[MinTamil] கடவுளும் மனிதனும்

168 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 16, 2010, 10:01:24 PM5/16/10
to mintamil

கடவுளும் மனிதனும்

என் அம்மா கடுமையான சாமி பக்தை.ஒரு தரம் அமெரிக்கா வந்தபோது ஆர்கன்சா நதிக்கு கூட்டிப்போனேன்.அந்த நதியின் வரலாற்றை எழுதி வைத்திருந்தார்கள்.அந்த போர்டை படித்துக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் "இங்கே எப்படி தெளிவா ஹிஸ்டரிய எழுதி வெச்சிருக்கான்.நம்ம ஊருன்னா காக்கா கமண்டலத்தை கவுத்து நதி உருவாச்சுன்னு கதை கட்டி விட்டிருப்பான்" என்றார்.

இவரா இப்படி பேசுவது என்று நான் அசந்துபோனேன்.

யோசித்து பார்த்ததில் ஒவ்வொரு ஆன்மிகனுக்குள்ளும் ஒரு நாத்திகன் இருக்கிறான், ஒவ்வொரு நாத்திகனுக்குள்ளும் ஒரு ஆன்மிகவாதி இருக்கிறான் என்று புரிந்தது.இந்த இரு நிலைகளுக்குளும் நடக்கும் போராட்டமே ஒரு மனிதனின் ஆன்மிக உணர்வு.

இது ஏன் நிகழ்கிறதென்றால் இயற்கையாக மனிதனுக்குள் தோன்றும் ஆன்மிக உணர்வை மதம் எனும் போர்வையில் மூடிவைத்து,புனிதம் எனும் கவசத்தால் அதை காப்பதால் தான் இது நேர்கிறது.தனக்குள் நேரும் இறைஉணர்வை அடுத்தவனுடன் பகிர்ந்தால் அது மதமாகிவிடுகிறது.

வேதங்கள் என்பவை என்ன?இறைவனை தேடியவர்களின் ஆன்மிக அனுபவங்கள்.அந்த தேடலுக்கு விடையாக அவர்களுள் தோன்றிய இறை உனர்வை புத்தகத்தில் எழுதிவைக்க அது வேதமாகிவிட்டது.புத்தரின் ஞானதேடலை மற்றவர்களுக்கு எடுத்துகூற ஆரம்பிக்க அது பவுத்தமாகி விட்டது.

அடுத்தவன் காட்டிய வழியில் இறைவனை காணமுயற்சிக்கும் வழியே மதம்.தன் உள்ளுணர்வில் இறைவனை காணும் வழியே ஆன்மிகம்.மதம் என்பது இறைதேடலுக்கு பொருத்தமற்றது..ஆன்மிகமே பொருத்தமானது.

எருமை புல்லுக்கட்டை தின்றுகொண்டே தியானித்தால் கடவுள் அதற்கு எருமையாக தான் காட்சியளிப்பார்..அந்த எருமை அப்புறம் "கடவுளை தரிசிக்க வழி புல்லை தின்றுகொண்டே தியானிப்பதுதான்" என்று நூலில் எழுதிவைக்கும்.அது எருமை மதமாகிவிடும்..அப்புறம் எல்லா எருமைகளும் புல்லுக்கட்டை தின்றுகொண்டே தியானிக்க துவங்கிவிடும்.

மதத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆன்மிகவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் விமர்சிப்பது செயற்கையாக தம்மேல் திணிக்கப்பட்ட மற்றவரது வழிமுறையை தானே அன்றி இயற்கையாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தோன்றும் ஆன்மிக உணர்வை அல்ல.அந்த ஆன்மிக உனர்வு இருப்பதால் தான் மதத்தின் பெயரால் நடக்கும் இத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் பிறகும் அவர்களால் இறைநம்பிக்கையுடன் இருக்க முடிகிறது.

இந்த ஆன்மிக உணர்வு உள்மனதில் இருப்பதால் தான் நாத்திகவாதிகளும் மனதில் கேள்விகளுடனேயே "இருக்குமோ, இருக்காதோ" என்ற மனதின் அடியாழத்தில் இருக்கும் சந்தேகத்துடன் தமது விமர்சனங்களை தொடர்கிறார்கள்.

பிச்சை எடுக்கும் ஆண்டிக்கு மனதில் வரும் இறை உணர்வு இறைவனை பிச்சைக்காரனாக தான் காட்டும்.அதை அவன் அடுத்தவனுக்கு எடுத்து சொன்னால் அடுத்தவனும் இறைவனை பிச்சைக்காரனாக தான் பார்ப்பான்.இன்னொருத்தனுக்கு இது கேலியாக தோன்றும்.கவி காளமேகம் போல் பிச்சைக்காரனாக வரும் சிவனை கிண்டல் செய்வான்.

நச்சரவம் பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத்து உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்க்கடல்போ லேமுழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்?

பிச்சைக்காரனுக்கு தோன்றிய இறை உணர்வு பொய்யா? இல்லை..அது அவனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த தரிசனம்.அதை அடுத்தவனுக்கு சொன்னதால் அது மதமானது.இறைவன் பிச்சை எடுப்பது ஒரு சடங்கானது.அதை கிண்டல் செய்வது நாத்திகமானது.

காளமேகத்துக்கு இறைதரிசனம் கிட்டியிருந்தால் இறைவன் கவியாக தோன்றியிருக்க கூடும்.அதை ஒரு ஐநூறு பேர் நம்பி இறைவன் கவிஞன் என்று கூறியிருந்தால் அது மதமாகிவிடுகிறது.அதை இன்னொருவன் கிண்டல் செய்தால் அது நாத்திகமாகிவிடுகிறது.

(தொடரும்..)


--
செல்வன்

www.holyox.tk

“Government exists to protect us from each other. Where government has gone beyond its limits is in deciding to protect us from ourselves.”-Ronald Reagan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

நண்பன்

unread,
May 17, 2010, 2:30:39 AM5/17/10
to mint...@googlegroups.com
காளமேகத்துக்கு இறைதரிசனம் கிட்டியிருந்தால் இறைவன் கவியாக தோன்றியிருக்க கூடும்.அதை ஒரு ஐநூறு பேர் நம்பி இறைவன் கவிஞன் என்று கூறியிருந்தால் அது மதமாகிவிடுகிறது.அதை இன்னொருவன் கிண்டல் செய்தால் அது நாத்திகமாகிவிடுகிறது.

2010/5/17 செல்வன் <hol...@gmail.com>



--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

செல்வன்

unread,
May 17, 2010, 11:55:23 AM5/17/10
to mint...@googlegroups.com
 இஸ்கான் கோயிலுக்கு போயிருந்தேன்.அங்கே பலாமரத்தில் வெட்டி வைத்த கண்ணன்,பலராமன்,சுபத்ரா உருவசிலைகள் இருந்தன.மனம் சுத்தமாக ஒன்றவே இல்லை.என் நாலு வயது குழந்தையால் கூட அதை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அதே சிலைகளுக்கு முன் வெள்ளையர்களும்,கருப்பர்களும்,வட இந்தியர்களும் பக்திபரவசத்துடன் அமர்ந்து உருகிக்கொண்டிருந்தார்கள்.அனைத்து இனங்களும்,மதங்களும் மனமுருகி தொழுத அந்த ஆண்டவனுடன் அன்று என்னால் மனதால் ஒன்ற முடியவில்லை.நம் ஊர் பாணியில் வேட்டி சட்டை கட்டி மீசை வைத்த பெருமாள் கோயில்களுக்கு போனால் தான் கடவுளை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

சீன கோயில் ஒன்றுக்கு போயிருந்தேன்.அங்கே இருந்த கடவுள் சிலைகள் சீனாகாரர்கள் மாதிரி தான் இருந்தன.

பிரிட்டிஷ்காரர்களின் கடவுள் நம்பிக்கையை பற்றி ஐரோப்பாவில் இம்மாதிரி கூறுவார்கள்.அதாவது பிரிட்டிஷ்காரர்களுக்கு "கடவுள் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்த பிரிட்டிஷ் ஆண் (God is an Englishman)" " என்று நினைப்பு என்று.ஒபாமாவின் ஞானகுரு ஜெரெமையா ரைட் ஏசுவை கருப்பனாகவும் அவரை கொன்றவர்களை இத்தாலியை சேர்ந்த வெள்ளையர்களாகவும் பார்க்கிறார்.யூதர்களை பொறுத்தவரை ஏசு வெள்ளையருமல்ல,கருப்பருமல்ல.செமிட்டிக் இனத்தை சேர்ந்த ஒரு யூதர்.

ஆக எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் மண்ணின் மணத்தில்,அந்த ஊர் கலாச்சாரப்படி தான் அந்தந்த ஊர் ஆண்டவனும் இருப்பான் என்று புரிந்துபோனது.

என் கண்முன் கடவுள் சீனாகாரன் வடிவத்தில் வந்து நின்றால் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.அதே மாதிரிதான் சீனாகரனுக்கும் வேட்டி சட்டை போட்ட கடவுளை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதனுக்கு தான் சீனாகாரன்,இந்தியாகாரன் என்று பேதம் இருக்கும்.இறைவனுக்கு எப்படி இருக்கும்?அந்தந்த ஊர் மக்கள் விரும்பும் வண்ணம் தனது இருப்பை அவர்களுக்கு உணர்த்துகிறான்.அதை அவர்கள் வெளியே சொல்லும்போது அது மதமாகிவிடுகிறது.

இறைதரிசனத்தை கண்டவர்கள்/அனுபவித்தவர்கள் யாரும் பொய் சொல்லுவதாக நான் நினைக்கவில்லை..சொல்லப்போனால் அந்த அனுபவத்தை அவர்களே நினைத்தாலும் முழுமையாக வெளியே சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்...தாம் காண விரும்பிய காட்சியை/அனுபவத்தை அவர்கள் காண்கிறார்கள்.அவர்களுக்கு எந்த அனுபவம் ஏற்றதென்று அந்த சக்திக்கு புரிகிறதோ அதே அனுபவத்தை அவர்களுக்கு அளிக்கிறது.

மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் மதங்களை ஏற்படுத்தும் எந்த நிர்ப்பந்தமும் அவசியமும் ஆண்டவனுக்கு ஏற்பட்டதாக கருதவே வேண்டியதில்லை.மாற்றாக இந்த மக்கள் கூட்டங்களை நிர்வகிக்க தான் ஆண்டவன் பலருக்கும் தேவைப்பட்டிருக்கிறான்.எந்தெந்த காலத்தில் எந்தெந்த சட்டங்களை வைத்து சமூகங்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்ததோ அந்தந்த சட்டங்கள் ஆண்டவனின் கட்டளையாகவும்,இறைவனின் விருப்பமாகவும் முன்நிறுத்தப்பட்டது.

இதை அந்த ஆன்மிக பெரியவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள் என்று நம்ப இடமில்லை.."யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று தமது அனுபவத்தை பொதுவிதியாக்கியிருக்கிறார்கள். அது நாள்போக்கில் சடங்காகவும்,மதமாகவும் மாறிவிட்டிருக்கிறது.

இறைவன் உலகின் மிகப்பெரிய லிபரலாக இருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.இறைவன் ஒரு பழமைவாதியாகவோ, அடிப்படைவாதியாகவோ கண்டிப்பாக இருக்கவே முடியாது.முக்தி,மோட்சம்,சொர்க்கம் என்று கூறப்படும் எந்த நிலையையும் எல்லா மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இறைவன் அளித்துத் தானாக வேண்டும்.

அப்படியானால் பாவம்,குற்றம் என எதுவுமே இல்லையா என கேட்கலாம்..பாவம்,குற்றம் என்று கூறப்படும் செயல்கள் அனைத்தும் மனித இனம் தனக்கு தானே அப்போதைக்கப்போது விதித்துக்கொள்ளும் நடைமுறைகள் தானே அன்றி ஆன்மிக ரீதியில் எந்த மனிதனுமே குற்றவாளியாக ஆவதில்லை.

குற்றங்களை நாம் ஆன்மிக ரீதியில் அணுகவேண்டுமெனில் 'மனிதன் ஒரு மிருகம்' என்ற அடிப்படையில் தான் அணுக வேண்டும்.ஏப் இனங்களில் பெண் ஏப்பை அடைய விரும்பும் இன்னொரு ஏப் அந்த பெண்ண் ஏப்பின் குழந்தையை அடித்து கொன்றுவிடும்.தன் குட்டியை பாதுகாக்க தவறிய கணவனை விட்டு பிரியும் பெண் ஏப், கொலை செய்த ஆண் ஏப்புடன் சேர்ந்து புதுவாழ்க்கை தொடங்கும்.

சிசுக்கொலை செய்த ஏப்பின் செயல் தவறு,ஆன்மிக விரோதம் என்று தீவிரமான மதவாதி கூட கூறமாட்டான்.அந்த ஏப்புக்கு நரகம் கிடைக்குமென்று கூற மாட்டான்.நான் கடவுளாக இருந்து ஏப்புகளுக்கு சொர்க்கம்,நரகம் என்ற தண்டனையை வழங்குவதாக இருந்தால் அந்த சிசுக்கொலை செய்யும் ஏப்புக்கு நரகத்தை கண்டிப்பாக தண்டனையாக வழங்கமாட்டேன்.

துணையை இழந்த பெண் சிங்கத்துடன் ஜோடி சேரும் ஆண் சிங்கம் தனக்கு பிறக்காத குட்டிகளை தின்றுவிட்டு பெண் சிங்கத்துடன் இணைந்து புதுகுட்டிகளை ஈனும்.சக்களத்தி குழந்தைகளை கொடுமைப்படுத்தும் சித்திகளுக்கு கிட்டத்தட்ட இதே மனோபாவம் இருக்கிறது என்று கூறலாம்.

மிருகங்களுக்கிடையே கற்பழிப்பு, இன்செஸ்ட், திருட்டு,விபசாரம் போன்ர செயல்கள் சர்வசாதாரணம்.அவற்றின் வாழ்க்கைமுறையில் அவை ஒரு அங்கம்.சிங்கத்தின் இரையை நரி திருடியே ஆகவேண்டும்.இல்லாவிட்டால் அது செத்துவிடும்..ஜோடி கிடைக்காத குரங்குகள் கற்பழிப்பில் ஈடுபட்டே ஆகவேண்டும்.இல்லாவிட்டால் கட்டைபிரம்மச்சர்ரியாக அவை காலம் தள்ள வேண்டியதுதான்.

மிருக இனத்தில் ஒரு வகையான மனிதனும் இதே போன்ற செயல்களை செய்வதில் எதுவுமே ஆச்சரியமில்லை எனும்போது ஆண்டவன் அவனை தண்டிக்க என்ன இருக்கிறது?.தவறு செய்யும் குரங்குகளை மற்ற குரங்குகள் அடித்து துரத்திவிடும்.அது குரங்கினத்தின் நெறிமுறையாக இருக்கலமே அன்றி கடவுளின் நெறிமுறையாக இருக்க முடியாது..ஒரு குரங்கு அடுத்த குரங்கின் இரையை திருடித்தின்றால் கடவுள் அதற்கு சொர்க்கத்தை மறுத்துவிடுவாரா என்ன?

மற்ற மிருக இனங்களைபோல் மனித இனமும் தனது பாதுகாப்புக்கும், தன்னினத்தை நெறிமுறைப்படுத்தவும் சட்டங்களையும் அவ்வப்போது இயற்றுகிறது.அதில் சரி,தவறு,குற்றம்,பாவம் என்பதெல்லாம் மனிதனாக தன்னினத்தை கட்டுப்படுத்தவும் சமூகத்தை நெறிப்படுத்தவும் செய்துகொள்ளும் அமைப்பு தானே அன்றி அதில் கடவுளின் பங்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

மனிதன் என்பவன் தனித்து வாழும் விலங்கல்ல.மனிதன் என்பது சமூக விலங்கு.அதனால் சமூகநெறிமுறைகள் சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் அவசியமே அன்றி ஆன்மிக ரீதியில் அவசியமே இல்லை.அதனால் எந்த மனிதனுக்கும் சொர்க்கம்/ முக்தியை மறுக்கும் அவசியமே இறைவனுக்கு ஆன்மிக ரீதியில் ஏற்படவேண்டிய அவசியமில்லை.

சொர்க்கம்/முக்தி என்றால் என்ன?

சொர்க்கம் என்றால் அங்கே புலனின்பங்கள் நிரம்பி இருக்கும்..ரம்பா,மேனகா ஊர்வசி இருப்பார்கள்..அல்லது இறைவன் திருவடியில் தியானம் செய்துகொண்டு இருப்பார்கள் என்பது போன்று விதவிதமாக சொல்கிறார்கள்.நரகம் என்றால் துன்பம் நேரும் இடம்,எண்னை சட்டியில் போட்டு வறுக்கும் இடம் அல்லது இறைவனை பிரிந்து இருக்கும் நிலை என்று பலவிதமாக சொல்வார்கள்.

அடிப்படையில் இவை எல்லாம் மனித இனத்தை கட்டுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் மற்ற மனிதர்கள்/அரசர்கள்/மதஸ்தாபகர்கள் கூறிய உவமானமே அன்றி நிஜத்தில் நரகம் என்ற ஒன்று இருக்கவே முடியாது.ஆன்மிக ரீதியில் பாவமும் அதற்கு எதிரான புண்ணியமும் சாத்தியமில்லை.அதனால் இவற்றை அடிப்படையாக் கொண்ட சொர்க்கம்,நரகம்,முக்தி போன்ற கோட்பாடுகளும் ஆன்மிக ரீதியில் சாத்தியமற்றவையே.

இதையும் தாண்டி முக்தி,சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் கடையனுக்கும் கடைந்தேற்றம் என்பது போல் எத்தகைய மனிதனுக்கும், எந்த நிபந்தனையுமின்றி முக்தியை அளிப்பதே இறைவனின் குணாதிசயமாக இருக்கும்.ஒரு மனிதனையாவது, விலங்கையாவது எந்த காரணத்தை முன்னிட்டும் தள்ளி வைக்கும் காரணம் இறைவனுக்கு நேரிட வேண்டிய அவசியம் இல்லை..

அதனால் தான் இறைவன் உலகின் மிகப்பெரிய லிபரலாக இருப்பார் என்று கூறினேன்,.

seethaalakshmi subramanian

unread,
May 17, 2010, 12:16:15 PM5/17/10
to mint...@googlegroups.com
புதிய கோணம்
அதாவது எனக்கு
சீதாம்மா

2010/5/17 செல்வன் <hol...@gmail.com>
 இஸ்கான் கோயிலுக்கு போயிருந்தேன்.அங்கே பலாமரத்தில் வெட்டி வைத்த கண்ணன்,பலராமன்,சுபத்ரா உருவசிலைகள் இருந்தன.மனம் சுத்தமாக ஒன்றவே இல்லை.என் நாலு வயது குழந்தையால் கூட அதை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

செல்வன்

unread,
May 17, 2010, 12:30:30 PM5/17/10
to mint...@googlegroups.com
நன்றி அம்மா.

2010/5/17 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

செல்வன்

unread,
May 17, 2010, 12:31:15 PM5/17/10
to mint...@googlegroups.com
நன்றி அம்மா.

2010/5/17 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>
புதிய கோணம்

venkatachalam Dotthathri

unread,
May 17, 2010, 12:47:47 PM5/17/10
to mint...@googlegroups.com
ஓம்.
ஏதாவதுஒரு பெரும்இடற்பாடு ஏற்பட்டு அதனைத் தாங்கிக் கொள்ளும் வலிமையற்று அவன்தவிக்கும் போது தன்சுமைகளை இறக்கி வைக்க ஒரு சுமை தாங்கி வேண்டியிருக்கும் போது, அவனுக்குத் தன்கைகளும் கால்களும் செயல்இழந்து போகும் போதுஅடுத்து  என்ன செய்தால் நலம்என்றுதெரியாத போதுஅங்கே இறைவனின்உணர்வுதோன்றுகிறது.
ஓம்

2010/5/17 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

நண்பன்

unread,
May 18, 2010, 1:12:22 AM5/18/10
to mint...@googlegroups.com
முக்தி,சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் கடையனுக்கும் கடைந்தேற்றம் என்பது போல் எத்தகைய மனிதனுக்கும், எந்த நிபந்தனையுமின்றி முக்தியை அளிப்பதே இறைவனின் குணாதிசயமாக இருக்கும்.

2010/5/17 செல்வன் <hol...@gmail.com>
 இஸ்கான் கோயிலுக்கு போயிருந்தேன்.அங்கே பலாமரத்தில் வெட்டி வைத்த கண்ணன்,பலராமன்,சுபத்ரா உருவசிலைகள் இருந்தன.மனம் சுத்தமாக ஒன்றவே இல்லை.என் நாலு வயது குழந்தையால் கூட அதை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

செல்வன்

unread,
May 18, 2010, 2:26:38 AM5/18/10
to mint...@googlegroups.com
நன்றி நண்பன் ஐயா,வெங்கடாச்சலம் ஐயா

2010/5/18 நண்பன் <naz...@gmail.com>
"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin

செல்வன்

unread,
May 18, 2010, 3:32:47 AM5/18/10
to mint...@googlegroups.com
சொர்க்கம், நரகமின்றி நல்லவனாக இருத்தல்...

