ஆதி மொழி தொல்காப்பியம் பாணினீயம் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு நூல்

423 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Feb 7, 2016, 3:49:07 AM2/7/16
to mintamil
ஆதி மொழி தொல்காப்பியம் பாணினீயம் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு நூல்

சட்டம்பி திருவடிகள் சுவாமி (1853 - 1924) கேரளத்தில் குமுக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட சிறீ நாராயண குருவிற்கு குருவாய் அமைந்தவர். தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் இவர்1915 இல் இயற்றிய மொழியியல் ஒப்பாய்வு நூல் தான் ஆதி மொழி என்பது. அரிதினும் அரிதாக இதுகாறும் எவரும் செய்திராத வகையில் இந்நூலில் தமிழ் சமற்கிருதம் ஆகிய மொழிகளின் முதன்மையான இலக்கண நூல்களான தொல்காப்பியம் பாணினீயம் ஆகியவற்றை ஒப்பிட்டு இம்மொழிகளின் அமைப்பில் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் சிறந்த முறையில் ஆசிரியர்  எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றோடு நில்லாமல் தமிழ், பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றின் தொன்மையைப் பற்றிக்  கூறும் போது தமிழ் இம்மூன்றில் மூத்த முதுமொழி என்றும் பிராகிருதம் தமிழுக்கு பின்னது என்றும் சமற்கிருதம் பிராகிருதத்திற்கும் பிற்பட்டது என்றும் நிறுவியுள்ளார். சமற்கிருத இலக்கணத்தினும் தமிழ் இலக்கணம் பழமையானது என்று கூறுகிறார்.  https://en.wikipedia.org/wiki/Chattampi_Swamikal

176 பக்கங்கள் கொண்ட இந்நூல் வித்தியாதிராச தரும சபையால் கடந்த 31/01/2016 அன்று அவ்வை திரு நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டது. நான் ஆனந்த மார்க்க பிரசாரக சங்கத்தில் ஊழ்கம் பயின்றுவந்த நாளில் 9 ஆண்டுகள் முன்னம் அதில் உறுப்பினராக இருந்த திரு பி. சுப்பிமணியம் பிள்ளை என்ற மலையாளி தந்த குறுநூல் ஒன்றில் இந்த சட்டம்பி திருவடிகள் இயற்றிய ஒப்பாய்வு நூல் "ஆதிபாஷா" தமிழையே ஆதிமொழி என குறிப்பதாக இருந்த செய்தியால் ஈர்ப்புற்று வித்தியாதிராச தரும சபையின் பொதுச் செயலர் திரு சி.கெ. வாசுக் குட்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு 1998 இல் கெ. மகேசுவரன் நாயரால் மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை பேரா இரா. மதிவாணன் நல்ல முறையில் செய்யவல்லவர் என்று கூறி இருவருக்கும் தொடர்பை ஏற்படுத்திவைத்து சில மாதங்களில்(2007 இல்) மொழிபெயர்ப்பு  முடிவடைந்தது. பல்வேறு காரணங்களால் நூல் வெளியீடு தடைபட்டு எமது தொடர்ந்த வற்புறுத்தலால் 2016 சனவரி இல் வெளியானது.      

இந்நூல் தமிழார்வலர்கள், தமிழ் சமற்கிருதம் அறிந்த அறிஞர்கள், அயலக பல்கலையில் பயிலும் மாணவர்கள்  கற்றுவிக்கும் பேராசிரியர்கள் ஆகியோருக்கு பெரிதும் உதவியாய் இருக்கும். விலை உரூ. 180/-     

உள்ளடக்கம் 

1. தொடக்கம்               - பிராரம்பம் 

2. எழுத்தியல்              - அட்சர நிரூபணம் 

3. புணரியல்                - சந்தி நிரூபணம் 

4. சொல்லியல்           - பத விவஸ்தா நிரூபணம்  

5. பால் இயல்              - லிங்க நிரூபணம் 

6. எண் இயல்               - வசன நிரூபணம் 

7. வேற்றுமை இயல் - விபக்தி நிரூபணம் 

8. அடிச்சொல் இயல் - தாது நிரூபணம் 

9. தமிழ் சமற்கிருதம் ஒற்றுமை வேற்றுமைகள்  

10. ஆதி மொழி            -     ஆதிபாஷா

தொடக்கம் பக்கம். 2 

 வீசிதரங்க நியாயம்: தொடக்கத்தில் ஒரு அலை புறப்பட்டு கரையை தொடுவதற்கு முன்பே அடுத்தடுத்த அலைகள்  தொடர்ந்து வந்து அலையடுக்குகளாக உருவெடுக்கின்றன. அது போல் முதலில் தோன்றிய ஒரு மொழியின் விளைவாக அடுத்தடுத்து பல மொழிகள் உருவெடுக்கும் வரலாற்றுக்கு அலை அடுக்கு முறை என்பது உவமையகிறது.

கதம்ப மூல நியாயம்: கடம்ப மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சேர மொட்டுகள் அரும்பி அவை ஒரு சேர மலரும். இதைப் போலவே ஒரு நேரத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு மொழிகள் தோன்றியிருக்கக் கூடும் என்பதற்க்கு இது உவமையாகக்  கூறப்படுகிறது.     

எழுத்தியல் பக்கம் 25 - 26:  

பிராகிருதம் சமற்கிருதமயமாக்கப்படாத தனக்கே உரிய முந்து எழுத்து வடிவங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் சமற்கிருதத்தைவிட பிராகிருதம் காலத்தால் மிக மிக முந்தையது  என்பது பெறப்படுகிறது.

மேலும் சமற்கிருதம் ஒருமை இருமை பல என்னும் எண்பாகுபாடு  உள்ளது. அதனை வசனத்ரையம் என்கின்றனர். ஆனால் பிராகிருத்ததில் "த்விவசனஸ்ய பஹுவசனம்" எனக் கூறப்பட்டிருப்பதால் ஒருமை பன்மை எனும் இரண்டல்லாது இருமை (த்விவசனம்) என்பது அறவே இல்லை.  

சமற்கிருதத்திலிருந்து பிராகிருதம் தோன்றியிருந்தால் சமற்கிருதம் ஏற்றுக் கொண்ட இருமை எண் (த்விவசனம்) இல்லாமலிருக்க காரணமில்லை.

புணரியல் பக்கம் .48  

ஏனைய உலக மொழிகளில் இல்லாத சொற்புணர்ச்சி  (சந்தி) இலக்கணம் தமிழிலும் சமற்கிருதத்திலும் மட்டும் காணப்படுகின்றன.

சொல்லியல் பக்கம் 67  

சமற்கிருதத்திலுள்ள சொற்கள் யாவும் 'கிரியா தாது' எனும் வினைச் சொற்களிலிருந்து தோன்றியவை. ஆனால் முன்னொட்டுகள் பெறாத தனித்த வினைச் சொற்கள் சமற்கிருதத்தில் இல்லை.

பக்கம் 69 - 70  
சமற்கிருதத்தில்எல்லாச் சொற்களும் தாதுக்கள் எனும் சொல்லடியில் தோன்றினாலும் இந்த வடிவத்தில் வினைச் சொற்கள் ஆவதில்லை. அவற்றோடு முன்னொட்டுகள், பின்னொட்டுகள் சேர்ந்தால் தான் வினை வடிவம் பெறும். தமிழில் வினைச் சொற்களுக்கு முன்னொட்டு பின்னொட்டுப் போன்றவை அறவே தேவையில்லை. இவற்றை உற்று நோக்கும்போது தமிழ் சமற்கிருதம் எனும் இரண்டு மொழிகளுக்கும் இடையே உள்ள வலுவான பெரிய  வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.

பக்கம் 71 சமற்கிருதம் பேசப்படும் பேச்சு மொழியாக இல்லாததாலும் பல திசைகளிலிருந்தும் சொற்கள் வந்து சேரும் வாய்ப்பு இல்லை எனக்கருதி திசைச்சொல் என்னும் வகைப்பாட்டை சமற்கிருத இலக்கணத்தில் சேர்க்கவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். எனினும் தன்சொல் பிறசொல் எனும் இருவகை அதில் இல்லை என வாதிட முடியாது.

பால் இயல் பக்கம் 101 
சமற்கிருதத்திலுள்ள பால் வேறுபாடுகள் குழப்பமும் பிழைபாடும் கொண்டவை என்பதைச் சமற்கித்தத்தில் மாபெரும் புலமையாளராகவும் சமற்கிருதத்திற்கு அதிகாரிகளாகவும் உள்ள சமற்கிருத பெரும் பண்டிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

எண் இயல் பக்கம் 107  
தமிழிலுள்ள உயர்திணை அஃறிணைப் பிரிவுகள் சமற்கிருதத்தில் இல்லை. இவை காலங்கடந்து தமிழில் சேர்க்கப் பட்டவை என்று கூறுவதை ஏற்க முடியாது. உயர்திணை முன்பு வகுக்கப்பட்ட பின்னரே  உயர்திணை அல்லாதது எனும்  அஃறிணை காரணம் கருதிப் பெயரிடப்பட்டுள்ளது. ஆதலால் தமிழிலுள்ள உயர்திணை அஃறிணை வேறுபாடு தொடக்க காலத்திலேயே உண்டாகியிருக்க வேண்டும். இதுவே உத்திக்கும் பொருந்தியுள்ளது.

