ஒரு மண்ணின் குரல் - சா.கி.நடராஜன்.

14 views
Skip to first unread message

sk natarajan

unread,
Sep 4, 2009, 7:03:59 AM9/4/09
to tamil, tamizh...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thera...@googlegroups.com, tamilco...@googlegroups.com, mutht...@googlegroups.com, mintamil, anb...@googlegroups.com, pals...@googlegroups.com, தமிழ் பிரவாகம், panb...@googlegroups.com, il...@googlegroups.com
ஒரு மண்ணின் குரல்

முற்றுப் பெறாத சோகம்

மனதினில் வறண்டு
போன நம்பிக்கை
எழுத்துக்களில்  எட்டிப் பார்கின்றதே
இளைஞனே
முக -  வரி  வந்தாலும் 
உன் முகவரியைத்
தொலைத்துவிடாதே
தளர்சியுற்றும் முதிர்ச்சியின்
 பக்கம் சாய்ந்து விடாதே
இன்னமும் உன்னிடம்
நிறைய எதிர்பார்த்து
எதிர்பார்த்து இமை சரியாமல்
நிற்கின்றது உலகம்
இளம்    -  புயலே
இன்னல்கள் களைந்திட
விடியலில் வந்துவிடு
விடுதலை  தந்துவிடு

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 4, 2009, 12:50:27 PM9/4/09
to mint...@googlegroups.com
நான் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சாலையில் காரை எடுத்தது இல்லை.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/9/4 sk natarajan <sknatar...@gmail.com>

sk natarajan

unread,
Sep 4, 2009, 8:38:40 PM9/4/09
to mint...@googlegroups.com
ஐயா உங்களின் பதிலின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை
எனினும் பதிலளித்தமைக்கு நன்றி
எனினும் பொருளில் குற்றம் இருப்பதாக தெரியவில்லை
சொற்களை வடித்தலில்  குற்றம் இருக்கலாம் ,இருந்தால் திருத்துங்கள் நானும் கற்றுக் கொள்கின்றேன்
நான் எல்லாம் அறிந்தவன் அல்ல
தங்களின் பதிலை எதிர்நோக்குகின்றேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்

2009/9/4 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
நான் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சாலையில் காரை எடுத்தது இல்லை.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/9/4 sk natarajan <sknatar...@gmail.com>
ஒரு மண்ணின் குரல்

முற்றுப் பெறாத சோகம்

மனதினில் வறண்டு
போன நம்பிக்கை
எழுத்துக்களில்  எட்டிப் பார்கின்றதே
இளைஞனே
முக -  வரி  வந்தாலும் 
உன் முகவரியைத்
தொலைத்துவிடாதே
தளர்ச்சியுற்றும் முதிர்ச்சியின்

 பக்கம் சாய்ந்து விடாதே
இன்னமும் உன்னிடம்
நிறைய எதிர்பார்த்து
எதிர்பார்த்து இமை சரியாமல்
நிற்கின்றது உலகம்
இளம்    -  புயலே
இன்னல்கள் களைந்திட
விடியலில் வந்துவிடு
விடுதலை  தந்துவிடு

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

Tirumurti Vasudevan

unread,
Sep 5, 2009, 1:41:49 AM9/5/09
to mint...@googlegroups.com
2009/9/5 sk natarajan <sknatar...@gmail.com>:

> ஐயா உங்களின் பதிலின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை
>
> 2009/9/4 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
>>
>> நான் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சாலையில் காரை எடுத்தது இல்லை.

மரபு சாரா கவிதைகள் பல நாட்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
உணர்ச்சிகளை மட்டுமே பாருங்கள் என்கிறார்கள்.
கவிதை ஏன் எழுத வேண்டும்? உள்ளே இருக்கிற உணர்ச்சி அடங்க... அவ்வளவே.
வேறு ஒன்றும் எதிர்பாராதீர்கள்.
திவா

sk natarajan

unread,
Sep 5, 2009, 6:23:50 AM9/5/09
to mint...@googlegroups.com
ஐயா நான் சென்றடைய வேண்டிய பாதை  எனக்குத் தெரிகின்றது
என் வார்த்தைகளும் அங்கு போய் சென்று விடுகின்றது
நான் முற்றும் கற்ற தமிழ் புலவர் அல்ல
ஆனால் என்னுள் தமிழ் பாடலாக வெளிவரும் போது அதை செதுக்க எனக்கு ஆட்கள் இல்லை
நான் சுயம்
என்னில் குறை இருந்தால் தாராளமாக சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக் கொள்கின்றேன்
மற்றபடி தமிழ் மறந்து  மற்ற மொழிகளை நம் தமிழர்கள் பேசுவதை பெருமையாக நினைக் கின்ற இந்தக் காலத்திலேயே
என்னைப் போன்ற தமிழை நேசிக்கும் தத்தித் தவழும் குழந்தைகளை தூக்கி நிறுத்த கைக் கொடுக்காவிட்டாலும் முளையிலேயே நசுக்கி விடாதீர்கள்.   இது   தமிழ் அறிஞர்கள் நிரம்பியுள்ள மின் தமிழ் குழுமத்திற்கான வேண்டுகோள்

2009/9/5 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

N. Kannan

unread,
Sep 6, 2009, 12:43:02 AM9/6/09
to mint...@googlegroups.com
நடராஜன்:

சுஜாதா இருந்த காலத்தில் சிறுகதை பட்டறைகள் நடத்துவார். அதன் நோக்கு
என்னவெனில் நமக்கு முதலில் எழுத்துப் பயிற்சி வேண்டும். அடுத்து எப்படி
சிந்திப்பது என்றும் கற்றுக் கொடுப்பார். சித்திப்பதையெல்லாம்
எழுதக்கூடாது. ஆனால் சிந்தனையைக் கூர்மை செய்ய முடியும்.

நம்மவர் எடுத்தவுடனேயே கவிதைக்கு வந்து விடுகின்றனர். உண்மையில்
கவிதையின் என்பது மொழியின் உச்ச வெளிப்பாடு. அது லலித கலை. அதற்குள்
எடுத்தவுடன் குதிக்கக்கூடாது. அதனால்தான் பெரும்பாலோர் கவிதை, உரைநடையை
மடக்கிப்போட்டது போல் உள்ளது.

உரைநடை கேவலமில்லை. உரைநடை வளர வேண்டும். முதலில் non-fiction முறையில்
உள்ளது உள்ளபடி சொல்லிப்பழக வேண்டும்.

அடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து வர்ணனை கூட்டி எழுத்திப்பழக வேண்டும்.

மொழி ஆளுமை வந்த பின்னரே கவிதைக் களத்தில் இறங்க வேண்டும்.

மொழி ஆளுமை பெற நிறைய வாசிக்க வேண்டும். எது நல்ல எழுத்து என்று இனம்
காணத்தெரிய வேண்டும்.

எழுதுவதெல்லாம் கவிதையாகாது. எது கவிதை என்றும் கணித வாய்ப்பாட்டில்
சொல்லிட முடியாது. மல்லிகையின் வாசத்தையும், மழை பெய்து முடிந்த பின்
வரும் மண்ணின் வாசத்தையும் கணக்குப்பாடத்தில் விளக்கிட முடியாது. அதை
உணர்ந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

பென்னேஸ்வரன் மாதிரி நமக்கு நிறைய `நக்கீரர்கள்` வேண்டும். விமர்சனம்
வேண்டும். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி கைவரவேண்டும்.

வாழ்த்துக்கள்.

நா.கண்ணன்

2009/9/5 sk natarajan <sknatar...@gmail.com>:


> ஐயா நான் சென்றடைய வேண்டிய பாதை  எனக்குத் தெரிகின்றது

devoo

unread,
Sep 6, 2009, 12:56:01 AM9/6/09
to மின்தமிழ்
பாசாங்கில்லாத, மனம் திறந்த வேண்டுகோள்;
பக்குவமான, முதிர்ந்த, பொதுப்படையான அறிவுரைகள்.
நல்ல மடலாடலுக்கு இது உதாரணம்.மின்னரங்கில் இதே தரம்
நிலை பெற வேண்டும்.

தேவ்

sk natarajan

unread,
Sep 6, 2009, 2:14:15 AM9/6/09
to mint...@googlegroups.com
அன்புள்ள கண்ணன் ஐயா அவர்களுக்கு  தங்களின் வார்த்தைகள் எனக்கு இனிமையாக உள்ளது
இப்போது ஒரு கேள்வி நான் எழுதிய  அல்லது கிறுக்கிய இந்த வார்த்தைகள் (ஒரு மண்ணின் குரல் )மரபுக் கவிதையாக அர்த்தம் மாறாமல் )மாற்றி சொல்லுங்களேன் நானும் கற்கிறேன்

2009/9/6 N. Kannan <navan...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 2:16:16 AM9/6/09
to mint...@googlegroups.com
ஐயா நான் தவறுகளை ஏற்கும் பக்குவம் பெற்றவன் அதே நேரத்தில் கற்கும் ஆர்வம் உள்ளவன் என ஒரு மண்ணின் குரலை  பொருள் மாறாமல்  மரபுக் கவிதையாக இதே இழையில் எழுதுங்களேன் நானும் கற்றுக் கொள்கின்றேன்

2009/9/6 devoo <rde...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 2:19:01 AM9/6/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன் ஐயா என இழையின் கேள்விக்கு நீங்கள் வேறு இழையில் ஏன் பதில் அளித்தீர்கள்
ஐயா ஒரு வேண்டுகோள் என் இழையில் இந்த ஒரு  மண்ணின் குரலை பொருள் மாறாமல் மரபுக் கவிதையாக இதே இழையில் எழுதுங்களேன் நானும் தெரிந்துக் கொள்கின்றேன் ,கற்றுக் கொள்கின்றேன்

2009/9/4 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
நான் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு முன்பு சாலையில் காரை எடுத்தது இல்லை.

