ஆண் ஒருவரின் விந்தணுக்களின் பலத்தை கேது, செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களையும் கொண்டு நிர்ணயிக்கின்றனர். பெண்ணின் அண்டத்தில் உள்ள சுரோணிதத்தின் வல்லமையை புதனும் ராகுவும் வெளிப்படுத்தும். பூர்வ புண்ய தனாதிபதியான ஐந்துக்கு உரியோன் பாவியுடன் கூடி பலவீனனாய் ஏழில் இருந்தால் அந்த ஜாதகர் மலடு ஆவார்.

ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் ஆறில் நீச்சம் அடைந்தால் அந்த ஜாதகர் மலடு ஆவார். ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீச்சனாய் 6, 8, 12 வீடுகளில் மறைந்தால் அவர் மனைவி மலட்டுத் தன்மையைப் பெறுவார்.
அதேபோல், ஐந்தாம் வீட்டில் புதனும் கேதுவும் இருந்தால் அவர் மனைவி மலடி ஆவார். இது எந்த லக்னத்திற்கும் பொருந்தும். ஆனால் இவர்களை குருவோ சுக்கிர பகவானோ பார்த்தாலோ, புதன், கேது நின்ற வீட்டுக்குரியவர் பலம் அடைந்து காணப்பட்டாலோ அவர் மனைவியின் மலட்டுத்தன்மை விலகும். மேலும், ஐந்தாம் வீட்டுக்குரியவர் நீசமாகி ஐந்தாம் வீட்டில் புதனும் சனியும் இருந்தால் அந்த ஜாதகரின் மனைவி மலடி ஆவார். மற்றும், ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் அல்லது 7ஆம் வீட்டில் சுக்கிரனும் சூரியனும் கூடியிருந்தால் அந்த ஜாதகரின் மனைவி மலடி ஆவார் என்பதை அறிந்து கொள்க.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சுக்ரன் காணப்பட்டாலோ, சுக்கிரனை செவ்வாய் பார்த்தாலோ விந்தானது விரைவாய் வெளிப்பட்டுவிடும். சுக்கிரன் மீது, சனி, சந்திரன் பார்வை இருந்தால் சற்றே தாமதத்துடன் விந்தணுக்கள் வெளிப்படும். சுக்கிரன் தன் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலோ, செவ்வாயின் நட்சத்திரத்தில் இருந்தாலோஈ, வெளிப்படும் வீரியத்தின் அளவு மிகவும் அதிகமாய் இருக்கும்.
மேலும் சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம், துலாம், மீனம் ஆகியவற்றில் இடம் பெற்றிருந்தால் அவரின் விந்து வெண்மையானதாயும், தூய்மையானதாயும் இருக்கும். அதே சுக்கிர பகவான் மிதுனம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் காணப்பட்டால் விந்து சற்றே நிறம் மங்கிக் காணப்படும். அதே சுக்கிர பகவான் கடகம், சிம்மம், கன்னி, மேஷம், தனுசு ஆகியவற்றில் இருந்தால் வெளிப்படும் வீரியம் துர்நாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதாயும் இருண்ட நிறம் உடையதாயும் காணப்படும்
அலியாக மாறும் ஜாதகர் யார்?
உலகத்தில் அலி என்று யாரும் கடவுளின் படைப்பில் கிடையாது. ஆனால், நவக்கிரகங்களுள் புதன் பகவானும், சனி பகவானும் அலிக் கிரகங்களாய் விளங்குகின்றனர். அவற்றுள் புத பகவான் பெண் தன்மை அதிகம் கொண்ட பெண் அலியாகவும், சனி பகவான் ஆண் தன்மை அதிகம் கொண்ட ஆண் அலியாகவும் விளங்குகின்றனர்.
இவ்விரு கிரகங்களுடன் பிற கிரகங்கள் சம்பந்தப்படும்போது, அந்த ஜாதகருக்கு அலித்தன்மை ஏற்படுகிறது. சுக்கிரன் ஆறிலும், எட்டில் சனியும் நின்றால் அந்த ஜாதகர் அலித்தன்மை உள்ளவர் ஆவார். அதேபோல், சனியும் சுக்கிரனும் ஜென்ம லக்னத்திற்கு எட்டு அல்லது பத்தாம் வீட்டில் அமர்ந்து சுபக்கோள்களின் பார்வை பெறாவிடில், அந்த ஜாதகர் அலியாவார். மேலும், லக்னத்திற்குஆறு, பன்னிரெண்டாம் வீடுகள் ஜல ராசியாகிய கடகம், மகரம், மீனமாய் இருந்து, அதில் சனியும் இருந்து, சுபக் கோள்களின் பார்வை இல்லாவிடில் அவர் அலியாவார்.
இத்தகைய அமைப்பு சிம்மம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கே அதிகம் ஏற்படும். மேலும், சனி பகவான் நீசனாய் ஜென்ம லக்னத்திற்கு ஆறு அல்லது எட்டில் அமர்ந்தாலும் அந்த ஜாதகர் அலியாவார். இந்த அமைப்பு கன்னி, விருச்சிகம் ஆகிய இரு லக்னக்காரர்களுக்கு ஏற்படுகிறது. சுனி பகவான் நீசம் அடைவது மேஷத்தில் தான். இதில் செவ்வாய் ஆட்சி பெறாமல் இருந்தாலும் அந்த ஜாதகர் மேற்சொன்னபடி அலியாய் இருப்பார். அதேபோல், சந்திரனும் சூரியனும் ஒருவருக்கொருவர் பார்த்தாலும் அலியாவார்.
மேற்கொண்ட நிலை பௌர்ணமியன்றுதான் ஏற்படும். அப்படியென்றால், பௌர்ணமியன்று பிறந்தவர்கள் எல்லாம் அலியாய் இருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். சந்திரனும் சூரியனும் ஆண் ராசிகள் ஆகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவற்றிலோ, பெண் ராசிகள் ஆகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றிலோ இருந்து, சமமான பாதையில் இருவரின் கதிர்களும் சந்திரனும் ஆண்-பெண் ராசிகளென்று கலந்து, மாறி மாறிக் காணப்பட்டால் அலித்தன்மை ஏற்படாது!
அதேபோல், ஒருவரின் லக்னம் ஒற்றை ராசியாகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாய் இருந்து, செவ்வாய் பகவான் இரட்டை ராசியாகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இருந்து லக்னத்தைப் பார்த்தால் அந்த ஜாதகர் அலியாவார் மேலும், சந்திரன் இரட்டை ராசிகள் ஆகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இடம்பெற்று, புதன் ஒற்றை ராசியாகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் இருக்க, அவர்களை செவ்வாய் பார்த்தால் அலித்தன்மை ஏற்படும்.