நன்றி: தீக்கதிர் -மார்ச் 16, 2026
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!
அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது தடை விதிக்க கோரி, உலகளாவிய மதச்சார்பற்ற சுதந்திர அமைப்பான USCIRF ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
உலகளாவிய மதச்சார்பற்ற சுதந்திர உரிமைகளை கண்காணித்து, வெள்ளை மாளிகைக்கு கொள்கை பரிந்துரைகள் வழங்கும் அமெரிக்க அரசின் சுயாதீன அமைப்பு USCIRF.
கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட இந்தியா தொடர்பான குறிப்பில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையிலான நெருக்கமான தொடர்பு, குடியுரிமைச் சட்டம், மதமாற்றத் தடைக் சட்டங்கள் மற்றும் மாட்டுக்கறி தொடர்பான சட்டங்கள் போன்ற பல்வேறு பாகுபாடான சட்டங்களை உருவாக்கவும் அமல்படுத்தவும் வழிவகுக்கிறது என்று ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
2026 ஆண்டு அறிக்கையில், இந்தியாவின் வெளிநாட்டு உளவு (RAW) மீதும் மதச்சார்பற்ற சுதந்திர மீறல்களை பொறுத்துக் கொண்டதாகக் கூறி தடைகள் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், மதச்சார்பற்ற சுதந்திரத்தை முறையாகவும் தொடர்ந்து மீறி வருகிறது என்ற காரணத்தால், இந்தியாவை “குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு” (Country of Particular Concern) என அறிவிக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. USCIRF இவ்வாறு பரிந்துரைப்பது இது ஏழாவது முறை. இந்த அறிக்கைக்கு இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை.
“மதச்சார்பற்ற சுதந்திரம் தொடர்ந்து மோசமடைகிறது”
2026 ஆண்டு அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மதச்சார்பற்ற சுதந்திர நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததாகவும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு தலங்களையும் குறிவைக்கும் புதிய சட்டங்களை அரசு கொண்டு வந்து அமல்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அதிகாரிகள் பல குடிமக்களையும் மத அகதிகளையும் பெருமளவில் கைது செய்து சட்டவிரோதமாக வெளியேற்றியதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டத் தாக்குதல்களை அனுமதித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
மேலும், மத சிறுபான்மையினரையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் சிறையில் அடைக்க ஒன்றிய அரசு தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் குறிபஉமர் காலித் உள்ளிட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட பலர், விசாரணை தொடங்காமல் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2025 முழுவதும் பல மாநிலங்களில் இந்து தேசியவாதக் கூட்டங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தொந்தரவு செய்து, வன்முறைக்கு தூண்டி தாக்குதல்கள் நடத்தியதாகவும், மாட்டுக்கறி தொடர்பான மாநில சட்டங்களை பாதுகாப்பது என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
அதேபோல், இந்தியாவின் 12 மாநிலங்களில் மதமாற்றத் தடைக் சட்டங்கள் உள்ளதாகவும், 2025 இல் பல மாநிலங்கள் “மதமாற்றம்” என்ற சொல்லின் வரையறையை விரிவுபடுத்தி கடுமையான தண்டனைகளுடன் புதிய சட்டங்களை கொண்டு வந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------------------
Secularism in the Indian Constitution guarantees that the state treats all religions with equal respect, maintaining neutrality without an official state religion. Explicitly added to the Preamble by the 42nd Amendment (1976), it is a foundational "basic structure" feature, ensuring separation of state and religion, individual freedom of conscience, and non-discrimination.