இன்றைய மூலிகை - பொடுதலை

452 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Dec 2, 2009, 10:39:06 PM12/2/09
to minT...@googlegroups.com
 இன்றைய   மூலிகை -        பொடுதலை ---
சுகுமாரன்  



பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் பொடுதலையும் ஒன்று மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை .
பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும்..பொடுகை நீக்குவதைத் தவிர வேறு பல மருத்துவ குணங்களும் அடங்கியது பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பெயரைச்சொன்னாலே போதுமாமம் !
பேதி ஓடியே போய்விடுமாம் !
 
Phyla nodiflora - Phyla - 080602-5472


இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது.  இதைபல்ர் கவனித்துக்கூட இருக்கமாட்டார்கள் . தரையை  ஒட்டி செடியாக  இருக்கும் இடங்களில் சற்று ஊன்றிப்பாருங்கள் 
 இதன் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணங்களுடையனவாகும்.


பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்
அடுதலை செய் காசம் அடங்கும்கடுகிவரு
பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்
வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து
                                                       (அகத்தியர் குணபாடம்) 


பொடுதலை       உடலுக்குக் குளிர்ச்சி தருகிறது
உடல் எரிச்சலைத் தணிக்கிறது
உடலின் பசியின்மையைப் போக்குகிறது
அபான வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும்
வயிற்றுமந்தம், வயிற்றுவலி, சீரணக் கோளாறு, குடற்புழுக்களின் தொல்லை, 
சீதபேதி, வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கும் மருந்தாகும்.
வெட்டை நோய், உள்மூலம் போன்ற பல பிற நோய்களுக்கான 
மருந்துகளிலும் கூட்டு மருந்தாக  சேர்க்கப்படுகிறது.

பொடுதலை இலை பேதிக்கு நல்ல மருந்து. 
இவ்விலைச் சாறு கொப்புளம், புண், வீக்கத்திற்கு நல் மருந்து.

நூறு கிராம் பொடுதலை இலையைஅரை டம்பளர் நீரிலிட்டுகாய்ச்சி   கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.

       முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும் பிரச்சனையாகும் 
 பொடுகு  உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. 
பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.

பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.

இதற்க்கு பூற்சாதம்,  பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி,   பொடுதலை என பல பெயர்ககளும் உண்டு 


Tamil            -   Poduthalai

English         - Lippia

Sanskrit       - Jalapippali

Telugu         -Bokkenaku

Malayalam   -Kattu thippali

Botanical Name      -  Phyla nodiflora

. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். அதற்க்கு 
 பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.


இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

 தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.
இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

இத்தனை மருத்துவ குணங்கள் இந்தச் சின்ன சிறு செடியில் இருக்குது .நாமும் அதை மிதித்து சென்றுகொண்டே இருக்கிறோம் இனியாவது மிதிக்காமல் மதிப்போம் !

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

Geetha Sambasivam

unread,
Dec 3, 2009, 2:01:17 AM12/3/09
to mint...@googlegroups.com
//பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும்.//

இதோடு கொம்பரக்கு, கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம் போன்றவையும் சேர்க்கலாம். சின்ன வெங்காயம் நாட்டு வெங்காயமாய் இருந்தால் நல்லது. இங்கே சென்னையில் பெரிய வெங்காயம் வளரும் முன்னே வெட்டி அதைச் சின்ன வெங்காயம்னு சொல்லிக் கொடுத்துடறாங்க. மற்ற பயன்பாடுகள் அறிந்தவையே. நன்றி.

2009/12/3 annamalai sugumaran <amirth...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages