செம்மொழி

436 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 18, 2007, 9:32:42 PM8/18/07
to minT...@googlegroups.com
செம்மொழி: பாஜக ஆட்சிக் காலத்தில் பலன் ஏற்படவில்லை ~ முதல்வர்

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த போது, தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் சனிக்கிழமை(18/8/07) நடைபெற்ற மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசியது:

தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாவுக்கு பலமுறை கடிதம் எழுதினேன். கடிதம் உரிய இடத்தில் போய்ச் சேர்ந்ததே தவிர, பலன் கிட்டவில்லை.

தற்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு இங்கே அடிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்காக, ஆய்வு மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு, கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கடிதம் எழுதினேன். மறுநாளே எனக்கு உரிய பதில் அனுப்பினார்.

செம்மொழிக்கு தமிழாய்வு நிறுவனம் அமைப்பதில் நான் காட்டிய வேகத்தைவிட, நான் வெட்கப்படும் வகையில் அமைச்சர் அர்ஜுன் சிங் வேகம் காட்டினார்.
 
விளம்பரத்துக்காக, மொழியை வைத்து வளர வேண்டும் என்பதல்ல.
  • மொழி வளர்ந்தால் மக்கள் வளர்ச்சி அடைவார்கள்.
  • மக்கள் வளர்ந்தால் நாடு வளரும்; நானிலம் செழிக்கும்.

இப்படிச் சிந்திக்கின்ற தன்மை எல்லோருக்கும் வேண்டும். அந்தச் சிந்தனை தில்லியில் இருக்கிற அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு இருக்கிறது.

வெற்றி கிடைத்ததற்குப் பின்பு ஏற்படும் களைப்பில் இருக்கிறோம் என்றார் முதல்வர் கருணாநிதி.

நிகழ்ச்சியில், மைசூரில் உள்ள மத்திய மொழியியல் நிறுவனத்தின் இயக்குநர் உதய நாராயண் சிங் மற்றும் ஆய்வாளர் ராமசாமி ஆகியோரை முதல்வர் கருணாநிதி கெளரவித்தார்.
 
 
அடுத்த ஆண்டு செம்மொழி இலக்கியங்களின் செம்பதிப்பு: மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவிப்பு

செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் செம்பதிப்பு, அடுத்த ஆண்டு திருவள்ளுவர் பிறந்த நாளில் வெளியிடப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்தார்.

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொடக்க விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவனத்தைத் தொடங்கி வைத்து, மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் பேசியது:

தமிழ் மொழிக்கு பல்வேறு வகைகளில் சிறப்பு உண்டு. ஆனாலும், செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குவது அம்மொழிக்கு மிகப்பெரிய வலு சேர்க்கிறது. இந்திய கலாச்சாரத்தில் தமிழ் மொழி சிறப்பான இடத்தை வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நமது நாட்டின் பன்முக கலாச்சாரத்தை புரிந்து கொள்வதற்கான அடிக்கல்லை நாட்டியவர்களில்

  • காந்தி,
  • நேரு,
  • நேதாஜி,
  • இராஜாஜி,
  • அண்ணாதுரை

ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு.

செம்மொழி இலக்கியங்களின் செம்பதிப்பு: தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
 
அவர்களது கோரிக்கையை ஏற்று, தற்போது தமிழாய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. செம்மொழி தமிழ் குறித்த ஆய்வுப் பணிகள் மற்றும் அது குறித்த அறிக்கைகள் மனித வள மேம்பாட்டுத் துறையின் செய்தி வெளியீடான செம்மொழியில் வெளியிடப்படும்.
 
மேலும், மத்திய மொழியியல் நிறுவனத்தின் இணைய தளத்திலும் தகவல்கள் வெளியிடப்படும். செம்மொழியான தமிழின் மேன்மையை அனைவரும் உணரும் வகையில் அது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும்.
 
பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் செம்மொழி குறித்த பாடங்களை தொடங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
 
செம்மொழி இலக்கியங்களின் செம்பதிப்பை வெளியிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புத்தகத்தை அச்சிடும் பணி, கோவையில் உள்ள அரசு அச்சகத்தில் நடைபெற்று வருகிறது.
 
அடுத்த ஆண்டு திருவள்ளுவர் நாளில் முதல்வர் கருணாநிதி செம்பதிப்பை வெளியிடுவார்.
 
விருதுகள் ரொக்கத் தொகை உயர்வு: தமிழ் மொழிக்கு சிறப்பாக சேவையாற்றுவோருக்கு
  • தேசிய அளவில் தொல்காப்பியர் விருதும்,
  • சர்வதேச அளவில் இரண்டு பேருக்கு குறள் பீடம் விருதும்

வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தொல்காப்பியர் விருதுக்கான ரொக்கத் தொகை ரூ. 1 இலட்சத்தில் இருந்து ரூ. 5 இலட்சமாக உயர்த்தப்படுகிறது.
 
இதேபோன்று, குறள் பீட விருதுக்கான ரொக்கத் தொகையும் ரூ. 1 இலட்சத்தில் இருந்து ரூ. 5 இலட்சமாக உயர்த்தப்படுகிறது.
 
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இளம் தமிழறிஞர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் ரொக்கத் தொகை வழங்கப்படும் என்றார் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்.
 
நன்றி:தினமணி - http://www.dinamani.com

Neduchezhian T. Chezhian

unread,
Aug 19, 2007, 8:42:17 AM8/19/07
to minT...@googlegroups.com
அன்புடையீர், வணக்கம்.
மின்தமிழில் சென்னையில் தமிழ்செம்மொழி ஆய்வு மையம் தொடக்கவிழா நிகழ்வுகள் குறித்த செய்தியினை உடனே பதிவு செய்தமைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து தமிழைச் செம்மொழியாக்கும் முயற்சி பாஜக ஆட்சியில் பலனளிக்கவில்லை என்று கலைஞர் கூறியுள்ளார் என்பதைவிட கலைஞர் பாஜக ஆட்சியில் ஏமாற்றப்பட்டார் என்பதே பொருத்தமுடையதாகும். 2000ஆண்டில் சமஸ்கிருத ஆண்டு என நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு மையஅரசு 30 கோடி செலவு செய்தது. தமிழைச் செம்மொழியாக்கி 2001ஆம் ஆண்டு தமிழ்மொழி ஆண்டு என அறிவிப்போம் என்றார் அந்நாளைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி. ஆனால் அவர்கள் ஆண்ட 2004 ஆம் ஆண்டு வரை தமிழைச் செம்மொழியாக்கவும் இல்லை. மேலும் தமிழ்மொழி ஆண்டு என எந்த ஆண்டையும் கொண்டாடவும் இல்லை. ஊமத்தம்பூவில் மல்லிகையின் நறுமணத்தை நாடுதல் முறையன்று என்பதுபோல் சமஸ்கிருத பற்றாளர்கள்(வெறியர்கள் எனவும் கூறலாம் - தேவையில்லை) தமிழைப் போற்றுவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்த வரலாற்று செய்தியினை அறிய தருகிறேன்.
நன்றி.
என்றும் தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர் www.tamilthinai.com

Kannan Natarajan

unread,
Aug 19, 2007, 9:20:19 AM8/19/07
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
உங்களைப் போன்ற தமிழாசிரியர்கள் மற்றும் புரவலர்கள்,தற்போதைய தமிழக அரசிடம்,செம்மொழி ஆய்வு மையத்தை தொடங்கி இந்த நற்சமயத்தில், அடுத்த ஆண்டிலாவது "செம்மொழி ஆண்டாக" அறிவிக்கச் சொல்லலாம்.அதுவும் 2008ஆம் ஆண்டை "பூமியாண்டாக" உலகம் முழுவதும் கடைபிடிக்க இருக்கும் நேரத்தில்.
 
இத்தருணத்தில்,தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இதுவரை நடைபெறாத ஒன்று நடந்தால்,அனைவருக்கும் சிறப்பு - அதுதான் உலகத்தமிழ் மாநாடு.சென்னை,மதுரை,தஞ்சை என்று வலம் வந்த தீந்தமிழ்,தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகரமும்,பாரதியார் பெயரைப் பறைசாற்றும் பல்கலைகழகம் கொண்ட,கொங்குத் தமிழ் கோலோச்சும் கோவை நகரத்தில்,அத்தீந்தமிழுக்கு விழா எடுத்தால்,குறள் இப்படியும் மாறுமா!
 
"செம்மொழிக்கு ஆற்றும் உதவி,இவன்தந்தை
 என்நோற்றான் கொல் எனும் சொல்."
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

 

Narayanan Kannan

unread,
Aug 19, 2007, 10:47:58 PM8/19/07
to minT...@googlegroups.com
நண்பரே:

ஆங்கிலம் வருவதற்கு முன் முகலாயர் காலத்தில் அரேபியமொழியும், இந்தியப்
பேரரசர்கள் காலத்தில் சமிஸ்கிருதமும் இந்தியப் பொதுமொழிகளாக இருந்தன.
காலம், காலமாக சமிஸ்கிருதம் வட இந்திய, தென்னிந்தியப் பேரரசுகளால்
ஆதரிக்கப்பட்டு வந்து வந்துள்ளது. கிழக்கே ஜப்பான் வரை இதன் தாக்கத்தை
அறிய முடிகிறது. தமிழ் மன்னர்கள்தான் இந்த சமிஸ்கிருதப் பரவலுக்கும்
வலுவான காரணியாக இருந்துள்ளனர். எனவே சமிஸ்கிருத மேலாண்மை என்பது பண்டு
தொட்டு வருவது. சமிஸ்கிருதமும், இந்தியும் ஒன்றல்ல. சமிஸ்கிருதம் யார்
மேலும் திணிக்கப்பட்ட மொழியல்ல. அது பொது மொழியாக அறிஞர்களால்
செய்யப்பட்டது. அது யாருக்கும் தாய்மொழி அல்ல. (ஏ.கே.இராமானுஜன் அதைத்
'தந்தை மொழி' என்பார்)

தமிழ் மொழி செம்மொழி ஆகாமல் இருந்ததற்குக் காரணம் நமது அரசியல் பலம்
இதுவரை வலுவாக இருந்ததில்லை. இப்போது வலுவடைந்துள்ளது.

மேலும் வடவர் தமிழ் மொழி பற்றி அறிந்து கொள்ளவில்லையெனில் அது யார்
குற்றம்? நம் குற்றமே. தமிழ் நாட்டில் எத்தனை பன்மொழிப் புலவர்கள்
இருக்கிறார்கள்? இருப்பவரை ஊக்குவித்து மொழிபெயர்பிற்கு அரசு உதவுகிறதா?
(ஆழ்வார் திருநகரியில் ஒரு வைணவப் பெரியவர் அரசு ஆதரவு இல்லாததால்
தமிழர்களால் கிரந்த லிபியில் எழுதப்பட்ட ஆகமங்களை தெலுங்கில் மொழி
பெயர்த்துக் கொண்டிருந்தார். காரணம், வேங்கடேஸ்வரா பல்கலைக் கழகம்
அவருக்கு நிதியுதவி செய்கிறது) இந்த செம்மொழித் திட்டத்திலாவது தமிழ்
மொழி உலகெங்கும், குறிப்பாக இந்தியாவில் அறியப்பட்ட வழிவகை செய்யப்படுமா?
பலருக்கு ஏன் தமிழ் மொழிக்கு இந்தத் திடீர் அந்தஸ்து என்று புரியவில்லை.
விளக்குவது நம் கடமை அல்லவா? தமிழ்ப் பரவல் திட்டமேதும் அங்குண்டா?

ஆங்கிலம் வந்த பின் தமிழ் மொழிக்கு தமிழர்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச
ஆதரவும் போய்விட்டது. நமது ஊடகங்கள், சினிமா இவை தமிங்கலத்தை வளர்க்கத்
துணை போகின்றன. சினிமாவிற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் காசு தரப்படும் என
அரசு அறிவிக்க வேண்டிய நிலை!

கொரியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் எல்லா வியாபாரமும்
தாய்மொழியிலேயே நடை பெறுகின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது?

தமிழ்க் கல்வி என்றால் அது இலக்கியம் மட்டுமல்ல. தமிழ் அறிவியல், தமிழ்
கட்டடக் கலை, தமிழ் மருத்துவம் இப்படி பல உள்ளன. அவை ஓலைச் சுவடிகளில்
ஒளிந்துள்ளன. ஓலை வாசிப்பவர் இப்போது அரிய குழுவாக (endangered) உள்ளனர்.
இதையெல்லாம் உள்வாங்கி செம்மொழித் திட்டங்கள் செயல்படுமா? இல்லை நாம்
மற்றவரைக் குறை சொல்லியே நம் மொழியை வீணாக்கிவிடுவோமா? சிந்திக்க வேண்டிய
தருணமிது.

கண்ணன்

On 8/19/07, Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Aug 19, 2007, 11:15:09 PM8/19/07
to minT...@googlegroups.com
ஆசியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளின் எழுத்துரு ப்ராமியில் இருந்து தோன்றியது
 
அந்த பிராமி சிந்து எழுத்துக்களில் இருந்து தோன்றியது
 
சிந்து நாட்டில் க என்ற ஒலியை குறிக்க காவடியின் உருவை பயன்படுத்தினார்கள், பழம் தமிழில் கா என்றா காவடி, முருகன் காவடி அல்ல. பாணர்களும் வணிகர்களும் பண்டம் சுமக்கும் காவடி
 
அந்த கா வடிவமோ பின்னாளில் தன் இருபக்க சுமைகளை இழந்து சிலுவை குறிபோல் மருவியது. அந்த சிலுவைகுறியில் இருந்துதான் நம் தமிழ் க, வடமொழி क‌, மற்று பல ஆசிய மொழிகளின் ககரம் தோன்றியது.
 
சிந்து எழுத்துக்களில் கவனித்தால் ஒரு ஆள் காவடி தூக்கிக்கொண்டு நிற்பது போல் உருவங்கள் காணலாம்.
 
 

 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

ஆமாச்சு

unread,
Aug 20, 2007, 2:00:59 AM8/20/07
to மின்தமிழ்

On Aug 20, 8:15 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> ஆசியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளின் எழுத்துரு ப்ராமியில் இருந்து தோன்றியது
>
> அந்த பிராமி சிந்து எழுத்துக்களில் இருந்து தோன்றியது
>
> சிந்து நாட்டில் க என்ற ஒலியை குறிக்க காவடியின் உருவை பயன்படுத்தினார்கள்,
> பழம் தமிழில் கா என்றா காவடி, முருகன் காவடி அல்ல. பாணர்களும் வணிகர்களும்
> பண்டம் சுமக்கும் காவடி

காவடியா ரெண்டு மலையை யாரோத் தூக்கிக் கிட்டு போகும் போது, தூக்க
முடியாம வைக்க.. அதுவே காவடியாச்சுன்னு படிச்ச ஞாபகம்.. சேவல்
முருகன் கொடிக்கு போகறத்துக்கு முன்னாடியே இருந்தது மாதிரி... அதே
மாதிரி தான் காவடியும்..

திருமுருகாற்றுப் படை படிச்சா மேற்கோள்கள் கிட்டும்.. திருமுருகாற்றுப்
படை பதிணென்கீழ் கணக்கில் வருவது தானே!

அன்புடன்,
ஆமாச்சு
http://amachu.net

Kannan Natarajan

unread,
Aug 20, 2007, 2:30:39 AM8/20/07
to minT...@googlegroups.com
கொரியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் எல்லா வியாபாரமும்
தாய்மொழியிலேயே நடை பெறுகின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது?
 
 
இத்தருணத்தில், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின், பிரபல உறுப்பினரும், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தவரும், 1834ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அமைத்த 'சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினருமான மெக்காலே பிரபு நான்காண்டுகள் நமது நாட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு ஆங்கிலேய அரசுக்கு எழுதியதைக் கீழே தந்துள்ளோம்.


