தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்
உரை: ஒரு பலம் (=தொடி) எடைகொண்ட மண்கட்டிகளைக் கால்பலம் (=கஃசு) என்ற அளவில் உழக்கி, ஆவாரைபோன்ற இலைதழைகளைப் பரப்பித் தொழி கலக்கி நாற்று நட்டுப் பயிர் விளைத்தால் எருவும்கூடத் தேவைப்படாது. உணக்குதல் என்று இக் குறளில் வள்ளுவர் குறிப்பிடுவது நெல்வேளாண்மையில் உழக்குதல் என்று பொருள்படும் சொல். முகத்தல் அளவையில் உழக்கு (= உணக்கு) ஓரு அளவை (measure)யாகவே பயன்படுகிறது. ஒரு படி (அ) நாழி என்பது நான்கு உழக்கு என்பது இதனால்தான். ஒரு படியை நான்கு பங்காக சிதைத்தால் வருவது உழக்கு. உணக்குதல் = உழக்குதல். அதாவது, கலக்குதல், சிதிலமாக்கல், மிதித்தல், நெருக்குதல் to stir, agitate,trample down, smash, condense
குறிப்பு: தொழி = உணக்கிய(=உழக்கிய) சேறு. மாம்பழத் தோலைத் தொழிச்சுக்கொடு என்கிறோமே. தொழித்தல் - சிதைத்தல், பிரித்தல், உழக்கல். தொழித்தல் = உழக்கல். போரில் பகையை சினந்து உழக்குதலைத் தொழித்தல் என்கிறது சீவகசிந்தாமணி: ’சிங்கம்போல் தொழித்து ஆர்த்து’ (சீவக. 2306). தொழில் என்ற சொல்லே தொழி/தொளி என்ற அடிப்படையான விவசாய வேலையால் தோன்றிய சொல். ”உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய” (சிலம்பு). தொள்ளு- தோண்டுதல் தொளி/தொழி. தொழி உணக்குதலை/உழக்குதலைக் கூறும் வள்ளுவர் அடுத்த குறளிலே நீர்ப் பாசனமும் குறிப்பிடுகிறார்.
தொழி உழக்கி/உணக்கி (எந்திரம்):
Paddy field preparation typically involves (1) plowing to "till" or dig-up, mix, and overturn the soil; (2) harrowing to break the soil clods into smaller mass and incorporate plant residue, and (3) leveling the field. அதாவது, (1) உழவு (2) தொழி உழக்கல் (3) பரம்பு அடித்தல்.
சோழவந்தான் அருகே வயலில் பரம்படித்தல்:
வள்ளுவர் மணக்குடவர் காலங்களில் தொழி உழக்குதல் “உணக்குதல்” என வழங்கியிருக்கிறது. அனைவருக்கும்
தெரிந்த சொல்லாக வயல் உணக்குதல் இருப்பது காலப்போக்கில் அப்பொருள் மறையத் தொடங்கியதைப்
பின்வந்தோர் உரைகள் காட்டிநிற்கின்றன. மணக்குடவரோ, அவர் வழிச்செல்லும் பரிப்பெருமாளோ ”காயவிடுதல்”
என்னும் பொருளைக் கூறவில்லை.
எருவே வேண்டியதில்லை என்கிறார் திருவள்ளுவதேவர். இலைதழைகளைத் தொழி கலக்கினபின் எரு
தேவையில்லையே. அடுத்த குறளில் பயிர் சற்றே வளர்ந்த பின்னர் களைபறித்தலையும்,
நீர்பாய்ச்சுதல் பற்றிப் பேசுகிறார் வள்ளுவர். பூவுக்குத் தாமரை, மரத்துக்கு
அரைசு, மாணவர்களில் முதல் தேர்வெண் எடுப்போன், மாடுகளில் காமதேனு, .... என்று ஓரினத்தில் சிறந்ததை
எடுத்துக்காட்டுவது போல் நெல் வேளாண்மை பற்றி இக்குறளில் பேசுகிறார் எனலாம். பிடித்த எரு வேண்டாது
என்பது புஞ்சைப் (தண்செய் தஞ்சை ஆதற்போல், புன்செய் புஞ்சை) பயிருக்கு மட்டுமில்லை. புன்செய்ப் பயிருக்கு
உரமிடுதல் இல்லை, அது வானம்பார்த்த பூமியில் விளைவது. நன்செயிலும் ஆவாரை போன்றவற்றின்
இயற்கையுரத்தை இட்டுத் தொழியை உழக்கினால் பின்னர் எரு வேண்டாது என்கிறார் வள்ளுவர்.
ழ/ண - இரண்டாம் எழுத்தாய் மாறுபாடுகள் உள்ள சொற்றொகுதிகள்:
பொதுவாக, -ழ்-/-ண்-/-ட்- என்ற 2-ம் எழுத்து பயிலும் சொற்றொகுதிகள் பல.
இக் குறளிலே அவ்விதி , உழக்கல்/உணக்கல்/உடைத்தல் என்பதாக இயங்கக் காண்கிறோம்.
புஞ்சை நிலத்திலும் பலம் அளவு கட்டியை கஃசு அளவாக நாலில் ஒரு பங்கு ஆக
உடைத்தல் நன்மை பயக்கும். எல்லா வெள்ளாமைக்கும் இக்குறளின் உணக்கலை ”உழக்கல்” என்று கொள்ளவியலும்
(1) ஆழ்தல் ஆணி, (2) அழுங்கு என்பது அணுங்கு என்னும் எறும்புதின்னி (Indian Pangolin).
(3) நுழல்/நுணல் = ஒருவகை தவளை ஜாதி. மணலில் நுழைந்துள்ள வரிநுணல். ”வரிநுணல் கறங்கத் தேரை
தெவிட்டக் கார்தொடங் கின்றே” (ஐங்குறுநூறு). (4) நிழல்:நிணல். சொன்முதல் நகரம்கெட்டு இணல் என்பது
ஈழநாட்டு வழக்கு. நீரினின்றும் ஈரம், நுண்ணி உண்ணி(க்ருஷ்ணன்) ஆதற்போல் (5) தழ்- என்னும் வினைச்சொல்
(தழ, தழ) தழல்/அழல் > தணல் (6) காணம் (=கொள்ளுக்காசு) < காழ் (கொள்ளு) (7) வேய் > வேழம்:வேணு
‘மூங்கில்’ (8) நாழ்- (நாழி - உட்டுளைப்பொருள்.) எனவே, bashful, flexible pipe/string -
நாண்-. (9) விழ்- > விண், வீழ்- > வீணை. விண்-விண் என ‘ட்யூனிங் ஃபோர்க்’ போல *தாழ்ந்த* (விழு-/வீழ்-)
ஓசை தருவது வீணை. (10) மண்ணுதல் - நீராட்டுதல். மலையாளம் இன்னும் மண்ணான் (தமிழ் அதை
வண்ணான் ஆக்கிற்று). ராஜ்யாபிஷேக நிகழ்ச்சியை தமிழ் கல்வெட்டுகள் மண்ணுமங்கலம் என்று
குறிப்பிடுகின்றன. மண்ணுதல் = பால், தயிர், பன்னீர் அபிடேகமாடல். மழ்- மழை > மண்ணு- (11) பழுத்தல்
கன்னடத்தில் பணுத்தல். etc. etc., ழ/ண மாறுபாடுகளை ஆராயின் த்ராவிடபாஷைகளின் பலசொற் பிறப்பு
புரியும்.
இவை போல், ழ/ண மாற்றம் கொண்டது உழக்கு-/உணக்கு-.
”தொடிப்புழுதி கஃசா உணக்கின்”- இங்கே சுணக்கு/சுணங்கு என்ற தாதுவேர் தரும் உணக்குதல் - வாட்டுதல்,
சூடாக்குதல், காய்ச்சுதல் (உணக்கு < சுணக்கு) என்ற பொருள் வராது.
வள்ளுவர் சொல்வது 4-ல் 1-பங்கு ஆகக் (தொடிப்புழுதி கஃசு ஆக) வெயிலில் காயவிடுவது
என்பது பொருளானால் மிகப் பெரிய வறட்சி என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு பலம் கொண்ட கட்டி 1/4 பலம் ஆவதாகக் காயவிட்டால் ஈரப்பசை எல்லாம்போய்
மிக இறுகிக் கல் போல் ஆகிவிடும். வெள்ளாளருக்கு இது பிரச்சினை ஆகிவிடும்.
நிழல்-நிணல், அழுங்கு-அணுங்கு, தழல்-தணல், ... என்பதுபோல் உழக்கு-உணக்கு என்றுகொண்டால்
ஒரு பலம் என உள்ள மண்ணாங்கட்டியை பல்கால் உழவால் சிதைத்து கால் பலம் அளவில் உள்ளதாக
மாற்றி வேளாண்மை செய்யமுடியும். ஈரம் போவதற்குள் பல கால் உழக்கி கட்டிகளைச் சிதைத்து நாலில் ஒரு பங்கு
ஆக்குக என்கிறார்.
