உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

1,809 views
Skip to first unread message

Krishnan S

unread,
Dec 17, 2010, 9:48:45 PM12/17/10
to tamil_ulagam, mint...@googlegroups.com, Krishnan S

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''

   ===============================

   சிலம்பின் தொடர்நிலைக் காப்பியம் மணிமேகலை;

  சாத்தனார் யாத்தது ; பெளத்தம் சார்ந்தது.

  காப்பியத் தலைவி மணிமேகலை;

  மாதவி பெற்ற மகள்; துறவு செல்வி;

  பசித்தவர்க்கு அன்னை.

  அவளுக்கு அபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி கிடைத்தது.

  அது....,

              ''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

              பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

               நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்

              பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி "

பசிப் பிணி நீக்கும் பான்மையது; அள்ள அள்ளக் குறையாதது.

 அந்த அழுதசுரபியை ஏந்திய அருள்மகள் மணிமேகலை,

  ''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

  உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"

                                                            .................என்னுந் தகைமையால்...,

  "ஊர் ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்

  ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்"

 தருமம் செய்வது பெரிதன்று;அதைத் தக்கோர்க்குச் செய்தல் வேண்டும் என்பதை

   அடுத்து வரும் பாடல் மூலம் விளங்கும்.

  இதனைத்தான் பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள்.

* ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

   ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

   மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

   மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

 “ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ”

தானகத் தேடி உணவு உண்ணத் தருந்தவர்க்கு உணவை வழங்குவது என்பது பெருமை

பரவுவதற்காகவோ அல்லது வேறு பயன் கருதியோ செய்வதற்கு ஒப்பாகும். இஃது

அறத்தை விற்பதற்கு  ஒப்பான வாணிக் செயலாகும்.

மாறாக்த்தானே முயன்று தந்து உணவைத் தானே சம்பாதிக்க முடியாத ஒருவருக்குத்

தரும் உணவு அவர்க்கு உயிர் கொடுத்தற்கு நிகரான செயலாகும். இவ்வாறு செய்பவரின்

வாழ்க்கையே செம்மையான சிறப்பான வாழ்க்கையாகும் என்று தீவதிலகை தெய்வம்

கூறி அவ்வழி நடக்க ஆணையிட்டு சென்றது

          - மணிமேகலை

எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Dec 17, 2010, 11:46:08 PM12/17/10
to mint...@googlegroups.com
ஆறுதலை அளித்த பதிவுக்கு நன்றி ஐயா.

2010/12/18 Krishnan S <krishna...@gmail.com>

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''

   ===============================

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

tamil payani

unread,
Dec 18, 2010, 5:33:25 AM12/18/10
to mint...@googlegroups.com

தானகத் தேடி உணவு உண்ணத் தருந்தவர்க்கு உணவை வழங்குவது என்பது பெருமை

பரவுவதற்காகவோ அல்லது வேறு பயன் கருதியோ செய்வதற்கு ஒப்பாகும். இஃது

அறத்தை விற்பதற்கு  ஒப்பான வாணிக் செயலாகும்.

மிக தெளிவா சொல்லி சென்றுள்ளனர் முன்னோர்கள்.

இன்றைக்கு வசதி படைத்தவனுக்கே பெரும்பாலும் மேலும் மேலும் விருந்து கிடைக்கிறது.
உணவில்லாதவனை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. என்ன ஒரு எதிர்மறை.
 
2010/12/18 Krishnan S <krishna...@gmail.com>

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஊர் உலகம் – 04-11-2010

Reply all
Reply to author
Forward
0 new messages