"மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல்" என்று அறம்
இந்திரன் கதை, தாருகாவனத்து முனிவர்கள் கதை ... இவற்றையெல்லாம் சொல்லி, எப்படியோ உதயகுமரன் மனத்தை மாற்றிவிடுகிறாள். உதயகுமரன் உள்ளம் பிறழ்கிறது. அவன் மனத்தைப் போலவே அவன் தேரும் விரைகிறது.
தன் உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட மணிமேகலையைப் பார்த்து ...
"உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்து என்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி!
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்"
என்று கேட்க நினைத்து அவள் இருந்த அம்பலத்துக்கு விரைகிறான் உதயகுமரன்.
இப்படியெல்லாம் சொல்லிக் கேட்க நினைத்தாலும் ... அவளைப் பிக்குணிக் கோலத்தில் பார்க்கும்போது ... அவன் துணிந்து கேட்பது என்னவோ வேறு!
"நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்து உடன் கேட்ப"
"வஞ்சக் கள்வி" என்று சொல்ல நினைத்தவன் வாயில் வருவது "நல்லாய்" என்ற நல்மொழி! அதுதான் பிக்குணிக் கோலத்தின் ஆற்றலோ!
அருமை.
நிறைய நிகழ்ச்சிகளும் கருத்துக்களும் செறிந்த பகுதி. பொறுமையாகப் படிக்கவும்! :-)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை: காயசண்டிகைக்குப் பிச்சையிட்ட பின்
-----------------------------------------------------------
காயசண்டிகையின் தணியாத கொடும் பசியைத் தீர்க்கிறது மணிமேகலை இட்ட பிச்சை.
காயசண்டிகை அதன் பிறகு தன் வழியே போய்விடுகிறாள்; ஆனால், பாவம், போகிற வழியில் விந்திய மலையைக் காக்கும் விந்தாகடிகையின் வயிற்றுக்குள் அடங்கிவிடுகிறாள். பின்னால் இவளைத் தேடி வருவான் இவள் துணைவனான காஞ்சனன்.
இந்தப் பகுதியில் ... மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தில் அமுதசுரபியைக் கொண்டு என்ன செய்தாள் என்பதையும் உதயகுமரன் அவளைத் தேடிவந்ததையும் காஞ்சனன் காயசண்டிகையைத் தேடி வந்ததையும் பார்ப்போம்.
இதுவரையும் இனியும்
--------------------------
இதுவரை மணிமேகலையின் இயக்கம்: காவிரிப்பூம்பட்டினம் --> மணிபல்லவம் --> காவிரிப்பூம்பட்டினம்
இனி அவள் போவாள் இன்னொரு பயணம்: காவிரிப்பூம்பட்டினம் --> சாவகம் --> மணிபல்லவம் --> வஞ்சி --> காஞ்சி
இறுதியில், காஞ்சியில்தான் "பவத்திறம் அறுக" என்று நோன்பு மேற்கொள்வாள்.
மணிபல்லவத்தில் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் இட்டிருந்த அமுதசுரபியைப் பெறுகிறாள் மணிமேகலை. பிறகு வான் வழியே வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி இருக்கும் பௌத்தப் பள்ளிக்குத் திரும்புகிறாள். மாதவியுடனும் சுதமதியுடனும் சேர்ந்து அறவண அடிகளைத் தேடிப் போகிறாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++
மணிமேகலை அறவண அடிகளைக் காணுதல்
---------------------------------------------------
அறவண அடிகள் எங்கே என்று கேட்டுக்கொண்டே செல்கிறாள் மணிமேகலை. அறவண அடிகளுக்கு நரை முதிர்ந்த யாக்கை; ஆனால் தளராத நாக்கு. அவர் உறைவிடம் சேர்கிறார்கள் மணிமேகலை, மாதவி, சுதமதி மூவரும்.
வந்த மூவருடைய முற்பிறவி பற்றியும் அறவண அடிகளுக்குத் தெரியும். அவர்கள் இந்தப் பிறவியில் வேறு வடிவில் வந்திருப்பதும் தெரியும்.
மாதவரின் அடிகளை மூன்று முறை வணங்கி முறைப்படிப் போற்றுகிறாள் மணிமேகலை. பல நாட்கள் முன்பு தான் மலர்வனத்துக்குப் போனதிலிருந்து இதுவரை நடந்த எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் அவருக்குச் சொல்லுகிறாள்.
இப்பிறப்பில் மாதவி ... முற்பிறப்பில் வீரை. இப்பிறப்பில் சுதமதி ... முற்பிறப்பில் தாரை. இப்பிறப்பில் மணிமேகலை ... முற்பிறப்பில் இலக்குமி. இந்த மூவரும் அமுதபதி என்பவனுக்கு மக்களாகப் பிறந்திருந்தார்கள். வீரையும் தாரையும் கச்சயம் ஆண்டுவந்த துச்சய வேந்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இலக்குமி இராகுலன் என்பவனுக்கு மனைவி. இந்த விவரம் எல்லாம் மணிபவல்லவத்தில் இருந்தபோது மணிமேகலைக்குத் தெரிய வந்திருந்தது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

தர்காவனத்து முனிவர்களின் செருக்கு அழிவையும் பக்தியுடன் பார்க்க வேண்டிய அவ்சித்தையும் அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.
எனக்கு ஏற்பட்ட சங்கடம் என்னவென்றால் பிள்ளைகள் அந்தக்கதை கேட்டபோது கதையை என்னால் எப்படிச் சொல்வது என்று தெளிவு இல்லாதுதான். காலம் வரும்போது புரிந்து கொள்ளட்டும் என்று பேச்சை மாற்றினேன். திரு திவாகர் சார் போன்றோர் ஆறாவது படிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்கிறமாதிரி இந்த தத்துவங்களை எளிமையாகத் தர வேண்டுகிறேன்.
நிறைய நிகழ்ச்சிகளும் கருத்துக்களும் செறிந்த பகுதி. பொறுமையாகப் படிக்கவும்! :-)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை: காயசண்டிகைக்குப் பிச்சையிட்ட பின்
-----------------------------------------------------------
காயசண்டிகையின் தணியாத கொடும் பசியைத் தீர்க்கிறது மணிமேகலை இட்ட பிச்சை.
காயசண்டிகை அதன் பிறகு தன் வழியே போய்விடுகிறாள்; ஆனால், பாவம், போகிற வழியில் விந்திய மலையைக் காக்கும் விந்தாகடிகையின் வயிற்றுக்குள் அடங்கிவிடுகிறாள். பின்னால் இவளைத் தேடி வருவான் இவள் துணைவனான காஞ்சனன்.
இந்தப் பகுதியில் ... மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தில் அமுதசுரபியைக் கொண்டு என்ன செய்தாள் என்பதையும் உதயகுமரன் அவளைத் தேடிவந்ததையும் காஞ்சனன் காயசண்டிகையைத் தேடி வந்ததையும் பார்ப்போம்.
இதுவரையும் இனியும்
--------------------------
இதுவரை மணிமேகலையின் இயக்கம்: காவிரிப்பூம்பட்டினம் --> மணிபல்லவம் --> காவிரிப்பூம்பட்டினம்
இனி அவள் போவாள் இன்னொரு பயணம்: காவிரிப்பூம்பட்டினம் --> சாவகம் --> மணிபல்லவம் --> வஞ்சி --> காஞ்சி
இறுதியில், காஞ்சியில்தான் "பவத்திறம் அறுக" என்று நோன்பு மேற்கொள்வாள்.
மணிபல்லவத்தில் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் இட்டிருந்த அமுதசுரபியைப் பெறுகிறாள் மணிமேகலை. பிறகு வான் வழியே வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி இருக்கும் பௌத்தப் பள்ளிக்குத் திரும்புகிறாள். மாதவியுடனும் சுதமதியுடனும் சேர்ந்து அறவண அடிகளைத் தேடிப் போகிறாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++
மணிமேகலை அறவண அடிகளைக் காணுதல்
---------------------------------------------------
அறவண அடிகள் எங்கே என்று கேட்டுக்கொண்டே செல்கிறாள் மணிமேகலை. அறவண அடிகளுக்கு நரை முதிர்ந்த யாக்கை; ஆனால் தளராத நாக்கு. அவர் உறைவிடம் சேர்கிறார்கள் மணிமேகலை, மாதவி, சுதமதி மூவரும்.
வந்த மூவருடைய முற்பிறவி பற்றியும் அறவண அடிகளுக்குத் தெரியும். அவர்கள் இந்தப் பிறவியில் வேறு வடிவில் வந்திருப்பதும் தெரியும்.
மாதவரின் அடிகளை மூன்று முறை வணங்கி முறைப்படிப் போற்றுகிறாள் மணிமேகலை. பல நாட்கள் முன்பு தான் மலர்வனத்துக்குப் போனதிலிருந்து இதுவரை நடந்த எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் அவருக்குச் சொல்லுகிறாள்.
இப்பிறப்பில் மாதவி ... முற்பிறப்பில் வீரை. இப்பிறப்பில் சுதமதி ... முற்பிறப்பில் தாரை. இப்பிறப்பில் மணிமேகலை ... முற்பிறப்பில் இலக்குமி. இந்த மூவரும் அமுதபதி என்பவனுக்கு மக்களாகப் பிறந்திருந்தார்கள். வீரையும் தாரையும் கச்சயம் ஆண்டுவந்த துச்சய வேந்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இலக்குமி இராகுலன் என்பவனுக்கு மனைவி. இந்த விவரம் எல்லாம் மணிபவல்லவத்தில் இருந்தபோது மணிமேகலைக்குத் தெரிய வந்திருந்தது.
மணிமேகலை படு சுவாரசியமாகப் போகிறதே! எல்லாம் எங்கள் வாத்தியாரம்மா
எடுக்கும் விதம்.
நான் மணிமேகலை ஜாவா (சாவகம்) போவதற்குக் காத்திருக்கிறேன். அந்தக்
காலத்தில் சாவகத்தில் தமிழ் பேசியிருக்கிறார்கள்!! அல்லது இவர்களுக்கு
அவர்கள் மொழி தெரிந்திருக்கிறது!
2011/1/3 rajam <ra...@earthlink.net>
>
> இனி அவள் போவாள் இன்னொரு பயணம்: காவிரிப்பூம்பட்டினம் --> சாவகம் -->
> மணிபல்லவம் --> வஞ்சி --> காஞ்சி
>இறுதியில், காஞ்சியில்தான் "பவத்திறம் அறுக" என்று நோன்பு மேற்கொள்வாள்.
இப்பயணங்கள் வரும் போது கவனமாகக் கேட்க வேண்டும்!
கஞ்சியில் வந்து முடிப்பது சுவாரசியம். ஜென் மாஸ்டர் போதி தர்மர்
காஞ்சியிலிருந்துதான் தூரக்கிழக்கு போகிறார்!!
> ஒரு நாள் ... வீரை கள்ளுண்ட மயக்கத்தில், புதிதாகப் பிடிக்கப்பட்ட, பழக்கப்படாத
> ஒரு யானையின் முன்னால் போனதால் இறந்துபட்டாள். >
இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர உலகின் எல்லாப் பகுதியிலும்
பெண்கள் மது அருந்துகிறார்கள். அது பாவமாகக் கருதப்படுவதில்லை. மணிமேகலை
காலத்தில் தமிழகம் அந்தவொரு மனநிலையில் இருந்திருப்பது தெரிகிறது.
இக்காதையின் அழகு, அக்காலத்திய பழக்கங்களை உள்ளது உள்ளபடிச் சொல்வது.!!
> "அந் நாள் பிறந்து அவன் அருள் அறம் கேட்டோர்
> இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்
> போதி மூலம் பொருந்திய சிறப்பின்
> நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
> பிறவி தோறும் மறவேன்"
இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நாம் உறவு! எனும் ஆண்டாள் பாசுரம்
நினைவிற்கு வருகிறது!
>
> பிறகு ஆபுத்திரனைப் பற்றியும் மணிமேகலைக்குச் சொல்கிறார். ஆபுத்திரன் இந்தப்
> பிறவியில் சாவக நாட்டில் ஒரு பசுவின் வயிற்றில் பிறந்திருப்பதைத்
> தெரிவிக்கிறார். (பிறகு ஒருநாள் மணிமேகலை அங்கே போய் அவனைப் பார்ப்பாள். அதை
> வேறொரு பகுதியில் பார்ப்போம்.)
>
இந்தோனீசியா என்பது ஏதோ பக்கத்து ஊர் போல் பேசும் அழகை என்னவென்று
சொல்வது? எதற்கெடுத்தாலும் சாவகம்! சரி அங்கு என்ன மொழியில் கதையாடி
இருப்பர்?
> "உலக அறவியின் ஒரு தனி ஏறி-ப்
> பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
உலக அறவி என்றால் என்ன? Is it a Tower?
>
> உடனே அந்த அம்பலத்தில் எழுகிறது பெரிய இரைச்சல் ... எல்லாம் அந்த
> உணவுக்காகத்தான்!
>
>
இதில் ஏசு காவியத்தின் பாதிப்பு இருப்பது சுவாரசியமாக உள்ளது.
மலைப்பிரசங்கத்திற்குப் பிறகு ஏசுவும் எல்லோருக்கும் (ஏழை, பணக்காரன்
என்று பார்க்காமல்) உணவு அளிக்கிறார்.
>
> அம்பலத்தில் உயிர்கள் உணவு ஏற்கும் ஓசை மாதவியின் தாய் சித்திராபதி காதுக்கு
> எட்டுகிறது. மகள் போய் அடைக்கலம் புகுந்தது மாதவர் பள்ளியில்! மகளுக்கு மகள்
> திரிவது ஊர் அம்பலத்தில்! தாய் பொறுப்பாளா?
>
இது பாரதிராஜா படத்தில் வரும் வில்லி போல் உள்ளது ;-)
>
> "என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
> தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி,
> அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்"
>
மணிமேகலை காவியத்தில் இருக்கும் இந்த வெகுளித்தனம் எனக்கு
பிடித்திருக்கிறது. பிக்குணி என்பதால் எல்லாம் துறந்துவிட்டாள்:
என்றில்லாமல். (முன் ஜென்மக் கதை தெரிந்தால் இப்படி வம்பில்
மாட்டிக்கொள்ள வழியுண்டு என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ?)
>
> உதயகுமரன் திடுக்கிட்டுப்போகிறான். முன்பு ஒருநாள் 'மணிமேகலையை மறந்துவிடு'
> என்று ஒரு தெய்வம் சொன்னதும் வியப்பானது; பலருடைய பசியை நீக்கவேண்டி மணிமேகலை
> கையில் ஏந்திய பாத்திரமும் வியப்பானது; இப்போது 'தெய்வக்குற்றம் செய்கிறாய்'
> என்று சித்திரம் சொன்னதும் வியப்பானது. என்ன இதெல்லாம்? குழம்புகிறான்.
இதெயெல்லாம் பார்க்கும் போது இக்காப்பியங்கள் தோன்றுவதற்கு கிரேக்க
இதிகாசங்கள் துணை போகியிருக்குமோ? என்றொரு சம்சயம் எழும்புகிறது!
> காட்டம் மிகுந்த தீ நாகம் அடங்கிக் கிடக்கிற புற்றுக்கு உள்ளே நுழைகிறவனைப் போல
> அவனுடைய மார்பின் சந்தனம் அவன் வருகையை அறிவிக்கிறது! மெல்ல அடிமேல் அடிவைத்து
> அவன் உள்ளே நுழைந்துகொண்டிருக்கும்போது அங்கே பதுங்கியிருந்த காஞ்சனன் ... ...
> இவன் இவளிடம் வந்திருக்கிறான் என்று பொங்கிய சினத்தோடு எழுந்து ... உதயகுமரன்
> பின்னே போய் வண்டுகள் சுற்றும் அவனுடைய தோள் துண்டுபடும்படியாக அவனை வெட்டி
> வீழ்த்திவிட்டு ... அவள் (காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலை) இருந்த இடத்தை
> நோக்கி விரைகிறான்.
>
பொறாமை, கொலை, கொள்ளை, பசி, பட்டிணி என்பது எக்காலத்தில் இல்லை?
மணிமேகலை, சிலம்பைவிடச் சுவாரசியமாகத்தான் உள்ளது!!
க.>
அப்படியிருக்க, இந்த “1616” வருடம் என்பது எதைக்குறிக்கும் ?இதை தேவவருஷமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது தான் கணக்கு சரியாக வரும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
நீங்கள் சொல்கின்ற கதைகளெல்லாம் எனக்கு ஆச்சர்யத்தை கிளப்புகின்றன.
விஷ்ணு புராணம் அப்படியே பௌத்த புராணமாகிவிட்டது போலுள்ளது :-) பாகவதம்
கேட்பது போல் உள்ளது ;-) மிக்க நன்றி.
இந்த மைத்ரேயர் ஜே.கிருஷ்ணமூர்த்தி எனும் அவதாரமாக வந்துவிட்டதாக
தியசோபிகல் சொசைடி சொல்லும்.
சம்பவாமி யுகே! யுகே!!
க.>
பிகு: நீங்கள் முன்பு சொன்ன சித்தம் எனும் மொழி (குறியீடு?) எபடி
ஆங்கிலத்தில் எழுதுவது? Siddham?
2011/1/6 rajam <ra...@earthlink.net>:
But the point is can it be considered as Human Years ? or Celestial Years ?
Probably ... "Celestial Years." There's no disagreement with you here! :-)
http://en.wikipedia.org/wiki/1616
Somebody may find some clues!!
Kannan
2011/1/7 ?????? ????? <vinodh...@gmail.com>:
அது சரி! இது கிறிஸ்து சகாப்தமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லைதான்!!
ஆனால், இப்படி அவதார புருஷரைத் தேடுவது பெரிய வேலை. ஜே.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வில் இதுதான் நடந்தது. இறுதியில் அவர் எல்லாவற்றையும் உதறித்
தள்ளிவிட்டார்!
> Not sure.. even if Tamils knew of Christianity until ~15th Century.
பிறகு இந்த தாமஸ் வந்த கதை? சிரியன் கிறிஸ்தவர்கள் கோபித்துக்கொள்ளப்
போகிறார்கள் ;-)
க.>
நிறைய நிகழ்ச்சிகளும் கருத்துக்களும் செறிந்த பகுதி. பொறுமையாகப் படிக்கவும்! :-)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை: காயசண்டிகைக்குப் பிச்சையிட்ட பின்
-----------------------------------------------------------
காயசண்டிகையின் தணியாத கொடும் பசியைத் தீர்க்கிறது மணிமேகலை இட்ட பிச்சை.
காயசண்டிகை அதன் பிறகு தன் வழியே போய்விடுகிறாள்; ஆனால், பாவம், போகிற வழியில் விந்திய மலையைக் காக்கும் விந்தாகடிகையின் வயிற்றுக்குள் அடங்கிவிடுகிறாள். பின்னால் இவளைத் தேடி வருவான் இவள் துணைவனான காஞ்சனன்.
இந்தப் பகுதியில் ... மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தில் அமுதசுரபியைக் கொண்டு என்ன செய்தாள் என்பதையும் உதயகுமரன் அவளைத் தேடிவந்ததையும் காஞ்சனன் காயசண்டிகையைத் தேடி வந்ததையும் பார்ப்போம்.
இதுவரையும் இனியும்
--------------------------
இதுவரை மணிமேகலையின் இயக்கம்: காவிரிப்பூம்பட்டினம் --> மணிபல்லவம் --> காவிரிப்பூம்பட்டினம்
இனி அவள் போவாள் இன்னொரு பயணம்: காவிரிப்பூம்பட்டினம் --> சாவகம் --> மணிபல்லவம் --> வஞ்சி --> காஞ்சி
இறுதியில், காஞ்சியில்தான் "பவத்திறம் அறுக" என்று நோன்பு மேற்கொள்வாள்.
மணிபல்லவத்தில் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் இட்டிருந்த அமுதசுரபியைப் பெறுகிறாள் மணிமேகலை. பிறகு வான் வழியே வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி இருக்கும் பௌத்தப் பள்ளிக்குத் திரும்புகிறாள். மாதவியுடனும் சுதமதியுடனும் சேர்ந்து அறவண அடிகளைத் தேடிப் போகிறாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++
மணிமேகலை அறவண அடிகளைக் காணுதல்
---------------------------------------------------
அறவண அடிகள் எங்கே என்று கேட்டுக்கொண்டே செல்கிறாள் மணிமேகலை. அறவண அடிகளுக்கு நரை முதிர்ந்த யாக்கை; ஆனால் தளராத நாக்கு. அவர் உறைவிடம் சேர்கிறார்கள் மணிமேகலை, மாதவி, சுதமதி மூவரும்.
வந்த மூவருடைய முற்பிறவி பற்றியும் அறவண அடிகளுக்குத் தெரியும். அவர்கள் இந்தப் பிறவியில் வேறு வடிவில் வந்திருப்பதும் தெரியும்.
மாதவரின் அடிகளை மூன்று முறை வணங்கி முறைப்படிப் போற்றுகிறாள் மணிமேகலை. பல நாட்கள் முன்பு தான் மலர்வனத்துக்குப் போனதிலிருந்து இதுவரை நடந்த எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் அவருக்குச் சொல்லுகிறாள்.
இப்பிறப்பில் மாதவி ... முற்பிறப்பில் வீரை. இப்பிறப்பில் சுதமதி ... முற்பிறப்பில் தாரை. இப்பிறப்பில் மணிமேகலை ... முற்பிறப்பில் இலக்குமி. இந்த மூவரும் அமுதபதி என்பவனுக்கு மக்களாகப் பிறந்திருந்தார்கள். வீரையும் தாரையும் கச்சயம் ஆண்டுவந்த துச்சய வேந்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இலக்குமி இராகுலன் என்பவனுக்கு மனைவி. இந்த விவரம் எல்லாம் மணிபவல்லவத்தில் இருந்தபோது மணிமேகலைக்குத் தெரிய வந்திருந்தது.
உலக அறவி - ஊர்ப்பொது மன்றம்
தேவ்
> ...
>
> read more »
ஒரு கேள்வி. உலக அறவி என்பதன் பொருள் விளக்கம் தர முடியுமா?