திருப்புகழ்வழி முருக வழிபாடு

552 views
Skip to first unread message

devoo

unread,
Aug 29, 2010, 9:49:12 AM8/29/10
to மின்தமிழ்
வாலறிவன் நற்றாள் தொழுவதே கல்வியின் பயன் என்றார் வள்ளுவர்.

நற்றாள் தொழுவதில் பலவகை - துதிநூல்களை ஓதுவது, திருநாம ஜபம், மலர்
கொண்டு பணிதல் என்று. பூஜை செய்தல் தொன்றுதொட்டுக் கடைப் பிடிக்கப்படும்
முறை. மனம் அவனை நினைக்க, மொழி அவன் புகழ் பாட, மெய்யால் அபிடேக ஆராதனை
செய்வதால் ஒரே நேரத்தில் முக்கரணங்களும் சரண கமலத்தில் குவியும்
வாய்ப்புக் கிடைக்கிறது.

பூசனை என்பது ஷோடச ( பதினாறுவித) உபசாரங்களுடன் கூடியது. ஆகம
வழிபாட்டில் முத்திரைகள் முக்கியம். தனிப்பட்ட வழிபாடுகளில் முத்திரை
இராது. பாஞ்சராத்ர முறையில் அடிக்கொருமுறை திரையிட்டு முத்ரை காட்டி,
பெருமாளுக்கு அர்க்ய-பாத்யம் ஸமர்ப்பிக்க வேண்டும். சங்க –சக்ர முத்ரை,
வைஜயந்தி முத்ரை, முடிவில் திருவடிகளில் கருட முத்ரை இவற்றைத் தவறாமல்
ஸமர்ப்பிக்க வேண்டும். ந்ருத்த முத்ரைகளுக்கும், ஆகமத்துக்கும் தொடர்பு
உண்டா ? ஆராய வேண்டும். சாக்த வழிபாட்டிலும் முத்ரைகள் உண்டு.

பாத்யம், அர்க்யம், ஆசமநீயம், ஸ்நபநம் (நீராட்டம்), வஸ்த்ரம், ஆபூஷணம்,
கந்தம், , அர்ச்சனை (புஷ்பம்), தூபம், தீபம், நிவேதநம், ந்ருத்தம்,
வாத்யம், ஸ்தோத்ரம், தாம்பூலம், நமஸ்காரம் என்னும் 16 வகையில்
தேவாலயங்களில் வழிபாடு நிகழ்த்துவது மரபு. இல்லங்களில் நடைபெறும்
வழிபாட்டில் ந்ருத்தம் (நடநம்), வாத்யம் இவற்றை மனத்தால் அர்ப்பணம்
செய்ய வேண்டும்.

துறவியருக்கு மாநஸ பூஜை விதிக்கப்படுகிறது. விரிவான ஆராதனை முறைகளுக்கு
நேரம் செலவிட முடியாதவர் வசதிக்காகத் திருப்புகழி லிருந்து சில பாடல்கள்
தொகுத்து வழங்கப்படுகிறது.

அன்பர்களுக்குப் பயனாகும் என்று நம்புகிறேன். தவறுகள் காணப்படின்
திருத்தம் செய்யலாம்


வீர கணபதி த்யாநம்
-------------------------------------

உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே

தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே !

************************

நினது திருவடி சத்திமயிற்கொடி
நினைவு கருதிட புத்தி கொடுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழமப்பமு நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவிலரிசி பருப்பவ லெட்பொரி
நிகரிலினி கதலிக்கனி வர்கமும் இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்ட கரத்தொரு
மகர சலநிதி வைத்த துதிக்கர
வளரு கரிமுக ஒற்றை மருப்பனை வலமாக

மருவு மலைபுனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே !

தெனென தெனதென தெத்தெனனப்பல
சிறிய அறுபத மொய்த்துதிரப்புனல்
திரளு முறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை

செறும வுதர நிரப்பு செருக்குடல்
நிரைய வரவ நிறைத்த களத்திடை
திமித திமிதிமி மத்தளிடக்கைகள் செகசேசே

எனவெ துகுதுகு துத்தென வொத்துகள்
துடிக ளிடமிக வொத்துமு ழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிமெ னத்தவி லெழுமோசை

இகலி யலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுநடித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே !


(தொடரும்)

தேவ்

srirangammohanarangan v

unread,
Aug 29, 2010, 11:08:01 AM8/29/10
to mint...@googlegroups.com
நல்ல இழை ஒன்று தொடக்கம். நன்றி தேவ் சார்.
 
>>> ந்ருத்த முத்ரைகளுக்கும், ஆகமத்துக்கும் தொடர்பு
உண்டா ?  <<<
 
ந்ருத்த முத்ரைகளுக்கும் யாக வேதியின் ப்ரேக்ஷா ஸமிக்ஞைகளுக்கும் தொடர்புண்டு. யாக வேதியியலுக்கும்,  ஆகமத்திற்கும் தொடர்புண்டு.
:--)

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

srirangammohanarangan v

unread,
Aug 29, 2010, 11:09:14 AM8/29/10
to mint...@googlegroups.com
எங்கே ஹரி? எங்கே உரை?
எங்கே மனம் ஆவலாய்த் தேடுதே ஓடிவா.....
:--)))

 
On 8/29/10, devoo <rde...@gmail.com> wrote:

Hari Krishnan

unread,
Aug 30, 2010, 8:52:04 AM8/30/10
to mint...@googlegroups.com


2010/8/29 srirangammohanarangan v <ranga...@gmail.com>

எங்கே ஹரி? எங்கே உரை?
எங்கே மனம் ஆவலாய்த் தேடுதே ஓடிவா.....
:--)))


 

அண்மையில் யாரோ ஒருவர் தேவேந்திர சங்க வகுப்புக்கு உரை வேண்டும் என்று கேட்டு எழுதியிருந்தார்.  எப்போதோ ஒருமுறை மின்தமிழில் நான் அதிலிருந்து ஓரிரு வரிகளை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேன். கூகிள் தேடலில் அகப்பட்டதோ என்னவோ தெரியவில்லை.  ஒரு சிறு குழுவாக இயங்குபவர்கள் போலிருக்கிறது.  அவர்களுக்குள் நடந்த மடல் பரிவர்த்தனைகளோடு அந்த வேண்டுகோள் வந்திருந்தது.  This person might help என்ற குறிப்போடு அவர்களுக்கிடையில் என்னைப் பற்றி ஒரு சிறு ஆய்வே நடந்திருக்கிறது. The power of the Net என்னை இந்த வளையத்துக்குள் இழுத்திருக்கிறது! நான் 18ம் தேதி சென்னைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தேன்.  17ம் தேதி காலையில் இந்த வேண்டுகோள்.  ‘திரும்ப வந்ததும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒரு பக்கம் அந்தக் கணத்தின் அவசரத்திலிருந்த மனம் சொல்கிறது.  இருந்தபோதிலும் எதுவோ ஒன்று, ‘இப்ப உக்காரப் போறியா இல்லியா...எழுதப் போறியா இல்லியா’ என்று வற்புறுத்துகிறது.  உடனடியாக உட்கார்ந்தேன்.  சிக்கலான அந்த வகுப்புக்கு இரண்டு மணி நேரங்களில் உரை எழுதி முடித்ததும், எனக்குள் தோன்றியதை பெருமை என்று சொல்ல முடியாது. என்னவோ ஒரு விவரிக்க இயலாத நிறைவு.   எழுதுவதே இதற்காகத்தானே.  இந்த அனுபவம் எனக்குத் திரும்பத் திரும்பக் கிட்டுமானால் நான் செய்யவா மாட்டேன்?  தேவ்!  டாக் கியர்ல போகாதீங்க.  ஆமை இப்பத்தான் கிளம்பியிருக்கு.  முயல் கொஞ்சநேரம் தூங்கட்டும்.  முயலாமை இல்லாத முயலும் ஆமையும் போட்டி போட இழை தொடரட்டும்.  முருகன் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.
 
தேவேந்திர சங்க வகுப்புக்கு நான் எழுதி அனுப்பிய உரையை இப்போது மீண்டும் வாசித்தேன்.  (அதான் கூகிள் சென்ட் மெயில் பாக்ஸில் இருக்கிறதல்லவா...அதை).  சில தட்டுப் பிழைகளிருக்கின்றன.  அவற்றைத் திருத்தி என்னுடைய பங்கை இடத் தொடங்குகிறேன். அடுத்ததாக தேவ் இடும் பாடல்களுக்கு அவர் இட்ட ஒரு நாளுக்குள் உரை எழுதி அனுப்ப முயல்கிறேன்.  திருவருள் துணைநிற்கட்டும்.
 
(சினிமாப் பாட்டா பாடறீரு ரங்கரே?  நான் எசப்பாட்டு பாடறேன்.....எதையும் தாங்குவேன் அன்புக்காக....நான் உதையும் வாங்குவேன் தம்பிக்காக....தம்பிக்காக...தம்ப்ப்பிக்காகஅஅஅஅ :D)

--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Aug 30, 2010, 9:16:33 AM8/30/10
to மின்தமிழ்
* முருகன் நம்மை ஆசிர்வதிக்கட்டும் *


அறிஞர்கள் இந்த அளவாவது திருக்கண் சாத்துகிறார்களே ! யோக்யதை இருக்கோ
இல்லையோ, பெருமிதம் தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்குமுன் ஈரோட்டில் அச்சுப்
போட்டுக் கொடுத்தோம் . வணிகப்பயணத்தில் எப்போதும் சுற்றிக்
கொண்டிருக்கும் அன்பர்கள் பெருமகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இப்போதும் நெகிழ்ச்சியுடன் அத்திருவருளைச் சிந்திக்கிறேன் -

’நீசனேன் நிறைவொன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே’


தேவ்

On Aug 30, 7:52 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/8/29 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>

ஆராதி

unread,
Aug 30, 2010, 7:28:36 PM8/30/10
to mint...@googlegroups.com
திரு ஹரிகி
தேவந்திர சங்க வகுப்புக்கு நீங்கள் எழுதிய, உங்களுக்கு மனநிறைவளித்த  உரையை இங்கும் பதியலாமே. நாங்களும் புதிதாகத் தெரிந்துகொள்வோம். மனநிறைவும் கொள்வோம்.
அன்புடன்
ஆராதி

2010/8/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Aug 31, 2010, 8:21:33 AM8/31/10
to mint...@googlegroups.com


2010/8/31 ஆராதி <aara...@gmail.com>

திரு ஹரிகி
தேவந்திர சங்க வகுப்புக்கு நீங்கள் எழுதிய, உங்களுக்கு மனநிறைவளித்த  உரையை இங்கும் பதியலாமே. நாங்களும் புதிதாகத் தெரிந்துகொள்வோம். மனநிறைவும் கொள்வோம்.
அன்புடன்
ஆராதி

எழுத்துப் பிழைகளைத் திருத்தியிருக்கிறேன்.  இன்னமும் பிழைகள் தென்பட்டால் சுட்டவும்.  முற்றத் திருத்தியபிறகு அடுத்த அடியைப் பற்றி நினைக்கலாம். 
 
பொருளில் கருத்து மாறுபாடு இருப்பின் வரவேற்கிறேன்.
 

 

தேவேந்திர சங்க வகுப்பு --- மூலம்

 

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு

சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ..... ...... 1

 

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை

தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ..... ...... 2

 

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித

தாமாங்குச மென்றிரு தாளாந்ததர வம்பிகை ..... ...... 3

 

தருபதி சுரரோடு சருவிய வசுரர்க டடமணி முடிபொடி

தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ..... ...... 4

 

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள

நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ..... ...... 5

 

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்

யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ..... ...... 6

 

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல

ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ..... ...... 7

 

 

 

எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்

ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ..... ...... 8

 

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை

காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ..... ...... 9

 

கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத

காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ..... ...... 10

 

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை

காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ..... ...... 11

 

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்

காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ..... ...... 12

 

அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்

வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ..... ...... 13

 

அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்

தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ..... ...... 14

 

 

 

 

அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக

லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ..... ...... 15

 

அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்

ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ..... ...... 16

 

.=========================================================================

 

பதச்சேதமும் பொருளும்:

 

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதி கொடு

சாடு ஓங்கு நெடுங் கிரி  ஓடு ஏந்து பயங்கரி

 

தமருகம் பரிபுரம் ஒலி கொடு நட நவில் சரணிய சதுர் மறை

தாது அம்புய மந்திர வேதாந்த பரம்பரை (1-2)

 

தரணியில் ... இந்த உலகத்திலே

 

அரணிய ... அரண், கோட்டை கொத்தளங்களை அமைத்துக்கொண்டு

 

முரண் ... (தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும்) முரண்பட்டு, எதிரியாக விளங்கிய

 

இரணியன் உடல்தனை ... இரணியனுடைய உடலை

 

நக நுதி கொடு ... நகத்தின் நுனியைக் (நுதி - நுனி), கொண்டு

 

சாடு ... கீறிப் பிளந்து,

 

ஓங்கு நெடும் கிரி ... வளர்ந்து ஓங்கிய மலைபோல விளஙக்கியவனான நரசிம்ம அவதாரத்தை எடுத்தவளான (அம்பிகை)

 

ஓடு ஏந்து ... பிரமனுடைய கபாலமாகிய மண்டையோட்டைக் கையில் ஏந்தியிருப்பவள்

 

பயங்கரி ... கோர ஸ்வரூபி. அடியார் அச்சம் கெட, பகைவர் அச்சமுற கோர வடிவம் எடுத்தவள் என்று கொள்ளலாம்.

 

தமருக பரிபுர ஒலி கொடு ... தமருகம் - உடுக்கை;  பரிபுரம் - பாதச் சிலம்பு ஆகியவை ஒலி எழுப்புமாறு

 

நட நவில் ... சம்ஹார நடனம் செய்கின்ற

 

சரணிய ... சரணங்களை - திருப்பாதங்களை - உடையவள். 

 

சதுர் மறை ... நான்கு வேதங்கள் (நான்கு வேதங்களும் துதிப்பது இவளையே என்று விரித்துக் கொள்ள வேண்டும்.)

 

தாது அம்புய ... தாது - மகரந்தம். அம்புயம் - தாமரை.  மகரந்தப் பொடியோடு கூடிய தாமரையைப் போன்ற பாதத்தை உடையவள். 

 

மந்திர ... மந்திர ஸ்வரூபமானவள்

 

வேதாந்த ... வேதங்களின் அந்தமாக, முடிவாகத் திகழ்பவள்

 

பரம்பரை ... பாரம்பரியத்தின் தொடக்கமானவள். 

(மண்டையோட்டை ஏந்தியிருப்பதும், இரணியன் உடலைப் பிளந்ததும் சிவனும் திருமாலும் அல்லவோ என்று தோன்றலாம்.  சாக்தத்தில் அம்பிகைதான் ஹரி அம்பிகைதான் ஹரன்.  கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி (லலிதா ஸஹஸ்ரநாமம் 32ம் ஸ்லோகம்) என்பது, கர அங்குலி நக உத்பன்ன நாராயண தசாக்ருதி என்று பிரியும்.  கைவிரல் நக நுனியால் நாராயணனுடைய பத்து அவதாரங்களையும் தோற்றுவித்தவள் என்று பொருள்.) அதுபோலவே, பிரம்ம கபாலத்தை ஏந்தியவள் என்பதை அபிராமி பட்டர்

 

சுந்தரி எந்தை துணைவி..... .....ஆரணத்தான் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

 

என்று பாடுகிறார்.  ஆரணத்தான் - பிரமன்.  கம் தரி: கழுத்தைக் (தலையை) கையில் தரித்தவள் என்பது அவர் வாக்கு.  அருணகிரிநாதரே இதே பாடலின் பிற்பகுதியில் காலாந்தரி கந்தரி என்று மீண்டும் சொல்லப் போகிறார். 

 

ஆகவே, ஹரிக்கும் ஹரனுக்கும் உரியவை எல்லாமே அம்பிகைக்கு உரியவை என்பது சாக்த மரபு.  அருணகிரிநாதர் முக்கால் சாக்தர் என்பது என் கட்சி. :)

 

 

அடிகள் 3-4 பதச்சேதமும் பொருளும்

 

சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித

தாம அங்குச மென் திரு தாள் அந்தர அம்பிகை

 

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி

தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி

 

சரிவளை ... முன் கையில் வந்து சரிந்து விழுவதாகிய அடுக்கடுக்கான வளையல்களைப் பூண்டவள்.

 

விரி சடை ... விரித்த சடையுடன் (பரமசிவனை ஒப்பக்) காட்சியளிப்பவள்.

 

எரி புரை வடிவினள் ... திரி) புரங்களை எரித்தவள் (சிவ வடிவம் தாங்கியவள்.  அவன் திரிபுரன், இவள் திரிபுரை, திரிபுராந்தகி)

 

சத தள முகுளித ... நூறு இதழ்களைக் கொண்ட தாமரைகளால் தொடுக்கப்பட்ட,

 

தாம ... மாலையை (அணிந்திருக்கும்) (தாமம்: சங்கிலி, மாலை)

 

குச ... மார்பகத்தைக் கொண்டவள். 

 

மென் திரு தாளாந்திர அம்பிகை ... தாளாந்திர: தாள்களை உடைய.  மென்மையானதும் அழகுடையதுமான பாதங்களைக் கொண்டவள். ,

 

தரு பதி சுரரொடு ... தரு பதி: தரு என்றால் மரம்.  கற்பக விருட்சம்.  தருபதி கற்பக விருட்சத்தை உடைய நாட்டுக்கு அரசனான இந்திரன் என்பது பொதுள்.  அப்படிப்பட்ட இந்திரனுடனும், சுரருடனும் (தேவருடனும்)

 

சருவிய ... போர்தொடுத்த

 

அசுரர்கள் ... அசுரர்களுடைய

 

தட மணி முடி பொடிதான் ஆம்படி ... பெரிய மாணிக்க, வைர மணிகளைப் பதித்த கிரீடங்கள் பொடியாகப் போகும்படியாக

 

செங் கையில் வாள் வாங்கிய சங்கரி.  தன்னுடைய சிவந்த கையில் வாளை எடுத்தவளான சங்கரி. 

 

அடிகள் 5-6 பதச்சேதமும் பொருளும்

 

இரண கிரண மடமயில் ம்ருகமதம் புளகித இளமுலை இள-

நீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்

 

இறுகிய சிறுபிறை எயிறு உடை எமபடர் எனது உயிர் கொள வரின்,

யான் ஏங்குதல் கண்டுஎதிர் தான்ஏன்றுகொளும் குயில்

 

 

இரண ... ஹிரண்ய வர்ணம் கொண்டவரள்.  பொன்னிறமானவள்.  (சிவந்த நிறமுள்ளவள் என்பது பொருள்.  மாதுளம் போது, மலர்க்கமலை என்று பட்டரும், ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா என்று லலிதா ஸஹஸ்ரநாமமும் வருணிக்கின்றன)  சிவந்த நிறம்; பொன்னிறம் இரண்டும் ஒருபொருள் சுட்டுவன.  நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஎன்று அருணகிரி பாடுகிறார் (ஆறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக மென்று பூதி....என்னும் திருப்புகழ்)  நீறுபடு மாழை என்றால் உருக்கிய தங்கம் என்று பொருள்.  உருக்கிய தங்கத்தைப்போன்ற நிறத்தவன் முருகன்; நிறத்தவள் அம்பிகை. 

 

கிரண ... (அப்படிப்பட்டதான பொன்னுடைய) ஒளி (வீசுவதாகிய)

 

மட மயில் ...  மடம் நிறைந்த (அழகு பொலியும் என்று இங்கே பொருள்படும்.  மடமான் என்பதுபோல. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பில் வரும் மடம் வேறு.) மயிலைப் போன்றவள். 

 

ம்ருக மத ... ம்ருகம் (மிருகம்) என்றால் மான்.  ம்ருகமதம் என்பதனால் இது கஸ்தூரி மான்.  கஸ்தூரியைப் பூசிக்கொண்டதும்; .  

 

புளகித ... புளகாங்கிதம் (புளகம் அங்கிதம் என்றால் மயிர்க்கூச்சம் அடைதல் என்று பொருள்.  அளவற்ற மகிழ்ச்சியினாலே உண்டாகின்ற காரணத்தான் இது புளகிதமானது) உடையதுமான

 

இளமுலை இளநீர் ... இளநீரைப் போன்ற இளமையான மார்பகங்களை உடையவள்.  (கஸ்தூரி பூசப்பட்டதும், மகிழ்சசியால் விம்மிதம் அடைவதுமான மார்பகங்கள்),

 

 

 

தாங்கி - அப்படிப்பட்ட மார்பகங்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தால்

 

நுடங்கிய ... ஒசிந்து, வளைந்து, ஒடிந்துவிடுமோ என்பது போல் தோற்றம் தருவதாகிய, (நுடங்குதல் - ஒல்குதல், ஒசிதல் அசைதல், தள்ளாடுதல்)

 

நூல் போன்ற மருங்கினள் ... நூல் அளவே கனம் கொண்டதாகிய இடையைக் கொண்டவள்.  ,

 

இறுகிய சிறு பிறை ... கெட்டியானதும் (திண்மையானதும்) பிறைச் சந்திரனைப்போல (வளைந்திருப்பதுமான)

 

எயிறு உடை ... எயிறு: பல்.  பற்களை உடைய

 

எமபடர் ... எமனுடைய தூதுவர்கள்

 

எனதுயிர் கொளவரின் ... என்னுடைய உயிரைப் பறித்துக்கொண்டு போவதற்காக (என்னை நோக்கி) வந்தால்,

 

நான் ஏங்குதல் கண்டு ... எனக்கு அப்போது (உள்ளத்தில் உண்டாகக்கூடிய) பெரும் துன்பத்தைக் கண்டு

 

எதிர் ... என்னை எதிரந்து வந்து, எனக்கெதிரில் தோன்றி

 

 

(ஓலையுந் தூதருமங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக்

காலையு மாலையு முன்னிற்குமே கந்தவேள் மருங்கிற்

சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை

மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.

 

என்ற கநதரலங்காரப் பாடலை ஒப்பிடலாம்)

 

தானேன்று கொளும் குயில் ... தான் என்றுநானிருக்கிறேன் (அஞ்சாதே) என்று கொள்பவளான குயில். (அல்லது) ஏன்றுகொளும்: ஏற்றுக்கொள்ளும் என்றும் கொள்ள முடியும்.

 

அடிகள் 7-8 பதச்சேதமும் பொருளும்

 

இடு பலி கொடு திரி இரவலர் இடர் கெட விடும் மன கர தல

ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை

 

எழுதிய படமென இருள்அறு சுடர்அடி இணை தொழும் மவுனிகள்

ஏகாந்த சுகந்தரு பாச அங்குச சுந்தரி

 

.இடுபலி ... பிச்சையாக இடுபவனவற்றை

 

கொடு திரி ... வாங்கிக் கொண்டு திரிகின்ற

 

இரவலர் ... பிச்சைக்காரர்கள், ஏழைகள்

 

இடர் கெட ... துன்பமெல்லாம் அற்றுப் போகுமளவுக்கு

 

இடு மன ... (அவர்களுக்கு) இடுகின்ற மனத்தையும்

 

கரதல ... கைத் தலத்தையும் (கோண்டவளும்)

 

ஏகாம்பரை ... ஏகாம்பர நாதனின் மனைவி.  ஏகாம்பரன் காஞ்சியிலிருப்பவன்.  ஆகவே ஏகாம்பரை: காமாட்சி

 

இந்திரை ... லக்ஷ்மி.  (இந்த்ரனுக்கும் இந்திராவுக்கும் தமிழில் வித்தியாசமில்லாமல் எழுதுகிறோம்.  Indra தேவந்த்ரன்--தேவேந்திரன்.  Indira - லக்ஷ்மி.)

 

மோகாங்க சுமங்கலை ... மோகத்தை ஊட்டக்கூடிய அங்க அழகுகள் பொருந்தி சுமங்கலி.  மங்களம் நிறைந்தவள்.   

 

எழுதிய படமென ... மனத்தை அடக்கி, எழுதி வைத்த சித்திரம்போல, மனமும் உடலும் ஒரே வண்ணமாக நிலைத்திருக்கும்படி

 

இருளறு சுடரடி இணை தொழும் மவுனிகள்... அகத்தில் நிறைந்து கிடக்கின்ற இருளை அறுப்பதான சுடர்விடும் திருவடிகளை தியானித்து, எப்போதும் மௌனத்தில் திளைப்பவர்களான ஞானிகளுக்கு,

 

ஏகாந்த சுகம் தரு ... ஏகம் அந்தம் சுகம்.  இருமை கெட்டு ஏகமான ஒருமையிலே முடிவதான சுகத்தைத் தருகின்ற (அத்வைதானுபவத்தை நல்குகின்ற)

 

பாச அங்குச சுந்தரி ... பாசத்தையும் அங்குசத்தையும் வைத்திருப்பவள்.  மனம் என்ற யானையைக் கட்ட பாசம்.  பாசம் என்பது கயிறு.  அங்குசம், அந்த யானையை அடக்குவதற்கானது.  யானையைக் கட்டுவதற்கும் அடக்குவதற்குமான கருவிகளைக் கொண்டிருப்பவள். 

 

அடிகள் 9- 10 பதச்சேதமும் பொருளும்

 

கரணமும் மரணமும் மலமொடு உடல்படு கடுவினை கெட நினை

கால அந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சு உமிழ்

 

கனல் எரி கண பண குணமணி அணி பணி கன வளை மரகத

காசாம்பர கஞ்சுளி தூசு ஆம் படி கொண்டவள்

 

கரணமும் ... கரணங்கள் - பொறி,  புலன் என்று பொருள்.  (பொறிவாயில் ஐந்தவித்தான்....) ஐந்து பொறிகளின் காரணமாகவும்  (மனோரூபேக்ஷு கோதண்ட பஞ்ச தன்மாத்ர ஸாயகா--லலிதா ஸஹஸ்ரநாமம்.  மனம் என்பது கரும்பு வில்லாகவும், ஐம்புலன்களே அம்புகளாகவும் கொண்டவள்.  தன்மாத்ரை என்பதுதான் கரணம், பொறி, புலன்.),

 

மரணமும் ... மரண பயத்தின் காரணமாகவும்

 

மலமொடும் ... ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மூன்று மலங்களால் ஏற்படும் அவதிகளின் காரணமாகவும்,

 

உடல் படு கடு வினை ... உடலைச் சுமந்து திரியும் ஒவ்வொரு ஜீவனும் டுகின்ற கடுமையான வினை என்னும் துன்பமானது

 

கெட ... அடியார்களிடம் இல்லாமல் கெட்டுப்போகும் வண்ணம்,

 

நினை ... நினைத்து, அந்த நினைப்பாலேயே அடியாரை விடுவித்து அருளும்

 

காலாந்தரி ... கால அந்தரி.  இறந்த, நிகழ், எதிர்காலங்கள் மூன்றையும் கடந்து, அதையும் தாண்டிய நிலையில் நிற்பவள்.  (காலத்தால அளவிட முடியாதவள்)  காலசம்ஹாரிணி என்றாலும் பொருந்தும். 

 

கந்தரி ... பிரம்ம கபாலத்தை ஏந்தியவள் (அடியாருடைய இதயக் குகையில் இருப்பவள் என்றும் பொருள் சொல்வதுண்டு.  அது பொருத்தமாகப்படவில்லை.) 

 

நீலாஞ்சனி ... நீல அஞ்சனி.  மை போன்ற நீல (அடர் கருமை) நிறங்கொண்டவள்,

 

நஞ்சு உமிழ், கனல்எரி, கணபண, குணமணி: தீயைக் கக்குவது போன்ற விஷத்தை உமிழ்வதான கணபண (பண-பாம்பு, நாகம்) கூட்டமான நாகங்களுடைய

 

 

 

குணமணி - நல்ல, தோஷமில்லாத மணிக்கல்லை (பற்பல நாகங்களுடைய தலையில் விளங்குவதான நாகமணியை)

 

அணி ... தலையிலே கொண்டிருப்பதான, அணிந்திருப்பதான (கிரீடத்தால் பொலிபவள்)

 

பணி கன வளை ... (பணி: நாகம்) நாகத்தையே கனத்த வளையாக அணிந்திருப்பவள்.

 

மரகத ... பச்சை வண்ணத்தவள்

 

காசு அம்பர காயாம்பூ நிறமுள்ள உடையையும் (சேலையையும்)

 

கஞ்சுளி ... சட்டையையும்,

 

தூசாம்படி கொண்டவள் ... தூசு - ஆடை.  தன்னுடைய ஆடையாகக் கொண்டவள். 

 

அடிகள் 11-12 பதச்சேதமும் பொருளும்.

 

கனை கழல் நினையலர் உயிர்அவி பயிரவி கவுரி கமலை; குழை-

காதார்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெரும் திரு

 

கரை பொழி திருமுக கருணையில் உலகு எழு கடல் நிலை பெற வளர்

காஏந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்

 

கனை கழல் ... ஒலிக்கின்ற சதங்கைகளை அணிந்த இரண்டு பாதங்களையும்

 

நினையலர் ... யாரெல்லாம் நினைவில் நிறுத்தவில்லையோ (இறையை உணரவில்லையோ)

 

உயிர் அவி ... அவர்களுடைய உயிரை எல்லாம் போக்குகின்ற,

 

பயிரவி ... பைரவி (ஆவாள் இவள்)

 

கவுரி... கௌரி

 

கமலை ... கமலாம்பாள்

 

குழை காது ஆர்ந்த செழுங்கழுநீர் தோய்ந்த ... காதுகளிலே குழையாக, நீலோற்பல மலரைத் தரித்திருப்பவள்

 

பெருந்திரு ... மஹாலக்ஷ்மி, பார்வதி.

 

கரை பொழி ... உள்ளம் கரைந்து கனிவதனால் பொழிவதான

 

திரு முக கருணையில் ... கருணா கடாட்சம் நிறைந்த திருமுகம் உடையவள்.  அப்படிப் பொழியும் கருணையினால்,

 

உலகு, ஏழு கடல் நிலைபெற ... உலகம் ஏழு, கடல் ஏழு.  உலகமும் கடலும் நிலைபெற்று நிற்குமாறு

 

வளர் ... வளர்த்துப், பரிபாலனம் செய்கின்ற

 

கா ஏந்திய ... காக்கும் தொழிலை மேற்கொண்ட (என்றாலும் பொருந்தும்.  காட்டில் திரிவதான என்றாலும் பொருந்தும்.  காட்டில் திரியும் என்று பொருள் கொண்டால், பைங்கிளி என்ற அடுத்த சீரோடு கூட்ட வேண்டும்.)

 

பைங்கிளி ... பசுமையான கிளி போன்றவள்,

 

மாசாம்பவி ... மஹா சாம்பவி. உமா, லலிதா. 

 

தந்தவன் ... (இப்படிப்பட்ட உமையானவள்) தந்து அருளியவனான

 

அடிகள் 13-14 பதச்சேதமும் பொருளும்

 

அரண் நெடு வட வரை அடியொடு பொடி பட அலை கடல் கெட அயில்

வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்

 

அறுமுகன் ஒருபதோடு இரு புயன் அபினவன் அழகிய குறமகள்

தார் வேய்ந்த புயன் பகை ஆம் மாந்தர்கள் அந்தகன்

 

அரண் நெடு வடவரை... உலகத்துக்கெல்லாம் மதில் என்னுமாறு உயர்ந்து நிற்பதாகிய வடவரை.  மேரு மலை. 

 

அடியொடு பொடி பட ... தூள் தூளாக அடியோடு பொடிபடும்படியாகவும்;

 

அலைகடல் கெட ... கடல் வற்றிப் போகும்படியாகவும்

 

அயில் வேல் வாங்கிய ... கூர்மையான வேலைச் செலுத்தியவனும்;

 

செந்தமிழ் நூலோன் ... தமிழில் எழுதப்பட்டுள்ள அத்தனை நூல்களுக்கும் உரியவன்,  (திருஞான சம்பந்தர், முருகனுடைய அவதாரமாகக் கருதப்படுபவர். அருணகிரி நாதரும் மாள அன்று அமண் கழுஏற, வாதில வென்ற சிகாமணி மயில்வீரா என்று பாடுகிறார். (வேழம் உண்ட விளாகனி அதுபோல....திருப்புகழ்). ஆகவே, செந்தமிழ் நூலோனாகிய திருஞான சம்பந்தராக அவதரித்தவனும் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு.) 

 

குமரன், குகன், அறுமுகன் ... குமரன், குகன், (ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் அதோமுகம் எனப்படுவதான ஆறாவது முகத்தையும் கொண்ட) ஆறுமுகன்

 

ஒருபதொடு இருபுயன் ... ஒரு பத்தோடு இரண்டு புயன்.  பன்னிரண்டு புயங்களைக் கொண்டவன்.  

 

அபிநவன் ... எப்போதும் புதியவனாகவே இருப்பவன்.  ,

 

அழகிய குற மகள் தார் வேய்ந்த புயன் ... அழகிய குறத்தியான வள்ளி சூட்டிய மணமாலைகளால் பொலியும் தோள்களை உடையவன்.

 

பகையா மாந்தர்கள் அந்தகன் ... பகையாகும் மாந்தர்களுக்கு அந்தகன்.  எதிரிகளுக்கு எமன். 

 

அடிகள் 15-16 பதச்சேதமும் பொருளும்

 

அடல் மிகு கட தட விகடித மத களிறு அனவரதமும் அகலா

ஆமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்

 

அதிபதி என வரு பொரு திறல் முருகனை அருள் பட மொழிபவர்

ஆராய்ந்து வணங்குவர் தேவேந்தர சங்கமே

 

அடல் மிகு ... வலிமை மிகுந்தவரும்

 

கட தட ... கன்னங்களிலே மதநீர் பெருகும்படியான (கன்னமதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்டவரும்)

 

விகடித ... விகடம் புரிகின்றவரும் (விகடாய: நம:),

 

மத களிறு ... மஹா கணபதியை,

 

அனவரதமும் அகலா மாந்தர்கள் .. எப்போதும் அகத்தில் நிறுத்தி தியானிக்கும் மாந்தர்களுடைய

 

சிந்தையில் வாழ்வாம் படி ... மனத்துக்குள் தானும் உடன் வீற்றிருந்து, வாழ்வு தரும்படியாக,

 

செந்திலில் அதிபதி என வரும் ... திருச்செந்திலின் அதிபன் எனத் தகும்படி வருகின்ற

 

பொரு திறல் முருகனை ... போர் வல்வனாகிய முருகனுடைய

 

 

அருள் பட மொழிபவர் ... அருள் கிடைக்கும்படியாகத் துதிப்பவர்கள்

 

ஆராய்ந்து வணங்குவர் ... தேர்ந்து வணங்குபவர்கள் (யார் என்றால்)

 

தேவேந்திர சங்கமே ... தேவேந்திரனும், அவனுடைய பரிவாரங்களும் ஆவார்கள்.

 

மிக உயர்நத நிலையிலுள்ள தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரனே தன் தேவகணங்களோடு வந்து யாரை வணங்குவது என்று ஆராய்ந்து வணங்குவதுயாரை என்றால்,  செந்தில் முருகனை!

 

 

 

முருகன் அருள் என்றும் துணை நிற்கும்!

Hari Krishnan

unread,
Aug 31, 2010, 8:26:54 AM8/31/10
to mint...@googlegroups.com


2010/8/31 Hari Krishnan <hari.har...@gmail.com>



2010/8/31 ஆராதி <aara...@gmail.com>

திரு ஹரிகி
 
தப்பு பண்ணிட்டேன்.  வேர்டிலிருந்து ஒத்தி ஒட்டிட்டேன்.  ட்ரங்க்கேட் ஆகிவிட்டது.  இப்ப முழு வடிவம்.

devoo

unread,
Aug 31, 2010, 12:19:29 PM8/31/10
to மின்தமிழ்
...............................................................................................
*சாடோ*ங்குநெ டுங்கிரி *யோடே*ந்துப யங்கரி

...............................................................................................
*தாதா*ம்புய மந்திர *வேதா*ந்தப ரம்பரை

..................................................................................................
*தாமா*ங்குச மென்றிரு *தாளா*ந்ததர வம்பிகை

....................................................................................................
*தானா*ம்படி செங்கையில் *வாள்வா*ங்கிய சங்கரி

ஒரு கண்ணியின் ஒவ்வொரு இரண்டாம் அடியிலும் முதல், மூன்றாம் சீர்களில்
மாத்திரை கூடுமாறு செய்திருக்கும் புதிய சந்த அமைப்பை இங்கு
காண்கிறோம்.

ஆங்காங்கு லலிதா ஸஹஸ்ரநாமத்தோடு பொருத்திக்காட்டியிருப்பது நன்றாக
உள்ளது. 16 கண்ணிகளில் 12 கண்ணிகள் அம்பிகைக்கு, 15ம் கண்ணி கணபதிக்கு
என்றாகின்றன.

இதுபோல் சரியான வழிகாட்டல் வேண்டும் ;
இல்லையெனில், ’பகையா மாந்தர்கள்’ - ஈறுகெட்ட எதிர்மறை என்று
கூருகெட்டாற்போல நினைத்துக் குழம்ப நேரும்.

ஹரிகி அவர்களுக்கு நன்றி

தேவ்


On Aug 31, 7:26 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/8/31 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
> > 2010/8/31 ஆராதி <aaraa...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 31, 2010, 12:38:23 PM8/31/10
to mint...@googlegroups.com
நன்றி ஹரிகி.
 
படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பாட பேத ஐயம்.
 
காலாந்தரி கந்தரி -- இதற்குப் பாடபேதம் உண்டா?
 
இருந்தால் என்னென்ன பாட பேதங்கள் என்று பார்க்க வேண்டும்.
 
பார்த்தீர்களா? எவ்வளவு நாளைக்கு முன்னிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
 
எப்படி ஜிலு ஜிலுன்னு போறது பாருங்க!
:--))

 
--

devoo

unread,
Sep 3, 2010, 4:20:00 AM9/3/10
to மின்தமிழ்
பூஜா ஸங்கல்பம்
(அவனருளால் அவன் தாள்தொழ வேண்டுதல்)


கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண நகமேவு

கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் மருளாதே,

உம்பர்கள் ஸ்வாமி நமோநம!
எம்பெரு மானே நமோநம!
ஒண்டொடி மோகா நமோநம எனநாளும்

உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே!

பம்பர மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி

பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ டெதிர்போர்கண்(டு)

எம்புதல்வா வாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானே! மனோகர வயலூரா!

இன்சொல் விசாகா!க்ருபாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் பெருமாளே!

(தொடரும்)

Hari Krishnan

unread,
Sep 3, 2010, 6:04:22 AM9/3/10
to mint...@googlegroups.com


2010/9/3 devoo <rde...@gmail.com>

கொம்பனை யார்காது மோதிரு
      கண்களி லாமோத சீதள
      குங்கும பாடீர பூஷண        நகமேவு

Dev,

Now I am not able to write Tamil.  Bear with me for a couple of days more.  If NHM does not work with Kaspersky, let me look for some other temporary solutions.  But I am confident that there must be a way out of this deadlock, and that we can break through the difficulty, do something to bypass Kaspersky checking NHM.

devoo

unread,
Sep 3, 2010, 1:29:59 PM9/3/10
to மின்தமிழ்
*உம்பர்கள் ஸ்வாமி நமோநம!*

உம்பர்கள் ஸ்வாமீ நமோநம!

karuannam annam

unread,
Sep 3, 2010, 2:35:46 PM9/3/10
to mint...@googlegroups.com
திருப்புகழ் வழி முருக வழிபாடு.
பெருமைக்குரிய திரு தேவ்
எங்க சம்பந்தியார் திருவொற்றியூரில் திருப்புகழ் ஓதுதல் குழு ஆரம்பித்துள்ளார்கள். முன்பு திருவாசகம் முRROதுதலும்   செய்துவந்த குழு தற்போது 80 திருபுகழ் பாடல்கள் மெட்டமைத்துப் பாடி வருகிறார்கள். குழுவில் கிட்டத்தட்ட இருபது பேர்கள் உள்ளார்கள். அழைப்பவர்கள் வீடுகளில் ஓதுகிறார்கள். இதுவரை அழைத்தவர்கள் மிக நன்மையாக இருப்பதாகச  சொல்கிறார்கள்.
தாங்கள் தொகுத்து வழங்கும் பயனுள்ள பாடல்களையும் அறிஞர்களதுவிளக்கங்களையும் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன். மிகுந்த பயன் பயக்கும் என்று விழைகிறேன்.
அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்

devoo

unread,
Sep 4, 2010, 2:17:42 AM9/4/10
to மின்தமிழ்
திரு. வினைதீர்த்தான் அவர்களுக்கு நன்றி

சென்ற மாதம் ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்ற ஒரு ‘திருவாசகம்
முற்றோதல்’ நிகழ்ச்சிக்குச் சென்று வந்தேன். காணொளி அனுப்புவதாகச்
சொன்னார்கள்.

இந்த இழை உங்கள் கண்ணில் பட்டது நிறைவைத் தெரிகிறது. திருப்புகழின்
சந்த அமைப்பும், கருத்தாழமும் மன நெகிழ்வைத் தருகின்றன. பல
வார்த்தைகளுக்குப் பொருள் தெரியவில்லை என்பதும் உண்மை. திரு. ஹரி
கிருஷ்ணன் அவர்கள் பொருள் கூற முன் வந்திருப்பது மிகுந்த ஊக்கத்தைத்
தருகிறது. ஒவ்வொரு பாடலாகப் பதிவிடும் எண்ணம். தொடர்ந்து உங்கள்
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்


தேவ்

On Sep 3, 1:35 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> திருப்புகழ் வழி முருக வழிபாடு.
> பெருமைக்குரிய திரு தேவ்
> எங்க சம்பந்தியார் திருவொற்றியூரில் திருப்புகழ் ஓதுதல் குழு
> ஆரம்பித்துள்ளார்கள். முன்பு திருவாசகம் முRROதுதலும்   செய்துவந்த குழு
> தற்போது 80 திருபுகழ் பாடல்கள் மெட்டமைத்துப் பாடி வருகிறார்கள். குழுவில்
> கிட்டத்தட்ட இருபது பேர்கள் உள்ளார்கள். அழைப்பவர்கள் வீடுகளில் ஓதுகிறார்கள்.
> இதுவரை அழைத்தவர்கள் மிக நன்மையாக இருப்பதாகச  சொல்கிறார்கள்.
> தாங்கள் தொகுத்து வழங்கும் பயனுள்ள பாடல்களையும்
> அறிஞர்களதுவிளக்கங்களையும் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

> மிகுந்த பயன் பயக்கும் என்று விழைகிறேன் <விளைகிறேன்@gmail.com>.

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Sep 5, 2010, 1:03:51 PM9/5/10
to மின்தமிழ்

On Sep 3, 3:20 am, devoo <rde...@gmail.com> wrote:

>           பூஜா ஸங்கல்பம்
> (அவனருளால் அவன் தாள்தொழ  வேண்டுதல்)
>
> கொம்பனை யார்காது மோதிரு
>        கண்களி லாமோத சீதள
>        குங்கும பாடீர பூஷண        நகமேவு
>

’பாடீர பூடண’ - ஒலிச்சிறப்புடையது.

> கொங்கையி னீராவி மேல்வளர்
>         செங்கழு நீர்மாலை சூடிய
>         கொண்டையி லாதார சோபையில் மருளாதே,
>
> உம்பர்கள்ஸ்வாமி நமோநம!
>        எம்பெரு மானே நமோநம!
>        ஒண்டொடி மோகா நமோநம    எனநாளும்
>

உம்பர்கள் சாமீ நமோநம!

‘சாமீ’ - மானே! மோகா! என்பதொடும் இயைகிறது.

நா. கணேசன்

> > தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -

karuannam annam

unread,
Sep 5, 2010, 2:42:28 PM9/5/10
to mint...@googlegroups.com


2010/9/4 devoo <rde...@gmail.com>
திரு.  வினைதீர்த்தான் அவர்களுக்கு நன்றி

சென்ற மாதம் ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்ற ஒரு ‘திருவாசகம்
முற்றோதல்’ நிகழ்ச்சிக்குச் சென்று வந்தேன். காணொளி அனுப்புவதாகச்
சொன்னார்கள்.

இந்த இழை உங்கள் கண்ணில்  பட்டது  நிறைவைத் தெரிகிறது. திருப்புகழின்
சந்த அமைப்பும், கருத்தாழமும் மன நெகிழ்வைத் தருகின்றன. பல
வார்த்தைகளுக்குப் பொருள் தெரியவில்லை என்பதும் உண்மை.

ஆம் ஐயா
சைவப் பனுவலுக்குப் பொருள் தில்லையுள் கூத்தன் என்று கூறியது போல திருபபுகழுக்குப் பொருள்திருமுருகன் என்றுஅடியவர் பலருடன் கூட்டு வழிபாடாகப் பாடும்போது உளம் நெகிழ்கிறது. நான் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்றேன் 
தங்கள் இழையையும் ஹரிகி ஐயா விளக்க உரையையும் எதிர் நோக்கியுள்ளோம்.
அன்புடன்

Hari Krishnan

unread,
Sep 5, 2010, 10:23:53 PM9/5/10
to mint...@googlegroups.com


2010/9/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

Dev,

Now I am not able to write Tamil.  Bear with me for a couple of days more.  If NHM does not work with Kaspersky, let me look for some other temporary solutions.  But I am confident that there must be a way out of this deadlock, and that we can break through the difficulty, do something to bypass Kaspersky checking NHM.

தேவ்,

தமிழ் திரும்பிவிடடது.  திருப்புகழ்ப் பொன்னை உரைத்துப் பார்க்கலாமா?  இன்று முதல் தொடக்கம்.  முதலில் நீங்கள் இட்டிருக்கும் பாடல்களை முடிக்கிறேன்.

அடுத்ததாக, சந்தத்துடன் படித்து, ஒலிப்பதிவாகவும் அனுப்புகிறேன்.  வண்ண விருத்தங்களையோ இல்லை, மிகச் சாதாரணமான ஆசிரிய விருத்தங்களையோ இந்தத் தலைமுறை படித்துக் கேட்டிராது.  ‘வாய்விட்டுப் படிச்சா கவிதையின் புனிதமே போய்விடும்’ என்று வேற ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.  (என்னிடம் ஒருவர் இப்படிச் சொன்னபோது, ‘வாய்விட்டுப் படிப்பதுதான் கவிதையின் முதல் நோக்கமே.  மனுஷனிடமிருந்து வெளியேறுவதில் அபானவாயு ஒன்றைத் தவிர மற்ற எல்லா சத்தத்தையும் அடுத்தவங்க கேட்டா ஒரு தப்பும் இல்லை.  கவிதை என்பது படுக்கயறையோ, டாய்லெட் போற சமாசாரமோ இல்ல.  அதனால, வாய்விட்டு தாராளமா படிக்கலாம்’ என்று சொன்னேன்.:)) )

கவிஞர் வைத்தீஸ்வரனுடைய கவிதைகளை விருட்சம் விமரிசனக்கூட்டம் நடத்திய சமயத்தில் அங்கே இருந்தேன்.  (அந்தச் சமயத்தில் ராயர் காபி கிளப்பில் நான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதிய விமரிசனத்துக்கு வைத்தீஸ்வரன் ‘உங்களைக் கோபப்படுத்தினால், உங்களிடமிருந்து பிரவாகமாகக் கொட்டுகிறது’ என்பதுபோல் ரசித்து எழுதியிருந்தார்.)  இங்கே எதற்கு இதைச் சொல்கின்றேன் என்றால், அப்போது ஒரு புதுக்கவிதை வாசிப்பரங்கம் நடைபெற்றது.  சந்தமில்லாத புதுக்கவிதையேதான் என்றாலும் எப்படிப் படிப்பது என்று தெரியாமல், என்ன படிக்கிறோம் என்பது அடுத்தவருக்குப் புரியாமல் கவிஞர் பெருமக்கள் தடுமாறியபோது, ‘இதுவும் போயாச்சா... ஏதானும் ஒருசமயத்திலாவது கவிதையை வாசிக்கக் கேட்டிருந்தால் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா’ என்று தோன்றியது.  

ஆகவே, சந்தக் கவிதைகளை வாசிக்கும் முறைக்கு ஓர் அறிமுகமாக இந்த ஒலிப்பதிவைச் செய்கிறேன்.  கையில் உங்களுடைய டெக்ஸ்ட் வடிவத்தை வைத்துக்கொண்டு குரல் வழியாகக் கேட்டால் பிடிபடும்.  அப்புறம் இஷ்டமிருந்தா, தானும் கூடவே படிச்சுக்கலாம்.  

தொடங்கலாமா?

devoo

unread,
Sep 6, 2010, 2:56:37 AM9/6/10
to மின்தமிழ்
ஆர்வம் காட்டும் அனைவருக்கும் நன்றி

தேவ்

devoo

unread,
Sep 6, 2010, 3:01:48 AM9/6/10
to மின்தமிழ்
த்யாநம்
(முருகனுடைய வடிவழகையும் குணங்களையும் உள்ளத்தில்
இருத்துதல்)
(விராலி மலை)


சீரான கோல கால நவமணி
மாலாபி டேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும் ;

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரில்
ஊடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர! குருநாதா !

கூராழி யால்முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே !

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே !


-----------------------------------------------------------------------------------------------------------------

( திருக்குற்றாலம்)


வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது கதியாளர்

வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம்

வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது மதமூறு

மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி யருள்வாயே !

காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு கதிகாணார்

காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட அடுவோனே !

கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு முருகோனே !

கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய பெருமாளே !!

N. Kannan

unread,
Sep 6, 2010, 6:36:51 AM9/6/10
to mint...@googlegroups.com
2010/9/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

> ஆகவே, சந்தக் கவிதைகளை வாசிக்கும் முறைக்கு ஓர் அறிமுகமாக இந்த ஒலிப்பதிவைச் செய்கிறேன்.  கையில் உங்களுடைய டெக்ஸ்ட் வடிவத்தை வைத்துக்கொண்டு குரல் வழியாகக் கேட்டால் பிடிபடும்.  அப்புறம் இஷ்டமிருந்தா, தானும் கூடவே படிச்சுக்கலாம்.
> தொடங்கலாமா?
>


ஹரிஜீ! இது அவசியம் செய்ய வேண்டிய ஒன்று. சில வருடங்களுக்கு முன் என்
அக்கா ஒரு இசைப்பேழை மதுரையில் வெளியிட்ட போது, அவ்விழாவில் ஒரு
பேச்சாளர் சந்தத்திலேயே கவிதை செய்து அதை அழகாக உரக்கச் சொன்னபோது,
‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று ஏன் கவிஞர்கள் சொல்கிறார்கள் என்று
புரிந்தது. சந்தக்கவிஞர்கள் நம்மிடையே இன்னும் நடமாடுவது கண்டும்
மகிழ்வாக இருந்தது.

தாங்கள் இக்கவிதைகளையெல்லாம் எப்படி வாசித்து அனுபவிக்க வேண்டுமென
இத்தலைமுறைக்குச் சொல்வது அரும்பணி.

க.>

Kamala Devi

unread,
Sep 6, 2010, 7:27:36 AM9/6/10
to mint...@googlegroups.com
ஹரி,
உடனே தொடங்குங்கள். தொடங்கிவிடுங்கள் .
வாய் விட்டுத்தானே படிக்கவேண்டும்.சத்யமாயிட்டும் ரசித்துப்படிக்கிறேன்.
சேச்சி
 
http://www.kamalagaanam.blogspot.com



2010/9/3 Hari Krishnan <hari.har...@gmail.com>
Dev,
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Sep 7, 2010, 10:10:39 AM9/7/10
to mint...@googlegroups.com


2010/9/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

ஹரி,
உடனே தொடங்குங்கள். தொடங்கிவிடுங்கள் .
வாய் விட்டுத்தானே படிக்கவேண்டும்.சத்யமாயிட்டும் ரசித்துப்படிக்கிறேன்.
சேச்சி
 
 
Thanks all for your encouraging words.  Thanks Chechi.  I am attaching the first voice recording, Devendra Sanga Vaguppu.  Murugan sOdhikkiraan.  My system has an SMPS problem.  I am working with a borrowed laptop.  And therefore, I have no option but to write in English.  ippadi ellaam viLayaattu kaatinaaldhaan nalla sagunam.  :))
 
kELungaL.  sollungaL. 
 
endrum vallakkOttai murugan thuNai nirkkiraan. 
--
Devendra_Sanga_Vaguppu.mp3

meena muthu

unread,
Sep 7, 2010, 10:25:58 AM9/7/10
to mint...@googlegroups.com
யப்பா..! மூச்சு முட்டுது! எப்படி இப்படி!
ஓ.. வல்லக்கோட்டை முருகனல்லவா..!

அருமை.. மறுபடி மறுபடி கேட்கத்தூண்டுகிறது!

2010/9/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Sep 7, 2010, 12:02:44 PM9/7/10
to mint...@googlegroups.com
அருமை! தமிழ்ப் பாடலை விட்டு ஒலிப்பண்பை நீக்க முடியாது.
ஹரிகி சார் முழுக்கப் பண்ணிடுங்கோ.
:--))

 
--

Kamala Devi

unread,
Sep 7, 2010, 1:51:07 PM9/7/10
to mint...@googlegroups.com
ஹரி
அருமை, மிகவும் அருமை. இன்னொருமுறை கேட்கப்போகிறேன்


From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 7 September 2010 22:10:39
Subject: Re: [MinTamil] Re: திருப்புகழ்வழி முருக வழிபாடு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage..org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Sep 7, 2010, 4:08:28 PM9/7/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


2010/9/6 Hari Krishnan hari.har...@gmail.com


 

அடுத்ததாக, சந்தத்துடன் படித்து, ஒலிப்பதிவாகவும் அனுப்புகிறேன்.  வண்ண விருத்தங்களையோ இல்லை, மிகச் சாதாரணமான ஆசிரிய விருத்தங்களையோ இந்தத் தலைமுறை படித்துக் கேட்டிராது.  
 
ஒலிப்பதிவைk கேட்டேன்.  பிரமிப்பாக இருந்தது. இப்படி வாசித்து கேட்கும் அனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு அமைவது அரிது. உங்கள் முயற்சி மகிழ்ச்சியளிக்கின்றது. தொடர்ந்து  ஒலிப்பதிவாக வழங்குங்கள். கேட்டு பயனடைவோம்.
 
அன்புடன்
சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages