ஆபாசம் என்ற சொல் தொடர்பான விளக்கங்கள் தேவை

2,073 views
Skip to first unread message

இணையப் பரிமேலழகன்

unread,
Oct 13, 2014, 9:01:46 PM10/13/14
to mint...@googlegroups.com
ஆபாசம் என்ற சொல்ல் எந்த மொழியைச் சார்ந்தது
அதன் வேர்ச்சொல் எது
தமிழுக்கு அந்தச் சொல் வந்ததன் பின்புலம்
ஆபாசம் எது என்பதை யார் தீர்மானிப்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் உள்ளேன்
எனக்கு ஆபாசம் என்ற சொல் அதன் வேர்ச்சொல் அதற்கு நிகரான தமிழ்ச் சொல் வேண்டும் அறிந்தவர்கள் கூறவும்
இங்கே சொல்லத் தடை இருப்பின் தனி மடலில் சொன்னாலும் ஓ கே
இனா பனா அனா

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2014, 11:27:36 PM10/13/14
to mint...@googlegroups.com
வடமொழியில்   ஆபாசம்  என்றால்

ஆபாஸம் - தோற்றம் (எ-கா) கானல் நீர்     

ஆனால்  நாம்    அருவருப்பான   என்று பொருள் கொள்கிறோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 14, 2014, 12:06:50 AM10/14/14
to mint...@googlegroups.com
இன்னொரு வடமொழிச் சொல்லான 'கேவலம்' என்பதற்கு 'மட்டும்' என்று பொருள்.  ஆனால் நாம் தமிழில் "இழிவானது' என்று பொருள் கொல்லுகிறோமே!

ஒருவேளை இவைகள் வடமொழியிலும், தமிழ்லும் ஒன்றாக ஒலிக்கும், ஆனால் வெவ்வேறு பொருள் கொண்ட சொற்களோ?  எனது தமிழ் அறிவு குறைவு.  அதனால் கேட்கிறேன்.

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Oct 14, 2014, 12:44:54 AM10/14/14
to mint...@googlegroups.com
ப்ரமாதம் 

प्रमाद [ pramāda ]  intoxication,  madness , insanity ,  negligence ,   an error , mistake,

a partic. high number



திவாஜி

unread,
Oct 14, 2014, 2:30:04 AM10/14/14
to mint...@googlegroups.com
2014-10-14 6:31 GMT+05:30 இணையப் பரிமேலழகன் <radius.co...@gmail.com>:

ஆபாசம் (p. 55) [ āpācam ] {*}, s. disorder, damage, ruin, கெடுதி; 2. semblance of reason, a fallacy, போலிஞாயம்; 3. that which is filthy, அசுத்தம். ​
​சம்ஸ்க்ருதத்தில்:
http://tinyurl.com/p78opwy

தமிழ் ஆதரவாளர்கள்​ தமிழ்லேந்து சம்ஸ்க்ருதத்துக்கு போச்சுன்னு சொல்லிக்கலாம்.
சம்ஸ்க்ருத ஆதரவாளர்கள் அதுலேந்து தமிழுக்கு வந்தது ந்னு சொல்லிக்கலாம்.
மத்தவங்க எப்படி இருந்தாலும் ஒரே அர்த்தம்தான் வருகிறது என்கிற உண்மையை பாத்துக்கலாம்!
நாராயணா நாராயணா !




http://www.swaminathar.org/

கோதண்டராமன்

unread,
Oct 15, 2014, 2:48:26 AM10/15/14
to mint...@googlegroups.com
ஆபாசம் என்பது ரஸாபாஸம் என்பதன் சுருக்கம். 
ரஸங்கள் (இலக்கியச் சுவைகள்) ஒன்பது- அறிவீர்கள். 
தலைவன் தலைவிக்கிடையேயான காதலை வர்ணிக்கும்போது கண்ணியமாக வர்ணித்தால் அது சிருங்கார ரஸம் எனப்படும். 
கீழ்த்தரமாக வர்ணித்தால் அதில் ரஸம் இல்லை, ரஸத்தின் மாயத்தோற்றம் தான் உள்ளது என்ற பொருளில் ரஸாபாஸமாக இருக்கிறது என்று சொலவார்கள். அதுவே இன்று ஆபாசமாகிவிட்டது.  

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2014, 5:49:57 AM10/15/14
to மின்தமிழ்
கீழ்த்தரமாக வர்ணித்தால் அதில் ரஸம் இல்லை, ரஸத்தின் மாயத்தோற்றம் தான் உள்ளது என்ற பொருளில் ரஸாபாஸமாக இருக்கிறது என்று சொலவார்கள். அதுவே இன்று ஆபாசமாகிவிட்டது. 

அது விரசம் அல்லவோ

ரசாபாசம் என்பதும் விரசம் என்பதும் ஒன்

இனா பனா அனா

--

Dev Raj

unread,
Oct 15, 2014, 7:17:18 AM10/15/14
to mint...@googlegroups.com
On Wednesday, 15 October 2014 02:49:57 UTC-7, இணையப் பரிமேலழகன் wrote:
கீழ்த்தரமாக வர்ணித்தால் அதில் ரஸம் இல்லை, ரஸத்தின் மாயத்தோற்றம் தான் உள்ளது என்ற பொருளில் ரஸாபாஸமாக இருக்கிறது என்று சொலவார்கள். அதுவே இன்று ஆபாசமாகிவிட்டது. 
அது விரசம் அல்லவோ  ரசாபாசம் என்பதும் விரசம் என்பதும் ஒன்


பலே, சரியான கேள்வி.
'ஆபாஸம்’ போலித் தோற்றம் என்பதே
சரியான பொருள்.

ரஸாபாஸம் போல் ஹேத்வாபாஸம் என்றும்
ஒரு சொல் உண்டு -
हेत्वाभास - hetvAbhAsa - mere appearance of a reason


தேவ்




 

nkantan r

unread,
Oct 15, 2014, 10:15:53 AM10/15/14
to mint...@googlegroups.com
Age has started playing tricks with my memory;

I remember, when I was young, attending Gita Pravacanam where there is a sloka explaining the Gunas of Lord;  the sloka line is struck at some crevice in the brain's cell; this line contains the word aabhaasam where the meaning is " it is what is perceived but not real"

I tried to google for the line; I am sure learned members can recollect and let me also know!

regards
rnkantan

Nagarajan Vadivel

unread,
Oct 15, 2014, 11:21:18 AM10/15/14
to மின்தமிழ்
அப்படியானால் ஆபாசம் என்பது மெய்நிகர் காட்சிப்பிழை என்று கூறுவீர்களா?  கண்ணால் காணும் காட்சிகள் மனதில் பாலுணர்வைத் தூண்டுவதால் காமக் கிளர்ச்சியை உண்டுபண்ணுவதால் அதை ஆபாசம் என்று சொல்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாமா?

தமிழனைப் பொருத்தவரை அவனுக்கு ஆபாசம் என்பதே என்ன என்று தெரிய வாய்ப்பில்லாமல் அவன் மரபு அமைந்திருக்கலாம்.  நாடுபிடிக்க வந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழி இறையியல் அனைத்தையும் கற்று அவர்கள் பார்வையில் தமிழர்களின் கோவில் வழிபாடு சிற்பம் ஓவியம் நடனம் எல்லாம் அருவறுக்கத்தக்கவை என்று வெளி உலகுக்கு அறிவித்தனர்

திரைப்படத் துறையில் இன்று வரை எது ஆபாசம் என்று நிச்சமாயாக அறுதியிட்டுக் கூற முடியவில்லை.  சின்னத்திரையில் சின்ன அளவுக்குக்கூட தணிக்கை இல்லை.  இணையத்தில் ஆபாசத்தை விற்பதே உலகமயமாக மாறிப்போனது

ஆபாசம் என்று சொல்லுவோம் என்பதும் ஆபாசத்துக்குப் பொருள் என்ன சொல்ல மாட்டோம் என்பதும் சற்று விந்தையாகத்தான் இருக்கிறது.  ஆங்கில உலகில் உள்ளதுபோல் தமிழில் ஆபாசம் பற்றிய தொகுப்பு இன்னும் உருவாகாமல் இருப்பது வருந்தற்குரியது

இனா பனா அனா

--

செல்வன்

unread,
Oct 15, 2014, 11:25:01 AM10/15/14
to mintamil
னா பனா அனா ஐயா

கலை என்பது சிறிதுமின்றி பாலுணர்வை மட்டும் தூண்டும் நோக்கம் படைப்புகள் அனைத்தும் ஆபாசம் என கருதபடும் என ஒரு வழக்கில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. அதையே நாமும் பொருத்தமான விளக்காமக கொள்ளலாம் என தோன்றுகிறது

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 15, 2014, 11:55:39 AM10/15/14
to mintamil
ஆபாசம் என்ற சொல்லுக்கு மாற்றாகத் தமிழில் பயன்படுத்த தக்க சொற்கள் யாவை? 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
Reply all
Reply to author
Forward
0 new messages