 சொர்க்கம் எனும் குச்சி மிட்டாயும், நரகம் எனும் தடியும் இல்லாமல் ஒருத்தன் நல்லவனாக இருக்க முடியுமா?

முடியும் என்கிறது ஆன்மிகம்.
முடியாது என்கிறது மதம்.

மக்களுக்கும், மாக்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இங்குதான் துவங்குகிறது.

கழுதைக்ளை இரண்டு வழிகளில் சுமை தூக்கும் வேலைக்கு பழக்கப்படுத்துவார்கள்.ஒன்று கழுதைக்கு முன் கேரட்டை காட்டியபடி நடப்பது.கேரட்டுக்கு ஆசைப்பட்டு கழிதை சுமையை தூக்கிக்கொண்டு நடக்கும்.இன்னொரு வழி தடியால் அடித்து நடக்க வைப்பது.

கழுதையை வழிக்கு கொண்டுவர கேரட்டும்,தடியும்.மனிதனை வழிக்கு கொண்டுவர சொர்க்கமும் நரகமும்.

சொர்க்கத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செயலை செய்பவன் நல்லவனல்ல.நரகத்துக்கு பயந்து ஒரு செயலை செய்யாது விடுபவன் உத்தமனல்ல.மனிதர்களை அம்மாதிரி கட்டுப்படுத்துவதே அவர்கள் மேல் நம்பிக்கையில்லா தன்மையை தான் காட்டுகிறது.மதக்கட்டுப்பாடுகளா
ல் நான் நல்லவனாக இருக்கிறேன், கடவுளுக்கு பயந்து நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்பதெல்லாம் கடவுளுக்கும்,மதத்துக்கும் அவமானமேயன்றி பெருமையல்ல..சுயமாக சிந்திக்க தெரியாத முட்டாள் கூட்டத்தை வளர்த்து வைப்பதில் பெருமை என்ன வேண்டிக்கிடக்கிறது?

உண்மையான ஆன்மிகவாதிக்கு நல்லவனாக இருக்க இறைவன் எனும் பூச்சாண்டி தேவைப்படுவதில்லை..ஆன்மிகவாதியின் இறைவன் பழிவாங்கும் பேயல்ல.நரகத்தில் போட்டு வதக்கும் சாடிஸ்டல்ல.ஒரு ஆன்மிகவாதி நல்லவனாக இருக்க காரணம் சுயசிந்தனையில் தோன்றிய சிந்தனையே ஆகும்.உள்ளூர வரும் உணர்வால் நல்லவனாக இருப்பவன் தான் ஆன்மிகவாதி.போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் யோக்கியமாக இருப்பதை ஒத்த மதவாதிகள் கும்பலில் அவன் ஒருத்தனாக இருக்க மாட்டான்.

மனிதனும், மிருகமும்:


விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும், மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.(எது புனிதம் என்ற கட்டுரையில் ஏ.என் சிவராமன்)

காதல்,வீரம்,அன்பு,பாசம் என்று நாம் கொண்டாடுபவை எல்லாம் அடிப்படையில் மிருக உணர்ச்சிகள் தான்.இந்த மிருக உனர்ச்சிகளால் கட்டப்பட்டவை தான் சமூகங்கள்..ஒவ்வொரு மிருக கூட்டமும் இந்த உணர்ச்சிகளை ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்தும்..அதுபோல் இவற்றை நாம் வெளிப்படுத்தும் முறை வேறுபடுகிறதே ஒழிய இவ்வுணர்ச்சிகளில் புனிதமும் ஏதுமில்லை, புடலங்காயும் ஏதுமில்லை.

பழங்கால எகிப்து மன்னர்கள் அளவுக்கு நாகரிகம் அடைந்த சமூகம் அந்த காலத்தில் இருந்ததா என்பதே சந்தேகம்தான்.இன்றும் அறிவியலாளரை வியக்க வைக்கும் பிரமிடுகளை அவர்கள் கட்டினார்கள்.ஆனால் அன்றைய எகிப்திய மன்னர்கள் சர்வசாதாரணமாக தம் தங்கைகளையும், தாய்களையும் திருமணம் செய்துகொண்டார்கள்.சகோதரர்களுடன் ஹோமோசெக்ஸில் சர்வசாதாரணமாக ஈடுபட்டார்கள்.

மேலே பல குற்றங்கள் நடைபெற்றிருப்பது போல தெரியலாம்.ஆனால் இதுதான் அன்றைய எகிப்திய இனத்தில் வழக்கம்.மேலே சொன்ன எதுவும் அவர்கள் இனத்தில் குற்றமல்ல.எகிப்திய கடவுள் இதில் எதையும் சட்டம் போட்டு தடுக்கவில்லை. எகிப்திய அரசு இன்னமும் நீடித்திருந்தால் மேலே சொன்னது தான் உலக நடைமுறையாகவும் சட்டமாகவும் ஆயிருக்கும்.

கொலை குற்றம் என்கிறோம்.ஜனத்தொகை இதே ரீதியில் பெருகினால் அப்புறம் ஒரு காலகட்டத்தில் வயதானவர்களை அரசாங்கமே சுட்டுக்கொன்றால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை.அந்த காலகட்டத்தில் கொலை என்பது சமூகத்தை நெறிப்படுத்த அரசாங்கமே ஏற்படுத்தும் ஒரு முறையாக இருக்கும்.

ஒரு செயல் குற்றமா இல்லையா என்பதை அந்தந்த காலகட்டமும்,அதில் பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களும்,சமூகத்தில் வலுத்தவர்களும் தான் தீர்மானிக்கிறார்களேயன்றி இறைவனல்ல.

இன்னமும் சொல்லப்போனால் அந்தந்த காலகட்டங்களில் தவறாக கருதப்படுபவை அந்தந்த காலகட்டங்களில் உருவாகும் மதங்களால் தடுக்கப்படுகிறது.அந்தந்த காலத்தில் சரியாக கருதப்படுபவை அந்தந்த காலத்தில் உருவாகும் மதங்களால் ஆமோதிக்கப்படுகிறது.

காலம் மாறும்போது எதுசரி,எது தவறு என்ற சமூக கண்ணோட்டம் மாறுகிறது.மாற்ரத்தை ஏற்கவிரும்பாத பழமைவாதிகள் இறைவன் விதிமுறைகளை காரணம் காட்டி பழங்காலத்துக்கு சமூகத்தை கொண்டுசெல்ல முயல்கின்றனர்.புதுமைவாதிகள் அவர்களை எதிர்க்கின்றனர்.

பழமைக்கும்,புதுமைக்குமான இந்த போரில் பழமைவாதிகள் ஜெயித்தால் சமூகம் பின்னோக்கி செல்கிறது.புதுமைவாதிகள் ஜெயித்தால் சமூகம் முன்னோக்கி செல்கிறது.

போர் என்பது குரங்கினத்தின் இன்னொரு தனி இயல்பாகும்..மனித இனம் போரிடவே பிறந்தது.போரால் தான் வளர்ந்தது.

மரணத்துக்கு பின் என்ன?

பிறப்புக்கு முன் என்ன நிலையோ அதுதான் மரணத்துக்கு பிறகும்.

பிறப்புக்கு முன் என்னவாக இருந்தோமோ அதே நிலைக்கு தான் இறப்புக்கு பிறகும் திரும்புகிறோம்.அதனால் தான் வள்ளுவர் இறப்பை தூக்கத்துக்கும் பிறப்பை விழிப்புக்கும் ஒப்பிட்டார்.

"நான்" என்பதெல்லாம் இந்த உலகம் சார்ந்த நமது நினைவுகள் தான்.நமது தாய்,தந்தை,உற்றம்,சுற்றம்,நண்பர்கள்,நினைவுகள்..இது தான் நாம்.நமது பிறப்புக்கு முன் இந்த "நான்" இல்லை.இறப்புக்கு பிறகும் இந்த எதுவும் தொடர போவதில்லை.அதனால் இறப்புக்கு பிறகு "நான்" இல்லை.

பிறப்புக்கு முன் விந்துவாகவும்,உணவாகவும்,பயிராகவும்,மண்னாகவும் இருந்தோம்.இறப்புக்கு பிறகு சாம்பலாகவும் மண்ணாகவும் இருக்கிறோம்.உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து தோன்றி மீண்டும் மண்ணுக்குள் செல்கின்றன...இந்த லாஜிக்படி பார்த்தால் நமக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை.எதோ வடிவில் தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறோம்.நடுவே வந்து சேரும் இந்த "நான்" நடுவிலேயே போய்விடுகிறது.

இந்த "நானை" வைத்து கூறப்பட்ட சுவர்க்கம்,நரகம் போன்றவை இனிய கற்பனைகளே.இவை உண்மையாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.....

*****

பக்தியின் சக்தி:

பக்தி என்பது ஒருவிதத்தில் தாழ்ந்த நிலை..காரணம் பக்தி என்பது ஒரு வகையான பற்றே ஆகும்."உன் மேல் பக்தி செலுத்துகிறேன்.பதிலுக்கு நீ என்னை காப்பாற்று" என்று இறைவனுடன் செய்துகொள்ளப்படும் ஒரு டீலே ஆகும்.

நம்மை காப்பாற்ற இறைவனுக்கு நாம் செலுத்தும் பக்தி அவசியமில்லை.அது உண்மையான இறைசக்தி என்றால் கும்பிட்டவனை மட்டும் காப்பாற்றாமல் எல்லா உயிரையும் தான் காப்பாற்றும்.

இறைவனை அறியாதவர்கள் மட்டும் தான் அவன் மேல் பக்தியை செலுத்துகிறார்கள்..பயந்து போகிறார்கள்.இறைவனை அறிந்தால் அதன்பின் பக்தியும் வேண்டியதில்லை,பயமும் வேண்டியதில்லை.

பரிட்சையில் தேறியபின் பள்ளிக்கு போகவேண்டிய அவசியம் இல்லையல்லவா?

இதனால் எல்லாம் பக்திக்கு அவசியமே இல்லை என்று நினைக்க கூடாது..அதற்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்பதை குறிக்கவே இதை எழுதலானேன்.நமக்கு தேவைகள் அற்றுப்போகுமானால் பக்தி செலுத்த வேண்டிய அவசியமும் அற்றுப்போகும்.தேவைகள் இருக்கும்வரை பக்தியும் நீடித்திருக்கும்.

மரணத்தை பற்றிய அச்சத்தை விட்டொழித்தவனுக்கும்,தேவைகளை துறந்து கோரிக்கைகளற்று இருப்பவனுக்கும் பக்தி வேண்டியதே இல்லை.அத்தனை பக்குவத்தை அடைந்தவனும் கோடியில் ஒருத்தன் தேறுவதே துர்லபம்.

தேவைகளை துறந்து மரணத்தை பற்றிய பயமின்றி இருப்பதே நிஜமான இறைதரிசனம்.அப்படி ஒரு வினாடி நேரம் கூட நம்மால் இருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.அத்தகைய தருணத்தில் தான் மனிதன் இறைவனாகிறான்.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை,அச்சமில்லை,அச்சமென்பதில்லையே

என கவிதைகள் படைக்கிறான்.

கடவுளைக்கண்டு அஞ்சாமல் நின்றவன் கவிஞன் மட்டும் தான்.

"உன் தத்துவம் தவறென்று சபைதனில் சொல்லவும் தமிழுக்கு உரிமை உண்டு" என்றவள் ஒரு கவிதாயினிதான்.

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்றவனும் கவிஞன் தான்.

"புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்றவனும் கவிஞனே.

"பாடல்களை பாடுவதால் பிரம்மனாகிறோம்" என்றவனும் கவிஞனே..

மரணத்தை வெல்ல கவிகளால் தான் முடிகிறது.அதனால் தான் அவர்கள் கடவுளாகிறார்கள்.

நண்பன்

unread,
May 18, 2010, 3:52:11 AM5/18/10
to mint...@googlegroups.com
பிறப்புக்கு முன் விந்துவாகவும்,உணவாகவும்,பயிரா
கவும்,மண்னாகவும் இருந்தோம்.இறப்புக்கு பிறகு சாம்பலாகவும் மண்ணாகவும் இருக்கிறோம்.உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து தோன்றி மீண்டும் மண்ணுக்குள் செல்கின்றன...இந்த லாஜிக்படி பார்த்தால் நமக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை.எதோ வடிவில் தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறோம்.நடுவே வந்து சேரும் இந்த "நான்" நடுவிலேயே போய்விடுகிறது.

இந்த "நானை" வைத்து கூறப்பட்ட சுவர்க்கம்,நரகம் போன்றவை இனிய கற்பனைகளே.இவை உண்மையாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.....

நல்ல  விளக்கம் , வித்தியாசமான  அணுகுமுறை


தேவைகளை துறந்து மரணத்தை பற்றிய பயமின்றி இருப்பதே நிஜமான இறைதரிசனம்.அப்படி ஒரு வினாடி நேரம் கூட நம்மால் இருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.அத்தகைய தருணத்தில் தான் மனிதன் இறைவனாகிறான்.

இதுதான்  உண்மை

2010/5/18 செல்வன் <hol...@gmail.com>

சொர்க்கம், நரகமின்றி நல்லவனாக இருத்தல்...
 
--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

செல்வன்

unread,
May 18, 2010, 3:50:31 PM5/18/10
to mint...@googlegroups.com
நன்றி நண்பன் ஐயா

2010/5/18 நண்பன் <naz...@gmail.com>

--
செல்வன்

www.holyox.tk

"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin

செல்வன்

unread,
May 19, 2010, 3:00:07 AM5/19/10
to mint...@googlegroups.com

பக்தி என்பது அறிவில் குறைபாடான நிலை.ஆனால் இப்படி கூற ஒருவர் குறைவற்ற அறிவை பெற்ற சர்வஞராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட மனிதர்கள் நூறுகோடியில்,ஐநூறுகோடியில் ஒருத்தர் தேறுவதே துர்லபம் தான்.சொல்லப்போனால் அதிகம் படிக்க,படிக்க தான் ஒருவருக்கு தான் கற்றது கைம்மண்ணளவு என்பது தெரியவரும்.அதனால் படிப்பு அதிகரிக்க,அதிகரிக்க பணிவும் அதிகரிக்க வேண்டும்.

ஆக எத்தனை படித்தாலும் ஒருவருக்கு அறிவில் பூரணத்துவம் ஏற்படுவதில்லை.அதனால் மெத்தபடித்த மேதாவிகள் கூட அறிவில் குறைந்த மனிதர்களுக்கு தேவைப்படும் பக்தியையே நாடவேண்டியதாகிறது.

மனிதன் என்பவன் மிருகம் என்பதால் அவனது அறிவின் குறைபாடான நிலை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை.தான் ஒரு ஞானி என்று கருதிக்கொள்பவனை கண்டுதான் அவ்வப்போது ஆச்சரியப்பட்டுக் கொள்வதுண்டு.

காரணம் தான் ஒரு ஞானி என்று ஒருவன் எப்போது கருத துவங்குகிறானோ அப்போதே அவனுக்கு வீழ்ச்சி துவங்கிவிட்டது என்று பொருள்.பக்தியுடைய யாருக்கும் எந்த வீழ்ச்சியும்,அகந்தையும் ஏற்படுவதில்லை.காரணம்,பக்தி என்பது அந்த பரம்பொருள் முன் விலங்கையொத்த மனிதனை நிறுத்தும் நிலை..அந்த சக்திமுன் நின்று தன்னை அதனுடன் ஒப்பிட்ட எந்த மனிதனும் தனது தாழ்ச்சியையும் அந்த சக்தியின் உயர்வையும் பார்க்கவே செய்வான்.பணிவு என்பது அடுத்த நிமிடம் வந்துவிடும்..

ஆக,பக்தி என்பது சுயவிமர்சனம் தான்.எல்லையற்ற அந்த பரம்பொருளுக்கு முன் அற்பமானுடன் நின்று தன்னை சுய விமர்சனம் செய்துகொள்வதன் விளைவு தான் பக்தி.அந்த மகாசக்திக்கு முன் தான் தான் எத்தனை கீழானவன்,தான் உயர்வாக கருதிய அழகு,அறிவு,பனம் என்பதெல்லாம் எத்தனை தற்காலிகமானது,அற்பமானது என்று புரியும்போது அகந்தை அழிகிறது,பக்தி பிறக்கிறது.

ஆக,பக்தி என்பது அறிவிற் குறைந்த நிலை.அதனால் தான் விலங்கையொத்த மானிடர்க்கு அது தேவையானதாக இருக்கிறது.

*****


மனிதன் விலங்கு.முட்டாள்..முட்டாள்தனமாக தான் கேட்பான்.பேசுவான்.முட்டாள்தனமாக தான் பக்திஉம் செலுத்துவான்.

சகலத்தையும் அறிந்த அந்த சர்வக்ஞன் (என்பவன்(ள்) இருந்தால்) இந்த முட்டாள்தனத்தையும் பரிவோடு தான் ஏற்கிறான்.எதை எதையோ விரும்பி மனிதன் காணிக்கையாக தரும் பக்தி என்ற முட்டாள்தனமான அன்பையும் பரவசத்துடன் ஏற்கத்தான் செய்கிரான்.

அது அவனது உயர்குணத்தையும்,நமது விலங்கு நிலையையும் தான் காட்டுகிறது..

அதனால் தான் அவன் ஆண்டவன்.நாம் மனிதன்.

பக்தியின் நோக்கம் என்ன?

பலனை கருதி வைக்கப்படும் எந்த பக்தியும் வியாபாரம் தான்.அந்த பலன் எதுவாக இருந்தாலும் சரி..காசு பணமாக இருந்தாலும், சொர்க்கம்,முக்தி,மோட்சம் என்று எதுவாக இருந்தாலும் சரி..அது வியாபாரம் தான்.

"நாளை சொர்க்கம்/முக்தி/மோட்சம் கிடைக்கும்"" என்ற எதிர்பார்ப்பில் இன்று உலக இன்பத்தை துறப்பவன் திறமையான வியாபாரி.சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பவன்.

எந்த பலனும், எந்த எதிர்பார்ப்புமின்றி வைக்கப்படும் பக்திதான் நிஜமான பக்தி.

பலனின்றி,எதிர்பார்ப்பின்றி எதற்கு பக்தி வைக்க வேண்டும்?

இப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்தால் நாம் பக்தியை சரிவர புரிந்துகொள்ளவில்லை என்றுதான் பொருள்.

எந்த பலனை எதிர்பார்த்து நம் தாய் நம் மீது அன்பு செலுத்துகிறாள்?

நாம் அவள் பிள்ளை என்ற ஒரே காரணத்தால் தான் அவள் அன்பு செலுத்துகிறாள்.நாம் அவளை கொலையே செய்தாலும் அந்த அன்பை அவள் மாற்றிக்கொள்ள போவதில்லை.எந்த பலனும்,எதிர்பார்ப்பும் இன்றி வைக்கப்படும் நிஜமான அன்பு அது.

கடவுள் மனிதன் மேல் செலுத்தும் அன்பும் அதேபோன்றதுதான்.அது வரன்முறையே அற்ற,எல்லைகளற்ற,நோக்கங்களும்,குறிக்கோளுமற்ற அன்பு.

இப்படிப்பட்ட அன்புக்கு பதிலாக நாமும் அதேபோன்ற எதிர்பார்ப்பற்ற அன்பையே இறைவன் மேல் செலுத்த வேண்டும்.அந்த அன்புக்கு கைமாறாக இறைவன் பக்தனுக்கு சலுகை காட்டுவான்,முக்தியளிப்பான்,மோட்சமளிப்பான் என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

பலன் கருதி வைக்கப்படும் அன்பு விபசாரத்துக்கு சமம்.

"பலன் கருதாது வைக்கப்படும் பக்தியால் என்ன பலன்?"

கேள்வியே தவறு:-)

தாய்பாசத்தால் என்ன லாபம் என்று கேட்பது போன்ற கேள்வி இது.மழலையை கொஞ்சும் இன்பம் மட்டும் தான் தாய்க்கு இந்த உறவால் விளையும் லாபம்.அதைதவிர வேறெதையும் எதிர்பார்த்து அவள் பிள்ளையை பெறுவதில்லை.

மனதில் இருக்கும் கோரிக்கைகளையும்,கசடுகளையும் உதறியெறியுங்கள்.நிர்ச்சலனமாய் இறைவன் முன்நில்லுங்கள்.எந்த கோரிக்கையும் இல்லாமல் அவன் மேல் அன்பு செலுத்த முடிகிறதா என்று பாருங்கள்.முடிந்தால் அன்பு செலுத்துங்கள்.முடியாவிட்டாலும் பரவாயில்லை..மனதில் இருப்பதை வாய்விட்டு கேட்டுவிடுங்கள்.அவன் கோபித்துக்கொள்ள மாட்டான்.

பிஸ்கட் கேட்டு என் வீட்டு நாய் வாலாட்டினால் நான் கோபித்துக்கொள்ளவா போகிறேன்?

அவனும் கோபித்துக்கொள்ள மாட்டான்.சிரித்து மகிழ்வான்..குழந்தை தப்பே செய்தாலும் சிரித்து மகிழ்பவள் தானே தாய்?

venkatachalam Dotthathri

unread,
May 24, 2010, 10:48:39 AM5/24/10
to mint...@googlegroups.com
ஓம்.
கற்பகதரு உன்னதமான பொருள்களை கணநேரத்தில் தரும் என்பது ஒரு கோட்பாடு.
அதனடியில்  நின்று  கொண்டு காப்பித்தூள்  வேண்டும்  என்று நினைப்பது நம்வாழ்வு.  உள்ளுவதெல்லாம்  உயர்வுள்ளல்  என்றார்  பெருந்தகை. எது நம் தேவை என்பதில்தான், நிர்ணயிப்பதில்தான்  சிக்கல். வால்மார்ட்டில் ஒளிரும்பொருள்கள் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொண்டு பணத்தையும் வாரிவிடும். வசதிகளைக்  கண் முன்  காட்டி இலகுவில் கையகப்படுத்த வாய்ப்பு அமையும்போது  அது  இல்லாமல்  தீராத  ஒன்றாகி விடுகின்றது.

அவசியம் என்று ஒரு நேரம் மயங்கும் நிலை மறுகணம் மாறுகின்றது.  அது அவசியமற்றதாகிவிடுகிறது.
ஊருக்குள்  புகுந்தது காட்டாற்று வெள்ளம். அலறிப்புடைத்து மக்கள் தறிகெட்டு ஓடுகிறார்கள். மனைவிமக்களுடன் ஒருகனவான் ஆற்று நீரில் சிக்கியவர் கடைக்குட்டிப் பிஞ்சுக்குழந்தையைத் தன் தோளின்மீது வைத்துக் கொண்டு மனைவியை ஒருகையிலும், மூத்தமகனை  ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு மறுபுறம் சற்றே உயரமான பகுதிக்கு விரைந்துகொண்டிருக்கிறார்.  நீர்வரத்து பெருகிக் கால்கள் தள்ளாடி நிலை கொள்ளாமல் தவித்து தாளமாட்டாத நிலையில் மூத்த மகனைக் கைவிட்டு 'நீரின் ஓட்டத்தின் போக்கிலேயே நீந்திவா.  நான் அம்மாவுடன் கரை ஏறிஉன்னைத் தேடிவருவேன். உன்னை வாய்ப்பிருந்தால்உயிரோடுசந்திப்பேன்.  மனம்கலங்காது முன்னேறிச்செல்' என்று கூறிவிட்டுத் தோளின் மீது அமர்ந்திருந்த பையன் தவறி விழுந்தவனை நீர் இழுத்துச்செல்வதை மீட்க  இயலாமல்  மனைவியை மட்டும்  பலம் கொண்டவரை கையினைப்  பற்றிக் கொண்டு சென்று ஒருசுழலில் அவளையும் கைவிட்டு அவர் மட்டும் குற்றுயிராய் ஒதுக்கப்பட்டு தாழைப்புதரில் சிக்கி உயிர் பிழைத்தார்.
தலைக்குமேல் போன பின்னர் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்றநிலை பயமற்றதுணிவு. அங்குத்தான் ஆன்மீகம் உணரப்படுகிறது. கற்றவித்தை பயனளிப்பதில்லை. எத்தனை கோடிஇன்பம் வைத்தாய், எங்கள்இறைவா!
ஓம்.வெ.சுப்பிரமணியன்.

2010/5/19 செல்வன் <hol...@gmail.com>

Astrologer Vighnesh சென்னை

unread,
May 24, 2010, 11:53:06 AM5/24/10
to mint...@googlegroups.com

உண்மையே இறைவன் 
கவிக்கோ. அப்துல் ரகுமான்

Abdul Rehmanமதம் இன்று ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. ‘மதவாதி’ என்று ஒருவனை இன்று சொல்கிறோம் என்றால் மோசமான ஆள் என்று சொல்கிறோம் என்று ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் எல்லா மதங்களிலும் மதவாதிகளிடம் லேபிள் மட்டும்தான் இருக்கிறது. உள்ளே சரக்கே இல்லை. மதம் படித்திருக்கிறார்களா என்றால் இல்லை மதம் பிடித்திருக்கிறார்கள்.

சமயங்கள் அத்தனையும் அடிப்படையான உண்மையாக ஒன்றைத்தான் சொல்கின்றன. உண்மையே இறைவன் என்றால் நாத்திகம் வந்திருக்காது. இறைவன் உண்மை என்றான் பிரச்சனை வந்துவிட்டது. உண்மை ஒன்றல்ல பார்வையற்றவர்கள் பார்த்த யானை போல உண்மை பலவாக இருக்கிறது. இருப்பது எதுவோ அதுதான் சத்தியம். இறைவனை ஒருவன் நம்புகிறான் என்று சொன்னால், அவனால்தான் எல்லா உயிர்களும் படைக்கப் பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறான் என்று சொன்னால் பிற உயிர்களுக்கு எப்படி அவனால் தீமை இழைக்க முடியும்

மனித உடல்தான் உண்மையான இறைவனின் உயிராலயம், வள்ளலார் ஜீவகாருண்யத்துக்கு ஓர் அற்புதமான விளக்கம் கொடுத்தார்; “இறைவன் இருக்கின்ற உயிராலயமாகிய இந்த உடல் பசியென்ற நெருப்பினால் எரிகின்ற பொழுது, அதை யார் ஒருவன் ஆகாரம் என்ற நீரால் அணைக்கின்றானோ அவன்தான் ஜீவகாருண்யன்” என்று.

இறைவனை எந்த ஞானியும் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியாது. ஏனென்றால் மனித மூளையின் செயல்பாட்டுக்கு ஓர் எல்லை உண்டு. வானவில்லில் ஏழு நிறம் என்கிறோம். ஏழுநிறம்தானா? அல்ட்ரா வயலட், இன்ஃபரா ரெட் என அது விரிவடைகிறது. பனிமலை நீரின் மிதக்கிற போது ஒரு முனை தெரியுமே அதுமாதிரியே இறைவனை தெரிந்து வைத்திருப்பது. பௌதீகத்தை கண்டறிவதே இப்படி என்றால் அபௌதீகத்தை எப்படி கண்டறிவான்.

பெரியபுராணத்தில் ஓர் அற்புதமான பாடல். சுந்தரமூர்த்தி நாயனாரை கல்யாண கோலத்தில் தடுத்தாள் கொண்டு ‘நீ என்னுடைய அடியவன்’ என்று இறைவன் சொன்னபோது, சுந்தரமூர்த்தி நாயனார் ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கிறார், அதற்கு இறைவன் ‘எனக்கு சிறப்புமிக்க அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக என்றான் தூமரை பாடும் வாயான். சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை பிறக்க வைத்ததன் நோக்கமே ‘தமிழில் பாடுவதற்கு’ என்கிறார் சேக்கிழார். எவ்வளவு தமிழ்ப்பற்று? அதென்ன சொற்றமிழ்; இறைவனைப் பாடுவதற்குரிய மொழி தமிழில்தான் இருக்கிறது. வேறு மொழிகளில் இல்லை. உலகம் முழுவதும் இறைவனை அவன்/அவள் என்றுதான் சொல்ல வேண்டும். சிவப்பிரகாசர் சொன்னார் தமிழில்தான் அவன் என்றால் ஆணாகிவிடுவாய், அவள் என்றால் பெண்ணாகி விடுவாய். அவர் என்ற பொதுச்சொல் தமிழில் இருக்கிறது நான் தப்பித்தேன் என்று.

சொற்றமிழ் பாட சொன்னவன் யார் என்றால் தூயமறையை யார் ஆக்கினானோ அவன் சொன்னான். மொழி பிரச்சனைக்கு இங்கு இடமே கிடையாது. இறைவனுக்கு சமஸ்கிருதம் மட்டும்தான் தெரியும் என்பவர்களுக்கு இறைவனைப் பற்றியே தெரியவில்லை என்று அர்த்தம். சாதாரண மனிதனுக்கே பத்துமொழி தெரியும். சாதாரண மானவனைவிட இறைவன் மோசமானவனா?

சங்க இலக்கியம் முழுக்க படித்துப் பார்த்தோம் என்றால் தொல்காப்பியத்தில் பார்த்தோம் என்றால் உலகமே வாழ்க்கை. அதை அகம், புறம் என்று இரண்டாக பிரித்தார்கள். ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கூடி வாழ்வதற்கு அகம் என்றார். அகம் என்றால் வீடு என்ற ஓர் அர்த்தமும் இருக்கு. அகம் என்றால் உள்ளம் என்ற அர்த்தமும் இருக்கு. உள்ளத்தால் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது அகம். அகம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் மெய். ஆககுடும்பம் என்பது மெய்யென்று சொன்னான் அகம்-புறம் அதான் மதம். சங்க காலம் முழுக்க நாம் பார்த்தால் பெரிய கோயில்களோ, பெரிய திருவிழாக்களோ இருந்ததாகத் தெரியவில்லை.

சங்க காலத்தைப் பொற்காலம் என்று சொல்ல ஒரு காரணம் அங்கு மதச்சண்டைகளே இல்லை. திணை நிலங்களை வணங்கி இருக்கிறான். குறிஞ்சியில் முருகன், முல்லையில் திருமால், மருதத்தில் இந்திரன், நெய்தலில் வருணன் என வணங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் நெடுங்காலமாக முருகனைத்தான் தலைமை தெய்வமாக வணங்கி இருக்கிறார்கள். அங்கேயும் அவர்களின் ஆன்மீக நுட்பம் தெரிகிறது. முருகனுக்கு வைத்த பெயர் ‘முருகு’ என்பது. முருகன் என்றோ முருகள் என்றே வைக்கவில்லை. திருமுருகு ஆற்றுப்படை என்றுதான் வைத்தார். முருகன் என்றால் இறைவன் ஆணாகிவிடுகிறான். இறை தத்துவம் ஆண்மை மட்டுமல்ல. முருகள் என்றால் இறைவன் பெண்ணாகிவிடுகிறான். இறைத்தத்துவம் பெண்மை மட்டுமல்ல. ஆண்மையும் பெண்மையும் கலந்தது. அதுதான் அர்த்த நாரீசுவரர் வடிவம்.

முருகு என்றால் அழகு என்று பொருள். அழகை தமிழன் ஆண்டவனாக வணங்கி இருக்கின்றான். பூவைப் பறித்து இறைவனுக்கு அர்ச்சனைப் பண்ணி கொண்டிருந்தவர் தாயுமானவர். ஒருநாள் பூவை பறிக்கப் போனவரை பூ பறித்துவிட்டது. அப்பொழுதுதான் ஆண்டவனை தரிசிக்கிறார். உன்னையே பிடுங்கி உன்மேல் போட்டு நான் பூசையென்று நினைத்துக் கொண்டிருந்தேனே என்கிறார். தமிழர்களின் சிறப்புகளில் மற்றொன்று. உயிர் எழுத்து மெய்யெழுத்து என்று பெயர் வைத்தது. உலகில் யாரும் எழுத்துக்களுக்கு இதுமாதிரி பெயர் வைக்கவில்லை. உயிர் எழுத்தை முதலிலும் மெய்யெழுத்தைப் பின்னாடியும் வைத்திருக்கிறார்கள். என்ன அர்த்தம் என்றால் உயிர் தோன்றியது முதலில் பிறகு மெய் தோன்றியது. உயிரில்லாமல் மெய் இருக்காது. தமிழர்கள் ஞானத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஒழுக்கத்தையே மதமாக வைத்திருக்கின்றார்கள். அதனால் பெயர் வைக்கும் போதுகூட உயர்திணை என்று வைத்தார்கள். திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். தொல்காப்பியர் கூறுகிறார். ‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே’ என்று. பிறரால் எவன் மனிதன் என்று சுட்டிக்காட்டப் படுகின்றானோ அவன்தான் மனிதன். உயர்வுக்கு எதிர்பதம் தாழ்வு. ‘தாழ்திணை’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஆனால் தொல்காப்பியர் அஃறிணை என்று வைத்தார். உயர்வு அல்லாத மற்ற திணைகள் என்பது பொருள். தாழ்ந்ததைக் கூட தாழ்ந்ததென சொல்லக்கூடாது என்று தமிழ்ப் பாண்பாடு நினைக்கிறது. எனவே அது உய்வு அல்லாத திணை என்றார்.

சத்தியம் என்பது ஒன்றுதான் என்ற வார்த்தை வேதத்தில் வருகிறது. இதையெல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பலவாக இருப்பது என்பது நாம் புரிந்து கொண்டது. இதைத்தான் தெய்வங்கள் பல பெயருடனும் வடிவத்துடனும் வணங்கப்படினும் அவை எல்லாமாயிருப்பது ஒருவனே என்ற கருத்து சங்க இலக்கிய பரிபாடலில் வருகிறது.

பாமரர்களுக்கு இருக்கிற இறை பற்றி ஞானம் கூட படித்தவர்களிடம் மதவாதிகளிடம் இல்லை. பாமர மக்கள் கூறினார்கள், ‘அரியும் சிவனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று.

(மதுரை காமராசர் பல்கலைக்கழக சமயங்கள், தத்துவம், மனிதநேயம் புலத்தின் சார்பில், தமிழ்ச்சமய மரபுகளும் உலகச் சமயங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் முதன்மை உரையாகப் பேசியதிலிருந்து) நன்றி:: கவிக்கோ. அப்துல் ரகுமான்

K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrologicalremedies.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh
Reply all
Reply to author
Forward
0 new messages