இன்று தமிழ்த்தென்றல் திரு.வி.க'வின் பிறந்தநாள் :)

1,191 views
Skip to first unread message

Maayon TS

unread,
Aug 26, 2016, 8:53:25 AM8/26/16
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


26-08-1883:
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க. அவர்களின் பிறந்தநாள்;
அவரைப்பற்றிய மற்றும் அவர் உதிர்த்த சில பொன்மொழிகளும் தகவல்களும்-

---பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும். பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் , தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.

---தமிழர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் கீழ்காண்டவைகளை உடைத்தெறிய வேண்டும் எனப் பட்டியலிடுகிறார் திரு.வி.க. :

1. பல கலைகளையும், பயிலுங்கள்; வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுவதை விட்டோழியுங்கள்.
2. ஆடல் - பாடல் - சிலம்பாட்டம் - வீர விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்துங்கள்.
3. வகுப்பு பிணக்குகளிலும், பிற்போக்குத் தனத்திலும் மூழ்கியிருக்காதீர்கள்.
4. கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியுங்கள்.
5. பொறாமை, தன்னலம், வீண் பிடிவாதம் ஒழியுங்கள்.
6. கால மாற்றத்திற்கு ஏற்பவும,; நல்லவைகளுக்காவும் மாறாதிருக்காதீர்கள்.

---சென்னையில் மகாசன சங்கம் தோன்றியது. அதன் தஞ்சை மாநாட்டில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொணர்ந்தார். இந்த மொழிப் புரட்சி காரணமாக அவரைப் புரட்சி வீரர் எனப் புகழ்ந்தனர்.

---'அரசியல் விடுதலையோடு பொருளாதார விடுதலையும் இணைந்த பிறகே முழு விடுதலை மலரும்' என்பது திரு.வி.கவின் நம்பிக்கை. 

---"வாக்களிப்பதை நல்வழியில் செலுத்த வேண்டும். அது மக்கள் கடமை. வேறு வழியில் செலுத்தப்படின் சனநாயகம் போலியாகிவிடும், நச்சுத் தீப் பரவி, நாட்டை எரித்துவிடும். முழு விடுதலைக்குப் பலப்பல இயல்புகள் தேவை. நமது நாட்டில் சாதி மத வெறிகளும், பணம், தயைதாட்சண்யம் முதலிய மாயைகளும் வாக்காய் பரிணமித்துச் சட்டசபைகளாதல் வெள்ளிடமலை. போதிய கல்வியறிவு, அரசியல் ஞானம் முதலியன வாய்க்கப் பெறாத மக்கள் வாக்கு, எங்ஙனம் உரிமையுணர்வினின்றும் எழும்? வாக்காளர்கள் மனோநிலை சீர்பட, ஆங்காங்கே அரசியற் பள்ளிகள் அமைத்து மக்களுக்கு போதனை செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டசபைகளில் தேள், பாம்பு, கரடி, புலி முதலியன உலவுதல் நேரும்' என்றார் திரு.வி.க. இன்று நடப்பதை அன்றே கணித்தவர்! தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தீர்க்க தரிசனம் தான் என்னே?!

---திரு.வி.க. இனிய தமிழில் பேசினார், எழுதினார். அவருடைய தமிழ் நடை தென்றலைப் போல் மென்மையாக இருந்தது. ஆதலால் அவருக்குத் ' தமிழ்த் தென்றல்' என்றும் பட்டம் வழங்கப்பட்டது.

---தமிழ்நாட்டில் உரைநடையை படிக்காத பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தான் நடத்திய பத்திரிக்கைகளில் தலைப்புகள் சிறுமையாக வைத்து ஆனால் அதில் நுண்ணிய பொருளும் விமர்சனத் தன்மையையும் வைத்தவர். இவர் ஆரம்பித்த தேசபக்தன் என்னும் நூலில் தனித்தமிழ் சொற்களையே பயன்படுத்தினார்.அரசியல் சார்ந்த சொற்களை தமிழ்ப்படுத்தி, எளிமையான நடையிலே எழுதுகின்றேன். தொழிலாளரையும் என்எழுத்து சென்று சேர வேண்டும்’ என்றெல்லாம் பேசியும் எழுதியும்வந்தவர் அவர். 


--- எளிமையின் உருவமாகத் திகழ்ந்தவர். சொந்தவீடு கிடையாது. செருப்புகூட அணியமாட்டார். எளிய, தூய கதராடையே உடுத்துவார். ‘திரு.வி.க. தமிழ்’ என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தவர்.

---புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். ‘தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’ என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.
10603721_1520768878141742_6440385266506789640_n.jpg

N. Ganesan

unread,
Aug 26, 2016, 9:35:26 AM8/26/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, மு இளங்கோவன்


On Friday, August 26, 2016 at 5:53:25 AM UTC-7, Maayon TS wrote:


26-08-1883:
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க. அவர்களின் பிறந்தநாள்;
அவரைப்பற்றிய மற்றும் அவர் உதிர்த்த சில பொன்மொழிகளும் தகவல்களும்-

தகவல்கள் நிறைந்த கட்டுரை. இன்னொன்று: http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25249-2013-10-22-06-42-26
இன்றைய இளைஞர் பலரும் திரு.வி.க கட்டுரைகளைப் படிக்க வேண்டும். த.ம.அ. நூலகத்தில் பல நூல்கள் உள.

திரு. வி. க. நூல்கள், கட்டுரைகள், பாரதி, பாரதிதாசன், .... என முக்கிய எழுத்தாளர்கள் படைப்புகளையே இணையத்தில்
ஏற்றாமல் தமிழ்நாட்டு அரசு இருக்கிறதே.

பேரா. மு. இளங்கோவன் மேலப்பாதி கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் திரு.வி.க. பெயரில் நூலகம் நடத்துவதை எழுதியுள்ளார்,
தமிழர்கள் பலரும் மறந்துவிட்ட திரு.வி.க. இன்றும் மேலப்பாதியில் தமிழாக வாழ்கிறார்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 26, 2016, 9:42:14 AM8/26/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, muela...@gmail.com, housto...@googlegroups.com, Santhavasantham
மரபு விக்கியில் திரு. வி.க. என்னும் கட்டுரை.

பூர்த்தியாக இக் கட்டுரை: திண்ணை இணைய இதழ்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க

ஹாங்காங் இலக்கிய வட்டம், அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1

தமிழ்த் தென்றல் திரு.வி.க.

ப குருநாதன்

(2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் திரு. ப.குருநாதன் பேசியதின் சுருக்கம்.)

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும்போது ‘Ideas that Moved the World’ என்ற ஒரு அருமையான ஆங்கில நூலைப் படிக்கின்ற வாய்ப்பினைப் பெற்றேன். கடந்த பல நூற்றாண்டுகளில் தம்தம் மெய்ஞான தத்துவங்களாலும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளாலும் இப்பூவுலகை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்ற பெரிய மேதைகளைப் பற்றிய புத்தகமது. அதன்பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்னால், கடந்த 20-ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய, கொடை நல்கிய மிகப் பெரிய மேதைகளைப் பற்றிய ஒரு கட்டுரையையும் வாசிக்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. இந்த மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் சற்று கூர்ந்து நோக்கி ஒப்பிட்டால், அவர்கள் எல்லாம் தங்களின் உள்ளத்தின் உந்துதலினாலும், சுய முயற்சியாலும், எண்ணற்ற இடர்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே, இந்த உலகம் உயர்வுற உழைத்தவர்கள்; பங்களித்தவர்கள் என்பது தெளிவாகும். இதில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு எந்த ஒரு அரசோ அல்லது ஒரு அரசு சார்ந்த அமைப்போ அல்லது ஒரு நிறுவனமோ எந்த உதவியும் செய்யவில்லை; அவர்களுக்கு ஓரளவேனும் துணை நிற்கவில்லை என்பதும் புலப்படும். மாறாக, அந்த மேதைகளுக்குக் கிடைத்தெல்லாம் தொல்லைகளும் இடையூறுகளும் மட்டுமே.