பக்கம் 109  
சமற்கிருதத்தில் எண்ணிக்கையை வசனம் என்றும் பிறப்பு வழி ஆண் பெண் வேறுபாட்டை  லிங்கம் என்றும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் இந்த இருவகைக்கும் வேறுபாடு காட்டாமல்  பொதுவாகப் பால் எனப் பெயரிட்டது ஏன்?

இவற்றுக்குக் காரணம் என்னவெனில் வடமொழியிலக்கணப்பாங்கு ஏற்படுவதற்கு முன்பே மிகு தொன்மைக் காலத்தில் தமிழிலக்கண வகைபாடுகள் தோன்றிவிட்டனவாதலால் அவற்றை  மாற்றமின்றித் தமிழிலிணக்க வல்லுநர் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதேயாகும்.

ஆதிமொழி பக்கம் 175  

பல்வேறு உயிரினங்கள் எங்குத் தோன்றினவோ அங்குதான் மாந்த இனமும் தோன்றியிருக்க முடியும். முதல் மாந்தன் எங்குத் தோன்றினானோ அங்குத்தான் உலக முதன் மொழியும் தோன்றியிருக்க முடியும். அந்த மாந்தனின் மொழிகள் அவனுக்குப் பிறகு தோன்றிய மாந்த இனத்துக்கும் தாய்மொழியாக அமைந்திருக்கும்.

இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள  தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால்  நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள்  அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்.

நூல் கிட்டும் முகவரி:

சிறீ வித்தியாதிராச தரும சபை ,
எண் F - 13, BBC Westend,
9A, கே. கே.  சாலை,
சாலிக்கிராமம்,
சென்னை - 600 093.
அலைபேசி: 98414 28004 (வாசுகுட்டன்)           

விலை உரூ. 180/- 

Suba

unread,
Feb 7, 2016, 4:27:30 PM2/7/16
to மின்தமிழ்
நல்ல நூல் அறிமுகம். ஆனால் ஏனோ படங்கல் என் மின்னஞ்சலில் வரவில்லை.

இந்த நூல் விமர்சனத்தை நம மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Maravanpulavu K. Sachithananthan

unread,
Feb 7, 2016, 6:19:29 PM2/7/16
to மின்தமிழ்
மிக அருமையான விளக்கம் படித்தேன்.
இந்த நூல் எங்கே விற்பனைக்கு உள்ளது?
நன்றி

N. Kannan

unread,
Feb 7, 2016, 10:29:55 PM2/7/16
to மின்தமிழ்
இதில் ஒரே சந்தேகம். இப்போது இருப்பதைவிட சங்கதம் தமிழகத்தில் அரசு ஆதரவுடனும், மொழியியல் ஆர்வம் கொண்டும் செழித்திருந்த காலங்களுண்டு. சங்கதம் கற்றதால் அதுவே உயர்வு எனக் கருதாத பெரும் புலவர்களும் வாழ்ந்திருக்கின்றனர். நாதமுனி தொடக்கம், மணவாளமாமுனிகள் வாழ்ந்த ஆச்சார்யர்கள் எப்போதும் தமிழின் உயர்வையே போற்றிப் பேசினர். அவர்கள்தான் தமிழுக்கு discourse analysis எனும் வியாக்கியான பாரம்பரியத்தை வளர்த்து எடுத்தனர். அப்படி இருந்தபோதும் அவர்கள் தொல்காப்பியம் பாணினிக்கு முந்தியது என்று கருதியதில்லை என எண்ணுகிறேன். சங்கத அறிவு கொண்டோர் அருகி வரும் இக்காலக்கட்டத்தில் தமிழ்தான் ஆதி மொழி என்றால் வாதமிடக்கூட ஆளில்லை. எங்கோ இடிப்பது போல் தெரிகிறது. நமது லண்டன் தமிழ்ச் சங்க மேனால் செயலர் சுவாமிநாதன் தனது வலைப்பதிவில் பாணினி மூத்தது என்பதைச் சில வாதங்களோடு சொல்கிறார். 

மேலும் இவரது பல கட்டுரைகள் தொல்காப்பியர் காலம் தவறு எனச்சுட்டுகிறது

(அத்தொடர் முழுவதும் தேடித்தொடுப்பு கொடுக்க முடியவில்லை 3,4,5 கிடைக்கிறது)

தொல்காப்பியர் காலமும், வள்ளுவனின் காலமும் ன்று எனச் சொல்லி இருவரும் கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்பும் படி வாதிடுகிறார். 

சுவாமிநாதன் இக்குழுமத்தில் உள்ளாரா எனத்தெரியவில்லை. கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். இங்கு இச்செம்மொழி இரண்டுமறிந்த இன்னொருவர் நண்பர் ஶ்ரீரங்கம் மோகனரங்கன். இவர்களது திறனாய்வு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நா.கண்ணன்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Seshadri Sridharan

unread,
Feb 8, 2016, 12:21:35 AM2/8/16
to mintamil
2016-02-08 4:49 GMT+05:30 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
மிக அருமையான விளக்கம் படித்தேன்.
இந்த நூல் எங்கே விற்பனைக்கு உள்ளது? நன்றி

 நூல் கிட்டும் முகவரி:

சிறீ வித்தியாதிராச தரும சபை ,
எண் F - 13, BBC Westend,
9A, கே. கே.  சாலை,
சாலிக்கிராமம்,
சென்னை - 600 093.
அலைபேசி: 98414 28004 (வாசுகுட்டன்)           

விலை உரூ. 180/- 

Seshadri Sridharan

unread,
Feb 8, 2016, 4:25:24 AM2/8/16
to mintamil
2016-02-08 8:59 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
இதில் ஒரே சந்தேகம். இப்போது இருப்பதைவிட சங்கதம் தமிழகத்தில் அரசு ஆதரவுடனும், மொழியியல் ஆர்வம் கொண்டும் செழித்திருந்த காலங்களுண்டு. சங்கதம் கற்றதால் அதுவே உயர்வு எனக் கருதாத பெரும் புலவர்களும் வாழ்ந்திருக்கின்றனர். நாதமுனி தொடக்கம், மணவாளமாமுனிகள் வாழ்ந்த ஆச்சார்யர்கள் எப்போதும் தமிழின் உயர்வையே போற்றிப் பேசினர். அவர்கள்தான் தமிழுக்கு discourse analysis எனும் வியாக்கியான பாரம்பரியத்தை வளர்த்து எடுத்தனர். அப்படி இருந்தபோதும் அவர்கள் தொல்காப்பியம் பாணினிக்கு முந்தியது என்று கருதியதில்லை என எண்ணுகிறேன். சங்கத அறிவு கொண்டோர் அருகி வரும் இக்காலக்கட்டத்தில் தமிழ்தான் ஆதி மொழி என்றால் வாதமிடக்கூட ஆளில்லை. எங்கோ இடிப்பது போல் தெரிகிறது. நமது லண்டன் தமிழ்ச் சங்க மேனால் செயலர் சுவாமிநாதன் தனது வலைப்பதிவில் பாணினி மூத்தது என்பதைச் சில வாதங்களோடு சொல்கிறார். 

மேலும் இவரது பல கட்டுரைகள் தொல்காப்பியர் காலம் தவறு எனச்சுட்டுகிறது

(அத்தொடர் முழுவதும் தேடித்தொடுப்பு கொடுக்க முடியவில்லை 3,4,5 கிடைக்கிறது)

தொல்காப்பியர் காலமும், வள்ளுவனின் காலமும் ன்று எனச் சொல்லி இருவரும் கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்பும் படி வாதிடுகிறார். 

சுவாமிநாதன் இக்குழுமத்தில் உள்ளாரா எனத்தெரியவில்லை. கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். இங்கு இச்செம்மொழி இரண்டுமறிந்த இன்னொருவர் நண்பர் ஶ்ரீரங்கம் மோகனரங்கன். இவர்களது திறனாய்வு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நா.கண்ணன்  

சமற்கிருதம் கற்ற நீங்கள் இதில் பங்கெடுப்பீர் என எண்ணினேன். என் எண்ணத்தை ஈடேற்றிவிட்டீர். முதலில் இந்நூலை வாங்கிப்படியுங்கள்ஐயா  பின் உமது கருத்தை இடுங்கள். பாணினீயம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டினது என்கின்றனர்.
 பேரா. இரா. மதிவாணர் சமற்கிருதம் சொற் குறைபாடு உடையது என்கிறார். காட்டாக, போ > go என்பதை சமற்கிருதத்தில் கச்ச(gachcha) என்பர். வருதலை குறிக்க தனிச் சொல்    இருக்க வேண்டும் அப்படியில்லாமல் சமற்கிருதத்தில் மறுப்பு சொல்லாக ஆகச்ச என்பர். அ + கச்ச = ஆகச்ச. go என்றால் போ எனப் பொருள் என்றால் go not என்பது போகாதே என்று தானே ஆகும் வருதல் என்று ஆகுமா? என வினா வைக்கிறார். ஆனால் சமற்கிருதத்தில் ஆகச்ச என்றால் வருதல் என்கின்றனர். இப்படி பல சொற்கள் சமற்கிருதத்தில் ஆக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்.

அவ்வன்       

தேமொழி

unread,
Feb 8, 2016, 4:56:37 AM2/8/16
to மின்தமிழ்

On Sunday, February 7, 2016 at 1:27:30 PM UTC-8, Suba.T. wrote:
நல்ல நூல் அறிமுகம். ஆனால் ஏனோ படங்கல் என் மின்னஞ்சலில் வரவில்லை.

இந்த நூல் விமர்சனத்தை நம மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

மின்தமிழ் மேடையில் இங்கே >>>  http://mymintamil.blogspot.com/2016/02/blog-post_8.html      இணைக்கப்பட்டுள்ளது 

..... தேமொழி 

சுபா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Seshadri Sridharan

unread,
Feb 8, 2016, 2:19:08 PM2/8/16
to mintamil
ஆதிமொழி பக்கம் 175  

பல்வேறு உயிரினங்கள் எங்குத் தோன்றினவோ அங்குதான் மாந்த இனமும் தோன்றியிருக்க முடியும். முதல் மாந்தன் எங்குத் தோன்றினானோ அங்குத்தான் உலக முதன் மொழியும் தோன்றியிருக்க முடியும். அந்த மாந்தனின் மொழிகள் அவனுக்குப் பிறகு தோன்றிய மாந்த இனத்துக்கும் தாய்மொழியாக அமைந்திருக்கும்.

இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள  தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால்  நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள்  அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்

  இந்த கருத்து இலெமூரியக் கண்டக் கருத்தை ஒத்ததாக உள்ளது என்பது உற்று நோக்கத்தக்கது. சட்டம்பி திருவடிகள் ஒரு முக்காலமும் உணர்ந்த சித்தர் எனப்படுகிறார். சுவாமி விவேகானந்தருக்கு சின்முத்திரையில் ஊழ்கம் செய்து ஆத்மஞானம் எய்துவது யாங்கன் என்று பயிற்றுவித்தவர்.

அவ்வன்    

N. Kannan

unread,
Feb 8, 2016, 8:14:19 PM2/8/16
to mint...@googlegroups.com

அன்பின் சேசாத்திரி

எனக்கு சங்கதம் தெரியாது. தெரிந்தோரிடம் பழக்கமுண்டு.

நான் கேட்டது பொதுவான சந்தேகங்கள். தமிழ் இயல்பான, இயற்கையான மொழி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. என் தாய் மொழி இனிது என்று நாளும் திளைப்பவன். ஆயினும் ஒப்பியல் ஆய்வு என்று வரும் போது பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழை ஆதிமொழி என நிருவத்தேவை என்ன? உளவியல் காரணமென்ன? எனக் கேட்பது சுவாரசியமாக உள்ளது.

தமிழ் 'தாய்' என்றால் பிறமொழிகள் சேய். ஒரு தாயின் மனத்தோடு தமிழன் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் பிற மொழி மீதொரு வெறுப்பு. தானே தலைவன் என நிருவ முயலும் அகந்தை. இதுவே கண்ணில் படுகிறது.

அதுபோக வையாபுரியாரின் ஆய்வை நாமெல்லோரும் புறம் தள்ளுவதின் காரணமென்ன? சுவாமிநாதனின் கூற்றுக்குப் பதில் என்ன?

இது புத்தகம் பற்றித் தாங்கள் கொடுத்த விளக்கத்தின் மீதான விமர்சனமே. ;-)

நா.கண்ணன்

--

Seshadri Sridharan

unread,
Feb 8, 2016, 11:57:26 PM2/8/16
to mintamil
016-02-09 6:44 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

அன்பின் சேசாத்திரி

 நல்லது ஐயா உங்களை நான் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.

ஆயினும் ஒப்பியல் ஆய்வு என்று வரும் போது பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழை ஆதிமொழி என நிருவத்தேவை என்ன? உளவியல் காரணமென்ன? எனக் கேட்பது சுவாரசியமாக உள்ளது.

ஆம் நங்கம்மாளின் மகனார் சட்டம்பி திருவடிகள் சுவாமி இரு மொழியிலும் புலமை கொண்டவர். கள்ளிடைகுறிச்சி வேதபாடசாலையில் வேதம் பயின்ற கையோடு சமற்கிருத மொழியும் கற்றவர். பலவற்றையும் கருத்தில் கொண்டு தம் மொழியியல் ஒப்பாய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்நூல் கையெழுத்துப்படியாகவே 80 ஆண்டு காலம் பெரும்பாவூர் நாராயணபிள்ளை (1906 - 1976) பின் அவர் மகள் ஏ. கீதா ஆகியோரிடம் இருந்துள்ளது. 1998 இல் அவரிடம் இருந்து பெற்று அதை நூலாக வெளியிட்டவர் திரு மகேசுவரன் பிள்ளை. இவர்கள் யாவரும் மலையாளிகள். இவர்களிடம் திராவிடத்தின் தாக்கம் ஏதும் கிடையாது சமற்கிருதத்தை வெறுக்க. சட்டம்பி அடிகளை இந்நூலை எழுதத் தூண்டிய உளவியல் காரணம் என்ன? என்பது அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. அவருக்கும் தம் அறிவை வெளிப்படுத்தும் உந்துதல் மற்ற அறிஞர் போல் இருந்திருக்கலாம்.  

தமிழ் 'தாய்' என்றால் பிறமொழிகள் சேய். ஒரு தாயின் மனத்தோடு தமிழன் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் பிற மொழி மீதொரு வெறுப்பு. தானே தலைவன் என நிருவ முயலும் அகந்தை. இதுவே கண்ணில் படுகிறது.

அதுபோக வையாபுரியாரின் ஆய்வை நாமெல்லோரும் புறம் தள்ளுவதின் காரணமென்ன? சுவாமிநாதனின் கூற்றுக்குப் பதில் என்ன?

இந்நூல் இலக்கிக்கப்பட்ட போது 1915 தமிழரிடையே எந்த வெறுப்புணர்வும் வித்தப்படவில்லை. உங்கள கருத்தைத் தான் நூல் வெளியீட்டு விழாவில் சென்னை மாத்ருபூமி ஆசிரியர் ஜோன்னி மலையாளித்தில் கூடிஇருந்த மலையாளிகளிடம் பேசினார்.

//இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள  தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால்  நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள்  அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்
இந்த கருத்து இலெமூரியக் கண்டக் கருத்தை ஒத்ததாக உள்ளது என்பது உற்று நோக்கத்தக்கது. சட்டம்பி திருவடிகள் ஒரு முக்காலமும் உணர்ந்த சித்தர் எனப்படுகிறார். சுவாமி விவேகானந்தருக்கு சின்முத்திரையில் ஊழ்கம் செய்து ஆத்மஞானம் எய்துவது யாங்கன் என்று பயிற்றுவித்தவர்.//

இதன் மூலம் கதம்ப மூல நியாயத்தை( கடம்ப மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சேர மொட்டுகள் அரும்பி அவை ஒரு சேர மலரும். இதைப் போலவே ஒரு நேரத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு மொழிகள் தோன்றியிருக்கக் கூடும் என்பதற்க்கு இது உவமையாகக்  கூறப்படுகிறது) மறுதலித்து விசீதரங்க  (வீசிதரங்க நியாயம்: தொடக்கத்தில் ஒரு அலை புறப்பட்டு கரையை தொடுவதற்கு முன்பே அடுத்தடுத்த அலைகள்  தொடர்ந்து வந்து அலையடுக்குகளாக உருவெடுக்கின்றன. அது போல் முதலில் தோன்றிய ஒரு மொழியின் விளைவாக அடுத்தடுத்து பல மொழிகள் உருவெடுக்கும் வரலாற்றுக்கு அலை அடுக்கு முறை என்பது உவமையகிறது) கருத்தையே சட்டம்பி ஆதரிக்கிறார் என்பது தெளிவாகிறது..

அவ்வன் 

N. Ganesan

unread,
Feb 9, 2016, 3:21:03 PM2/9/16
to மின்தமிழ்

On Sunday, February 7, 2016 at 7:29:55 PM UTC-8, N. Kannan wrote:
இதில் ஒரே சந்தேகம். இப்போது இருப்பதைவிட சங்கதம் தமிழகத்தில் அரசு ஆதரவுடனும், மொழியியல் ஆர்வம் கொண்டும் செழித்திருந்த காலங்களுண்டு. சங்கதம் கற்றதால் அதுவே உயர்வு எனக் கருதாத பெரும் புலவர்களும் வாழ்ந்திருக்கின்றனர். நாதமுனி தொடக்கம், மணவாளமாமுனிகள் வாழ்ந்த ஆச்சார்யர்கள் எப்போதும் தமிழின் உயர்வையே போற்றிப் பேசினர். அவர்கள்தான் தமிழுக்கு discourse analysis எனும் வியாக்கியான பாரம்பரியத்தை வளர்த்து எடுத்தனர். அப்படி இருந்தபோதும் அவர்கள் தொல்காப்பியம் பாணினிக்கு முந்தியது என்று கருதியதில்லை என எண்ணுகிறேன். சங்கத அறிவு கொண்டோர் அருகி வரும் இக்காலக்கட்டத்தில் தமிழ்தான் ஆதி மொழி என்றால் வாதமிடக்கூட ஆளில்லை. எங்கோ இடிப்பது போல் தெரிகிறது. நமது லண்டன் தமிழ்ச் சங்க மேனால் செயலர் சுவாமிநாதன் தனது வலைப்பதிவில் பாணினி மூத்தது என்பதைச் சில வாதங்களோடு சொல்கிறார். 

மேலும் இவரது பல கட்டுரைகள் தொல்காப்பியர் காலம் தவறு எனச்சுட்டுகிறது

(அத்தொடர் முழுவதும் தேடித்தொடுப்பு கொடுக்க முடியவில்லை 3,4,5 கிடைக்கிறது)

தொல்காப்பியர் காலமும், வள்ளுவனின் காலமும் ன்று எனச் சொல்லி இருவரும் கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்பும் படி வாதிடுகிறார். 

எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது--- குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.”

லண்டன் சுவாமிநாதனின் கூற்று பிழைபட்டது. எள்- என்னும் வினைச்சொல் எல்லா சங்க நூல்களிலும் உள்ளது.

-------------------------

ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்
பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.
இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும். ஆனால், மொழியியற் கூறுகளை
ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர்.
தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவது
தொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது. இந்த மாபாடியத்தின் தாக்கம்
தொல்காப்பியத்தில் இருப்பதை ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.

----------------------------------

சட்டாம்பி சுவாமிகள் போன்ற மலையாள ஆசான்கள் ரெவரண்ட் கால்ட்வெல் நூலின் தாக்கம் தெரிகிறது,.
திராவிட மகாத்மியம் என்ற நூலும் செய்துள்ளார். இந்தியச் செம்மொழிகள் இரண்டையும் - தமிழ், சம்ஸ்கிருதம்
இரண்டையும் ஒப்புநோக்கி தமிழ் ஆதிமொழி என நிறுவியுள்ளார். இது ஐரோப்பியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில்
கண்டுபிடித்த மொழியியல் ஆராய்ச்சிமுடிவுகளின் வளர்ச்சி இந்திய மொழிகளில் எதிரொளிக்கத் தொடங்கியதன்
கூறுகள் ஆகும்.

நல்ல நூலை அறிமுகம் செய்த சேசாத்திரிக்கு நன்றிகள். சட்டாம்பி சுவாமிகளின் நூல்கள் எல்லாமும் ஒரே தொகுதியாக
தமிழில் மொழியாக்கம் ஆக வேண்டும்.

நா. கணேசன்

Seshadri Sridharan

unread,
Feb 10, 2016, 5:09:25 AM2/10/16
to mintamil
2016-02-09 18:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
  
ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்
பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.
இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும்.

தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலக்குறிப்பு மிகத் தவறானவை.
 
ஆனால், மொழியியற் கூறுகளை ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவது
தொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது. இந்த மாபாடியத்தின் தாக்கம் தொல்காப்பியத்தில் இருப்பதை ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.

பதஞ்சலி முனிவர் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டு. அப்படியானால் தொல்காப்பியம் 9 ஆம் நூற்றாண்டா? 
 "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!

சட்டம்பி பாணினீயத்திற்கு முந்தையது மகேசுர சூத்திரம் என்கிறார்.  http://vediccafe.blogspot.in/2012/08/the-sanskrit-alphabet-sequence.html

----------------------------------
சட்டாம்பி சுவாமிகள் போன்ற மலையாள ஆசான்கள் ரெவரண்ட் கால்ட்வெல் நூலின் தாக்கம் தெரிகிறது, திராவிட மகாத்மியம் என்ற நூலும் செய்துள்ளார். இந்தியச் செம்மொழிகள் இரண்டையும் - தமிழ், சம்ஸ்கிருதம்
இரண்டையும் ஒப்புநோக்கி தமிழ் ஆதிமொழி என நிறுவியுள்ளார். இது ஐரோப்பியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டுபிடித்த மொழியியல் ஆராய்ச்சிமுடிவுகளின் வளர்ச்சி இந்திய மொழிகளில் எதிரொளிக்கத் தொடங்கியதன் கூறுகள் ஆகும்.

அப்படி எந்த ஐரோப்பியர் நூலையும் அவர் மேற்களாக சுட்டவில்லை.   

நல்ல நூலை அறிமுகம் செய்த சேசாத்திரிக்கு நன்றிகள். சட்டாம்பி சுவாமிகளின் நூல்கள் எல்லாமும் ஒரே தொகுதியாக தமிழில் மொழியாக்கம் ஆக வேண்டும்.

அது வித்தியாதிராச சபையாரின் கடமை. 

 இதற்கே நானும் மதிவாணரும் 9 ஆண்டுகள் வண்டிக்காரன் மாட்டின் பின்னங்கால் இடுக்கில் காலைவிட்டு ஆட்டி கிச்சு கிச்சு செய்து வண்டியை வேகப்படச் செய்வது போல் செய்யவேண்டியிருந்தது  

அவ்வன் 

Seshadri Sridharan

unread,
Feb 10, 2016, 9:12:42 AM2/10/16
to mintamil
ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்
பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும். ஆனால், மொழியியற் கூறுகளை ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவது தொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது.

 தொல்காப்பியருக்கு முன்னமேயே தமிழில் இலக்கணம் இருந்துள்ளதை சட்டம்பி ஏற்கின்றார் 

பக்கம் 109  
சமற்கிருதத்தில் எண்ணிக்கையை வசனம் என்றும் பிறப்பு வழி ஆண் பெண் வேறுபாட்டை  லிங்கம் என்றும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் இந்த இருவகைக்கும் வேறுபாடு காட்டாமல்  பொதுவாகப் பால் எனப் பெயரிட்டது ஏன்?

இவற்றுக்குக் காரணம் என்னவெனில் வடமொழியிலக்கணப்பாங்கு ஏற்படுவதற்கு முன்பே மிகு தொன்மைக் காலத்தில் தமிழிலக்கண வகைபாடுகள் தோன்றிவிட்டனவாதலால் அவற்றை  மாற்றமின்றித் தமிழிலிணக்க வல்லுநர் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதேயாகும்

அவ்வன் 

N. Kannan

unread,
Feb 12, 2016, 3:41:52 AM2/12/16
to மின்தமிழ்
2016-02-10 16:58 GMT+08:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
 
இதற்கே நானும் மதிவாணரும் 9 ஆண்டுகள் வண்டிக்காரன் மாட்டின் பின்னங்கால் இடுக்கில் காலைவிட்டு ஆட்டி கிச்சு கிச்சு செய்து வண்டியை வேகப்படச் செய்வது போல் செய்யவேண்டியிருந்தது  

​:-) :-)

தாங்கள் தொடர்ந்து இது பற்றிப் பேசிவருவது அறிவேன். அது பாராட்டுதலுக்குரியதே. ஆய்வு மாணவனான என்னால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது! தமிழின் தொன்மை பற்றி ஆற்றொழுக்காக தடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் குமரிக்கண்டம், உலகின் முதல் மொழி போன்ற நிருவப்படாத கதைகள் ஓட்டத்தில் வந்துவிட்டன. வள்ளுவர் காலம் இன்னும் ஆய்வு பூர்வமாக நிருவப்படவில்லை. சங்க காலத்தில் இருந்த தரக்கட்டுப்பாடு கூட அறிவியல் வளர்ந்துவிட்ட 21ம் நூற்றாண்டில் இல்லை என்றால் தமிழன் எதற்காக அவசரப்படுகிறான்? எதை இதனால் சாதிக்க விரும்புகிறான் என்ற கேள்விகள் எழாமல் இருக்க முடியாது. ஆரிய மேலாண்மைக்கான எதிர்க்குரல் என்பது மட்டுமே விளங்குகிறது. அதற்காக உலகின் முன் நாம் கோமாளிகள் ஆகக்கூடாது என்ற அக்கறை என்னுள் எழுகிறது.

நன்றி,
நா.கண்ணன்
 
Suba

unread,
Feb 12, 2016, 3:45:49 AM2/12/16
to மின்தமிழ்
​அன்புள்ள கண்னன்,

அன்மையில் நான் எழுதிய நூல் விமசனம் ஒன்று பதிந்திருக்கின்றேன். நேரம் கிடைத்தால் வாசிக்கவும்.
அந்த நூலில் லெமூரியா, குமரிக்கண்டம், தமிழர் தொழில்நுட்பத்திறனுக்கான சங்க இலக்கிய காப்பிய நூல்களின் சான்றுகள் என உள்ளன.
இந்த நூலும் உங்களுக்கு பிடிக்கும்
என் வாசிப்பில் இன்று - புத்தக விமர்சனம்
  என்ற தலைப்பிலான இழை.
​​

நன்றி,
நா.கண்ணன்
 
-- 

Seshadri Sridharan

unread,
Feb 13, 2016, 12:10:44 AM2/13/16
to mintamil
2016-02-12 14:11 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

தாங்கள் தொடர்ந்து இது பற்றிப் பேசிவருவது அறிவேன். அது பாராட்டுதலுக்குரியதே. ஆய்வு மாணவனான என்னால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது! தமிழின் தொன்மை பற்றி ஆற்றொழுக்காக தடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் குமரிக்கண்டம், உலகின் முதல் மொழி போன்ற நிருவப்படாத கதைகள் ஓட்டத்தில் வந்துவிட்டன. வள்ளுவர் காலம் இன்னும் ஆய்வு பூர்வமாக நிருவப்படவில்லை. சங்க காலத்தில் இருந்த தரக்கட்டுப்பாடு கூட அறிவியல் வளர்ந்துவிட்ட 21ம் நூற்றாண்டில் இல்லை என்றால் தமிழன் எதற்காக அவசரப்படுகிறான்? எதை இதனால் சாதிக்க விரும்புகிறான் என்ற கேள்விகள் எழாமல் இருக்க முடியாது. ஆரிய மேலாண்மைக்கான எதிர்க்குரல் என்பது மட்டுமே விளங்குகிறது. அதற்காக உலகின் முன் நாம் கோமாளிகள் ஆகக்கூடாது என்ற அக்கறை என்னுள் எழுகிறது. - நா.கண்ணன்

நான் இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் ஆரிய திராவிட சண்டையாகவே பார்க்கிறீர்கள். இது தவறு. சட்டம்பி இளமையில் தான் தமிழகத்தில் இருந்துள்ளார். பின்னர் கேரளம் சென்றுவிட்டார். உயிர்கள் தோற்றம் அதிக குளிர் அதிக வெப்ப இடத்தில்நிகழாது என்பதால் அவர் அவற்றுக்கு இடைப்பட்ட தென்னிந்திய பகுதியை தோதுபட்ட இடமாகக் கொள்கிறார்.

தமிழில் முதல் வேற்றுமை எட்டாம் வேற்றும விளி வேற்றுமை என தனித்தனியே இருப்பது போல சமற்கிருதத்தில் இல்லை. ஒன்றாம் வேற்றுமையையே எட்டாம் வேற்றுமையாக சமற்கிருதத்தில் பயன் படுத்தப்படுகிறது என்று எட்டு வேற்றுமைகளையும் ஒவ்வொன்றாக ஒப்பிட்டு ஆய்கிறார். உண்மையில் இந்நூல் படித்து புரிந்து கொள்ள மிகக் கடினமாக உள்ளது. ஏனென்கிறீர்களா? தமிழ் இலக்கணமும் சமற்கிருத இலக்கணமும் தெரியாதவர் கையில் இந்நூல் அகப்பட்டால் அவர் இதை தூக்கி எறிந்து விடுவார்.அப்படி ஒரு வறண்ட உணர்வு (dry). நீங்கள் வாங்கிப் படித்தால் உங்கள் ஆரிய திராவிட கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் தான் வாங்கிக் படியுங்கள் என்கிறேன்.

அவ்வன்      

N. Ganesan

unread,
Feb 13, 2016, 12:12:11 AM2/13/16
to மின்தமிழ், vallamai
On Wednesday, February 10, 2016 at 2:09:25 AM UTC-8, அவ்வன் wrote:
2016-02-09 18:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
  
ஆனால்,தொல்காப்பியத்தின் காலக் கணிப்புக்கு தொல்லியற் சான்றுகள் மிக உதவுகின்றன. உ-ம்: புள்ளியிட்ட மெய்யெழுத்துக்கள்
பற்றி தொல்காப்பியம் விரிவாக உரைக்கிறது. புள்ளி எழுத்தின் மீது வரும் காலம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ஐராவதம் மகாதேவன் குறில் எ, ஒ உருவாக்க, ஏ, ஓ பிராமி எழுத்துக்கள் மீது புள்ளி இடலையும் காட்டுகிறார்.
இதுவும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்டதே ஆகும்.

தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலக்குறிப்பு மிகத் தவறானவை.
 
அவ்வாறு சொல்ல இயலவில்லை. ஐராவதம், நாகசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, புலவர் ராசு, சுப்பராயலு எனப் பலர்
ரோமானிய காசுகள், பிராமி வளர்ச்சி நெறி ஒப்பிட்டுக் கணித்த காலம் அது. தவறு ஏதும் இல்லை.
இருந்தால் எந்தக் கல்வெட்டின் காலம் தவறு என நீங்கள் எழுதலாம்.

ஆனால், மொழியியற் கூறுகளை ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்தில் பல திராவிட மொழியின் கூறுகள் இருப்பதை நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் பாணினிக்கு காலத்தால் பிற்பட்டதாயினும், பாணினிக்கு ஒரு கைவிளக்காக விளங்குவது
தொல்காப்பியம். பாணினியின் மகாபாஷ்யம் பதஞ்சலி முனிவர் செய்தது. இந்த மாபாடியத்தின் தாக்கம் தொல்காப்பியத்தில் இருப்பதை ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.

பதஞ்சலி முனிவர் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டு. அப்படியானால் தொல்காப்பியம் 9 ஆம் நூற்றாண்டா? 
 "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!

தொல்காப்பியர் (முதலாமவர்) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் எனலாம். ஏனெனில், பாணினி வியாகரணத்துக்கு
பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்யத்தை அவர் பயன்படுத்தியுள்ளார், யாமையின் பெயர் பெறும் யமுனைக் கரையினில்
கி.மு. 150 வாக்கில் வாழ்ந்தவர் பதஞ்சலி.

தொல்காப்பியம் பலரால் வளர்ச்சியுற்ற ஓர் இலக்கண நூல்.
முக்கியமான “தொல்காப்பியர்” காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு.
ஐயம் இன்றி இதை தமிழ் ப்ராமிக் கல்வெட்டுகளில் வரும் புள்ளி
எழுத்து இதனை நிரூபிக்கிறது.

பாணினிக்கு மஹாபாஷ்யம் எழுதியவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்பது
சிந்து சமவெளி சித்திரவெழுத்தை நீங்கள் அ,ஆ, க, ங, ... ற,ன என்று
இரா. மதிவாணன் முறையில் படிப்பதை ஒக்கும்.  இவை அடிப்படை
ஆதாரமற்ற கூற்றுகள் ஆகும். ஆங்கிலத்தில் வெளியாகும் ஆராய்ச்சி
இதழ்களில் இதுபோன்ற செய்திகளை எழுதவியலாது. 

சட்டம்பி பாணினீயத்திற்கு முந்தையது மகேசுர சூத்திரம் என்கிறார்.  http://vediccafe.blogspot.in/2012/08/the-sanskrit-alphabet-sequence.html

----------------------------------
சட்டாம்பி சுவாமிகள் போன்ற மலையாள ஆசான்கள் ரெவரண்ட் கால்ட்வெல் நூலின் தாக்கம் தெரிகிறது, திராவிட மகாத்மியம் என்ற நூலும் செய்துள்ளார். இந்தியச் செம்மொழிகள் இரண்டையும் - தமிழ், சம்ஸ்கிருதம்
இரண்டையும் ஒப்புநோக்கி தமிழ் ஆதிமொழி என நிறுவியுள்ளார். இது ஐரோப்பியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டுபிடித்த மொழியியல் ஆராய்ச்சிமுடிவுகளின் வளர்ச்சி இந்திய மொழிகளில் எதிரொளிக்கத் தொடங்கியதன் கூறுகள் ஆகும்.

அப்படி எந்த ஐரோப்பியர் நூலையும் அவர் மேற்களாக சுட்டவில்லை.   

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையின் நாடக நூலைப் படித்தாலும் கால்ட்வெல் பாதிரியாரை அவர் மேற்கோளாக சுட்டவில்லை தான்.
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கால்ட்வெல் செய்த மொழியியல் புரட்சி வெளிப்படுகிறது அல்லவா? பெ. சுந்தரனார்
வசித்தது கேரளாவின் அனந்தையில். கிளிமானூர் ராஜராஜவர்மா கேரள பாணினி. அவரது மலையாள இலக்கண நூலிலும்
சட்டம்பி சாமிகள் போல தமிழின் சிறப்புகளை விதந்தோதியுள்ளார். சட்டம்பி சுவாமிகள் கால்ட்வெல் நூலை நன்கறிவார்.

நா. கணேசன்

நல்ல நூலை அறிமுகம் செய்த சேசாத்திரிக்கு நன்றிகள். சட்டாம்பி சுவாமிகளின் நூல்கள் எல்லாமும் ஒரே தொகுதியாக தமிழில் மொழியாக்கம் ஆக வேண்டும்.

Seshadri Sridharan

unread,
Feb 16, 2016, 9:06:17 AM2/16/16
to mintamil
பக்கம் 113 > தமிழில் "அர்"  என்னும் பலர்பால் ஈற்றுடன் மீண்டும் 'கள்' என்னும் பன்மை ஈற்றை தேவையில்லாமல் சேர்த்து 
"தலைவர்கள் வந்தார்கள்" , 'சிறுவர்கள் பரிசு பெற்றார்கள்' 
என்று இலக்கணமில்லாமல் ஆளும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. சமற்கிருதத்தில் ஒரு சொல் ஈற்றுடன் மற்றொரு சொல்லீறு சேர்க்கும் வழக்கம் இல்லை.

அவ்வன் .     

2016-02-09 18:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

Seshadri Sridharan

unread,
Feb 17, 2016, 4:03:08 PM2/17/16
to mintamil
[ இந்நூலுக்கு அணித்துரை வழகிய இனமான தலைவர் க.அன்பழகன் தாம்  பரப்பிய பிராமண வைத்திக மத வழியில் தம் பெற்ற செல்வாக்காலும், நாடாண்ட மன்னர்களிடம் தாம் கொண்ட ஆதிக்கத்தாலும் அந்த மன்னர்களைக் கொண்டே கட்டளையாகப் பிறப்பித்தனர்.

 குறிப்பாகச் சொன்னால், எதிரிகளின் படை வந்தால் நாட்டைக் காப்பாற்றுவது  கடமை மற்ற காலங்களில் மன்னனுக்கும் சேர்த்து கட்டளை பிறப்பித்து வருணாசிரம தரும ஆட்சி நடத்துவது  பிராமணர்கள். ஆம், அதன் விரிவான விளக்கம்தான், ஆரிய சமாசத்தின் தலைவரான சுவாமி இராமதீர்த்தர் எழுதியுள்ள நூல் "The Hindu Imperialism" என்கிறார். ]

நான் வலைத்தளத்தில் தேடியதில் சுவாமி தர்ம தீர்த்தர் எழுதிய நூல் தான் கிட்டுகிறது. சுவாமி இராம்தீர்த்தர் உங்களிடம் நூல் இருந்தால் தாருங்கள்.

1. இனி, இந்திய வரலாறே தவறான காலக் கணிப்பின் அடிப்படையில் எழுத்தப் பட்டுள்ளது. இதாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டை கி.மு.  8 ஆம் நூற்றாண்டு என்று உபநிடதம்,  புராணங்களுக்கு குறித்துள்ளனர்.  இந்நிலையில் அரசர்களை கைப்பொம்மைகளாக ஆக்கி பிராமணர் ஆண்டனர் என்பது எவ்வகையில்  சரியானது இதற்கு  என்ன?   

2. வருணாசிரம தருமத்தை விட  குமுகத்தில் சாதி தருமம் தான்  ஆட்டிப்படைகின்றது.  இருக்க சாதியை மறைத்து அதைவிட வலி குன்றிய வருணாசிரம தருமத்தை பெரிதாக முன்னிலைப்படுத்துவது பிராமணரைத் தனிமைப்படுத்தத்தான் என்ற கருத்தை .உண்டாக்குகிறது.

3. ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர்கள், ஆளப்பிறந்தவர்கள் என்பதெல்லாம் என்ன பகட்டாரப் பேச்சா? பொய்யா? பிராமணர்களை ஆளவிட இவர்கள் இளித்தவாயர்களா?

4. சரி பிராமணரே ஆண்டாலும் இன்று போல் அன்றைய முடியாட்சி நன்னல ஆட்சியாக (welfare state) இருக்கவில்லை. அரசர்கள் சாலை போடுதல், உணவு அளித்தல் போன்ற அறங்களை செய்யவில்லை என்ற நிலையில் மக்களுக்கும் மன்னர்களுக்கும் இருந்த உறவு அதிக  இடைவெளி கொண்டிருந்தது எனும் போது மன்னருக்கு பின்னே இருந்து  ஆண்டாலும் மக்களுக்கு என்ன தொல்லை நேரப்போகிறது.  இந்த பின்புற ஆட்சிக் கருத்து மிகைக்கூற்றாகவே தோன்றுகிறது.

5. கேரளத்திலும் மராட்டியத்திலும் பிராமணர் ஆளுகை செலுத்தியது நாடு முழுமைக்கும் பொருத்திப்பார்ப்பது முறையா? தமிழகத்திற்கு இது பொருந்துமா?

 உமது கருத்தை பகிர வேண்டுகிறேன்.

அவ்வன் 

Seshadri Sridharan

unread,
Feb 18, 2016, 5:59:10 AM2/18/16
to mintamil
2016-02-17 21:39 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
[ இந்நூலுக்கு அணித்துரை வழங்கிய இனமான தலைவர் க.அன்பழகன், "தாம்  பரப்பிய பிராமண வைதிக மத வழியில் தாம் பெற்ற செல்வாக்காலும், நாடாண்ட மன்னர்களிடம் தாம் கொண்ட ஆதிக்கத்தாலும் அந்த மன்னர்களைக் கொண்டே கட்டளையாகப் பிறப்பித்தனர்.

 குறிப்பாகச் சொன்னால், எதிரிகளின் படை வந்தால் நாட்டைக் காப்பாற்றுவது  கடமை மற்ற காலங்களில் மன்னனுக்கும் சேர்த்து கட்டளை பிறப்பித்து வருணாசிரம தரும ஆட்சி நடத்துவது  பிராமணர்கள். ஆம், அதன் விரிவான விளக்கம்தான், ஆரிய சமாசத்தின் தலைவரான சுவாமி இராமதீர்த்தர் எழுதியுள்ள நூல் The Hindu Imperialism" என்று மேற்கோள் தருகிறார் அன்பழகன்]

நான் வலைத்தளத்தில் தேடியதில் சுவாமி தர்ம தீர்த்தர் எழுதிய நூல் தான் கிட்டுகிறது. சுவாமி இராம்தீர்த்தர் எழுதிய நூல் உங்களிடம் நூல் இருந்தால் தாருங்கள்.

1. இனி, இந்திய வரலாறே தவறான காலக் கணிப்பின் அடிப்படையில் எழுத்தப் பட்டுள்ளது. இதாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டை கி.மு.  8 ஆம் நூற்றாண்டு என்று உபநிடதம்,  புராணங்களுக்கு குறித்துள்ளனர்.  இந்நிலையில் அரசர்களை கைப்பொம்மைகளாக ஆக்கி பிராமணர் ஆண்டனர் என்பது எவ்வகையில்  சரியானது? இதற்கு  என்ன சான்று ?   

2. வருணாசிரம தருமத்தை விட  குமுகத்தை சாதி தருமம் தான்  ஆட்டிப்படைகின்றது. இவ்வாறு இருக்க சாதியை மறைத்து அதைவிட வலி குன்றிய வருணாசிரம தருமத்தை பெரிதாக முன்னிலைப்படுத்துவது பிராமணரைத் தனிமைப்படுத்தத்தான் என்ற கருத்தை .உண்டாக்குகிறது.

திருத்தத்துடன்  தெளிவாக விளக்க விரும்புகிறேன். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் பகுத்துமுறையே முதல் உயர்ந்தோர் இரண்டாவது உயர்ந்தோர் என பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகளை வித்துவது வருணாசிரமம். சாதி தருமம் இதே போல் தோன்றினாலும் உன்னித்து நோக்க இதனினும் வேறுபட்டது. காட்டாக, வடகலை பிராமணர் தென்கலை பிராமணர் இருவரும் வருணாசிரமப்படி முதல்நிலை பெற்றவர் சமமானவர். ஆனால் நடைமுறையில் வடகலையார் தம்மை தென்கலையரினும் மேலோர் என்று மார் தட்டுகின்றனர். இங்கே வருணாசிரம தருமம் தோற்றுப் போய் சாதி தருமம் வெல்கிறது. ஆனால் நாயர்களில் மேனன், பிள்ளை,குருப்பு என உண்டு, சாதி ஒன்று தான். இதில் மேனனே உயர்ந்தோர் குருப்பு தாழ்ந்தோர். வன்னியரில் படையாட்சிகள் உயர்ந்தோர் மற்றோர் அவர்க்கு தாழ்ந்தோர். இதை வைத்து பார்க்கும் போது வருணாசிரம தரும விதிகளை விட சாதி தரும விதியே வலுவாக உள்ளது. இந்த சாதி தருமம் அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி  ஆகியவற்றால் உருவானது. மதமோ பிராமணரோ சாதி தருமத்தை உருவாக்கவில்லை. இந்த சாதி தருமத்தை அடியோடு புறக்கணித்து தெளிவற்ற  வருணாசிரமத்தை சாடுவது பிராமணரை சாடுவோரது பொய்மையைக் காட்டுகிறது.        
 
3. ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர்கள், ஆளப்பிறந்தவர்கள் என்பதெல்லாம் என்ன பகட்டாரப் பேச்சா? பொய்யா? பிராமணர்களை ஆளவிட இவர்கள் இளித்தவாயர்களா?

4. சரி பிராமணரே ஆண்டாலும் இன்று போல் அன்றைய முடியாட்சி நன்னல ஆட்சியாக (welfare state) இருக்கவில்லை. அரசர்கள் சாலை போடுதல், உணவு அளித்தல் போன்ற அறங்களைச் செய்யவில்லை என்ற நிலையில் மக்களுக்கும் மன்னர்களுக்கும் இருந்த உறவு அதிக  இடைவெளி கொண்டிருந்தது எனும் போது மன்னருக்கு பின்னே இருந்து  பிராமணர் ஆண்டாலும் மக்களுக்கு என்ன தொல்லை நேரப்போகிறது? இந்த பின்புற ஆட்சித தொல்லைக்  கருத்து மிகைக்கூற்றாகவே தோன்றுகிறது.

5. கேரளத்திலும் மராட்டியத்திலும் பிராமணர் ஆளுகை செலுத்தியதை  நாடு முழுமைக்கும் பொருத்திப் பார்ப்பது முறையா? தமிழகத்திற்கு இது பொருத்துவது சரியா ?

 உமது கருத்தை பகிர வேண்டுகிறேன்.
.

இப்படித்தான் திராவிடம் தமிழ் மக்களைக் குழப்பி அவரிடையே வெறுப்பை நீரூற்றி வளர்த்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறது. 

அவ்வன் 

தேமொழி

unread,
Feb 18, 2016, 12:26:58 PM2/18/16
to மின்தமிழ்

On Thursday, February 18, 2016 at 2:59:10 AM UTC-8, அவ்வன் wrote:
2016-02-17 21:39 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
[ இந்நூலுக்கு அணித்துரை வழங்கிய இனமான தலைவர் க.அன்பழகன், "தாம்  பரப்பிய பிராமண வைதிக மத வழியில் தாம் பெற்ற செல்வாக்காலும், நாடாண்ட மன்னர்களிடம் தாம் கொண்ட ஆதிக்கத்தாலும் அந்த மன்னர்களைக் கொண்டே கட்டளையாகப் பிறப்பித்தனர்.

 குறிப்பாகச் சொன்னால், எதிரிகளின் படை வந்தால் நாட்டைக் காப்பாற்றுவது  கடமை மற்ற காலங்களில் மன்னனுக்கும் சேர்த்து கட்டளை பிறப்பித்து வருணாசிரம தரும ஆட்சி நடத்துவது  பிராமணர்கள். ஆம், அதன் விரிவான விளக்கம்தான், ஆரிய சமாசத்தின் தலைவரான சுவாமி இராமதீர்த்தர் எழுதியுள்ள நூல் The Hindu Imperialism" என்று மேற்கோள் தருகிறார் அன்பழகன்]

நான் வலைத்தளத்தில் தேடியதில் சுவாமி தர்ம தீர்த்தர் எழுதிய நூல் தான் கிட்டுகிறது. சுவாமி இராம்தீர்த்தர் எழுதிய நூல் உங்களிடம் நூல் இருந்தால் தாருங்கள்.

1. இனி, இந்திய வரலாறே தவறான காலக் கணிப்பின் அடிப்படையில் எழுத்தப் பட்டுள்ளது. இதாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டை கி.மு.  8 ஆம் நூற்றாண்டு என்று உபநிடதம்,  புராணங்களுக்கு குறித்துள்ளனர்.  இந்நிலையில் அரசர்களை கைப்பொம்மைகளாக ஆக்கி பிராமணர் ஆண்டனர் என்பது எவ்வகையில்  சரியானது? இதற்கு  என்ன சான்று ?   

2. வருணாசிரம தருமத்தை விட  குமுகத்தை சாதி தருமம் தான்  ஆட்டிப்படைகின்றது. இவ்வாறு இருக்க சாதியை மறைத்து அதைவிட வலி குன்றிய வருணாசிரம தருமத்தை பெரிதாக முன்னிலைப்படுத்துவது பிராமணரைத் தனிமைப்படுத்தத்தான் என்ற கருத்தை .உண்டாக்குகிறது.

திருத்தத்துடன்  தெளிவாக விளக்க விரும்புகிறேன். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் பகுத்துமுறையே முதல் உயர்ந்தோர் இரண்டாவது உயர்ந்தோர் என பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகளை வித்துவது வருணாசிரமம். சாதி தருமம் இதே போல் தோன்றினாலும் உன்னித்து நோக்க இதனினும் வேறுபட்டது. காட்டாக, வடகலை பிராமணர் தென்கலை பிராமணர் இருவரும் வருணாசிரமப்படி முதல்நிலை பெற்றவர் சமமானவர். ஆனால் நடைமுறையில் வடகலையார் தம்மை தென்கலையரினும் மேலோர் என்று மார் தட்டுகின்றனர். இங்கே வருணாசிரம தருமம் தோற்றுப் போய் சாதி தருமம் வெல்கிறது. ஆனால் நாயர்களில் மேனன், பிள்ளை,குருப்பு என உண்டு, சாதி ஒன்று தான். இதில் மேனனே உயர்ந்தோர் குருப்பு தாழ்ந்தோர். வன்னியரில் படையாட்சிகள் உயர்ந்தோர் மற்றோர் அவர்க்கு தாழ்ந்தோர். இதை வைத்து பார்க்கும் போது வருணாசிரம தரும விதிகளை விட சாதி தரும விதியே வலுவாக உள்ளது. இந்த சாதி தருமம் அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி  ஆகியவற்றால் உருவானது. மதமோ பிராமணரோ சாதி தருமத்தை உருவாக்கவில்லை. இந்த சாதி தருமத்தை அடியோடு புறக்கணித்து தெளிவற்ற  வருணாசிரமத்தை சாடுவது பிராமணரை சாடுவோரது பொய்மையைக் காட்டுகிறது.   

உங்கள் பதிலிலேயே விளக்கமிருக்கிறது சேசாத்திரி ...

இந்த சாதி தருமம் அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி  ஆகியவற்றால் உருவானது.    

இதைத் திருப்பிப் போடுங்கள்....

 கல்வி  >>> செல்வநிலை >>> ஆதிக்கம் >>> அதிகாரம்

அதிகார நிலையை அடைய வேண்டுமானால் அதற்குத் தேவை அடிப்படை அறிவினைப்பெறுவது.

இது மறுக்கமுடியாத உண்மை.

1700 களில் சீகன்பால்கு தமிழ் கற்க விரும்பியபொழுது கற்றோர் சதவிகிதம் 3% எனக் குறிப்பிட்ட நினைவு .

1900 களின் துவக்கத்தில் பெரியார் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்ப  பத்திரிக்கைகள் தொடங்கிய பொழுது கற்றோர் 5% அதிலும் கற்றோரில் பெரும்பாலோர் உயர்சாதி என்று கூறப்படுவோர் என்று படித்த நினைவும் இருக்கிறது (பெரிய வாசகர் வட்டத்துடன் தான் பத்திரிக்கை நடத்தத் துவங்கியிருக்கிறார் !!! தங்களைத் தாக்கி எழுதும் செய்திகளை காசு கொடுத்து வாங்கி படிக்கப் போவது யார்?) 

சாதிப்பெயரை பின்னால் இணைத்துக் கொள்ளும்  கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில்   இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகவல், நூல் பதிப்புத் தகவல் என்று தேடினால் ...... அதில் என்னென்னன பெயர்கள் வருகிறது என்று இங்கு குழுமத்தில் அது போன்ற தகவல் பதியப்ப்படும்பொழுதும் நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

2020 ஆண்டில் இந்தியா வல்லரசு என்று கலாம் கனவு கண்ட கால எல்லையில்தான் முதன்முதல் ஒரு ஒடுக்கப்பட்ட இனப் பெண்  பொறியியல் பட்டம் வாங்கினர் என்ற தகவல் இப்பொழுது வருகிறது.

இங்கிலாந்து சென்று ஆங்கிலக் கல்வி, நிர்வாகக் கல்வி கற்ற இந்தியர்களில் பெரும்பாலோர் ஒருங்கிணைந்து செயல்பட்டுதான் ஆங்கில ஆட்சிக்கு ஆப்பு வைத்தார்கள்.

ஒருவருக்கு கல்வி கொடுத்தால் என்னவாகும்.... அடக்குமுறைகளை கேள்வி கேட்டு ஆர்பாட்டம் நடக்கும்... அதிகாரம் பறிபோகும்....

இன்று இந்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த ஆர்ப்பாடங்களைத்தான் மாணவர் துவ்க்கியுள்ளர்கள்.

இதையெல்லாம் தடுக்க அதிகாரம் ஆட்டம் காணாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...

எலிமெண்டரி மிஸ்டர் வாட்சன் ...

தனக்கு ஊழியம் செய்ய உருவாக்கியுள்ள பெண்களுக்கும் ...உழைக்கும் வர்க்கத்தினருக்கும் கல்வி மறுக்கப்பட வேண்டும்...

அதனை வேதம் சொன்னது, சாஸ்திரம் சொன்னது... போன்ற கற்பிதங்களைக் கூறி ஒடுக்கி வைக்க வேண்டும்...

இதையெல்லாம் செய்தவர் யார்?

இதனைச் சொன்னவர்கள் 

தமிழ் மக்களைக் குழப்பி அவரிடையே வெறுப்பை நீரூற்றி வளர்த்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்பவர்களா?

இக்காலத்தில் இருந்து கொண்டு மேலோட்டமாக ஆராயாமல் வரலாற்று நோக்கில் அலசுவது  உதவும்.

..... தேமொழி

Seshadri Sridharan

unread,
Feb 19, 2016, 1:08:22 AM2/19/16
to mintamil
உங்கள் பதிலிலேயே விளக்கமிருக்கிறது சேசாத்திரி ...

இந்த சாதி தருமம் அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி  ஆகியவற்றால் உருவானது.    

இதைத் திருப்பிப் போடுங்கள்....

 கல்வி  >>> செல்வநிலை >>> ஆதிக்கம் >>> அதிகாரம்

அதிகார நிலையை அடைய வேண்டுமானால் அதற்குத் தேவை அடிப்படை அறிவினைப்பெறுவது. இது மறுக்கமுடியாத உண்மை.

நீங்கள் இக்கால நடைமுறையை சொல்கிறீர்கள். அக்காலத்தே கல்வி ஒருபொருட்டல்ல. படை வலிமை, வாள் வலிமை இருந்தால் அதிகாரம் கிட்டும், ஆதிக்கமும் உடனே வந்து விடும். செல்வநிலையும் ஏற்படும். கல்விக்கு கூலிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதே நிலை. ஆக நான் சரியாகவே சொல்லியிரிருக்கிறேன்.   

இப்படி ஒரு நிலை ஏற்பட்டவுடன் அதைத் தக்கவைக்க தம்போன்றே  அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி உடைய குடும்பத்தாரோடு மணஉறவு என்று ஒரு தனிக் கூட்டமே உருவாக்கப்படுகிறது.இதுவே சாதி தருமம் ஆகும். இக்கால் பொறியியல், மருத்துவம் படித்து உயர்நிலையில் உள்ள S C மக்கள் கூட தம்நிலையைப்  (அந்தஸ்து)  பேணவே விரும்புகின்றனர். அதனால் தம்மை ஒத்த தகுதி இல்லாதவரை மணக்க எண்ணுவதில்லை.  

1700 களில் சீகன்பால்கு தமிழ் கற்க விரும்பியபொழுது கற்றோர் சதவிகிதம் 3% எனக் குறிப்பிட்ட நினைவு .
1900 களின் துவக்கத்தில் பெரியார் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்ப  பத்திரிக்கைகள் தொடங்கிய பொழுது கற்றோர் 5% அதிலும் கற்றோரில் பெரும்பாலோர் உயர்சாதி என்று கூறப்படுவோர் என்று படித்த நினைவும் இருக்கிறது (பெரிய வாசகர் வட்டத்துடன் தான் பத்திரிக்கை நடத்தத் துவங்கியிருக்கிறார் !!! தங்களைத் தாக்கி எழுதும் செய்திகளை காசு கொடுத்து வாங்கி படிக்கப் போவது யார்?) 

படிப்பே கூட தொழிலுக்கு உதவினால் தான் மேற்கொள்வது இல்லாவிட்டால் அது காலவிரயம் என்று கருதப்பட்டது.
 
சாதிப்பெயரை பின்னால் இணைத்துக் கொள்ளும்  கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில்   இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகவல், நூல் பதிப்புத் தகவல் என்று தேடினால் ...... அதில் என்னென்னன பெயர்கள் வருகிறது என்று இங்கு குழுமத்தில் அது போன்ற தகவல் பதியப்ப்படும்பொழுதும் நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

தமிழகத்தில் இது தெலுங்கர் தொடர்பால் ஏற்பட்டது. மலையாளிகள் பல காலமாக சாதிப் பெயரை கொண்டிருந்தனர். மேனன், பிள்ளை, குருப்பு, கைமள் என்று.

தனக்கு ஊழியம் செய்ய உருவாக்கியுள்ள பெண்களுக்கும் ...உழைக்கும் வர்க்கத்தினருக்கும் கல்வி மறுக்கப்பட வேண்டும்...
அதனை வேதம் சொன்னது, சாஸ்திரம் சொன்னது... போன்ற கற்பிதங்களைக் கூறி ஒடுக்கி வைக்க வேண்டும்...
 
பிராமணரில் பண்ணையார்கள் தவிர பிறர் உழைக்கும் மக்களை கூலிக்கு அமர்த்தி வேலை தரும் நிலையில் முதலாளிகளாக இருந்ததில்லை. உழைப்பவருக்கு அந்த தொழிலைச் செய்யும் அறிவு இருந்தால் போதும் என்ற கருத்து நிலவியது தான் கல்வி பரவாமைக்கு காரணம். ஒடுக்கப்பட்டோர் என்போர் பண்ணைத் தொழிலாளிகளே அன்றி  பிறர் அல்லர். பண்ணையார்கள் ஆட்சி அதிகாரம் செலுத்தியோர் வழியினர் ஆவர். குறிப்பாக நாயுடு, ரெட்டி, ராசு, முதலியார், வன்னியர், கொங்கு கவுண்டர், தேவர் என்போரே இவர். பூலான் தேவி உருவானது ராசாபுத்திரை எதிர்த்து பிராமணரை எதிர்த்து அல்ல. ரண்வீர் சேனாவை ஏற்படுத்தினோர் பூமிகாரும், ராசபுத்திரருமே பிராமணர் அல்லர். இவர்கள் நிலக்கிழார்கள்.  

இதையெல்லாம் செய்தவர் யார்?

இதனைச் சொன்னவர்கள் 

இப்படிச் சொல்பவர்கள் / செய்தவர்கள் தம் சாதியாரின் பண்ணை ஆதிக்கத்தை இன்றளவும் மறைத்துத் தம்மை குமுகக் விடுதலைப் போராளிகளாக காட்டிக் கொள்வோரே.
   
தமிழ் மக்களைக் குழப்பி அவரிடையே வெறுப்பை நீரூற்றி வளர்த்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்பவர்களா?
இக்காலத்தில் இருந்து கொண்டு மேலோட்டமாக ஆராயாமல் வரலாற்று நோக்கில் அலசுவது  உதவும்.

அப்படித்தான் ஆய்ந்துள்ளேன். உங்கள் கருத்தை தயக்கமின்றி பகிர்ந்தமைக்கு நன்றி தேமொழி. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். 

அவ்வன். 

தேமொழி

unread,
Feb 19, 2016, 1:39:44 AM2/19/16
to மின்தமிழ்

On Thursday, February 18, 2016 at 10:08:22 PM UTC-8, அவ்வன் wrote:

நீங்கள் இக்கால நடைமுறையை சொல்கிறீர்கள். அக்காலத்தே கல்வி ஒருபொருட்டல்ல. படை வலிமை, வாள் வலிமை இருந்தால் அதிகாரம் கிட்டும், ஆதிக்கமும் உடனே வந்து விடும். செல்வநிலையும் ஏற்படும். கல்விக்கு கூலிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதே நிலை. ஆக நான் சரியாகவே சொல்லியிரிருக்கிறேன்.   

இப்படி ஒரு நிலை ஏற்பட்டவுடன் அதைத் தக்கவைக்க தம்போன்றே  அதிகாரம், ஆதிக்கம், செல்வநிலை, கல்வி உடைய குடும்பத்தாரோடு மணஉறவு என்று ஒரு தனிக் கூட்டமே உருவாக்கப்படுகிறது.இதுவே சாதி தருமம் ஆகும். இக்கால் பொறியியல், மருத்துவம் படித்து உயர்நிலையில் உள்ள S C மக்கள் கூட தம்நிலையைப்  (அந்தஸ்து)  பேணவே விரும்புகின்றனர். அதனால் தம்மை ஒத்த தகுதி இல்லாதவரை மணக்க எண்ணுவதில்லை.  

நீங்கள் குறிப்பது உலகம் முழுவதும் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் மனநிலை (மும்மலங்களில் சிக்கித் தவிப்பதனால்?).

சமூகவியலில் முக்கிய அங்கம் வகிப்பது. அந்த மனப்பான்மை (ஸ்டேட்டஸ் பார்ப்பது)    ... நம் நாட்டு சாதி அமைப்பு போல யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்குள் அடக்கிவைக்க முற்பட்டதல்ல என நினைக்கிறேன்.

எப்படி இருப்பினும்... இந்தத் திசையில் செல்வது இலக்கண நூல்கள் ஆய்வு விவாதத்திற்கு உதவாது என்ற எண்ணத்தில் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

உங்கள் விளக்கத்திற்கு நன்றி சேசாத்திரி. 

..... தேமொழி

1700 களில் சீகன்பால்கு தமிழ் கற்க விரும்பியபொழுது கற்றோர் சதவிகிதம் 3% எனக் குறிப்பிட்ட நினைவு .
1900 களின் துவக்கத்தில் பெரியார் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்ப  பத்திரிக்கைகள் தொடங்கிய பொழுது கற்றோர் 5% அதிலும் கற்றோரில் பெரும்பாலோர் உயர்சாதி என்று கூறப்படுவோர் என்று படித்த நினைவும் இருக்கிறது (பெரிய வாசகர் வட்டத்துடன் தான் பத்திரிக்கை நடத்தத் துவங்கியிருக்கிறார் !!! தங்களைத் தாக்கி எழுதும் செய்திகளை காசு கொடுத்து வாங்கி படிக்கப் போவது யார்?) 

Seshadri Sridharan

unread,
Feb 19, 2016, 5:43:24 AM2/19/16
to mintamil
எப்படி இருப்பினும்... இந்தத் திசையில் செல்வது இலக்கண நூல்கள் ஆய்வு விவாதத்திற்கு உதவாது என்ற எண்ணத்தில் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். - தேமொழி

நான் கூட இலக்கணத்தை பற்றி பதிவிடுவார் இல்லை என்று தான் கடைசியாக க. அன்பழகனின் அணித்துரையை இட்டேன். 

இந்தியா முழுவதுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரே நிலத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதற்கு ஒரு காட்டு கீழே. .

 The Baro-Bhuyans (spelled variously as Baro-Bhuinas etc.) were warrior chiefs and landlords (zamindars) in medieval Bengal and Assam 

கருநாடகம் 

அவ்வன் 
Reply all
Reply to author
Forward
0 new messages