சாமி வந்து ஆடுவது உண்மையா?

7,235 views
Skip to first unread message

kalairajan krishnan

unread,
Jan 18, 2011, 7:06:15 AM1/18/11
to mintamil
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.

-சுபா

அம்மையீர் சுபா அவர்களுக்கு வணக்கம்,
அப்​போது நான் சிறுவன், 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்,

வீட்டில் ஒரு பெரிய அறை, அதில் ஒரு பெரிய கொசுவலை. உள்ளே, நான், அண்ணன்
தம்பி தங்கை அன்னை தந்தையுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்,
திடீரென பெரிய சப்தம்,
விழித்துப் பார்த்தால் கொசுவலையைக் காணோம்,
என்னைப் போல் எல்லோரும் எழுந்து உட்கார்ந்து இருந்தனர்,
என் தந்தை கையில் ஒரு குடத்தை எடுத்து வந்து அதில் இருந்த தண்ணீரை
அப்படியே தன்தலை ஊற்றிக் கொண்டார், ஒரு விதமாகச் சப்தம் செய்தார்,
மற்றொரு குடத்தை எடுத்து வந்து, தண்ணீரை எங்கள் மீதும் ஊற்றினார்,
பயங்கரமாகச் சப்தம் செய்தார், "எங்கேயடா வந்து உன் வேலையைக்
காட்டுகிறாய்" என்றார், ஆனால் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும்
வீட்டில் இல்லை,

மிகவும் பயந்துபோய் இருந்தோம்,
நாங்கள் எல்லாம் பயந்து ஒரு மூலையில் போய் இருந்து கொண்டோம்,
எங்களை அந்த இடத்திலேயே இருக்குமாறு கையைக் காட்டினார்,

வீட்டில் இருந்த ஒரு செல்ப் அதுதான் பூசை அறை,
அதைத் திறந்தார்,
விபூதி எடுத்துப் பூசிக் கொண்டார்,
லத்திக் (காவல்து​றையினர் பயன்படுத்தும் கம்பு) கம்பைக் கையில் எடுத்துக்
கொண்டு ஓடுடா! ஓடுடா! என விரட்டிச் சென்றார். எவ்வளது தூரம் சென்றார்
என்று அறியோம்,
சிறிதுநேரம் சென்று மீண்டும் திரும்பி வந்தார்,

இப்போது, மிகவும் இயல்பாக நடந்து கொண்டார்,

எங்களுக்கு எல்லாம் திருநீறு இட்டார்,
அவருக்குத் தன் பெண்டு பிள்ளைகளைத் தீய சக்தியிடமிருந்து காப்பாற்றி
விட்டோம் என்று அவ்வளவு மகிழ்ச்சி,
பயப்படாதீர்கள், அவனை விரட்டி விட்டேன், இனிமேல் பயம் இல்லை என்று சொன்னார்,

வந்தவன் யார்? விரட்டியது யார்?
அன்பன்
கி. காளைராசன்

--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் ​கொள்கிறார்,

Nagarajan Vadivel

unread,
Jan 18, 2011, 7:14:40 AM1/18/11
to mint...@googlegroups.com
//சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.//


இணைப்பில் உள்ள கோப்பைப் பார்க்கவும்
நாகராசன்

2011/1/18 kalairajan krishnan <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

THE BATTLE FOR YOUR MIND.PDF - D Vallieres.pdf

Tthamizth Tthenee

unread,
Jan 18, 2011, 7:42:03 AM1/18/11
to mint...@googlegroups.com

சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.

-சுபா
 
சௌபாக்கியவதி  சுபாஷிணிட்ரெம்மல்  அவர்களே  மிகவும் நுணுக்கமான கேள்வி
 
ஆனால்  இதற்கு விஞ்ஞான பூர்வமான   பதிலைக் கூறினால்!    பல ஆன்மீகவாதிகளின்   மனது புண்படும்
 
அதுமட்டுமல்ல  இன்னமும் உண்மையா !   பொய்யா  !  என்று  ஒரு புதிராய் இருக்கும்  ஒரு   விளக்கம்  இதனுள்ளே  இருக்கிறது.
 
 
நான் சொல்லுவேன்  !  ஆனால்  அதை    என்னாலேயே  நம்பமுடியாது!
 
ஆங்கிலத்தில்   Subject     என்று சொல்வார்கள்  அப்படி Subject  ஆக  இருக்கும் பல செய்திகளுக்கு  ஏதேனும் ஒரு முடிவு  சொல்லலாம்
 
ஆனால்  subjective   என்று   நினைத்தால்  அதற்கு முடிவே கூற முடியாது
 
 ஏன் இவ்வளவு  பீடிகை போடுகிறேன் என்றால்
 
என் வாழ்க்கையிலே  நானே இப்படிப்பட்ட நிகழ்வை சந்தித்து  இன்று வரை  அது உண்மையா  பொய்யா  என்று குழம்பிக்கொண்டிருக்கிறேன்
 
ஆமாம்  என்னுடைய பதினோராவது  வயதில்  திடீரென்று  என் தகப்பனார் இறந்து போனார்
 
அவருடைய  காரியங்களெல்லாம் முடிந்து   ஆறு மாதம் ஆகி இருக்கும்
 
எங்கள் வீட்டுக்கு  எதிர் வீட்டில் இருந்த ஒரு பெண்மணி  அடிக்கடி எங்கள் வீட்டுக்கு  வருவார். என் தாயாருக்கு  ஆறுதல் சொல்வார்
 
ஒரு நாள்  அந்தப் பெண்மணி  பேசிக்கொண்டிருந்த போதே  திடீரென்று   எழுந்து ஆட ஆரம்பித்தார். அவருடைய  ஆட்டம் எந்த அளவுக்கு   இருந்ததென்றால் 
 
ஒரு சாதாரண   பெண்மணியால் அந்த அளவுக்கு  ஆட முடியாது, அது மட்டுமல்ல
 
வீட்டின் மேல் விதானம்  தலையில் முட்டும் அளவுக்கு  எகிறி குதிக்கிறார்
 
அப்படி ஆடிக்கொண்டே  அவர் சொன்னார்   நான்தான்  நரசிம்மப் பெருமாள் வந்திருக்கேன்
 
நீ எதுக்கும்ம் கவலைப்படாதே  இனிமே  நான் உங்க குடும்பத்துக்கு துணை இருப்பேன்
 
உன்னோட மூத்த பொண்ணுக்கு    தானாகவே  வந்து பொண்ணு கேப்பாங்க
தானாவே  எல்லாம் அமையும்.   பல இஒடத்திலேருந்து  பணம் வரும், கல்யாணம் தடைப்படாமே  நடக்கும். இன்னும் மூணு மாசத்திலே கல்யாணம் முடிஞ்சு  உன் பொண்ணு  அவளோட  புகுந்த வீட்டுக்கு போயிடுவா  என்றெல்லாம்  சொல்லிகொண்டே  போனார்.
 
அவர்   சொன்ன அத்தனையும்   நடந்தது!
 
நான் அவர்  ஆட ஆரம்பித்த வுடன்  ஓடிப்போய் என் அம்மாவின் பின்னால் நின்றவன்தான்,அங்கேயே பயந்து போய் நின்றிருந்தேன்
 
அத்தனையும் கவனித்துக்கொண்டு
 
ஆனால்  அவர்கள் சொன்ன ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவர் சொன்னது  போலவே நடந்தது ஆச்சரியம்தான்
 
ஆனால்  இன்று வரை  எனக்கு ஒரு கணிப்பு  உண்டு
 
மனிதனின் மனது  இந்தப் ப்ரபஞ்சத்தோடு  தொடர்பு கொண்டது
அப்படி  ப்ரபஞ்சத்தில் ஏதோ  ஒரு  உணர்வலை  நம் மனதை, அல்லது  மூளையை  ஆக்ரமிக்கும் போது  நாம்  அந்தத் தொடர்பினால்  உள்ளுணர்வுகள் தூண்டப்பட்டு  சில  உண்மைகளை  சொல்ல நேரிடுகிறது
 
இதை  ஆவேசம்  என்றும் கொள்ளலாம்
 
 
ஆனால்  மனிதர்களுக்கு  அவர்களுக்குரிய  சக்தியை மீறி  இது போன்ற நேரங்களில் அவர்களுக்கு  அதீத சக்தி வருகிறது என்பது உண்மை
 
அந்த அதீத சக்தி  நம்  உடலின் உணர்வுகளையோ,  நரம்புகளையோ,  தூண்டி விடுகிறது
 
அப்படிப்பட்ட தூண்டுதலின் விளைவாக  நாம் சாமி வந்து ஆடுகிறோம்   என்பது  என்னுடைய கருத்து
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
2011/1/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Chandrasekaran

unread,
Jan 18, 2011, 8:09:30 AM1/18/11
to mint...@googlegroups.com
என் அனுபவத்தில் மதுரையில், திருநகரில் நான் பள்ளிப்படித்தபோது நடந்தது.

அண்ணாமலை பல்கலையில் விவசாயம் பயிலும் ஹாக்கி ப்ளேயர் - என் பள்ளித் தோழனின் நண்பன். அவனை திடீரென்று வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.பெண் போல் பேசுவதும் பெண் போல் நடப்பதும், நாம் காண்பதும் கேட்பதும் உண்மையா என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்கார அம்மாள், சக்தி உபாசகி. கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு, அந்த பையனை ஒரு ஓரத்தில் உட்கார வைத்து, நாலு சாத்து சாத்தினார்கள். என்னிடம், ‘அய்யரே, கந்தர் சஷ்டி கவசம் சொல்லு, தெரியுமில்லஏ,” என்றார்கள். அவரது உருளும் கண்களுக்கும், வேப்பிலைக்கும் பயந்து, மளமளவென சஷ்டி கவசம் சொல்லலானேன். கொஞ்ச நேரத்தில், ‘ மோகினிப் பேய்’ பிடித்த பையன் சொல்ல ஆரம்பித்தான்/ள்!!! காலேஜ் காம்பஸில் ஒருத்தன் அந்த பெண்ணை ஏமாற்றிக் கொன்றுவிட்டான். அவளோ படிக்காதவள். இந்த பையன் நல்லவனாய் தெரிந்ததும், இவனைப் பிடித்துக் கொண்டாள். நல்ல சாப்பாடும், ஒரு புடவையும் கொடுத்ததும், சத்தியம் செய்து மறைந்து போனாள். நண்பனின் அண்ணன் எல்லாம் சரியானதும், “ஐய்ய, இது என்ன தலைலெல்லாம் விபூதி?” என்று கடிந்து கொண்டே எழுந்திருந்தது, எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

சாமி வந்த கதை: என் பெரிய அக்காள், பக்கத்து வீட்டில் கார்த்திக் என்ற குழந்தைக்கு உண்வு ஊட்டுவதற்கு (இவள் மாத கர்ப்பிணி) ‘கார்த்திக், கார்த்திக்’ என்று கூவி அழைக்க, திருத்தணிப் ப்க்கம் சேர்ந்த அவ்ர்களது வேலைக்கார அம்மா, “யேய்,என்று கூவிக் கொண்டே எங்கள் வீட்டில் நுழைந்தாள். அவள் பெரிய முருக பக்தை. அக்கவை உட்கார வைத்து, தலையில் கை வைத்து, கூப்பிட்ட வந்துட்டேன். உன் பிரசவம் நல்லா ஆகும்.” என்று கூறியபடியே சாமி ஆடினார். என் தாயார் உடனே தைரியமாக ‘முருகா, அவ பிள்ளத்தாச்சி. என்ன வேணும் சொல்லு தர்றோம்,” என்றது. பானகம் என்று கேட்டாள்(ர்?). ஒரு குடம் பானகத்தி அப்படியே ‘லபக்’க்கிவிட்டு, முருகன் மலை இரங்கிங்!
இதுவும் கண்ணால் பார்த்தது.

இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

மனதுக்கும் மூளைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இந்த உலகில் நடந்து நமக்கு இறைவன் இருப்பதை காட்டுகிறது.பேய்களும் :(
இறை சிந்தனை தொடர்ந்து இருந்தால் ‘பேய்கள்’ அண்டா]து. சஷ்டிக் கவசம் காப்பு.


சந்திரா (சாமி)

வினோத்-VINOTH

unread,
Jan 18, 2011, 8:11:33 AM1/18/11
to mint...@googlegroups.com


2011/1/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.

-சுபா


உண்மையும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது
ஏனென்றால் ஆடுபவர் ஒருவர் இல்லையே





--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


செல்வன்

unread,
Jan 18, 2011, 9:02:33 AM1/18/11
to mint...@googlegroups.com
நான் பார்த்தவரை சாமி வந்து ஆடுவது ஒரு சடங்கு.சிலருக்கு அது ஒரு மனபிரம்மை மாதிரி...உடுக்கை சத்தம் கேட்டால் தானாக ஆடுவார்கள்.

எங்க குலதெய்வம் கோயிலுக்கு பூஜை செய்யும்போது வயதுக்கு வராத மூன்று சிறுபெண்களை அம்மனாக பாவித்து பூஜை செய்வார்கள்.அவர்களுக்கு அருள் வந்தால் தான் பூஜை முடிவடையும்.வரலைன்னா பூஜை முடிவடையாது.மூன்று பேரை நிற்கவைத்து உடுக்கடித்தபடி பூசாரி சுற்றி வருவார்.கொஞ்ச நேரத்தில் அவர்கள் சாமி வந்தது போல நடிப்பார்கள்.நடித்தபடி ஊரில் எங்க சாதிசனம் வீட்டுக்கு ஊர்வலமா போவார்கள்.நான் சிறுபையனாக இருந்தப்ப வருசா வருசம் அருள் வந்த பெண்களிடம் அரட்டை எல்லாம் அடிச்சுகிட்டே ஊர்வலத்தில் நடந்துபோவேன்.ரொம்ப அரட்டை அடிச்சா பெரியவங்க சத்தம் போடுவாங்க.

பூ கட்டி கொடுப்பது என இன்னொரு சடங்கு.எங்க ஊரில் கோயிலில் கல்யாணத்துக்கு பூ கட்டி அனுமதி கேட்பார்கள்.சிகப்பு பூ வந்தால் நாட் ஓகே.வெள்ளைபூ வந்தால் ஓக்கே.எப்பவும் வெள்ளைபூ தான் வரும்.சிகப்பு பூ வந்து நான் பார்த்ததே இல்லை.

--
செல்வன்

அடுத்தவனை கெடுத்ததில்லை
வயத்துலதான் அடிச்சதில்லை
உழைப்பை நம்பி பொழச்சி நிக்கறேன்
நான் உண்மையாக ஊருக்குள்ளே

www.holyox.blogspot.com


Innamburan Innamburan

unread,
Jan 18, 2011, 9:06:02 AM1/18/11
to mint...@googlegroups.com
என் இதுகை எங்கே ஓடிப்போச்சு?


2011/1/18 செல்வன் <hol...@gmail.com>

கால்கரி சிவா

unread,
Jan 18, 2011, 11:42:34 AM1/18/11
to mint...@googlegroups.com
சாமி வந்து ஆடுவது அடக்கி வைத்த உணர்ச்சிகள் பீறிட்டு கிளம்புவது என நினைக்கிறேன். என் மாமியார் மிகவும் அடக்கமான மருமகள் அவரின் மாமியாரால் அடக்கி ஆள பட்டவர், அவரை யாரும் ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. அவருக்கு பழனிக்கு போனால் சாமி வந்துவிடும். எல்லாரையும் ஏகத்தாளத்தில் கூப்பிடுவார். அவரின் மாமியார் சிவலோக பதவி அடைந்தவுடன் இவருக்கு சாமி வருவதில்லை. :)
 
கடந்த ஜூன் மாதம் நானும் என் மனைவியும் கேதார்நாத் யாத்திரை போயிருந்தோம். ஒரு நாள் முழுவதும் ஹெலிகாப்டருக்கு காத்திருந்து கிடைக்காமல், மறுநாள் பயங்கர கூட்டத்தில் கோவேறு கழுதையின் மேலமர்ந்து 6 மணி நேரம் இடுப்பொடிய பயணித்து. கூட்டத்தில் கசங்கி நசுங்கி கேதார்நாத் லிங்கத்தை கையில் தொட்டவுடன் உடம்பு சிலிர்த்து எனக்கு என் மனைவிக்கும் ஒரே சமயத்தில் கண்ண்ரீர் ஆறாய் ஓடியது சாமி வந்த மாதிரி அங்கே தோன்றியது.
 
பின்னர் ”இந்த யாத்திரையை மேற்கொள்ள பலவருட திட்டமிடல், எதிர்ப்பார்ப்பு, பல்லாயிர மைல்கள் பயணம், உடல்களைப்பு இவையெல்லாம் மனதை அழுத்தியிருக்க வேண்டும். அடக்கிவைத்த அழுத்தம் ரிலீஸ் ஆன வுடன் கிடைத்த ஒருவித ரிலீப்” என மனம் வியாக்னம் செய்கிறது.
 
 
நிற்க,  நண்பர்களே என்னை இந்த குழுமத்தில் சேர்த்ததுற்கு நன்றி. எனக்கு அறிமுகமான நண்பர்கள், செல்வன், திருமதி கீதா சாம்பசிவன், திரு வெசா ஐயா அவர்கள், திரு ஹரிகி அவர்களும் இந்த குழுவில் இருப்பதைக் கண்டு சந்தோஷம் அடைகிறேன்.
 
அன்புடன்
 
சிவா கால்கரியிலிருந்து 

2011/1/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>

செல்வன்

unread,
Jan 18, 2011, 3:46:12 PM1/18/11
to mint...@googlegroups.com
சிவா,

வாங்க,வாங்க...நலமா?உங்களை இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீமோ நலமா?வீட்டில் அனைவரும் நலமா?

2011/1/18 கால்கரி சிவா <calga...@gmail.com>

செல்வன்

unread,
Jan 18, 2011, 3:57:03 PM1/18/11
to mint...@googlegroups.com
அருள் வந்து ஆடுவது உலகின் மிக தொன்மையான ஆன்மிகம். சைபிரியா,தைவான்,செவ்விந்தியர்கள் என பல தொல்குடி மக்களிடம் இப்பழக்கம் இருக்கு.

http://en.wikipedia.org/wiki/Shamanism

Chandrasekaran

unread,
Jan 18, 2011, 11:49:37 PM1/18/11
to mint...@googlegroups.com
கால்கரி சிவா,

என்னை மறந்துட்டீங்களா? மரபூர் சந்திரசேகரன் (ரீச் சந்திரா), வருக, வருக்!

சந்திரா

பாப்பாரப்பட்டி நாகராஜன்

unread,
Jan 18, 2011, 11:17:50 PM1/18/11
to மின்தமிழ்
திரைப்படங்களில் உணர்வுபூர்வமான காட்சிகள் வரும்போது நாமும்
அழுகிறோம்.நமது எதிர்பார்ப்புகளுக்கு ஆறுதலான நிகழ்வுகளை நாம் கற்பனையால்
சந்திக்கும் போது பாதிப்பு அடைகிறோம்

சாமி வருவது அருள் ஆடுவது என்பன விமர்சிக்கபடுவது கூட சாமி குத்தம் என்ற
மனோபாவம் உள்ளது

.நடைமுறையில், இறைவனே நேரடியாக அருள்பாலிக்கலாம்.பல மகான்கள் இறை
நெறியாளர்கள் இவர்களை விடுத்து மற்றவர்களை தேர்வு செய்வது முறையாக
இருக்குமா ?

பெரும்பாலும் இம்மாதிரி நிகழ்வுகள் பயமுறுத்தல் பாணியில் இருப்பது ஏன் ?

மக்களின் குறைகளும் துன்பங்களும் உடனடியாக விலக வேண்டும் என்கிற
மனப்பாங்கு இது போன்ற செய்திகளுக்கு உரமாக அமைகின்றன.

பாப்பாரப்பட்டிநாகராஜன்

On Jan 19, 1:57 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> அருள் வந்து ஆடுவது உலகின் மிக தொன்மையான ஆன்மிகம்.
> சைபிரியா,தைவான்,செவ்விந்தியர்கள் என பல தொல்குடி மக்களிடம் இப்பழக்கம்
> இருக்கு.
>
> http://en.wikipedia.org/wiki/Shamanism
>
> --
> செல்வன்
>
> அடுத்தவனை கெடுத்ததில்லை
> வயத்துலதான் அடிச்சதில்லை
> உழைப்பை நம்பி பொழச்சி நிக்கறேன்
> நான் உண்மையாக ஊருக்குள்ளே
>

> www.holyox.blogspot.com

கால்கரி சிவா

unread,
Jan 18, 2011, 4:05:13 PM1/18/11
to mint...@googlegroups.com
செல்வன்,
 
மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீமோ நலம். நீமோவின் துணை ரமோவும் நலம். இவர்களுக்கு ஒரு நண்பி ரயா (Maltese Breed Dog) சமீபத்தில் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளும் நலம் :)
 
சாமி வந்து ஆடுவது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அனுபவம். சிலர் மனம் அமைதி அடைவார்கள், சிலர் ஆடுவார்கள்.  என்னை பொருத்தவரை சாமி ஆடுவது உடம்பில் ஏற்படும் சில ராசயானங்கள் தாம் :)

2011/1/18 செல்வன் <hol...@gmail.com>
அருள் வந்து ஆடுவது உலகின் மிக தொன்மையான ஆன்மிகம். சைபிரியா,தைவான்,செவ்விந்தியர்கள் என பல தொல்குடி மக்களிடம் இப்பழக்கம் இருக்கு.

http://en.wikipedia.org/wiki/Shamanism

செல்வன்

unread,
Jan 19, 2011, 12:41:51 AM1/19/11
to mint...@googlegroups.com
நல்ல விஷயம் சிவா..நீமோவுக்கு இத்தனை நண்பர்கள்..ஒரு இல்லத்தில் இத்தனை வலர்ப்பு பிராணிகள் இருப்பது மிக்க இனிமையான விஷயமே

2011/1/18 கால்கரி சிவா <calga...@gmail.com>
செல்வன்,

Raja sankar

unread,
Jan 19, 2011, 2:32:16 AM1/19/11
to mint...@googlegroups.com
சுபா,

இதெல்லாம் அமானுடம் என்று தான் சொல்ல முடியும், ஏன், எப்படி என அறிவியலால் விளக்க முடிவதில்லை. 

எங்கள் ஊரில் அருள் வந்து ஆடும் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டிருக்கிறேன். அருள் வரும் போது உங்களுக்கு என்ன நடக்கும்? அதைப்பற்றி சொல்ல முடியுமா? என்றெல்லாம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் அப்போது எனக்கு ஏதும் தெரியாது, கண்களை திறக்க கூட முடியாது என்று தான் பதில் சொன்னார். 

அவ்வளவு தூரம் போக வேண்டாம் சென்னை நங்கநல்லூரில் காமாட்சி ஸ்வாமிகள் என்று ஒருவர். அவரின் இயற்பெயர் சங்கர சாஸ்திரிகள். அவரிடம் காலையில் போன் செய்து அப்பாயிட்மெண்ட் வாங்க வேண்டும். நேரம் சொல்லுவார் அந்த நேரத்தில் போனால் பெயர்,ஊர், போன்ற கடந்த கால விரவங்களை தெளிவாக சொல்லுவார். 

என் நண்பன் ஒருவர், வேறு பெயர் சொல்லி போயிருக்கிறான். அங்கே போனதும் உண்மையான பெயரை சொல்லியிருக்கிறார். நானும் போய் பார்த்தேன். கடந்த கால விவரங்களை எல்லாம் தெளிவாகத்தான் சொல்லுகிறார். :-)))) இன்றைக்கும் இருக்கிறார் என நினைக்கிறேன். நான் போனது பல வருடங்களுக்கு முன். 

இன்றைக்கும் அருள் எல்லாம் வரமலே கையிலே/பையில் வைத்திருப்பது என்ன என்று சொல்லும் ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் அவைகள் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் நடப்பதில்லை. இப்படி பட்ட ஆட்களிடம் கடந்த காலம் மட்டுமே சொல்லமுடிகிறது, எதிர்காலத்தை சொல்ல முடிவதில்லை. 

என்னுடைய கடந்த காலத்தை தெரிந்து கொள்ள இவர்களிடம் போக வேண்டியதில்லை என்பதால் இந்த விளையாட்டுகளை எப்போதே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். 

வெளிநாடுகளில் நடப்பது போன்று ஏதேனும் சோதனை வைத்து பார்த்தால் எவ்வளவு தூரம் மெய்/பொய் என தெரிய வரும்

ராஜசங்கர்

2011/1/18 kalairajan krishnan <kalair...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2011, 2:58:54 AM1/19/11
to mint...@googlegroups.com
பொதுவாக  இது போல்  சாமி வந்து  ஆடுபவர்களின்  தனிப்பட்ட  வாழ்க்கையை அலசினால்
அவர்களில்   100  / 99  சதவிகிதத்தினர்  ஏதோ  ஒரு வகையில்  பாதிக்கப்பட்டு, அதற்காக  இறையை வழிபடுபவராக  இருப்பதைக் காணலாம், இப்படிப்பட்டவர்களில்  பலருக்கு   தமக்கு  ஏதோ ஒரு குறிப்பிட்ட  நேரத்தில்  குறிப்பிட்ட  தெய்வத்தின்  அருள் கிடைத்தாற்ப் போல்  ஒரு உணர்வு மேலிடுகிறது
 
இயற்கையாகவே இவர்கள்  மனதிதில் இருக்கும்  பக்தி உணர்வும்,  இறையின்  அருள் கிடைத்தாற் போன்ற  மனோ நிலையும்   கலந்து  இவர்களின்   உடலில்  ஒருவித மாற்றத்தை  ஏற்படுத்துகிறது. அந்த மாற்றம் வரும்போது  இவர்களின் உணர்வுகள் தூண்டப்படுகின்றன, அந்த உணர்வுத்தூண்டலின் விளைவாக  ஏற்படும் மாற்றமே
 
சாமி ஆடுதல்  என்பது  என் கருத்து
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2011/1/19 Raja sankar <errajasa...@gmail.com>

kalairajan krishnan

unread,
Jan 19, 2011, 3:02:16 AM1/19/11
to mint...@googlegroups.com
வெளிநாடுகளில் நடப்பது போன்று ஏதேனும் சோதனை வைத்து பார்த்தால் எவ்வளவு
தூரம் மெய்/பொய் என தெரிய வரும்


ராஜசங்கர்

ஐயா ராஜசங்கர் அவர்களுக்கு வணக்கம்,

எங்களது குலதெய்வ வழிபாட்டின் (வருடம் ஒருமுறை) சாமி ஆடுவார்கள்,

அதில் சாமி ஆடுபவர் முன் நின்று, "நீயார்? ஏன் ஆடுகிறாய்? என்ன
வேண்டும்?" என்று பூசாரி (வேளார்) கேட்பார்!
அதற்கு சாமி ஆடுபவர்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரைக் கூறுவர்,
உடனே விபூதி குங்குமம் மடித்துப் போடுவார்கள்,
ஆண் தெய்வத்தின் பெயர் கூறிய சாமியாடி விபூதிப் பொட்டலத்தைச் சரியாக
எடுத்துக் கொடுக்க வேண்டும்,
பெண்தெய்வத்தின் பெயர் கூறிய சாமியாடி குங்குமம் எடுத்துக் கொடுக்க வேண்டும்,
(அப்படிச் சரியாக எடுத்துக் கொடுக்காதவருக்குப் பூசாரி திருநீறு
அணிவித்து சாமியை மலையேற்றி வைக்க ​வேண்டும்,)

சரியாக எடுத்துக் கூறிய சாமியாடி மட்டுமே தொடர்ந்து சாமியாடி குறி
சொல்வர், குலத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவரது காலில் கும்பிட்டு
விழுந்து ஆசி பெறுவோம்,

இதில் சிறப்பு என்ன வென்றால்,
எனக்கு வயது 54 ஆகிறது, நான் அறிந்த வரையில் எங்களது குல தெய்வ வழிபாட்டின் போது
எல்லாச் சாமியாடியும் மிகச் சரியாகவே குறி எடுத்துக் கொடுப்பர்,

இ​தை அறிவியல் அடிப்ப​டையில் நம்பி​யே ஆக ​வேண்டியுள்ளது,

அன்பன்
கி. கா​ளைராசன்

Raja sankar

unread,
Jan 19, 2011, 3:52:58 AM1/19/11
to mint...@googlegroups.com
அன்பின் தமிழ்த்தேனீ

தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லா அருளும் வசதிகளும் பெற்றவர்களும் இப்படி இருக்கிறார்கள். மிகவும் வயதானவர்கள் கூட இப்படி உண்டு. இதை இப்படித்தான் என்று ஒரு கட்டுக்குள்ளோ அல்லது ஒரு வரையறையோ செய்ய முடிவதில்லை. 

ராஜசங்கர்



2011/1/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Raja sankar

unread,
Jan 19, 2011, 3:58:14 AM1/19/11
to mint...@googlegroups.com
அன்பின் காளைராசன்,

நானும் இது போல் நிறைய பார்த்துள்ளேன். ஆனால் சில சமயங்களில் அவர்கள் சொல்வதும் தவறி உள்ளது. கும்பலாக உட்கார்ந்திருப்பவர்களிடம் இந்த குலதெய்வத்தை சேர்ந்த ஆண் அல்லது பெண் என்று கூப்பிட்டும் ஒரே குலதெய்வத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் அவர்களுடைய கிராம பெயரை, வீட்டுப்பெயரை சொல்லி கூப்பிட்டும் குறி சொல்வதை கண்டுள்ளேன். ஆனால் அதைத்தாண்டி எதிர்காலத்தை சொல்வதில் தான் சறுக்கல் ஏற்படுகிறது. இதை என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

ராஜசங்கர்

2011/1/19 kalairajan krishnan <kalair...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 19, 2011, 4:08:36 AM1/19/11
to mint...@googlegroups.com
திரு.கால்கரி.சிவா - முதலில் மின் தமிழில் உங்கள்  வருகைக்கு வாழ்த்துக்கள்.
 
நீங்கள் குறிப்பிடுவது போன்ற சில உதாரணங்களை நான் பார்த்திருக்கின்றேன். எல்லாம் எனது 13 வருடத்திற்கு முந்தைய மலேசிய வாழ்க்கையில். பல மலாய் பெண்களிடையே ஹிஸ்டீரியா வருவதும் கூட இவ்வகையிலான நிலையிலேயே என்பதும் கூட எனது எண்ணம்.  உள்ளத்தில் உள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்த இயலாதவர்கள் இவ்வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மனதின் உணர்வுகள் வெளிப்படும் வகை பல்வேறு வகையில் அமைந்து விடுகின்றது.

-சுபா
2011/1/18 கால்கரி சிவா <calga...@gmail.com>
சாமி வந்து ஆடுவது அடக்கி வைத்த உணர்ச்சிகள் பீறிட்டு கிளம்புவது என நினைக்கிறேன். என் மாமியார் மிகவும் அடக்கமான மருமகள் அவரின் மாமியாரால் அடக்கி ஆள பட்டவர், அவரை யாரும் ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. அவருக்கு பழனிக்கு போனால் சாமி வந்துவிடும். எல்லாரையும் ஏகத்தாளத்தில் கூப்பிடுவார். அவரின் மாமியார் சிவலோக பதவி அடைந்தவுடன் இவருக்கு சாமி வருவதில்லை. :)

kalairajan krishnan

unread,
Jan 19, 2011, 4:27:19 AM1/19/11
to mint...@googlegroups.com
ஆனால் அதைத்தாண்டி எதிர்காலத்தை சொல்வதில் தான் சறுக்கல் ஏற்படுகிறது.
இதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.


ராஜசங்கர்

ஐயா ராஜ சங்கர் அவர்களுக்கு வணக்கம்,
தங்களது இக்கருத்தை என்னளவில் ஏற்க இயலவில்லை,

எங்களது குலதெய்வ வழிபாட்டின் போது கருப்பண சாமி ஆடுவார் ஒருவர் (எனக்கு
பங்காளி முறை) நடத்திய உண்மைச் சம்பவம்,

ஒருமு​றை கிராமத்தில் ஒரு குழந்தைக்கு நோய் வந்து மருத்துவம​னையில்
கைவிட்டுவிட்டனர், இன்னும் சில நாட்கள்தான் உயிரோடு இருக்கும்
இக்குழந்தை, எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறிவிட்டனர்,

பெற்றோர் குழந்தையைத் தூக்கி வந்து விட்டனர்,
நல்லிரவு நேரம், குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறது.
குழந்தையின் தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து, கருப்பணசாமியாடி
வீட்டுக் கதவைத் தட்டியுள்ளாள். சாமியாடி எழுந்து வந்து கதவைத் திறந்து
பார்த்து என்ன எனக் கேட்க!
நடந்த விபரங்களை அந்தத்தாய் கண்ணீரும் கம்பலையுமாகக் கூறியுள்ளாள்,
இதற்குள் கிராமமே சாமியாடி வீட்டில் திரண்டு விட்டது.
சாமியாடி பூசைஅறையில் தீபத்தை ஏற்றி வைத்து
சாமியாடியுள்ளார். அப்போதும் விபூதியும் குங்குமமும் கட்டிப்
போட்டுள்ளனர், "கருப்பணன் திருநீறு எடுத்துக் கொடுகிறேன்டா" என்று
கூறிச் சாமியாடி திருநீற்றுப் பொட்டலத்தைச் சரியாக எடுத்து, அதனுள்ளே
இருந்த திருநீற்றை அந்தக் குழந்தையின் நெற்றி மற்றும் உடலெங்கும் பூசி
விட்டுள்ளார்,

இப்போது மூன்றுவருடங்களுக்கும் மேலாக உள்ளது, அக்குழந்தை நன்றாக
ஆரோக்கியமாக உள்ளது, குழதெய்வ வழிபாட்டிற்கு அக்குழந்தையையும் அழைத்து
வருவார்கள்,

இன்று, அந்த சாமியாடி ரோட்டில் நடந்து சென்றால் போதும், எதிர்
வருவோர், அவ​ரைக் கருப்பணசாமியாகவே நினைத்து அவர் காலில் விழுந்து
கும்பிடுகின்றனர்,

இதை என்ன என்று சொல்வது!

வரும் வைகாசி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக் கிழமை அன்று குலதெய்வ
வழிபாடு வரும். ஆர்வம் இருந்தால் வந்து வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறேன்,

அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel

unread,
Jan 19, 2011, 4:30:53 AM1/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்புள்ள ராஜசங்கர்,
 
எனது நெருங்கிய மலேசிய தமிழ் நண்பர் ஒருவர் -  விடுமுறையின் போது நிறைய பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு சில முக்கிய தனிப்பட்ட பிரச்சனைகள் ஏழெட்டு வருடமாக. கடந்த 2 ஆண்டுகளில் ஓரளவு தெளிவு பெற்று தனது தொழிலில் கவனம் செலுத்தி கொஞ்சம் மன நிம்மதியோடும் இருக்கின்றார். காரணம் கேட்டேன். எல்லாம் அருள்வாக்கு தரும் ஒரு "ஐயா" வினால் தான் ஆனது என்று குறிப்பிட்டார்.
 
எனக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் - மேலும் விசாரித்ததில் விபரம் கிடைத்தது. "ஐயா"  வை வாரம் ஒருமுறை பார்க்கச் சென்று விடுவாராம். எல்லா பிரச்சனைகளும் தீர்ந்ததும் ஐயாவினால் தான் என்று முழுதும் நம்புகின்றார். சரி எப்படி "ஐயா" வுக்கு இவர் பிரச்சனை தெரிந்தது என்றால் அவர் எல்லாம் ஞான திருஷ்டியில் பார்த்து சொல்லிவிடுவார் என்று நண்பர் குறிப்பிட்டார். மேலும் மேலும் துருவி எப்படி இந்த "ஐயா" வுடனான் சந்திப்பு நிகழும் என்று கேட்டபோது தெர்ந்தது - இவரிடம் அவர் சில கேள்விகளை மறைமுகமாக கேட்க இவர்  உணர்ச்சிவசப்பட்டு பல உண்மைகளை சொல்லியிருக்கின்றார். அந்த விஷயங்களை வைத்துக் கொண்டு பிரச்ச்னையை ஊகித்து "ஐயா"  இது தான் நடந்திருக்கும் என்றும் சொல்லிவிடுகின்றார். நண்பர் சொல்லிய விதத்தை கேட்ட போது என்னாலேயே பிரச்சனையை மிக்ச் சரியா  ஊகிக்க முடிந்தது.
 
அடிப்படை பிரச்சனையைத் தெரிந்து கொட்ட பின்னர் அடுத்த விஷயங்களெல்லாம் சுலபம் தானே. ஆனால் என் நண்பருக்கோ அவர் "ஐயா"  சொல்லும் சிறு சிறு விஷயங்கள் கூட இறைவன் கூறும் அருள்வாக்காகவே தோன்றுகின்றது. அது அவரது நம்பிக்கை. அதை நான் மாற்ற முயற்சிக்க வில்லை.
 
ஒரு வகையில் இவ்வகையான சாமி ஆடுபவர்கள் உளவியல் நிபுணர்கள் போன்ற காரியம் செய்பவர்களாக  இருக்கின்றனர் என்றே எனக்கு தோன்றுகின்றது. நண்பர் வாரம் ஒரு முறை செல்கின்றார். அவருக்குத் தனியாக "ஐயா" வுடன் பேச வாய்ப்பு கிடைக்கின்றது. கட்டணம் உண்டா என்று கேட்டேன். கட்டணம் இல்லை என்று நண்பர் சொன்னார். ஆனால் பின்னர் தெரிந்தது - ஒவ்வொரு முறையும் பார்க்கச் செல்லும் போது "ஐயா" வுக்கு சுருட்டு, பழங்கள், பியர், ரொட்டி, 1கிலோ அரிசி கொடுத்து விட வேண்டுமாம். இது "ஐயா" பவை சந்திக்கும் "முறையாம்". இது கட்டணத்தின் இன்னொரு வடிவம் என்பதையே நண்பர் உணராமல் இருக்கின்றார்.
 
இதனை பார்க்கும் போது குற்ற உணர்வினை அதற்கு மாற்றுப் பரிகாரத்தை தேடுபவர்களுக்கு, தனது ரகசியத்தை வெளியே சொல்லாமல் மறைக்க நினைப்பவர்களுக்கு இவ்வகை "ஐயா" வின் உதவிகள் மலேசியாவில் தேவையாக இருக்கின்றது.  
 
நண்பருடன் இது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது மேலும் பல சுவாரசியமான விஷயங்களும் குறிப்பிட்டார். தெய்வங்களுக்கு "ஐயா"  மறைமுகமான பெயர்களை வைத்து அழைக்கின்றார். நேரடியாக சொல்வதில்லையாம்.  முருகனை குறிக்க முருகன் என்று சொல்ல மாட்டாராம் அருள் வந்த பின்னர். "மலைக்குப் போன கிழவன்" என்று  சொன்னால் அது முருகனை சொல்கின்றார் என்று "மொழி பெயர்த்துக் " கொள்ள வேண்டுமாம். இம்மாதிரி ஒவ்வொரு தெய்வத்திற்கும் இரு தனி பெயர் உருவாக்கியிருக்கின்றார் "ஐயா".  
 
இப்படி பல பல வகையில் சாமி ஆடுபவர்கள் இருக்கின்றனர். மக்களின் பிரச்சனையை தீர்க்க உதவினால் அதில் பிரச்சனைக்குட்டமில்லை ஆனால் சாமி ஆடுபவர்களால் ஏமாற்றப் படுவர்களும் உண்டு. மலேசிய தினசரிகளில் பல சம்பவங்களை இவ்வகையில் முன்னர் வாசித்திருக்கின்றேன். 
 
அன்புடன்
சுபா
 
 
 
 
 
2011/1/19 Raja sankar <errajasa...@gmail.com>

sharadha subramanian

unread,
Jan 19, 2011, 4:56:27 AM1/19/11
to mint...@googlegroups.com
சுபா அவர்கட்கு வணக்கம் தேவி காமாக்ஷியே தன்னைச்சுற்றீ ப்ஞ்சாக்னி வளர்த்து ஈசனைக்காண்த்தவம் இருந்தார் என் புராணங்கள்சொல்கின்ற்னஅப்படி இருக்கயில் இந்த சாதா நாற்ற்ஸரீரத்தில் அவ்வள்வு சுலபமாக தெய்வம் புகுந்து விடுமா?ஊரை ஏமாற்ற் இப்படி ஒரு வ்ழி இறைவன்பெயரில்!ஏமாருபவர்கள் உள்ளவரை,ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்medicalscienceபிரகாரம் இத் ஒர்subcontioustalk ஆழ் மனதின் வெளிப்பாடு என்றும் கூற்லாம் ந்ம்பினால் நம்புங்கள் ஹா ஹாஹாஅப்படின்னு போகவேண்டியதுதான்


From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Wed, 19 January, 2011 3:00:53 PM
Subject: Re: [MinTamil] சாமி வந்து ஆடுவது உண்மையா?

Raja sankar

unread,
Jan 19, 2011, 4:58:44 AM1/19/11
to mint...@googlegroups.com
அன்பின் காளைராசன்,

எங்கள் ஊரில் ஒரு கோயில் உண்டு. பாம்பு கடி பட்டவர்களை கொண்டு வந்து போட்டு விடுவார்கள். சிறிது நேரம் கழித்து அந்த நபர் விஷம் இறங்கி எழுந்துவிடுவார். இதைப்போல் நிறைய உண்டு. 

என்னுடைய கருத்து, இது எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை என்பது தான். மேலை நாடுகளில் வீடு தீப்பிடித்தவுடன் கால் முடமாகி பல வருடங்களாக நடக்க முடியாமல் இருந்தவர்கள் எழுந்து நடந்தது உண்டு. இதை அதிசியம் என்று சொல்ல முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. 

கருப்பணசாமியிடம் நீதி கேட்டு அவர் தண்டித்தாக நடந்த கதைகள் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பார்த்துள்ளேன். ஆனால் அதெல்லாம் தனிப்பட்ட நபர்களால் நடக்காத்தால் அவைகளை இதில் சேர்க்க முடியாது. 

Raja sankar

unread,
Jan 19, 2011, 5:04:33 AM1/19/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

நீங்கள் சொல்வது நடப்பது இங்கு இந்தியாவில் சர்வசாதாரணம். மனநல மருத்துவரிடம் போவது ஒரு தெய்வ குற்றமாக கருதப்படுவதால் இந்த மாதிரி ஏமாற்றும் ஆட்கள் அதிகம். நீங்கள் சொன்னதை போல் நடப்பதை ஒரு ஜோசியரே என்னிடம் ஒப்புகொண்டிருக்கிறார். 

பெண்களாக இருந்தால் ஆணால் பிரச்சினையும், ஆணாக இருந்தால் பெண்களால் பிரச்சினையும் பொதுவாக இருக்கும். இதில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கறந்துவிடுவார்கள். ஆர். கே நாராயணன் இதை வைத்து ஒரு கதை எழுதி இருந்ததாக ஞாபகம். பொதுவாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களே இதில் ஏமாறுகின்றனர். அடுத்தபடியாக பேராசை கொண்டவர்களும் உழைக்காமலே சம்பாதிக்க விரும்பும் நபர்கள் இப்படி ஏமாறுகின்றனர். 

ராஜசங்கர்

2011/1/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2011, 5:52:12 AM1/19/11
to mint...@googlegroups.com
உண்மையிலேயே  தெய்வம் என்னும் மஹாசக்தி  ஒரு மனிதனின்  உடலில்  இறங்கினால்
அந்த  மனிதனால்  அந்த சக்தியைத் தாங்க முடியுமா?
 
திரு ராமகிருஷ்ண பரமஹம்சர்  நரேந்திரன்  என்னும் சீடருக்கு  தெய்வத்தின்  ஒளியை  சக்தியை  காட்டியதாகவும்  அந்த நரேந்திரன்  அந்த சக்தியின் தேஜோ மயமான சக்தியை  தாங்க முடியாதவராய்  இருந்தார் என்பதும் சரித்திரம்
அதன் பிறகு  அந்த நரேந்திரன்  விவேகானந்தராக மாறியதும்  சரித்திரம்
 
அப்படிப்பட்ட  மஹா சக்தி  நினைத்தால் அதுவே  மனிதர்களின்  குறைகளை  கண நேரத்தில்  தீர்த்துவிடுமே
 
அப்படியிருக்க  அந்த தெய்வம் எதற்காக  ஒரு மனிதரின் உடலில்  வந்து  குறி சொல்லவேண்டும்?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

2011/1/19 Raja sankar <errajasa...@gmail.com>
அன்பின் சுபா,

Raja sankar

unread,
Jan 19, 2011, 6:08:39 AM1/19/11
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனீ,

நீங்கள் சொல்வது படி பார்த்தால் கோயில்கள்,தெய்வ உருக்கள், ஆராதனைகள், விழாக்கள் எல்லாம் தேவையில்லையே? கடவுளை மனதிற்குள்ளேயே வழிபட்டு விட்டு போகலாமே? வேதங்களும் மனிதர்கள் கண்டடைந்தது தானே? தெய்வங்களே வந்து நேரிடையாக அருளவில்லை அல்லவா. 

உங்கள் வாதத்தின் படி குருக்கள், யோகிகள், ஞானிகள் என யாரும் தேவைப்படமாட்டார்கள். ஆனால் அவற்றை நம்பும் நான் அப்படி இல்லாதவற்றை நம்ப மறுக்கிறோம். எல்லாம் மார்க்கெட்டிங் படுத்தும் பாடு. :-)))

ராஜசங்கர்

2011/1/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
உண்மையிலேயே  தெய்வம் என்னும் மஹாசக்தி  ஒரு மனிதனின்  உடலில்  இறங்கினால்

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2011, 6:55:06 AM1/19/11
to mint...@googlegroups.com
 
இந்த திரைப்படங்களில் காட்டுவது போல     காளி  கடைசீக் காட்சியில்  வந்து கையில்  சூலத்துடன்  ஆடித்தான்  வில்லனைக் கொல்லுவாள், நினைத்தாலே  சிரிப்பு வருகிறது
 
சக்தி என்பவள்  மஹா சக்தி  அவள் இருக்கும் இடத்திலிருந்து  ஒரு பார்வை பார்த்தாலே  புவனமே  பொசுங்கிவிடும்  என்பது  உண்மையானால் 
 
இந்த  திரைக் காட்சிகள்  என்ன சொல்வது  என்ன?
 
தெய்வம் மஹா சக்தி என்றால் !
 
விதி மாற்ற  முடியாதது  என்றால் !
 
  சாதாரண  மனிதர்கள்  சாமியாடி  குறைகளைத்  தீர்க்கமுடியுமென்றால்
 
அல்லது  சாமியே  மனிதர்கள்மேல்  ஆவாஹனம்  செய்து  சாமியாடித்தான்  குறைகளைத் தீர்க்கவேண்டுமென்றால்  
 
அப்போது  மஹா சக்தியின்   உண்மையான  சக்தியை  கேலி செய்வது போல் இருக்கிறது  என்பதுதான்  என் வாதம்

Raja sankar

unread,
Jan 19, 2011, 7:31:58 AM1/19/11
to mint...@googlegroups.com
எப்போதிருந்து திரைப்படங்களில் காட்டும் காட்சிகள் இந்து மதத்தின் விளக்கங்கள் ஆயின என்று தெரியவில்லை. :-)))))

//அப்போது  மஹா சக்தியின்   உண்மையான  சக்தியை  கேலி செய்வது போல் இருக்கிறது  என்பதுதான்  என் வாதம்
//

அப்பேர்பட்ட மகாசக்தியை கோயிலில் ஒரு சிலையில் அடைத்து கும்பிடுவதும் கூடத்தான் அந்த உண்மையான சக்தியை கேலி செய்வது. அதை ஒப்புக்கொள்ளுபவர்கள் இறைவி மற்றவர்களுக்கு அருளுவதை ஒப்புக்கொள்வதில்லை. :-)))

சாமியாடுவது சாமியை கேலி செய்வது என்றால் பின்பு கோயிலில் நடக்கும் விழாக்கள் எல்லாம் என்னவாம்?

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2011, 7:35:43 AM1/19/11
to mint...@googlegroups.com
கோயிலில்  சாமியை வைத்து  வழிபடுவது என்பது  வேறு வாதம்
 
ஆனால் சாமியாடுவது  என்பது வேறு வாதம்

Raja sankar

unread,
Jan 19, 2011, 7:41:43 AM1/19/11
to mint...@googlegroups.com
அடுத்தவர்களுக்கு துன்பம் தராத வரையில் அவர்கள் சாமியாடி இறைவனை வணங்கி விட்டு போகட்டுமே அதில் என்ன தவறு வந்துவிட போகிறது. அவர்கள் பக்தியை அளவிட நாம் யார்? 

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2011, 8:03:48 AM1/19/11
to mint...@googlegroups.com
அவர்கள்  சாமியாடி இறைவனை வணங்குவதை   வேண்டாம்  என்று யார் சொன்னது
 
அவர்கள் சாமியாடி  அடுத்தவர் வாழ்வில்  துன்பங்களைப் போக்குகிறேன்  என்று சொல்லி
 
அவர்களைத் துன்புறுத்தாமல்  இருந்தால் போதும் என்றுதான்  சொல்கிறேன்
 
சாமியாடுதல் உண்மையா  பொய்யா  இன்னும் ஆராய்ச்சியிலேதான்  இருக்கிறது. உண்மையாய் இருக்கட்டும்,அல்லது பொய்யாய்  இருக்கட்டும்,
 
ஆனால் சில போலிகளும் இதே உத்தியைப் பயன்படுத்தி  பணம் ஈட்டும்  தொழிலாக  செய்கிறார்களே  அதைத்தான் கண்டிக்கிறேன்
 
ஆகவே சாமியாடுதல் உணர்ச்சி மிகுதியால் ஏற்படும்  ஒரு விளைவே  என்று தோன்றினாலும்
 
அந்த சாமியாடுதல் அடுத்தவரை  ஏமாற்ற உபயோகிப்படல்  தவிர்க்கப்பட வேண்டும்

Raja sankar

unread,
Jan 19, 2011, 8:32:33 AM1/19/11
to mint...@googlegroups.com
சாமியாடிகள் மட்டுமல்ல மதத்தை துணை கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் பலர். அதிலே இதுவும் ஒன்று என்று எடுக்காமல் சாமியாடுவதே தெய்வ குத்தம் என்று சொல்லவேண்டாமே. 

சாமியாடமலேயே சாமியார் வேடம் போட்டு மக்களை ஏமாற்றியவர்களையும் பார்த்தோமே, யாரும் மற்றவர்களை ஏமாற்றாமல் துன்புறுத்தாமல் இருக்கும்வரை அவரவர் முறை அவரவர்களுக்கு. 

ராஜசங்கர்



2011/1/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2011, 8:38:00 AM1/19/11
to mint...@googlegroups.com
”சாமியாடுவதே தெய்வ குத்தம் என்று சொல்லவேண்டாமே”
 
 
 
சாமியாடுவது  தெய்வக் குத்தம்  என்று இதுவரை  நான் எங்குமே  சொல்லவில்லையே!
 
சாமியாடுவது  உண்மையா பொய்யா  என்பதே விவாதம் அல்லவோ?
 
 
சாமி வந்து ஆடுவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது. போலியும்
இருக்கின்றதா என்ற உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
-சுபா
  என்பதுதானே  விவாதம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

 
2011/1/19 Raja sankar <errajasa...@gmail.com>
சாமியாடுவதே தெய்வ குத்தம் என்று சொல்லவேண்டாமே

330.gif

கால்கரி சிவா

unread,
Jan 19, 2011, 10:20:52 AM1/19/11
to mint...@googlegroups.com
சந்திரா உங்களை மறக்கமுடியுமா?
 
இந்த குழுவின் உறுப்பினர் அட்டவணையை சரியாக பார்க்கவில்லை.
 
நன்றி சந்திரா.
 
அன்புடன்
 
கால்கரி சிவா

2011/1/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif

Geetha Sambasivam

unread,
Jan 20, 2011, 3:20:52 AM1/20/11
to mint...@googlegroups.com
வாங்க கால்கரி சிவா, உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இமயமலை க்ஷேத்திராடனம் செய்யணும்னு சொல்லிட்டு இருந்தீங்க.பயணம் முடிந்ததா? இனிமேலே தான் போகணுமா?

2011/1/19 கால்கரி சிவா <calga...@gmail.com>

அன்புடன்
 
கால்கரி சிவா


kalairajan krishnan

unread,
Jan 20, 2011, 4:39:43 AM1/20/11
to mint...@googlegroups.com
On 1/20/11, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
> வாங்க கால்கரி சிவா, உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இமயமலை
> க்ஷேத்திராடனம் செய்யணும்னு சொல்லிட்டு இருந்தீங்க.பயணம் முடிந்ததா? இனிமேலே
> தான் போகணுமா?

திருச்சிற்றம்பலம்.
ஐயா கால்கரி சிவா அவர்களுக்கு வணக்கம்,
அறிமுகம்,
ஐயா, எனது பெயர் கி.காளைராசன்
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளாராகப்
பணியாற்றி வருகிறேன்,
திருப்பூவணம் கோயில் அமைப்பு அதன் சிறப்பு தொடர்பாக ஆய்வு
செய்துள்ளேன். திருப்பூவணப் புராணத்தை ஆய்வு செய்துள்ளேன்,
திருப்பூவணக் காசி, திருப்பூவணப் புராணம், புவனம் போற்றும் பூவணம் எனும்
மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்,
ஆன்மிகம் அறிவியல் அடைப்படையிலானது என ஐந்து கட்டுரைகள் எழுதி வெளியாகியுள்ளன,.
திருக்குறள் ஆய்வுக் கட்டு​ரைகள் எழுதியுள்ளேன்

தங்களை எல்​லோரும் சிறப்பு செய்வதால், தாங்கள் ஓர் நல்ல நண்பர் என்ப
தை உணர்ந்து கொள்கி​றேன்,

தங்களது குலாமில் என்​னை​யையும் இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்
http://www.freewebs.com/thirupoovanam/ என்ற இணையத்தில் திருப்பூவணப்
புராணம் மற்றும் திருப்பூவணக்காசி நூல்கள் உள்ளன. படித்துப் பயனுற
வேண்டுகி​றேன்,

கால்கரி சிவா

unread,
Jan 20, 2011, 12:13:54 PM1/20/11
to mint...@googlegroups.com
காளைராசன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் அறிமுகம் எனக்கு பெருமை.
 
வலைப்பதிவுகளில் கூட்டம் கம்மியாக இருந்த நேரத்தில் ஏதோ எழுதினேன். அதில் கிடைத்த நண்பர்கள் ஏராளம். அசாத்திய வேலை பளுவால் வலைப்பக்கம் வரவே முடியவில்லை. படிக்க முடிந்தது.
 
உங்கள் வலைப்பதிவுகளைப் படித்து பயன் அடைகிறேன்.
 
மிக்க நன்றி மற்றும் சந்தோசம்
 
கீதா மேடம், திட்டமிட படி கடந்த ஜூன் மாதம் போய்வந்துவிட்டோம். பணிக்கர் டிராவலில் சென்றோம். அந்த பரவசம் இன்னும் அடங்கவில்லை நானும் என் மனைவியும் அங்கே எடுத்த போட்ட்டோகளயும் வீடியோவையும் பார்த்துக் கொண்டே இருந்தோம். பயண அனுபவங்களை எழுத ஆரம்பித்து சோம்பறி தனத்தால் தொடரமுடியவில்லை. இனிமேல் இந்தியாவிற்கு வந்தால் டெல்லியில் இறங்கி ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கையில் குளித்துவிட்டுதான் சென்னை/மதுரைக்கு வருவதாக பேசிக்கொண்டிருக்கிறோம். ம்ம்ம்ம் பார்ப்போம்
 
கங்கையில் குளித்தது தாயின் மடியில் உறங்கியது போலிருந்தது. தனி திரியில் இதைப் பற்றி பேசலாமே

2011/1/20 kalairajan krishnan <kalair...@gmail.com>

கால்கரி சிவா

unread,
Jan 20, 2011, 1:59:03 PM1/20/11
to mint...@googlegroups.com
சாமி வந்து ஆடுவதும் பேய் பிடித்து ஆடுவதும் ஒன்றே தானே. ஒன்றில் குறி சொல்வார்கள் மற்றதில் திட்டுவார்கள் :)

2011/1/20 <nor...@boxbe.com>

Hello =?UTF-8?B?4K6V4K6+4K6y4K+N4K6V4K6w4K6/IOCumuCuv+CuteCuvg==?=,

Your message about "=?UTF-8?B?UmU6IFtNaW5UYW1pbF0g4K6a4K6+4K6u4K6/IOCuteCuqOCvjeCupOCvgSDgrobgrp8=?= =?UTF-8?B?4K+B4K614K6k4K+BIOCuieCuo+CvjeCuruCviOCur+Cuvj8=?=" was waitlisted.

Please add yourself to my Guest List so your messages will be delivered to my Inbox. Use the link below.

Click here to deliver your message

Thank you,
dr.n...@gmail.com

Boxbe
Powered by Boxbe -- "End Email Overload"


Final-Recipient: rfc822; dr.n...@gmail.com
Diagnostic-Code: X-Boxbe-Notice; Sender not pre-approved.  Follow instructions in above notice
Status: 4.7.0



---------- Forwarded message ----------
From: "கால்கரி சிவா" <calga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Date: Thu, 20 Jan 2011 12:13:54 -0500
Subject: Re: [MinTamil] சாமி வந்து ஆடுவது உண்மையா?


kalairajan krishnan

unread,
Jan 21, 2011, 12:26:32 AM1/21/11
to mint...@googlegroups.com
ஐயா கால்கரி சிவா அவர்களுக்கு வணக்கம்,
தங்களது அன்பிற்கு நன்றியுடையேன்,

> இந்தியாவிற்கு வந்தால் டெல்லியில் இறங்கி ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கையில்
> குளித்துவிட்டுதான்

தங்களது ஆன்மிக அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்,
கடந்த 1-1-11அன்று காசியில் கங்காஸ்தானம் செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன்,
தாங்கள் எழுதும்போது நானும் உடன் சேர்ந்து கொள்கிறேன்,

மதுரைக்கு வருவதாக பேசிக்கொண்டிருக்கிறோம்.

மதுரைக்கு வரும்போது அவசியம் திருப்பூவணம் (திருப்புவனம்)வந்து
செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்பன்

Tthamizth Tthenee

unread,
Jan 21, 2011, 12:57:22 AM1/21/11
to mint...@googlegroups.com
திரு   சிவா  (கால்கரி)  அவர்களே  ஏற்கெனவே  வேறு ஏதாவது  குழுமத்தில் நாம் சந்தித்திருக்கிறோமா  ?
 
  உங்களுக்கு  நல் வரவு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/21 kalairajan krishnan <kalair...@gmail.com>

Hariharas

unread,
Jan 21, 2011, 12:25:30 AM1/21/11
to மின்தமிழ்
यद् यद् अचरती श्रेष्ठः तत तद एवेतरो जनाः |
स यत प्रमाणं कुरुते लोकस तद अनुवर्तते || भगवद गीता 3-21

Whatever noble persons do, others follow.
Whatever standard they set up, the world follows.

இது போன்று தமிழ் இலக்கியத்திலும் ஏதேனும் உண்டென்றால், தயை கூர்ந்து
எவரேனும் பகிர்ந்து இந்த குழப்பத்திற்கு வழிகாட்டுங்கள்.


On Jan 20, 11:59 pm, கால்கரி சிவா <calgarys...@gmail.com> wrote:
> சாமி வந்து ஆடுவதும் பேய் பிடித்து ஆடுவதும் ஒன்றே தானே. ஒன்றில் குறி
> சொல்வார்கள் மற்றதில் திட்டுவார்கள் :)
>

> 2011/1/20 <nore...@boxbe.com>


>
> >  Hello =?UTF-8?B?4K6V4K6+4K6y4K+N4K6V4K6w4K6/IOCumuCuv+CuteCuvg==?=,
>
> > Your message about
> > "=?UTF-8?B?UmU6IFtNaW5UYW1pbF0g4K6a4K6+4K6u4K6/IOCuteCuqOCvjeCupOCvgSDgrobgrp8=?=
> > =?UTF-8?B?4K+B4K614K6k4K+BIOCuieCuo+CvjeCuruCviOCur+Cuvj8=?=" was
> > waitlisted.
>
> > Please add yourself to my Guest List so your messages will be delivered to
> > my Inbox. Use the link below.
>
> > Click here to deliver your message

> > <https://www.boxbe.com/crs?tc=6639492005_73644170>
>
> > Thank you,
> > dr.n.a...@gmail.com
>
> > [image: Boxbe] <http://www.boxbe.com/how-it-works?tc=6639492005_73644170>


> > Powered by Boxbe -- "End Email Overload"
>

> > Final-Recipient: rfc822; dr.n.a...@gmail.com

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Jan 21, 2011, 9:03:45 AM1/21/11
to mint...@googlegroups.com
கிராமங்களில் இதைப் போன்ற நிகழ்வுகள் அதிகம் உண்டே !!!!!

2011/1/18 Chandrasekaran <plastic...@gmail.com>
என் அனுபவத்தில் மதுரையில், திருநகரில் நான் பள்ளிப்படித்தபோது நடந்தது.

அண்ணாமலை பல்கலையில் விவசாயம் பயிலும் ஹாக்கி ப்ளேயர் - என் பள்ளித் தோழனின் நண்பன். அவனை திடீரென்று வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.பெண் போல் பேசுவதும் பெண் போல் நடப்பதும், நாம் காண்பதும் கேட்பதும் உண்மையா என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்கார அம்மாள், சக்தி உபாசகி. கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு, அந்த பையனை ஒரு ஓரத்தில் உட்கார வைத்து, நாலு சாத்து சாத்தினார்கள். என்னிடம், ‘அய்யரே, கந்தர் சஷ்டி கவசம் சொல்லு, தெரியுமில்லஏ,” என்றார்கள். அவரது உருளும் கண்களுக்கும், வேப்பிலைக்கும் பயந்து, மளமளவென சஷ்டி கவசம் சொல்லலானேன். கொஞ்ச நேரத்தில், ‘ மோகினிப் பேய்’ பிடித்த பையன் சொல்ல ஆரம்பித்தான்/ள்!!! காலேஜ் காம்பஸில் ஒருத்தன் அந்த பெண்ணை ஏமாற்றிக் கொன்றுவிட்டான். அவளோ படிக்காதவள். இந்த பையன் நல்லவனாய் தெரிந்ததும், இவனைப் பிடித்துக் கொண்டாள். நல்ல சாப்பாடும், ஒரு புடவையும் கொடுத்ததும், சத்தியம் செய்து மறைந்து போனாள். நண்பனின் அண்ணன் எல்லாம் சரியானதும், “ஐய்ய, இது என்ன தலைலெல்லாம் விபூதி?” என்று கடிந்து கொண்டே எழுந்திருந்தது, எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

சாமி வந்த கதை: என் பெரிய அக்காள், பக்கத்து வீட்டில் கார்த்திக் என்ற குழந்தைக்கு உண்வு ஊட்டுவதற்கு (இவள் மாத கர்ப்பிணி) ‘கார்த்திக், கார்த்திக்’ என்று கூவி அழைக்க, திருத்தணிப் ப்க்கம் சேர்ந்த அவ்ர்களது வேலைக்கார அம்மா, “யேய்,என்று கூவிக் கொண்டே எங்கள் வீட்டில் நுழைந்தாள். அவள் பெரிய முருக பக்தை. அக்கவை உட்கார வைத்து, தலையில் கை வைத்து, கூப்பிட்ட வந்துட்டேன். உன் பிரசவம் நல்லா ஆகும்.” என்று கூறியபடியே சாமி ஆடினார். என் தாயார் உடனே தைரியமாக ‘முருகா, அவ பிள்ளத்தாச்சி. என்ன வேணும் சொல்லு தர்றோம்,” என்றது. பானகம் என்று கேட்டாள்(ர்?). ஒரு குடம் பானகத்தி அப்படியே ‘லபக்’க்கிவிட்டு, முருகன் மலை இரங்கிங்!
இதுவும் கண்ணால் பார்த்தது.

இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

மனதுக்கும் மூளைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இந்த உலகில் நடந்து நமக்கு இறைவன் இருப்பதை காட்டுகிறது.பேய்களும் :(
இறை சிந்தனை தொடர்ந்து இருந்தால் ‘பேய்கள்’ அண்டா]து. சஷ்டிக் கவசம் காப்பு.


சந்திரா (சாமி)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com

Dr M.D.Jayabalan

unread,
Jan 21, 2011, 11:09:54 AM1/21/11
to மின்தமிழ்
சாமியாடிகள் தம்மை மறந்த நிலையில் ஆடுவதை நான் பல முறை
பார்த்திருக்கிறேன். பொதுவாக விழாக் காலங்களிலும் அம்மன்
கோயில்களிலும்தான் இதுபோல் நிகழும். குறிப்பாக சிறு தெய்வங்கள் உறையும்
கோயில்களில் தான் நடைபெறும்.

மேலும் பெண்கள்தான் அதிகம் ஆடுபவர்கள். சிறுவர்களும் உண்டு. ஆண்களில்
பெரும்பாலும் ஏதோ உள் நோக்கத்திற்காக உண்டு.

பொதுவாக பலவீன மனம், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பம்பை ஒலி கேட்டவுடன்
ஒரு மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்
என்பது அவர்களுக்கே தெரியாது.

ஒருவர் ஆடுவதைப் பார்த்ததும் உணர்ச்சி வயப்பட்டு மற்றவர் சிலரும் ஆடுவது
உண்டு.

உடல் பலவீனம் மட்டும் அன்றி ஒரு சமுதாய அங்கீகாரத்தையும் தனித்தன்மையை
நிலைப்படுத்தவும் சிலர் ஆடுவார்கள்.

ஒலிக்கு உணர்ச்சிகளைத் தூண்டும் தன்மை உண்டு. போருக்குச் செல்லும்
வீரர்கள் போர் முரசு ஒலிக்கக் கேட்டதும் நரம்புகள் முறுக்கேறி துள்ளிக்
குதித்துக் கொண்டு போரிடச் செல்வர்.

பெரும்பாலும் இவர்களுக்குத் தூக்கமாத்திரையும் வைடமின் மாத்திரைகளையும்
சில காலம் கொடுத்து வந்தால் அதே சூழ்நிலையிலும் ஆடாமல் அமைதியாக
மற்றவர்களை வேடிக்கை பார்க்க் காணலாம்.

கூட்டதில் ஒருவராக இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட்டத்தின்
எதிர்பார்ப்பைத் தாமும் பகிர்ந்து கொண்டவர்கள் என்பதால் அது தொடர்பான சில
கருத்துகளைக் கூறுவார்கள். அவை பலிதமாகும்போது நாம் வியக்கிறோம்.

இவர்கள் எவரும் மன நிலை பாதிக்கப் பட்டவர் அல்ல. அது வேறு நிலை. நிகழ்
உலகத்திலிருந்து நழுவி நிழல்
உலகைக் கண்டு அதற்கு ஏற்பச் செயல் புரிபவர்கள்.

இவ் விளக்கக் குறிப்புகள் சிலருக்கு ஏற்புடையனவாக இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் என்னை நோகவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.டி.ஜெயபாலன்


On Jan 19, 3:04 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> அன்பின் சுபா,
>
> நீங்கள் சொல்வது நடப்பது இங்கு இந்தியாவில் சர்வசாதாரணம். மனநல மருத்துவரிடம்
> போவது ஒரு தெய்வ குற்றமாக கருதப்படுவதால் இந்த மாதிரி ஏமாற்றும் ஆட்கள் அதிகம்.
> நீங்கள் சொன்னதை போல் நடப்பதை ஒரு ஜோசியரே என்னிடம் ஒப்புகொண்டிருக்கிறார்.
>
> பெண்களாக இருந்தால் ஆணால் பிரச்சினையும், ஆணாக இருந்தால் பெண்களால்
> பிரச்சினையும் பொதுவாக இருக்கும். இதில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக
> எல்லாவற்றையும் கறந்துவிடுவார்கள். ஆர். கே நாராயணன் இதை வைத்து ஒரு கதை எழுதி
> இருந்ததாக ஞாபகம். பொதுவாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களே
> இதில் ஏமாறுகின்றனர். அடுத்தபடியாக பேராசை கொண்டவர்களும் உழைக்காமலே சம்பாதிக்க
> விரும்பும் நபர்கள் இப்படி ஏமாறுகின்றனர்.
>
> ராஜசங்கர்
>

> 2011/1/19 Subashini Tremmel <ksubash...@gmail.com>

> > 2011/1/19 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> >>  சுபா,
>
> >> இதெல்லாம் அமானுடம் என்று தான் சொல்ல முடியும், ஏன், எப்படி என அறிவியலால்
> >> விளக்க முடிவதில்லை.
>
> >> எங்கள் ஊரில் அருள் வந்து ஆடும் ஒருவரிடம் இதைப்பற்றி
>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

கால்கரி சிவா

unread,
Jan 21, 2011, 12:25:32 PM1/21/11
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனீ அவர்களே, சிறிதுகாலம் தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் என் வலைப்பதிவுகளை சேர்த்திருந்தேன். பின்னர் பிரிந்துவிட்டேன். அங்கே சந்தித்திருக்கலாம். முதன் முறையாக ஒரு தமிழ் குழுமத்தில் பங்கேற்கிறேன். என் தமி மிக மோசமானது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.  கடந்த மூன்றுவருடங்களாக எல்லைத் தாண்டிய (வாரம் முழுவதும் வேலைக்கு அமெரிக்கா வாரயிறுதியில் ஓய்விற்க்கு கனடா) வேலைப் பளுவால் எழுத முடியவில்லை மேலும் நான் நல்ல எழுத்தாளுனும் அல்ல என்பது வேறு விஷயம்

2011/1/21 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>

--
364.gif

Tthamizth Tthenee

unread,
Jan 21, 2011, 2:27:35 PM1/21/11
to mint...@googlegroups.com
'நான் நல்ல எழுத்தாளுனும் அல்ல என்பது வேறு விஷயம்"
 
 
ஓ  அப்படியா ! பெரும் எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்ளும்  வார்த்தைகள்
 
ஜாக்கிறதையாத்தான் இருக்க வேண்டும்  உம்மிடம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


2011/1/21 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>


- Show quoted text -

சாமியாடிகள் தம்மை மறந்த நிலையில் ஆடுவதை நான் பல முறை

--


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
- Show quoted text -

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

2011/1/21 கால்கரி சிவா <calga...@gmail.com>
364.gif
330.gif

கால்கரி சிவா

unread,
Jan 21, 2011, 2:53:15 PM1/21/11
to mint...@googlegroups.com
ஐயோ எனக்கு தமிழே தடுகிடுத்தோம். 1977ல் பள்ளியில் படித்து எழுதிய தமிழ் மீண்டும் 2006 ஆல் வலைப்பதிவுகளில் ஆரம்பித்தது :) இந்த குழுவில் கற்க நிறைய இருக்கிறது ஐயா

2011/1/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
364.gif
330.gif

Tthamizth Tthenee

unread,
Jan 21, 2011, 3:02:14 PM1/21/11
to mint...@googlegroups.com
கற்போம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/22 கால்கரி சிவா <calga...@gmail.com>
364.gif
330.gif
Reply all
Reply to author
Forward
0 new messages