அதுபோலவே, கடந்த 200 வருடங்களில் தமிழ்நாட்டில் தமிழ் வாழ்ந்தது, வளர்ந்தது, செழித்தது, செப்பமடைந்தது என்றால் அதற்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் தனி மனிதர்களே. அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளும் இன்னல்களும் எதிர்ப்பும் ஏமாற்றங்களும் ஏராளம். அவர்கள் எதிர்கொண்ட ஏளனமும் மிகவும் தாராளம். அவர்களுக்கும் ஒர் அரசோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, மற்ற நிறுவனங்களோ பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. சமயம் சார்ந்த தமிழ் ஒருசில சமைய அமைப்புகளின் உதவியினால் ஓரளவு வளர்ந்தது, வாழ்ந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ் ஓங்க ஓய்வின்றி உழைத்தப் பெரியோர்களே, நண்பர் திரு. மு. இராமனாதன் ஹாங்காங் இலக்கிய வட்ட உறுபினர்களுக்கு அனுபிய மின்னஞ்சலில் காணப்படுபவர்கள். தன்முனைப்பு, தன்முயற்சி, தன்னார்வம், தன்நிதி, தன்உழைப்பு மட்டுமே துணையாய்க் கொண்டு தமிழ் வாழ, வளர, தளராது உழைத்துச் சாதித்த பெருமைக்குரிய பெரியோர்கள் அவர்கள். எந்த நிறுவனத்தின் துணையுமின்றி, தங்கள் பங்களிப்பால், தங்கள் செயல்களால், தங்கள் தொண்டால், தங்கள் படைப்பால் தாங்களே ஒரு நிறுவனாமாகிப் (institution) போந்த பெரியோர்களே அவர்கள்.

அவர்களின் பெயர்ப் பட்டியலில், ஒவ்வொருவரின் பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருந்த, அவரவர் தோன்றி மறைந்த ஆண்டுகள், அவரவர் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பன. சாதாரணமானவர்களுக்கு அவர்களின் தோற்றமும் மறைவும் வெறும் வாழ்க்கைக் குறிப்பு. ஆனால், இப்பெரியோர்கள் வாழ்ந்தது வெறும் வாழ்க்கையல்ல. அவர்களின் தோற்றமும் மறைவும் வெறும் வாழ்க்கைக்குறிப்புகளும் அல்ல. அவைகள் எல்லாம் வரலாறுகள்! எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது தன் மொழியை, தன் மக்களை, தன் கலையை அல்லது தன் கலாச்சாரத்தை தன் தோளிலேற்றிச் சற்றாவது உயர்த்துகிறானோ அல்லது உயர்த்த உண்மையிலேயே எத்தனிக்கின்றானோ, அவன் வாழ்க்கை வரலாறு ஆகிறது. அத்தகைய வரலாறு படைத்த இப்பெரியோர்கள் தமிழகத்தில் அதிகம் கற்றோராலேயே கூடப் பெரிதும் பேசப்படாதிருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு., தமிழர்களின் வெட்கக்கேடு. பகட்டுக்கும், பசப்பிற்கும், பாசாங்கிற்கும் தமிழன் பறிபோவதும், பலியாவதும் அவன் தலையெழுத்தோ என்று கூட சில சமயம் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

வங்காளத்தில் தாகூரைப் பற்றித் தெரியாதவர்கள், கேரளத்தில் வள்ளத்தோளை அறியாதவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், தமிழகத்தில் பாரதியைப் பற்றி சரியாக அறியாதவர்கள், அவர் பாடல்களில் ஒன்றைக் கூட முழுதும் படிக்காதவர்கள் அதிகம்! திருவள்ளுவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள், ஒரு திருக்குறளாவது முழுமையாகத் தெரியாதவர்கள் மிக அதிகம்! நான் சொல்வது மெத்தப் படித்தவர்களையும் சேர்த்துத்தான்! இந்நிலையில், இந்தப் பட்டியலிலேக் காணப்படும் தமிழ்ப் பெரியோர்கள் பெரும்பாலோர் அதிகம் அறியப்படாமல் அல்லது பேசப்படாமல் இருப்பதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?

ஆனால், பட்டியலில் காணப்படும் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் மாரியை ஒத்தவர்கள். பயன் கருதாது, தன்னலமின்றி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு, காரியமே கண்ணாகி இருந்து, தமிழ்த் தொண்டு செய்தவர்கள்; அரும் படைப்புகளைத் தந்தவர்கள். பிற்காலத்திலே நாம் பேசப்படப் போகின்றோம், பாராட்டப்படப் போகின்றோம் என்றெல்லாம் கருதியொன்றும் அவர்கள் தங்கள் செயற்கரிய செயல்களை ஆற்றவில்லை. நம் இலக்கிய வட்டம் அவர்களில் ஒரு சிலரைப் பற்றியாவது ஓரளவாவது பேச, சிந்திக்க ஏற்பாடு செய்தமைக்கு வட்ட அமைப்பாளர்களுக்கும், அதற்கு மூலகாரணமாய் இருந்த நண்பர் திரு. ராஜேஷ் ஜெயராமன் அவர்களுக்கும் நாம் மிகவும் நன்றி பாராட்டக் கடப்பாடு உற்றவர்கள் ஆனோம். இந்தப் பெரியோர்களைப் பற்றி பேசி, இன்று நம் இலக்கிய வட்டம் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொண்டுள்ளது, உயர்த்திக்கொண்டுள்ளது என்றால் அது எந்தவிதத்திலும் மிகையாகாது.

அடுத்தது, இப்பெரியோர்களைப் பற்றிப் பேசி, அறிந்துகொள்வதால் என்ன பயன், என்ன நன்மை என்ற வினா எழக் கூடும். மூதுரையின்படி நல்லோரைப் பற்றி பேசுவதும், நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று என்று சொல்லலாம். அல்லது, திருக்குறள் வழி நின்று, பெரியோரைத் துணைக்கோடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை நாம் பட்டியலிடலாம். ஆனால், உண்மையில் இந்தத் தமிழிப் பெரியோர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதால், அவர்கள் ஆற்றியத் தொண்டைப் பற்றியும், அவர்களின் படைப்புகளைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய செயற்கரிய செயல்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதால், ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய எழுச்சியும், நாமும் சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் உறுதியும் நம்முள் மிகும். நம்மை நாமே உள்நோக்கிப் பரிசோதித்துக்கொள்ள ஒரு உந்துதல் நமக்குக் கிடைக்கும். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும். இங்கே நாம் பேசுவதெல்லாம் வெறும் பேச்சாக, பொழுதுபோக்காக இருந்துவிடக்கூடாது என்பதுவே என் அவா மற்றும் வேண்டுதல்.