ஓர் உதாரணம் தருகிறேன். உப்பு ‘salt'
< சுப்பு (cf. சுவை) - இந்த உப்பு (salt) வேறு. உப்பு - ஊதுதல், பெருத்தல் வேறு அன்றோ?
(1) உப்பு (salt)
(2) உப்பு-தல் (to expand) - DEDR 666 b
Ta. uppu (uppi-) to become big (as a seed), bloat, puff up (as the abdomen), rise (as leaven); uppal flatulence; upukku (upukki-) to swell, overflow; upparam flatulent distention of the abdomen (< Te.); (CTD) ubbu to become hot. Ko. ub- (uby-) (part of the body) swells; ubc- (ubc-) to coax child with pleasing words. To. ub- (uby-) to boil over; ? upum much; ? uporty pleasure, elation. Ka. urbu, urvu, ubbu to swell, increase, rise, be elated, be puffed up, become glad; n. state of being swollen, etc., height, elation, joy, pride; ubbisu to cause to swell, raise, rouse, puff up by flattering; ubbaḍiga, ubbudiga, ubbariga greatness; ubbaṭe, ubbaṭṭe swelling, increase, elation, greatness, boldness; ubbara, urbara swelling, increase, state of being swollen, risen, or full to overflowing, greatness, abundance; ubbike, ubbuvike swelling, etc.; ubiku to swell, rise, overflow. Tu. ubbuni, ubbēruni to swell, be elated with joy or puffed up with pride; uberuni to become thick; ubbara high, swollen, turbid. Te. ubuku to swell, heave, rise, jut, bulge, project, overflow, burst out; n. swelling, jutting, heaving, bulging, projection; ubbaramu swelling, inflation, increase, excess; ubbarincu to swell; ubbarimpu swelling (of the belly); ubbu to swell, be puffed up, grow stout, rise up, overflow, be overjoyed, elated; n. swelling, protuberance, joy, being puffed up with pride; ubbincu to inflate, cause to swell, flatter; uppena a swell of the sea, inundation, deluge; uppoṅgu to swell, burst forth, overflow, be overjoyed, elated. Konḍa ubi- (-t-) to swell, be inflamed, be bloated. Kur. ubkārnā to bubble up, gush up or out with force, swell up. / Cf. Pali ubbilla- elation, elated state of mind; ubbilāvita- happy, elated, buoyant; BHS udbilya-,
இரண்டும் ஒன்றாகுமா? அதுபோல் தான், வள்ளுவர் ‘தொடிப்புழுதி
கஃசா உணக்குதல்’ என்பதை உணக்கு < சுணக்கு (=சூடாக்கு) என்று பொருள் சொல்வது பொருந்தவில்லை.
காய்ச்சுவது/வாட்டுவது/சூடாக்கல் என்றால் பொருந்தாப் பொருள் தந்துவிடும்.
உணக்குதல்- இதற்கு (1) < சுணக்குதல் (2) உழக்குதல்
என்னும் இரு வேறுபட்ட பொருளும் உண்டு. இக்குறளில் உணக்குதல் என்பதற்கு உழக்குதல் என்ற பொருள்
வேளாண்மையில் சிறந்த நெல் வேளாண்மையில் காட்டுகிறார். உதாரணமாக, உப்பு (< சுப்பு-தல்) - இது உப்புதல் (
= to expand, to enlarge) என்பதினின்றும் வேறானது அல்லவா? அழல் என்றால் தீ. “நீ அழல் வேண்டாம்” என்கிறபோது அழல் = அழுதல் என்ற பொருள். ஈவு = இரக்கம். ஆனால், “ஈவு இலாத தீவினைகள்” (திருவாய்மொழி). இங்கே நம்மாழ்வார் (வீவு >) ஈவு ”முடிவு” என்ற பொருளில் பாடியுள்ளார்.
சுஷ்ணம்/உஷ்ணம் என்ற வடசொற்கள் தோன்றுமிடம் தமிழின் சுள்-/சுண்-/சுட்- தாதுவேர் சுள்ளி, சூளை, சுண்ணம், சுண்ணாம்பு, சூடு, சுட்ட கறி, ... சுணக்கு/சுணங்கு > உணக்கு/உணங்கு. ”காய்ச்சுதல், சூடாக்குதல், வாட்டுதல்” என்னும் பொருளுடைய இந்த உணக்குதலும்,
வள்ளுவரின் உழவு அதிகாரத்தில் தொழி/தொளி உழக்குதல் என்னும் பொருளுடைய உணக்குதலும் வெவ்வேறானவை.
உணக்குதல் (1) உஷ்ணம் ஆக்குதல் (2) உழக்கிச் சிதைத்தல் என்னும் 2 பொருள்களைக் கொண்ட ஒருசொல்.
இதனை homonym என்பர்.
Words with the same writing and pronunciation (i.e. are both homographs and homophones) are considered homonyms. தொடிப் புழுதி கஃசு ஆகப் பல்கால் உணக்கி உழவு செய்க என்று அறிவுறுத்தும் குறளில் உணக்குதல் உழக்குதல் என்ற பொருளில் வருவது தெளிவு. 1 பலத்தை 1/4 பலமாகக் கடுமையான வெயிலில்
காய்ச்சினால் மண்ணாங்கட்டி இறுகிக் கல்லாங்கட்டி ஆகிவிடும். விவசாயம் செய்யமுடியாது. எனவே அவ்வுரை
தவிர்க்கத் தக்கதாம்.
பரிமேலழகர் ஆகட்டும், பரிப்பெருமாள் ஆகட்டும் - அவர்கள் எது ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான
குறள்கள் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் வைத்துள்ளனர். உழவு என்ற அதிகாரத்தில் பரிமேலழகரும்,
பரிப்பெருமாளும், ஒன்றுக்கொன்று தொடர்ச்சியானது என்று ‘தொடிப்புழுதி’ எனத் தொடங்கும் குறளும்,
உடனே அடுத்து “ஏரினும் நன்றாம்” என்று வைத்துள்ளதை நோக்குக, பரிப்பெருமாள் மணக்குடவரைப் பின்பற்றுபவர்:
பரிப்பெருமாள் உரை (பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பெ. தூரன் மூலியமாகக் கொடுத்த ஏடுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தன. கா. ம. வேங்கடராமையா கவுண்டர் மறைந்து பலகாலம் சென்றபின்
பதிப்பித்தார்கள். அண்ணாமலையில் உள்ள கம்பன் ஏடுகளில் பெரும்பகுதியும் கவுண்டர் ஐயா அளித்தவையே. தகவல்: புலவர் செ. இராசு. ஈரோடு). அவ்வுரையை இங்கே படிக்கலாம்:
9. உழவு அதிகாரம் (பரிப்பெருமாள் உரைவரிசை)
சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
னுழன்று முழவே தலை 1031
எங்கெங்கோ சுழன்று உலகில் திரிந்தாலும் உழவே தலையான தொழில்.
அதில் வருத்தமிருந்தாலும் செய்க என்கிறார் வள்ளுவர்.
அடுத்த குறளில் அவ் உழவை எவ்வாறு செய்யணும் என்கிறார்.
தொடிப்புழுதி கைசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சான்று படும் 1032
பல்கால் உழவு செய்க. அதனால் துகள் துகளாக (புழுதி) ஆகுமாறு செய்க என்கிறார்.
ஒரு பலம் உள்ள கட்டிகளை காற்பலம் அளவான சிறு துகள்களாக உழக்கிச்
சிதைத்து உழுக என்றார். நிழல் - நிணல், தழல் - தணல், ... போல, ஈண்டு உணக்கின் = உழக்கின்.
கஃசு ஆக - பரிப்பெருமாள் கைசு (கயிசு) ஆக என்று தருகிறார். கஃசு கயிசு என்று
மக்கள் வழக்கில் ஆய்தவெழுத்து யகரமாக மெலிதற்கு அரிய சான்று இது.
ஏரினு நன்றா மெருவிடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு 1032
(1) தூள்தூளாக உழக்கி(உணக்கி) செய்யும் பல்கால் உழவு
(2) எரு (3) களைபறிப்பு (4) நீர்ப்பாசனம் (5) காப்பு (நோய், பூச்சி தாக்கல்,
பசுப் புகுதல் - இவற்றினின்றும் காத்தல்)
வேளாண்மையிம் முக்கியமான 5 செயல்களைக் கூறுகிறார் வள்ளுவர்.
செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலர்ந்
தில்லாளி னூடி விடும் 1033
1032-ஆம் குறளில் குறித்த 5 வேளாண்டொழிலும் நிலக்கிழான் தன் பூமிக்குச்
செல்லாது இருந்தால் மனையாளைப் போல, அவன் நிலமும் ஊடிவிடும் என்கிறார்.
அன்புடன்,
நா. கணேசன்
வயல் உழக்கும்/உணக்கும் எந்திரம்: