பிசிராந்தை - யார் ?

192 views
Skip to first unread message

ananda rasa thiruma

unread,
Jul 24, 2010, 5:27:07 AM7/24/10
to mintamil
அன்புள்ள மின் தமிழ் அன்பர்களே,

பிசிராந்தையார் என்னும் சங்க காலப் புலவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
(கேள்விப்படாதவர்கள் தேடித் தெரிந்துகொள்ளுங்கள்)
நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்களைக் குறிப்பிடுங்கள் எனச் சொன்னால், உடனே நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் என்பவர்கள்தாம்.
இவர்கள் நட்பிற்கும் மற்றவர்கள் நட்பிற்கும் என்ன வேறுபாடு?
இவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பழகாமலேயே ஒருவர் மேல் ஒருவர் நட்பு பாராட்டியவர்கள்.
இது என்ன பெரிய சிறப்பு?
மகன் தன் தந்தையான கோப்பெருஞ்சோழன் மீதே ஆட்சியைப் பிடிக்கப் படைஎடுக்கிறான். இதனால் மனம் வெறுத்த தந்தை உண்ணா நோன்பு இருந்து (வடக்கிருந்து) உயிர் விட முடிவுசெய்கிறான். மன்னனோடு நெருங்கிப் பழகிய பலர் அவனோடு உயிர் விட உண்ணாநோன்பு இருக்கின்றனர். அப்போது கோப்பெருஞ் சோழன் தன் நண்பர் பிசிராந்தையாருக்கும் ஓர் இடம் ஒதுக்கும்படி கூறினான். அவன் வடக்கிருப்பதை அறிந்த பிசிராந்தையாரும் அவனோடு வடக்கிருக்க அவன் இருக்கும் இடம் நாடி வந்தார் என்னும் செய்திகள் புறநானூற்றில் பதியப்பட்டுள்ளன.
பலருக்கும் தெரிந்த இக்கருத்தை இப்பொழுது சொல்ல என்ன காரணம் எனக் கேட்கலாம்.

எனக்கு மின் தமிழ் புதிய அறிமுகம். இணையமே புதிய அறிமுகம்தான். மின்தமிழ் மடலாடற்குழுவிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே எனக்குத் தோன்றிய எண்ணம் சங்க காலப் பிசிராந்தையார்களும் கோப்பெருஞ் சோழர்களும் நிறைந்த, நிறைந்திருக்கிற, நிறைந்திருக்க வேண்டிய இடம் என்பதுதான். அப்படித்தான் இருக்க முடியும் என்பதும் என் அசைக்க முடியாத நம்பிக்கை. உறவோ, உடன் பழகியவகையில் நட்போ இல்லாமல் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாட, இன்னும் கேட்டால் மனத்தில் தோன்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பான இடம், களம் இணைய மடலாடற் குழுக்கள்தாம். அவரவர் கருத்து அவரவர்க்கு. பிடித்தால் ஏற்கலாம், பிடிக்காவிட்டால் அவர் கருத்தைப் படிக்காமலும் விட்டுவிடலாம். யாரையும் யாரும் ஏதும் கேட்க முடியாது.

இந்த மின் தமிழ் மடலாடற் குழுவிற்குள் வந்த பிறகு என்மேல் ஈடுபாடு கொண்டவர்கள், என்னிடம் பரிவுடனும் பாசத்துடனும் நட்பு பாராட்டுகிறவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இது இந்த ஊடகத்தின் வெற்றி. உலகத்தை ஒரு பெட்டிக்குள் கொண்டுவந்து சேர்க்கிற வல்லமை, உலகளாவிய நட்பை உருவாக்கும் ஆற்றல் இத்தகைய மடலாடற்குழுக்களுக்குத்தான் உண்டு. இதற்கு ஏதேனும் மறுப்பிருக்க முடியுமா?   மின் தமிழில் என்னைக் கண்ட திரு சி.ஆர்.செல்வகுமார்,  தான் மட்டுறுத்துநராக இருக்கும் தமிழ் மன்ற இணையப் பக்கத்தில் தானே முன்வந்து என்னை அறிமுகப்படுத்தியதோடு கருத்துக்களைச் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட தொடர்பைப் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்போடு ஒப்பிடுவதுதான் பொருத்தமானது.

என்னுடைய செயல்பாடுகள், கருத்துக்கள், எண்ணங்கள் பல சமயங்களில் தவறாகப் போய்விடுவதுண்டு. எல்லோருடைய வாழ்க்கையிலும் இதனைப் பார்க்கலாம். நாமே நம்மோடு முரண்படுகிறபோது மற்றவர்களோடு முரண்படுவது இயல்புதான். ஆனால் இந்த முகம்தெரியா நட்பு அதனினும் உயர்ந்தது. முன் சொன்னதுபோல் என் கருத்து எனக்கு. அவர் கருத்து அவருக்கு. அவ்வளவுதான். இதில் தனியாள் மோதலுக்கு இடமே இல்லை. ஆனாலும் நடக்கிறதே. இது எப்படி நேரிடுகிறது என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. எனக்குக் கற்பனை செய்துபார்க்கமுடியாத நிலை இது.

