ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம் - கட்டுரை

86 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
May 27, 2011, 8:06:40 AM5/27/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம் நண்பர்களே,
 
இன்று ”ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்” என்ற தலைப்பில் அமைந்த ஒரு கட்டுரையை வெளியிடுகின்றோம். இக்கட்டுரையின் முதல் பகுதியை இன்று நீங்கள் வாசிக்கலாம். இக்கட்டுரையை நம் வாசிப்ப்பிற்காகத் தட்டச்சு செய்து வழங்கியிருப்பவர் திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள். அவருக்கு நமது நன்றி.
 
அன்புடன்
சுபா
 
 
ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்                            
க.நெடுஞ்செழியன்
 
பகுதி 1
 
 

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 1875) அறிஞர் பர்னல் என்பவர் இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார்.  அவற்றுள் ஒன்று ‘இந்திய எழுத்தில் வரலாறு.’  மற்றொன்று அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்.  இவ்விரு நூல்களுள் இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை என்பதை உறுதி செய்திருந்தார்.  ஆனால் எழுத்தியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவரின் கருத்தைக் கூடுமானவரை புறக்கணித்தனர்.  அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள் (In the Aindra School of Sanskrit Grammarians) என்ற நூலில் , அய்ந்திரம் என்பது ஒரு சிந்தனைப் பள்ளியே தவிர அது ஒரு தனிமனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று என்பது தெளிவாக்கப் பெற்றுள்ளது .  மேலும் அய்ந்திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதி செய்யப் பெற்றுள்ளது.  இந்திய அறிஞர்கள் ஏ.சி.பர்னல் அவர்களின் கூற்றை ஒருதலையாகப் புரிந்து கொண்டு அய்ந்திரம் என்பதைப் பாணினிக்கும் காலத்தால் முற்பட்ட சம்ஸ்கிருத இலக்கண நூலாகவே கருதிவிட்டனர்.
 
அய்ந்திரத்தைச் சமற்கிருத மொழியிலமைந்த இலக்கணப் பள்ளியாகப் பர்னல் குறிப்பிட்டாலும் கூட, அவர் தரக்கூடிய எடுத்துக்காட்டுகள் அக்கருத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் அமையவில்லை.  அவ்வெடுத்துக்காட்டுகளுள் தலையாயவை இரண்டு.  ஒன்று பெளத்த இலக்கியமாகிய அவதான சாதகத்தில் புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் ‘அய்ந்திரம் கற்றான்’ என்பதாகும்.  இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார் அய்ந்திரம் என்பதற்கு உலாய்தம் எனப் பொருள் உரைத்தார்.  (அ.சக்கரவர்த்தி நயினார், நீலகேசி நூலுக்கான ஆங்கில முன்னுரை An Introduction to Neelakesi).  அவர் அய்ந்திரத்தை உலகாய்தம் எனக்குறிக்க அவரின் ஆங்கில முன்னுரையைத் தமிழ்ப்படுத்திய பேராசிரியர் நா.வானமாமலை உலகாய்தம் என்பதைப் பூதவாதம் எனக் குறித்தார்.
 
உலகாய்தம், பூதவாதம் ஆகிய இரண்டும் ஒரு பொருள் குறிப்பன.  அவை நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற அய்ந்து பூதங்களின் இயல்பை விளக்கிய அணுக்கோட்பாடுகளாகும்.  அறிவியலையும் தருக்கவியலையும் இணைத்த இக்கோட்பாடுகள் பேச்சுக்கலைக்குச் சிறப்பிடம் தந்தன.  தருக்க முறையினால் உண்மையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததால் இக்கொள்கையாளர்கள் பேச்சுக்கலைக்குச் சிறப்பிடம் தந்தனர்.  இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும்.
 
காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும்.  இந்நூலில் சமற்கிருத இலக்கண ஆசிரியராகிய பாணினி அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரருசிகாத்தியாயனர் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும், ஏழு நாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும், தன் அருள் பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய அய்ந்திர நூல்களை எல்லாம் அழித்தான் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.
 
மேற்காட்டிய இரண்டு சான்றுகளுமே அய்ந்திரம் அணுக்கோட்பாடு என்பதையும் அவ் அய்ந்திரம் தருக்க முறையில் வாதமுறையை விளக்கிய பேச்சுக்கலையின் இலக்கணம் என்பதையும் வற்புறுத்தக் காணலாம்.  எனவே பனம்பாரனார் அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனக்குறிப்பது தொல்காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படையில் என்பதும், அம்மெய்யியல் தருக்க முறையினை உள்ளடக்கியது என்பதும் தெளிவு.  இதனை,
நிலம் நீர் தீவளி விழும்போடைந்தும்
கலந்த மயக்கமுலக மாதலின்.
எனும் நூற்பா உறுதி செய்யும்.  தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் இறுதியில் விளக்கும் தருக்கவியல் இலக்கணங்கள், 32 தந்திர உத்திகள் ஆகிய செய்திகள் யாவும் அக்கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகளாகும்.
 
தொல்காப்பியம் இலக்கண நூலாதலால் அய்ந்திரத்தையும் இலக்கண நூலாகவே கருதிவிட்டனர் அறிஞர்கள்.  அப்படிக் கருதிய அறிஞர்கள் கூட அய்ந்திரத்தைச் சமற்கிருத நூலாகக் கருதவில்லை.  பெளத்த வரலாற்றாசிரியராகிய தாரநாதர், “இந்நூல் மிகவும் பழமையானது;  தென்னகத்தில் வழங்கியது;  கடவுள் உலகைச் சார்ந்தது;  ஆரிய தேசத்தது அன்று” என உறுதி செய்வார்.
 
தாரநாதரைப் போலவே இருக்கு வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம். சுந்தர்ராஜ், அய்ந்திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது இருக்கு வேதத்திற்கு முந்தையது என்று உறுதி செய்கிறார்.  (Gems from Pre-historic Past). எனவே அய்ந்திரம் என்பது இலக்கண நூலன்று.  அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவு மரபுக்கு உரியது என்பது தெளிவாகும்.  ஒருவேளை அதை இலக்கண நூலாகக் கருதினாலும் கூட அது இருக்கு வேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்கு உரியது என்பதே உண்மை.  இருக்குவேதம் எழுதாக்கிளவியாக, வாய்மொழியாகவே வழங்கப் பட்டு வந்தது.  சமற்கிருதத்திற்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான்.  எனவே எழுத்து முறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக்கணம் எப்படி இருந்திருக்க முடியும்??
 
மேலும் பனம்பாரனார், தொல்காப்பியரை ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி, புலம் தொகுத்தவராகப்’ புகழ்கின்றார்.  இங்குச் சொல்லப்படும், ‘முந்து நூல்’ என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும்.  அதனால் அய்ந்திரம் என்பதை  நாம் இலக்கண நூலாகக் கருத வேண்டியது இல்லை.
 
நான்மறை: அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர்.  இந்நான்மறை என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வுகளால்  மாற்றம் பெற்றுள்ளன.  இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும்.  சாணக்கியரின் பொருள்நூல் வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொருளில் திரையீ எனக்குறிக்கின்றது.  அதனால் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் என்ற தொடர் கூட ஆய்வுக்கு உரியதாகிறது.  மாகறல் கார்த்திகேயனார், நான்மறை என்பதர்கு “மூல மறை” எனப் பொருள் கொள்வதையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
மயங்காமரபின் எழுத்து முறைகாட்டி: பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப் புதையலின் திறவுகோலாகும்.  அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழ் எழுத்து முறையினைக் காட்டினார் எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும்.  வேதத்தில் வல்ல அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்து முறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?  இவ்வினாவிற்கான நுட்பத்தை அறிஞர் டி.டி.கோசாம்பி விளக்கக் காணலாம்.  அவர் தம் நூலில் (The Culture and Civilisation of Ancient India in Historical Outline), கி.மு. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் போது, தென்னிந்தியாவில், இருக்கு வேதப் பாசுரங்கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப் பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப்புரையும் வழங்கப் பட்டது.  அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன்  ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது.  ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத்தில் பத்திரப் படுத்தி வைக்கப்படவில்லை எனக்குறிக்கின்றார்.
 
தொடரும்..

கி.காளைராசன்

unread,
May 27, 2011, 8:20:10 AM5/27/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மகிழ்ச்சியாக உள்ளது.
படித்துக் ​கொண்டிருக்கி​றேன்
அன்பன்
கி.கா​ளைராசன்

திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

N. Ganesan

unread,
May 27, 2011, 8:20:34 AM5/27/11
to மின்தமிழ்

On May 27, 7:06 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம் நண்பர்களே,
>
> இன்று ”ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்” என்ற தலைப்பில் அமைந்த ஒரு
> கட்டுரையை வெளியிடுகின்றோம். இக்கட்டுரையின் முதல் பகுதியை இன்று நீங்கள்
> வாசிக்கலாம். இக்கட்டுரையை நம் வாசிப்ப்பிற்காகத் தட்டச்சு செய்து

> வழங்கியிருப்பவர் *திருமதி.கீதா சாம்பசிவம்* அவர்கள். அவருக்கு நமது நன்றி.


>
> அன்புடன்
> சுபா
>

> *ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்                             *
> *க.நெடுஞ்செழியன்
> *

சுபா,

தினமணியில் வந்த கட்டுரைதானே இது?

இந்தக் கால ஆராய்ச்சியை, பொதுவாகவே
க. நெடுஞ்செழியன் செய்யும் ஆஜீவக ஆராய்ச்சி
போன்றவை, ஆய்வுலகில் நில்லாதவை.

இக் கட்டுரையை நான் இங்கே இட்டபோது
அது பற்றி ழான் குறிப்பிட்டிருந்ததாய் ஞாபகம்.

ழானின் அகத்தியர் பற்றிய கட்டுரை படிக்கவும்.
அவர் அனுமதி பெற்று ஹெரிட்டேஜ் விக்கியில்
வைக்கவும். ஓர் அருமையான ஆராய்ச்சி அது.

நா. கணேசன்


> **
> *பகுதி 1*

N. Ganesan

unread,
May 27, 2011, 8:22:38 AM5/27/11
to மின்தமிழ்

On May 27, 7:20 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> மகிழ்ச்சியாக உள்ளது.
> படித்துக் ​கொண்டிருக்கி​றேன்
> அன்பன்
> கி.கா​ளைராசன்
>

மகிழ்ச்சி இருக்கும். ஆனால், ஆராய்ச்சி அல்ல.

உ-ம்: புள்ளி பற்றி உள்ளது. புள்ளி ஏற்பட்டது
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில். இருக்குக்கு
1000 ஆண்டு பின்.

அன்பன்
நா. கணேசன்


> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/

Subashini Tremmel

unread,
May 27, 2011, 8:25:08 AM5/27/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/5/27 N. Ganesan <naa.g...@gmail.com>



On May 27, 7:06 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம் நண்பர்களே,
>
> இன்று ”ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்” என்ற தலைப்பில் அமைந்த ஒரு
> கட்டுரையை வெளியிடுகின்றோம். இக்கட்டுரையின் முதல் பகுதியை இன்று நீங்கள்
> வாசிக்கலாம். இக்கட்டுரையை நம் வாசிப்ப்பிற்காகத் தட்டச்சு செய்து
> வழங்கியிருப்பவர் *திருமதி.கீதா சாம்பசிவம்* அவர்கள். அவருக்கு நமது நன்றி.
>
> அன்புடன்
> சுபா
>
> *ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்                             *
> *க.நெடுஞ்செழியன்
> *

சுபா,

தினமணியில் வந்த கட்டுரைதானே இது?
 
தினமணியில் வந்ததா என்பது தெரியாது. அரிமா நோக்கு சஞ்சிகையில் வந்த கட்டுரை இது.
 
-சுபா
 
 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Ganesan

unread,
May 27, 2011, 8:35:19 AM5/27/11
to மின்தமிழ்

On May 27, 7:25 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> > தினமணியில் வந்த கட்டுரைதானே இது?
>
> தினமணியில் வந்ததா என்பது தெரியாது. அரிமா நோக்கு சஞ்சிகையில் வந்த கட்டுரை
> இது.
>
> -சுபா
>

தகவலுக்கு நன்றி. அரிமா நோக்கு கட்டுரை
முழுதும் வரட்டும். கீதா கைவண்ணத்தில்.

பிறகு தினமணி கட்டுரையை ஒப்பிடுவோம்:
https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/df941e16d5aaa880

/க/

N. Ganesan

unread,
May 27, 2011, 8:38:13 AM5/27/11
to மின்தமிழ்

சுபா & கீதா,

கட்டுரை காண:
http://groups.google.com/group/mintamil/msg/d857e6d5ce9dc355


கணேசன்

N. Ganesan

unread,
May 27, 2011, 8:55:28 AM5/27/11
to மின்தமிழ்


இன்னொரு இழையில் தொல்காப்பியம் கற்ற ழான்
கூறுவதைப் படிக்கவும்:
http://groups.google.com/group/mintamil/msg/0753f1d94857df88

பின்னங்குடி - சாஸ்திரி ஊர்:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/f7fbefbfa88f38e5/

கணேசன்

Geetha Sambasivam

unread,
May 27, 2011, 11:02:21 AM5/27/11
to mint...@googlegroups.com
அன்பார்ந்த ஐயா, இந்தக் கட்டுரை குறித்த கருத்துக்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  நன்றி.

2011/5/27 N. Ganesan <naa.g...@gmail.com>

கணேசன்

விஜயராகவன்

unread,
May 27, 2011, 11:04:28 AM5/27/11
to மின்தமிழ்
இந்த கட்டுரையில் பல ஆய்வாளர்கள் பெயர்களும் , புஸ்தக பெயர்களும் ஒரு
சுட்டியில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு உதாரனத்தை எடுத்துக் கொள்வோம்:

"டி.டி.கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில் (The Culture and
Civilisation of Ancient India in Historical Outline), கி.மு. 14-ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியின் போது, தென்னிந்தியாவில், இருக்கு வேதப்
பாசுரங்கள்
சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப் பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக்
குறிப்புரையும் வழங்கப் பட்டது"

திரு நெடுஞ்செழியன் , அந்த புத்தகத்தை எங்கு பார்த்தார், எந்த
அத்தியாயம், பக்க எண்ணில் பார்த்தார் என குறிப்பிட முடியுமா?

இது திரு.நெடுஞ்செழியனுக்கு கேள்வி


விஜயராகவன்

On May 27, 2:06 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம் நண்பர்களே,
>
> இன்று ”ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்” என்ற தலைப்பில் அமைந்த ஒரு
> கட்டுரையை வெளியிடுகின்றோம். இக்கட்டுரையின் முதல் பகுதியை இன்று நீங்கள்
> வாசிக்கலாம். இக்கட்டுரையை நம் வாசிப்ப்பிற்காகத் தட்டச்சு செய்து

> வழங்கியிருப்பவர் *திருமதி.கீதா சாம்பசிவம்* அவர்கள். அவருக்கு நமது நன்றி.


>
> அன்புடன்
> சுபா
>

> *ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்                             *
> *க.நெடுஞ்செழியன்
> *
> **
> *பகுதி 1*

Geetha Sambasivam

unread,
May 27, 2011, 11:08:45 AM5/27/11
to mint...@googlegroups.com
புத்தகக் குறிப்புகளின் சுட்டிகள் கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்படவில்லை. :(

2011/5/27 விஜயராகவன் <vij...@gmail.com>
இந்த கட்டுரையில் பல ஆய்வாளர்கள் பெயர்களும் , புஸ்தக பெயர்களும் ஒரு
சுட்டியில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு உதாரனத்தை எடுத்துக் கொள்வோம்:

"டி.டி.கோசாம்பி விளக்கக் காணலாம்.  அவர் தம் நூலில் (The Culture and
Civilisation of Ancient India in Historical Outline), கி.மு. 14-ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியின் போது, தென்னிந்தியாவில், இருக்கு வேதப்
பாசுரங்கள்
சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப் பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக்
குறிப்புரையும் வழங்கப் பட்டது"

திரு நெடுஞ்செழியன் , அந்த புத்தகத்தை எங்கு பார்த்தார், எந்த
அத்தியாயம், பக்க எண்ணில் பார்த்தார் என குறிப்பிட முடியுமா?

இது திரு.நெடுஞ்செழியனுக்கு கேள்வி


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
May 27, 2011, 11:14:50 AM5/27/11
to மின்தமிழ்
இப்பொழுதே விடையையும் கொடுத்து விடுகிறேன். கோசம்பி அந்நூலில் "The
Rigvedic hymns were properly edited, written down, and commented
in South India during the second half of the fourteenth century.
The text had till then been memorised syllable by syllable (as a few
scholars
in India still do to this day), but not generally committed to
writing.."


இதில் சொல்லப்பட்டது கி.பி.14 நூற்றாண்டு. இது ரிக் வேதத்தின்
உரையாசிரியர் சாயனரைக் குறிக்கும்
http://en.wikipedia.org/wiki/Sayana

நெடுஞ்ச்ழியனோ அதை கி.மு. 14 நூற்றாண்டு என எழுதுயுள்ளார்.

2800 வருடங்கள் முன்னுக்குப் பின் குழப்பியடிப்ப்தை ஆய்வு அல்லது
சிந்தனை என எப்படி ஏற்றுக்கொள்வது?


விஜயராகவன்

> > ஆத்திரமுற்ற- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

Geetha Sambasivam

unread,
May 27, 2011, 11:22:30 AM5/27/11
to mint...@googlegroups.com
இது குறித்து மேலும் அறியத் தொல்காப்பியம்-திருக்குறள் காலமும் கருத்தும் எனும் நூலினைக் காண்க. //

இது தான் அவர் கடைசியில் கொடுத்திருக்கும் குறிப்பு.  இதை சுபாவுக்கு அனுப்பியதில் சேர்த்திருக்கேனா தெரியலை, பார்த்துச் சேர்க்கிறேன்.  வேறு குறிப்புக்களோ, சுட்டிகளோ இல்லை.  ஆனால் கட்டுரையின் போக்கு என்னையும் கவர்ந்தது.  பல கேள்விகள்! பார்க்கலாம். விளக்கம் எப்படி வருகிறது என.  நன்றி இப்போது கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு.  முழுதும் படித்துவிட்டுச் சொல்லுங்கள் ஐயா.

2011/5/27 விஜயராகவன் <vij...@gmail.com>
இப்பொழுதே விடையையும் கொடுத்து விடுகிறேன். கோசம்பி அந்நூலில் "The

Rigvedic hymns were properly edited, written down, and commented
in South India during the second half of the fourteenth century.
The text had till then been memorised syllable by syllable (as a few
scholars
in India still do to this day), but not generally committed to
writing.."


இதில் சொல்லப்பட்டது கி.பி.14 நூற்றாண்டு.  இது ரிக் வேதத்தின்
உரையாசிரியர் சாயனரைக் குறிக்கும்
http://en.wikipedia.org/wiki/Sayana

நெடுஞ்ச்ழியனோ அதை கி.மு. 14 நூற்றாண்டு என எழுதுயுள்ளார்.

2800 வருடங்கள் முன்னுக்குப் பின்  குழப்பியடிப்ப்தை ஆய்வு அல்லது
சிந்தனை என எப்படி ஏற்றுக்கொள்வது?


விஜயராகவன்

Subashini Tremmel

unread,
May 31, 2011, 7:54:09 AM5/31/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே,
 
இக்கட்டுரையின் இரண்டாம் (இறுதிப்) பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. இதனை நமது வாசிப்பிற்காகத் தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள். அவருக்கு நமது நன்றி.
 
அன்புடன்
சுபா
 
                   ரிக் வேதத்திற்கு முந்தையது தொல்காப்பியம்                            
க.நெடுஞ்செழியன்
 
பகுதி 2
 

 
இருக்குவேதம் கி.மு. 14-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்ப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது, தென்னாட்டில் தான் எனும் டி.டி.கோசாம்பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்கர மரபின எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியும்?
 
வேதத்தை உச்சரிக்கும் முறை:  தமிழ் எழுத்து முறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக் கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தின் பிறப்பியலை அமைத்துள்ளார்.  அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி அந்த உச்சரிப்பு முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக் கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத்துள்ளார்.  அவை,
 
எல்லாவெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)
அகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே (102)
அஃதிவன் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே (103)
என்பனவாம்.  இந்நூற்பாக்கள் இரண்டும்  சமற்கிருத ஒலிப்பு முறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன.  வேதத்தின் ஒலிப்பு முறை பற்றி நான் விளக்க வரவில்லை;  மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் மாத்திரையின்  அளவினைக் கூறினேன் என உறுதி செய்கின்றார்.  ‘வேதத்தின் ஒலிப்புமுறை பொருள் தெரியா நிலைமைய ஆகலின் அவற்றிற்கு அளவு கூற மாட்டார்கள்’ என்று உரையாசிரியர் இளம்பூரணர் தரும் விளக்கம் எண்ணத் தகும்.  இதனால் அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்து முறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றன.
 
தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்:  வேதக்கடவுள்களின் எண்ணிக்கை 33 என்பதை இருக்கு வேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற்றின் வழியாகத் தோன்றிய பிராமணங்களும் உறுதி செய்கின்றன.  அவை, 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11
உருத்திரர்கள், 1 வசத்காரர், 1 பிரஜாபதி என்பன.  33 என்ற எண்ணிக்கை வேத நூல்களில் வரையறுக்கப்பட்டதற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம் முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்
எழுத்தெனப் படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே
எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை என்பதைத் தம் நூலில் (An Introduction to Rig Vedic Studies)விரிவாக விளக்கியுள்ளார்.  ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத்துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார்.  ‘வழு’ என்னும் தமிழ்ச்சொல்லே ‘வசு’ என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த திராவிட வேர்ச்சொல் அகராதியிலிருந்து (DED.4336) எடுத்துக்காட்டி நிறுவுவார்.  இந்த வசுக்கள் மொழிக்கு முதலில் வாராத தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பதும் இந்த எட்டும் தொல்காப்பியருக்குப் பிந்தைய வழக்கு என்பதும் இங்கே எண்ணத் தகும்.
 
“க” எனும் மெய்யெழுத்து:  இருக்கு வேதக் கடவுள்களில் ஒன்றாகக் குறிக்கப் படுவது ‘க’ என்பதாகும்.  இக்கடவுளைப் பற்றிய வரலாறு தெரியாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர்.  பிரஜாபதியாகக் கருதப் படும், ‘க’என்பது தமிழ் உயிர் மெய் எழுத்தான ‘க’வேயாகும்.  சங்க காலத்தில் ‘க’ என்பது + என எழுதப் பட்டது.  இவ்வடிவத்தையே மனித உருவிலிருக்கும் ‘க’வே என இருக்கு வேதம் போற்றுவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
 
இந்திரனும் வருணனும்: இருக்கு வேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப் படுபவர்கள் இந்திரனும் வருணனும் ஆவர்.  இருவருள்ளும் இந்திரனே போர்க்கடவுளாகவும், மழைக்கடவுளாகவும் போற்றப் படுகின்றான்.  ஏறத்தாழத் தலமைத் தெய்வமாக வணங்கப்படும் இந்திரன் இருக்கு வேதத்தின் இடைப்பகுதியில் வந்து திடீரெனக் காணாமல் போய்விடுகிறான்.  இப்படி இந்திரன் புறக்கணிக்கப் படுவதற்கான காரணம் பெரும்புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் (அம்பேத்கர் சிந்தனைகள்-8) குறிப்பிடுவார்.  திடீரென மறைந்து விடுவது மட்டுமன்றி அகலிகை இந்திரன் தொடர்பின் வாயிலாக இந்திரனுடைய ஒழுக்கமும் சிதைக்கப் படுகிறது.  இதனால் இந்திரனுடைய புகழ் சிதைக்கப்படும் அதே நேரத்தில் வைதிக எதிர்ப்பை அடிப்படையாகவும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்தனை மரபைச் சார்ந்தனவாகவும் கருதப்படும் ஆசீவக, சைன, பெளத்த சமயங்கள் இந்திரனை அறிவு மரபின் மூல வடிவமாகப் போற்றுகின்றன.
 
தொல்காப்பியரும் இந்திரனையும் வருணனையும், மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்றுவார்.  தொல்காப்பியரால் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது மழைத்தெய்வமாக இந்திரனும், கடல் தெய்வமாக வருணனும் குறிக்கப் படுவதைப் போலவே இருக்குவேதமும் அவர்களைப் பற்றிக் குறித்துள்ளது.  இவை எல்லாவற்றையும் விட இருக்குவேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர்களாகவே (இருக்குவேதம் முதல் மண்டலம் 174-1:7-36:2) குறித்துள்ளதும் எண்ணத்தகும்.  இருக்குவேதத்தில் குறிக்கப்படும் அசுரர்கள் வைதிக எதிர்ப்பாளர்கள் என்பதை அறிஞர்கள் (தருமானந்த கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா) உறுதி செய்துள்ளனர்.  எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ் மக்களின் நிலத் தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் இருக்கு வேதம் அப்படியே தழுவி அதே பொருளில் அமைத்துக்கொண்டது என்பது உறுதியாகிறது.
 
ஆறு பருவங்கள்: தமிழ் மரபில் பன்னிரு மாதங்கள் கொண்டது ஓராண்டாகும்.  இதனை இரண்டு இரண்டு மாதங்கள் கொண்ட ஆறு பருவங்களாக வகைப்படுத்துவார் தொல்காப்பியர். இருக்கு வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்ட ஆண்டு முறை ஒன்றும், பனிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரு வகைகள் குறிக்கப் பட்டுள்ளன.  இவற்றுள் பன்னிரு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டு முறை தமிழர்களிடமிருந்து இருக்குவேதம் கடன் கொண்டது என்பதை இருக்குவேத ஆராய்ச்சியாளராகிய கிராபித் (Graffith) உறுதி செய்துள்ளார்.  இருக்கு வேதத்தில்குறிக்கப்படும் விஷ்ணு, பூசன் ஆகிய புகழ் மிக்க கடவுள்களின் பெயர்கள் யாவும் தமிழ் வேர்ச்சொல் அடியாகப் பிறந்தவை என்பதைச் சொல்லியல் அறிஞர்கள் எமனோவும் பர்ரோவும் விளக்கியுள்ளனர்.  இருக்கு வேதத்தில் பொருள் தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினி கோத்திரம் தாத்தாசாரியர் (An Introduction to Rig Vedi Studies) தெளிவு படுத்தியுள்ளார்.
 
இவ்வாறு பல்வேறு சான்றுகளைக் கொண்டு காணும்போது இருக்குவேதம் தமிழியற்சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும்.  இக்கருத்தினை, ‘தமிழுக்கும் இருக்கு வேதத்திற்கும் இடையே காணப்படும் நெருக்கத்திற்கான காரணம் ஏதோ தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை என்று யாரும் கருதிவிடக் கூடாது.  தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள் தாம் மாறுவேடம் அணிந்தோ, அல்லது முகமூடி போட்டுக்கொண்டோ இருக்குவேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படையான சான்றுகளைக் கொண்டுள்ளோம். சமற்கிருத மொழியும் அதன் இலக்கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை.  இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி (mixed language)  தோற்றம் கொண்டது.  அதைத் தான் நாம் இப்போது சமற்கிருதம் என்று அழைக்கின்றோம்.  இந்த மொழியில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களே’ என வரையறை செய்வார் எம். சுந்தர்ராஜ்.
 
இருக்கு வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக்கான காரணம் அது தென்னாட்டில் தொகுக்கப் பட்டது மட்டுமல்ல.  தொல்காப்பியர் விளக்கிக் காட்டிய தமிழ் எழுத்து முறையில் அது தொகுக்கப் பட்டதே ஆகும்.  ஓர் இனத்தின் எழுத்து முறையைக் கடன்பெறும் இனம், எழுத்தை மட்டுமல்லாது அவ் எழுத்துமுறைக்கு உரிய பண்பாட்டுக்கூறுகளையும் கடன்பெறுவது இயல்பு.  ஜப்பானியப் பண்பாட்டில் தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் மிகுதியாக இருப்பதற்கான காரணமும், ஜப்பானிய எழுத்துமுறை, தமிழ் எழுத்துமுறையைப் பின்பற்றி அமைந்ததால் தான் என்பதையும் இங்கே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
 
தொல்காப்பியத்தின் பழமை;  இருக்குவேதம் முதன்முதலாகத் தென்னாட்டில் எழுத்துவடிவில் தொகுக்கப் பட்டதுடன் குறிப்புரைகளும் எழுதப் பட்டன எனவும், அக்காலம் கி.மு. 14 ஆம் நூற்றாண்டு எனவும் டி.டி. கோசாம்பி கூறுவதாலும் இருக்கு வேதம், தொல்காப்பியர் கூறும் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக்கூறுகளைத் தழுவி அமைந்துள்ளதாலும், இருக்குவேதம் தொகுக்கப் பட்ட அதாவது தொல்காப்பியர் விளக்கிய எழுத்துமுறையை வேதமொழிக்கு உரிய வகையில் வடிவமைத்து, அதனடிப்படையில் வேதத்தை எழுத்து வடிவில் கொண்டுவரக் கொஞ்சம் கால இடைவெளி தேவைப்பட்டிருக்கும்.  எனவே தொல்காப்பியம் இருக்கு வேதத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.
 
தொல்காப்பியர் குறிப்பிடும் வழிபாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி எனும் மூன்றும் தந்திர வழிபாட்டுக்கு உரியன என்பதையும், அவை முறையே சிந்து வெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற லதா சாதனம் (லதா=கொடி, சாதனம்=நிலை) இலிங்கம், பகயாகம் எனும் சகம்பர் (ஆறுவகைச் செல்வங்களை வழங்கும் தந்திரச் சடங்கு) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன். சிந்துவெளி எழுத்துமுறை பற்றி ஆராய்ந்த உருசிய நாட்டு அறிஞர்கள், அவ்வெழுத்து முறை தொல்காப்பியம் காட்டும் இலக்கண அமைதியோடு மட்டுமே பொருந்துகிறது என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்தனர். (The Hindu 15.4.80)
 
கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் பிராமணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங்கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின.  இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப் புரட்சி தோன்றியது.  அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடு முழுதும் கொண்டு சென்றது.  அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டினை நிறுவியர் கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய ஐந்திர மரபிலிருந்து கிளைத்தது.  வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும் எண்ணியத்தின் அடிப்படை.  இவ் எண்ணியம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் ஆசீவகத்தோடு இணைந்தது.  அதனால் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலோ, அல்லது அதற்குப் பின்போ தொல்காப்பியம் இயற்றப் பட்டிருக்குமானால் எண்ணியத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும்.  ஆனால் அப்படி ஒரு சுவடே இல்லை.
 
எனவே மெய்யியல், பண்பாட்டியல் தருக்கவியல், எழுத்தியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது உலகமொழிகளில் உள்ள எழுதப் பெற்ற நூல்கள் அனைத்திற்கும் தொல்காப்பியமே முந்தியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை; உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.
 
(மேலும் அறியத் தொல்காப்பியம்-திருக்குறள் காலமும் கருத்தும் எனும் நூலினைக் காண்க.)

 
2011/5/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

coral shree

unread,
May 31, 2011, 8:54:13 AM5/31/11
to mint...@googlegroups.com
பகிர்விற்கு நன்றி சுபா. தட்டச்சு செய்த கீதாவிற்கும் நன்றி உரித்தாகுக.

2011/5/31 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

prakash sugumaran

unread,
Jun 1, 2011, 8:46:29 AM6/1/11
to mint...@googlegroups.com

மகிழ்ச்சி இருக்கும். ஆனால், ஆராய்ச்சி அல்ல.

உ-ம்: புள்ளி பற்றி உள்ளது. புள்ளி ஏற்பட்டது
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில். இருக்குக்கு
1000 ஆண்டு பின்.
 
ஐயா நீண்ட நாள் சந்தேகம், புள்ளி பிந்தைய காலகட்டத்தில் உருவாக்கபட்டு இருந்தால் தமிழ் மொழியில் ழ் எழுத்தின் பயன்பாடு எப்போதிருந்து துவங்கியது.

2011/5/27 N. Ganesan <naa.g...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran
Reply all
Reply to author
Forward
0 new messages