LORD MACAULAY'S ADDRESS TO THE BRITISH PARLIAMENT 2 FEBRUARY,1835

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their selfesteem, their native culture and they will become what we want them, a truly dominated nation."


பொருள்: ''நான் பரந்த இந்திய நாடு முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். அப்போது ஒரு பிச்சைக்காரன், ஒரு திருடன் என்று ஒருவர்கூட இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்த அளவிற்குச் செல்வமும்,பொருளும் உணவுப் பண்டங்களும் நிறைந்த நாடு என்பது மட்டுமல்லாமல், இந்திய மக்களிடம் மிக உயர்ந்த, பண்பு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றையும் கண்டேன். இவற்றைப் பார்க்கும்போது இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் மக்களை நாம் என்றுமே வெல்ல முடியாது என்று நினைக்கிறேன். இதற்கு ஒரே வழி இந்நாட்டு மக்களின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய
  1. ஆன்மிகம்,
  2. கலாச்சாரம்,
  3. பண்பு,
  4. ஒழுக்கம்
ஆகியவற்றை அழிப்பதே ஆகும். இவ்வாறு அழிப்பதற்கு இந்திய மக்களுடைய மிகப் புராதனமான;
  • கல்விமுறை,
  • கலாச்சாரம்
ஆகியவற்றில் அன்னிய நாட்டு, ஆங்கிலேய கல்விமுறையைப் புகுத்த வேண்டும். அன்னிய ஆங்கிலேயக் கல்விமுறை தங்களுடைய மிகப் புராதனமான கலாச்சாரம், கல்வி ஆகியவற்றை விட உயர்ந்தது என்ற மோகம் கொண்டுவிட்டால், அவர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து விடுவார்கள்.

அவ்விதம் தங்கள் சுயமரியாதையை இழந்த மக்களை நாம் விரும்புவதைப்போல் அடிமைகளாக்கி, இந்தியாவை அடக்கி ஆள்வது முடியும்.''

Ramesh

unread,
Aug 20, 2007, 3:00:38 AM8/20/07
to minT...@googlegroups.com
மன்னிக்கவும். மெக்காலே சொன்னதாக அடிக்கடி நம்மவர்களால் மேற்கோள்
காட்டப்படும் இந்த கருத்துக்கள் உண்மையில் அவருடையன என்று தோன்றவில்லை.
இது இணையத்தில் மட்டுமே உலா வரும் ஒரு தவறான தகவலாகவே தெரிகிறது.

மேலும், மெக்காலே நம் நாட்டைப் பற்றி அவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டவராகத்
தெரியவில்லை.

"இந்திய மற்றும் அரேபிய மொழி இலக்கியங்கள் மொத்தமும் ஐரோப்பாவின் ஒரு
புத்தக அலமாரிக்கு ஈடாகாது"

என்பதே அவருடைய உண்மையான கருத்து என்றும் அதனாலேயே பாரதத்தில் ஆங்கில
மொழி புகுத்தப்பட்டதாகவும் படித்த நினைவு.

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்" (என்னுடையதையும்) ஒத்துக்கொள்ள
வேண்டுமென்பதில்லை. கூகிள் தேடல் இதைப்பற்றி அறிய உதவும்.

பிழையிருந்தால் திருத்தவும். நன்றி.


--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Kannan Natarajan

unread,
Aug 20, 2007, 3:49:32 AM8/20/07
to minT...@googlegroups.com
மின் நண்பர்களே,
 
மெக்காலே சொன்னதோ அல்லது வேறு ஒருவர் சொன்னதோ என்பதில் தருக்கம் தேவையில்லை. எந்த ஒரு வரம்புமீறிய படையெடுப்பானால், முதலில் பண்பாடு,மற்றும் மொழி ஆகியவைகள் தான் தாக்கப்படும். அந்த தாக்குதலை எத்தனை ஆண்டுகளுக்கு ஏற்றுக்கொண்டு போராடினார்கள் என்பதில் தான் பகுத்தறிவு உதவுகிறது. 300-400 ஆண்டுகளுக்கு போராடிய மக்களின் மனநிலை,குவிந்த கவலைகளின் சாயலைத்தான் வாழையடி வாழையாக எடுத்துக்காட்டும்,அதனால்தான் நாம், பொறுமையான வளர்ச்சியை நம் மொழி,இலக்கியத்தில் காண்கிறோம். ஏனெனில் தாய்மொழிதான் துயரத்தின் போது நம் நெஞ்சை வருடிய நல்மருந்து.
 
செம்மொழிக்கு ஒரு ஆய்வு மையம் என்றால் - தற்போதுள்ள நவீன அறிவியல்/கணினி துணையுடன் அது மேலும் பொலிவு பெறும் என்பதில் எந்த ஐயமில்லை. கொரியா கண்ணன் அவர்கள்,நல்ல திசையில் செழுமையான நம் செம்மொழி வலம் வரயிருக்கிறது. தோள் கொடுத்து நாம் அனைவரும் அன்புத் தமிழ் தேரை இழுத்துச்செல்ல உதவி செய்வோம்.
 
 
நாம் மற்றவரைக் குறை சொல்லியே நம் மொழியை வீணாக்கிவிடுவோமா?
 
குறை களைவோம்,அப்படி குறையே ஒரு வழி என்றால்,கவியரசு கண்ணதாசனின் வரிகள் தான் பதில்.
 
போற்றுபவர் போற்றட்டும்! - புழுதிவாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்!
ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்! எவர்வரினும் நில்லேன்! அஞ்சேன்!
 
நண்பர் இரமேஷ், வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்ட அறிக்கைகள் பாதுகாப்பாக ஆண்டாண்டுகாலமாக,பெட்டகத்திலோ,அல்லது காப்புப்பெட்டிகளில் வைத்திருப்பர்.அப்படியாக தான்,மெக்காலேவின் செய்தியும்.என்னதான் இணையத்தில்,உலா வந்தாலும்,அதை பிரிட்டிஷ் அரசோ அல்லது இந்தியா அரசாங்கமோ அதை நிராகரிக்கவில்லையே! இந்திய வரலாற்றை நன்கு அறிந்த திரு.ஏ.எம்.ஆர்,இச்செய்தியை சென்ற ஆண்டு குமுதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
 
என்றும் தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Thamizth Thenee

unread,
Aug 20, 2007, 4:26:30 AM8/20/07
to மின்தமிழ், kris_...@yahoo.com
உயர் திரு கண்ணன் நடராஜன் அவர்களே

ஆங்கிலம் என்னும் மொழி ஒரு சிறிய க்ராமத்தில்தான்
முதன் முதலாக தோற்றுவிக்கப் பட்டது
அப்போதே அவர்கள் முடிவெடுத்தார்கள்
அம் மொழியை உலக நாடுகளுக்குப் பரப்ப வேண்டும் என்று
உடனடியாக அவர்கள் செய்த காரியம்
மற்ற எல்லா மொழிகளையும் கற்க ஆரம்பித்ததுதான்
மற்ற எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டு
அந்தந்த நாட்டுக்குச் சென்று அவர்கள் மொழியை
ஆங்கிலத்தில் எழுதினார்கள், பிறகு ஆங்கிலத்தை
எல்லா நாடுகளுக்கும் எடுத்துச் சென்று அவர்களுக்கு
ஆங்கில மொழிப் பயிற்ச்சி அளித்தார்கள்
அவர்கள் நல்ல இலக்கியங்கள் என்று நினைத்ததையெல்லாம்
பிற மொழிகளில் மொழி பெயர்த்தார்கள்,
அப்படி மெல்ல மெல்ல உருவான ஆங்கிலம் இன்று
உலக மொழியாக்கப் பட்டதென்றால் அந்தக் க்ராமத்தில் இருந்த அத்தனைபேரின்
மொழிப் பற்று தான் முதல் காரணம்
அது போல நம் தமிழ் மொழியிலுள்ள நல்ல இலக்கியங்களை
ஆங்கிலத்தில் ,ஏன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து
அந்த்தந்த நாட்டில் பரவச் செய்ய வேண்டும்
நம் இலக்கியங்களின் பெருமை எல்லா நாடுகளிலும் உணரப் படவேண்டும்
அப்போது தான் தமிழ் மொழி உலகளாவிய மொழியாக மாறும்
என்பது என்னுடைய கருத்து

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com


Kannan Natarajan எழுதிய:


> மின் நண்பர்களே,
>
> மெக்காலே சொன்னதோ அல்லது வேறு ஒருவர் சொன்னதோ என்பதில் தருக்கம் தேவையில்லை.
> எந்த ஒரு வரம்புமீறிய படையெடுப்பானால், முதலில் பண்பாடு,மற்றும் மொழி ஆகியவைகள்
> தான் தாக்கப்படும். அந்த தாக்குதலை எத்தனை ஆண்டுகளுக்கு ஏற்றுக்கொண்டு
> போராடினார்கள் என்பதில் தான் பகுத்தறிவு உதவுகிறது. 300-400 ஆண்டுகளுக்கு
> போராடிய மக்களின் மனநிலை,குவிந்த கவலைகளின் சாயலைத்தான் வாழையடி வாழையாக
> எடுத்துக்காட்டும்,அதனால்தான் நாம், பொறுமையான வளர்ச்சியை நம்
> மொழி,இலக்கியத்தில் காண்கிறோம். ஏனெனில் தாய்மொழிதான் துயரத்தின் போது நம்
> நெஞ்சை வருடிய நல்மருந்து.
>
> செம்மொழிக்கு ஒரு ஆய்வு மையம் என்றால் - தற்போதுள்ள நவீன அறிவியல்/கணினி
> துணையுடன் அது மேலும் பொலிவு பெறும் என்பதில் எந்த ஐயமில்லை. கொரியா கண்ணன்
> அவர்கள்,நல்ல திசையில் செழுமையான நம் செம்மொழி வலம் வரயிருக்கிறது. தோள்
> கொடுத்து நாம் அனைவரும் அன்புத் தமிழ் தேரை இழுத்துச்செல்ல உதவி செய்வோம்.
>
>

> *நாம் மற்றவரைக் குறை சொல்லியே நம் மொழியை வீணாக்கிவிடுவோமா?*

Ramesh

unread,
Aug 20, 2007, 4:31:17 AM8/20/07
to minT...@googlegroups.com
கண்ணன்,

நீங்கள் கூற விளைந்த பொருளினை நான் முதலிலேயே உணர்ந்து கொண்டேன். அதில்
எந்தவித கருத்து வேறுபாடுமில்லை.

நமது பாரம்பரிய கல்வி முறையினை இழந்து தனித்துவமின்றி மேலை நாட்டவர்கள்
நமது கலாச்சாரத்தை நமக்கே அறிமுகப்படுத்தும் வகையில்தான் இன்று பலரும்
இருக்கிறோம். தாய் மொழியில் கல்வி, தமிழில் நவீன அறிவியல் சிந்தனைகள்,
கண்டுபிடிப்புகள் என்பன பலவும் நம்முடைய கூட்டு முயற்சியினால்
எட்டக்கூடிய கனவுகளே.

மெக்காலேவின் வாக்காகக் குறிக்கப்ப்டும் அந்த மேற்கோளினை நானும்
பயன்படுத்தி இருக்கிறேன். ஆனாலும் அதற்கு வலுவான மூல ஆதாரம் என்பது
எதுவும் இல்லாததை பிறகு தெரிந்து கொண்டு பயன்படுத்துவதில்லை.

பனை மரத்தின் கீழமர்ந்து தண்ணீர் அருந்தினாலும் அது கள்ளாகவே தோன்றும்
என்பதைப் போல மற்றவர்களால் குறை காணத்தகுந்த மேற்கோளால் நல்ல வாதத்திற்கு
பங்கம் வருமே என்ற கவலையினாலேயே அதைச் சுட்டிக்காட்டினேன். குற்றம்
காண்பது நோக்கமல்ல.

தமிழ் பெருந்தேர் வலம் வர வடம் பற்றுவது என் பிறவிப்பயன்.

On 8/20/07, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

Thamizth Thenee

unread,
Aug 20, 2007, 4:34:52 AM8/20/07
to மின்தமிழ்
ORIGIN OF ENGLISH

We speak English but do we know where it comes from? I didn’t know
until I started to study on this subject and I learned where it comes
from and how it has developed.

The history of English begins a little after A.D. 600. The
ancestors of the language were wandering in the forests of northern
Europe. Their language was a part of Germanic branch of Indo-European
Family.

The people talking this language spread to the northern coast of
Europe in the time of Roman Empire. Among this people the tribes
called Angels,Saxons,Jutes which is called Anglo-Saxons come to
England. The first Latin effect was in that period. Latin effected the
language with the merchants traveling the tribes. Some of the words
taken from Latin are; kettle,wine,cheese, butter, cheap.

Also in the 14th century Rome Empire weakened because Goths
attacked to Mediterranean countries of Roman Empire and Anglo-Saxons
attacked to empire. On the other hand the Celtic tribes in Scotland
and Wales developed. At the end in 410 the last roman emperor left
the island to Celtic and Anglo-Saxons. Celtic and Anglo-Saxons fought
for 100 years and Anglo-Saxons killed all the Celtics. In 550 Anglo –
Saxons established England. During Roma Empire Latin wasn’t the native
language of the kingdom because people in the country were talking
Celtic.

When Anglo-Saxons became Christian in 597 they learned Latin.
According to the effects to English , the history of the language
divided in to three; Old English(7th century-1100), Middle
English(1100-1450/1500), Modern English (1500-now). In some books
Modern English is divided in to two Early modern (1500-1700) ,Late
Modern (1700-now).

OLD ENGLISH

When England was established there were several kingdoms and the
most advanced one was Nurthumbria. It was this period that the best of
the Old English literature was written , including the epic poem
Beowulf.

In the 8th century Nurthumbrian power declined , West Saxons
became the leading power. The most famous king of the West Saxons was
Alfred the Great. He founded and established schools, translated or
caused to be translated many books from Latin in to English.

After many years of hit-and-run raids between the European
kingdoms, the Norseman landed in the year of 866 and later the east
coast of the island was Norseman’s. Norse language effected the
English considerably. Norse wasn’t so different from English and
English people could understand Norseman. There were considerable
interchanges and word borrowings
(sky,give,law,egg,outlaw,leg,ugly,talk). Also borrowed pronouns like
they,their,them. It is supposed also that the Norseman influenced the
sound structure and the grammar of English.

Old English had some sound which we don’t know have now. In
grammar , Old English was much more highly inflected that Middle
English because there were case endings for nouns, more person and
number endings of words and a more complicated pronoun systems,
various endings for adjectives. In vocabulary Old English is quiet
different from Middle English. Most of the Old English words are
native English which weren’t borrowed from other languages. On the
other hand Old English contains borrowed words coming from Norse and
Latin.

MIDDLE ENGLISH

Between 1100-1200 many important changes took place in the
structure of English and Old English became Middle English. The
political event which effected the administration system and language
was the Norman Conquest. In 1066 they crossed the Channel and they
became the master of England. For the next several next years ,England
was ruled by the kings whose native language was French. On the other
hand French couldn’t become the national language because it became
the language of the court , nobility, polite society, literature. But
it didn’t replace as the language of the people. English continued to
be the national language but it changed too much after the conquest.

The sound system&grammar wasn’t so effected but vocabulary was
effected much. There were word related with goverment:parliment,tax,
goverment,majesty; church word: religion, parson, sermon; words for
food: veal, beef, mutton, peach,lemon,cream,biscuit; colors: blue,
scarlet, vermilion; household words: curtain,
chair,lamp,towel,blanket; play words:
dance,chess,music,leisure,conversation; literary words: story romance,
poet, literary; learned words: study, logic grammar,noun,surgeon,
anatomy, stomach; ordinary words for all sorts:
nice,second,very,age,bucket, final,gentel, fault, flower,count,sure,
move, surprise, plain. (Clark, V.P.& Eschholz, P.A. &Rose ,A.F.;
1994;622 )

Middle English was still a Germanic language but it is different
from Old English in many ways. Grammar and the sound system changed a
good deal. People started to rely more on word order and structure
words to express their meaning rather than the use of case system.
“This can be called as a simplification but it is not exactly.
Languages don’t become simpler , they merely exchange one kind of
complexity for another”( (Clark, V.P.& Eschholz, P.A. &Rose ,A.F.;
1994;622 )

For us Middle English is simpler that Old English because it is
closer to Modern English.