இந்தப் பெரியோர்களிலும், தனக்கே உரிய தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையப் பெருந்தகைதான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரும் பாரதியைப்போல் ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர். பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தேசபக்தர், தேசத்தொண்டர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், வணிகக் கணக்காளர், வள்ளலாரைப்போல் சமரச சன்மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர், இயற்கை உபாசகர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக் குரல் கொடுத்து, உழைத்து, சாதித்தும் காட்டியவர். தான் வாழ்ந்த காலத்தில், வசதியின்றி இருந்தாலும், வறுமையிலே உழன்றாலும், தன் புலமைக்காவும், நாவன்மைக்காகவும், தொண்டிற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர்.

****


இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன், திரு.வி.க-விற்குப் பின் என்று நாம் பிரித்துவிடலாம். அயல்மொழிகளின் நெடி வீச, நெடிய சொற்றொடர்களில், கடினமான, புரியாத, பண்டிதச் சொற்களைக் கொண்டு, உரைநடை எழுதப்பட்டு வந்தபோது, எளிய, இனிய தமிழ்ச் சொற்களைக்கொண்டு, சிறு சிறு சொற்றொடர்களை உருவாக்கி, அரிய பெரியக் கருத்துக்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிக் காட்டியவர் திரு.வி.க. பாரதியைப் பற்றிப் பேசும்போது, கவிதையைத் தேனாய், பாலாய், பாகாய், அமுதாய்க் கருதி வந்தக் காலத்தில், அதை மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவையான குடிநீராய் ஆக்கியவன் என்று சொல்வார்கள். அதுபோலவே, திரு.வி.க தமிழ் உரைநடையைத் தூய, தெளிந்த, குளிர்ந்த, சுவையான குடிநீராய் ஆக்கிக் காட்டியவர் என்பது ஒரு பேருண்மை. தமிழ் மணம் கமழ அவர் உருவாக்கியச் சொற்றொடர்கள், குறியீடுகள், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் மொழிநடை பத்திரிக்கைத் துறையிலும், மற்ற துறைகளிலும் பின்பு பலராலும் பின்பற்றப்பட்டது. கண்ணதாசன், கல்கி போன்றவர்கள் ‘திரு.வி.க-வின் உரைநடைப் பாங்கை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்,’ என்று அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர்.

எழுத்தாளர் வ.ரா. எழுதினார்: ‘தூய தமிழின் இன்னிசை ஒலியைக் கேட்டு ரசிக்கும் எண்ணம் கொண்டவர்கள், திரு.வி.க நடத்தி வந்த ‘தேசபக்தன்’ இதழின் பழைய படிகளைக் கண்டெடுத்துப் படிப்பார்களேயானால், மனப்பூரிப்பு அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழில் உரைநடையில் ஒலியழகு, பொருளழகு, வர்ணனை அழகு உண்டோ என்பவர்கள் அவரின் எழுத்தைப் படித்தால் தெளிவார்கள்.’

திரு.வி.க சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். கல்யாணசுந்தரம் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்டார். மூதாதையர்களின் ஊரான திருவாரூரின் நினைவாக ‘திருவாரூர்’ அவர் பெயரில் இணைக்கப்பட்டது. எனவே, அவர் முழுப் பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம். சுருக்கமாக, ‘திரு.வி.க.’ அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட ‘திரு’ ஒரு அடைமொழியோ, விளிமொழியோ அல்லது அணிமொழியோ அல்ல. அது ஒரு வெறும் அடையாளமொழிதான். இருப்பினும், அவரிடம் இயற்கையிலே அமைந்திருந்தப் பேரறிவு என்னும் திருவாலும், அதைவிட மேலாக அவரிடமிருந்த மனிதநேயம் என்னும் பெரும் திருவாலும் அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட ‘திரு’ திருவடைந்தது., பெருமைக்குரியதாகியது. திருவள்ளுவரைப்போல!

திண்ணைப் பாடமாக ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமே கற்றார். கற்றது அரிச்சுவடி முதல் ஓரளவு ஆங்கிலம்வரை. பின்பு, சென்னை இராயப்பேட்டை ஆரியன் பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்புத் தொடங்கி, வெஸ்லி கல்விச்சாலையில் நான்காம் படிவம் வரைப் படித்தார். படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றார். உடல் பருமன் குறைய உட்கொண்ட ஒரு நாட்டு மருந்து, பத்திய முறிவின் காரணமாக ஒத்துக்கொள்ளாமல் போய், முடக்கு நோய்க்கு ஆளாகினார். அதனால், பள்ளிப் படிப்பு பாதியில் கெட்டது. புகழ் பெற்ற அயோத்திதாசப் பண்டிதரிடம் சித்த வைத்தியச் சிகிச்சைப் பெற்று, இரண்டாண்டுகளில் படிப்படியாகக் குணமானார். இதற்கிடையில், குடும்பமும் வறுமைக்கு ஆளானது; பெற்றோரும் நோய் வாய்ப்பட்டனர்.

நான்காண்டு இடைவெளிக்குப் பின் உடல் தேறிய திரு.வி.க மீண்டும் வெஸ்லி பள்ளியில் நான்காம் படிவத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். தன் அறிவாலும் திறமையாலும் மீண்டும் படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். அவர் ஐந்தாம் படிவம் படிக்கும்போது அவரின் தமிழாசிரியாரக இருந்தவர் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளை. பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, திரு.வி.க-விற்கு ஏனோ படிப்பில் ஆர்வம் குன்றத் தொடங்கியது. மேலும், ஒரு தேர்வு நாளன்று, தான் பெருமதிப்பு வைத்திருந்த கதிரைவேல் பிள்ளைமேல் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சான்று கூறச் சென்றதால், தேர்வு எழுதமுடியாமல் போய், படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கிய திரு.வி.க, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்றார். அதனால் மனம் விரக்தி அடைந்து, சிலகாலம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். பின், உறவினர் ஒருவரின் வற்புறுத்தலால், வணிகப் பள்ளியில் சேர்ந்து, வணிகக் கணக்கியல் பயின்று தேறினார்.

ஆரம்பத்தில் தன் தந்தையிடமும் அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க, பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர். ஓவியத்திலும் இசையிலும் கூட அவருக்கு ஆர்வம் இருந்தது. அக்கலைகளைப் பற்றிய ஆய்ந்த, நுட்பமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் அளவிற்கு அந்த ஆர்வம் அவரிடமிருந்தது. இயற்கை அழகை ஆராதிக்கின்ற மனப்பாங்கு அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.

இடையில் குடும்பத்தில் ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியினால், சென்னை ஸ்பென்சர் நிறுவனத்தில் அட்டவணைப் பிரிவில் திரு.வி.க பணியில் அமர்ந்தார். ஓய்வு நேரங்களில் படிக்கவும் எழுதவும் செய்தார். அப்போது அவருக்கு நாட்டின் விடுதலைப் போரில், அதன் ஒரு அங்கமான சுதேசி இயக்கத்தில் ஆர்வம் பிறந்து மிகுந்தது. சென்னைக் கடற்கரையில் விபின்சந்திரபாலர் ஆற்றிய, மிகவும் புகழ்பெற்ற சொற்பொழிவு அவரை மிகவும் உலுக்கியது. கல்கத்தாவிலிருந்து அரவிந்தரின் ‘வந்தேமாதரம்’ பத்திரிக்கையை வரவழைத்து, தானும் படித்து, தான் படித்த விடுதலை இயக்கச் செய்திகளை எல்லாம் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் அவர் எடுத்துச் சொல்லி வந்தார். இதைக் கண்டு எரிச்சலுற்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஸ்பென்சர் நிறுவனத்தின் நிர்வாகம், அவரைக் கூப்பிட்டு எச்சரித்தது. அதனால் வெகுண்டு, தன் பணியைத் துறந்து வெளியேறினார். பின்னர், தன் தமையனாருடன் சேர்ந்து ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கினார். அங்கேதான் முதலில் ‘திருமந்திரம்’ பதிப்பிக்கப்பட்டது. அதன்பின், அவரின் சிறப்புக் குறிப்புகளுடன் ‘பெரியபுராண’மும் அங்கே வெளியிடப்பட்டது. இருப்பினும், ஏற்பட்டப் பொருள் இழப்பினால், இரண்டு ஆண்டுகளில் அந்த அச்சுக்கூடம் மூடப்பட்டது.

பின்னர், தான் படித்த வெஸ்லியன் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக திரு.வி.க பணியில் சேர்ந்தார். அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த ஜான் இரத்தினம் மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவராக இருந்தார். திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து, தலைமையாசிரியர் அவரை வெகுவாக ஆதரித்தார். திரு.வி.க-வின் வருவாயைக் கூட்டும் பொருட்டே, ‘வெஸ்லியன் தொழிற்பயிற்சி நிலையம்’ என்று ஒன்றைத் தொடங்கி, அதில் திரு.வி.க-வை வணிகக் கணக்கியல் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியாராகவும் பணியமர்த்தினார். இந்த ஜான் இரத்தினத்தின் மூலம்தான் திரு.வி.க கிறித்துவ மதத்தின் நுட்பமான கோட்பாடுகளை எல்லாம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப்பின், தன் தகுதியால் திரு.வி.க பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். திருமனமே வேண்டாமென்றிருந்த திரு.வி.க-வை, திருமணத்திற்கு ஒப்புகொள்ள வைத்தவரும் இந்த ஜான் இரத்தினமே. பள்ளியில் தமிழ்ச் சங்கம் நிறுவி, சக ஆசிரியர்களின் ஊதிய மேம்பாட்டிற்கும் வசதிக்கும் உழைத்து, தன் பணியில் மிகவும் பரிமளித்த திரு.வி.க, ஒன்றைரை ஆண்டுகாலமே பள்ளிப் பணியில் இருந்தார்.

1912-ஆம் ஆண்டு, கமலாம்பிகை என்ற மாதரசியை மனைவியாகப் பெற்றார். தன் கணவனிடம் அந்தப் பெண் கேட்டது பொன்னும், மணியும், புடவையும், அழகு சாதனங்களும் அல்ல. கல்வியை மட்டுமே அவரிடம் கேட்டார். திரு.வி.க-வும் தன் மனைவிக்கு கல்வியையும் காப்பியங்களையும் கற்பித்து வந்தார். அவர்களின் இனிய திருமண வாழ்வின் அடையாளமாக, அவர்களுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து சில நாட்களிலும், பிறகு ஒரு பெண்பிள்ளை பிறந்து ஒராண்டிலும் இறந்தனர். 1918-ல் அவர் மனைவி எலும்புருக்கி நோய்க்கு ஆளாகி எமனுக்கு இரையானார். ஆறு ஆண்டுகளில், திரு.வி.க-வின் இல்வாழ்க்கை தொடங்கி முற்றும் முடிந்துவிட்டது. சுற்றமும் நட்பும் மிகவும் வற்புறுத்தியும், மறுமணம் செய்துகொள்ள திரு.வி.க மிகத் திண்ணமாக மறுத்துவிட்டார்.

மனைவியின் மறைவிற்குப் பிறகு, தான் பார்த்துவந்த தலைமைத் தமிழாசிரியர் பணியைத் துறந்து, பொதுத் தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார் திரு.வி.க. தன்மீது பெருத்த அன்பு வைத்திருந்த, குறுகிய காலத்திலேயே தன்னைப் பலவகையிலும் பண்படுத்திய தன் மனைவியின் நினைவாக, பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபடுவதென உறுதிபூண்டு செயலாற்றினார்.

அப்பொழுது திலகரும், அன்னிபெசண்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு நடத்திவந்த தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர் திரு.வி.க-வை வெகுவாக ஈர்த்தது. அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய ‘New India’ நாளிதழின் துணையாசிரியராக இருந்த சுப்பராய காமத் என்பவர் திரு.வி.க-வின் நெருங்கிய நண்பர். சுப்பராய காமத்தின் முயற்சியினால் தொடங்கப்பெற்ற ‘தேசபக்தன்’ நாளிதழில், திரு.வி.க ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினர். தமிழிப் பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய, ஒளி வீசும், தெளிவான, சுவையான, எளிதில் புரியும் உரைநடை வழக்கு பிறந்தது. பரலி.சு.நெல்லையப்பர், வெ.சாமிநாத சர்மா போன்றோர் அவரிடம் இந்தப் பத்திரிக்கையில் உதவியாசிரியர்களாகப் பணிபுரிந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் அனல் கக்கும் கருத்துக்களை, தேசபக்தியைத் தூண்டும் சிந்தனைகளை, தேசத் தலைவர்களின் எழுச்சி மிக்கப் பேச்சுக்களை எல்லாம் திரு.வி.க இந்தப் பத்திரிக்கையில் தனக்கேயுரிய, புத்தொளி வீசும், அழகியத் தமிழ்நடையில் எழுதினார். பின்னர், இதழின் உரிமையாளர் மாற, இதழின் அச்சுக்கூடம் அவருக்குத் தெரியாமல் அடமானம் வைக்கப்பட, மனம் வெறுப்படைந்த திரு.வி.க, இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் பத்திரிக்கைப் பொறுப்பைத் துறந்து, அதிலிருந்து வெளியேறினார். பின்னர், வ.வே.சு. ஐயரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துகொண்டிருந்த ‘தேசபக்தன்’ நாளிதழ், பின் வாரயிதழாக மாறி, அதன்பின் அடியோடு மறைந்தது.

திரு.வி.க-விடம் மிகவும் அன்பு பூண்டிருந்த ஒருசில தொழிலாளத் தோழர்கள் தாமாகவே முன்வந்து அளித்தப் பொருளுதவியைக் கொண்டு, 1920-இல் அவரால் ஒரு அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து, புகழ்பெற்ற ‘நவசக்தி’ வார இதழ் திரு.வி.க-வை ஆசிரியராகக்கொண்டு வெளிவரத் தொடங்கியது. அவ்விதழில், அரசியல் மட்டுமின்றி, பெண்கள் நலன், சமூகச்சீர்திருத்தம், மொழிச் சிறப்பு, கலையாக்கம், சன்மார்க்க நெறிகலந்த சமதர்மம் எனப் பொதுப்பகுதிகளும் இடம் பெற்றன. வன்மைக்கும், மென்மைக்கும் உள்ள வேற்றுமையே, தேசபக்தன் நாளிதழுக்கும், நவசக்தி வார இதழுக்கும் இருந்தது. இதழ் அடைந்த புகழாலும், பெற்ற வரவேற்பாலும், ஈ.வெ.ரா. பெரியாரின் ஆலோசனை மற்றும் நிதியுதவியாலும், வாரப்பதிப்பாக வந்துகொண்டிருந்த நவசக்தி, கூடுதலாக மாதம் மும்முறைப் பதிப்பாகவும் 1923-ல் வரத்தொடங்கியது.

கல்கி நவசக்தியில் அப்பொழுது துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். திரு.வி.க விடம் மிகுந்த பக்தியும், பேரன்பும் பூண்டிருந்தார். திரு.வி.க-வும் கல்கியிடம் பேரன்பு கொண்டிருந்தார். கல்கியைப் பற்றி தன் நூல்களில் குறிப்பிடும் போதெல்லாம், ‘தம்பி’ என்றே அன்போடு விளித்து திரு.வி.க குறிப்பிடுகின்றார். 1939-ல் அறிவிக்கப்பட்ட போர்கால அவசரச் சட்டங்களினால், பல பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. நவசக்தியும் அம்முடக்கலுக்கு ஆளாகியது. 1941-ல் தான் பார்த்துவந்த ஆசிரியர் பொறுப்பை மற்றொருவரிடம் விட்டுவிட்டு, பத்திரிக்கையை விட்டு விலகி, திரு.வி.க, முழுநேர சமரச சன்மார்க்கத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார். தேசப்பக்தியைத் தூண்டுவதற்கு பாரதிக்கு இருந்தது அவரின் கவிதையும் பாட்டும். நம் திரு.வி.க-விற்கு இருந்ததோ, அவருடைய தெளிந்த, எளிய, அழகிய, எழுச்சியூட்டும் உரைநடை.

நாட்டுப்பற்று மிக்கவரான திரு.வி.க, தேசீய அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். காந்தியடிகளைச் சந்தித்து அவருடன் பழகியிருக்கிறார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படி, அவருடைய ஆங்கில உரைகள் சிலவற்றை தமிழில் திரு.வி.க மொழி பெயர்த்திருக்கிறார். திலகரைச் சந்த்தித்து அவருடனும் பழகியிருக்கிறார். பாரதியின் சமகாலத்தவர், ஆதலால் அவருடனும் பழகி, அவருடைய பாடல்களுக்கு ஒரு பெரிய ரசிகராக இருந்திருக்கிறார். வ.உ.சி, ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி முதலியோரின் நண்பராய் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினாரய் இருந்து, பல கூட்டங்களக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், மனிதநேயமும் மக்கள் நலனனும் அவரின் அரசியல் கொள்கைகளாக இருந்திருக்கின்றன. அவர் கூறினார்: ‘நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன். பொதுமக்களின் சுகவாழ்வு மட்டுமே எனது குறிக்கோள். என்னுடைய அரசியலும் அதுவே. யார் என் கருத்துக்கு, நோக்கத்திற்கு உடன்படுகிறார்களோ அவர் கட்சியே என் கட்சி.’ திரு.வி.க-வின் இத்தகைய அணுகுமுறைதான் எதிர்த்தரப்பிலிருந்த, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. ‘அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரைகளை அழகிய தமிழில் தீட்டியவர் நம் திரு.வி.க,’ என்று அறிஞர் அண்ணா உரிமையுடனும், பெருமையுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகையின் ஊனுடம்பு 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் மண்ணுலகைவிட்டு மறைந்தது. அவர் சுவாசித்தக் காற்று அன்று நின்றது. ஆனாலும், அவரிடமிருந்துப் பிறந்து, சுகமாக வீசிவந்த தென்றல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து இன்றும் வீசிவருகிறது – மற்ற காற்றலைகளுக்கு எப்படி வீசுவது, எப்படி வருடுவது, எப்படித் தீண்டுவது என்று நாளும் கற்றுத் தந்தபடியே!

1983-ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசாலும் மற்ற தமிழ் அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டது. கட்டிடங்களுக்கும், பாலங்களுக்கும், நகர்களுக்கும், பூங்காக்களுக்கும் அவர் பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வழக்கம் போல் எல்லாம் மறக்கப்பட்டன. நினைப்பதும் ஏத்துவதும், விழாவோடு விடைபெற்றன.

திரு.வி.க ஒரு தலைசிறந்த மேடைப் பேச்சாளர். மடைதிறந்த வெள்ளமென, உணர்ச்சியும், எழுச்சியும் எழுப்பும், கருத்தாழமுள்ள பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். அரசியல், சமயம், சமூகம் என்ற பல்வேறு தலைப்புகளில், பல இடங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் அவை. கட்டிப்போடுகின்ற பேச்சாற்றல் கொண்டவர் அவர். கேட்பாரைப் பிணிக்கும் தன்மையுடன், கேளாரையும் கேட்க விரும்ப வைக்கும் வகையினதாய், மாற்றாரையும் மயக்கி தன்வசம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தவை அவருடைய மேடைப் பேச்சுக்கள். அவருள் சுடர்விட்டுத் திகழ்ந்த உண்மை, நேர்மை, ஒழுக்கம், நியாயம், தியாகம், கனிவு, பனிவு, துணிவு அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் ஓளியும் உறமும் அளித்தன. அந்தக் காலத்தில் மேடைப் பேச்சில் ஒரு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாவையே மிகவும் கவர்ந்தப் பேச்சாளர் திரு.வி.க என்றால், அவருடையப் பேச்சாற்றலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

மொழிக் காவலராகவும் விளங்கிய அவர், ‘தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே’ என்று பொங்கி முழங்கிய அவர், தாய்மொழி வழிக் கல்வியையும், தமிழர்கள் பல மொழிகளைப் பயில வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். உலகில் பல மொழிகளில் இருக்கின்ற அறிவியல் மற்றும் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெரும் தொண்டாக இருக்கும் என்றும் அவர் கருதினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புதல் வேண்டும் என்பது அவரின் அவாவாக இருந்தது. சென்ற நூற்றாண்டில், தமிழ் மொழி வாழ, வளம் பெற உழைத்தவர்களில் திரு.வி.க-விற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.

வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப் பாடல்கள் என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார். ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை,’ ‘தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொலிவு,’ ‘முருகன் அல்லது அழகு,’ ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி,’ ‘வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்’ என்று இரண்டு, இரண்டு தலைப்புகளைத் தன் நூல்களுக்குத் தருவது அவரின் தனிச் சிறப்பு. அந்த நூல்களின் உட்பொருள் அந்த இரண்டு தலைப்புகளுக்குமே பொருத்தமாக இருப்பதை அந்த நூல்களைப் படிப்போர் காணலாம். அவர் எழுதிய நூல்களில் ‘முருகன் அல்லது அழகு’ மற்றும் ‘தமிழ்க்கலை’ என்ற அவரின் இரண்டு நூல்களை மட்டுமே நான் முழுதும் படித்திருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஓரளவிற்குப் படித்திருக்கின்றேன். எல்லாமே அருமையான நூல்கள். மேலும், மேலும் படிக்கத் தூண்டுவன அவை. ஒரு தாய் எப்படி தன் சிறு குழந்தைக்கு அருகில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வரிக்குவரி அந்தக் குழந்தைக்குப் படித்துக் காட்டுவாளோ அதுபோல, அவர் நூல்களைப் படிக்கும் போது அவரே நம் அருகிலிருந்து, நமக்கு அவர் எழுத்துக்களைப் படித்துக் காட்டுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பது என் அனுபவம். அவர் பார்வையில் இயற்கையே கடவுள். அக்கருத்தை மிக அழகா முன் வைக்கிறார் ‘முருகன் அல்லது அழகு’ என்ற நூலில். 1908-ல் தொடங்கி, 1953-ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து இந்த 56 நூல்களையும் ஒன்றின்பின் ஒன்றாக திரு.வி.க எழுதி வந்திருக்கிறார்.

தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றிலும் திரு.வி.க மிகவும் குறிப்பிடத்தக்கவர். முதற் தொழிற்சங்கத்தை 1918-ல் தமிழகத்தில் தொடங்கி, அதன்பின் தலைமைத் தொழிற்சங்கத்தை 1920-ல் அமைத்து, அதன் தலைவராகவும் இருந்து பரிமளித்தார். தன் தொண்டாலும் எழுத்தாலும் பேச்சாலும் முன்மாதிரி நன்னடத்தையாலும், தொழிலாளர்களிடையே விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்தி, அவர்களிடையே ஒற்றுமை, தோழமை மற்றும் தொண்டு மனப்பான்மையை வளர்த்து, அவர்களை வழிநடத்தி, அவர்களுக்காகத் தொடர்ந்து போராடி, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் அரும்பணியாற்றிப் பெரும் புகழ் அடைந்தவர் திரு.வி.க.

தன் மனைவி தன்னைவிட அறிவாளி என்று உண்மையாகவே கருதினார் திரு.வி.க. திருக்குறள் படித்தும் அதன்படி நடக்காத தன்னைவிட, அதைப் படிக்காமலேயே அதன் நெறியில் நின்ற தன் மனைவியை தன் நூல்களில் திரு.வி.க வியந்து பாராட்டுகிறார். தன் மனைவி தன்னை நல்வழிப்படுத்தியதற்கு தன் நூல்களில் அவர் நன்றி பாராட்டுகிறார். திரு.வி.க பெண்கள் நலனில் பெரிதும் அக்கறை செலுத்தினார். அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்தார். மாதர் நலச் சங்கங்கள், விதவைகள் நலச் சங்கங்கள் நிறுவுவதில் துணை நின்றார். சீர்திருத்தத் திருமணங்களை ஆதிரித்து எழுதி, பேசி, நடத்தியும் வைத்தார். மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கொண்டுவந்த தேவரடியார்கள் ஒழிப்புச் சட்ட முன்வடிவிற்குத் துணை நின்று, அவர் ஏற்பாடு செய்தக் கூட்டங்களில் பேசி, அதைப் பற்றி தன் பத்திரிக்கையில் விரிவாக எழுதி, அதற்குப் பேராதரவு ஈட்டித் தந்தார். பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பு தரப்படல் வேண்டும் என்று வாதாடி, போராடி, அதை வாங்கியும் தந்தவர்தான் திரு.வி.க.

மதம் மாறாமலே ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைச் சார்ந்தவரை மணக்கும் உரிமை வேண்டும் என்று எழுதினார் திரு.வி.க. ‘சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்’ என்று முழங்கி, இளைஞர்கள் சாதி ஒழிப்பில் ஈடுபட அறிவுரையும், வழிகாட்டலும் வழங்கிவந்தார்.

கல்விச் சீர்திருத்ததிற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் அவர். ‘கல்வி என்பது அறிவுடன் ஒன்றி வாழ்வில் கலப்பதாக இருத்தல் வேண்டும். கல்வியறிவின் பலன் அக ஒழுக்கம், புறத் தூய்மை ஆகும். நமது நாட்டு அற ஒழுக்கங்களையும், மேலை நாடுகளின் சுகாதார முறைகளையும் ஒன்றுபடுத்தி, இக்கால வாழ்வுக்கேற்ற ஒரு கல்வி முறையை வளர்த்துப் பயன்படுத்துதல் வேண்டும்,’ என்பது அவர் கருத்து.

ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுள் அடிக்கடி உள்முகப் பயணம் செய்து, தன்னைத்தானே சுய விமர்சனத்திற்கு ஆளாக்கிக்கொண்டு, பாம்பு சட்டையை உரித்துக்கொள்வதுபோல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார் திரு.வி.க. ஒரு சன்மார்க்கச் சமயவாதியாவகும் இருந்த அவர், ஒரு சமயத்தின் உண்மை இலக்கு ஒரு மனிதனை வீடுபேறு அடைவதற்கு ஆற்றுப்படுத்துவதல்ல. ஒரு சமயத்தின் தேவை சமுதாயத்தின் நலனுக்காக, பயனுக்காக என்றொரு நுட்பமானக் கருத்தையும் வலியுறுத்தி வந்தார். தனிமனித புற, அக ஒழுக்கத்தை தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உறுதியாகக் கடைப்பிடித்தவர் திரு.வி.க. எளிமையாக உடலோம்புதலையும் அவர் முறையாகப் பயின்று வந்தார். முறையாகப் படித்து, பத்தாவது வகுப்பைக் கூடத் தாண்டாத இப்பெருந்தகை, கல்லாத கல்வியில்லை, பட்டுப் பெறாதப் பட்டறிவும் இல்லை என்பதை அவருடைய எழுத்தும் பேச்சும் செயலும் விளக்கி நிற்கின்றன என்று அவரை ஆய்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டு வியக்கின்றனர்.

திரு.வி.க வெளிப்படையான, எந்தவிதப் பாசாங்கும் பகட்டும் இல்லாத, கள்ளமற்ற எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருடை வாழ்க்கைக்குறிப்பு இன்னொரு ‘சத்திய சோதனை’ என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். தொண்டாற்ற வசதி தேவையில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் எழுதினார்: ‘நான் ஒன்றுமில்லாதவன். வாடகை வீட்டில் வசிப்பவன். எனினும், என்னால் இயன்ற அளவு நாட்டுத் தொண்டு புரிகிறேன். செயல், தொண்டானால் மனம் வசதியை நாடாது. அதற்குத் தொண்டே பெரும் செல்வமாகும்.’ வசதியும் வாய்ப்பும் பதவியும் அவரைத் தேடி வந்தபோது, அவைகளை வேண்டாமென்று மறுத்தவர் அவர். பதவிகளுக்கு ஒருபோதும் ஆசைப்படாமல் இருந்தவர். தான் வகித்துவந்தப் பதவிகளிலிருந்தும் தொண்டு செய்ய அவைகளில் வாய்ப்பில்லாதபோதும், தன்னைவிடச் சிறந்தவர்கள் அப்பதவிகளுக்குத் தயாராக இருந்தபோதும், தானே முழுமனத்துடன் அப்பதவிகளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து விலகியவர்.

பல புரட்சிகரமானக் கருத்துக்களை அச்சமின்றி எழுதி, அவைகளுக்காகப் போராடி, அவைகளில் பலவற்றை செயல்படுத்தியும், சாதித்தும் காட்டியவர்தான் திரு.வி.க. அவர் ஆற்றியத் தொண்டுகளைப் பற்றி மட்டுமே நாம் மணிக்கணக்காக, நாட்கணக்காகப் பேசிக்கொண்டே போகலாம். சொல்லப்போனால், அவருடைய பன்முகங்களில் ஒவ்வொரு முகமாக நாம் தனித்தனியாக எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி நெடுநேரம் பேசிப் பெருமிதமடையலாம். அவ்வளவு இருக்கின்றன!

திரு.வி.க-வின் காலத்தில் அவருடைய பிள்ளைபோல் வாழ்ந்தவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் கூறுகின்றார்: ‘திரு.வி.க. அவர்கள் ஒரு பெரிய ஆலமரம் போன்றவர். மற்ற அறிஞர்கள், சமயவாதிகள், இலக்கியவாதிகள்போல் தன்னை ஒரு சிறிய கூட்டுக்குள்ளே அடைத்துக்கொள்ளாமல், தன்னை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே அடக்கிக்கொள்ளாமல், அனைத்திலும் ஈடுபட்டு, அனைத்திலும் தன் தனிச்சிறப்பைப் பதித்து, அனைவரிடமும் அன்புடன் பழகி, அனைவரின் மதிற்பிற்கும், மரியாதைக்கும் உரியவராயிருந்து மறைந்தார்.’

திரு.வி.க-வின் அழகு உரைநடை வழக்கிற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

‘தொண்டு இருவகை. ஒன்று பயன் கருதுவது. மற்றொன்று பயன் கருதாதது. முன்னையது இல்வாழ்க்கையில் தலைப்படுவதற்கு முன்னர் நிகழ்வது. பின்னது அவ்வாழ்க்கையில் தலைப்பட்ட பின்னர் படிப்படியாக நிகழ்வது.’

‘கடவுளின் கடந்த நிலையை நான் விழைகின்றேனில்லை; கலந்த நிலையையே விழைகின்றேன். ஏன்? கடந்த நிலை பிறவி வேரை அறுப்பது. பிறவி வேர் அறுந்தால் பின் தொண்டுக்கு அங்கே இடமில்லாமல் போகும். எனக்குத் தொண்டு – சன்மார்க்கத் தொண்டு தேவை. அதற்கென்று பல பிறவிகள் எடுத்தாலும் எனது விடாய் தணியாது; வேட்கை குறையாது.’

என்ன ஓர் ஆழ்ந்த, நுண்ணியப் பொருளுடைய அழகிய உரைநடை வழக்கு! ஒரு சொற்றொடருக்கு 3 முதல் 5 சொற்கள் மட்டுமே உடைய உரைநடை. ஒவ்வொரு சொற்றொடரிலும் வஞ்சிப்பாவைப் போல் பயன்படுத்தப்படும் சொற்களிலே மிகவும் சிக்கனம் காணப்படுகிறது. திருக்குறளைப் போல் அளவில் சுருக்கம்; அரும்பொருளின் பெருக்கம், இவைகளே திரு.வி.க-வின் உரைநடைக்கு உரிய விளக்கம்.

தெள்ளுதமிழ், தெளிந்த நீரோடையின் அழகு, தென்றலின் சுகம், கவிதையின் சுருக்கம், கவின்சுவை, கருத்துச் செறிவு – இவைகளே அவரின் உரைநடையில் அணிவகுப்பன. ஒரு அணி மற்றொன்றை விஞ்சுவது கூடுதல் இன்பம் தருவதாகும்.

திரு.வி.க-வின் நூற்றாண்டு விழாவில் பாவலேறு பெருஞ்சித்திரானார் அவர் மீது இயற்றிப் பாடிய ஒரு கவிதையின் ஒருசில அடிகள் திரு.வி.க-வை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

‘குணமேவிய ஒரு கொள்கையின் குன்றம்.
குற்றமில்லாதொரு வாழ்க்கையின் கூறு.
கையைக் கறை செய்யாது, உடல் நலம் கருதாது,
காலம் முழுதுமே கடமைகள் ஆற்றிட,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த நல் தெய்வம்!
பணியுமாம் பெருமை எனும் பைந்தமிழ்க்குப்
பயில்வுரை எழுதிப் பதிப்புரை தந்தவர்!
தணியாத் தமிழ்விடாய், தளர்வுறாக் கால்கள்!
தாழ்விலாச் செய்கை! தகைவுசேர் பயனுரை!
அணியாம் தமிழ்க்கெனும் அருமை நூல்கள்
அயர்வுறாது ஏழையர்க்கு அலைந்து திரிந்து
மணியும் நேரமும் காலமும் பாராது
மக்கட்கு உழைத்த மணவழகனாரே! வாழ்க!!’

இங்கு மக்கள் என்பது, திரு.வி.க தான் தொண்டு செய்வதற்காக தானே ஏற்றுக்கொண்டப் பொதுமக்களை. இன்றைக்கு இருப்பதுபோல், இணையின் மூலமும் துணையின் மூலமும் ஒருவர் ஈன்றெடுத்த தன் மக்களையல்ல. திரு.வி.க இன்று இருந்திருந்தால், அவருக்கு எந்தப் பட்டம் கிடைக்கிறதோ, இல்லையோ, ‘பிழைக்கத் தெரியாத பைத்தியம்’ என்ற பட்டம் நிச்சயம் கிடைத்திருக்கும்!

திரு.வி.க அவர்களின் வாழ்க்கை நம் யாவர்க்கும் ஒரு நல்ல பாடம். அவர் ஆற்றிய அளப்பறிய பணி நமக்கு ஊக்கமும் ஊட்டமும் உற்சாகமும் தருவது. அவர் எழுதிய நூல்கள் அவர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தந்த நற்கொடை. அவர் கடைப்பிடித்த, கற்பித்த உரைநடை வழக்கு, தமிழன்னைக்கு அவர் சாத்திய அணி. வரலாறு படைத்து, வரலாறு ஆகி, வரலாற்றுக்கே அணிசெய்த நம் திரு.வி.க வணங்கி, வாழ்த்தத் தக்கவர்; நம் வழிகாட்டியாகக் கொள்ளத் தக்கவர்.

இப்படியெல்லாம் இருந்தும், அவர் இன்று தமிழகத்தில் பெரிதும் பேசப்பாடாது இருப்பது, தமிழகத்தின் பேரிழப்பே, தமிழர்களின் அவமானமேயன்றி, அவர் புகழுக்கு ஒரு பங்கமோ, பாதிப்போ சற்றுமில்லை.

மேலே கொடுக்கப்பட்டிருப்பன திரு.வி.க-விற்கு ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இங்குத் தரப்பட்டிருப்பன அவரின் தமிழ்ச்சாலைக்குரிய விலாசம் மட்டுமே. இங்குச் சுட்டப்பட்டிருப்பது அவர் தவச்சாலைக்குச் செல்கின்ற வழியை மட்டுமே. தமிழ்த் தென்றல் சிறிது வீச, சற்றே கதவு திறக்கப்பட்டிருகிறது. தென்றல் முழுதும் உள்ளே வர, அதை முழுதும் சுகிக்க, அவரவரின் கதவை அவரவரே முயன்று, முனைந்து முழுதும் திறந்திட வேண்டும் என்பதே என்னால் இங்கே வைக்கப்படும் வேண்டுகோள்.

ப குருநாதன்

Singanenjam Sambandam

unread,
Aug 26, 2016, 11:12:21 AM8/26/16
to mint...@googlegroups.com
நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 26, 2016, 8:34:27 PM8/26/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
The poem was written at the time of his centenary

சித்தாந்த இமயம் தி ரு வி

- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

திரு விக நூற்றாண்டு விழா இராயப்பேட்டையிலுள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற்றதுஅப்பொழுது நடந்த கவியரங்கில் சித்தாந்த இமயம் திரு.வி. எனும் தலைப்பில் பாடிய பாடல் இது.)

 

யாருக்கு நூற்றாண்டு?  மக்கள் நெஞ்சில்

      அடைகாக்கும் வண்ணம் அவர் என்ன செய்தார்?

ஊருக்குத் தொண்டாற்றி  னாராஇல்லை

      உயர் மொழியில் சிறந்தாராகொள்கை தம்மைப்

பாருக்கு விரியும் வகை பற்றி னாரா?

      பக்தியிலே உயர்ந்தாராஅடி மட்டத்துப்

பேருக்கும் உழைத்தாராதேச பக்திப்

      பீடதனைக் கொண்டாராஎன்ன செய்தார்?

 

 எப்படித்தான் கேள்விகளை வீசினாலும்

      ஏற்றபதில் திரு.வி.க வாழ்வில் கிட்டும்.

இப்படித்தான் இம்மண்ணில் வாழவேண்டும்

      என்றெவரும் சொல்லிடுவார்இவரோடே நாம்

ஒப்பிடத்தான் யாருண்டுசித்தாந் தத்தில்

      உயர்ந்திருக்கும் நிலைமையினை வார்த்தை யாலே

செப்பிடத்தான் கூடிடுமோமுடிந்த மட்டும்

      சித்தாந்த மேதைபுகழ் செப்பு கின்றேன்.

 

தாடியிலும்கட்டிவைத்த சடைக்குள்ளேயும்

      சாயத்துக் காவியிலும்மொட்டைக் குள்ளும்

தேடிவந்து சிக்குவதாய்ச் சொல்லுகின்ற

      சித்தாந்த வீச்சதனைத் தமிழ்ச் சொல் வீட்டு

மாடியிலே நின்றுகொண்டு வருவோர்க் கெல்லாம்

      வழங்கியவர் திரு.வி. , பொய்ம்மை தன்னைச்

சாடியவர் திரு.வி.தமிழை நெஞ்சில்

      தாங்கியவர் திரு வி கஇமய வெற்பு.

 

நீள்கோள முகத்தினிலே அறிவைச் சாற்றும்

      நெற்றியதே பாதியிடம் பிடித்துக் கொள்ளும்

தோள்மேலே நீள் துண்டு கழுத்தைச் சுற்றி

      தொண்டையதன் குரல் காக்கும்ஆகா நல்ல

ஆள்பார்த்து நாம்வந்தோம் என்றே மூக்கில்

      அழகாகக் கண்ணாடி அமர்ந்தி ருக்கும்

மீள்பார்வை வீச்சினிலே அன்பு பூக்கும்

      வேருக்குக் கீழ்பார்க்கும் கூர்மை தூக்கும்.

 

 இமயமென்றால் ஒரு சிகரந்தானாதோன்றும்

      இடத்தருகே ஒரு சிகரம்செங்குத் தாக

அமைந்திருக்கும் ஒரு சிகரம்இடப்பக்கத்தில்

      அழகுசெய்யும் ஒருசிகரம்முகிற் கூட்டத்தைச்

சுமந்திருக்கும் ஒரு சிகரம்அடுக்கடுக்காய்ச்

      சூழ்ந்திருக்கும் ஒருசிகரம்அனைத்துக்கும் மேல்

நிமிர்ந்திருக்கும் ஒருசிகரம்அதனைப் போல

      நிறைதொகுப்பே திரு.வி.க வெற்பின் வெற்பு.

 

எல்லையற்ற பரம்பொருளை எண்ணத்துள்ளே

      ஏத்துகிற பக்திநெறிகொடுமை யாலே

தொல்லையுற்ற உழைப்பவர்க்குச் சேவை செய்யத்

      துடித்தெழுந்த தொண்டுமுறைகொண்ட வாழ்க்கை

செல்லரித்துப் போகாமல் உள்ளத் துள்ளே

      தெய்வவொளி கூட்டுகின்ற தியான வேள்வி

கல்லுரித்துப் பார்ப்பவரைக் கண்ணி வைத்துக்

      காட்டு வெறிதிருவிக சிகரக் கூட்டம்!

 

வேண்டியவர்வேண்டாதார்அரசுக் கட்டில்

      வீற்றிருப்பார்அதிகாரி பேதம் எல்லாம்

ஆண்டவர்முன் அடுக்காதுதெய்வத்தின் முன்

      அதிகார உரிமையினால் சலுகை யாவும்

வேண்டுபவர் துன்மார்க்கர்செய்யும் தீமை

      விலகுமென்றும்புண்ணியமே அதுதான் என்றும்,

ஆண்டவர்க்குச் சொத்தெழுதித் தீர்வு காணல்

      அற்பமென்றும் சொல்லிடுவார்பொய்க்க மாட்டார்.

 

வித்தேந்தும் உழவர்களின் வயிற்றுக் காக

      வேண்டியதை அளிக்காமல் கோபம் கொண்டு

மத்தேந்தும் பெரியவர்கள் நீறு பூசி

      வார்த்தையிலே தேன்குழைத்து வேதாந்தத்தின்

சித்தாந்தம் பேசுகிற நிலைமை கண்டு

      சீறுகிற திரு.வி.சன்மார்க் கத்தின்

கொத்தேந்தி அன்புநெறிக் குரல் கொடுத்தார்

      கோபத்தும் குணம்காட்டி வெறித டுத்தார்..

 

இறைநெறியைக் கைவிட்டுச் சமதர்மத்தை

      இயம்புவதைத் திரு.வி.க ஏற்க வில்லை

நெறிமுறையில் சன்மார்க்கம் இல்லை என்றால்

      நிலையாது சமதர்மம்இயற்கை காட்டும்

முறையதுவே சன்மார்க்கம்உலக வாழ்வை

      முழுவதுமாய்ப் பின்பற்றித் துறைகள் தம்மில்

நிறையுறநாம் செல்லுவதே முறைமை என்பார்

      நிம்மதியும் அதுவென்பார்நீதி சொல்வார்

 

 புனிதநதி புறப்பாடுதெய்வீ கத்தின்

      புத்தமுதம் உறைவீடுகுளிர்ந்த சூழல்,

குனியவைக்கும் கம்பீரம்குன்றுத் தீபம் 

      கோபுரமாய் உயர்ந்திருக்கும் கோயில் வாயில்

கனிவுதரும் நல்லமைதிதூய காற்று

      கண்ணழகுகாட்சியெழில் இயற்கை மாட்சி

இனிய இவை இமயத்தில் மட்டுன் தானா

      இல்லையில்லைதிரு.வி.க இடத்தும் உண்டு.

 

வெளிமனமாய்நடுமனமாய்இன்னும் உள்ளே

      விளங்கு கின்ற அடிமனமாய்சக்தி வெள்ள

ஒளிகனமாய் இலங்குவதைச் சுட்டிக் காட்டி

      உள்ளத்துத் திறல்வீசில் உயரம் காட்டி

களிமனமாய் அதைக் கருதி வைரம் தன்னைக்

      கறுப்பாக்கும் நம்செயலின் புன்மை காட்டித்

தெளிமனமே தெய்வீக மாகக் காட்டும்

      திருவி.க சித்தாந்தம் நெஞ்சக் கோவில்.

 

கோயிலுக்குச் சொத்தெதற்குவேண்டாம் என்பார்

      கும்பிட்டு வருபவரைத் தரம்பி ரித்து

வாயிலுக்கு வரைவந்து வழிய னுப்பும்

      வழக்கத்தைக் கடிந்திடுவார்அன்பு கொண்ட

நேயமொன்றே போதும்வீண் கூலிக் காக

      நிகழ்த்துகின்ற இறைபணிகள் வேண்டாம்அன்பால்

கோயிலுள்ளே உள்வரையில் சென்றுதொட்டுக்

      கும்பிடநாம் செய்வதுவே உயர்ந்த தென்பார்

 

ஆயிரம்பேர் கொள்ளுகிற தேச பக்தி

      ஆன்மநெறி தியானங்கொள் யோகியின்முன்

போயிரங்கி நிற்கு மென்றால்உள்ளே ஜோதிப்

      பொருளாக ஒளிவீசும் நேர்த்தி தன்னை

வாயுரைக்கக் கூடிடுமாநமது வாழ்வில்

      மாண்புதரும் உள்ளொளியைப் பெருகச் செய்யும்

தாயுளத்தில் சன்மார்க்கம் காப்போம் என்ற

      தத்துவமே திரு வி கதந்த வேதம்!

 


On Friday, August 26, 2016 at 5:53:25 AM UTC-7, Maayon TS wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages