தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்குடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ் மின் நூலகத்தில் (https://tamildigitallibrary.in )இதுவரை இலட்சக்கணக்கான அரிய நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின்பதிப்பாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இப்பெரும் பணியின் ஒரு பகுதியாக நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 37 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் கீழ்க்காணும் 14 அறிஞர்களின் படைப்புகள் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.