EARLY MODERN ENGLISH

Between 1400-1600 English underwent a couple of sound changes. One
change was the elimination of a vowel sound in certain unstressed
positions at the end of the words. The change was important because it
effected thousands of words and gave a different aspect to the whole
language.

The other change is what is called the Great Vowel Shift. This was
a systematic shifting of half a dozen vowels and diphthongs in
stressed syllables. For example the word name had in Middle English a
vowel something like that in the modern word father;...etc. The shift
effected all the words in which these vowels sounds occurred. These
two changes produced the basic differences between Middle English and
Modern English. But there are several other developments that effected
the language. One was the invention of printing. It was introduced to
England by William Caxton in 1475. After this books became cheaper and
cheaper, more people learned to read and write and advanced in
communication.

The period of Early Modern English was also a period of English
Renaissance, which means the development of the people. New ideas
increased. English language had grown as a result of borrowing words
from French ,Latin, Greek.

The greatest writer of the Early Modern English period is
Shakespeare and the best known book is the King Jones version of the
BIBLE.

RECENT DEVELOPMENTS

In order to establish the language they develop a dictionary. The
first English Dictionary was published in 1603. Another product of the
18th century was the invention of English Grammar. As English is
replaced with Latin as the language of scholarship, it was felt to
control the language.

The period where English developed most in the Modern English. In
that period the people speaking that language increased too much. Now,
English is the greatest language of the world spoken natively and as
a second language. What will happen in the future? It’ll continue to
grow , may be it will be the universal language.

Adapted from "A Brief History of English" by Paul Roberts

Written by TUBA İNCE

Kannan Natarajan

unread,
Aug 20, 2007, 5:00:31 AM8/20/07
to minT...@googlegroups.com
நம் அனைவருக்கும் செம்மொழியின் வளர்ச்சியைப் பற்றி ஒத்த (வேராக)கருத்தாக இருப்பது தெரிகிறது. ஆனால்,பயனிக்கும் பாதைகளோ வேறு.
 
இச்சமயத்தில்,மற்ற ஐந்து மொழிகள்,கிரேக்கம்,இலத்தீன்,பாரசீகம்,வடமொழி மற்றும் சீன மொழிகளை செம்மொழிகள் என்று அறிவிக்கப்பட்ட பிறகு,அந்தந்த,மொழி வல்லுநர்கள் அல்லது பன்மொழியறிஞர்கள் மேற்கொண்ட யுக்திகள் அல்லது செயல் முறைகள் என்னென்ன என்று இக்குழுமத்தில் தெரிவித்தால் அனைவருக்கும் நலம் பயக்கும்.
 
சீன மொழி தவழும் இடத்தில்,ஆழிநிறை வண்ணனாக திகழும் கொரியா கண்ணன்,சீன மொழியின் மறுமலர்ச்சியைப் பற்றி எடுத்துக் கூறினால் சிறப்பு.அதுபோல,கிரேக்கம்,இலத்தீன் மற்றும் பாரசீகத்தை அறிந்த குழும அன்பர்கள் தீந்தமிழை சுவை கூட்டும் மின்தமிழை,இன்தமிழாக்குவோம் வாரீர்.

வேந்தன் அரசு

unread,
Aug 20, 2007, 7:07:00 AM8/20/07
to minT...@googlegroups.com
>அப்படி மெல்ல மெல்ல உருவான ஆங்கிலம் இன்று
உலக மொழியாக்கப் பட்டதென்றால் அந்தக் க்ராமத்தில் இருந்த அத்தனைபேரின்
மொழிப் பற்று தான்  முதல் காரணம்
 
 
ஆஹா அருமையான கண்டு பிடிப்பு(:
 
ஆங்கிலேயர் ஆளாத நாடுகளில் ஆங்கிலம் ஏன் பயன்படுத்தப்படுவது இல்லை?
 
தமிழை உலகொலாம் பரபப் வேண்டும் என்றால் நாமும் மற்ற நாடுகளை கைப்பற்ற வேண்டும்.  நடக்கிற காரியமா?
 

Narayanan Kannan

unread,
Aug 20, 2007, 9:07:19 AM8/20/07
to minT...@googlegroups.com
அன்புள்ள நண்பர்களே:

உங்கள் அனைவரின் கருத்துக்களையும் வாசித்தேன். பேருவகை கொண்டேன். வடம்
பிடிக்க இத்தனை பேர் இருக்கும் போது தமிழ்த் தேர் பவனி வராமல் என்ன
செய்யும்? வாழ்க.

சீன மொழி வளர்ச்சி பற்றி அறிந்து சொல்கிறேன்.

கொரிய மொழி பற்றிய ஒரு முக்கிய குறிப்பை இங்கு இடுகிறேன். கொரிய மொழி ஒரு
காலத்தில் சீன லிபியில்தான் எழுதப்பட்டு வந்தது. சீன குடும்பத்தைச் சாராத
இம்மொழிப் பலுப்பலை எளிமையாக்க சோஜோன் என்ற அரசன் 16ம் நூற்றாண்டில்
இம்மொழிக்கான அட்சரங்களை உருவாக்குகிறான். அது போது அவன் தமிழ்
நெடுங்கணக்கையும், சமிஸ்கிருதத்தையும் கணக்கில் கொண்டிருக்கிறான் என்பதை
இம்மொழி அறியும் எந்த இந்தியரும் உணரமுடியும் (இதுபற்றி 1906 லேயே
ஹூபர்ட் என்ற பாதிரி எழுதியிருக்கிறார்). சோஜேன் திட்டம் மிக எளிதான
திட்டம். எவரும் ஒரு மணி நேரத்தில் எழுத்துக்கூட்டி படித்துவிடமுடியும்.
உயிரும், மெய்யும் சேர்ந்து உருவாகும் உயிர் மெய்க்கு தனி அட்சரமில்லாமல்
அடுக்கு முறையில் அவைகளை அமைத்து மொழிச் சீரமைப்பு செய்திருக்கிறான்.
இன்று இம்முறையே அரசால் ஆதரிக்கப்பட்டு வழக்கில் உள்ளது. யுனஸ்கோ இம்முறை
உலகிலுள்ள மொழிகளிலேயே மிக எளிதான, இலகுவான, அறிவியல் பூர்வமான முறை
என்று சொல்கிறது.

இதை மேற்கோள் காட்டுவது தமிழ் எழுத்துச்சீர்திருதத்திற்காக அல்ல. அது
தேவையெனில் நாம் கட்டாயம் செய்ய வேண்டும். சுவாரசியமான விஷயம் என்னவெனில்
என்றுமுள தமிழ் கொரிய மொழி உருவாக்கத்திற்கு பயன்பட்டதுதான். இத்தகைய
அறிவியல் பூர்வமான மொழியை மேலும் மேம்படுத்தி வளர்க்க நாம் கடமைப்
பட்டுள்ளோம்.

மொழியை ஒரு பரிமாறும் ஊடகம் என்று அறிவியல் பூர்வமாக அணுகக் கற்றுக்கொள்ள
வேண்டும். அதை இதுவரை வெறும் உணர்ச்சி ஊடகமாகவே பயன்படுத்துகிறோம். அதை
முதலில் நிறுத்த வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு தமிழரை இனிக்காணுறும் போது தமிழிலேயே உரையாட
வேண்டும். ஆங்கிலக் கலப்பில்லாத எளிய தமிழைப் பேசிப் பழக வேண்டும்.
கிடைக்கின்ற வாய்ப்பிலெல்லாம் இதை மற்றோருக்கு வலியுறுத்த வேண்டும்.

தமிழின் அரிய வளத்தை பிற இந்திய மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்க
வேண்டும். குறிப்பாக இந்தி மொழியில். அருட்செல்வர் செய்து வரும் பணி
இம்மட்டில் மிக முக்கியமானது. அறியாமையே வெறுப்பாக மாறுகிறது. வட
இந்தியர்களுக்கு தமிழின் சிறப்பறியாத்தன்மையே அவர்களை இப்படி நடந்து
கொள்ள வைக்கிறது. தமிழின் உண்மையான சிறப்பறிந்த எவரும் இதனை குறைவாக
மதிப்பிடார். எனவே மற்ற மொழிக்காரர்களுடன் நல்லுறவு கொண்டு தமிழ்
மொழியின் சிறப்பு பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.

மொழி மேம்பாட்டு வாரியமொன்று உருவாக்க வேண்டும். அதில் தமிழறிந்த பெரும்
புலவர்களை ஆலோசகர்களாக அமைக்க வேண்டும். பன்மொழிப்புலவர்களை ஆதரிக்க
வேண்டும். பிற மொழி வெறுப்பை முதலில் குறைக்க வழி தேட வேண்டும். நம் மொழி
என்னவென்றே அறியாமல் பலர் பிற மொழியை வெறுக்கின்றனர். இவ்வாரியம் தமிழை
இந்தியப் பிற மாநிலங்களில் கற்றுக்கொள்ளத் தோதான பாடத்திட்டங்களை
உருவாக்க வேண்டும். பிற மொழிக்காரர் தமிழ் கற்றுக் கொள்ள நிதி உதவி செய்ய
வேண்டும். இந்தி பிரசார சபையை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு உதவுவதற்கென்று ஒரு தனிக்குழு
அமைக்கப்பட வேண்டும். மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும்
தமிழ் மொழி பேசும் 21 நாடுகளிலும் (நன்றி: மாலன்) இச்செயல்பாடு நடைபெற


வேண்டும்.

தமிழ் மொழி ஏடுகளில் 60% மருத்துவ ஏடுகளே. அவற்றில் அப்படி என்னதான்
உள்ளன? கண்டறிய வேண்டும்.

தமிழர் கண்ட அறிவியல் வெட்ட வெளிச்சமாகவேண்டும்.

ஒரு புதிய அறிவியல் பூர்வமான எழுச்சி தமிழ் நாட்டில் உருவாக வேண்டும்.
அதற்கு செம்மொழி நிதி உதவ வேண்டும்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய, வாழியவே.

கண்ணன்

ஆமாச்சு

unread,
Aug 20, 2007, 11:25:39 AM8/20/07
to மின்தமிழ்
On Aug 20, 6:07 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> ஒரு புதிய அறிவியல் பூர்வமான எழுச்சி தமிழ் நாட்டில் உருவாக வேண்டும்.
> அதற்கு செம்மொழி நிதி உதவ வேண்டும்.

ஐயா கொண்டாந்துன்னு அம்மா நாளைக்கு தடை பண்ணாம இருக்கணுமுன்னு
வேண்டிக்கிறேனுங்கோ!

Subashini Kanagasundaram

unread,
Aug 20, 2007, 4:05:04 PM8/20/07
to minT...@googlegroups.com

பல ஐரோப்பிய நாடுகள் ஆங்கில மொழி அடிப்படையில் இயங்குவதில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஜெர்மனி. ஜெர்மனிக்கு நான் வந்த புதிதில் எல்லாமே ஜெர்மன் மொழியில் தான் என்பதை உணர்ந்து கொண்ட போது கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனால் நாளடைவில் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்க இங்கிலாந்து வர்த்தக நிறுவனங்களைத் தவிர மற்ற இடங்களில் ஆங்கில மொழியில் உரையாடுவதோ அல்லது ஜெர்மானியர்கள் ஆங்கிலத்தில் நம்மோடு பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பதோ  நடக்காத ஒன்று. அரசாங்க அலுவலகங்கள், மருத்துவமனை, அங்காடிக் கடைகள், கணினி நிறுவனங்கள், கணினியில் இயங்கும் மென்பொருள்கள், வர்த்தகம், விளம்பரம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என எல்லாமே ஜெர்மன் மொழியில் தான். ஆங்கில படங்கள் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பபட்டு ஜெர்மன் மொழியில் தான் தொலைகாட்சியிலும், சினிமா தியேட்டர்களிலும் காட்ட்ப்படுகின்றன. எங்கும் எதிலும் ஜெர்மன் மொழிதான்.

பல்கலைகழகங்களில் எல்லா துறைகளிலும் ஆய்வு  நூல்கள் ஜெர்மன் மொழியில் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு புத்தகம் முக்கியமானதாகத் தெரிந்தால் உடனே அது மொழிபெயர்க்கப்படுகின்றது. தகவல் பரிமாற்றம் ஜெர்மன்  மொழியிலேயே நடைபெறும் வகையில் வாய்ப்புக்கள் இருப்பதால் ஆங்கில மொழியின் அவசியம் தேவையற்றதாக ஆகிவிடுகின்ற நிலை. அறிவியல், வர்த்தகம், இலக்கியம், பொழுது போக்கு அம்சங்கள், ஆகியவை அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமானவை. இவை தாய் மொழியிலேயே முழுக்க முழுக்க கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுமானால் மற்ற மொழியின் தேவை பயன்பாட்டிற்கு அற்ற ஒன்றாகி விடிகின்றது.

இப்படி தமிழில் அறிவியல்,வர்த்தககம் என சொல்வளத்தை  பயன்பாட்டில் கூட்ட வேண்டும். தமிழை மாற்றி ஆங்கிலம் கலந்து பேசினால் தான் இன்றைய தலைமுறையினர் ஏற்றுக் கொள்வர் என்ற போலி எண்ணத்தை தமிழக தொலகாட்சி நிறுவனங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 

மலேசியாவில் மலாய் மொழிதான் தேசிய மொழி. ஆனால் ~30% விழுக்காட்டினரான சீனர்களின் மண்டரின் மொழி இப்போது அங்கு மிக முக்கிய வர்த்தக மொழி. வேலை தேடும் இளைஞர்களுக்கு மண்டரின் தெரிந்திருந்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்ற நிலை. சீனப் பள்ளிகளில் படிக்கும் மலாய்,இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாகவே உள்ளது. சீனர்கள் வர்த்தகத்துறையில், நாட்டின் பொருளாதரத்தில் மிக முக்கிய அங்கம் வகிப்பதால் சீன மொழி முக்கிய மொழியாக மலேசியாவில் அங்கீகாரம் பெற்று விட்டது.

உலக நாடுகளில் பிற மொழிகளின் வளர்ச்சியை இப்படி பல உதாரணங்கள் வழி கூறிக்கொண்டே போகலாம்.  அரசாங்கம் எடுக்கின்ற முயற்சி ஒரு புறம் இருந்தாலும் தமிழர்கள் ஒவ்வொருவரும் சீறிய சிந்தனையோடு செயல்பட்டு தமிழ் மொழி வளர்ச்சிக்காக கட்டாயம் தங்களால் முடிந்த அளவு செய்தே ஆக வேண்டும். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் சென்றிருந்த போது ஒரு கல்லூரியில் இளைஞர்கள் மத்தியில் கணினி பற்றிய சொற்பொழிவாற்றும் போது , ஒரு மாணவர் எழுந்து 'கணினியில் தான் மென்பொருள் மற்ற எல்லாமே ஆங்கிலத்தில் கிடைக்கின்றதே-  பிறகு ஏன் தமிழில் இருக்க வேண்டும்? தமிழ் வலைப்பக்கம் அமைக்க வேண்டும்? தமிழில் இணையம் இயங்க வேண்டும், இது ஒரு அநாவசிய வேலையில்லயா? என்று கேட்ட கேள்வி என்னால் இன்றும் மறக்க முடியாது. தமிழ் இளைஞர்கள் மத்தியில் தாய் தமிழ் மொழியின் பால் அக்கறை இல்லை. இது ஒரு சிறிய எண்ணிக்கையின் பிரதிபலிப்போ அல்லது ஒரு பெரும் எண்ணைக்கையின் பிரதிபலிப்போ - எதுவாக இருப்பினும் இந்த வகையிலான சிந்தனை முதலில் மாற வேண்டும். எனது மொழி தமிழ். அதில் அறிவியல் தொழில் நுட்பம் வளர வேண்டும் என்ற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் வேறூன்ற வேண்டும்.

அன்புடன்
சுபா

kalyana gurukkal

unread,
Aug 20, 2007, 6:57:52 PM8/20/07
to minT...@googlegroups.com
ஆக்கபூர்வமான செயல்களை தூண்டும் வல்லுனர்கள் அயல் நாடுகளில் வாழும்போதுதான் தாய்மொழியின்

அருமை பெருமை மனத்தலவிலே கூடுதலான பாதிப்பை உண்டாக்குகிறது.

தொலைநோக்குபார்வையொடும் பரந்த மனத்தோடும் செயல்பட்டால் செம்மொழி

என்பது தொட்டு விடும் தூரம்தாம். பிறகு அம்மா வந்தாலென்ன ஐயா வந்தாலென்ன

மொழிக்கு மட்டுமே வெற்றி

அதனை தடுக்க் யாராலும் முடியாது

எத்துனை தமிழ் வலைத்தலங்கள் இந்த மின்வெளியிலே

வல்லினம் மெல்லினம் இடையினம் இவற்றிற்கு மேலாக

கைத்தொலைபேசியில் தமிழை செல்லினமாக கொணர்ந்து உள்ளார்களே

இனி தமிழுக்கு இல்லை வீழ்ச்சி என்பதே

தமிழ்களின் பேச்சு




--
அன்புடன்.....
கல்யாண்ஜி

http://guruvadi.blogspot.com/

Narayanan Kannan

unread,
Aug 20, 2007, 7:00:42 PM8/20/07
to minT...@googlegroups.com
குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்ற ஒரு நிலை எம்மொழிக்கு வந்தது என்ன விதி?

கண்ணன்

kalyana gurukkal

unread,
Aug 20, 2007, 7:29:04 PM8/20/07
to minT...@googlegroups.com
குரங்கை கூட வல்லுனர்கள் கவி என்றழைப்பார்கள்

Narayanan Kannan

unread,
Aug 20, 2007, 7:58:41 PM8/20/07
to minT...@googlegroups.com
குருக்கள் ஐயாவின் இந்த சூளுரையில் பல விஷயங்கள் கிடைக்கின்றன.

1. தமிழ் மொழி அரசு சார்ந்த வளர்ச்சியை எதிர்பாராமல் தன்னளவில் தளிர் நடை
போட வேண்டும் என்பது.

2. இந்த உந்துதலை தமிழ் அன்பர்கள் அன்றையப் பாணர்கள் போல எங்கும் சென்று
பரப்ப வேண்டியது (evangelism)

3. மண் வெளி மாந்தர் (non-resident) களான தமிழர்கள் தங்கள் கையில்
இப்பொறுப்பை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவது. நல்ல உம்.
சிங்கப்பூர், மலேசியா முன்னணியில் ஆரம்பித்த இணையத்திணை.

4. வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து ஓலைச் சுவடிகளை
எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் நம் தமிழர் வெளியே சென்ற போது வெறும்
தமிழை மட்டும் எடுத்துச் சென்றனர் ;-( எனவே, தமிழகம் விழிப்புறாமல் தமிழ்
வளர்ச்சி இல்லை. அங்கு மக்கள் இயக்கம் தோன்ற வேண்டும். அதற்கு
இப்பக்கங்கள் உதவட்டும்.

கண்ணன்

kalyana gurukkal

unread,
Aug 20, 2007, 8:04:54 PM8/20/07
to minT...@googlegroups.com
செம்மொழி நிதி என்றதும் பலர் முன்வரக்கூடும்
அவர்களுடைய ஈடுபாடு மொழியிலா நிதியிலா
என்பதனை பொறுத்திருந்து காண்போம்

On 8/21/07, Narayanan Kannan < nka...@gmail.com> wrote:

ஆமாச்சு

unread,
Aug 20, 2007, 10:29:24 PM8/20/07
to மின்தமிழ்
>
> என்பது தொட்டு விடும் தூரம்தாம். பிறகு அம்மா வந்தாலென்ன ஐயா வந்தாலென்ன
>

தொட்டில் குழந்தை என அம்மாச் சொன்னால்.. தூக்கி எறி என ஐயா சொல்றார்..

உழவர் சந்தை என ஐயா சொன்னால்.. மந்தைக்கே சந்தைன்னு அம்மா சோல்றாங்க..

இப்படியே மத்ததும் ஆகிடக் கூடாதுன்னு ஒரு ஆதங்கம்தான்..

வேற ஒன்னும் இல்லை..

ஆமாச்சு

unread,
Aug 20, 2007, 10:35:47 PM8/20/07
to மின்தமிழ்
On Aug 21, 4:58 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> குருக்கள் ஐயாவின் இந்த சூளுரையில் பல விஷயங்கள் கிடைக்கின்றன.
>
> 1. தமிழ் மொழி அரசு சார்ந்த வளர்ச்சியை எதிர்பாராமல் தன்னளவில் தளிர் நடை
> போட வேண்டும் என்பது.

ரொம்ப சரி!

>
> 2. இந்த உந்துதலை தமிழ் அன்பர்கள் அன்றையப் பாணர்கள் போல எங்கும் சென்று
> பரப்ப வேண்டியது (evangelism)
>

evangelism சரியான சொல் இல்லை.. அது இதை விட்டா கதி இல்லைன்னு சொல்வது..
propagation என சாதாரணமாவே சொல்லலாம்...


> 3. மண் வெளி மாந்தர் (non-resident) களான தமிழர்கள் தங்கள் கையில்
> இப்பொறுப்பை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவது. நல்ல உம்.
> சிங்கப்பூர், மலேசியா முன்னணியில் ஆரம்பித்த இணையத்திணை.
>

மேலும் அறிய ஆவல்...

Narayanan Kannan

unread,
Aug 20, 2007, 10:44:23 PM8/20/07
to minT...@googlegroups.com
> > 2. இந்த உந்துதலை தமிழ் அன்பர்கள் அன்றையப் பாணர்கள் போல எங்கும் சென்று
> > பரப்ப வேண்டியது (evangelism)
> >
>
> evangelism சரியான சொல் இல்லை.. அது இதை விட்டா கதி இல்லைன்னு சொல்வது..
> propagation என சாதாரணமாவே சொல்லலாம்...
>
>

இல்லை! evangelism என்ற பதமே சரி. ஏனெனில் இதிலொரு தீவிரம் வேண்டும்,
பற்று வேண்டும். உப்புக்கு சப்பாணி எனச் சொல்பவர் இங்கு வேண்டாம்.
உழைப்பவர் வேண்டும். கணினி உலகில் இச்சொல் மிகப்பிரபலம். உதாரணமாக
மெக்கிண்டாஷ் கணினி இன்னும் உயிரோடு உலாவுவதற்கு இத்தகைய Mac Evangelism
காரணம் உம்: http://www.13idol.com/mac/

> > 3. மண் வெளி மாந்தர் (non-resident) களான தமிழர்கள் தங்கள் கையில்
> > இப்பொறுப்பை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவது. நல்ல உம்.
> > சிங்கப்பூர், மலேசியா முன்னணியில் ஆரம்பித்த இணையத்திணை.
> >
>
> மேலும் அறிய ஆவல்...


உங்களுக்கு தமிழ் மின்திணையின் சரித்திரமே தெரியாதா?

கண்ணன்

ஆமாச்சு

unread,
Aug 21, 2007, 12:38:24 AM8/21/07
to மின்தமிழ்
On Aug 21, 7:44 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> இல்லை! evangelism என்ற பதமே சரி. ஏனெனில் இதிலொரு தீவிரம் வேண்டும்,
> பற்று வேண்டும். உப்புக்கு சப்பாணி எனச் சொல்பவர் இங்கு வேண்டாம்.
> உழைப்பவர் வேண்டும். கணினி உலகில் இச்சொல் மிகப்பிரபலம். உதாரணமாக
> மெக்கிண்டாஷ் கணினி இன்னும் உயிரோடு உலாவுவதற்கு இத்தகைய Mac Evangelism
> காரணம் உம்:http://www.13idol.com/mac/

ஆம். அதுதான் சொல்கிறேன். மாகின்டாஷ், விண்டோஸ் முதலிய தனியுரிம
மென்பொருட்கள் தங்களை விட்டால் வழியில்லை.. எனும் போக்கினை நியாயப்படுத்த
பயன்படுத்தும் பதம் அதுவென்று..

தீவிரத்தை உணர்த்த...

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி..

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.. போன்ற குறள் முதலியன உள்ளனவே!

>
> உங்களுக்கு தமிழ் மின்திணையின் சரித்திரமே தெரியாதா?

தாங்கள் சரியாக எதைச் சுட்ட வருகிறீர்கள் என்பது விளங்காததால்
கேட்டேன்..

Narayanan Kannan

unread,
Aug 21, 2007, 1:10:13 AM8/21/07
to minT...@googlegroups.com
சரி!

Evangelism என்பதன் பொருள் புரிந்துவிட்டது. அதற்கீடான தமிழ்ச் சொல்
என்ன? சிறிய, எளிய, மொழிபெயர்பற்ற, தமிழ்ச் சொல் (வள்ளுவரை
வம்பிற்கிழுக்காமல்)

கண்ணன்

ஆமாச்சு

unread,
Aug 21, 2007, 3:37:01 AM8/21/07
to மின்தமிழ்
On Aug 21, 10:10 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> சரி!
>
> Evangelism என்பதன் பொருள் புரிந்துவிட்டது. அதற்கீடான தமிழ்ச் சொல்
> என்ன? சிறிய, எளிய, மொழிபெயர்பற்ற, தமிழ்ச் சொல் (வள்ளுவரை
> வம்பிற்கிழுக்காமல்)

பறை - பறைதல் - பறைசாற்றுதல்

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

ஆமாச்சு

unread,
Aug 21, 2007, 11:36:33 AM8/21/07
to மின்தமிழ்
> தமிழின் அரிய வளத்தை பிற இந்திய மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்க
> வேண்டும்.

வேறு மொழித் தெரிந்த நம்மவரகள் பிற மொழிகளிலுள்ள நல்லவற்றை தமிழாக்க
மனமுவந்தாலே பாதி கிணறு தாண்டின மாதிரி! மூலரும், கம்பரும்,
மறைமலையடிகள் போன்றோரும் இதைத் தானே செய்தார்கள்..

நமக்கு ஆங்கிலம் முதலியன தெரிஞ்சதனால இதெல்லாம் தெரிஞ்சுக் கிட்டோம்..
மத்தவனும் ஆங்கிலம் முதலியன கத்துக்கிட்டா கத்துக்கப் போறாங்கற எண்ணம்
இருக்கறது நம் மொழியின் வளர்ச்சியை நாமே தடுப்பதாகும்.

அப்பறம் நம்ம கிட்ட இருக்கற நல்லத அவங்களதாக்கிக்க மத்தவங்க தானா
வருவாங்க.. ;-)

அன்புடன்,
ஆமாச்சு

http://amachu.net

Kannan Natarajan

unread,
Aug 21, 2007, 5:27:31 PM8/21/07
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
ஜெர்மானிய மொழியைப்பற்றி அறிந்தோம். பேசுவதிலும்,உச்சரிப்பதிலும் வேறுபாடுகள் இருந்தாலும்,ஆங்கில நெடுங்கணக்கு (alphabet) பயன்பாட்டால்,ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஜெர்மானிய மொழி கற்றுக்கொள்ள கடினமாக இருக்காது. அம்மொழியைப் பாடமாக படித்ததால்,என் அனுபவத்தை மேலே குறிப்பிட்டுள்ளேன்.சுபா அவர்களே,நீங்கள் ஐரோப்பிய மொழியைப் பற்றி ஒரு அறிமுகம் தந்துள்ளீர்கள்.நன்றி.கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளைப் பற்றியும் குறிப்புகள் அளித்தால் சிறப்பாக இருக்கும்.மத்தியகிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் நம் குழும அன்பர்கள்,பாரசீக மொழியின் மாண்பைப் பற்றியும்,பாரசீக வளைகுடா அருகே அமைந்துள்ள நாடுகள்,அந்த தொன்மையான மொழியின் மறுமலர்ச்சிக்கு எடுத்துவரும் முயற்சிகளை தெரிவித்தால் வளம் சிறக்கும்.
 
**செம்மொழி அங்கீகாரம் என்பது சில குறிப்பிட்ட பாங்குகளையும் கொண்டது.
  • ஒன்று,வழகத்தில் இருந்து மறைந்த அல்லது மறையும் தருவாயில் இருக்கும் சில மொழிகளுக்கு,"செம்மொழி" என்ற நிலை வழங்கப்பட்டுள்ளது.
  • இரண்டு, பழமையான மொழிகளில் உள்ள உயர்படியான இரண்டு சிறப்பியல்புகள் (diglossia). எழுத்திற்கும்,பேச்சு மொழிக்கும் உள்ள வேறுபாடுகள்.

ஏனைய ஐந்து செம்மொழிகளில், என்னென்ன வளர்ச்சி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்று அன்பர்கள் குறிப்பிட்டால்,இக்குழுமத்தில் உள்ள சில தமிழறிஞர்களுக்கும்,நமக்கும் வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவாகயிருக்கும்.

உண்மைகள் சில நேரம் கசக்கும்.கொரியா கண்ணன் கூறியதுப் போல.
 
உலகளவில் வணிகத்திலும்,அரசியலிலும் செல்வாக்கான மொழியைக் கற்றுகொள்வதிலும்,பயன்படுத்துவதிலும் எவருக்கும் எந்தவொரு இடர்பாடும் இல்லை.ஒடுக்கப்பட்ட,அடிமைப்பட்ட எந்த ஒரு மொழிக்கும் ஏற்படும் நிலைமைதான் நம் தமிழ்மொழிக்கு ஏற்பட்டுள்ளது என்று நாமனைவரும் அறிவோம். கிரேக்கர்களோடு அளவளாடும் போது,அவர்கள் கூறியது நினைவிற்கு வருகிறது,பண்டையக் கிரேக்க மொழியிலிருந்து,எழுத்து,பேச்சு,இலக்கியத்தில் என்று பலவாறாக கிரேக்க மொழி மாறி,தற்போது பல்கலைக்கழகங்களில் தொன்மையான கிரேக்க மொழியைத்,தனிப்பட்ட துறைகளைக் கொண்டு அரசோடு,தனியார் மற்றும் தன்னார்வள நிறுவனங்களும் பெருமுயற்சியை 2002ஆம் அண்டுலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குறுப்பிட்டனர்.
 
இக்குழும உரிமையாளர்,பெர்க்லீயில் உள்ள ஜார்ஜ் ஹார்ட் மற்றும் சென்னையில் உள்ள பேராசிரியர் மறைமலை போன்றோரின் வளர்ச்சி ஆலோசனைகள் அடங்கிய மின்னஞ்சல் கேட்டுக் கிடைக்கபெறின்,மின்தமிழ் ஆர்வலர்களுக்கு நல்ல திட்டங்களை,வினைத்திட்பத்தோடு தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்.
 
"நம்பிக்கை நல்வழி காட்டும்,சந்தேகம் சங்கடம் தரும்."
 
