---------------------------------------------------
அன்புள்ள பானுகுமார் அவர்களுக்கு,
தேவாரத்தில் ,
அதாவது மூவர் முதலிகள் எனப்படும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் அருளிய
(கிடைத்து பண்ணமைக்கப் பட்டவை = choreographed + பிற்சேர்க்கைகள் )
799 பதிகங்களில் (386 + 313 + 100 = 799)
உள்ள வை
8274 பாடல்கள் (4180 + 3068 + 1026 )
இவைகளில் ஐந்து முகம் எனும் கருத்து காணவில்லை
ஆனால்
ஐந்து தலை நாகம் (பார்சுவனதர் தொடர்புடன் உள்ளது போல்)
சிவன் தொடர்புடன் நூற்றுக்கனகான பாடல்கள் உள்ளன
மேலும்
பிரமனுக்கு 5 தலைகள் இருந்து அதனில் ஓர் தலையை சிவபெருமான்
கிள்ளியதாக 2 ஆசிரியர்கள் பாடிய 3 பாடல்களில் உள்ளன கீழே காண்க
(1)
கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவச்
செறுத்தான் திகழுங்கடல் நஞ்(சு) அமுதாக
அறுத்தான் அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தானிடம் பூம்புகலிந்நகர் தானே 1.30.7 திருப்புகலி / சம்பந்தர்
(2)
சங்கரன்காண் சக்கரமாற்(கு) அருள்செய்தான் காண்
தருண் ஏந்து சேகரன் காண் தலைவன்தான் காண்
அங்கமலத்(து) அயன்சிரங்கள் ஐந்தில் ஒன்றை
அறுத்தவன் காண் அணிபொழில்சூழ் ஐயாற்றான் காண்
எங்கள்பெருமான் காண் என் இ¢டர்கள் போக
அருள் செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடைசூழ் திருவாரூரில்
திருமூலத்தானத்(து) எம் செல்வன் தானே 6.30.6 திருவாரூர் / அப்பர்
(3)
ஆதியனை எறிமணியின் ஓசையானை
அண்டத்தார்க்(கு) அறிஒண்ணா(து) அப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
சுரும்(பு) அமரும் மலர்க்கொன்றைத் தொல்நூல் பூண்ட
வேதியனை அறம் உரைத்த பட்டன் தன்னை
விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனைத் திருஆனைக்கா உளானைச்
செழுநீர்த் திரளைச் சென்(று) ஆடி னேனே 6.63.7 திருஆனைக்கா / அப்பர்
ஏழூர்கள் (சப்தஸ்தானத் தலங்கள் = திருவையாறு+6) எனவும்
சிவன் தன் எட்டு வீரச்செயல் தொடர்புடன் அட்ட வீரட்டம் எனும் தொகையிலும்
காணும் திருக்கண்டியூர் இந்த பிரமன் தலை கொய்த வீரச் செயலுடன் காட்டப்படுகின்றது
தஞ்சைக்கு வடக்கு 5-6 கி மீ உள்ள அந்தவூரில்தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயிலுடன்
ஆழ்வார்கள் பாடிய (மங்களாசாசனம் ) கோயில் ஒன்றும் இருகின்றது தவிர முன்பு ஓர் முறை
சென்ற போ து பாழ டைந்து இருந்த வேறு ஓர் பெரிய கோயில் இப்போது சென்ற மாதம் தஞ்சைக்கு
கல்வெட்டு பயிலரங்கம் ஒன்றிற்கு சென்ற போதும் வழிபட்டேன் அந்த கோயில் சீர் செய்யப்பட்டு
பிரமன் கோயில் என்று மாறி உள்ளது
மேலும்
(1)
எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் அருளிய திரு வாசக கீர்த்தித் திருவகலில்
- - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - -
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 18 // மாஏ ட்டு = ஓலையில் எழுதிய //
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து // வேதம் போல் எழுதாக்கிளவி அல்லாதது ஆகமம்
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
- - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - -
என சிவனின் ஐந்து முகம் பேசப்படுகின்றது
இந்த மகேந்திரம் எனும் இடம் எது என்னும் ஐயம் இருந்தாலும்
மிக பாழமை வாய்ந்த ஒடிசாவிலுள்ள மகேந்திர கிரிதானகும் என்பது என் எண்ணம்
குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி (**)
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர்
சேக்கிழார் பெரிய புராணம் புகழ்சோழ நாயனார் புராணம் 12.3942 ( 12- 8.2.1)
குல கிரி= மகேந்திரகிரி - ஓறிசா
(2)
அதான்று பத்தாம் திருமுறையாகக் கொள்ளப்படும் மூவர் முதலிகளுக்கும்
முந்தாயவரான திரு மூலரின் திரு மந்திரத்தில் 7 பாடல்களில்
ஐந்து முக முடைய கடவுள் போற்றப்படுகின்றது காணலாம்
-----------------------------------
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே 10.708 ஐம்முகன் = சிவன்
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம் ஐந்து முக்கண் முகம்தொறும்
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே 1334 நாகம் = யானை
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் வேதா- பிரமன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே 10.1731
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்து ஈசானனே 10.1741
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே 10.1776
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே 10.1807
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே 10 2417
தமிழகத்து சித்தாந்த சைவர்களின் 12 திருமுறைகளில்
11 வதாக கொள்ளப்பட்டுள்ள 12 ஆசிரியர் களியற்றிய
நூல்களின் தொகையினி ல் உள்ள பாடல் ஒன்றிலும்
குறித்துள்ளமக் காண்க
- - - - - - - -
- - - - - - - -
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத்து அருங்காய் தோன்றி நஞ்சுபொதி அஞ்செழுத் தருங்காய் தோன்றி= அஞ்செழுத்து 5 முகங்களாகும்
காள கண்டமும் கண்ணொரு மூன்றும் காள கண்டம்= நீலமிடறு
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் 20 தவளம் = முத்து = ஒளி ரும் வெண்மை
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
- - - - - - - -
- - - - - - - -
பட்டினத்துப் பிள்ளையார்
திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி
(**)
இந்த 13 ம் நூற்றாண்டு பெரும் காவிய ஆசிரியராம் சேக்கிழாரின் வாக்குப்படி
சோழர்கள் புலிக்கொடி பதித்தது மகேந்திரகிரி ஆகவேண்டும்
( இமயம் = ஹேம = குளிர்ச்சி மிக்க / உயரத்தினால்) /
குல கிரி = மகேந்திர மலை
மகா+ இந்திரன் = மகேந்திரன்
குல கிரி = வழிபடும் தெய்வம் = கோயிலகள் இருக்கும் மலை
தேவர்குலம் தொழுவான் >>> இறையனார் அகப்பொருளுரை