(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி)
சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு
2
தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும் ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார்.
இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு
ஏ தாழ்ந்ததமிழகமே!
என்று நீ சமூக நீதி பெறுவாய்?
ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே!
என்று நீ சமநீதி பெறுவாய்?
ஏ ஒடுக்கப்பட்ட தமிழகமே!
என்று நீ இனவுணர்வு கொள்வாய்?
திராவிட இயக்க மாநாடுகளில் இராமச்சந்திரனார் கொண்டு வந்த ஒவ்வொரு தீர்மானமும் சீத்திருத்த நோக்கம் கொணடவை. பள்ளிகளில் சாதி வேறுபாடற்ற கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பெற வேண்டும் பாடப்புத்தகங்களில் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பெற்றுப் பகுத்தறிவு புகட்டப்பட வேண்டும் என்பவை முதன்மையானவை. இவை ‘திராவிடத் தீர்மானங்கள்’ என்னும் எட்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
‘இராமச்சந்திரனார் பேசுகிறார்’ என்னும் ஒன்பதாவது கட்டுரையில் அவரதின் பேச்சகளைக் குறிப்பிட்டு அவற்றின் மூலம் அவரது கோட்பாடுகளை விளக்கியுள்ளார்.
‘எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்’ என்னும் பத்தாவது கட்டுரையில் 1913 இல் சட்டக் கல்லூரியல் பயின்ற பொழுதே சீர்திருத்தப்பாதையில் பயணித்து தென்னிந்திய நல உரிமைச்சங்கப் பணிகளில் ஈடுபட்டுப் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றமையைக் குறிப்பிட்டுள்ளார்.
‘மாவீரர் கண்ட மாநாடுகள்’ என்னும் பதினோராம் கட்டுரையில் மேலும் அவர் பங்கேற்ற மாநாடுகளின் சிறப்புகளை விளக்கியுள்ளார்.
‘கொள்கை அரசர் ஆண்டகுடியரசு’ என்னும் பன்னிரண்டாம் கட்டுரையில் இவரின் அரசியல சுவடுகளைக் குடியரசு இதழ் பதிந்துள்ளவற்றை விளக்கியுள்ளார்.
‘வகுப்புரிமை பற்றி வ.உ.சிதம்பரனார்’ பேசியதைப் பதின்மூன்றாம் கட்டுரையாக அளித்துள்ளார்.
‘சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்குப் பார்வை’யைப் பதினான்காம் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
‘தலைமுறைத் தலைவர்கள்’ எனப் பெரியார், இராமச்சந்தினார் அறிஞர் அண்ணாவைக் குறிப்பது பதினைந்தாம் கட்டுரை.
‘பெரியாரின் உறவினர்’ என்னும் பதினாறாம் கட்டுரையில் இராமச்சந்திரனாரைப் பெரியார் போற்றுவதைக் குறிப்பிடுகிறார்.
“தோழர் இராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய செளகரியமும் இருந்தும் அவற்றை இலட்சியம் செய்யாமல், இயக்கத்திலேயே கவலை கொண்டு மற்றவற்றை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரும் ஆவார்” என்று எழுதியுள்ளார்.
கடமை உருவாக்கிய உறவு நாகம்மையார் நட்பு
முதுமை உருவாக்கிய உறவு மணியம்மையார் நட்பு
காலம் உருவாக்கிய உறவு இரசாசி நட்பு
கொள்கை உருவாக்கிய உறவு இராமச்சந்திரனர் நட்பு
என இக்கட்டுரையை முடிக்கிறார்.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற தன்மதிப்பு மாநாட்டிலும் தன்மதிப்பு மாநாட்டிலும் அதற்கு முன்னரே நடைபெற்ற பல பொதுக்கூட்டங்களிலும் தந்தை பெரியாரை இராமச்சந்தினார் பெளத்தர் என்று அடைமொழி இட்டு அழைத்து வந்தார்.
இருபதாம் நூற்றாண்டு பெளத்தர்
நமது பெளத்தர்
தீர்க்கதரிசி பெளத்தர்
பெளத்தர்
எனப் பலமுறை பல வகைகளிலும் அழைத்து வந்துள்ளார்.
இதனைப் ‘புத்தரும் புனிதரும்’ என்னும் பதினேழாம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘அண்ணாவின் வைரவிழுது‘ என்னும் பதினெட்டாம் கட்டுரையில் இராமச்சந்திரனார் மீது அண்ணா வைத்திருந்த மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார். 28.02.1984 இல் சிவகங்கையில் இராமச்சந்தினார் பெயரில் பூங்கா ஒன்றை அண்ணா திறந்து வைத்தார். அப்போது ஆற்றிய உரையில் முத்தாய்ப்பாக அண்ணா கூறியதை நிறைவு செய்து இக்கட்டுரையை முடித்துள்ளார். அவ்வுரை வருமாறு
‘சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி’ என்று தொண்டர்கள் சொன்னதாகவும் ‘இனமானக் காவலர்’ என்று திராவிட இனம் சொல்வதாகவும் ‘அறிவுப் பூகம்பம்’ என்று திராவிடன் நாளேட்டின் ஆசிரியர் செ.எசு.கண்ணப்பன் சொன்னதாகவும் ‘மூட நம்பிக்கையை அழிக்க வந்த பீரங்கி’ என்று பட்டுக்கோட்டை அழகிரி சொன்னதாகவும் ‘சுயமரியாதைக் களஞ்சியம்’ என்று பூவாலூர் பொன்னம்பலனார் சொன்னதாகவும் ‘எனக்கு ஊக்கமளித்த வழிகாட்டி’ என ஆர்.வி.சாமிநாதன் சொன்னதாகவும் ‘என்னை உயர்த்திய தலைவர்’ என்று வி.வி.இராமசாமி சொன்னதாகவும் ‘என்னைப் பொதுவுடைமை வாதியாக உருவாக்கிய செம்மல்’ எனத் தோழர் சீவா சொன்னதாகவும் ‘கருப்பு மெழுகுவர்த்தி’ என்று கைவல்ய சாமியார் சொன்னதாகவும் ‘சுயமரியாதைச் சிங்கம்’ என்று குத்தூசி குருசாமி சொன்னதாகவும் சமூகநீதிச் சிற்பி என்று ஈரோடு ஐயாமுத்து சொன்னதாகவும் ‘பெண்கள் விடுதலைக்காகக் கொட்டும் முரசு’ என்று மரு.முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் சொன்னதாகவும் ‘ஈரோட்டின் பகுத்தறிவுப் பதிப்பகம்’ என்று இலக்கியவாதிகள் சொன்னதாகவும் ‘சுயமரியாதையில் தீட்டப்பட்ட வைரம்’ என்று எழுத்தாளர்கள் சொன்னதாகவும் ‘என் பூணூலை விலைபேசிய பகுத்தறிவு வாதி’ என்று மதுரை காங்கிரசு தலைவர் வைத்தியநாத ஐயர் சொன்னதாகவும் அண்ணா சொல்லி முடித்தார்கள்.
தொடரும்
இலக்குவனார் திருவள்ளுவன்
(மாசி 10, 2057 ஞாயிறு 22.02.2026 அன்று நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழகக் கூட்டத்தில் ஆற்றிய நூலாய்வு உரை)
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 May 2026
(வெருளி நோய்கள் 1441 -1445: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1446 -1450
நாட்டுப்புற இசை / நாட்டார் இசை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாட்டார் இசை வெருளி.
நாட்டுப்புற இசை என்பது மரபு வழியிலான இசையே. செவ்விசையும் இதில் அடங்கும். எனினும் அடித்தட்டு மக்கள் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், இதனை இழிவாக எண்ணுவோர் பலர் உள்ளனர். இது, போர், ஒடுக்குமுறை, அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரலாகவும் (Protest Music) பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பூர்வகுடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள், அவர்களின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கும், இனப்படுகொலை, கட்டாயப் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கும் பயன்படுகின்றன. நாட்டிசை எதிர்(Anti-Folk)
1980-களில் நியூயார்க்கு நகரில் உருவான இந்த வகை, வணிகமயமாக்கப்பட்ட மரபார்ந்த நாட்டுப்புற இசையின் தீவிரத்தன்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நாட்டுப்புறப் பாடல்கள் (நாட்டார் பாடல்கள்) என்பவை உழைக்கும் மக்களின் களைப்பைப் போக்க மட்டுமல்லாமல், குமுகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், வறுமை, இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்த்துப் பாடும் பாடல்களாகவும் இருந்துள்ளன. ஆதலின் எதிர்ப்பிற்கு உள்ளாவோர் தரப்பினருக்கு நாட்டுப்புற இசை என்பது பேரச்சத்தை விளைவித்தது.
Kantori என்பது நாட்டைக் குறிக்கும். இங்கே நாட்டின் இசையை நாட்டார் இசையைக் குறிக்கிறது. இசை என்பதில் பாடலும் அடக்கம்.
Choreftiko என்பது நாட்டிய இசையைக் குறிக்கிறது. ஆடலுடன் இணைந்த நாட்டுப்புற இசையை இங்கே குறிக்கிறது.
Rusmus என்பது உருசிய நாட்டார் இசையைக் குறிக்கும் இத்தாலியச் சொல் என்பர் சிலர்.
Weltmusik என்பது உலக இசையைக் குறிக்கும் செருமானியச் சொல்.
00
நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் வருகை தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் நாட்டவையர் வெருளி.
பொதுவாகச் சிறப்பாளர்களை அழைத்து மகிழ்வித்துத் தங்கள் பணிகளைக்காட்டி அரசு உதவிகள் பெற விரும்புவர். இருப்பினும் தாமாகவே சிறப்பு நிலையினர் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய மக்கள் சார்பாளர்கள் வருகை புரிந்தால குற்றம் குறை ஏதும் கண்டறிந்து செயல்பாட்டிற்குத் தடை விதிப்பார்களோ என்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
பொதுவாக இவ்வெருளி மருத்துவமனையினருக்கு ஏற்படும். ஏனெனில் இங்குதான், நேர்ச்சிகளின்(விபத்துகளின்) பொழுதும், தொற்றுநோய் பரவும்பொழுதும், அவசர நேர்வுகளிலும் நோயாளிகளைப் பார்ப்பதற்கு மக்கள் சார்பாளர்கள் திடீரென்று வந்து செல்கின்றனர்.
நாடாளுமன்ற அவையைச் சேர்ந்தவர்கள் என்பதையே நாட்டவையர் எனக் குறித்துள்ளேன். இது மாநில அளவிலான சட்டமன்ற அவையினரையும் குறிக்கும்.
பண்டைய உரோமில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை magistratus என்னும் சொல் குறிக்கும். இதிலிருந்து வந்ததே Magi என்பது. மருத்துவமனையைக் குறிக்கும் valetundinarium என்னும் சொல்லில் இருந்த உருவானதே valo என்பது.
00
நாட்டியம் குறித்த இயல்பு கடந்த பேரச்சம் நாட்டிய வெருளி.
நாட்டியத்தை ‘நரகத்தின் பாதை’ என்று சொல்லி வெறுப்போரும் அஞ்சுவோரும் இருக்கின்றனர்.
நாட்டியத்தில் இணைந்து ஆடுநர் – குறிப்பாக மறுபாலினத்தவர் – தொட நேருவது கூறித்து வெறுப்பு அடைந்து நாட்டியத்திற்கு அஞ்சுகின்றனர். எனவே, நாட்டிய வெருளிக்கு ஆளானவர்கள், தீண்டல் வெருளி(Chiraptophobia), தீண்டுகை வெருளி (Haptophobia/ Haphephobia/ Haptephobia/ haphophobia/ hapnophobia/ Aphephobia) ஆகியவற்றிற்கும் ஆளாகின்றனர்.
நாட்டியம் மீதான அளவு கடந்த பேரச்சத்தை saltaphobia / Saltophobia என்றும் சொல்கின்றனர்.
salta என்னும் இலத்தீன் சொல்லிற்கு நேர் பொருள் குதித்தல். இவற்றைக் குதியாட்ட வெருளி எனலாம். இங்கே குதித்தாடுதல் என்னும் பொருளில்நாட்டியத்தைக் குறிப்பதால் தனியே குறிக்காமல் நாட்டிய வெருளியாகவே குறிக்கலாம்.
choro என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நாட்டியம் என்று பொருள்.
00
நாணயப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாணயப் பொறி வெருளி.
நாணயப் பொறி =சூதாட்டத்தில் பணம் செலுத்துவதற்குரிய துளை உள்ள இயந்திரம்.
00
திரைப்பட/தொலைக்காட்சிப் படக் கதை நாயகர்கள் தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நாயகன் வெருளி.
கதை நாயகர்கள் தனித்து நின்று பலரை எதிர்ப்பது போன்ற காட்சிகளால் அவர்கள் மீது பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். இப்பொழுதெல்லாம்நாயகர்களை மதிப்பதை விட எதிர்நாயகர்கள்பால் ஈர்ப்பு உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். எதிர்நாயகர் நாயகிகளைக் கதைத் தலைவர்களாகக் காட்டுவதால் வரும் தீய விளைவே இது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5