(பி.கு:**செம்மொழி பற்றிய ஆங்கிலக் கட்டுரை - http://en.wikipedia.org/wiki/Classical_language)

Subashini Kanagasundaram

unread,
Aug 21, 2007, 6:02:34 PM8/21/07
to minT...@googlegroups.com
அன்புள்ள கண்ணன் நடராஜன்,
 
அடிப்படையில் நான் ஒரு மொழி வல்லுநர் அல்ல. இருப்பினும் நண்பர்கள் சுற்றத்தில் லத்தீன் மொழி பற்றிய தகவல் குறித்து அறிந்து எழுதுகிறேன். உங்கள் கடிதத்தை வாசித்தபோது சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு ஜெர்மானிய நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என்ணத் தோன்றுகின்றது. 
 
ஜெர்மன் மொழி Hochdeutsch என்ற பொதுவான ஒரு அடிப்படையில் நாடு முழுவதும் மற்றும் அருகாமையில் உள்ள, ஸ்விட்ஸர்லாந்து (ஒரு கண்டோனில் மட்டும்), ஆஸ்திரியா, பெல்ஜியம், மற்ற அண்டைய நாடுகளில் பேசப்பட்டாலும் இங்கு வட்டார பேச்சு வழக்குகளின் ஆதிக்கம் அதிகம். பாயரிஷ், ஷ்வாபிஷ், பெல்ஷிஷ் என்று பல பேச்சு மொழிகள் இருக்கின்றன. சில நேரங்களில் ஷ்வாபிஷ் வழக்கில் பேசுவதை Hochdeutsch கற்ற நம்மைப் போன்றவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது.   அதில் Karlsruhe நகரில் அந்த நகருக்கே உரிய வட்டார பேச்சு வழக்கு பயன்பாட்டில் படிப்படியாக்க் குறைந்து வருவதைக் கண்ட அந்நகர அரசாங்கம் அப்பேச்சு வழக்கை ஒலிவடில் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்திருப்பதாக  அந்த நண்பர் குறிப்பிட்டார். ஒலி வடிவில் உள்ள கோப்புக்களை இணைத்தில் பதிவு செய்வதன் வழி இந்த மறைந்து வரும் தனித்துவம் வாய்ந்த பேச்சு மொழிக்கூறுகளை பாதுகாக் இந்த திட்டம் பயன்படும் என்பது அவர்களது கருத்து. இதனைக் கேட்டவுடன், தமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு புத்தாண்டு தொடங்கி ஒலி வடிவில் தமிழின் தொண்மையான அறிய பொக்கிஷங்களை சேகரிக்கக வேண்டும் என்று நாம் எடுத்து வரும் முயற்சிகளைப் பற்றி இந்த நண்பரிடம் விவரித்தேன். தமிழுக்காக நாம் செய்யும் இந்த காரியங்களை நினைத்து அந்த நண்பர் உண்மையில் வியந்தார் என்றே சொல்ல வேண்டும்.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர்  கலிபோர்னியா சென்றிருந்த போது பெர்க்லீயில் ஜார்ஜ் ஹார்ட்டுடன் நானும் முனைவர்.நா.கண்ணனும் சில நாட்கள் பல நல்ல விஷயங்களைப் பற்றி உரையாடும் வாய்ப்பு அமைந்தது.  நீங்கள் குறிப்பிடுவது போல அவரிடம் தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைகளையும் கேட்டறியலாம். நிச்சயம் பயன் தரும்.
 
பேராசிரியர் மறைமலை மற்றும் தமிழகத்திலே உள்ள  தமிழ் பேரறிஞர்கள் பலரையும் ஒன்றிணைக்க வேண்டும். அதில் குறிப்பாக அரசியல் சாயம் கலக்காத தூய ஆய்வு விரும்பிகள், தமிழுக்காக சேவை மணப்பாண்மையோடு உழைக்கும் உள்ளம் படைத்தவர்கள்  சேர்ந்து கருத்துப் பரிமாறி திட்டங்கள் வரைய வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
 
அன்புடன்
சுபா 
 


 

Narayanan Kannan

unread,
Aug 21, 2007, 6:07:45 PM8/21/07
to minT...@googlegroups.com
> இக்குழும உரிமையாளர்,பெர்க்லீயில் உள்ள ஜார்ஜ் ஹார்ட் மற்றும் சென்னையில் உள்ள
> பேராசிரியர் மறைமலை போன்றோரின் வளர்ச்சி ஆலோசனைகள் அடங்கிய மின்னஞ்சல் கேட்டுக்
> கிடைக்கபெறின்,மின்தமிழ் ஆர்வலர்களுக்கு நல்ல திட்டங்களை,வினைத்திட்பத்தோடு
> தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்.


பேரா. ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் தமிழ் மொழி பற்றிய எழுதிய கட்டுரை:

http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html

90 களில் பெர்கிலியில் இவர் நடத்திய வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும்
வாய்ப்புப் பெற்றேன். ஜியார்ஜ் ஹார்ட் தமிழ் எழுத்துரு (font)
உருவாக்கத்திலும் ஈடுபட்டு இருந்தார். இவர் ஒரு கம்பன் அடிப்பொடி.

கண்ணன்

Kannan Natarajan

unread,
Aug 22, 2007, 5:13:37 AM8/22/07
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
ஐயா,கொரியா கண்ணன் அவர்களே, பேரா.ஜார்ஜ் ஹார்ட் 7 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மடல் தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்பதற்காக.
 
இப்போது,செம்மொழி ஆய்வு மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இனிமேல் என்னென்ன செயல் திட்டங்கள் வகுக்கவேண்டும்.தமிழ் குழுமங்கள் மற்றும் அயலகத்தில் வாழும் தமிழ் மொழி ஆர்வலர்கள் நிதியைத் தவிர,வேறு எந்த வகையில் செம்மொழி திட்டத்திற்கு உதவி செய்யலாம் என்ற ஒரு முன்னேற்ற மடல் நம் குழுமத்திற்கு மட்டுமல்ல தமிழர்கள் அனைவருக்கும் அவரின் மடல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடர்ச்சி மடலாக அமையும்.
 
2000ஆம் அண்டில் கூட,பேரா.மறைமலை அவர்களின் விண்ணப்பத்தின் பேரில்தான், பேரா ஜார்ஜ் ஹார்ட், அவர்கள் கொரியா கண்ணன் அனுப்பிய இணைய முகவரியில் தன் எண்ணங்களைக் குறிப்பிட்டுள்ளார்,ஆகையால்,மீண்டும் அவரின் எண்ணங்களையும்,ஆலோசனைகளையும் தெரிந்து கொள்வது,அனைவருக்கும் நலம்.அமெரிக்கா வாழ் மின்தமிழ் குழும அன்பர்கள் வழியாக,பேரா.ஜார்ஜ் ஹார்ட்டின் எண்ணச்சிதறள்கள் செந்தழல் வண்ணமாக தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும்.

Narayanan Kannan

unread,
Aug 22, 2007, 5:26:26 AM8/22/07
to minT...@googlegroups.com
அன்பின் கண்ணன்:

பேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், மறைமலை இருவருமே நமக்குப் பழக்கம்தான்.
மறைமலை அவர்கள் எனது பாசுரமடல்களை தொடர்ந்து வாசித்துவிட்டு அதன்
பாதிப்பால், தனது முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு
கேட்டுக்கொண்டார். தமிழ்த்தாத்தா உ.வே.சா எடுத்த கல்வி வளாகத்தில்
அடியேனும் ஆழ்வார்களின் இன்னருளால் வகுப்பெடுக்கும் வாய்ப்புக்
கிட்டியது. பிறிதொரு சமயம், வாஜ்பாய் பிரதமராய் இருந்த காலத்தில் அவரைக்
காணச் சென்ற உயர் மட்டக் குழுவில் எனக்கும் இடம் கிடைத்தது. கிளம்பும்
நேரத்தில் பாகிஸ்தான் பிரச்சனை பண்ணி கெடுத்துவிட்டது. அப்போது செம்மொழி
பற்றிப் பேசவே அழைக்கப்பட்டிருந்தோம்.

உங்கள் மடலைப் பார்த்தவுடன் இன்னொரு யோசனை வருகிறது. வெளிநாட்டில் வாழும்
மின் தமிழ் அன்பர்கள் சேர்ந்து தங்கள் மேலான யோசனைகளை இங்கு பகிர்ந்து
கொண்டால் அதை நாம் தமிழக முதல்வருக்கு பரிந்துரைக்கலாம்.

ஆஸ்திரேலியா சார்பாக நீங்கள் செயல்படலாம். லண்டனில் குருக்கள் ஐயா எண்ணச்
சேகரிப்பு செய்யலாம். ஐரோப்பாவிற்கு சுபா. அமெரிக்காவிற்கு ராஜூ.
சிங்கப்பூர் மலேசியாவிற்கு மா.கோ, ரெ.கா.

இதற்கென தனி இழை ஒன்று ஆரம்பிப்போம். ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் தமிழ் மொழி
உயர்விற்கு ஏணி அமைத்து விட்டார். இனி மேற்பணி நமதுடையது அல்லவா?

கண்ணன்


--
"Be the change you wish to see in the world." -Gandhi

Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818

வேந்தன் அரசு

unread,
Aug 22, 2007, 8:23:01 AM8/22/07
to minT...@googlegroups.com
கண்ணன்
 
முதல் கட்டமாக, கலைப்பாடங்களை தமிழிலும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்திலேயும் கற்றுத்தரும் வழக்கத்தை நடைமுறைபடுத்த வேண்டும். சாஜகான் தாஜ்மகாலை கட்டினான் என்பதை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டுமா?
 
 இதனால் இரண்டு மொழிகளிலும் நம் மாணவர்களுக்கு புலமை ஏற்படும். எதிர்ப்பும் இருக்காது.
 
இரண்டாவது,  தமிழ் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு தமிழில் கணினியில் ஊட்டம் செய்வதற்கு பள்ளியிலேயே பயிற்சி கொடுக்கபப்ட வேண்டும்.
 
பின், நல்ல தமிழ் பேசும் தொகுப்பாளினி, தொகுப்பாளர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கம் தர வேண்டும்
 
தமிழ் கலப்பு செய்து பேசபப்டும் நிகழ்ச்சிகளை கண்டித்து கடிதம் எழுத வேண்டும்.  தொலைகாட்சிகளை பார்த்து நம் பிள்ளகள் (அயலகத்தில்) தமிழ் கற்றுக்கொள்ளட்டும் என்றால்  அந்த நிகழ்ச்சியில் உரையாடுபவர்கள் ஆங்கிலத்தை தவறாக பேசுகின்றனரோ போல் நிகழ்ச்சிகள் உள்ளன.
 
இறுதியாக தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் தொழில் முனைந்து நாலு காசு சேர்த்தால் பாதாளம் வரை தமிழை பாய்ச்சலாம்

Subashini Kanagasundaram

unread,
Aug 22, 2007, 11:14:20 AM8/22/07
to minT...@googlegroups.com
நண்பர்களே,
கிடைத்த நேரத்தில் வலைப்பக்கத்தில் தேடிய போது லத்தீன் மொழி வரலாறு பற்றி தென்பட்ட சில தகவல்கள்:

http://en.wikipedia.org/wiki/Latin
http://www.unrv.com/culture/latin-language.php
http://www.learnlatinlanguage.com/HISTORY.HTM
http://www.everything2.com/index.pl?node=classical%20Latin


சுருக்கத்தைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

ஏறக்குறைய கி.மு 1000  - லத்தீன் இந்தோ ஐரோப்பிய மக்களால் இத்தாலிக்கு கொண்டுவரப்பட்டது
கி.மு 7 - லத்தீன் எழுத்துருக்கள் உருவாக்கம் - இதன் அடிப்படை Etruscan  அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்டது
கி.மு 753 - கி.பி 476 - அன்றைய ரோமானிய அரசு லத்தீன் மொழி பயன்பாட்டை ரோமானிய நாடு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருந்து மற்ற நாடுகளில் பரப்பியது.
கி.மு 70 - கி.பி 14  - லத்தீன் மொழியின் பொற்காலம்.
கி.பி 14 - கி.மு 130 - லத்தீன் மொழியின் சிறப்பான காலம்
2ம் நூ. - 6ம் நூ --> லத்தீன் பிற மொழித்தாக்குதலால் பாதிப்புற்றது
இடைக்காலம் - லத்தீன் எழுத்து மொழியாகவும் தேவாலய மொழியாகவும் இருந்துவந்தது.
15-ம் நூ - 17ம் நூ -->லத்தீன் அறிவியல், சமயம்,தத்துவம் போன்ற துறைகளின் எழுத்து மொழியாக இருந்தது
17ம் நூ - 19ம் நூ --> மற்ற பல மொழிகள் லத்தீன் மொழிக்கு பதிலாக பயன்பாட்டில் வளர்ச்சியுற்றன. 
இன்றைய அளவில் - லத்தீன் ரோமானிய கத்தோலிக்க தேவாலயங்களில் பயன்படுத்தப்படும் மொழியாகவும் வாட்டிக்கானில் பயன்பாட்டில் உள்ள   மொழியாக உள்ளது.

அன்புடன்
சுபா

 

Kannan Natarajan

unread,
Aug 22, 2007, 6:01:38 PM8/22/07
to minT...@googlegroups.com
நன்றி சுபா அவர்களே.இலத்தீனை,இரத்தனச்சுறுக்கமாக தந்தமைக்கு.
 
செம்மொழி தகுதி பெறுவதால் என்ன நன்மைகள் என்பதை முனைவர் மணவை முஸ்தபா
தீராநதி நிருபருக்கு தெரிவித்ததை அனுப்பியுள்ளேன்.....
 
தீராநதி: தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் மூலம் என்ன நன்மைகள் விளையும்?

மணவை முஸ்தபா: முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும். இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன. அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும். மேலும் இக்காலக்கட்டத்துக்கு ஏற்றபடி தமிழ்மொழியை அறிவியல் பூர்வமாக வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகளுக்கும் நிதியுதவிகள் அதிகம் கிடைக்கும்.

மேலும்..

ஒரு மொழி செம்மொழி ஆக்கப்பட வேண்டுமென்றால் பதினோரு அம்சங்களில் அது தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
  1. தொன்மை,
  2. தனித்தன்மை,
  3. பொதுமைப் பண்பு,
  4. நடுநிலைமை,
  5. தாய்மைத் தன்மை,
  6. பண்பாடு, கலை,
  7. பட்டறிவு,
  8. பிறமொழித் தாக்கமின்மை,
  9. இலக்கிய வளம்,
  10. உயர் சிந்தனை,
  11. மொழியியல் கோட்பாடுகள்
இவைதான் தகுதிகள்.
 
செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மொழிகளுமே இந்த பதினோரு அம்சங்களிலும் தகுதியுடையவை என்று சொல்ல முடியாது. குறிப்பாக சமஸ்கிருதம் ஏழு அம்சங்களில்தான் பொருந்துகிறது. ஆனால் பதினொரு அம்சங்களிலும் தகுதியுடைய மொழியாக தமிழ் இருக்கிறது....

 
அடுத்து இந்திய நடுவண் அரசின் கல்வித்துறைத் தளத்திலிருந்து எடுத்த செம்மொழிக்கு அளிக்கப்படும் சலுகைகளின் பட்டியல் (எனது மொழியாக்கம்):

1. ஒவ்வொரு வருடமும் "கேந்திரிய சன்ஸ்கிருத வித்யாபீடங்களில்" 2524 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சமஸ்கிருதத் தேர்வு எழுதுகிறார்கள் . 473 பேருக்கு உதவித் தொகை, 300 பேருக்குத் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.

2. 68 புது ஆய்வுகள் வெளியிட உதவப்படுகிறது.

3. 750 தன்னார்வ அமைப்புக்களுக்கும், 15 குருகுலங்களுக்கும் 30 லட்சத்திற்குமதிகமான உதவித் தொகை வழங்கப்படுகிறது.

4. அகராதி பதிப்பிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது.

5. 6 லட்ச ரூபாய் "ஆதர்ஷ சமஸ்கிருத பாடகசாலைக்கு" வழங்கப்படுகிறது.

6. அராபிய, பாரசீக மொழிவளர்ச்சிக்கு ரூ. 6 லட்சம் அளிக்கப்படுகிறது.

7. ஆயிரத்துக்கும் அதிகமான "சமஸ்கிருத பண்டிதர்களுக்கு" மாதம் ரூ.1800 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மற்ற வசதிகளுக்காக ரூ. 19.30 லட்சம் செலவிடப்படுகிறது.

8. சமஸ்கிருத இலக்கியங்களை வளர்க்கும் வகையில் 65000 க்கும் அதிகமான சமஸ்கிருத பக்கங்கள் பல்கலைக்கழகங்களால் அச்சடிக்கப்படுகிறது.

9. சமஸ்கிருதத்தைப் பரப்பும் வகையில் "சிரவணா பூர்ணிமா" தினம் சமஸ்கிருதத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

என்கருத்து:

இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? மற்ற எல்லா மொழி பேசும் மக்களின் வரிப்பணத்தில் செய்யபடுகிறது. என்ன மொத்தத்தில் பெரிய பணமொன்றுமில்லை என்று நீங்கள் சொல்லாம். உண்மை தான். லட்சமெல்லாம் அதிகமில்லை. ஆனால் இந்தப் புள்ளிவிவரம் வெளிவந்த ஆண்டு 1978 !!. இன்று எத்தனை கோடிக்கோடியோ. இதெல்லாம் தமிழுக்கு வேண்டாமா ??
 

செம்மொழி ஏன் ஆக்கவேண்டும்?

வாழும் மொழியான தமிழின்று அரசு சாரா நிறுவனங்களின், தனிநபர்களின் முயற்சியில் வளர்ச்சி கண்டுவருகிறது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம்,கலைச்சொல்லாக்கம் போன்ற துறைகளில் போகவேண்டிய தூரம்நிறைய இருந்தாலும், வந்திருக்கும் தூரமும் நல்லமுறையில் தான் இருக்கிறது.

ஆனால் மொழியாராய்ச்சி, மொழிவளர்ச்சி,
பன்மொழிமாற்ற அகராதி, பழைய ஓலைச்சுவடிகளை, இதுவரை பதிப்பிக்கப் படாத, அல்லது மறுபதிப்பு காணாத பழைய புத்தகங்களைப் பதிப்பித்தல், அழிந்த நூற்களை மீட்டெடுக்க முயற்சித்தல், கல்வெட்டுக்கள், செப்பேட்டுகள் காப்பது போன்ற பல்வேறு பணிகள் தமிழுக்குச் செய்யப்பட வேண்டும். இவை தனிநபர்களாலும், அரசுசாரா நிறுவனங்களாலும் பெரிய முறையில் செய்ய இயலாது. இவற்றைச் செய்வதற்கு பொருளுதவி தவிர அரசுசார் செயற்பாடும் இருக்க வேண்டும்.

"சலுகைகளுக்குகாகவா" என்ற கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை. அரசு மக்களுக்குச் செய்வது சலுகையல்ல கடமை. செம்மொழியென்று அறிவித்ததனால் சமஸ்கிருதத்துக்கு என்ன செய்யப்படுகிறது என்று படிக்கிறோம். அதுபோல நம்மொழிக்கும், நமது வரிப்பணத்தில் செய்யவேண்டியது அரசின் பொறுப்பு. மற்ற இந்திய மாநிலங்களின் கவனிப்பிற்கு ஆளாவது, உலகளாவிய பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை, தமிழ்த்துறை உருவாவதற்கான வாய்ப்பு போன்றவைகளும் செம்மொழி தகுதியோடு வரலாம் என்று கூறப்படுகிறது.


2001-02 ஆண்டிற்கான மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின்

ஆண்டறிக்கையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு கோடிகள் செலவளித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

- "சமஸ்கிருத மேம்பாடு" என்பதன் கீழ் மட்டும் 2001-02ல் ரூ1050 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது


- "சமஸ்கிருத பயிற்சி மேம்பாட்டிற்கு நூறு சதவீத மானியம்


- வேத விற்பன்னர்களை கௌரவிப்பதற்கும், சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உதவித்தொகை அளிப்பதற்கும் மானியம்


- வருடத்திற்கு 15 சமஸ்கிருத, 3 பாரசீக, அராபிய, தலாஒரு பாலி, பிராகிருத் அறிஞருக்கு வருடத்திற்கு ரூ50,000/- அவரது வாழ்நாள் முழுவதிற்கும்

இப்படிச் செலவிடும் நிதியை நமக்கும் வாங்கி நம்மொழியையும் செழிக்கச் செய்வது தான் அரசியல்வாதிகளின் கடமை.


கூகிள் மூலம் தகவல் திரட்டிய சுட்டிகள்:


2001-02 மனிதவள மேம்பாட்டுத்துறை ஆண்டறிக்கை


மனிதவளமேம்பாட்டுத்துறையின் மொழிகள் பிரிவு

 
செம்மொழியாக்குங்கள் - வாஜ்பேயி - தமிழறிஞர்கள் சந்திப்பு

 
தீராநதி: தமிழ் ஏன் செம்மொழியாக்கப்பட வேண்டும் - மணைவை முஸ்தபா.

நன்றி: http://paarvai.blogspot.com/2004/05/blog-post_29.html

Kannan Natarajan

unread,
Aug 24, 2007, 6:05:12 PM8/24/07
to minT...@googlegroups.com
திருமுறை, நீதி நூல்களையும் செம்பதிப்பாக அரசு வெளியிட வேண்டும்: ஐராவதம் மகாதேவன்

சங்க இலக்கிய நூல்களை செம்பதிப்பாக வெளியிடுவதைத் தொடர்ந்து, திருமுறை, நீதி நூல்களையும் செம்பதிப்புகளாக வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தினமணி முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் "ஆவணி மூலத் திருநாள் விழா" வியாழக்கிழமை (23/8/07) இரவு நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ஆதீன பூஜை மடத்தில் அருள்மிகு சொக்கநாதப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், ஐராவதம் மகாதேவனுக்குப் பாராட்டு விழா, ஆதீன கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா ஆகியன ஆதீன திருநெறிய தெய்வத் தமிழ் மன்றத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தருமபுரம் ஆதீன குருமகாசந்நிதானம் தலைமை வகித்தார்.

விருது பெற்ற ஐராவதம் மகாதேவன் பேசியது:
 
சமயக் குரவர்கள்
  • சம்பந்தர்,
  • அப்பர்,
  • சுந்தரர்,
  • மாணிக்கவாசகர்
ஆகியோர் சைவத்தை தமிழ் வழி வளர்த்ததால், தமிழ் மக்களிடையே சைவம் தழைத்துள்ளது.

ஆதிசங்கரர், இராமானுஜர் ஆகியோர் ஏராளமான சைவ, வைணவத் தத்துவங்களைக் கூறியுள்ளனர். இவர்களது படைப்புகள், பிரசாரங்கள் வடமொழியில் அமைந்துவிட்டதால் தமிழ் படைப்புகளான தேவாரம், திருவாசகம் ஆகியன திராவிட மக்களை எளிதில் கவர்ந்து, பக்தி மார்க்கத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன.
 
சமயக் குரவர்கள் நால்வருக்குப் பின்னர்;
  • அருணகிரிநாதர்,
  • பட்டினத்தார்,
  • தாயுமானவர்,
  • இராமலிங்க சுவாமிகள்
ஆகியோர் சைவத்துக்காகவும், தமிழுக்காவும் ஆற்றியுள்ள தொண்டுகள் போற்றுதலுக்குரியவை.

"ஆரிய மொழிகள் தோன்றும் முன்பாகவே பேசப்பட்டவை திராவிட மொழிகள்,"என்பது பெரும்பாலான மொழியியல் அறிஞர்களால் ஏற்கப்பட்ட கருத்து. இதை உணர்த்துபவை சிந்துவெளிச் சான்றுகள்.

தமிழுக்குச் செம்மொழி மதிப்பு அளித்து, மத்திய, மாநில அரசுகள் சங்க இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிடுவது பாராட்டுக்குரியது. சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து சைவத் திருமுறை, நீதி நூல்களையும் செம்பதிப்புகளாக வெளியிட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழையும், சைவத்தையும் இரு கண்களாகப் போற்றும் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட விருது தமிழுக்கும், வரலாற்றுக்கும் வழங்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன் என்றார் ஐராவதம் மகாதேவன்.

திருச்சி மெளனமடம் ஸ்ரீமத் மெளன குமாரசாமி தம்பிரான் பாராட்டு உரையாற்றினார்.

ஐராவதம் மகாதேவன் எழுதி "தினமணி" தலையங்கப் பக்கத்தில் பிரசுரமான 2 கட்டுரைகள் விழாவில் படிக்கப்பட்டன. தருமபுரம் கல்லூரி நூலகர் இரா. செல்வநாயகம் அந்தக் கட்டுரைகளைப் படித்தார்.

வேந்தன் அரசு

unread,
Aug 24, 2007, 6:33:33 PM8/24/07
to minT...@googlegroups.com
>ஐராவதம் மகாதேவன் எழுதி "தினமணி" தலையங்கப் பக்கத்தில் பிரசுரமான 2 கட்டுரைகள் விழாவில் படிக்கப்பட்டன.
 
இந்த கட்டுரைகள் இட்டால்  நன்றிகள் பல உரித்தாக்குவேன்

Kannan Natarajan

unread,
Aug 24, 2007, 7:02:04 PM8/24/07
to minT...@googlegroups.com
ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதி 2 கட்டுரைகள் என்னென்ன தேதிகளில் வெளியிடப்பட்டன என்று அறிந்து, தெரிவிக்கிறேன்.
 
இனி தமிழ் மெல்ல வளரும்

தமிழ்நாட்டிலுள்ள மாநில அரசு மற்றும் உள்ளாட்சித் துறையின் மேற்பார்வையில் நடைபெறும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தொடங்கிய அனைத்து பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாகக் கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை, இப்போது உயர் நீதிமன்றமும் செல்லும் என்று அங்கீகரித்திருப்பது தமிழ் உணர்வும் தமிழ்மொழி மீது பற்றும் கொண்ட அனைவரும் வரவேற்கவேண்டிய தீர்ப்பு.

நாற்பது ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதுவரை, அநேகமாக எல்லாப் பள்ளிகளிலும் தமிழ்தான் பயிற்று மொழியாக இருந்து வந்தது. தமிழும் ஆங்கிலமும் கட்டாயப் பாடங்களாகவும்,

  • இந்தி,
  • சம்ஸ்கிருதம்,
  • உருது,
  • மலையாளம்,
  • தெலுங்கு,
  • பிரெஞ்சு

போன்ற ஏதாவது ஒரு மொழி விருப்பப் பாடமாகவும் இருந்து வந்தது. அன்றைய முறையில் படித்த மாணவர்கள் மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற முடிந்தது என்பதுமட்டுமல்ல, கட்டாயமாகத் தமிழை ஒரு பாடமாக எல்லா மாணவர்களும் படிக்க வேண்டும் என்கிற நிர்பந்தமும் இருந்தது.

இந்தியாவில்,தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த மூன்று மொழிக் கொள்கைதான் இப்போதும் தொடர்கிறது. ஒரிசா மற்றும் குஜராத்தில் மாநிலங்களில்,அந்தந்த மாநில மொழியைப் படித்தே தீர வேண்டும். ஆங்கிலமும் அதேபோல கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இந்தி அல்லது உருது அல்லது சம்ஸ்கிருதம் விருப்பப் பாடமாகக் கற்றுத் தரப்படுகிறது.
 
இந்தி பேசும் மாநிலங்களான,
  • உத்தரப்பிரதேசம்,
  • மத்தியப்பிரதேசம்,
  • பிகார்

போன்ற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாமல் சம்ஸ்கிருதம் அல்லது உருது விருப்பப் பாடங்களாகக் கற்றுத் தரப்படுகிறது.

குறைந்தது மூன்று மொழிகளாவது தெரிந்திருப்பது நாளைய தலைமுறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, கட்டாயமாகத் தமிழ் படித்திருக்க வேண்டும் என்பது வருங்காலச் சந்ததியினர் தமிழை மறந்துவிடாமல் இருக்கவும் உதவும். வரவர, தமிழில் பேசுவது என்பது கெளரவக் குறைவாகவும், தமிழில் தவறின்றி எழுதுவது அரிதான விஷயமாகவும் போய்க் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவது என்பது இன்றியமையாதது.

தமிழை ஒரு பாடமாகப் படிக்காமல், சொல்லப்போனால் தமிழே தெரியாமல், ஒரு குழந்தை படித்துப் பட்டமும் பெற முடியும் என்பதுதான் தமிழ்நாட்டில் இன்றைய யதார்த்த நிலைமை. தமிழ், தமிழன், தமிழ் கலாசாரம் என்று பேசிக் கொண்டிருப்பவர்களின் ஆட்சியில் இப்படியொரு துர்பாக்கியம் நேரிடலாமா என்று அங்கலாய்க்காத தமிழ் ஆர்வலர்களே கிடையாது . அந்த அங்கலாய்ப்புக்கு விடையாகச் சென்ற ஆண்டு தமிழக அரசு தமிழைக் கட்டாயப்பாடமாக்கி அறிவித்தது.

தமிழக அரசின் இந்தச் சட்டத்தை எதிர்க்க முற்பட்டிருப்பது பெரும்பாலும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள்தான். உருதுவோ இந்தியோ தெலுங்கோ பயிற்றுமொழியாக இருப்பதை இந்தச் சட்டம் தடுப்பதில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழகத்தில் குடியேறிய சிறுபான்மையினர், தமிழை நாங்கள் தெரிந்து கொள்ள மாட்டோம் என்று அடம்பிடிப்பது முறையுமல்ல.

இன்னும் சொல்லப்போனால் அரசின் உதவித்தொகை பெறும் பள்ளிகள் மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சிபிஎஸ்இ (CBSE) முறையில் கல்வி அளிக்கும் பள்ளிகளாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் நியாயம் . மற்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் அவர்களது மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும்போது, தமிழ்நாடு மட்டும் தயங்க வேண்டிய அவசியமென்ன?

தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்திருக்கும் ஒருசில வரவேற்கத்தக்க நடவடிக்கைகளில் ஒன்றுதான் தமிழ் கட்டாயப் பாடமாக வேண்டும் என்கிற இந்தச் சட்டம். உயர் நீதிமன்றமும் இந்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்திருப்பதன் மூலம், தமிழகம் மீண்டும் மூன்று மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் இருந்த தடையை நீக்கியிருக்கிறது.

தமிழ் தெரியாமல் தமிழகத்தில் கல்வி கற்க முடியும் என்கிற நிலைமை தொடரக்கூடாது. அப்போதுதான் தமிழ் மெல்ல வளரும்.

ஆமாச்சு

unread,
Aug 25, 2007, 2:43:50 AM8/25/07
to மின்தமிழ்
> தமிழும் ஆங்கிலமும் கட்டாயப் பாடங்களாகவும்,

ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது (35 மார்க் வாங்கணுங்கறது) அவசியமா?
சரளமாக பேச எழுத கற்கும் ஏற்பாட்டையும் விருப்பத்தையும் ஏற்படுத்தினால்
போதும்..

கட்டாயப் படுத்த வேண்டாமே! ஆங்கிலம் தெரியலையேன்னு தாழ்வு மனப்பான்மையில்
விலகி விலகி நிற்கும் எத்தனையோ நண்பர்களையும் பிஞ்சுகளையும் கண்டு
விண்டும் வார்த்தைகளிது!

தமிழ் சொல்லித் தருவது பெற்றோரின் முதல் கடமை.. தாய் மொழி!
அவ்வளவுதான்! அரசுக் கட்டாயப் படுத்துவதெல்லாம் அடுத்தது தான்!

இங்கே இன்னிக்கு சிக்கல் நிலவுகிறது! எழுத்தறிவில்லாத பெற்றோர் இன்னும்
இருப்பது துர்பாக்கியமே!

பணம் காய்க்கும் மொழியாக ஆங்கிலத்துக்கு ஒரு நிலை வழங்கப்
பட்டுள்ளது! இது இல்லை என்றால் வாழ்வுக்கு வழி இருக்கணும்! இருக்கு!
இல்லாமல் போகும் சின்ன அறிகுறிகள் தென்படுகின்றன!

சாதாரணமாக வாழ தமிழ் மட்டும் தெரிந்திருந்தால் போதும் எனும்நிலை வர
வேண்டும்!
சாதாரணமாக மக்கள் அதிகம் ஆசைப் படாமல் அறவழியில் வாழத் தான்
விரும்புகிறார்கள்!

அவர்கள் வாழ்வை சுகமாக்காது பரந்த மனப்பான்மைப் பேசிக்கொண்டு
வரும் பெரும்பாலான சிந்தனைகள் சிரமத்துக்குள்ளாக்குகின்றன!

இது தெரிந்தால் வாழ்வு மேலும் வளப்படுமே அன்றி வீழ்ந்து விடாது என்ற
சிந்தனையின் அடிப்படையிலேயே ஆங்கிலம் முதலிய பிற மொழிகள் கற்பிக்கப்
படவேண்டும்!

ஆமாச்சு

unread,
Aug 25, 2007, 2:54:25 AM8/25/07
to மின்தமிழ்
> இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? மற்ற எல்லா மொழி பேசும் மக்களின்
> வரிப்பணத்தில் செய்யபடுகிறது. என்ன மொத்தத்தில் பெரிய பணமொன்றுமில்லை என்று
> நீங்கள் சொல்லாம். உண்மை தான். லட்சமெல்லாம் அதிகமில்லை. ஆனால் இந்தப்
> புள்ளிவிவரம் வெளிவந்த ஆண்டு 1978 !!. இன்று எத்தனை கோடிக்கோடியோ.

சமஸ்கிருதம் தமிழ் இரண்டும் நன்கறிந்த ஆன்றோர்கள், இரண்டையும் சமன்
செய்து சீர்தூக்கியே பார்த்திருக்கின்றேன்! ஒப்பு நோக்கி உயர்த்தி
தாழ்த்தி பேசியல்ல!

இன்று இந்தப் பக்கம் நாலு பேர் நின்னுகிட்டு சமஸ்கிருதத்தைத்
தூற்றுவதும் அந்தப் பக்கம் நாலுப் பேர் நின்னுகிட்டு தமிழைப்
பேசுவதும், இவர்கள் இரண்டு பேரிடமும் ஆங்கிலம் செங்கோலோச்சுவதும்,
விதைத்தவனுக்கு அறுவடைப் போய்கொண்டிருப்பதற்கானச் சான்றுகளாகவேத்
தோன்றுகிறது!

ஊரார் ரெண்டுப் பட்டா கூத்தாடிக்குத் தானேக் கொண்டாட்டம்!

நடக்கட்டும் நடக்கட்டும்! நல்ல பொழுது போக்கு! நல்ல வேடிக்கை! நோ
கமண்ட்ஸ்! ;-)

வேந்தன் அரசு

unread,
Aug 25, 2007, 7:01:18 AM8/25/07
to minT...@googlegroups.com
ஏற்கனவே  நான் சொல்லிய படி சரித்திரம் பூகோளம் எல்லாம் தமிழில் படிக்கலாம். மற்றவை ஆங்கிலத்தில் படிக்கலாம்
 
தமிழ் ஆங்கிலம் இரண்டும் பயிற்று மொழி ஆக்கிவிடலாம்

Kannan Natarajan

unread,
Jan 17, 2008, 4:12:31 PM1/17/08
to minT...@googlegroups.com
தமிழின் தொன்மை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை மேலும் நிரூபிக்க துறைமுக நகரங்களை ஒட்டி கடலிலும்,நிலப் பகுதியிலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கான நவீன கருவிகள், நிதி வசதியுடன் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் தேவை என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் வலியுறுத்தினார்.

ஆசியவியல் நிறுவனமும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் செம்மொழித் தமிழ் -பன்னாட்டுக் கருத்தரங்கை அவர் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். இக்கருத்தரங்கு வரும் 20-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசியதாவது:

தமிழின் சிறப்பை உலகம் அறியும் வகையில் அதற்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அளித்தது. திருக்குறளே தமிழ் செம்மொழி என்பதற்குச் சரியான சான்று. தமிழில் உள்ள சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ஆகியவையும் செம்மொழி என்பதற்கு சான்றுகள்.

தொல்காப்பியரின் காலம் கி.மு. 800 எனப்படுகிறது. அதற்கு முன் கி.மு. 3000 ஆண்டுக் காலத்தில் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் பூம்புகார், கொற்கை, முசிறி ஆகிய நகரங்களில் தமிழர்கள் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தனர். அதன் பயனாகவே தொல்காப்பியத்தில் ஐந்து வகை நிலம் குறிப்பிடப்படுகிறது.

எனவே, தொல்காப்பியத்துக்கு முன்பு இருந்த இலக்கியம் கி.மு. 3000 என்பதை நிரூபிக்கும் வகையில், அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

அண்மையில் நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் உள்புறத்தில் இடம்பெற்ற எழுத்தை கரிம வேதியியல் (கார்பன் டேட்டிங்) முறையில் ஆய்வு நடத்தியபோது, அது கி.மு. 1500-க்கும் கி.மு. 500-க்கும் இடைப்பட்டது எனக் கண்டறிந்துள்ளனர்.

எனவே, செம்மொழி என்பதை பல சான்றுகள் மூலம் நிறுவ வேண்டியுள்ளது. அதற்கு இத்தகைய ஆய்வுகள் தேவை என்றார் அமைச்சர் அன்பழகன்.

ஆசியவியல் நிறுவனத் தலைவர் சி.என்.ஏ. பரிமளம்: தமிழ் இந்தியாவில் தோன்றியிராமல் வெளிநாட்டில் தோன்றியிருந்தால், உலகப் பொதுமொழியாகி இருக்கும் என என் தந்தை அண்ணா குறிப்பிடுவார். தமிழின் சிறப்பை வெளிநாட்டவர் நன்கு உணர்ந்துள்ளனர் என்றார்.

  • ஆர்.இ. ஆஷெர் (ஸ்காட்லாந்து),
  • அலெக்சாந்தர் டுபியான்ஸ்கி (ரஷியா),
  • டேவிட் சி. பக்கர் (அமெரிக்கா),
  • ஜங் நாம் கிம் (தென்கொரியா),
  • சண்முகதாஸ் (இலங்கை)

ஆகிய வெளிநாட்டு தமிழ் வல்லுநர்கள் தமிழில் பேசினர்.

கருத்தரங்கின் நோக்கம், திட்டம் குறித்து இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் (மைசூர்) இயக்குநர் உதயநாராயண் சிங் விவரித்தார். நிறுவனத்தின் இயக்குநர் ஜான் சாமுவேல் வரவேற்றார். செம்மொழித் தமிழ் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இராமலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மோசஸ் மைக்கேல் பாரடே, லாசரஸ் சாம்ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

"விரைவில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம்'

தேசிய அளவில் தமிழுக்கும் இதர மொழிகளுக்கும் இடையில் மொழிபெயர்ப்பு இயக்கம் அமைக்கப்படும் என்று இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் (மைசூர்) இயக்குநர் உதயநாராயண் சிங் தெரிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய செம்மொழித் தமிழ்-பன்னாட்டுக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

 
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதுடன் நில்லாமல்,
 
தமிழ் மொழியின் வல்லுநர்களைச் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும்
  • ஓர் இந்தியரும்,
  • 3 வெளிநாட்டு வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

மொழி வளர்ச்சி என்பது அது சார்ந்த கலை, கலாசாரம், கைத்திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

தமிழ்ச் செம்மொழியின் சிறப்பை எல்லோரும் எல்லாக் காலத்திலும் அறிந்துகொள்ளும் வகையில் 50 ஆவணப் படங்கள் தயாரிக்கப்படும்.

அது போல் பண்டைய இலக்கியங்களை முப்பரிமாண வடிவில் ஆவணமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 
மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் "ஆன்லைன்'வழிக் கல்வி முறை தொடங்கப்படும் என்றார்.
 

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2008, 7:28:55 PM1/17/08
to minT...@googlegroups.com
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழே தடையாக உள்ளது
 
தமிழின் வரிவடிவம் 1 0 என்ற இரு அடிப்படை வடிவங்களால் ஆனது. இதைக்கொண்டு புதிய வரி வடிவங்களை படைக்க முடிவது குதிரைக்கொம்பு
 
காட்டாக உகர ஊகார உயிர்மெய்கள் ஒரே சீராக இல்லை. அதை சீர்படுத்த இயலவில்லை.
 
அடுத்து புதிய சொற்களை படைப்பதற்கும் கிளவியாக்க விதிகள் தடை செய்கின்றன்
 
12  உயிர் எழுதுக்கள், க,ச,ஞ,த,ந,ப,ம, ய, வ மேல் இயங்கும் உயிர் மெய்கள் மட்டுமே முதல் எழுத்தாக வரும்.  தகரத்துக்கு முன் நகரமும், (பந்து), டகரத்துக்கு முன் ணகரமும் ( வண்டு) போன்ற விதிகளும் எண்ணிறந்த சொற்களை படைக்க இயலாத நிலையை உருவாக்கி விட்டது
 
காட்டாக
 
திக்கு, குக்தி, குதிக் ( 1 பயன், 2 வீண்)
 
முகம், கம்மு. கமும்,  மும்க ( 3 பயன், 1 வீண்)

Narayanan Kannan

unread,
Jan 17, 2008, 7:39:52 PM1/17/08
to minT...@googlegroups.com
அட! நான் காண்பதென்ன கனவா? இல்லை நனவா?

தேன் மாரி பொழிகிறதே தமிழகத்தில்.

இத்தனை திட்டங்களும் அமுலாக்கப்படும் போது தமிழ் மண்ணில் பலர் கண்ட கனவு நனவாகும்.

தமிழ் மீது அக்கரை உள்ள பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் உள்ளனர். இதில் பலர்
உத்தமம் அமைப்பில் எங்களுடன் இணைந்து செயல்பட்டும் வருகின்றனர். ஜங் நாம்
கிம் (தென்கொரியா) சென்னை போனவுடன் கூப்பிட்டுப் பேசினார்.
தமிழ்-கொரியத் தொடர்பு பற்றிய ஆய்வு நமக்கு புதிய ஆய்வுக்களம்.

கடலாய்வு மிக அவசியமானது. எனது நண்பன் பி.ஆர்.சுப்பிரமணியன் துவாராகா
கண்டுபிடிப்பின் போது கடலாய்வில் ஈடுபட்டு இருந்தான் (அது தற்செயலானது
என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்). பிரான்சில் கரிமக்கால பரிசோதனைகள்
செய்ய உதவும் நண்பர்களுண்டு. அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு தமிழக
அரசிற்கு உதவ என்னைப் போன்ற பல NRI-கள் உண்டு.

இத்திட்டங்கள் சீரிய முறையில் செயல்பட்டு நல்ல சேதிகள் கிடைக்க இறையருள் வேண்டும்,

நா.கண்ணன்


2008/1/18 Kannan Natarajan <thar...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 1:14:28 AM1/18/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
சீன மொழியில் எத்தனை வரிவடிவங்கள்? அவை எவ்வாறு அமைந்துள்ளன?
 
காலத்திற்கு ஏற்பச், சீனர்கள் தம் எழுத்து வடிவங்களில் மாறுதல் செய்துள்ளனரா?
 
கவையில்லாமல், சீன மொழியிலேயே விசைப்பலகையை உருவாக்கிப் பரப்புகிறார்களே!  247 எழுத்துக்களை, மேலும் குறைக்கவேண்டும் என்று நாம் பேசுகிறோமே!!  மனிதனுடைய உயரம், நிறம், எடை இவை அல்ல பெரிது. மூளை அனைவருக்கும் ஒன்று தானே - வடிவில்,அமைப்பில் மாறுதலைச் செய்யவேண்டுமா!
 
விவரங்களைத் தேடி அறிந்து பெற்றால்,தமிழர்களுக்குச் சொல்லலாம்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

2008/1/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 5:58:35 AM1/18/08
to minT...@googlegroups.com
The classical status of Tamil

By S.S. Vasan

"Let me state unequivocally that, by any criteria one may choose, Tamil is one of the great classical literatures and traditions of the world." This quotation was not taken from any recent literary or political statement made in India but from the official "Statement on the Status of Tamil as a Classical Language" issued by the University of California, Berkeley (April 11, 2000). Why has it taken so much time in India to recognise the status of Tamil as a classical language? The reason is political, according to Prof. George L. Hart, who authored the Statement.

And indeed it has taken all the arm-twisting charm of the Dravida Munnetra Kazhagam to correct this historical prejudice, a prejudice that has deep roots in our history and psyche.

As early as 1835, Lord Macaulay was claiming in his "Minute on Education" that "... it may safely be said that the literature now extant in [English] is of far greater value than all the literature which three hundred years ago was extant in all the languages of the world together."

The growth of `vernacular languages' of India, including Tamil, was set back so seriously that the eminent Tamil poet Subramania Bharati sounded this warning in the early twentieth century:

"Alas slowly will Tamil perish

As languages of the West flourish"

After Independence, things got no better for Tamil as even scholars like Pandit Jawaharlal Nehru tried to impose Hindi as the sole official national language of India. This was a rather misleading aim that backfired as badly as Pakistan's attempts to impose Urdu on Bangladesh during 1952-1971. As Sir V.S. Naipaul cautions: "Cultural purity is a fundamentalist fantasy." The `one language policy' might have worked for China, but as a democracy India has little choice but to celebrate its diversity.

The Congress party has now come a full circle to deliver poetic justice — from its 1960s obsession to impose Hindi in Tamil Nadu — to recognising the long overdue status of Tamil as a classical language in 2004. The declaration of Tamil as a classical language by President A.P.J. Abdul Kalam, a Tamil scholar himself, is not just symbolic but a victory for Indian democracy as well.

What now?

That Tamil has at long last gained recognition in India is wonderful, but not enough. The next step is to get other nations to recognise the classical status of Tamil and also have it recognised by world bodies like the UNESCO. Would it not be wonderful if the Tamil-speaking United Progressive Alliance Government Ministers joined hands with the All-India Anna Dravida Munnetra Kazhagam Ministers in Tamil Nadu to use their combined political clout to bring this about? Governments in Singapore, Sri Lanka and Malaysia could be persuaded to take the cue from India. Tamil is already an official language in Singapore, whose President S.R. Nathan is a Tamil.

If three or more nations declare that Tamil is a classical language, world bodies like UNESCO could be persuaded to recognise the classical status of Tamil — like Arabic, Chinese, Greek, Latin, Persian and Sanskrit. If this sounds like a pipe dream, it is worth remembering that Tamil is comparable to French, which is one of the official languages of the United Nations. For instance, French is spoken by 98 million people around the world, with the bulk of the speakers in France. Tamil is spoken by 66 million people, and while a bulk of them live in South India, there is a considerable population of Tamil speakers in Canada, Fiji, Malaysia, Mauritius, Singapore, South Africa, Sri Lanka, the United Kingdom and the United States of America. Recognition by UNESCO would bring in the much-needed international funds to support the ongoing work to preserve the cultural and linguistic heritage of Tamil.

(The writer is a Rhodes Scholar, Trinity College, Oxford, U.K.)

நன்றி: http://www.hinduonnet.com/thehindu/2004/06/09/stories/2004060903251500.htm

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 3:28:02 PM1/18/08
to minT...@googlegroups.com
"கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலான தமிழ் நூல்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பல நாடுகளில் வெளியிட வேண்டும். இதற்கு உலக தமிழர்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களின் உதவி மிக அவசியம்,"

என்று செம்மொழி தமிழ் குறித்த இரண்டாம் நாள் கருத்தரங்கில் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்தனர். ஆசியவியல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் செம்மொழி தமிழ் மேம்பாட்டு மையம் இணைந்து செம்மஞ்சேரியில் நடத்தும் "செம்மொழி தமிழ்" என்ற கருத்தரங்கில் இரண்டாவது நாளில் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தென் கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜங் நம் கிம் "தமிழ்-கொரிய" உறவு குறித்தும், இலங்கை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் "தமிழ்- ஜப்பான்" ஒற்றுமை குறித்தும், பேராசிரியர் இராமச்சந்திரன் அண்டை மொழிகளில் தமிழ் நுால்கள் மொழி பெயர்ப்பது குறித்தும் பேசினர். அமெரிக்க பேராசிரியர் டேவிட் சி பக் பேசுகையில், "தமிழ் உயிருள்ள ஒரு செம்மொழி. சங்க காலத்தில் குறவன், குறத்தி பெருமையை செய்யுள் வழியாக உணர்த்தினர். அவர்கள் வேட்டையாடுவதை அந்த காலத்தில் பெருமையாக பேசியுள்ளனர். சங்க இலக்கியத்திற்கு பிறகு சிலப்பதிகாரத்தின் கதையை சேர மன்னனுக்கு குறவர்கள் தான் முதலில் சொன்னதாக வரலாறு கூறுகிறது. இது மக்களின் வாழ்கைக்கு பெரிதும் உதவியது", என்றார் . இலங்கை பேராசிரியர் சண்முகதாஸ் பேசுகையில், "வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகள் வருங்காலத்தில் தமிழ் பேச முடியாத ஒரு நிலை வரலாம். அப்படி ஒரு நிலை ஏற்படும் போது எழுத்து தமிழை கற்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். செந்தமிழ் இலக்கியங்கள் கடந்த 2 ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் சிறப்பாக இருந்து வருகின்றன. இருந்தபோதிலும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்றுக் கொண்டு அதே வேகத்தில் செல்வதே மொழி வளர்ச்சி அடைய ஒரே வழி. தமிழ்மொழி தொடர்ந்து முன்னேற கடுமையாக போராட வேண்டும்,"என்றார்.

"அன்னிய மொழிகளில், தமிழ் நூல்கள்," என்பது குறித்து பேராசிரியர் இராமச்சந்திரன் கூறுகையில்,
 
  • 1946ம் ஆண்டு பத்துப்பாட்டு நூல் ஜெ.வி.செல்லையா என்பவரால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
  • டில்லி தமிழ் சங்கத்தின் வி.வி.எஸ்.ஐயர் என்பவரால் கடந்த 1950ம் ஆண்டு ஆயிரத்து 250 கம்பராமாயணப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டன.
  • 1970ம் ஆண்டு அயோத்தியா காண்டம் ராஜாஜியால் மொழி பெயர்க்கப்பட்டது. நளவெண்பா கடந்த 1899ம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது.
  • பாரதிதாசன் எழுதிய பல்வேறு பாடல்கள் கடந்த 1987ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன, என்றார்.
தென்கொரிய பேராசிரியர் ஜங் நம் கிம் பேசுகையில், தமிழ் நாட்டிற்கும், ரோமானியர்களுக்கும் வணிக தொடர்பு இருந்தது. தென்னிந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழியாக தமிழ் விளங்குகிறது. "ஹோமோஹல்பர்ட் என்பவர் கடந்த 1905ம் ஆண்டு தமிழ்-கொரிய உறவு குறித்த ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். தமிழ்- கொரிய மக்களுக்கு வரலாற்று தொடர்பு உள்ளது. அதனால் தான் பல தமிழ் சொற்கள் கொரிய சொற்களுக்கு இணையாக காணப்படுகின்றன," என்றார்.
 
ரஷ்ய பேராசிரியர் அலெக்சாண்டர் டுபின்யான்ஸ்கி பேசுகையில்,தமிழ் மொழி என் உயிர் என்று சொல்வேன். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினருக்கு நான் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறேன். எனக்கு பிறகு இந்தப் பணியை யார் செய்வார்கள் என்பது தெரியவில்லை! என் மாணவர்கள் பலருக்கு தமிழ் ஆராய்ச்சி பிடித்திருக்கிறது. அதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக கடந்த ஆண்டு மாஸ்கோ பல்கலைக்கழகமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. மொழி தொடர்பை மாணவர்கள் மத்தியில் வலுப்படுத்த வேண்டும். இந்திய-ரஷ்ய நட்புறவு மட்டுமல்ல, தமிழ்-ரஷ்ய நட்புறவையும் வளர்க்க வேண்டும்,' என்றார்.
 
இலங்கை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் பேசுகையில், கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்-ஜப்பான் மொழி ஒற்றுமை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். "செம்மொழியான தமிழ் பிறநாட்டு இலக்கியங்களை தெளிவாக கற்பதற்கு ஒரு இலக்கணத்தை கொடுத்துள்ளது. அது தொல்காப்பியம். சிறப்பான பொருள் இலக்கணம். ஜப்பானிய அகப்பாடல்களை கற்பதற்கு பெரிதும் துணைபுரியும். சங்க இலக்கியங்களோடு ஒற்றுமைப்பட்டு இருக்கின்ற ஜப்பானிய மன்யோசு காதல் பாடல்கள் தெளிவாக தமிழிலே மொழி பெயர்த்தால் தமிழர்கள் அதை கற்பதற்கு வசதியாக இருக்கும்," என்றார்.
 
கருத்தரங்கில் ஆசியவியல் இயக்குனர் ஜான் சாமுவேல் கலந்துரையாடலின் போது உடனிருந்து, ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை ஒருங்கிணைத்தார்.
 
பிறமொழிகளில் தமிழ் சொற்கள்:- உலக அளவில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில மொழிகளே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மிகப் பழமையான மொழியாக தமிழ் மொழி உள்ளது. உலக அளவில் உள்ள பல மொழிகளில் தமிழ் சொற்கள் இணைந்திருப்பது இது குறித்த ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணமாக செம்மொழி தமிழ் கருத்தரங்கில் பேசிய தென்கொரிய பேராசிரியர் ஜங் நம் கிம் பேசியபோது, "வின்ஸ்லோ அகராதியில் கொரிய சொற்களுக்கு இணையான 500 தமிழ் சொற்கள் உள்ளது," என்று குறிப்பிட்டார். அதே போல்,
 
இலங்கை பேராசிரியர் சண்முகதாஸ் பேசியபோது,"சங்க இலக்கியத்தில் ஒன்றாக குறுந்தொகை இருந்தது. இதில், 400 பாடல்கள் உள்ளன. இந்த பாடல்களில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தொடரையும், வாக்கியங்களையும் இப்போதும் யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தற்போதும் குறுந்தொகை பாடல்களில் வரும் தொடர்கள், வாக்கியங்களை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பல சொற்கள் பண்டைய தமிழ் சொற்களுடன் ஒன்றியுள்ளன," என்றார்.
 
தமிழ் நுால்களை மொழி பெயர்க்க சர்வதேச அமைப்பு:- செம்மஞ்சேரியில் நடந்த செம்மொழி தமிழ் குறித்த கருத்தரங்கில், தமிழ் நூல்களை சர்வதேச அளவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டது. இது குறித்து இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகதாஸ் கூறுகையில், "சங்க புலவர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை.
 
  • வள்ளுவர்,
  • இளங்கோ,
  • சாத்தனார்,
  • திருமூலர்,
  • நாயன்மார்கள்,
  • ஆழ்வார்கள்,
  • கம்பன்,
  • சேக்கிழார்,
  • பாரதி

ஆகிய புலவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். திருக்குறள் மட்டுமே அதிகமான இந்திய மற்றும் அன்னிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் பக்திபாடல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் அன்னிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, குறுந்தொகை, புறநானூறு போன்ற நூல்கள் குறிப்பிட்ட அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழ் நூல்களை இந்திய, அன்னிய மொழிகளில் முழு அளவில் மொழி பெயர்ப்பதில் ஒரு திட்டமிட்ட செயல்பாடு இதுவரை இல்லை. தமிழ் நூல்களை மொழி பெயர்க்க உதவும் வகையில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்," என்றார்.

நன்றி: தினமலர் - www.dinamalar.com

Kannan Natarajan

unread,
Jan 24, 2008, 10:45:49 PM1/24/08
to minT...@googlegroups.com
"சென்னைக்கு மாறுகிறது செம்மொழி தமிழ் உயராய்வு மையம்": எம்.பி. பாலசுப்பிரமணியன்

மைசூரில் உள்ள செம்மொழி தமிழ் உயராய்வு மையம் விரைவில் சென்னைக்கு மாற்றப்பட உள்ளது என்றார் தமிழ்மொழி வளர்ச்சிக் கழக உறுப்பினர் எம்.பி. பாலசுப்பிரமணியன்.

மைசூர் செம்மொழி தமிழ் உயராய்வு மையம், திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய "பழந்தமிழ் இசை மரபுகள் உலகின் பண்டைய இசை மரபுகள்" பற்றிய கருத்தரங்கு தொடக்க விழாவில், வியாழக்கிழமை (24/01/08) அவர் பங்கேற்று மேலும் பேசியது:

"மைசூரில் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தின்" கீழ் செம்மொழி தமிழ் உயராய்வு மையம் உள்ளது. இந்த மையம் விரைவில் சென்னைக்கு மாற்றப்பட உள்ளது. இந்த மையத்துக்காக மாநில அரசு 100 ஏக்கர் நிலம் வழங்க உள்ளது. தற்போது நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

செம்மொழி தமிழ் உயராய்வு மையத்துக்காக மத்திய அரசு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டடம் கட்டி முடிக்கும் வரை வாடகைக் கட்டடத்தில் மையம் இயங்கும்.

உலகிலேயே மிகவும் தொன்மையான இசை தமிழிசைதான். இந்த இசை மண்ணிலிருந்து தோன்றிய இசை. இது நம் மண்ணுக்குரிய இசையாகும்.

 
உலகில் எவ்வளவு இசை இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மேலானதாக விளங்குவது தமிழிசைதான்' என்றார் பாலசுப்பிரமணியன்.
 

Kannan Natarajan

unread,
Jan 30, 2008, 3:43:26 PM1/30/08
to minT...@googlegroups.com
சென்னையில் மத்திய செம்மொழி தமிழ் மையம் அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்த மையத்தின் தலைவராக இருப்பார். மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் அமையவுள்ள இந்த மையத்தின் நான்காண்டு செலவுக்காக ரூ. 76.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 
தமிழக அரசிடமிருந்து 17 ஏக்கர் நிலத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 

Kannan Natarajan

unread,
Jul 26, 2008, 6:06:52 PM7/26/08
to minT...@googlegroups.com
சென்னை மெரினா கடற்கரை ஓரமாகச் செல்லும் காமராஜ் சாலை வழியாகச் செல்பவர்களின் பார்வையிலிருந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தப்ப முடியாது. காரணம், இந்த மத்திய அரசின் தமிழாய்வுத் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நியான் விளக்குகளால் அமைக்கப்பட்டுள்ள நிறுவனப் பெயர்ப் பலகை!
 
முதலில் தமிழிலும், அடுத்து ஆங்கிலத்திலும் அமைந்துள்ள இந்தப் பெயர்ப் பலகையில் மூன்றாவதாக இன்னொரு மொழியிலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இது என்ன புது மொழியாக இருக்கிறதே என்று தெரியாமல் தவிப்பவர்களின் வசதிக்காகத்தான் இந்த சிறு குறிப்பு.
 

அது "தமிழி" அல்லது "பிராமி" என்று அழைக்கப்படும் மொழி. புத்திசாலித்தனமாக, மத்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மையத்தில் இந்தி பெயர்ப் பலகை இதன் மூலம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.

 

2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எழுத்து வழக்கில் இருந்த மொழிகள்

  • தமிழி,
  • பாலி,
  • பிராகிருதம்
போன்றவைதான். இவை அனைத்துக்கும் எழுத்து வடிவம் "தமிழி" அல்லது "பிராமி" என வழங்கப்பட்டது. அசோகர் காலத்துக் கல்வெட்டுக்களில் இந்த எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கு முன்பே வழக்கில் இருந்ததைத் தமிழ்நாட்டில் புலிமான் கோம்பை நடு கல்லில் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் உறுதி செய்துள்ளன. இந்தியா முழுவதும் பயன்பட்டு வந்த எழுத்தாக இது இருந்து வந்திருக்கும் சரித்திர செய்தியையும் செம்மொழி மையம் பெயர்ப் பலகை தாங்கி நிற்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Kannan Natarajan

unread,
Feb 25, 2010, 4:30:39 PM2/25/10
to minT...@googlegroups.com
தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் மார்க்சிய ஆய்வுகள்

செம்மொழி தமிழாய்வு மைய நிறுவனம் மற்றும் உதகை அரசு கலைக் கல்லூரியின்
தமிழ்த்துறை ஆகியவை இணைந்து தமிழ் வளர்ச்சிக்கும்,​​ தமிழனின்
வளர்ச்சிக்கும் அடிப்படையாக தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் மார்க்சிய
ஆய்வுகள் குறித்த 2 நாள் தேசியக் கருத்தரங்கை உதகையில் நடத்துகின்றனர்.

தமிழுக்கு செம்மொழிó அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர்,​​ தமிழ் மொழி
வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது.​
மத்திய அரசின் செம்மொழி மையத்தின் மூலம் ஒதுக்கப்படும் இந்நிதியைக்
கொண்டு தமிழ் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு
வருகின்றன.

இதில் தமிழ் இலக்கியத்தை பல கோணங்களில் ஆய்வு செய்த பின்னர் தற்போது
மாவட்டம் வாரியாக கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.​ உதகையில்
வியாழக்கிழமை (25/02/10) தொடங்கிய இந்த தேசியக் கருத்தரங்கில் தமிழகம்
மட்டுமின்றி ஆந்திரம் மற்றும் புதுவை மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும்
மேற்பட்ட தமிழ் அறிஞர்கள்  பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் கருத்தரங்கில்,

  • உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் கரு.அழ.குணசேகரன்
  • செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன ஆய்வறிஞர் டாக்டர் ப.மருதநாயகம்
  • தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் பத்மாவதி
  • கோவை ஞானி
  • பேராசிரியர்கள் அ.மார்க்ஸ்,​​ சிவசுப்பிரமணியன்,​​ பொ.வேல்சாமி

உள்ளிட்டோர்  பேசினர்.

உதகை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் டாக்டர் அழகர் இராமானுஜம்

வரவேற்றார்.

உதவி பேராசிரியர் யோ.தர்மராஜ் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து,

  • கா.சிவத்தம்பியின் பங்களிப்பு
  • ப.ஜீவானந்தத்தின் பங்களிப்பு
  • க.கைலாசபதியின் பங்களிப்பு
  • நா.வானமாமலையின் பங்களிப்பு
  • கோ.கேசவனின் பங்களிப்பு
  • தொ.மு.சி.இரகுநாதனின் பங்களிப்பு
  • கோவை ஞானியின் பங்களிப்பு
  • கே.முத்தையாவின பங்களிப்பு
  • வெ.கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு

ஆகிய தலைப்புகளில் பல்வேறு அறிஞர்கள் உரை நிகழ்த்தினர்.

வெள்ளிக்கிழமை (26/02/10) நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில்,

  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை து.நடராஜன்
  • குப்பம் திராவிடப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவர் டாக்டர் தமிழவன்
  • உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் செ.சின்னுசாமி
  • பேராசிரியர்கள் சு.துரை மற்றும் வ.ஆத்மஜோதி

ஆகியோர் பேசுகின்றனர்.

நன்றி:- தினமணி
Reply all
Reply to author
Forward
0 new messages