடத்துகின்றனரொ அதைப்போலவே கோயில்களையும் நடத்த முயல்கின்றனர்.
அவர்களுக்கு சிற்பங்கள் ஒரு தத்துவத்தின் குறியீடு என்பது புரியாது.
எல்லாக் கோயில்களிலும் பெண் சிலைகளின் முலை வழு, வழுப்பாய் இருக்கும்.
எல்லோரும் தொட்டு அனுபவித்து உள்ளனர் என்று பொருள். மீனாட்சி கோயிலில்
ஒரு பிள்ளை பெறும் சிற்பம் இப்போது எண்ணெய் காப்பிட்டு வழிபடும்
தெய்வமாகிவிட்டது! அதே கோயிலில் காளியின் முகத்தில் வெண்ணெயை வீசி
அடிப்பது சாதாரண புத்தி. கோயிலின் குறியீட்டை அறியாத புத்தி.
கலி முத்திவிட்டால் இது சகஜம் என்பார்கள் :-)

> இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை
> நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர்
> செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில்
> அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை
> வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே.
> விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!
>

தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ‘தென்திருப்பதிகள்’ உண்டு :-)

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Jul 29, 2012, 12:17:16 PM7/29/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/7/18 N. Kannan <navan...@gmail.com>
2012/7/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
..

> இதனை வாசித்து முடித்த போது இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை
> நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர்
> செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில்
> அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை
> வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். முயற்சித்துப் பார்ப்போமே.
> விஷயங்கள் அறிந்த நண்பர்கள் தகவல் கொடுக்கத் தொடங்கலாமே!
>

தமிழகத்தில் மட்டும் ஆயிரம் ‘தென்திருப்பதிகள்’ உண்டு :-)

கேள்விப்பட்டிருக்கின்றேன். சிலவற்றை நான் நேரிலும் பார்த்து தரிசித்திருக்கின்றேன்.
ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும் கண்ணன்.

சுபா 

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Jul 29, 2012, 12:18:51 PM7/29/12
to மின்தமிழ், Subashini Tremmel

2012/7/18 கி.காளைராசன் <kalair...@gmail.com>

அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2012/7/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
" மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர்......
......இவ்வகையில் அமைந்த ஆலயங்களின் பட்டியல் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலோங்கியது. இது தனி நபர் செய்யக்கூடிய ஒரு காரியமன்று. பலரும் சேர்ந்து தமக்குத் தெரிந்த கோயில்களில் அவை ஏதாகினும் வேறொரு கோயிலின் அமைப்பை ஒத்து அமைந்திருந்தால் அதன் பெயர்களை வழங்கினால் அவற்றை நாம் தொகுக்க ஆரம்பிக்கலாம். 

திருப்பூவணம்  பெயரில் உள்ள மற்றொரு ஊர்
  பாண்டியநாட்டின் வடபகுதியில் உள்ள இத்திருப்பூவணம்  நால்வர் பாடலும் பெற்றுச் சிறப்புடன் விளங்கிவருகிறது, இவ்வூரைப் போலத் தங்களது ஊரும் சிறக்கவேண்டும் என்ற எண்ணத்தில் “தென்பாண்டி நாடெனப்படும் நெல்லை நாட்டில் மற்றெhரு திருப்பூவணம் உண்டாயிற்று,   திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இந்த ஊரைத் ‘தென்திருப்பூவணம்‘ என்றார்கள்.  முள்ளி நாட்டுத் தென்திருப்பூவணம் என்று சாசனத்திற் குறிப்பிடுகின்றனர்.  இவ்வூர். தென்திருப்புவனம் என்னும் பெயரோடு அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ளது.  இங்குள்ள திருக்கோயிலும் ‘புஷ்பனேஸ்வரம்‘ என்றே வழங்குவதாகும்“ (அடிக்குறிப்பு 1).

இச் செய்தி கல்வெட்டு ஒன்றில் உள்ளது (அடிக்குறிப்பு 2)

அடிக்குறிப்பு (1) ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், பக்கம் 293 மற்றும் 294 (No. 475 of the Madras Epigraphical Collection fro 1916 ; T.A.S. Vol. 1Z, P.25) பதிப்பகத்தார் - பழனியப்பா பிரதர்ஸ்

அடிக்குறிப்பு (2) 

 இவ்வகைத் தகவல்களைத்தான் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு என் பதிவில் எழுதினேன். தொடக்கி வைத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி.

சுபா

(A. R. No.  473 of 1929-30.)

Attur, Tiruchchendur Taluk, Tirunelveli District.

On a stone in the pavement of the amma shrine in the Somanathesvara temple.

This inscription dated in the 21st year of Jatavarman Sundara-Cholapandya is damaged at the end.  It registers some gift made by Lokaditta-kkuttan of the Bharadvaja-gotra, a resident of Arrur-Sendamangalam for burning a lamp in the temple of Somanathesvara alias Ten-Tiruppuvanamudaiyar at Arrur-Sendamangalam, a brahmadeya in Kuda-nadu, a subdivision of Uttamasola-valanadu.  Ten-Tiruppuvanam must have been so named after the god of the same name in the Ramanathapuram district. (Now in Sivaganga district.) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_151_to_175.html 

--
அன்பன்
கி.காளைராசன்

coral shree

unread,
Jul 29, 2012, 12:47:24 PM7/29/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பின் சுபா,

அருமையான தகவல்கள். நீங்கள் கூறுவது போல கோவில்களின் பட்டியல் தயாரிக்கலாம். நல்ல கருத்து. தொடங்குங்கள் , தொடர்கிறோம்..

அன்புடன்
பவளா

2012/7/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Take life as it comes.

Mohanarangan V Srirangam

unread,
Jul 29, 2012, 12:58:51 PM7/29/12
to mint...@googlegroups.com
மேலும் இம்மாதிரி ஒரே பெயருடைய கோவில்கள் மக்களின் இடப்பெயர்வு பற்றியும் தெரிவிக்கக் கூடியன. 

ஓரூரிலிருந்து வேறோரிடத்திற்கு இடம் பெயர நேர்வோர் அங்கிருந்து மூல ஊருக்கு வந்து போகும் இடர்ப்பாடு பற்றித் தாம் வதியும் இடத்தையே தாம் வணங்கும் ஊரின் பெயரிட்டு வழங்கும் வழக்கமும் உண்டு. 

***

2012/7/29 coral shree <cor...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jul 29, 2012, 1:05:52 PM7/29/12
to mint...@googlegroups.com
இணையத்தில் ஏற்கனவே இந்த முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது

http://en.wikipedia.org/wiki/List_of_temples_in_Tamil_Nadu

நாகராசன்
2012/7/29 coral shree <cor...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Jul 29, 2012, 5:12:14 PM7/29/12
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 11

ஒரு இயற்கை விரும்பியாக, தாவரங்கள் மரங்கள், பயிர்கள் மேல் அதிக நாட்டம் கொண்டவராக உ.வே.சா இருந்தமை பற்றி பலரும் அறிந்திருக்கா மாட்டோம். உ.வே.சா என்றால் ஓலைச்சுவடி என்று மட்டுமே அறிந்த நிலையில் அவரது குணங்களின் பல்வேறு பரிணாமங்களையும், வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்களையும் பதிவாக்கிக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது என் சரித்திரம். அந்த வகையில் என் சரித்திரம் நூலில் இயற்கையின் பால் செடி கொடி மரம் தாவரங்கள் பால் இவருக்கிருந்த நேசத்தயும் விவரிப்பதாக உள்ளது இந்த நூல்.

பிற்காலத்தில் பிள்ளையவர்களிடம் மாணவராகச் சேர்ந்த போது பிள்ளையவர்களின் தாவரங்களின் பாலான அலாதி ப்ரியத்தை அறிந்து கொண்டு பிள்ளையவர்களின் கவனத்தைப் பெற உ.வே.சா செய்த சில விஷயங்கள் ரசிக்கத்தக்கவை. ஆனால் அவை செயற்கையானவை அல்ல என்பதும் இவருக்கும் தாவரங்களின் பால் நேசம் இருந்தமையும் நூலில் வாசித்து தெரிந்து கொள்ள முடிகின்றது. உதாரணமாக 17ம் அத்தியாயத்தில் இயற்கை தந்த இன்பம் என்னும் பகுதியில் இப்படிச் சொல்கின்றார். 

"பயிர்கள் வகை வகையாகக் கொல்லைகளில் விளைந்து கதிர் விட்டிருப்பதும், அங்கங்கே புன்செய் நிலங்களில் இடையிடையே மொச்சை, துவரை முதலியவை வளர்ந்திருப்பதும் என் கண்களைக் கவரும். எவருடைய பாதுகாப்பையும் வேண்டாமல் இயற்கையாகப் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிகளும் துளசியும், நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் வில்வம், வன்னி முதலிய மரங்களும், மலர்ந்திருக்கும் அலரியும் பிறவும் இயற்கைத் தேவியின்
எழிலைப் புலப்படுத்திக் கொண்டு விளங்கும். கம்பு விளையும் நிலத்தருகே கரைகளில் துளசி படர்ந்திருக்கும். கணக்குப்பிள்ளை கம்புப் பயிரை மாத்திரம் கண்டு மகிழ்வார்; அதனால் உண்டாகும் வருவாய்க் கணக்கில் அவர் கருத்துச் செல்லும். நான் அவரோடு பழகியும் அத்தகைய கணக்கிலே என் மனம் செல்வதில்லை. கம்பங் கதிர் தலை வளைந்து நிற்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன்; துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் கதிர்விட்டிருக்கும்
கோலத்திலும் அழகைக் கண்டேன். “கம்பிலே தான் காசு வரும்; துளசியிலே என்னவரும்?” என்ற வியவகார புத்தி எனக்கு இல்லை. இரண்டும் என் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியை அளித்தன. வில்வமரமும் வன்னி
மரமும் எனக்கு இயற்கைத் தாயின் எழில் வடிவத்தின் ஒரு பகுதியாகவே தோற்றின. மனிதன் வேண்டுமென்று வளர்க்காமல் தாமே எழுந்த அவற்றில் இயற்கையின் அழகு அதிகமாகவே விளங்கியது."

என் சரித்திரம் நூல் பலபுதிய விஷயங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது என்றே சொல்வேன். அதில் ஒன்று அருணாசலகவி ராமாயணம் பற்றியது. என் சரித்திரம் நூலில் உள்ள  17ம் அத்தியாயம் வாசிக்கும் வரை நான் அருணாசலகவி ராமாயணம் என்னும் நூல் பற்றி அறிந்ததில்லை.

உ.வே.சா அவர்களின் தந்தையார் அருணாசலகவி ராமாயணப் பிரசங்கம் செய்பவர் என்பதோடு தந்தையோடு இணைந்து பிரசங்கத்தில் ஈடுபட்ட விஷயங்களையும் நூலில் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவுக்கு இசைப் பயிற்சியும் ஓரளவிற்கு நன்கு அமைந்திருந்தமையால் பிரசங்கம் செய்வதில் தந்தையோடு சேர்ந்து பாடி  ஊர்மக்களின் அன்பை பெற்றிருக்கின்றார் இவர்.

குன்னத்தில் குடும்பத்தோடு குடிபெயர்ந்து சென்று இருந்த போது நாட்டாண்மைக்காரர்களும் இவர்கள் குடும்பத்தை ஆதரித்து வந்த சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து இவரது தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி ராமாயணத்தைப் சிதம்பரம் பிள்ள்ளையவர்களின் வீட்டுத் திண்ணையில் பிரசங்கம் செய்வித்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாள் இரவும் என இப்பிரசங்கம் நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் பிரசங்கம் ஆத்மசந்தோஷத்தைக் கொடுத்தது என்பதை விட இவர்கள் குடும்பத்திற்கு நல்ல பொருளாதார வருவாயையும் ஈட்டித் தந்தது என்று சொல்லி நினைவு கூறுகின்றார் உ.வே.சா. இரண்டு மாத காலங்கள் இந்தப் பிரசங்கங்ம் தொடர்ந்து இரவு வேளையில் நடந்திருக்கின்றது. இப்படி நிகழ்வுகளை  ஏற்பாடு செய்து கற்றவர்களை ஆதரித்து மக்களுக்கும் கேட்போர் செவிக்கும் மனதிற்கும் இன்பம் தர வைத்த புண்ணிய ஆத்மாக்களையும் நாம் போற்றாமல் மறக்கலாமா?

தொடரும்...
சுபா

 2012/7/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பதிவு 10

தமிழகத்திற்கான எனது ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் நான் தவறாது கோயில்களுக்குச் சென்று வருவதுண்டு. அதிலும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையில் பற்பல ஊர்களில் கோயில்களைப் பார்த்திருக்கின்றேன். ஓவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு விதம். எது எதனினும் சிறந்தது என்று சொல்ல முடியாது திகைத்துப் போய் பல முறை வியந்து வியந்து பார்த்திருக்கின்றேன்.

Subashini Tremmel

unread,
Jul 29, 2012, 5:59:04 PM7/29/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/7/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இணையத்தில் ஏற்கனவே இந்த முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது

http://en.wikipedia.org/wiki/List_of_temples_in_Tamil_Nadu

நான் குறிப்பிடுவது கோயில்கள் பட்டியல் அல்ல. ஒரு சிறப்படைந்த கோயிலைப் போல தங்கள் தங்கள் சிற்றூரில் அமைக்கப்பட்ட பிரதி கோயில்கள். இவ்வகையான பட்டியல் இருந்தால் வழங்கலாமே. 

சுபா
It is loading more messages.
0 new messages