ஒருவர் எனக்குப் பிடித்தமான ஒரு கருத்தை அல்லது அறிஞரைக் கடுமையாகச் சாடுகிறார் என்றால், அதை என்னைத் தாக்கியதாகவே என்னால் எப்படிக் கருதமுடியும்? என் பக்கம் அந்தக் கருத்து எவ்வளவு சிறந்தது, அல்லது அந்த அறிஞர் எவ்வளவு சிறந்தவர் என்பதற்குரிய சான்றுகளை முன்வைத்தலே என் கருத்திற்கு, அல்லது  அந்த அறிஞர்க்கு என்னால் கொடுக்கக் கூடிய மரியாதை. மறுப்பவர் கருத்தானாலும் ஏற்பவர் கருத்தானாலும் எது சரி என்பதைப் படித்துப் பார்ப்பவர்கள்தாம் முடிவுசெய்ய வேண்டும். அல்லது காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
கருத்து மோதல் எப்படி ஆள் மோதலாக மாறுகிறது? என்னால் புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று இது.

மின் தமிழ அன்பர்களே நீங்கள் எல்லோரும் பிசிராந்தையார்கள், கோப்பெருஞ் சோழர்கள். இது அறிவியல் கொடுத்த கொடை. இந்த நட்பை நம் புரிதல்களால், பண்பால், ஆள் வேறு கருத்து வேறு என்னும் தெளிவால் வெல்ல முடியும்.

எனது  வேண்டுகோள் எல்லாம் இதுதான், எந்தச் சூழலிலும் தனியாளைப் பற்றித் தரக்குறைவாகப் பேச யாருக்கும் உரிமையில்லை.

வாழ்த்த வாயும் வணங்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தரப்பட்டுள்ளன.
பிறரைத் தரக்குறைவாகப் பேசுவதால் நம் தரத்தை நாமே குறைத்துக் கொள்கிறோம்.
உலகம் முழுக்கவும் உள்ள பிசிராந்தையார்களே, கோப்பெருஞ்சோழர்களே இதனை உணருங்கள். மடல் நீண்டுவிட்டது. பொறுத்தருள்க.

உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

அன்புடன்
ஆராதி
 

Hari Krishnan

unread,
Jul 24, 2010, 6:32:03 AM7/24/10
to mint...@googlegroups.com


2010/7/24 ananda rasa thiruma <aara...@gmail.com>

உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

தசாவதானி திருக்குறள் ராமையா இதற்கு ஒரு வேடிக்கையான விளக்கத்தைச் சொல்வார்.  

புலவர்களுக்கு ஒருநாளும் மற்றவருடைய அறிவுடைமையை ஏற்கவோ பொறுத்துக்கொள்ளவோ முடியாது.  ‘ஒன்ன விட நான் எவ்ளோ படிச்சிருக்கேங்கறத காட்றம் பாரு’ என்று கறுவியபடியே அலைந்துகொண்டிருப்பார்கள்.  கிடைத்த சந்தர்ப்பத்திலெல்லாம், சந்திலெல்லாம் தன்னுடையை மேதைமையைப் பிரகடனப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.  அது தவறில்லை.  ஆனால், இருகோடுகள் தத்துவம் மாதிரி, அடுத்தவரை யார் மிக அதிகமாகத் திக்குமுக்காட வைக்கிறார்களோ, அடுத்தவரை யார் அதிகமாக மட்டம் தட்டுகிறார்களோ, அடுத்தவருடைய கல்வியைத் தன்னைப் பார்க்கிலும் குறைவுபட்டது என்று நிரூபிக்கிறார்களோ அவரே பெரிய புலவர் என்பது பொதுவான கருத்து.

பாரதியின் சின்ன சங்கரன் கதையைப் படித்தால், அதில் முத்திருளு என்றொரு கேரக்டர்.  ஜமீன்தாரிடம் வந்து சொல்வார்: ‘நம்ம அய்யிரு பையன் சங்கரன் சின்னப் பய...என்னமா பாடறான்....எனக்கே அர்த்தம் புரியல’ என்று அறிமுகத்தைத் தொடங்குவார்.  ‘அடடா!  உனக்கே அர்த்தம் புரியலையா? அப்ப அது மிக உயர்ந்த கவிதையாகத்தான் இருக்கவேண்டும்.   உடனே அழைத்துக்கொண்டுவா’ என்று ஜமீந்தாரர் சொல்வார்.

ஆகவே, புலவர்கள் சந்திக்கிறார்கள் என்றால் அது எப்பவுமே ரகசியமான, சமிக்ஞைகளின் மூலமாக உணர்த்தப்படும் muscle flexing.  எங்க, என்னவிட பெரிய ஆளுன்னு நிரூபி பாப்போம்....நான் சொல்ற பாட்டுக்கு அர்த்தம் சொல்லு பாப்போம்’ என்றுதான் இடைக்காலப் புலவர்கள் தொடங்கவே தொடஙகுவார்கள்.  அருணகிரிநாதர்=வில்லி தொடங்கி, காளமேகம-அதிமதுரகவி வழியாக, ஔவை=கம்பன், கம்பன்-ஒட்டக்கூத்தர், ஒட்டக்கூத்தர்-புகழேந்தி என்று ஆயிரம் புலமைக் காய்ச்சல் கற்பனைக் கதைகள் இருக்கின்றன.  

குறளுக்கு வருவோம்.  உவப்பத் தலைகூடுவார்களாம்.  அதாவது, ‘போனதடவ தப்பிச்சுட்ட...இந்ததடவ விட்டனா பார்...எ்புடி கசக்கிப் பிழியப்போறேன் உன்னை’ என்று உவப்பத் தலைகூடுவார்களாம்.  அப்புறம் பிரியும்போது, ‘இருக்கட்டும் இருக்கட்டும்...இந்த முறையும் டபாச்சுட்ட...அடுத்த முறை வச்சுக்கறேன்’ என்று, அடுத்தமுறை எப்படி வச்சுக்கறது என்பதை உள்ளிக்கொண்டே பிரிவார்களாம். :)))


நிழல்வெளி மட்டும் விதிவிலக்கா என்ன!  அவ்வப்போது முறுக்கிக்கும்.  அத்த அத்தோட உட்டுட்டு அடுத்த பேச்சையாவது விவாதப் பொருளாக, ஒருவரை ஒருவர் மதித்து உரையாடும் போக்காக வைத்துக் கொள்ள முயலலாம்.  அராதி சொல்வதை ஆமோதிக்கிறேன்.   முகமறியாத நண்பர்கள் நிறைந்த இடம்.  கருத்துகளால் மட்டுமே சந்தித்துக் கொள்கிறோம்.  இன்னிக்குப் பிடிக்கலையா...விட்டுடலாம்.  நாளைக்கு நல்லதா ஏதானும் செய்யத் தோணுதா செய்யலாம்.  (இப்படித்தானுங்கோ அந்தக் காலத்தில் netiquette சொல்வாங்க.  எது மாறுதோ இல்லையோ...இந்த நெட்டிகட் பேச்சு மட்டும் மாறுவதே இல்லை.  இதுவும் ஒரு வழக்கம்தான் என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். இதோ, நான் எழுதியிருப்பதையும் சேர்த்து.  :))



--
அன்புடன்,
ஹரிகி.

Innamburan Innamburan

unread,
Jul 24, 2010, 7:57:25 AM7/24/10
to mint...@googlegroups.com
இது மின் இழை மட்டுமல்ல. இன் (இனிய) இழையும் ஆகும். தொடருக.
இன்னம்பூரான்

2010/7/24 Hari Krishnan <hari.har...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 24, 2010, 9:17:04 AM7/24/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி அவர்கள்  இதமாக கூறும் மிதவாதி
திரு ஹரிகி அவர்களோ  யதார்த்தவாதி
 
 
 
 
  குறளுக்கு வருவோம்.  உவப்பத் தலைகூடுவார்களாம்.  அதாவது, ‘போனதடவ தப்பிச்சுட்ட...இந்ததடவ விட்டனா பார்...எ்புடி கசக்கிப் பிழியப்போறேன் உன்னை’ என்று உவப்பத் தலைகூடுவார்களாம்.  அப்புறம் பிரியும்போது, ‘இருக்கட்டும் இருக்கட்டும்...இந்த முறையும் டபாச்சுட்ட...அடுத்த முறை வச்சுக்கறேன்’ என்று, அடுத்தமுறை எப்படி வச்சுக்கறது என்பதை உள்ளிக்கொண்டே பிரிவார்களாம். :)))
 
உண்மை ஐயா  உண்மை ஆதனால்  சுடுகிறது
 
சுட்டாலும் வெண்மை தரும்
 
புரிந்துகொண்டால் நன்மை தரும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 


24-7-10 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

devoo

unread,
Jul 24, 2010, 9:40:53 AM7/24/10
to மின்தமிழ்
இப்படியும் சிலர் இருந்தனர் -

தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்ப்பணியையே முதற்பணியாகக் கொண்டு அறுபது
ஆண்டுகளுக்குமேல் தமிழ்நூற்பதிப்புகளைச் செய்து வெளியிட்டு மறைந்த
பெரும்புலவர்கள் இருவர்.
ஒருவர் ‘தமிழ்த்தாத்தா’ டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள்,
மற்றொருவர் ’தணிகைமணி’ வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்.

பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை
விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் காப்பியங்களையும் சமய
இலக்கியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத்தந்து, தமிழ்
ஆய்வுத்துறையில் வழிகாட்டிகளாய் அமைந்தவர்கள் இவர்கள்.

தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையில் இவர்கள் பாடுபட்டு உருவாக்கித் தந்த
நூல்களின் பயனாக இன்று புதுப்புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இன்று உலம் முழுவதும் தமிழ் மொழியைப் பற்றிப்பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து
வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடபெறுகின்றன என்றால் அதற்குப்
பெருங்காரணமாக அமைபவர்கள் இத்தகைய பெருமக்களேயாவர். இவர்களின் வாழ்வும்
பணியும் அனைவரும் அறியத்தக்கன.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த
இவ்விருவரும் சோழ நாட்டில் கல்வி பெற்று, தொண்டைநாட்டில் சான்றோராய்த்
திகழ்ந்தவர்கள்.’தொண்டைநாடு சான்றோருடைத்து’ என்னும் முது மொழிக்கேற்ப
இவர்களின் இறுதிகாலம் வரை இவர்தம் இலக்கியப் பெரும்பணிகள் தொண்டை
நாட்டிலேயே நிகழ்ந்தது .

ஆண்டுதோறும் தணிகைமணியவர்கள் தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே.
சாமிநாதையர்அவர்களைப் பார்த்து உரையாடி மகிழ்வது வழக்கம். 1942 ஆம்
ஆண்டில் ஒரு நாள் இருவரும் ஐயரவர்கள் இல்லத்தில் உரையாடிக்
கொண்டிருந்தனர். அச்சமயம் ஐயரவர்கள் நோயுற்றிருந்தார்.
தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் உயர்ந்திருந்த நிலையில் ஏற்பட்ட
உடற்தளர்ச்சியால் மெலிவுற்றிருந்த அவர், இனி நிகழ வேண்டிய பணிகள்
குறித்து அளவளாவிக் கொண்டிருந்தார். திடீரென்று தணிகைமணியின் கைகளைப்
பிடித்துத், “திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகளாயிற்றே இவை”
என்றுகூறிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தமிழ்த்தாத்தாவின் செயலால்
அதிர்ச்சியுற்ற தணிகைமணி உடனே ஐயரவர் களுடைய கால்களைப் பிடித்துக்
கொண்டு "சங்கத்தமிழ் நூல் ஏடுகளை எல்லாம் தேடித் தேடி ஊர் ஊராகச் சுற்றிய
கால்களல்லவோ இவை" என்று கூறி வணங்கினார்.


”தாய்மைப்பேற்றின் சிறப்பை மற்றொரு தாயானவளே உணரமுடியும்” என்பது போல,
நூல் இயற்று வதிலும், நூல்பதிப்பிலும் கடுமையாக உழைத்தோரே மற்றவரின்
உழைப்பை உணர்ந்து பாராட்ட இயலும் என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சியே
சான்றாகும். அத்துடன் தணிகைமணி தம்மைவிட இளைய வராயினும் அவர் செய்த அரும்
செயல்களைப் பாராட்டி மகிழும் தமிழ்த்தாத்தாவின் பெருந்தன்மையும்,
சிறப்பும் குறிப்பிடத் தக்கதாகும்


http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=345&Itemid=460


தேவ்

Innamburan Innamburan

unread,
Jul 24, 2010, 11:59:25 AM7/24/10
to mint...@googlegroups.com
இது மாதிரி மற்றொரு நிகழ்வு. பண்டித மதன் மோஹன் மாளவியா அவர்கள் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர்; முதல் நன்கொடையாக, நைஃஜாமிடமிருந்து பெரும்தொகை பெற்றவர். புகழ் வாய்ந்த புலவர்களின் தலைமையில் ஒவ்வொரு துறையையும் வளர்க்க விழைந்த அந்த சான்றோன், அதற்காக மிகவும் அலைந்தார். மஹோபாத்யாய பி.வி.கானே அவர்களை தன் பக்கம் இழுக்க, புனே சென்றார். அக்காலத்து புலவர்கள் காசு பணம் நாடாமல், தன் ஊரிலேயே பணி புரிவர். அந்த நுட்பம் அறிந்த பண்டிதர், மஹோபாத்யாய பி.வி.கானே அவர்களின் இல்லம் சென்று, தன் தலைப்பாகையை அவர் பாதங்களில் வைத்து வணங்கினார். வணங்குபவர் புகழ் வாய்ந்த புலவர். நிறுவனத்தலைவர். பதறிய மஹோபாத்யாய பி.வி.கானே அவர்களை சமாதானப்படுத்தி, வாரணாசிக்கு அழைத்தார். மஹோபாத்யாய பி.வி.கானே அவர்கள் ஈடுபட்டிருந்த பணிக்கு அது குந்தகம் விளைக்கக்கூடும் என்றாலும், அவர் சம்மதித்தார்.
இன்னம்பூரான்

2010/7/24 devoo <rde...@gmail.com>

Ashwinji

unread,
Jul 24, 2010, 2:48:24 PM7/24/10
to மின்தமிழ்
ஆராதியின் ஆராதிக்கவேண்டிய, அருமையான பகிர்வு. தங்கள் கருத்தை இதய
பூர்வமாக வரவேற்கிறேன். நன்றி.
கருத்துக்கள் பற்றிய விவாதங்கள் தனிப்பட்ட சாடல்களாக மாறாமல் இருக்க, நம்
குழும அன்பர்கள் அனைவருமே பிசிராந்தையார்களாகவும்,
கோப்பெருஞ்சோழர்களாகவும் மாற வேண்டும் என்கிற தங்களின் ஆசை நிறைவேறிடப்
பிரார்த்திக்கிறேன்..
அன்புடன்
அஷ்வின்ஜி.

On Jul 24, 2:27 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> அன்புள்ள மின் தமிழ் அன்பர்களே,
>
> பிசிராந்தையார் என்னும் சங்க காலப் புலவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
>
> (கேள்விப்படாதவர்கள் தேடித் தெரிந்துகொள்ளுங்கள்)
> நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர்களைக் குறிப்பிடுங்கள் எனச் சொன்னால்,
> உடனே நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் என்பவர்கள்தாம்.
> இவர்கள் நட்பிற்கும் மற்றவர்கள் நட்பிற்கும் என்ன வேறுபாடு?
> இவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பழகாமலேயே ஒருவர் மேல் ஒருவர் நட்பு
> பாராட்டியவர்கள்.
> இது என்ன பெரிய சிறப்பு?
> மகன் தன் தந்தையான கோப்பெருஞ்சோழன் மீதே ஆட்சியைப் பிடிக்கப் படைஎடுக்கிறான்.
> இதனால் மனம் வெறுத்த தந்தை உண்ணா நோன்பு இருந்து (வடக்கிருந்து) உயிர் விட
> முடிவுசெய்கிறான். மன்னனோடு நெருங்கிப் பழகிய பலர் அவனோடு உயிர் விட
> உண்ணாநோன்பு இருக்கின்றனர். அப்போது கோப்பெருஞ் சோழன் தன் நண்பர்
> பிசிராந்தையாருக்கும் ஓர் இடம் ஒதுக்கும்படி கூறினான். அவன் வடக்கிருப்பதை
> அறிந்த பிசிராந்தையாரும் அவனோடு வடக்கிருக்க அவன் இருக்கும் இடம் நாடி வந்தார்
> என்னும் செய்திகள் புறநானூற்றில் பதியப்பட்டுள்ளன.
> பலருக்கும் தெரிந்த இக்கருத்தை இப்பொழுது சொல்ல என்ன காரணம் எனக் கேட்கலாம்.
>

> எனக்கு மின் தமிழ் புதிய அறிமுகம். இணையமே புதிய அறிமுகம்தான். *மின்தமிழ்


> மடலாடற்குழுவிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே எனக்குத் தோன்றிய எண்ணம் சங்க
> காலப் பிசிராந்தையார்களும் கோப்பெருஞ் சோழர்களும் நிறைந்த, நிறைந்திருக்கிற,

> நிறைந்திருக்க வேண்டிய இடம் என்பதுதான்*. அப்படித்தான் இருக்க முடியும்

Innamburan Innamburan

unread,
Jul 24, 2010, 7:58:05 PM7/24/10
to mint...@googlegroups.com
திரு.அஷ்வின்ஜியின் ஆசையை திரு.சிவ அறிவொளியனும் நிறைவேற்றுவாராக,
இன்னம்பூரான்

2010/7/25 Ashwinji <ashv...@gmail.com>


ananda rasa thiruma

unread,
Jul 24, 2010, 8:31:59 PM7/24/10
to mintamil
மின் தமிழ் அன்பர்களே,
///‘தமிழ்த்தாத்தா’  டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள்,  ’தணிகைமணி’ வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள். - திரு தேவ்///
///பண்டித மதன் மோஹன் மாளவியா அவர்கள் மஹோபாத்யாய பி.வி.கானே அவர்கள் - திரு இன்னம்பூரான்.///
இப்படிப்பட்டவர்கள் நட்பைப் பற்றி அவர்களின் பண்பாட்டுக்கு உரைகல்லாக நடந்த நிகழ்ச்சிகள் பற்றி இந்த இழையில் பகிர்ந்து கொண்டால், அவர்களை நினைவுகூர்ந்ததாகவும் ஆகும், இன்றைய இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியதாகவும் ஆகும்


அன்புடன்
ஆராதி
2010/7/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Jul 24, 2010, 8:40:06 PM7/24/10
to mint...@googlegroups.com
நான் நினைத்ததை தத்க்ஷணமே சொல்லிவிட்டீர்கள், திரு. ஆராதி. நான் திரு.விக. அவர்களை பற்றி உரையாடியதை திருமதி. ஸுபாஷிணி ட்ரெம்மல் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அதில் ஒரு சிலவற்றை கேட்டு சீர்த்திருத்தங்கள் கூறினால், நம் போன்ற பலர், அந்த பணியில் ஈடுபடலாம்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2010/7/25 ananda rasa thiruma <aara...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jul 24, 2010, 8:50:06 PM7/24/10
to mintamil
திரு இன்னம்பூரான்
உங்கள் பேச்சைக் கேட்பதற்கான வழிமுறைகளைச் சொல்லுங்கள்

அன்புடன்
ஆராதி

2010/7/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--

N. Kannan

unread,
Jul 24, 2010, 10:26:20 PM7/24/10
to mint...@googlegroups.com
இன்று காலை கனவில் மின்தமிழும், அதன் உரையாடல்களும் வர PROFILE என்ற
வார்த்தை மீண்டும், மீண்டும் தலைப்பட்டது.

மின்வெளி ஊடகம் முழுவதும் நிழல் ஊடகமல்ல. நிஜத்தை அங்கு பிரதிபலிக்கச்
செய்ய முடியும். மின்தமிழ் உருப்பினர்கள் அனைவரும் தங்கள் PROFILE பதிவு
செய்வது அவசியம் என்று கொண்டு வரலாம். தொழில்முறை வல்லுநர்கள் இது பற்றி
யோசிக்க. இந்த PROFILE, ஜி-மெயில், யாகூ, ஃபேஸ்புக் போன்றவற்றில்
இருந்தால் தொடுப்போ அல்லது நமது சேவியிலேயே இதை சேகரிக்க முடியுமா? என்று
யோசிக்க வேண்டும்.

ஏன் PROFILE? மின்தமிழ் கல்வியிற் சிறந்த சான்றோர் கூடும் கூடமாக
மாறிவருகிறது. இங்கு பொய்யுரையும், முகமூடியும் அவசியமில்லை. தன்னை
யாரென்று அடையாளப்படுத்த முடியாதவருடைய கருத்தை நாம் கட்டாயம்
கேட்கவேண்டுமென்ற தலையெழுத்தெல்லாம் இல்லை. எனவே எல்லோரும் தத்தம்
உண்மையான சொரூபத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.

இம்மாதிரிக் குழுமங்களில் குற்றம் காண்பது எப்படி வருகிறது என யோசித்தால்
அது நாம் எழுதும் எழுத்தின் குறைபாடு என்பது புரியும். எவ்வளவோ பண்பாக
எழுதுகிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் நாம் எழுதும்
வார்த்தைகள் சேர்வோரின் `இணைப்புகளை` (associations)ப் பொறுத்து பொருள்
கொள்ளப்படுகின்றன. உம். ரங்கன் சித்தர்களைப் பற்றி எழுதியது `என்னைச்
சுடவில்லை`. காரணம், அதில் தெளிவாக அவர் இதைத் `தன்னுடைய சொந்தக்
கருத்து` என்று அடையாளப்படுத்திவிட்டார். அவரவர் சொந்தக் கருத்துகளைப்
பற்றி நாம் அபிப்பிராயப்படலாமே தவிர காயமடைய வேண்டியதில்லை. அதே
நேரத்தில் சித்தர்கள் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் இல்லை என்ற
பொருளில்லை. அவர்களுக்கு நம்மைக் கட்டிக்காக்கும் திறன் இருக்கிறது.
அவர்கள் மேலோர். அவர்களை நாம் காக்க வேண்டிய அவசியமில்லை என்று என்
உள்ளுணர்வு சொல்லியதால் நான் அக்கருத்து பற்றி academic discussion
செய்யலாமென்றேன். அவ்வளவுதான். அதே நேரம் நக்கினம் சிவம் அவர்கள் சித்தர்
வழியை அன்றாடம் பயின்று வருபவர். மிக அன்பான மனிதர். தன்னலம் இல்லாத
நபர். அவருக்கு உண்மையான சித்தர்களுடன் உறவு இருப்பதால் மின்தமிழ்
உரையாடல் உவப்பளிக்கவில்லை. அதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, இம்மடலாடலில் நாம் கருத வேண்டிய முக்கிய பொருள் என்னவெனில், இது
வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே எனும் எண்ணம். நம் எண்ணங்கள்,
கருத்துக்கள் கல்லு போல் நிலையானவை அல்ல. அவை மாறுகின்றன,
வளர்ச்சியுறுகின்றன. எனவே ஒரு கருத்தை ஒருவாறு இன்று சொல்லும் ஒரு நபர்
வேறொரு நாள் வேறொரு புரிதலில் அக்கருத்தை மாற்றிக்கொள்ளலாம். எனவே
கருத்துடன் ஆட்களை அடையாளப்படுத்தி காயமடைய வேண்டியதில்லை. ஏனெனில்,
நாவினால் சுட்ட வடு ஆறுவதல்ல. எனவே தனிமனித தாக்குதலை விடுத்து (அடிக்கடி
என் தலையை உருட்டாமல் என்றும் இதைக் காணலாம் ;-) கருத்தைக் கருத்தாக
பாவித்து மின்தமிழால் வளர்வோம்.

மானுடம், மனிதநேயம் மிக, மிக முக்கியம்.

டாக்டர் செல்வகுமார், நாக.இளங்கோவன் இக்குழுவில் நீண்டநாள் இருந்து
கருத்து வேறுபாட்டால் வெளியே போய் தனிக்குழு ஆரம்பித்தனர். அது அவரவர்
சுதந்திரம். ஆயினும், நேரில் கோவையில் பார்த்த போது மிகவும் அன்பாகவும்,
ஆறுதலுடன் சந்தித்து மகிழ்ந்தோம். நம்மில் யாரும் பூரணமானவர்கள் இல்லை.
எல்லோரிடமும் குறைகள் உள்ளன. ஒருவரின் குறை சகிக்க முடியாது என்று
பட்டால் விலகி நிற்பது நலம். அதைவிடுத்து தனிம்னிதத் தாக்குதலில்
இறங்குவது மனிதநேயத்தைக் கொன்று விடுகிறது. நிஜ வாழ்வில் ஆயிரம்
கருத்துக்களுடன்தான் மானுடம் இந்தப் பூமியில் வாழ்ந்து வருகிறது. எனவே
மடலாடற்குழுக்களிலும் அதே செயற்பாட்டைக் கொள்ளலாம்.

எல்லோரும் ஈடுபாட்டுடன் யோசியுங்கள்.

நா.கண்ணன்

2010/7/25 Ashwinji <ashv...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 25, 2010, 12:25:29 AM7/25/10
to mint...@googlegroups.com
திரு.கண்ணன்
இது நிழல் என்பதைவிட தோற்ற மயக்க உலகம் என்றே சொல்லலாம். மின்பின் அறிமுகம் இல்லாத அரூபங்கள் பங்கு பெறும்போது அடையாளத்தை மறைத்து புனை பெயரிலும் கற்பனை உருவங்களின் பின்னிருந்து ஊடாடுவது ஒரு வகை.  மற்றொன்று நீங்கள் குறிப்பிடுவது போன்று பன்னுலகில் அறிமுகமாகி மின் வெளியின் நநுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தில் புதுமை படைக்க விரும்புவோர் தங்களை முழுதுமாய் வெளிப்படுத்தி தங்களின் தொழில்நுட்பத்திறனை மற்றவர்களுடன் இணைந்து செயல்படுத்த உதவும் தளம்
இதுபோன்ற தளம் ஒன்று என்னால் உருவாக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள சொடுக்கலில் அமைக்கப்பட்டுள்ளது
http://virtualtamilnet.com/moodle/
இங்கு நீங்கள் உங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.  உங்கள் ப்ரொஃபைலை நிறைவு செய்யலாம்
யாதும்ம் ஊரே யாவரும் தமிழரே என்ற கல்ந்துரையாடல் தளத்தில் மற்றவர்களுடன் கலந்துரையாட ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது
ஆங்கிலம், தமிழ், இலங்கைத் தமிழ் என் மூன்றூ மொழயமைப்புகளும் உண்டு.  கோப்புகளையும் பட்ங்களையும் ஒளிக்காட்சிகளையும் மெலேற்றம் செய்யலாம்
பார்த்து இது போன்ற ஒன்று பொருத்தமானதா என்று தெரிவிக்க வேண்டிகிறேன்
ந்ன்றி
பேரா.நாகராசன்

2010/7/25 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

K R A Narasiah

unread,
Jul 25, 2010, 1:09:57 AM7/25/10
to mint...@googlegroups.com
Just a tail attachment
By the way in Colas K A N Sastri says Kopperunsolan and Pisiranthayar were like Damon and Pythias.
In 4th century Damon and Pythias went to Syaracuse. Unfortunately Pythias was accused of plotting against the king and was sentenced to death. But

 Pythias asked to be allowed to return home to settle his affairs and bid his family farewell. But the King suspected that Pythias would not return. Pythias called for Damon and asked him to take his spot while he was away. King agreed, on the condition that, if Pythias does not return , Damon would be put to death and  Damon agreed, and Pythias was released.

Pythias was delayed, and the  king ionysius prepared to execute Damon. But just as the executioner was about to kill Damon, Pythias returned.

Apologizing to his friend for his delay, Pythias told of how pirates had captured his ship on the passage back to Syracuse and thrown him overboard. Dionysius listened to Pythias as he described how he swam to shore and made his way back to Syracuse as quickly as possible, arriving just in the nick of time to save his friend.

Dionysius was so taken with the friends' trust and loyalty, that he freed both Damon and Pythias, and kept them on as counsel to his court.
TRUE FRIENDSHIP HONOURED
Narasiah


2010/7/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 25, 2010, 1:20:18 AM7/25/10
to mint...@googlegroups.com
திரு. ஆராதி,
இந்த தொடர்பில் இருக்கிறது.
'...உதாரணத்துக்கு, தமிழ்த்தென்றல் திரு.வி.க.வைப் பற்றி என்னுடன் நடந்த
உரையாடலை, தமிழ் படிக்கத் தெரியாத தமிழர்கள் கூட கேட்டு பயன்பெறலாம்.
அவ்வாறு பல ஆடியோ/வீடியோ பதிவுகள். சிலப்பதிகாரம் போற்றிய இசையை
மறக்கலாமோ! அதற்கும் இரு பதிவுகள். 'மரபின் குரல்'...'

(http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html -
http://www.tamilheritage.org/old/tamievol.html )

நன்றி வணக்கம்.

இன்னம்பூரான்
2010/7/25 ananda rasa thiruma <aara...@gmail.com>
>

Subashini Tremmel

unread,
Jul 25, 2010, 6:57:08 AM7/25/10
to mint...@googlegroups.com
 
இந்தப் பேட்டிகள் இங்கு உள்ளன.
 
-சுபா

2010/7/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>

S.Partha sarathy

unread,
Jul 25, 2010, 7:15:33 AM7/25/10
to mint...@googlegroups.com
/// திடீரென்று தணிகைமணியின் கைகளைப்

பிடித்துத், “திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகளாயிற்றே இவை”
என்றுகூறிக்   கண்களில் ஒற்றிக் கொண்டார்.  தமிழ்த்தாத்தாவின் செயலால்
அதிர்ச்சியுற்ற   தணிகைமணி உடனே ஐயரவர் களுடைய கால்களைப் பிடித்துக்
கொண்டு "சங்கத்தமிழ் நூல் ஏடுகளை எல்லாம் தேடித் தேடி ஊர் ஊராகச் சுற்றிய
கால்களல்லவோ இவை"   என்று கூறி வணங்கினார்.///

படிக்கும் போதே  கண்ணீர்  மல்கிறது!


2010/7/24 devoo <rde...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 25, 2010, 10:46:00 AM7/25/10
to mint...@googlegroups.com
அருமையாக உணர்வுகளைப் பதிந்துள்ளீர்கள் ஐயா

2010/7/24 ananda rasa thiruma <aara...@gmail.com>
அன்புள்ள மின் தமிழ் அன்பர்களே,

Geetha Sambasivam

unread,
Jul 25, 2010, 10:47:59 AM7/25/10
to mint...@googlegroups.com
அற்புதமான செய்திகள்.

2010/7/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

venkatachalam Dotthathri

unread,
Jul 25, 2010, 11:07:19 AM7/25/10
to mint...@googlegroups.com


2010/7/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jul 25, 2010, 9:54:35 PM7/25/10
to mintamil
திரு இன்னம்பூரான்
நீங்கள் அனுப்பிய முதல் முகவரியில் உங்கள் குரல் உள்ளது என நினைக்கிறேன். திருமிகு சுபாவும் அனுப்பினார். இரண்டிலும் குரல் பதிவு செயல்படவில்லை. எனக்குத் தெரிந்த வழிகளில் முயன்றும் பயனில்லை.
நீங்கள் ஒரு முறை அதனை இயக்கிப் பார்க்கவும்.

அன்புடன்
ஆராதி



2010/7/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ananda rasa thiruma

unread,
Jul 25, 2010, 9:56:52 PM7/25/10
to mintamil
திருமிகு சுபா
திரு.வி.க. ஒலிப் பதிவை இயக்கினால் செயல்படவில்லை. நீங்கள் பதிவு செய்ததில் சிக்கல் எனக் கணினி கூறுகிறது. நேரம் உள்ள போது சரி பார்க்கவும்.


அன்புடன்
ஆராதி



2010/7/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 25, 2010, 11:54:33 PM7/25/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி,நானும் செய்து பார்த்தேன். பயனில்லை. நேரம் கிடைத்தபோது
ஸுபாஷிணி சீரமைத்து விடுவார் என நினைக்கிறேன். உங்களுடன் பேசவேண்டும்.
தொடர்பு அளிக்கவும், தனி மடலில் இருந்தாலும் சரி.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2010/7/26 ananda rasa thiruma <aara...@gmail.com>:


> திரு இன்னம்பூரான்

Subashini Tremmel

unread,
Jul 26, 2010, 7:37:27 AM7/26/10
to mint...@googlegroups.com
இன்று மாலை பார்த்து சரி செய்த பின்னர் தெரிவிக்கிறேன்.
-சுபா

2010/7/26 ananda rasa thiruma <aara...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 26, 2010, 7:44:16 AM7/26/10
to mint...@googlegroups.com
நன்றி.


2010/7/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Jul 26, 2010, 1:31:35 PM7/26/10
to mint...@googlegroups.com
சரி செய்து விட்டேன். இப்போது மீண்டும் இங்கே சென்று கேட்டுப் பாருங்கள்.
ஏதும் பிரச்சனை என்றால் மீண்டும் சொல்லுங்கள்.
 
அன்புடன்
சுபா

2010/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Jul 26, 2010, 6:54:43 PM7/26/10
to mint...@googlegroups.com
ரொம்ப நன்றி, டாப் க்ளாஸ்.

இன்னம்பூரான்

2010/7/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

ananda rasa thiruma

unread,
Jul 26, 2010, 8:52:23 PM7/26/10
to mintamil
திருமிகு சுபா
உங்கள் இருவர் (திரு இன்னம்பூரான் திருமிகு சுபா) குரலும் தெளிவாக இருக்கிறது. சரி செய்தமைக்கு நன்றி. கேட்டுக் கொண்டே இதனைத் தட்டச்சு செய்கிறேன். மிக்க நன்றி.


அன்புடன்
ஆராதி

2010/7/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages