Fwd: [தமிழ்ச் செய்திகள்] திருக்குறள் சில வரிகளில் சிறப்புத் தகவல்கள !

2,638 views
Skip to first unread message

Sankara RamaSamy

unread,
Jun 4, 2013, 11:28:20 AM6/4/13
to mint...@googlegroups.com, vaiyavan mspm, Pavai Mathi, T Parameswari, Subashini Tremmel, N. Sridhar

---------- Forwarded message ----------
From: Blogger <no-r...@blogger.com>
Date: 2013/6/4
Subject: [தமிழ்ச் செய்திகள்] திருக்குறள் சில வரிகளில் சிறப்புத் தகவல்கள !
To: rssai...@gmail.com

உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குத்தான் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் ஒரே நூல் திருக்குறள். இதன் மூலமே திருக்குறள் மதச் சார்பற்ற நூல் என்று முடிவு கொள்ளலாம். இவ்வகையில் உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம்.

நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றும், அதற்குப் பின்னரே திருக்குறள் என்றும் பலர் கூறுவர். விவிலியம் மதச் சார்புடைய நூல் என்பதைக் கணக்கிலெடுத்தால், திருக்குறளே முதலிடம் பெறுகின்றது.

திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளன. “எழுபது கோடி” என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9.

திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம் , குவளை.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றுமணி

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் “ குறிப்பறிதல்”

திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து, “முறை” - 1705 முறை.

திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ளீ , ங

திருக்குறளில் இடம்பெறாத குறிப்பிடத்தக்க இரு சொற்கள் - தமிழ், கடவுள்       

திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

திருக்குறளின் மொத்த அதிகாரங்கள் - 133

திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 380

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250

எனவே,  திருக்குறளில் உள்ள மொத்தக் குறட்பாக்கள் 1330

ஒவ்வொரு குறளிலும் 7 சீர்கள் அமைந்துள்ளன

திருக்குறளில் மொத்தம் உள்ள இயல்கள் - 13

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் - 4

பொருட்பாலில் உள்ள இயல்கள் - 7

காமத்துப்பாலில் உள்ள இயல்கள் - 2

திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 14000

தமிழ் எழுத்துக்கள் 247 -ல், திருக்குறளில் 37 எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை.

திருக்குறளை  மூலத்த முதன்முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர், மணக்குடவர்

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

திருக்குறளின் உரையாசிரியருள் 10 - வது உரையாசிரியர் - பரிமேலழகர்       

 ---------------------------------------------------------------------------------------------------------------

திருக்குறளின் சிறப்புத் தகவல்கள் சென்னைப் பல்களைக்கழக உதவிப்பதிவாளர், திரு. கோதண்டராமன் தொகுத்தது.

தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாத இதழான, மக்கள் நினைத்தால் ..ஏப்ரல்-2013-ல்  அதன் இணையாசிரியர், அர.அ.பெருமாள் பிரசுரித்தது.

53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகட், அம்பத்தூர், 600 053. அ.இர.பெருமாள் 9840497923 

---------------------------------------------------------------------------------------------------------------

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே சுதந்திரப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவர் சிறந்த இலக்கியச் செல்வரும் ஆவார். இவ்வுண்மை பரப்புரை செய்யப்படல் வேண்டும். அவரது படைப்புகள் அனைத்தையும் இங்கு குறிப்பிட்டால் கட்டுரை விரியும்.

திருக்குறளின்பால் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட வ.உ.சி.க்கு, அதற்கு உரை எழுதியவர்களோடு பல முரண்பாடுகள் உண்டு. அவர் உயிரோடு இருக்கும் பொழுது குறளில் ஒரு பகுதிக்கு உரை எழுதி வெளியிட்டார். பொருளாதார வசதியின்மை காரணமாக முழு உரையையும் வெளியிடவில்லை. அவர் காலமானபின்பு அவர் எழுதிய முழு திருக்குறள் உரையையும் பாரிநிலையம், சென்னை-1 வெளியிட்டது. அதற்குத் தமிழக அரசின் பரிசும் கிடைத்தது.      
உயிரோடு இருக்கும்பொழுது  எழுதப்பட்டு, காலமானபின், முழுமையான உரையாகத் திருக்குறளுக்கு வெளியானது இஃது ஒன்றுதான் என்பதால், இதுவும் சிறப்புத் தகவலாகப் பதிவு செய்யப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------

--
Posted By Blogger to தமிழ்ச் செய்திகள் at 6/04/2013 08:55:00 PM

--

சங்கர இராமசாமி
http://rssairam.blogspot.com/

Rathinam Chandramohan

unread,
Jun 5, 2013, 12:46:41 PM6/5/13
to mint...@googlegroups.com
Ariya Seithigal. Nandri

2013/6/4 Sankara RamaSamy <rssai...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Dr.R.Chandramohan
Principal,
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

கி.காளைராசன்

unread,
Jun 5, 2013, 2:13:43 PM6/5/13
to mint...@googlegroups.com, vaiyavan mspm, Pavai Mathi, T Parameswari, Subashini Tremmel, N. Sridhar
வணக்கம் ஐயா.

2013/6/4 Sankara RamaSamy <rssai...@gmail.com>

---------- Forwarded message ----------
From: Blogger <no-r...@blogger.com>
Date: 2013/6/4
Subject: [தமிழ்ச் செய்திகள்] திருக்குறள் சில வரிகளில் சிறப்புத் தகவல்கள !
To: rssai...@gmail.com

உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குத்தான் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் ஒரே நூல் திருக்குறள். இதன் மூலமே திருக்குறள் மதச் சார்பற்ற நூல் என்று முடிவு கொள்ளலாம். இவ்வகையில் உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம்.

நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றும், அதற்குப் பின்னரே திருக்குறள் என்றும் பலர் கூறுவர். விவிலியம் மதச் சார்புடைய நூல் என்பதைக் கணக்கிலெடுத்தால், திருக்குறளே முதலிடம் பெறுகின்றது.

திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
‘ஏழு‘ என்ற சொல் இடம் பெறவில்லை.
“எழு“ என்ற சொல்லே திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளன. “எழுபது கோடி” என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9.

திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம் , குவளை.
தாமரையும் இடம் பெற்றுள்ளது.

மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள் (617)

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ
றாமரைக் கண்ணா னுலகு (1103)

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றுமணி

எள் இடம் பெற்றுள்ளது.

எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாங் கேடு (889)
 
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் “ குறிப்பறிதல்”

திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து, “முறை” - 1705 முறை.
அன்பன்
கி.காளைராசன் 

..::ME::..

unread,
Jun 5, 2013, 3:10:27 PM6/5/13
to mintamil
சிறியேன் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தயவு செய்து.

எத்தனைப் பிழைகளுடம் இந்தக் கட்டுரை உலா வருகிறது ? எதைக் கட்டமைக்க விரும்புகிறோம் இது போன்ற பிழையான தகவல்களால் ?

திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
 
- தவறான தகவல். ஏழு என்று எங்கும் சொல்லப் படவில்லை.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளன. “எழுபது கோடி” என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

 மறுபடியும் தவறு. கோடி 12 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

1 - அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்/ தீவினை செய்யான் எனின்.

2 - ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப / கோடியும் அல்ல பல.

3 - வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி / தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

4 - அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் / கோடின்றி நீர்நிறைந் தற்று.

5 - கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் / சூழாது செய்யும் அரசு.

6 - முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி / ஒல்லாது வானம் பெயல்.

7 - பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் / எழுபது கோடி உறும்.

8 - பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் / ஏதின்மை கோடி உறும்.

9 - நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் / பத்தடுத்த கோடி உறும்.

10 - அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் / குன்றுவ செய்தல் இலர்.

11 - கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய / கோடியுண் டாயினும் இல்.

12 - கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் / இரவாமை கோடி உறும்.

சரி  அதெல்லாம் கிடக்கட்டும். இந்த கோடி என்ற வார்த்தை இத்தனை முறை வந்ததால் திருக்குறளுக்கு என்ன சிறப்பு வந்துவிட்டது ? அதன் கருத்துகளில் இல்லாத சிறப்பா இந்த வார்த்தைகள் தந்துவிடுகின்றன?

சரி உங்களுக்காக : தீவினை - 3 பாடல்கள், வினை - 66 பாடல்கள், மருங்கு - ஒரே ஒரு பாடல், செருக்கு 10 பாடல், ஆதி 2 பாடல்கள் என பயின்று வந்திருக்கின்றன. இதனால் என்ன பெருமை என்று உணர்ந்துக் கொள்ளலாமா ?

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9.

மீண்டும் தவறு - ஏழும் இடம் பெறவில்லை
 
திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம் , குவளை.

தவறு - காளை ராஜன் ஐயா ஏற்கனவே சொல்லிவிட்டார். தாமரையும் உள்ளது.  தாம்அரைக்கண்ணினாலாவது அக்குறள்களைப் பார்த்தீர்களா ?
 
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றுமணி

எள்? தினை?

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் / கொள்வர் பயன்தெரி வார். இன்னும் தேடினால் ஒருவேளை வேறு ஏதும் கிடைக்கக் கூடும்.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் “ குறிப்பறிதல்”

திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து, “முறை” - 1705 முறை.

முறை என்பது எழுத்தா? அம்மாடி? :((
சரி உங்களுக்காக -

அ - 579 , ஆ - 182, இ - 475, ஈ - 44, உ - 428 இப்படி போகிறது. இதை வைத்துக் கொண்டு என்னத்தை நிரூபிக்க முயல்கிறோம் ?

ஆடு - ஒரு பாடலிலும் இல்லை
தேடு - ஒரு பாடலிலும் இல்லை

அட போங்க சாமி.

..::ME::..

unread,
Jun 5, 2013, 3:13:02 PM6/5/13
to mintamil

2013/6/6 ..::ME::.. <jee...@gmail.com>

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9.

மீண்டும் தவறு - ஏழும் இடம் பெறவில்லை

மன்னிக்க. ஏழு = எழு.

ஏழு என்ற வார்த்தையால் அது குறிக்கப் படவில்லை என்று சொல்ல வந்தேன்

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Pandiyaraja

unread,
Jun 6, 2013, 12:22:03 AM6/6/13
to mint...@googlegroups.com, vaiyavan mspm, Pavai Mathi, T Parameswari, Subashini Tremmel, N. Sridhar, rssai...@gmail.com
>> திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து, “முறை” - 1705 முறை.
"முறை" என்பது எழுத்தா? புரியவில்லை. விளக்குங்கள். இலக்கிய ஆய்வுக்கு புள்ளியியலும் பலவிடங்களில் பலனளிக்கும். ஆசிரியரின் நடை, சொல்தேர்வு, வழக்காறு, உள்ளூர் வழக்காறின் தாக்கம், அவரின் காலம் போன்ற பல ஆய்வுகளுக்குப் புள்ளியியல் supporting evidence ஆக இருக்கும்.
ப.பாண்டியராஜா

Hari Krishnan

unread,
Jun 6, 2013, 1:22:59 AM6/6/13
to mintamil, vaiyavan mspm, Pavai Mathi, T Parameswari, Subashini Tremmel, N. Sridhar, Sankara RamaSamy

2013/6/6 Pandiyaraja <pipi...@gmail.com>

>> திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து, “முறை” - 1705 முறை.
"முறை" என்பது எழுத்தா? புரியவில்லை. விளக்குங்கள். இலக்கிய ஆய்வுக்கு புள்ளியியலும் பலவிடங்களில் பலனளிக்கும். ஆசிரியரின் நடை, சொல்தேர்வு, வழக்காறு, உள்ளூர் வழக்காறின் தாக்கம், அவரின் காலம் போன்ற பல ஆய்வுகளுக்குப் புள்ளியியல் supporting evidence ஆக இருக்கும்.
ப.பாண்டியராஜா

முறை என்ற சொல் திருக்குறளில் மொத்தம 14 முறை கையாளப்பட்டுள்ளது. :)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Nagarajan Vadivel

unread,
Jun 6, 2013, 1:32:15 AM6/6/13
to மின்தமிழ்
முறை என்ற சொல்லை ஆயும்போது அச்சொல்லுக்கு முன்னும் பின்னும் உள்ள சொற்களைப் பட்டியலிட்டால் முறை என்ற சொல் எவ்விதமாகப் பொருள்தரும் கருத்துருவாகப் பயன்பட்டது விளங்கும்

வெறும் சொல்லை மட்டும் பட்டியலிட்டால் கணினியின் திறன் தெரியும் விளக்கவல்லார் மட்டுமே தரவில் இருந்து தகவல் பெற முடியும்

இது என் காத்துட்டுக் கருத்து

வவ

2013/6/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Jun 6, 2013, 1:33:19 AM6/6/13
to mintamil

2013/6/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வெறும் சொல்லை மட்டும் பட்டியலிட்டால் கணினியின் திறன் தெரியும் விளக்கவல்லார் மட்டுமே தரவில் இருந்து தகவல் பெற முடியும்

இது என் காத்துட்டுக் கருத்து

வவ

ம்ம்ம்  ஆமாம்.

Pandiyaraja

unread,
Jun 6, 2013, 4:28:25 AM6/6/13
to mint...@googlegroups.com
>> முறை என்ற சொல்லை ஆயும்போது அச்சொல்லுக்கு முன்னும் பின்னும் உள்ள சொற்களைப் பட்டியலிட்டால் முறை என்ற சொல் எவ்விதமாகப் பொருள்தரும் கருத்துருவாகப் பயன்பட்டது விளங்கும்
இது காத்துட்டு கருத்து அல்ல. காது கொடுத்து கேட்கவேண்டிய கருத்து. எனவே வெறும் சொல்லைடைவு முக்கியம் அல்ல. தொடரடைவும் தேவை.  இதோ 'முறை'-கள் வரும் இடங்கள்
 
 முறை (7)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு - குறள் 39/8:1
தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55/1:2
முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55/7:2
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் - குறள் 55/8:1
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா - குறள் 56/8:1
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி - குறள் 56/9:1
செய்வினை செய்வான் செயல் முறை வினை - குறள் 68/7:1
 முறைசெய்யா (1)
நாள் தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் - குறள் 56/3:1
 முறைப்பட (1)
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர் - குறள் 64/10:1
 முறையர் (1)
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற - குறள் 70/8:1
 முறையான் (2)
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான் - குறள் 89/5:1
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான் - குறள் 89/5:1
இது நான் தயாரித்துள்ள திருக்குறள் - தொடரடைவு என்பதன் பகுதி. திருக்குறளில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும், அவற்றின் எண்ணிக்கையுடன் வருமிடங்களும் அகரவரிசையில் த்ரப்பட்டுள்ளன. (இந்த அடிகளுக்கும் முன்னொட்டு - பின்னொட்டு தேவை - செய்யலாம் - நேரமில்லை) சுமார் 460 பக்கங்கள் வரும். விரும்பியோர் வேண்டினால் இங்கு கொடுக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா
Reply all
Reply to author
Forward
0 new messages