சம இரவு பகல் நாள்

244 views
Skip to first unread message

S.Partha sarathy

unread,
Mar 21, 2011, 1:28:31 PM3/21/11
to TNSF Group
இன்று சம இரவு பகல் நாள்! இரவி வடகோளத்தில் நம்மை நாடி பிரவேசிக்கத் தொடங்கும் நாள்!!
அன்புடன்
சே. பார்த்தசாரதி

kalairajan krishnan

unread,
Mar 22, 2011, 1:20:09 AM3/22/11
to mint...@googlegroups.com
ஆமாம்,
தகவலுக்கு நன்றி
அன்பன்
கி.காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

kalairajan krishnan

unread,
Mar 22, 2011, 1:33:52 AM3/22/11
to mint...@googlegroups.com
இன்று சம இரவு பகல் நாள்! இரவி வடகோளத்தில் நம்மை நாடி பிரவேசிக்கத்
தொடங்கும் நாள்!!

அதாவது, இன்று சூரியன் பூமத்தியரேகைக்கு நேர் மேலே தோன்றும் நாள்,
உலகமெங்கும் இன்று காலை சரியாக 6-00மணிக்குச் சூரியன் உதித்து மாலை
சரியாக 6-00மணிக்கு மறையும்.

பூமத்தியரேகைப் பகுதியில் (சிங்கப்பூர்) வாழ்பவர்களுக்கு இன்று சரியாக
நன்பகல் 12-00 மணிக்கு அவர்களது நிழல், அவர்களது காலுக்கு அடியிலேயே
விழும். ஒரு இம்மி கூட நிழல் வெளியே தெரியாது.

இன்றிலிருந்து பூமத்திய ரேகைக்கு வடக்கே (இந்தியா முதலான) உள்ளவர்களுக்கு
பகல் பொழுது கூட ஆரம்பிக்கும், இரவுப் பொழுது குறைய ஆரம்பிக்கும்,

பூமத்தியரேகைக்குத் தெற்கே (ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா,
தென்னாப்பிரிக்கா) உள்ளவர்களுக்கு பகல்குறைந்து இரவு கூடஆரம்பிக்கும்.

சரிதானே? ஐயா,

S.Partha sarathy

unread,
Mar 22, 2011, 7:19:34 AM3/22/11
to mint...@googlegroups.com
////உலகமெங்கும் இன்று காலை சரியாக 6-00மணிக்குச் சூரியன் உதித்து மாலை சரியாக  6-00மணிக்கு மறையும்///

சரி....ஆனால் சரியாக அல்ல.!

நேற்று சென்னையில்சூரியோதயம் காலை 6.11 அஸ்தமம் மாலை 6.20.
 மெல்போர்னில் 7.23am ; 7.31pm
லண்டன் -  6.02; 6.15
நியூயார்க் - 6.58; 7.09
மும்பை 6.42; 6.49

ஏன் என்று யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா..?

அன்புடன்
சே.பார்த்தசாரதி


2011/3/22 kalairajan krishnan <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

343.gif

கி.கா​ளைராசன்

unread,
Mar 22, 2011, 9:32:09 AM3/22/11
to mint...@googlegroups.com, S.Partha sarathy
நான் ​சொல்வது தீர்க்க​ரே​கைப்படியான ​நேரம்
தாங்கள் ​குறிப்பிடுவது அந்தந்த நாடுகள் ஏற்றுக் ​கொண்ட ​நேரம்,
அதனால்தான் இந்த மாற்றம்!
சரியா, ஐயா,

கி.காளைராசன்

unread,
Dec 31, 2011, 2:45:32 AM12/31/11
to mint...@googlegroups.com, TNSF Group
ஐயா வணக்கம்.
2011/3/22 S.Partha sarathy <spsar...@gmail.com>
ஆனால் இரவைவிட பகல் நேரம் அனைத்து இடங்களிலும் சமமாக இல்லாமல் சில நிமிடங்கள் அதிகமாக இருக்ககே!.....
இதற்குக் காரணம்...? உடனடி விடைக்கு சொடுக்கவும் 

இது மிகவும் சரி.  நல்லதொரு விளக்கம்.

பூமி 360டிகிரி சுற்ற (ஒருநாள்) =  24 மணி = 1440 (24 x 60 ) நிமிடம்
1 டிகிரி சுற்ற = 1440/360 = 4 நிமிடம்
சூரியனின் அளவு = 0.5 டிகிரி
எனவே சூரியன் தொடுவானத்தில் தோன்றி முழுவதும் வெளியே தெரிய    2 நிமிடங்கள் ஆகும்.  அதுபோல் சூரியன் மறையத்துவங்கி முழுவதும் மறைய குறைந்தது 2 நிமிடங்கள் ஆகும்.

எனவே எப்படிப்பார்த்தாலும் குறைந்தது 4 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும்.  எனவே தாங்கள் குறிப்பிடுவது சரியே.

நீண்ட இரவு கொண்ட நாளான 21டிசம்பர் அன்று இந்த இழையை நினைத்தேன்.  ஆனால் அதீத வேலைகாரணமாக அன்று எழுத இயவில்லை.  இன்று எழுதினேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages