நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்
கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்க
தொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்
முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லி
அழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்
சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.
தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தை
நினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காக
அவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,
வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்கு
சகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பை
காலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து திரும்ப
மாட்டிக்கொள்ள உதவுகிறான்.
கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்கு
சென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்
கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்து
தந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.
எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.
நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடு
சம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசைய
வேண்டிய அவசியமும் இருக்கிறது.
நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்த
கருவியும் கிடையாது.
செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.
உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்
உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.
உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.
கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-
மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்
காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.
ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்
காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்
அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.
காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலை
நீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரண
FM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.
த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?
ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.
இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்
என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சில
விஷயங்கள்தான்.
இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்
இல்லை. உணர வேண்டும்.
நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.
1.கவனித்தல்.(Listening)
ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்
கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்
புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அது
அதன் அடுத்த படினிலைக்கு போகிறது.
2.பதிவு(Recording)
நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறது
தெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொரு
விந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு
80%எனில் பதிவு 40%தான்.
அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவு
செய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்
தண்டனையா எனவும் தெரியவில்லை.
3.இருப்பு வைத்தல்(Retaining)
கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாக
பொதிந்து வைக்கிறது.
பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்பு
வைப்பது எதற்காக..?
4.திரும்ப கேட்டல்(Recalling)
ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்
இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,100 சதவீதம் எனில்
இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.
அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு
20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.
நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்
காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடை
புலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்
ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதே
நேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்
தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்
இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்
இயல்பே.
இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.
ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?
ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?
தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காக
படிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.
இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.
ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்
இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..
வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.
அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெயர் சொல்லி
கை குலுக்குகிறார்.
விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்
பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,
கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"
இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.
அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.
வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.
பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படி
இருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.
அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று.
"நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்
சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்
இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.
கவனியுங்கள்....கவனியுங்கள்.....கவனியுங்கள்...!
--
தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்
www.kvthaayumaanavan.blogspot.com
அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.
வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.
நான் உலகம் சுற்றிய வரையில் இந்தியர்களிடம்தான் இக்குறை அதிகமாகத்
தெரிகிறது. அடுத்தவர் பேசுமுன் முந்திக்கொண்டு தன் கருத்தை
வலியுறுத்துவது. இதனால், கத்திப் பேசுவது. இது அறிவின் திமிறலா? இல்லை
அகப்பாட்டின் திமிறலா? என்பதை நாம்தான் சோதனை செய்து பார்த்துக்கொள்ள
வேண்டும்.
நாகரீகமாகப் பேசும் வழக்கம் இல்லாமல் இருத்தல் கூட காரணமாகலாம்.
தி.ஜானகிராமன் கதை மாந்தர் உரையாடல்களில் ஒரு நளினமும், புரிதலும்
இருக்கிறது. May be, தமிழகப்பெண்களிடம் இந்தப் பழக்கம் குறைவோ என்னவோ?
தமிழ் ஆண் கற்றுக்கொள்ள என்னென்னவோ உள்ளது ;-) !!
க.>
2009/2/26 Thirunavukkarasu Rajasekaran <thir...@gmail.com>:
செவி சாய்ப்பது என்பது ஒரு நுட்பமான நாகரிகம். அது பயனளிப்பதோடு அல்லாமல்,அது தோழமையும் வளர்க்கும். பள்ளிகளில் பயிற்சி அளிக்கக்கூடியதே.
.தவிர, எந்த வயதிலிலும் கற்றுக்கொள்ளலாம். திரு.கண்ணன் கூறியது, எனது அனுபவமும்.
இன்னம்பூரான்
மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர் இடம் உண்டு.
இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.
அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலான
வீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்ற
உரையாடல்களை கேட்கமுடியும்.
அறிவியல் புனைகதை.
தி.ஜானகிராமன் கதை மாந்தர் உரையாடல்களில் ஒரு நளினமும், புரிதலும்
இருக்கிறது. May be, தமிழகப்பெண்களிடம் இந்தப் பழக்கம் குறைவோ என்னவோ?
தமிழ் ஆண் கற்றுக்கொள்ள என்னென்னவோ உள்ளது ;-) !!
உதாரணத்துக்கு நான் திருக்குறளை -இணைப்பு முறையில் மாணவர்களுக்கு சொல்லி
தருவதுண்டு.
அதிகாரங்களை நினைவில் வைக்க..
முதல் அதிகாரம்- கடவுள் வாழ்த்து- கடவுள் எங்கே இருக்கிறார்- வானத்தை
நோக்கித்தான் நாம் மேல ஒருத்தன் இருக்கான் என சொல்கிறோம்- ஆக இரண்டாம்
அதிகாரம்-வான்சிறப்பு.
என் மூன்னோர்களும் தெய்வனிலையில் வானத்தில்தான் இருக்கிறார்கள்- மூன்றாம்
அதிகாரம்- நீத்தார் பெருமை.
நாமும் அந்த நிலைக்கு உயர என்ன செய்ய வேண்டும்..?-அற்ம் செய்ய வேண்டும்-
நாலாவது அதிகாரம் அறன் வலியுறுத்தல்.
பாயிரம் முடிந்தது.
அடுத்து இல்வாழ்க்கை-
இல்வாழ்கைக்கு தேவை-வாழ்கை துணை நலம்-
துணை நலம் வாய்த்தபின் அவரது வழியாய்-மக்கட்ப்பேறு
குடும்பமாக அவர்கள் வாழும் அன்புடைமை வாழ்கை.
அன்பை தமக்கு மட்டும் என்றில்லாமல் விரித்து பார்க்கும்- விருந்தோம்பல்.
பொருளாக விருந்தை ஆதரிக்க இயலாவிடினும்-இனியவைக்கூறல்-
விருந்தையும்-இனிய சொல்லையும் யாரிடம் நாம் அனுபவித்தோமோ அவர்களிடம்
காட்டவேண்டிய செய்னன்றி அறிதல்-
இப்படி ஞானதகப்பன் வள்ளுவன் மொத்த குறளையும் பின்னிதான்
வைத்திருக்கிறான்.இந்த பின்னல் பொதுவாக அனைத்திலுமே இருக்கும்.ஆர்வமின்மை
காரணமாக நம் ஊனக் கண்களுக்கு சட்டென தெரிவதில்லை.
On 26 Feb, 16:01, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> ஞாபகம் வைத்தலை அதிகரிக்க சில வழிகள் உள்ளன.
>
> 1. படங்களாக ஞாபகம் வைத்தல்
> 2. ஒன்றை ஒன்றுடன் தொடர்புபடுத்தி ஞாபகம் வைத்தல்
>
> இப்படியாக.
>
>
> நேரமிருப்பின் மேற்கண்ட சுட்டிகளை ஒரு முறை பாருங்கள்
>
> ராஜசங்கர்
>
> 2009/2/26 thaayumaanavan venkat <thaayumaana...@gmail.com>
> ...
>
> read more »
ஒப்பனை அறையின் கதவில்-பச்சை ரேடிய பசையில் ஒளிர்ந்த திரையை ஓகையார் ஒரு
நொடி உற்று நோக்கி -இரு முறை க்ண்சிமிட்ட -திரையில் அலைஅஞ்சல் பட்டியல்
தாயுமானவனின் கோப்பை பார்த்து கண்சிமிட்ட விரிகிறது காட்சி.
கட்டிலில் படுத்தபடி தாயுமானவன்-" சற்றும் தொய்வில்லாத அற்புத புனைவு.மிக
ஞாயமான கற்பனை,வாசிப்பை உறுத்தாத சொல்கட்டுகள்,உலக உருண்டையை செயற்கைகோள்
வழி பார்த்தமாதிரியான நிஜ ஜோடனை. படித்ததும் என்னால் சும்மா இருக்க
முடியவில்லை.தங்கள் அனுமதியின்றி..3DG studiovil - கதையினை உள்நுழைத்து-
உங்களையே நாயகனாக்கி திரைப்படமாக்கிவிட்டேன்.
இன்னும் சற்று நேரத்தில் இதன் முதல் காட்சியை live tv வழி பார்க்கவும்."
சொல்லிவிட்டு புன்னகையோடு உறங்க செல்ல-
ஓகையாரின் செவிக்கு அடுத்த சமிக்ஞை.."என் இனிய இநி.." திரைபடத் தொடர்பாய்
வங்கிக்கு வந்திருக்கும் தொகையை "அலை அஞ்சல் தெரியப்படுத்தியது.
"ம்ம்ம்ம்.."-இப்படியெல்லாம் சிந்திக்க வைக்குது உங்க புனை கதை.
வாழ்த்துகள்.
கூகிள் பூதம் என சொல்லுவார்கள்..இல்லை இல்லை .. மின் தமிழ் படைப்பாளிகள்
ஒவ்வொருவரும் மிகப்பெரும் பூதங்களே..திறமையில்.
நன்றி.
On 26 Feb, 23:42, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> 2009/2/26 thaayumaanavan venkat <thaayumaana...@gmail.com>
>
> > மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர் இடம்
> > உண்டு.
> > இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.
> > அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலான
> > வீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்ற
> > உரையாடல்களை கேட்கமுடியும்.
>
> மனித நினைவற்றல் குறித்த என் குறைபுரிதல்களை ஒரு அறிவியல் புனைகதை
> ஆக்கியிருக்கிறேன். படித்து கருத்து சொல்ல வேனடுகிறேன். முக்கியமாக அறிவியல்
> புனைகதை விற்பனர் ரெகா அவர்களின் கருத்தறிய ஆசை.
>
> இநி
>
> *அறிவியல் புனைகதை.*
>
> *சில நூறு டெர்ரா பைட்டுகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில்
> ஆரம்பிக்கப்பட்ட அந்த நினைவுத்திசுக் கடை இன்று உலகெங்கும் இநிக்களிடையே மிகப்
> பிரபலம். அந்த சில நூறு டெர்ரா பைட்டுகளின் கதையைத் தான் இப்போது உங்களுக்குச்
> சொல்லப் போகிறேன். *
>
> *2005ம் ஆண்டு மார்ச்சு மாதம். பாஸ்டன் நகரில் டாக்டர் குரூஸ் வீட்டின்
> மாடியில் அவரது அறை மேஜையின் மீது ஒரு கொத்து காகிதங்கள் அடுக்கி
> வைக்கப்பட்டிருந்தது. அந்த காகிதங்களின் மேல் மரத்தாலான ஒரு பேப்பர் வெய்ட்.
> நல்ல கருங்காலி மரத்தில் கடைசல் செய்யப்பட்டு, வெகு நாட்கள் கைபட்டு கைபட்டு
> வழவழப்பாய் மெருகேறியிருந்தது. சதுரங்கத்தின் கருப்புச் சிப்பாய்க்காய் போன்ற
> வடிவத்தில் பெரிதாக ஆனால் கைக்கு அடக்கமாக, வெகு அழகாகத் தான் இருப்பதைத்
> தெரிவித்துக் கொண்டிருந்தது. அந்த மிக விசாலமான அறை நிறைய கலைப் பொருட்களால்
> அலங்கரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு முந்தய தோற்றத்தில் இருந்தது. டாக்டர்
> குரூஸ் பழங்கலைப் பொருட்களின் பரம ரசிகர். ஒரு ஏலக்கடையில் மிகவும் விரும்பி
> இந்த பேப்பர் வெய்ட்டை வாங்கி வைத்திருந்தார். அப்போது அவருக்கு அதன் பெருமை
> தெரிந்திருக்கவில்லை. அந்த அறைக்குவரும் அழகு சொட்டும் மாடிப்படியைக் கூட
> பழங்கால முறையில் மரத்தால் அமைத்திருந்த குரூஸ் 'தட்' 'தட்' என்ற பூட்ஸ் காலடி
> ஓசையோடு மேலே வந்தார். தன் இருக்கையில் அமர்ந்து அந்த காகிதக் கொத்தின்
> மேலிருந்த பேப்பர் வெய்ட்டை எடுத்து சற்று தள்ளி வைத்துவிட்டு எழுத
> ஆரம்பித்தார். எழுத ஆரம்பிக்குமுன் அதை வாஞ்சையோடு ஒரு தடவு தடவினார்.*
>
> *அந்த வெய்ட்டின் உள்ளிருந்த மர ரேகைகளுக்குள் ஒரு புள்ளியாய் உறைந்திருந்தான்
> ராமமூர்த்தி. குடந்தை ராமமூர்த்தி என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த
> வாழ்க்கையில் அவன் இரு விதமாக இருந்து கொண்டிருந்தான். பல நேரம் அந்த கருப்பு
> மர வெய்ட்டினுள்ளே ரேகைகளுக்கிடையே ஒரு புள்ளியாய் கூட்டுப்புழுவைப் போன்றதொரு
> ஆழ்நிஷ்டை வாசம் ஒரு விதம். சில நேரங்களில் முண்டி முண்டி வெளியுலகைக் காணும்
> தீராத ஆசையொடு சில நானோமீட்டர்கள் அந்த ரேகைகளின் ஊடே அசைவாட்டம் இன்னொரு
> விதம். சில நாட்களுக்கு மட்டும் எங்கும் தடையின்றி பறந்து உலாவும்
> பட்டாம்பூச்சி போன்றதொரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டால், தன் மிச்ச
> எச்சங்களை ஒரு முறை கண்டுவந்துவிட்டால் பிறகு மீண்டும் பல நாட்களுக்கு அந்த மர
> வெய்ட்டினுள்ளே கூட்டுப்புழு வாசத்திற்கு தயாராய் இருந்தான்.*
>
> *டாக்டர் குரூஸ் பத்திரிக்கைகளுக்க வினோதமான தலைப்புகளில் ஆராய்ச்சிக்
> கட்டுரைகள் எழுதுபவர். எழுபது வயதைக் கடந்த அவருக்கு கையால் எழுதுவதுதான்
> எப்போதும் பிடிக்கும். இப்போது 'மரணத்திற்குப் பிறகு ஏன் மனிதன்' என்று
> இன்னுமொரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நம்முடைய காத்து கருப்பு
> சமாசாரம்தான் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவருடைய பெற்றோர்களும்
> மூதாதையர்களும் காலம் காலமாக பேய் ஓட்டும் தொழில் செய்வதாகக் கூறிக் கொண்டு
> மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தவர்கள்தான். ஆனால் இவர் அப்படி இல்லை. இந்த
> ஆராய்ச்சியில் தன்வாழ்வையே அர்ப்பணித்திருந்தார். மருத்துவத்தில் 'காக்னிடிவ்
> நியூரோசைன்ஸில் (cognitive nueroscience) முதுகலைப் பட்டம் வாங்கியவர். அவரது
> இல்லமே ஒரு பெரிய ஆராய்ச்சிக் கூடம்தான். அவர் எழுதுகிறார்,*
>
> *"உடலியக்கித்திற்குத் தேவையான கூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால் மூளையில்
> இருப்பதெல்லாம் நினைவுகள்தாம். அதாவது பதிவு செய்யப்பட்ட பல்வேறு செய்திகள்.
> சிறு வயதிலிருந்தே ஒரு மனிதன் தான் பார்த்ததும் கேட்டதும் படித்ததும்
> உணர்ந்ததும் தர்க்கத்தால் அறிந்ததும் போன்ற பலவற்றால் பதியப்பட்ட செய்திகளை
> தேடிக் கண்டுகொள்ள முடிந்தால், அவையே நினைவுகள். உயிர்வாழ்தலுக்கும்
> இவற்றுக்கும் சம்பந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டோமானால் பல
> அடிப்படை கேள்விகள் விடையளிக்கப் படாமலேயே இருக்கும். நினைவுகள் இயங்காத
> உயிர்வாழ்தல் 'கோமா' என்றால் அதைப்போன்றதொரு எதிர்நிலை இருந்தே தீரும். அதாவது
> உடலும் உயிருமற்று நினைவுகள் மட்டுமே இயங்குவதான ஒரு நிலை... ..." .... ....
> ... "அவையே இயங்கும் நினவுகள், இநி." *
>
> *இவ்வாறு காற்றில் மிதக்கும் பல 'இயங்கும் நினைவு'களை பிடித்து கெட்டித்த தக்கை
> நெட்டிகளில் செலுத்தி ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார். ஆனால் ராமமூர்த்தி
> மட்டும் தானாகவே அந்த பேப்பர் வெய்ட்டின் மூலமாக அவரிடம் வந்து சேர்ந்தவன்.
> கும்பகோணத்தில் தன் வீட்டில் நிகழ்ந்த ஒரு விபத்தில் மண்டையைப் பொத்துக்கொண்டு
> மூளைக்குள் நுழைந்த அந்த மரப்பொருளில் நினைவுத் திசுக்களாய் சிக்கி ஓர் இயங்காத
> இநியாய் இவரிடம் வந்து சேர்ந்தான். இநிக்கள் மேற்கொண்டு வாழ்வதற்கு
> அவர்களுக்குத் தேவை மேற்கொண்டு நிகழ்வுகளை தக்கவைத்துக் கொள்ள மேலும்
> நினைவிடங்கள் என்றறிந்த குரூஸ் இந்த 'இநி'களுக்கு கூடுதல் நினைவிடங்களைத்
> தருவதற்கு ஒரு முறை கண்டுபிடித்து வைத்திருந்தார். இன்று ராமமூர்த்திக்கு சில
> நூறு எக்சா(exa) பைட்டுகள் செலுத்தினார். இந்த இநி ராமமூர்த்தியை எப்படி இயங்க
> வைக்க சில முயற்சிகளும் செய்திருந்தார் இதுபற்றி சிந்தித்தபடியே அவர் இந்தக்
> கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார்.
> (டெர்ரா பைட் =1000,000 மெகா பைட், எக்சா பைட் = 1000,000 டெர்ரா பைட்)*
>
> *அவர் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று சிந்தனையில் ஆழ்ந்தார். சிந்தனை சற்று
> ஆழமாய் போய் இடது கையால் அந்த வெய்ட்டை உருட்டைக் கொண்டிருந்தார். நீண்ட
> கூட்டுப்புழு வாசத்திற்குப் பிறகு இன்றைய எக்சா பைட் உள்ளீடலால் நிஷ்டை கலைந்த
> தயார் நிலையில் இருந்த ராமமூர்த்தி அவரது உருட்டலால் முற்றிலுமாக
> கலைக்கப்பட்டான். அவர் மேலும் எழுதலானார்.*
> *
> "நினைவுகளற்ற உயிர் வாழும் கோமாவின் எதிர்நிலை உடலும் உயிருமற்ற நினைவுகளின்
> இயக்கம். காணவும் உணரவுமியலாத திசுக்களின் மேலேறி நினைவுகள்
> இயங்கும்போது.............", சற்று வேகமாக உருட்டப்பட்டதால் மேஜையிலிருந்து
> கீழே விழுந்த பேப்பர் வெய்ட்டிலிருந்து துடித்தெழுந்து, படபடக்கும் சிறகுகளுடன்
> நினைவுகளால் செய்த பட்டாம்பூச்சியாய் ராமு புறப்பட்டான். இந்த ஆள் என்னதான்
> எழுதுகிறார் என்று படித்துப்பார்த்தான். உதடுகளோடு கூடிய உடலிருந்தால் ஒரு
> நமுட்டு சிரிப்பு சிரித்திருப்பான். காற்றசைவில் இயைந்து அவரறியாமல்
> வெளியேறினான்.*
>
> *பாஸ்டனிலிருந்து வந்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது. நியூயார்க் விமான
> நிலையத்தை மேய்ந்த ராமு சென்னை செல்லும் லுப்தான்ஸா விமானத்தைக் கண்டறிந்தான்.
> லுப்தான்ஸா புறப்பட்டது. சிறிது நேரம் காக்பிட்டில் பயணித்தான்.
> விமானப்பணிப்பெண்ணில் சற்று நேரம். ஒரு முதியவரின் தாடியில் சிறிது நேரம்.
> நெஞ்சில் பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கிய குழந்தைக்கருகில் சற்று நேரம்
> என்று பலநேரம் பயணித்து சென்னை வந்தான். தன்னைப் போலவே சில 'இநி'களையும்
> விமானத்தில் கவனித்தான். நள்ளிரவில் சென்னை வந்தவனுக்கு நாளை இரவுதான்
> கும்பகோணத்திற்கு ரயில். இடையில் எத்தனையோ பேருந்துகள் இருந்தாலும்,
> அவனுக்குஅவசரமில்லை. அவன் விருப்பம் அந்த இரவு நேர கும்பகோணம் பாசஞ்சரில்
> குடந்தை செல்ல வேண்டும், அவ்வளவுதான். சென்னையில் அலைந்தான் திரிந்தான்.
> எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தான். முன்னெல்லாம் அங்கிருந்துதான் அந்த
> ரயில் புறப்படும். ஆனால் இங்குவந்த போது நிலைமை மாறியிருந்தது. ரயில்
> புறப்படுவதை தாம்பரத்திற்கு மாற்றிவிட்டார்கள். இப்போது எழும்பூர் ரயில்
> நிலையம் வெகுவாக மாறி இருந்தது. உள்ளங்கை போலிருந்த நிலையம் இப்போது
> உள்ளங்கால்போல் நீண்டுவிட்டது. உள்ளங்கை ரேகைகள் போலிருந்த மீட்டர்காஜ் பாதைகள்
> எல்லாம் மாறி மண்புழு,மண்புழுவாய் பிராட்காஜ் பாதைகள் அவனுக்கு இவையெல்லாம்
> பிடிக்காமல் உடனே ஒரு மீட்டர்காஜ் மின்வண்டி பிடித்து தாம்பரம் சென்றான்.*
> *
> இரவு கும்பகோணம் பாசஞ்சர் தாம்பரத்தில் புறப்பட தயாராய் இருந்தது. ஆயிரம்
> உயிருள்ள மக்களோடு அவனுக்கு ரயிலில் பயணிக்க பல இடங்கள் இருந்தன. ரயில்
> புறப்பட்டது. எஞ்சினுக்குச் சென்றான். பெட்டிப் பெட்டையாய் தாவினான். துக்கமே
> தாக்காத ஒரு நிலை. சந்தோஷம் அதிக சந்தோஷம், மிக அதிக சந்தோஷம் என்னும் நிலைகள்
> மட்டுமே கொண்டிருந்தான். இரயில் நிற்குமிடங்களில் நிலையங்களில் இறங்கி
> புறப்படும்போது உள்ளே ஏறிக்கொண்டு...... இரவைக் கிழித்துக்கொண்டு
> சீறிக்கொண்டிருந்த இரயிலை ஆனந்தித்தான், அனுபவித்தான். *
>
> *காலை ஆறரை மணி குடந்தை இரயில் நிலையம். எல்லோரும் இறங்கி விட்டார்கள்.
> அவனுக்கு அவசரமில்லை. வீட்டிற்குப் போகவும் அவசரமில்லை. எதற்குமே அவசரமில்லை.
> நகர் வலம் செய்யலாமென்று முடிவு செய்தான். மெதுவாய் மாமாங்கொளத்துக்குப் போனான்
> (மகாமக குளம்). ஒரு வட்டம் அடித்துவிட்டு சற்று தூரம் வந்தவன் காமாட்சியம்மன்
> கோயிலின் சிறிய கோபுரத்தில் ஏறினான். திடீரென்று வந்த ஒரு காற்றசைவில்
> ஜிவ்வென்று பறந்து சாரங்கபாணி கோயில் கோபுரக் கலசத்தின் உச்சி ஊசிமுனைக்கு
> வந்தான். குடந்தை வட்டாரத்திலேயே உயரமான இடத்தில் இருந்து ஒரு பறவைப்
> பார்வையில் நகரை நோக்கினான். ரம்யம், ரம்யம், மஹா ரம்யம். அதோ கும்பேஸ்வரன்
> கோயில் கோபுரம். அப்புறம் ராமசாமி கோயில். பிறகு நாகேஸ்வரன் கோயில். அவனுக்கு
> மிகப்பிடித்த சக்கரபாணிக் கோயில் கோபுரம். ஜிவ்வென்று காற்றில் நீந்தி அந்த
> கோபுரத்திற்கு வந்தான். கோபுரதரிசனத்தைக் கோபுரத்திலேயே கண்டவன் தரையிறங்கி
> கடைத்தெருவில் நுழைந்தான். அந்த நுழைவாயில் வெங்காய வாசனையை அவன் தவற விடாமல்
> கோபால்சாமிக் கோயில், பெரிய கடைத்தெரு, ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டி முராரி
> இனிப்புக் கடைக்கு வந்தான். அந்த இடத்துக்கு வந்ததும் காபி கிளப் ஞாபகம்
> வந்தது.*
>
> *எதிர்சாரியில் தஞ்சை சாலையில் ஒரு பழையகாலத்து வீடு. பிராமனாள் காபி கிளப்
> என்று இருக்கும். இப்போது அங்கே புது மோஸ்தரில் ஒரு கட்டடமும் பக்கத்தில்
> பெட்ரோல் பங்கும் வந்திருந்தது. பெட்ரோல் பங்கெல்லாம் யாருக்கு வேணும்?
> பக்கத்தில் அந்த திண்ணைவீட்டின் ஒரு பகுதி இன்னும் மிச்சமிருந்தது. அந்தப் பழைய
> வீட்டின் உள்ளே நுழைந்தான். ஒரு பெரியவர் "சார் என்ன சாப்பிட்றேள்" என்று
> கேட்டதுபோல் இருந்தது. அவ்ரும் ஒரு 'இநி'யாக அங்கேயே இருப்பாரோ எனத் தேடினான்.
> மெலிந்த தேகமாய் அவர் அறுபது வயதுக்கு மேலிருந்தபோது பார்த்தது. எப்போதும்
> வியர்வையிலும் சமையலறைப் புகையிலும் வெந்த அவரது வெந்நிற மேனியில் மேலாடையாய்
> ஒரு டீ டிகாஷன் கலரில் பூணூல் மட்டுமே இருக்கும். நான்கு முழ வேஷ்டி
> நெய்ததிலிருந்து அன்று வரை ஒரே காரிக்கன் நிறத்தில் மடித்து கட்டியிருப்பார்.
> நெற்றியில் திருநீறும் சந்தனமும் மின்னும். அவரைத்தான் பார்க்கவேண்டும்போல்
> இருந்தது ராமுவிற்கு. அவரில்லை. அங்கிருந்து காந்திபார்க் வந்தான். அப்புறம்
> பந்தடி மேடை. பிறகு சங்கர மடம் பழைய பாலத்தில் காவிரியைத் தாண்டி அவன் படித்த
> ஆண்கள் கல்லூரி வளாகத்திற்கு வந்தான். ஒரு சிறுவட்டம் அடித்துவிட்டு காவேரியின்
> வடகரை வழியாகவே வந்து கொண்டிருந்தான். பெருமாண்டி வந்தது. அந்த ஊரில் அவனுடைய
> உடல் கடைசியாய் புதையுண்டு போன இடம். இந்த மண்ணில் தன்னுடல் கலந்த எண்ணம்
> அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவன் நிஷ்டையைக் கலைத்த நோக்கம் மெதுவாக
> நிறைவேற ஆரம்பித்ததில் பல டெர்ரா பைட்டுகள் நிறைந்து போயின.
> (பெருமாண்டி=இடுகாடு)*
>
> *ஆனால் இந்த மகிழ்வும் பூரிப்பும் அவனுள் செலுத்தப்பட்டிருந்த எக்ஸா பைட்டுகளை
> நிரப்புவதை அவன் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. வடகரையோடு மெல்ல வந்து
> இடதுபுறம் திரும்பி புதுப்பாலத்தில் காவிரியின் தோற்றத்தில் தனக்கில்லாத
> மெய்மறந்தான். அப்போது காவிரியில் நன்றாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி
> சுழித்து ஓடும் காவிரி யாரைத்தான் மயக்காது? வடகரையில் பெருமாண்டியும்,
> தோப்புகளும், ஆலும் அரசுமாக பச்சையடிக்க தென் கரை முழுக்கப் படித்துறைகளால்
> நிறைந்திருந்தது. இதைக் கண்டு சொக்கிப்போவது அவன் வழக்கம். ராமூ..உ. ராமுவே
> ராமுவை உசுப்பினான். வீட்டுக்குப் போகலாமா? அரசலாற்றையும் பார்த்து விடுவோமே
> என்று நினத்தான். நகர பேருந்துகள் அவனை தாராசுரம் கொண்டுசேர்த்தன.
> (தாராசுரம்= பழைய பயையாறை நகரம்)*
>
> *பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அப்படி வர்ணித்த அரசலாற்றை அவன் தவற
> விடுவானா? .மாஞ்சோலைகளைக் கடந்து ஆற்றுக்கு வந்தவன் நாகரீகத்தின் சுவடேபடாமல்
> இன்னும் இடங்கள் இருப்பதில் நிறைந்து மேய்ந்ததில் இன்னும் கொஞ்சம் நினைவகங்கள்
> நிறைந்தான். தாராசுரம் தண்டவாளத்தில் கால்வைத்து பேலன்ஸ் செய்து நடக்க ஆசை.
> அங்கு வந்தவனுக்கு ஏமாற்றம். தடிதடியாய் புது சரளைக் கற்களில் பிராட்காஜ்
> அகலப்பாதை. 'சட், உடனே மீட்டர் காஜைப் பார்க்க வேண்டும்'. குடந்தை ரயிலடிக்கு
> வந்தான். மாலை சுமார் நான்குமணியிருக்கும்.
> *
> *ரயிலடிக்கு வெளியில் பத்து பதினைந்து பெரிய மரங்கள் இருக்கும். எத்தனையோ வயதான
> மரங்கள். அதில் ஆயிரம் ஆயிரம் பட்சிகள். கோஷ்டியாய் கானம் பாடிக்கொண்டிருந்தன.
> பண்டிதர் பலர் கூடி ஓதும் வேதகானம் போலவும், யாகமந்திரங்கள் போலவும்,
> கோஷ்டியாய் சப்தித்தன. இந்த பட்சிகள் யுகம் யுகமாய் இந்த மரங்களே தங்களுக்கு
> வீடாக வேண்டும் என்று ஜபிக்கின்றன போலும், ராமமூர்த்தியைப் போல. ஆனந்தமாய் தன்
> வீட்டை நோக்கி காற்றில் மிதந்தான்.*
>
> *ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். பிறகு கூரை மீதேறி முற்றத்திற்கு வந்தான். ஒரு
> பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணி. இவனுக்கு முகத்தைக்
> காட்டவோ என்னவோ இவனிருக்கும் பக்கம் திரும்பினாள். பளீரென்ற திருநீறிட்ட
> இயற்கையான மஞ்சள் முகம். 'பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே' என்று ஒரு
> காலத்தில் இருந்தவள், இப்போது பார்வையிலேயே நோய் தீர்ப்பவள் போலிருந்தாள்.
> இவளைப் பார்த்தபோது கொஞ்சம் அதிகமாகவே நினைவகம் நிறைந்து போனான் ராமு. வீடு ஏன்
> களேபாரமாய் இருகிறது. அவனுக்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லாம்
> இருந்தார்கள். லதா எங்கே? ஆனந்தகுமார் எங்கே? சம்பூர்ணி கூப்பிட்டாள்.*
>
> *"லதா..........லதா.."
> *
> *லதா என்கிற ஹேமலதா உடனே வந்தாள். கொடி போலிருந்தாள். புது மணப்பெண்ணின் முழுப்
> பொலிவும் கொண்டு இருபத்து நான்கு வயதுக்கு பூரணமாய் இருந்தாள்.*
>
> *"அத்தைகிட்ட அலங்காரம் பண்ணிக்கம்மா. பெண் அழைப்புக்கு அவங்க ஆறரை
> மணிக்கெல்லாம் வந்துடுவாங்க".
> *
> *லதாக்குட்டிக்கு கல்யாணமா? ராமு நிறைந்து கொண்டிருந்தான்.
> *
> *"ஆனந்தா...........".
> *
> *"இதோ வந்துட்டம்மா".
> *
> *"சித்தப்பா கொஞ்ச நேரத்தில வந்துடுவார். நல்லா கவனிச்சுக்கோ. நாளைக்கு
> லதாவுக்காக மனையேறப் போறவர். கொஞ்சம் கூட முகம் சுளிக்காம கவனிச்சுக்கோ".
> *
> *"நீயேம்மா கவலைப்படறே. ஒருத்தருக்கும் ஒரு குறையும் வராது."
> *
> *சின்ன வயதிலேயே படுசுட்டியான ஆனந்தன் இப்போது இருபத்தி எட்டு வயதில், துள்ளும்
> இளமையில் இரட்டை சுறுசுறுப்பில் இருந்தான். ராமுவுக்குத் தெரியும் சம்பூர்ணி
> இருக்குமிடத்தில் எல்லாரும் எல்லாமும் சுபிட்சம்தான். இவன் கலிபோர்னியாவில்
> மென்பொருள் பொறியாளனாய் இருந்தானே? திருமணத்திற்காக விடுமுறையில்
> வந்திருக்கிறான் போலிருக்கிறது. கூடத்தில் மாலையிடப்பட்டு ராமமூர்த்தியின் படம்
> தோற்றம் மறைவெல்லாம் எழுதியிருந்தது. 'அழகாய்த்தான் இருந்திருக்கிறேன். அதான்
> சம்பூர்ணி அப்படி சொக்கிப் போயிருந்திருக்கிறாள்'. இல்லை ராமமூர்த்தி அல்லவா
> சொக்கிப் போயிருந்தான். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணுரிமை தத்துவத்தை
> முழுக்க முழுக்க பின்பற்றியவனல்லவா அவன். அவளும் இதை அறிந்திருந்தாள். ஆனால்
> இதை வாய்ப்பாக நினைக்காமல் போனஸாக நினைத்திருந்தாள். அதனால் வாழ்க்கை முழுக்க
> கம்பி பதத்தில் வெல்லப்பாகாய் இடைவிடாத சந்தோஷம். *
> **
> *மாப்பிள்ளை யார்? ஒட்டுக் கேட்டதில் அவனும் உள்ளூர்தான். ஆனால் வேலை
> சென்னையில். அப்படியென்றால் இனி சம்பூர்ணி எங்கிருப்பாள்? ராமுவுக்கு இந்தக்
> கவலையில்லை. எந்தக் கவலையுமில்லை. ஆனால் அறிந்து கொள்ளஆசைப்பட்டான். இரவில்
> அம்மாவும் மகனும் பேசிக் கொண்டார்கள்.
> *
> *"அம்மா ஆறு மாசத்துக்குள் பெங்களூரோ சென்னையோ செட்லாகிவிடுவேன். நீ
> அமெரிக்காவெல்லாம் வரவேண்டாம். நல்ல பொண்ணாப் பார்த்து வை. மிஞ்சிப் போனால் ஒரே
> ஒரு வருஷம். இங்கேயே வந்துடுவேன்."
> *
> *கொஞ்சம் கொஞ்சமாக நினைவகம் நிறைந்துகொண்டிருந்தான். பெண்ணழைப்பிற்குப் பிறகு
> ஹேமலதா தங்கத்தாரகைபோல் ஜொலித்துக்கொண்டிருந்தாள். தன்னைக் கனமாக உணர்ந்த
> ராமுவுக்கு நினவகம் வெகுவாக நிறைந்திருப்பதன் பிரக்ஞை வந்தது. சத்திரத்தில் ஓர்
> உத்திரத்தில் ஒண்டிக்கொண்டான். அதிகாலை முகூர்த்தம்.
> *
> *அப்போது அவன் முக்கால்வாசிக்கு மேல் நினைவகம் நிறைந்திருந்தான். பெரிய திருமண
> மாளிகை. மாளிகை நிறைய மக்கள். மங்கல வாத்திய முழக்கம். மணக்க மணக்க சாப்பாடு.
> இட்லிக்கு கடப்பாவா, கொத்ஸா? சம்பூர்ணிக்கு மைல்க்கல் போன்றதொரு நாள்.
> அவனுக்கும்தான்.
> *
> *முகூர்த்த நேரம். ராமு சம்பூர்ணியைப் பார்த்தான். மணவறைக்கு சற்றுத் தொலைவில்
> தனியாய் விழியோரக் கண்ணீர்த் துளிகளுடன் நின்றிருந்தாள். அப்போது ராமுவை
> நினைத்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது. ஆனந்தன் அதி சுறுசுறுப்பில் அங்கும்
> இங்குமாய் இருந்தான். அப்சரஸ் போல ஹேமலதா. கந்தர்வன் போல மணமகன்.
> சுபமுகூர்த்தம். "ஆனந்தம் ஆனந்தம்........ஆனந்தமே." அந்த முகாரியில் முழுவதும்
> நிறைந்ததைப் போல் உணர்ந்தான். இன்னும் ஒரு சில எக்ஸா பைட்டுகளாவது
> மிச்சமிருக்குமா?. இந்த முகாரிக்குப்பிறகு அவனுக்கு எதையும் கேட்கப்
> பிடிக்கவில்லை. பால்பாயாசத்தில் ஆனையடி அப்பளத்தைப் பிசைந்து எல்லோரும்
> சாப்பிடுவதையெல்லாம் பார்க்க ஆசைதான். ஆனால் முழுவதுமாக புது நினைவுகளால்
> நினைவகம் நிறைந்துவிட்டவன் உடனே ரயிலடிக்கு வந்தான்.
> *
> *காலை 10.15 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ். மாலை தம்பரம். நள்ளிரவு லுப்தான்ஸா.
> *
> *அவனால் விமானத்தில் உள்ளே நுழைய முடியவில்லை. இங்கே சுற்றிலும் பல இநிக்கள்.
> சூழ்நிலை வெகுவாக மாறி இருந்தது. அவனைத் தடுத்த ஓர் இநி கேட்டான்.
> *
> *"நேற்றிலிருந்து சர்வதேச பயணம் செய்யும் இநிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறோம்."
> *
> *அதர்ச்சியில் மேலும் சில டெர்ரபைட்டுகளை இழந்தான். பாஸ்டனில் இருக்கும் அந்த
> பேப்பர் வெய்ட்டுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்ற கவனம் வந்துவிட "நியூ
> யார்க்குக்கு எவ்வளவு?' என்றான்.
> *
> *"சென்னை டு நியூ யார்க் - 500 டெர்ராபைட்டுகள்."
> *
> *அவன் பாஸ்டன் வந்து அந்த பேப்பர் வெய்ட்டை நெருங்கியபோது அவனிடம் சில நூறு
> டெர்ரா பைட்டுகள் மிச்சமிருந்தன.*
> ** * * * * * * * * * * * * * * * * * * * * * * **
>
> *ஓகை நடராஜன்.
> 26 ஜூலை 2008*
என்னை அறிவியல் புனைகதை விற்பன்னர் என்று ஜோக் அடிக்கிறீர்களா?
அதற்கு உரிய பிதாமகர் (என் கருத்தில்) ஆர்த்தர் கிளார்க். தமிழில்
சுஜாதா.
நான் தொண்டரடிப்பொடி. நீங்களும் சேர்ந்து கொண்டீர்கள். வாருங்கள் சென்று
ஆராதிப்போம்.
இனி "இநி"
ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. (2005இல் எழுதினீர்களா?)
அறிவியல் புனைகதை என்பது நமது
கற்பனையை அறிவியல் உண்மைகளின் (அல்லது அனுமானங்களின்) மேல்
ஏற்றிப் பிரயாணிப்பதுதானே. அதை அழகாகச் செய்திருக்கிறீர்கள். கதை
படிக்கச் சுகமாக இருக்கிறது. துக்கணோண்டு அறிவியலும், அதை ஊதிப்
பெரிதாக்கிய கற்பனையும் இருக்கிறது. அதுதான் அபு.
நினைவுத் திசுக்கள் பற்றிய பல கேள்விகளை மனதுக்குள் எழுப்பும் கதை.
ஒரு ஆங்கில அபு படத்தில் ஒரு பேரறிஞனின் தலையை மட்டும் வெட்டி
திரவங்கள் விட்டுப் பாதுகாத்து, அந்த மூளையிலிருந்து ஆலோசனைகள்
பெறும் காட்சி நினைவுக்கு வருகிறது. மைனாரிட்டி ரிப்பொர்ட்டில்
எதிர்காலத்தை
முன்னறிந்து சொல்லும் உடல்களைத் திரவத்தில் பாதுகாத்து வைத்ததைப்
பார்த்திருப்பீர்கள்.
நினைவைப் பாதுகாக்கத் திசுக்கள் தேவையா என்னும் கேள்வி.
திசு என்றால் அதற்கு உணவு ஊட்டம் தேவைப்படுமே என்ற கவலை.
திசு என்றால் அது உளுத்துப் போகும், மரணிக்கும் அல்லவா?
திசுவே இல்லாமல் இதை வெறும் மின்சக்தியாக (நியூரோ எனர்ஜி?)
என்று ஆக்கியிருக்கலாமோ?
அப்படி ஆக்கினால் நமது பழைய கதைகளில் வரும் செத்தவரின் ஆவி
குடும்பத்துக்கு விசிட் அடிக்கும் பழைய சோறு போல் கதை சொதசொதவென்று
ஆகிவிடுமோ?
சரி, சரி. லோஜிக் ரொம்பத் தேடக் கூடாது. இப்படித்தான் ஜெயமோகன்
திண்ணையில் எழுதிய ஒரு அபு கதையில் உலகங்கள் அழிந்து, மொழிகள்
அழிந்த ஒரு நிலையில், அண்டவெளிக் கப்பலில் பிரயாணம் செய்யும்
மனித குலம், மூளைக்கு மூளை மொழியில்லாமல் தொடர்பு கொள்ளக்
திறன் வளர்த்துக் கொள்ளுகிறது. அதன் தமிழ்க் கதாநாயகன் தமிழ் மொழியை
மீண்டும் உயிர்ப்பிக்கிறான். "எதற்காக?" என்று நான் எதிர்த்துக்
கேட்டேன்.
"கற்பனையில் விளையாடத்தானே கதை!" என்று வழுக்கிக் கொண்டு பதில்
எழுதினார்.
பரவாயில்லை. விளையாடுங்கள். சிந்தனையை இழுத்து விரிவாக்கும் நல்ல
முயற்சி.
மேலும் எழுதுங்கள்.
என்னிடம் கருத்துக் கேட்டதற்கு நன்றி.
ரெ.கா.
On Feb 27, 2:42 am, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
>>
> மனித நினைவற்றல் குறித்த என் குறைபுரிதல்களை ஒரு அறிவியல் புனைகதை
> ஆக்கியிருக்கிறேன். படித்து கருத்து சொல்ல வேனடுகிறேன். முக்கியமாக அறிவியல்
> புனைகதை விற்பனர் ரெகா அவர்களின் கருத்தறிய ஆசை.
>
> இநி
>
> *அறிவியல் புனைகதை.*
>
> *சில நூறு டெர்ரா பைட்டுகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில்
> ஆரம்பிக்கப்பட்ட அந்த நினைவுத்திசுக் கடை இன்று உலகெங்கும் இநிக்களிடையே மிகப்
> பிரபலம். அந்த சில நூறு டெர்ரா பைட்டுகளின் கதையைத் தான் இப்போது உங்களுக்குச்
> சொல்லப் போகிறேன். *
>
வங்கிக்கு வந்திருக்கும் தொகையை "அலை அஞ்சல் தெரியப்படுத்தியது.
"ம்ம்ம்ம்.."-இப்படியெல்லாம் சிந்திக்க வைக்குது உங்க புனை கதை.
வாழ்த்துகள்.
ஓகை நடராஜனின் கதை ( 1000,000 டெர்ரா பைட்)வேகத்தில் செல்கிறதுஅன்புடன்தமிழ்த்தேனீ
நஸ்ரீ,
என்னை அறிவியல் புனைகதை விற்பன்னர் என்று ஜோக் அடிக்கிறீர்களா?
அதற்கு உரிய பிதாமகர் (என் கருத்தில்) ஆர்த்தர் கிளார்க். தமிழில்
சுஜாதா.
நான் தொண்டரடிப்பொடி. நீங்களும் சேர்ந்து கொண்டீர்கள். வாருங்கள் சென்று
ஆராதிப்போம்.
இனி "இநி"
ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. (2005இல் எழுதினீர்களா?)
ரெ.கா:
வாயு வேகம், மனோ வேகம் என்று சொல்வார்கள். மனம் தன்னிச்சையாக
நடமாடக்கூடியது. அது லுப்தான்சா விமானத்தை எதிர்பார்ப்பதில்லை ;-)
இதுவொரு ஆவி கதைதான்.
நினைவுகள் என்றுமே அழிவதில்லை என்றொரு தேற்றமுண்டு. விவேகாநந்தர் சூயஸ்
கால்வாயில் பயணப்படும் போது ஏசுவின் நினைவுகளை (பேச்சை - மலைப்பிரசங்கம்)
கேட்டதாக ஒரு கதையுண்டு. அநேகமாக இலத்திரன் போல் செயல்படக்கூடியது என்று
எண்ணுகிறேன்.
வேடிக்கை என்னவெனில் அபு என்று எழுதத்தொடங்கினாலே, முன்னுக்குப் போயி
பின்னுக்கு வருதல் நடந்துவிடுகிறது. ஒரு நனவிடைதோய்தல். எனது அந்நாளைய
அபுவும் இப்படித்தான் ;-)
இன்னும் சிக்கலானது. இல்லாதை எப்படி கற்பனை செய்வது? இருப்பதின்
நீட்சியாகத்தானே எல்லாமே உள்ளது! புனைவு என்பது நம்மை நிகழ்காலத்தில்
நிறுத்தவே பயன்படுகிறது.
Matrix போன்ற ஒரு அபு ஏன் நம்மால் எழுதமுடியவில்லை? அதில்
சொல்லப்பட்டிருக்கும் எல்லா விஷயங்களும் இந்த மண்ணில்
சொல்லப்பட்டுவிட்டது! ஆயினும்...
க.>
அது சரி இக்கதையின் ஆசிரியர் யார்?
நினைவுகள் என்றுமே அழிவதில்லை என்னும் தேற்று (concept?)
சுவாரஸ்யமானதுதான். "என் பழைய பிறவியில் அந்தக் கிராமத்தில்
இருந்தேன், இந்தக் கேணியில் குளித்தேன்" என்று சொல்லி அசத்துபவர்கள்
எல்லாம் இப்படி ஒருவரின் நினைவுக் கோர்வையை சூக்கும வெளியிலிருந்து
தற்செயலாகப் பிடித்துக் கொண்டவர்கள் என்று நான் நம்புவதுண்டு.
இருப்பதிலிருந்து விருத்தி செய்துதான் எழுத முடியும். படிப்பவரின் மூளை
விளங்கிக் கொள்ளுமளவுக்கும் அது இருக்க வேண்டுமல்லவா? ஆகவே
நம்முடைய இப்போதைய மூளையின் கற்பனா சக்திக்கு உட்பட்டுத்தான்
அதை எழுத முடியும். ஆனால் அதை இழுத்து இழுத்து விரிவாக்குவதில்தான்
அபு எழுத்தாளனின் திறமை இருக்கிறது.
ரெ.கா.
அதற்கும் ஒரு முன்னோடி இருக்கு!
திருவரங்கத்தில் பராசர பட்டர் என்ற மகான் கூரத்தாழ்வானின் பிள்ளை
இவருக்கு அரங்கனும், தாயாரும் சொந்தத்தாய் தந்தை போன்று எங்கு
போய்வந்தாலும் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் விவரம் சொல்லுவாரம் அவ்வளவு
அந்நியோந்யம்
அவர் சொல்லியிருக்கிறார், "மண்ணுக்கும், விண்ணுக்கும் சுழற்படி
கட்டுவேன்' என்று எங்கே இவர் வைகுந்தத்திற்கு அதிவேக சாலை
அமைத்துவிடுவாரோ என்று பயந்து அரங்கன் 40 வயதிற்குள்
அழைத்துக்கொண்டுவிட்டான்
அந்த சுழற்படி பிரயோகம் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும் இத்தகைய
காட்சிப்படங்களை நான் கண்டதுண்டு, 20 நூற்றாண்டு ஓவியங்களில்!
க
--
"Be the change you wish to see in the world." -Gandhi