இலக்குவனார் சங்கத் தமிழ் விருது
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
சங்கத்தமிழை இணையத்தளங்கள், வலைப்பூக்கள்,
கட்டுரைகள், நூற்கள், சொற்பொழிவுகள், போட்டிகள்,
வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும்
பரப்பும் சங்கத் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் சங்கத்
தமிழ் விருது வழங்கப் பெறும்.
இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி ஆகியன இணைந்து வழங்க
உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய
விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல்,
தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன
வேண்டுகிறோம். சங்கத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களை அறிந்த
பிறரும் பரிந்துரைக்கலாம்.
விருது பெற விழைவோர் தங்கள் பெயர், முகவரி, மின்வரி,
பேசி எண் முதலிய விவரங்களை வரும் புரட்டாசி 24,2056/
10.10.2025ஆம் நாளுக்குள் thamizh....@gmail.com
மின்வரிக்குத் தெரிவிக்க வேண்டப்படுகின்றனர்.
முழுமையான விருது விண்ணப்பத்தை ஐப்பசி 24,2056/
10.11.2025 ஆம் நாளுக்குள் அதே மின்வரிக்கு அனுப்பி
வைக்க வேண்டப்படு கின்றனர்.
இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்பு க்கழகம்
புலவர்ச.ந.இளங்குமரன்
நிறுவுநர்-செயலர், வையைத்தமிழ்ச்சங்கம், தேனி
பொறி.திருவேலன் இலக்குவன்
ஒருங்கிணைப்பாளர்,
இலக்குவனார் இலக்கிய இணையம்