N. Kannan

unread,
Sep 6, 2009, 2:26:05 AM9/6/09
to mint...@googlegroups.com
கட்டம் கட்டமாகப் போவோம்;-)

மரபில் இருந்தால்தான் கவிதை என்று இல்லை.

ஆயினும் எதையும் வெண்பாவாக்கும் வித்தகர்கள் உண்டு இச்சபையில்.

க.>

2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>:

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 2:35:04 AM9/6/09
to mint...@googlegroups.com
//எழுதுவதெல்லாம் கவிதையாகாது. எது கவிதை என்றும் கணித வாய்ப்பாட்டில்
சொல்லிட முடியாது. மல்லிகையின் வாசத்தையும், மழை பெய்து முடிந்த பின்
வரும் மண்ணின் வாசத்தையும் கணக்குப்பாடத்தில் விளக்கிட முடியாது. அதை
உணர்ந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.//
 
 என்ன ஒரு முதிர்ச்சியான பார்வை இது.  கண்ணன் நன்றாகவும் தெளிவாகவும்  சொல்கிறார். எனக்கு சொல்லத் தெரியவில்லை. 
 
நடராஜனனின் பணிவு சற்று அச்சம் தருகிறது.    ஏனென்றால் துவக்கத்தில்  இதை வி அதிகமாகன பணிவு காட்டிய துரை நேற்று இன்னும் ஒரு கவிதையல்லாத ஒன்றை எழுதியிருக்கிறார்.  அவருக்கும் நான் அறிவுரை சொல்வதாக நினைத்து ஒருமுறை எழுதியிருந்தேன்.  ஆனால் அவரும் வேறு மாதிரி தவறாகப் புரிந்து கொர்ணடு கவிதை வடிவத்தில் தன் கோபத்தைப் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார்.
 
இங்கே நடராஜனும்  தான் சொல்ல வந்தை பொருள் மாறாமல் மரபுக் கவிதைகயில சொல்லுங்கள் என்று ரொம்பவும் பணிவாகக் கேட்கிறார்.  இதுவும்தான் சற்று பயமாக இருக்கிறது.
 
இங்கே பிரச்னை மரபுக் கவிதையா புதுக்கவிதையா என்பது அல்ல.  கவித்துவம் தான் பிரச்னை என்று நினைக்கிறேன்.  மொழியை கையாள்வதில்தான் பிரச்னை என்று நினைக்கிறேன்.
 
எழுத்தாளர் மௌனியின் நெருங்கி நண்பர் ஒருவர் எனக்கும் நண்பர். அவர் ஒருமுறை சொன்னார்.  மௌனியிடம் இவர்கள் சாதாரணமாக வீட்டில் உரையாடிக் கொண்டு இருந்தபோது ஒரு எழுத்தாளரின் (பெயர் வேண்டாமே) எழுத்து நடை பற்றி பேச்சு எழுந்ததாம்.  பேசிக்கொண்டே நண்பர்களையும் வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்த மௌனி வீதியில் ஒரு சிறுவன் நாய்க்குகட்டி ஒன்றின் கழுத்தில் சணல் பிரிக்கயிற்றைக் கட்டி இழுக்க அந்தக் குட்டிநாய் ஏகத்துக்கும் முரண்டு பிடித்து நகரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்ததாம்.
 
மௌனி என் நண்பரிடம் சொன்னாராம்.
 
“இந்தப் பையன் பண்ற காரியத்தைத்தான்  ‘அவன்’ தமிழை வச்சிண்டு பண்ணிண்டு இருக்கான்”
 
பொதுவாக உரைநடையிலும் சரி.  உரைநடை சார்ந்த கவிதையிலும் சரி.  வேறு எந்தக் கவிதையிலு் சரி. இந்த வேலையைப் பண்ணாமல் இருக்க முயற்சித்தாலே ஒரு நல்ல கவிதைக்கான துவக்கத்தை நோக்கி நாம் நகரத் துவங்குவோம் என்பது என்னுடைய நம்பிக்கை.
 
இதைத்தான் கவிதை எழுதத்துவங்கும் நண்பர்களிடம் சொல்ல முயற்சிப்பது.  என்ன பிரச்னை என்றால் என்னால் தளுக்காக சொல்ல முடிவதில்லை.  (வேறு பல விஷயங்களில் எத்தனையோ சாமர்த்தியங்கள் இருந்தாலும்)  இதுபோன்ற விஷயங்களில் எங்காவது அநியாயத்துக்கு மாட்டிக் கொள்கிறேன்.
 
கண்ணன் சொல்வது போல நக்கீரன் என்றெல்லாம் கிடையாது. கொஞ்சம் அதிகப் பிரசங்கம் அவ்வளவுதான்.  நக்கீரனுக்கும் (நான் சொல்வது தாடி உடைய நக்கீரன்) எனக்கும் மிகப்பெரிய வித்யாசம் நக்கீரன் மிகப்பெரிய அறிவாளி.  ஞானி.  அவர் அரனையே கேள்வி கேட்டவர். நான் பூசாரிகளுக்கு எல்லாம் நடுங்கிக் கொண்டு இருப்பவன்.
 
இந்த மாத ஜோசியத்தில் அதிகம் பேசக்கூடாது என்று எனக்கு  அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
கமலம் அம்மையர் துவங்கிய இன்னொரு இழையில் நடராஜனுக்கு நான் ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன்.
 
அதை அவர் படித்தாரா என்று தெரியவில்லை.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
  
2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>
 
 
--
 

sk natarajan

unread,
Sep 6, 2009, 3:00:48 AM9/6/09
to mint...@googlegroups.com
காத்திருப்பேன் ஐயா
மரபுக் கவிதையோ  /மரபு சாராத கவிதையோ
ஒரு மண்ணின் குரல்  - பொருள் மாறாமல் படையுங்கள்
கற்க ஆவலாகயிருக்கின்றேன்  

2009/9/6 N. Kannan <navan...@gmail.com>
கட்டம் கட்டமாகப் போவோம்;-)

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 3:04:40 AM9/6/09
to mint...@googlegroups.com
தோழர் நடராஜன் அவருடைய மண்ணின் குரலை மரபுக் கவிதையாக்க அன்பு வேண்டகோள் விடுத்து இருக்கிறார்.
 
என் ஜென்மத்தில் நான் ஒரு கவிதை கூட எழுதியது கிடையாது.  எழுத எப்போதும் முயற்சித்ததும் இல்லை.   தமிழ் மொழிக்கு நான் ஆற்றும் அரிய தொண்டாக நினைத்து இதனை மிகவும் பிடிவாதமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
 
நீங்கள் என்னிடம் கொடுக்கும் மண்ணின் குரல் கவிதையை நான் எழுதினால் இன்னும் மஹா கண்றாவியாக இருக்கும். 
 
ஆனால் அதற்காகக் கவிதைகள் படிக்கக் கூடாது என்றோ நல்ல கவிதைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றோ ஆசைப்படக் கூடாது என்றோ சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
 
ரசத்தில் உப்பு சற்று தூக்கல் என்றால் இந்தக் கல்யாணத்தில்  ராத்திரி பந்திக்கு நீயே ரசம் தயாரித்து பரிமாறு என்று என்னிடம் சமையல்காரர்கள் யாரும் இதுவரை கேட்டதில்லை.  கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை.
 
நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்.   இப்படி  எல்லாம் புதிது புதிதாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது.  
 
நடராஜன், உங்கள் தேடலும் கேள்விகளும் உங்களை நல்ல கவிதைகளைக் கண்டிப்பாக எழுத வைக்கும்.
 
கவிதை எழுத முன்வருவது என்பது எல்லோராலும் முடியாது.    உங்கள் துவக்கம் தேடலுடன் துவங்கி இருக்கிறது.
 
ஆரம்ப சுறுசுறுப்பில் எழுதுபவர்கள் கொஞ்ச நாட்களில் விட்டு விடுவார்கள். உள்துறை அமைச்சகத்தில் நான் பணிபுரிந்தபோது என்னுடைய உயர் அதிகாரி ஒருவரின் மனைவி  ஒருநாள் திடீரன்று ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் துவங்கினார்.   அவர் எழுதிய  கவிதைகளை  அலுவலக ரீதியாக அவர்கள் வீட்டுப்போக நேரிடும் என்னைப் போன்ற அடிமைகளை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து    தன் கவிதைகளைப் படித்துக் காண்பித்து வதை செய்வார்கள்.
 
மரண வேதனையாக இருக்கும். 
 
இப்போதெல்லாம்  அந்த அம்மா ரெய்கியில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.  இப்போது நான் இருந்த இடத்தில் இருக்கும் என்னைப் போன்ற அடிமைகள் அந்த அம்மாவுக்காக ரெய்கி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  விருப்ப ஓய்வு எடுக்காமல் இருந்திருந்தால் நானும் இப்போது அந்த அம்மையாரிடம் ரெய்கி கற்றுக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.   
 
வேலையை விட்ட பிறகு அந்த அம்மையாரை ஓரிடத்தில்  சந்தித்த போது கேட்டேன். கவிதைகள் எழுதிக் கொண்டு இருந்தீர்களே இப்போது எழுதுவது இல்லையா என்று.   அதற்கு அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் ரெய்கியின் மேன்மை குறித்து்ப் பேசத் துவங்கினார். 
 
சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்போதாவது நான் சந்திக்கும்போது அந்த அம்மையார்  மண்பாண்டங்கள் செய்வது பற்றியும் வகுப்பு எடுக்கலாம்.
 
 
பென்னேஸ்வரன்

 
2009/9/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 3:06:46 AM9/6/09
to mint...@googlegroups.com
2009/9/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
இங்கே நடராஜனும்  தான் சொல்ல வந்தை பொருள் மாறாமல் மரபுக் கவிதைகயில சொல்லுங்கள் என்று ரொம்பவும் பணிவாகக் கேட்கிறார்.  இதுவும்தான் சற்று பயமாக இருக்கிறது.
 
நடராஜன் பணிவாக கேட்பதால்..அவருக்கு முதிர்ச்சி உள்ளது என்று நான் நம்புவதால்...

வரி வரியாக கிழி கிழி என்று கிழியுங்களேன்  அந்த "கவிதையை"
நாங்களும் கொஞ்சம் கவிதை பற்றி தெரிந்து கொள்கிறோம்.
திவா

Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 3:10:55 AM9/6/09
to mint...@googlegroups.com
2009/9/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
நீங்கள் என்னிடம் கொடுக்கும் மண்ணின் குரல் கவிதையை நான் எழுதினால் இன்னும் மஹா கண்றாவியாக இருக்கும். 
 
ஆனால் அதற்காகக் கவிதைகள் படிக்கக் கூடாது என்றோ நல்ல கவிதைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றோ ஆசைப்படக் கூடாது என்றோ சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

பிஜி வோடவுஸ் மாதிரி கவிதைகள் எழுதுவீங்களா? அவர் கதைகளிலே பல இடங்களிலே கவிஞர்கள் வந்து லொள்ளு பண்ணுவாங்க!

விமர்சகர் படைக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கணும்ன்னு ஒண்ணும் இல்லையே?

திவா


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Geetha Sambasivam

unread,
Sep 6, 2009, 3:11:29 AM9/6/09
to mint...@googlegroups.com
//ரசத்தில் உப்பு சற்று தூக்கல் என்றால் இந்தக் கல்யாணத்தில்  ராத்திரி பந்திக்கு நீயே ரசம் தயாரித்து பரிமாறு என்று என்னிடம் சமையல்காரர்கள் யாரும் இதுவரை கேட்டதில்லை.  கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை.//

sk natarajan

unread,
Sep 6, 2009, 3:14:06 AM9/6/09
to mint...@googlegroups.com
2009/9/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
//எழுதுவதெல்லாம் கவிதையாகாது. எது கவிதை என்றும் கணித வாய்ப்பாட்டில்
சொல்லிட முடியாது. மல்லிகையின் வாசத்தையும், மழை பெய்து முடிந்த பின்
வரும் மண்ணின் வாசத்தையும் கணக்குப்பாடத்தில் விளக்கிட முடியாது. அதை
உணர்ந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.//
 
 என்ன ஒரு முதிர்ச்சியான பார்வை இது.  கண்ணன் நன்றாகவும் தெளிவாகவும்  சொல்கிறார். எனக்கு சொல்லத் தெரியவில்லை. 
 
நடராஜனனின் பணிவு சற்று அச்சம் தருகிறது.  
  
   ஐயா  நான் வாய் பேச முடியாத மாணவர்களுக்கு ஆசிரியராக பணி புரிபவன் -  சமுக அறிவியல்  எனது  பாடம்
தமிழில் இலக்கண சுத்தமாக் கவிதை எழதத் தெரியாது
நிற்க  -. என பணிவு  உங்களுக்கு ஏன் அச்சம் தர வேண்டும் 
 
  ஏனென்றால் துவக்கத்தில்  இதை வி அதிகமாகன பணிவு காட்டிய துரை நேற்று இன்னும் ஒரு கவிதையல்லாத ஒன்றை எழுதியிருக்கிறார்.  அவருக்கும் நான் அறிவுரை சொல்வதாக நினைத்து ஒருமுறை எழுதியிருந்தேன்.  ஆனால் அவரும் வேறு மாதிரி தவறாகப் புரிந்து கொர்ணடு கவிதை வடிவத்தில் தன் கோபத்தைப் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார்.
 துரை அவர்களையும் என்னையும் ஒப்பிட வேண்டாமே 
இங்கே நடராஜனும்  தான் சொல்ல வந்தை பொருள் மாறாமல் மரபுக் கவிதைகயில சொல்லுங்கள் என்று ரொம்பவும் பணிவாகக் கேட்கிறார்.  இதுவும்தான் சற்று பயமாக இருக்கிறது.
 இதில் பயமென்ன இருக்கின்றது 
தவறு என்று சுட்டிக் காட்டினால் அதை திருத்தவும் செய்யவேண்டுமல்லவா  குறைகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்ட முடியுமே 
இங்கே பிரச்னை மரபுக் கவிதையா புதுக்கவிதையா என்பது அல்ல.  கவித்துவம் தான் பிரச்னை என்று நினைக்கிறேன்.  மொழியை கையாள்வதில்தான் பிரச்னை என்று நினைக்கிறேன்.
 அதைத்தான் சொல்லுங்கள் என்கிறேன் 
எழுத்தாளர் மௌனியின் நெருங்கி நண்பர் ஒருவர் எனக்கும் நண்பர். அவர் ஒருமுறை சொன்னார்.  மௌனியிடம் இவர்கள் சாதாரணமாக வீட்டில் உரையாடிக் கொண்டு இருந்தபோது ஒரு எழுத்தாளரின் (பெயர் வேண்டாமே) எழுத்து நடை பற்றி பேச்சு எழுந்ததாம்.  பேசிக்கொண்டே நண்பர்களையும் வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்த மௌனி வீதியில் ஒரு சிறுவன் நாய்க்குகட்டி ஒன்றின் கழுத்தில் சணல் பிரிக்கயிற்றைக் கட்டி இழுக்க அந்தக் குட்டிநாய் ஏகத்துக்கும் முரண்டு பிடித்து நகரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்ததாம்.
 
மௌனி என் நண்பரிடம் சொன்னாராம்.
 
“இந்தப் பையன் பண்ற காரியத்தைத்தான்  ‘அவன்’ தமிழை வச்சிண்டு பண்ணிண்டு இருக்கான்”
ஐயா உண்மையில் இந்த உதாரணம் உங்களுக்கு பெருமை சேர்க்கக் கூடியதா  ?
பொதுவாக உரைநடையிலும் சரி.  உரைநடை சார்ந்த கவிதையிலும் சரி.  வேறு எந்தக் கவிதையிலு் சரி. இந்த வேலையைப் பண்ணாமல் இருக்க முயற்சித்தாலே ஒரு நல்ல கவிதைக்கான துவக்கத்தை நோக்கி நாம் நகரத் துவங்குவோம் என்பது என்னுடைய நம்பிக்கை.
ஐயா  உங்க பாணியிலே  சொல்ல வேண்டுமென்றால்  கார் ஓட்ட வேண்டுமென்றால் காருக்குள்  உட்கார்ந்து தான் பழக வேண்டும்
 காருக்கு வெளியே நின்று கற்றுக்  கொள்ள முடியாது

இதைத்தான் கவிதை எழுதத்துவங்கும் நண்பர்களிடம் சொல்ல முயற்சிப்பது.  என்ன பிரச்னை என்றால் என்னால் தளுக்காக சொல்ல முடிவதில்லை.  (வேறு பல விஷயங்களில் எத்தனையோ சாமர்த்தியங்கள் இருந்தாலும்)  இதுபோன்ற விஷயங்களில் எங்காவது அநியாயத்துக்கு மாட்டிக் கொள்கிறேன்.
 
கண்ணன் சொல்வது போல நக்கீரன் என்றெல்லாம் கிடையாது. கொஞ்சம் அதிகப் பிரசங்கம் அவ்வளவுதான்.  நக்கீரனுக்கும் (நான் சொல்வது தாடி உடைய நக்கீரன்) எனக்கும் மிகப்பெரிய வித்யாசம் நக்கீரன் மிகப்பெரிய அறிவாளி.  ஞானி.  அவர் அரனையே கேள்வி கேட்டவர். நான் பூசாரிகளுக்கு எல்லாம் நடுங்கிக் கொண்டு இருப்பவன்.
 
இந்த மாத ஜோசியத்தில் அதிகம் பேசக்கூடாது என்று எனக்கு  அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
கமலம் அம்மையர் துவங்கிய இன்னொரு இழையில் நடராஜனுக்கு நான் ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன்.
இது  தான் ஏன்ஐயா  ?
என இழையில் தானே நீங்கள் பதில் சொல்லி இருக்க வேண்டும்
என வீட்டிற்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை  வேறு ஒருவர் வீட்டிற்கு அனுப்புதல் முறையா ?
அதை அவர் படித்தாரா என்று தெரியவில்லை.
 படித்தேன்  அதனால் தான் உங்களுக்கும் ஏன் எனக் கேட்டு பதில் அனுப்பித்தேனே  ஐயா

sk natarajan

unread,
Sep 6, 2009, 3:22:35 AM9/6/09
to mint...@googlegroups.com
ஐயா
வரி வரியாக கிழி கிழி என்று கிழியுங்களேன்  அந்த "கவிதையை"
நாங்களும் கொஞ்சம் கவிதை பற்றி தெரிந்து கொள்கிறோம்.
திவா

நீங்கள் எப்படி தயாரித்தாலும் எனக்கு சம்மதமே
கிழி கிழி  என்றோ  டர் டர் என்றோ
ஆனால் எனக்கு என "ஒரு மண்ணின் கதை" - பொருள் மாறாமல்
மரபுக் கவிதை யாக நீங்கள் படைத்துத் தரவேண்டும்
நானும் அந்தக் கவிதைக் கண்டு கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்
2009/9/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 3:24:17 AM9/6/09
to mint...@googlegroups.com
விமர்சகர் படைக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கணும்ன்னு ஒண்ணும் இல்லையே?

திவா

விமர்சிக்கும் பொருளின் -- ஞானம் உள்ளவர்கள் விமர்சனம் செய்வது தான் முறை

2009/9/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 3:32:17 AM9/6/09
to mint...@googlegroups.com
கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வணக்கம்
நான் எழுதிய அல்லது கிறுக்கிய ஒரு மண்ணின் குரல் இந்தக் குழுமத்தில் ஒரு சிலரால் கவிதையே இல்லை அது என சொல்லப் பட்டுள்ளது மரபுக் கவிதை தான் வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது
இந்தக் குழுமம் கற்ற அறிஞர்கள் பலர் நிரம்பிய குழுமம்
எனக்கு மரபுக் கவிதை தெரி யாது
நான் சுயம்
என மண்ணின் குரல் - பொருள் மாறாமல் மரபுக் கவிதையாக படைக்கும் படி என் கிறுக்கல்களை விமர்சித்தவர்களிடம்  கேட்டுள்ளேன்
இந்த நிலையில் உங்களின் பதில் என கேள்விக்கு பொருந்தவில்லையே அம்மா
என நிலையை அறீவீர்கள்    என  நம்புகின்றேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்

2009/9/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 4:09:44 AM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>

விமர்சகர் படைக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கணும்ன்னு ஒண்ணும் இல்லையே?

திவா

விமர்சிக்கும் பொருளின் -- ஞானம் உள்ளவர்கள் விமர்சனம் செய்வது தான் முறை

உண்மைதான். சுப்புடு பாடினா எப்படி இருக்குமோ தெரியாது. ஆனா அவருக்கு  சங்கீதத்தில் உள்ள நெளிவு சுளீவுகள் தெரியும். அப்படித்தான் நீங்க எழுதினா கண்ராவியா இருக்கும்னாலும் விமர்சனம் நுட்பமா செய்ய முடியுமானா செய்யுங்க என்கிறேன். நல்லா இருக்கு இல்லைன்னு யார் வேணுமானாலும் சொல்லிடலாம். அது ஏன் நல்லா இல்லை? ஆ! அது சொல்ல இன்னும் திறமை வேணும்; ஞானம் வேணும்.

Tthamizth Tthenee

unread,
Sep 6, 2009, 4:20:50 AM9/6/09
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய  சா கி  நடராஜன் அவர்களே
 
 
 
 
 
1.  கிருஷ்ணனின் புல்லாங்குழலுக்கு மயங்கி  பூலோகமே ஆடும்
 
2. தில்லை நடராஜனின் ஆட்டத்துக்கு ஏற்ப வரும் தாள கதியின் இசைக்கு
புவனமே தாளம் போடும்
 
3. மகுடியின் இசைக்கு  நாகம் மயங்கும் என்றும் சொல்லுவார்கள்
 
(நாகத்துக்கு காதுகள் கிடையாது  என்று சிலர் கூறுகின்றனர்)
 
அறு சுவை நடராஜனின்  சுவையான உணவை  உண்டு பலர் பாராட்டுவர்
 
குன்னக்குடியின்  வயலினிசையை குழந்தைகளும் விரும்புவர்
 
டீ எம் சௌந்திரராஜனின்  குரல் வளத்துக்கும், பாடலுக்கும்  எல்லோருமே மயங்குவர்
 
ஆனால்  மயங்கும் அனைவருக்கும் இசை நுணுக்கம் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை
 
 
கவிதையை  விமர்சிப்பவர்கள் அனைவருக்கும்  கவிதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும்  என்கிற அவசியமில்லை
 
கவிதை  எழுதத் தெரிந்தவர்களுக்கு  விமரிசிக்கத் தெரியவேண்டும் என்கிற அவசியமும் இல்லை
 
 
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை
 
நான் சாப்பாட்டு ராமன்
 
உப்புமா  சுவையாக இல்லையென்றால் சொல்லி விடுவேன்
 
ஆனால்  குறைவது, அதிகமாயிருப்பது  உப்பா   ரவையா  தெரியாது
 
அன்புடன்'
 
தமிழ்த்தேனீ
 
 
 
 


 

sk natarajan

unread,
Sep 6, 2009, 4:40:15 AM9/6/09
to mint...@googlegroups.com
அன்புள்ள  திருமூர்த்தி அவர்களுக்கு
நீங்க எழுதினா கண்ராவியா இருக்கும்னாலும் விமர்சனம் நுட்பமா செய்ய முடியுமானா செய்யுங்க என்கிறேன். நல்லா இருக்கு இல்லைன்னு யார் வேணுமானாலும் சொல்லிடலாம். அது ஏன் நல்லா இல்லை? ஆ! அது சொல்ல இன்னும் திறமை வேணும்; ஞானம் வேணும்.
நீங்கள் கற்றவர்கள்
நானும் கற்றவன்
எனக்கு மரபுக் கவிதை எழுத  தெரியாமல் இருக்கலாம்
உங்களுக்கு அது எழுத  வருமா எனத் தெரி யாது  எனக்கு
ஆனால் மரபு மீறி நான் பேசுவதுக்  கிடையாது
என் வரிகளிடம்  நீங்கள் காணும் குறைகளைக்  களைந்து எழுதிக் காட்டுங்கள் என்கிறேன்
நல்ல சொற்கள் இருக்கும் போது அவற்றையே பயன்படுத்துவோமே
2009/9/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 6, 2009, 4:54:15 AM9/6/09
to mint...@googlegroups.com
பதில் உங்களுக்கோ நீங்கள் எழுதியதற்கோ இல்லை, திரு பெண்ணேஸ்வரன் அவர்களின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னைக் கவர்ந்ததால் பதில் கொடுத்தேன். அவ்வளவே! நன்றி.

2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 4:55:52 AM9/6/09
to mint...@googlegroups.com
பெறு மதிப்பிற்குரிய தமிழ்த் தேனீ ஐயா அவர்களுக்கு வணக்கம்
தங்களின் அழகான எடுத்துக்காட்டுக்கள்  அருமையாக  உள்ளது

ஐயா "ஒரு மண்ணின் குரல்"  என்று ஒன்றினை எழுதிவிட்டேன்
அதை இந்தக் குழு நண்பர்கள்  மரபுக் கவிதை தான் உயர்ந்தது
உன் எழுத்தில் கவிதை இல்லை
கவிதை என்றால் தெரியுமா உனக்கு
கார் ஓட்டக் கற்றுக் கொண்டு  கார் ஒட்டு
இன்னும் பலவிதமாக  விமர்சித்தனர்
ஐயா ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் திறமை பெற்று இருப்பார்
எனக்கு சைகை மொழி  திறம்பட தெரியும்
ஆனால் அது எனக்கு தெரியும் என்று என்றுமே இறுமாப்பு அடைந்ததில்லை
மாறாக அதன் மூலமாக  இந்த உலகில்  புறக்கணிக்க பட்டுள்ள
வாய் பேசமுடியாத மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களும் அறிந்திராத  அந்த மொழியின் மூலம் இந்த உலக நடத்தைகளை என மாணவர்களுக்கு
நான் போதித்து  வருகின்றேன் முப்பது ஆண்டுகளாக இம்மொழி கற்க விரும்புவர்களுக்கு இலவசமாகவே கற்றுக் கொடுத்து  வருகின்றேன்
ஐயா இந்தக் குழுமத்தில் நான் எழுதிய  வரிகளில் தவறினைக் கண்டவர்களிடம்  இதை உங்களுக்குப் பிடித்த மரபுக் கவிதையாக  என வரிகளின் பொருள் மாறாமல் இயற்றிக் காண்பியுங்கள் நானும் உங்களிடம் இருந்துக்  கற்றுக் கொள்கின்றேன் என்றேன்இது  தவறா ஐயா  ?
அதைச் செய்யாமல் வேறு வழிகளில் என கவனத்தை திருப்புகின்றனர் இருப்பினும் என வேண்டுகோள் நிறைவேறும் வரை நானும் காத்திருப்பேன்
தாங்கள் என நிலை அறிவீர்கள் என நம்புகின்றேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன், 

2009/9/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 4:59:55 AM9/6/09
to mint...@googlegroups.com
உங்களின் தன்னிலை விளக்கத்திற்கு நன்றி அம்மா

2009/9/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Sep 6, 2009, 5:07:43 AM9/6/09
to mint...@googlegroups.com
ஐயோ! எனக்கும் சிரித்து மாளல :-)
 
எங்க சித்தி பையன் ஒரு முறை எங்க அம்மா, எங்க அப்பாவிற்கு ஒரு கரண்டி சக்கரைப் பொங்கல் கூட வைத்ததைப் பார்த்துவிட்டு, 'பெரியம்மா, எனக்கு ஓரவஞ்சகம் பண்றா!' அப்படின்னு பெரிய வார்த்தையைப் போட்டுட்டான். வந்ததே கோபம். அவனைத்திரு, திருன்னு ஒரு அறைக்கு அழைத்துபோய் குண்டான் சக்கரைப் பொங்கலையும் வைத்து கதவை மூடிவிட்டார்கள். சாப்பிட்டு முடித்தால்தான் திறப்பேன் என்று. ஜென்மத்திற்கும் மறக்கமுடியாத தண்டனை.
 
இப்ப நம்ம பென்னேஸ்வரன் அப்படி மாட்டிக்கிட்டார் :-))))
 
க.>

2009/9/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Sep 6, 2009, 5:21:49 AM9/6/09
to mint...@googlegroups.com
நடராஜன்:

உங்கள் அன்பையோ, அடக்கத்தையோ, உங்கள் திறமைகளையோ யாருமே இங்கு குறைத்து
மதிப்பிடவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை.

கவிதை அழகியல் சார்ந்த பிரச்சனை.

கவிதை என்பது சீரிலோ, தளையிலோ, மொழி வீச்சிலோ இருப்பதில்லை. மல்லிகையின்
வாசமாக, தெய்வத்தின் அருளாக ஊடு பாய்ந்து இருக்கிறது. அதை எப்படி
விளக்குவது?

மின்தமிழ் குழுவின் 'ரசனையை' நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை
நல்ல ரசிகராக்க முயல்கிறார்கள்.

எனவே நான் நல்ல கவிஞன் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்று தன்னிரக்கம்


கொள்ள வேண்டாம்.

முன்பு துரைக்கு பதில் சொல்லிய சித்தன் சில கவிதைகளை இங்கு இட்டார்.
யுகமாயினியில் வெளிவரும் கவிதைகளை இங்கு அவர் தொடர்ந்து இடலாம் (கூடல்
திணை).

ஸ்ரீரங்கம் மோகனரங்கன், உலகின் ஆகச்சிறந்த கவிதைகளை எடுத்து
தமிழாக்கியுள்ளார். அவர் கவிதை பற்றிய ஒரு திறனாய்வு செய்கிறார்
அப்புத்தகத்தில். அதைப் படித்துவிட்டால் இங்கு நம்மால் கவிதையே செய்ய
முடியாது. அது பெரிய சமாச்சாரம். அவரும் இது பற்றி ஏதாவது
சொல்லித்தந்தால் நல்லது.

மரபு பற்றி சொல்லித்தர ஹரி.கி, நா.கணேசன் போன்றோர் உள்ளனர். அமுதாவின்
மரபுக் கவிதைகளை வாசீத்தீர்களோ?

ஒரு குழுமத்திற்கு வந்தால் அதன் நாடியைப் முதலில் புரிந்து கொள்ள முயல
வேண்டும். இப்போதெல்லாம் ஒரு மடலை எழுதி 10 மடலாடற்குழுக்களுக்கு
அனுப்பிவிடுகின்றனர். எந்தக்குழுவின் மனோலயமும் புரியாமல். நீங்கள்
அப்படியென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். மின்தமிழின் நடையை ஊன்று
கவனியுங்கள்.

வேதாந்த தேசிகன் எழுதுகிறார் இறைவன் பற்றி, 'நானும் நீயும் ஒன்றே!
என்னுள் நீ உறைதலால்' என்று. அவன் நம் எல்லோருள்ளும் உறையும் போது உங்களை
யாருடன் ஒப்புநோக்கி சமன்சீர் செய்யவியலும்? அஞ்சற்க!

கண்ணன்

2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>:

sk natarajan

unread,
Sep 6, 2009, 5:31:33 AM9/6/09
to mint...@googlegroups.com
ஐயா உங்களின் பதிலுக்கு நன்றி
உங்களின் அறிவுரைகளைக் கடைப்  பிடிப்பேன் நான்
ஆனால் இன்னும் என விண்ணப்பம் இந்தக் குழுமத்தில் நிறைவேறாமல் இருக்கின்றது
நான் என்ன முடியாததையாக்  கேட்டுவிட்டேன்
என்  ஒரு  மண்ணின் குரலுக்கு  பொருள் மாறாமல் மரபுக் கவிதையில்
இயற்றுக் காட்டும் வரைக் காத்திருப்பேன்
நானும் கற்றுக்கொள்வேன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன். 

2009/9/6 N. Kannan <navan...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 5:37:32 AM9/6/09
to mint...@googlegroups.com
கண்ணன் சொல்வதுபோல நான் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டது போலத்தான் தெரிகிறிது.
 
நான் ஏதோ உண்மையாகவே நல்லது சொல்வதாக நினைத்து எதையோ சொல்லி வைத்து இப்படி என்னைப் பின்னிப் பெடல் எடுக்கிறார் நடராஜன்.
 
நடராஜன், தயவு செய்து இந்த முழு இழையையும் பாருங்கள்.  எங்காவது ஓரிடத்தில் நான் மரபுக் கவிதைதான் சிறந்தது என்றோ நீங்கள் மரபுக் கவிதை எழுதவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேனா?
 
சற்றுப் பொறுமையாக இருந்து கவிதையைக் கையாளுங்கள் என்ற தொனியில்தான் நான் சொன்னதாக நினைத்துக் கொள்கிறேன். 
 
என்னை நான் சரியாக முன்வைக்க வில்லையோ என்று இப்போது தோன்றுகிறது.
 
இன்னொரு இழையில் பதில் அளித்ததற்குக் கூட கோபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.   அந்த இழையில் தமிழில் மிகவும் உன்னதமான கவிதைப் படைப்புக்களைப் படைத்த தருமு சிவராமு அவர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதைப் படித்து விட்டு அதன் தொடரச்சியாக அப்படியே உங்களுக்கும் எழுதயிருந்தேன். அந்த இழையை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.  நீங்கள் தருமு சிவராமுவின் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்.
 
கவிதையின் அழகியலுக்காக அப்படிச் சொன்னேன்.  நீங்கள் கவிதை இலக்கணம் படிக்க வேண்டும் என்றோ கவிதை இலக்கணம் படித்தால்தான் கவிதை எழுதவேண்டுட்ம என்றோ சொல்லவில்லை.
 
நான் கார் ஓட்டுவதை உதாரணமாக சொன்னது உஙகளை எந்த வகையிலும் புண்படுத்துவதற்காக அல்ல.  ஆனால் நீங்கள் போடுகிற போட்டைப் பாத்தால் மனது கஷ்டப் பட்டு இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.  அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
 
அதே போல மௌனி தொடர்பான சம்பவம் குறித்த உதாரணம்,  மொழியை உரைநடையிலும் கவிதையிலும் சரளமாக, கஷ்டப் படாமல் கையாள வேண்டும் என்ற பொருளில்தான்.
 
எல்லாம் சரி. உங்கள் பணியைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். 
 
அதைவிட அற்புதமான கவிதை வேறு எதுவாக இருக்க முடியும்?
 
இந்தக் கவிதை பற்றி எல்லாம் அதிகமாக உணர்ச்சிவசப் படாதீர்கள்.
 
மீண்டும் சொல்கிறேன்.  மீண்டும் இன்னும் ஒருமுறை சொல்கிறேன். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு வருத்தப்படாதீர்கள்.
 
நிறைய படியுங்கள்.  நான் இங்கே படியுங்கள் என்று சொல்வது தமிழ் யாப்பு குறித்த இலக்கணத்தை அல்ல.
 
மற்றவர்கள் எழுதிய நல்ல கவிதைகளைப் படியுங்கள்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/9/6 N. Kannan <navan...@gmail.com>
2009/9/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

துரை.ந.உ

unread,
Sep 6, 2009, 5:42:49 AM9/6/09
to mint...@googlegroups.com
On 9/6/09, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> wrote:
 
 
நடராஜனனின் பணிவு சற்று அச்சம் தருகிறது.    ஏனென்றால் துவக்கத்தில்  இதை வி அதிகமாகன பணிவு காட்டிய துரை நேற்று இன்னும் ஒரு கவிதையல்லாத ஒன்றை எழுதியிருக்கிறார்.  அவருக்கும் நான் அறிவுரை சொல்வதாக நினைத்து ஒருமுறை எழுதியிருந்தேன்.  ஆனால் அவரும் வேறு மாதிரி தவறாகப் புரிந்து கொர்ணடு கவிதை வடிவத்தில் தன் கோபத்தைப் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார்.
 
 
அன்பின் அய்யாவுக்கு ,
வணக்கம் . என்னை மறக்காமல் இருந்ததற்காக நன்றிகள் பல.
 
இந்த இழையில் நான் எப்படி வந்தேன் ?
எனது பணிவில் சந்தேகம் வரும் படி என்ன நிகழ்ந்தது?
பொதுவில் எழுதிய சொற்கோவை  [க(தை)விதை] ஒன்றில் எப்படி நீங்கள் உங்களை உணர்ந்தீர்கள்?
அது எப்படி இரண்டுவரி தாண்டுவதற்குள் கவிதையல்லாத ஒன்று, கவிதை வடிவுக்குள் வந்தது ?
 
அது சமூகத்தின் மீதான கோபம்,அந்த மாதிரியானவர்களின் மீதான கோபம்
அது உங்கள் மீதான கோபமாக  நீங்கள் எடுத்துக்கொண்டால்.......?
 
 
 
 
தவறான புரிதலுக்கு வழிவகுத்திருந்தால் மன்னிக்கவும் _/\_
 
 
அய்யாவுக்கு எனது வருகை இடைஞ்சலாகத் தெரிந்தால்
ஒருவிரலால் புறம்தள்ளுங்கள் . விலகிக் கொள்ளுகிறேன்

 
--

என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 5:46:35 AM9/6/09
to mint...@googlegroups.com
இது என்ன கல்யாண வீடு மாதிரி் ஆகிவிட்டது.  ஆளாளுக்கு முறுக்கிக் கொள்கிறார்கள்?
 
இதுக்கெல்லாம் ஒதுங்கணுமா துரை?
 
உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல முயற்சித்து கவிதையில் எனக்கு நீங்கள் அறிவுரை சொல்ல  முயற்சிக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன்.
 
அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சி.  அப்படித்தான் என்றாலும் வருத்தம் இல்லை.
 
தொடருங்கள் உங்கள் கவிதைப் பணியை.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 


 
2009/9/6 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 6, 2009, 5:59:57 AM9/6/09
to mint...@googlegroups.com

அன்புள்ள சா கி நடராஜன் அவர்களே

ஒரு மண்ணின் குரல்

முற்றுப் பெறாத சோகம் மனதினில் உண்டு
முற்றும் பெறாத சோகமும் மனதில் கண்டு
வறண்டு போன நம்பிக்கை  அதனாலுண்டு
எழுத்துக்களில் எட்டிப் பார்க்கின்றதே  ஏக்க வண்டு
இளைஞனே முக -வரி  வந்தாலும் உன் முகவரியைத்
தொலைத்துவிடாதே அகவரியை
எட்டிப் பார்க்கும் ஆற்றல் நமக்குண்டு

தளர்சியுற்றும் முதிர்ச்சியின் பக்கம் சாய்ந்து விடாதே
இன்னமும் உன்னிடம்  நிறைய எதிர்பார்த்து
எதிர்பார்த்து இமை சரியாமல் நிற்க பலருண்டு
இளம் புயலே  இன்னல்கள் களைந்திட துணிவு கொண்டு
சோக விடுதலை கொண்டுவிடு வந்துவிடு
விடியலைத் தந்துவிடு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புள்ள சா கி நடராஜன் அவர்களே
ஏதோ என்னால் முடிந்த வரை முயன்றிருக்கிறேன்
 
சுவைத்துப் பார்த்து  விமர்சிக்கலாம்
 


 

--
http://www.vadakkuvaasal.com/


அன்புள்ள
தமிழ்த்தேனீ

sk natarajan

unread,
Sep 6, 2009, 6:04:27 AM9/6/09
to mint...@googlegroups.com
தமிழ் தேனீ ஐயாவிற்கு  நன்றி
ஐயா ஒவ்வொரு பாராவும்  நான்கு வரிகள் அமைய வேண்டாமா ?
எதுகை மோனை நிச்சயம் இடம் பெற வேண்டாமா ?

2009/9/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 6:10:26 AM9/6/09
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்
உங்களின் சில வரிகள் என்னை சுட்டதென்னவோ உண்மைதான்
ஆனால் மன்னிப்பு என்று பெரிய வார்த்தைகள் வேண்டாமே
உங்களை நான் காயப் படுத்தி  இருந்தால் மன்னிக்கவும்
ஆனாலும் உங்களுக்குத் தெரிந்த வகையிலே நீங்கள் என் வரிகளுக்கு கவிதை படைத்திடுங்கள்  மரபுக் கவிதையாக   இல்லாவிட்டாலும் பராவாயில்லை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 6:16:09 AM9/6/09
to mint...@googlegroups.com
நடராஜன்
 
விடமாட்டீர்கள் போலிருக்கிறதே.
 
கவிதை எல்லாம் நிஜமாகவே எனக்குத் தெரியாது சாமி. ஏற்கனவே சொல்லவிட்டேன்.
 
அது என்ன அப்படி ஒரு பகை உங்களுக்கு என்னிடமும் தமிழ் மொழி மீதும்?
 
என்னைப் போய் கவிதை எழுத வற்புறுத்துகிறீர்களே.  நான்தான் ஜகா வாங்கி விட்டேன் இல்லையா?
 
இனி கவிதைகளாகப் பொழிந்து தள்ளுங்கள்.
 
வாழ்த்துக்களுடன்
2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>

துரை.ந.உ

unread,
Sep 6, 2009, 6:23:17 AM9/6/09
to mint...@googlegroups.com
On 9/6/09, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> wrote:
இது என்ன கல்யாண வீடு மாதிரி் ஆகிவிட்டது.  ஆளாளுக்கு முறுக்கிக் கொள்கிறார்கள்?
 
இதுக்கெல்லாம் ஒதுங்கணுமா துரை?
 
உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல முயற்சித்து கவிதையில் எனக்கு நீங்கள் அறிவுரை சொல்ல  முயற்சிக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன்.
 
 
அன்பின் அய்யா பெரிய வார்த்தைகளைக் கொட்டுகிறீகள் !
 
யாருக்கு யார் அறிவுரை கூறுவது ????
 
அளவுக்கு மீறியிருந்தால் மன்னிக்கவும்
 

 
அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சி.  அப்படித்தான் என்றாலும் வருத்தம் இல்லை.
 
தொடருங்கள் உங்கள் கவிதைப் பணியை.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
 
இந்த ஊக்கத்தில் இன்னும் வளர்வேன்
ஆழ வேர் விடுவேன்

Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 6:49:03 AM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>

அன்புள்ள  திருமூர்த்தி அவர்களுக்கு
நீங்க எழுதினா கண்ராவியா இருக்கும்னாலும் விமர்சனம் நுட்பமா செய்ய முடியுமானா செய்யுங்க என்கிறேன். நல்லா இருக்கு இல்லைன்னு யார் வேணுமானாலும் சொல்லிடலாம். அது ஏன் நல்லா இல்லை? ஆ! அது சொல்ல இன்னும் திறமை வேணும்; ஞானம் வேணும்.
நீங்கள் கற்றவர்கள்
நானும் கற்றவன்
எனக்கு மரபுக் கவிதை எழுத  தெரியாமல் இருக்கலாம்
உங்களுக்கு அது எழுத  வருமா எனத் தெரி யாது  எனக்கு
ஆனால் மரபு மீறி நான் பேசுவதுக்  கிடையாது
என் வரிகளிடம்  நீங்கள் காணும் குறைகளைக்  களைந்து எழுதிக் காட்டுங்கள் என்கிறேன்
நல்ல சொற்கள் இருக்கும் போது அவற்றையே பயன்படுத்துவோமே

நாராயணா!
நடராஜன், நான் எழுதியது பென்னேஸ்வரனுக்கு. அவர் ஜகா வாங்கறேன் என்று  சொல்லிவிட்டார். அதனால இத்தோட விஷயம் முடிஞ்சது.
மொத்தத்தில் கவிதை இன்னும் அழகா இருக்கலாம்ன்னு குழுவோட எண்ணம் போல இருக்கு. அவ்வளவே! மேலே கவிதை எழுதுங்கள். வாயால் பேசத்தெரியாதவர்கள் கைகளால் பேசும் போது  கவிதை போல் இருக்கும் போலிருக்கே!

திவா

N. Kannan

unread,
Sep 6, 2009, 6:54:41 AM9/6/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன்:

காசுமி சொன்னது போல் கட்டற்ற சுதந்திரம் கையில் உள்ளது. முன்பெல்லாம்
கணையாழிக்கு கவிதை எழுதிவிட்டு தேறுமாவென ஒரு மாதம் காத்திருப்பேன்.
காலம் மாறிவிட்டது. எழுதினோமோ, தட்டினோமா என்று இருக்கிறது!

நான் கமலத்திற்கு சொல்லிய வண்ணம் இதை ஒரு சாக்காக வைத்து கவிதை பற்றி
கொஞ்சம் பேச முடிந்தது. உங்கள் நகைச்சுவை தளும்பும் எழுத்தை ரசிக்க
முடிந்தது.

அடம் பிடிக்காமல் கேட்டால், யாராவது நல்ல கவிதைகளைக் காட்டக்கூடும்.
(இப்போ தி.வாவே கவிதையில் இறங்கிவிட்டார் என்று கேள்வி ;-)

க.>

2009/9/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 7:53:41 AM9/6/09
to mint...@googlegroups.com
அதைத்தான் சொல்ல முயற்சித்தேன்.
 
விஷயம் வேறு மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது.
 
எது எப்படியோ நான் ஜூட்.
 
இனி கவிதைகள் பற்றி வாய் திறக்கப் போவது இல்லை என்று இருக்கிறேன்.
 
இந்தக் கற்றறிந்த சபையில் பெரியவர்கள் எல்லாம் சும்மா இருந்தபோது நான் ஆடியது கொஞ்சம் தப்பாட்டம்தான்.
 
சரி கண்ணன். தமிழில் புதுக்கவிதை தோன்றி இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன.  சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிச்சமூர்த்தி இந்த மரபைத் துவங்கினார். பிறகு செல்லப்பா எழுத்து இதழில் வளமூட்டினார்.
 
புதுக்கவிதையின் ஐம்பதாம் ஆண்டை ஏதாவது ஒருவகையில் மின்தமிழில கொண்டாடப் போகிறார்களா?
 
யாராவது பிச்சமூர்த்தி, செல்லப்பா, கநாசு, சி.மணி, வைத்தீஸ்வரன், பசுவய்யா, தருமு சிவராமு, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், விக்ரமாதித்யன், கல்யாண்ஜி, சிற்பி, நாரணதுரைக்கண்ணன், செல்வி சிவரமணி, யுவன், மனுஷ்யபுத்திரன் (சரி பட்டியல் ரொம்ப நீண்டு கொண்டே போகும்.  அப்புறம் அவரை விட்டாய் இவரை விட்டாய் என்று இன்னொரு சம்பந்தி சண்டை வரும்) .  ‘
 
தமழின் நவீன கவிஞர்களின்  கவிதைகளை நம்முடைய குழுவில் மீள் பிரசுரம் செய்யலாமே. 
 
ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாராயணன் கவிதையில் இருந்து துவங்கலாமே.  தினம் ஒரு கவிதையாக, நடை, யாத்ரா, கொல்லிப்பாவை, கசடதபற, இலக்கிய வட்டம், வானம்பாடி, திசைகள், கணையாழி இன்னும் இவை போன்ற பல இதழ்களில் வெளிவந்த கவிதைகளை நினைவு படுத்துதிக் கொள்ளலாமே.
 
ஏண்டா பிரம்மணா கல்யாணம் பண்ணிக்கலையா என்று கேட்டால் நீயே என் பொண்டாட்டி என்று சொன்ன கதையாகப் போகக் கூடாது.  என்னால் இது முடியாது.
 
அதற்கான ஒழுக்கம் என்னிடம் கிடையாது.  சிததன், காசுமி, கமலம் போன்றவர்கள் இந்தக் காரியத்தை செய்யலாம்.  இன்னும் சில நண்பர்களும் செய்யலாம்.  ஒரு நாளைக்கு ஒரு கவிதை என்றால் கூட ஆண்டு முழுதும் 365   ஐம்பது ஆண்டு காலக் கவிதைகள் தினம் ஒன்றாக நமக்குப் படிக்கக் கிடைக்கும்.
 
இந்தக் குழுவில் கவிதை எழுத முன்வரும் இளைய தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையலாமே. 
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/9/6 N. Kannan <navan...@gmail.com>

Kamala Devi

unread,
Sep 6, 2009, 8:43:59 AM9/6/09
to mint...@googlegroups.com
"""rhyme and metre are artificial and external additions to poetry
and that the various changes that can be rung upon them were worked out.
They grew more and more insipid until they have become contemptible and encumbering""-- by, --எஃப்.எஸ்.ஃப்ளிண்ட்


அன்பார்ந்த சகோதரர் நடராஜன்,
நிங்ஙளின் வருத்தம் தோய்ந்த மடல் கஷ்டமாக இருக்கிறது.
நிங்ஙள் கவலைப்பட வேண்டாம். பதட்டப்பட வேண்டாம்.மனசு சஞ்சலப்பட வேண்டாம்.
இங்கு இலக்கிய இதழ்களில் கூட இல்லாத இலக்கியப்பார்வை உள்ளது.
ஆயினும் கூட அவர்கள் உடனே வருத்தம் தெரிவித்து விட்டார்கள் தானே?அதனால் நிங்ஙள் மன்னிக்கலாம்.
நிங்ஙளின் பணி பற்றி எழுதிய வரிகள் படித்த உடனேயே, ஞான் அனுப்பவிருந்த கவிதை பற்றிய கட்டுரையை ,
அப்படியே மாற்றி வைத்துவிட்டேன்.
அன்பின் நடராஜன்,
நிங்ஙளின் தொழிலே கவிதைதான், அந்தப் பிள்ளைகளே கவிமலர்கள் தான்.பென்னேஸ்வரன், தி.வா. கண்ணன்,
கூறியதுபோல் அதைவிட,கவிதை விட வேறுண்டா?
என்டெ வீட்டில் இவ்வாண்டு ஓண சத்யை[விருந்து]க்கு வந்த வி.ஐ.பி.க்கள் யார் தெரியுமா>
பங்களா தேஷிலிருந்தும்,தமிழ் நாட்டிலிருந்தும் வந்து பணி செய்யும் அன்பான அந்த தம்பிகள்தான்.
துப்புரவு வேலை செய்யும், கட்டடப்பணி செய்யும், கூலிப்பணி எடுக்கும் அந்த தம்பிகள் தான் என்டெ அதிதிகள்
சந்தோஷமாக அவர்களுக்கு பல்சுவை விருந்தோடு எண்டெ அன்பையும் சேர்த்தே பரிமாறினேன்.
பங்கலாதேஷ் தம்பிகள், aunty, thank you,, aunty, food good, i come singapore, today happy, thank you aunty'
என்றே திரும்பத்திரும்ப கூறியபோது , எனக்கு மனசெல்லாம் கலங்கி கலங்கி , அழுகை வந்தது.
அவர்கள் மொழி எனக்குப்புரியும் .எண்டெ மனசில் அன்று அவர்கள் தான் கவிதை.
போகாட்டும், காசுமியின் கவிதைகள் படியுங்கள். ஹரிகிருஷ்ணன் என்றொரு அற்புதமான கவிஞர் இக்குழுமத்தில் உண்டு.
அவர் ஏன் எழுதுவதில்லை என்று தெரியவில்லை.முனைவர் கண்ணனின் பாசுரமடல் அவசியம் படியுங்கள்.
என்றாலும் கண்ணன் கூறியதுபோல்,நிரம்ப நூல்களை வாசிக்கணும்.
அப்பொழுது மொழிச் சரளம் வரும். மொழி மட்டும் போதாது. இலகுவான வரிவடிவினூடும் நுண்ணுணர்வான,
பொதிந்து நிற்கும் உள்ளார்ந்த உருவகம், மட்டும் கைக்கு வந்து விட்டால், நிங்ஙள் கவிதையில் கோலோச்சலாம்.
அப்படியே இல்லாவிட்டாலும் கூட என்ன நஷ்டம்,?
ஆசிரியத்தொழிலில் கிட்டியுள்ள நிங்ஙளின் மாணவ மணிகளுக்கு , நிங்ஙள் செய்யும் கவிதைதான் எனக்குப் பிடித்திருக்கிறது
இக்குழுமத்தில் என்னை சேச்சி என்பார்கள்.அதனால்
அன்புடன் சேச்சி

கண்ணன்

>


New Email names for you!
Get the Email name you&#39;ve always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/

Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 12:05:02 PM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/6 N. Kannan <navan...@gmail.com>



(இப்போ தி.வாவே கவிதையில் இறங்கிவிட்டார் என்று கேள்வி ;-)

இதென்னயாது புதுக்கவிதையா ச்சீ! புதுக்கதையா இருக்கு. எனக்கும் கவிதைக்கும் காத தூரம்.

Kamalam Devi

unread,
Sep 6, 2009, 12:22:19 PM9/6/09
to mint...@googlegroups.com
(இப்போ தி.வாவே கவிதையில் இறங்கிவிட்டார் என்று கேள்வி ;-)
இதென்னயாது புதுக்கவிதையா ச்சீ! புதுக்கதையா இருக்கு. எனக்கும் கவிதைக்கும் காத தூரம்.
   திவா .


<<< அந்தக்கதை எல்லாம் இங்கே வேண்டாம்.
வலைப்பதிவில் எழுதும் அருமையோ அருமைகளை  இங்கும் இடலாம்.
கவிஞர் இல்லையென்று சொல்லிக் கொள்வது இப்பொழுது ஃபேஷனாகி விட்டது  போலும்
கமலம்



-


Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 12:57:05 PM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/6 Kamalam Devi <kamalam...@yahoo.com>

<<< அந்தக்கதை எல்லாம் இங்கே வேண்டாம்.
வலைப்பதிவில் எழுதும் அருமையோ அருமைகளை  இங்கும் இடலாம்.
கவிஞர் இல்லையென்று சொல்லிக் கொள்வது இப்பொழுது ஃபேஷனாகி விட்டது  போலும்
கமலம்
எண்டெ நாராயணா! வலைப்பதிவிலே நீங்க காண்கிறதெல்லாம் தாண்டவராய ஸ்வாமிகள் எழுதிய கைவல்லிய நவநீதம் என்னு நூலாணு!
ஞான் அதுக்கு அர்த்தம் மட்டுமே கண்டு.

sk natarajan

unread,
Sep 6, 2009, 1:03:43 PM9/6/09
to mint...@googlegroups.com
அன்புள்ள திருமூர்த்தி அவர்களுக்கு
தங்களின் மடலுக்கு நன்றி
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

2009/9/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Kamala Devi

unread,
Sep 6, 2009, 1:03:49 PM9/6/09
to mint...@googlegroups.com
அந்த அர்த்தம் கூட தமிழில் இவ்வளவு தெளிவாய் எழுத எனக்குத் தெரியாது.
அது சரி, மலையாளம் தெரிந்தவர்களின் என்ணிக்கை அதிகரிக்கிறதே
[சித்தன் தேவ் சார், இப்போழ் நிங்ஙள், ]
முனைவர் கண்ணன் எப்பொழுது கோபப் படப்போகிறாரோ?
கமலம்

2009/9/6 Kamalam Devi <kamalam...@yahoo.com>
<<< அந்தக்கதை எல்லாம் இங்கே வேண்டாம்.
வலைப்பதிவில் எழுதும் அருமையோ அருமைகளை  இங்கும் இடலாம்.
கவிஞர் இல்லையென்று சொல்லிக் கொள்வது இப்பொழுது ஃபேஷனாகி விட்டது  போலும்
கமலம்
எண்டெ நாராயணா! வலைப்பதிவிலே நீங்க காண்கிறதெல்லாம் தாண்டவராய ஸ்வாமிகள் எழுதிய கைவல்லிய நவநீதம் என்னு நூலாணு!
ஞான் அதுக்கு அர்த்தம் மட்டுமே கண்டு.
திவா
-

Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.

sk natarajan

unread,
Sep 6, 2009, 1:24:58 PM9/6/09
to mint...@googlegroups.com
அன்பு சேச்சி  அவர்களுக்கு
தங்களின் கடிதம்  எனக்கு மகிழ்வினைத் தந்தது 
இங்கு நடந்தது  வாக்கு வாதமே
அந்த சுதந்திரம் இந்தக் குழுமத்தில் உள்ளது
இதில் மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள்
இந்த குழுமத்தில் உள்ளோர் அனைவரும் எனது சகோதர சகோதரிகளே
இதில்  யார் உயர்ந்தாலும் எனக்கு பெருமிதமே
யார் தாழ்ந்தாலும் எனக்கு வருத்தமே
நான் கூற வந்ததெல்லாம் ஒரு ஆசிரியர் என்ற முறையில் ஒரு தவறு என்று சுட்டிக் காட்டும் போது அந்த தவறை எவ்வாறு சரியாக மாற்றுவது என்றும் சொல்லித் தர வேண்டும் அல்லவா
நிற்க
செவித் திறன் குறைவுடைய  மக்களுக்கு  ஓணம் அன்று விருந்து படைத்தமைக்கு பாராட்டுக்கள்
அவர்களின் மொழியும் அறிவீர்கள் எனக் கேட்கும் போது இனிமையாக இருக்கின்றது  
குறிப்பாக கவிதை பற்றி அனுப்புவதாக இருந்ததை நிறுத்தி வைத்ததாகச் சொன்னீர்களே அதை உடனே அனுப்புங்கள் எனக்கு அதை பார்க்க வேண்டும் போல உள்ளது
தாய்மை குணம் நிரம்பிய உங்களுக்கு இறைவனின்  நல்லாசிகள் என்றும் கிடைக்கும்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
2009/9/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.

NATARAJAN SRINIVASAN

unread,
Sep 6, 2009, 2:11:14 PM9/6/09
to mint...@googlegroups.com
1.சா கி நடாரஜன், நீங்கள் செய்வது அப்பட்டமான அடாவடி.
 
2.சமையல் சகிக்கலை என்று சொல்பவரையே சமைத்துக் காட்டுக என்று சவாலுக்கு அழைப்பது எவ்வகையில் சரி?
3.மரபுக் கவிதைதான் சிறந்தது என்று விமர்சித்தவர் சொல்லாதபோது ஏன் மரபுக் கவிதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்?
 
4.எதுகை மோனைக்கு சற்றும் தொடர்பற்ற ஒரு சொற்குவையை எழுதிவிட்டு தேனி எழுதியதில் அவை எங்கே எனக் கேட்பது என்ன நியாயம்?
 
5.அந்த சொற்குவையை மரபுக் கவிதையாக மாற்றுவது என்பது இயலாத காரியம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
 
6. மரபுக் கவிதைகளில் எதுகைமோனை எந்த அளவுக்கு அவசியம் என்பதில் உங்களுக்கு அடிப்படைப் புரிதல் ஏதாவது இருக்கிறதா?
 
ஓகை நடராஜன்.
 
 
 
2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>
தமிழ் தேனீ ஐயாவிற்கு  நன்றி

NATARAJAN SRINIVASAN

unread,
Sep 6, 2009, 2:49:48 PM9/6/09
to mint...@googlegroups.com
ஒரு நடராஜனுக்கு இன்னொரு நடராஜனின் பதில்!
 
 
சா கி நடராஜனின் சொற்குவை:
 
ஒரு மண்ணின் குரல்
 
முற்றுப் பெறாத சோகம் மனதினில்
வறண்டுபோன நம்பிக்கை எழுத்துக்களில் எட்டிப் பார்கின்றதே
இளைஞனே
முக - வரி  வந்தாலும் உன் முகவரியைத் தொலைத்துவிடாதே
தளர்சியுற்றும் முதிர்ச்சியின் பக்கம் சாய்ந்து விடாதே
இன்னமும் உன்னிடம் நிறைய எதிர்பார்த்து எதிர்பார்த்து
இமை சரியாமல் நிற்கின்றது உலகம்
இளம்    -  புயலே இன்னல்கள் களைந்திட
விடியலில் வந்துவிடு விடுதலை  தந்துவிடு
 
 
மேற்கண்ட சொற்குவை இணைக்குறள் ஆசிரியப்பாவில் கீழே:
 
ஒரு மண்ணின் குரல்
 
முற்றா சோக மூளும் மனதின்
இற்றிடும் நம்பிக்கை எழுத்தினில் எட்டினும்
இளையோய், முகவரி எய்தினும் முகவரி தொலையேல்.
தளர்த்தும் முதிர்ச்சியின் தடமதில் சாயேல்
இன்னமும் உன்னிடம் இருப்பவை நோக்கியே
கண்ணிமை மூடா காத்திரு உலகின்
வெடியிளம் புயலே, வாதைகள் களைந்திட
விடியலில் வருகவே! விடுதலை தருகவே!!
 
ஓகை நடராஜன்.
 


 
2009/9/6 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 6, 2009, 3:00:28 PM9/6/09
to mint...@googlegroups.com

அன்பு சா.கி.நடராஜன்
 
நீங்கள் கமலம் அம்மையாருக்கு எழுதிய பதிலில் ஒரு பகுதிக்கு மிகச்சிறிய விளக்கம்.
 
ஆசிரியராக நினைத்து எல்லாம உங்களைத் திருத்த முயலவில்லை.  அது என் வேலையும் அல்ல.  திருத்தும் அளவுக்கு எனக்குப் புலமை கிடையாது.
 
ஒரு சக பயணியாக என் கருத்தைச் சொன்னேன் அவ்வளவுதான்.
 
ஒரு நடராஜன்  பின்னி எடுத்து விட்டார்.  இன்னொரு நடராஜன் அபயஹஸ்தம் தந்து விட்டார்.  அவருடைய இணைக்குறள் ஆசிரியப்பா வழியாக.
 
இப்போதைக்கு நானும் கண்ணனும் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொள்ளலாம். 
 
கண்ணனுக்கு எப்படி என்று தெரியாது.  நான் கவிதை வேறு எழுதியாக வேண்டுமா என்ற பீதியில் அலைந்து கொண்டிருந்தேன்.
 
தப்பித்து விட்டேன்.  நன்றி நடராஜன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
2009/9/7 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>
2009/9/6 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>

2009/9/6 sk natarajan <sknatar...@gmail.com>

N. Kannan

unread,
Sep 6, 2009, 6:39:50 PM9/6/09
to mint...@googlegroups.com
2009/9/7 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:
>

> இப்போதைக்கு நானும் கண்ணனும் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொள்ளலாம்.
>
> கண்ணனுக்கு எப்படி என்று தெரியாது.  நான் கவிதை வேறு எழுதியாக வேண்டுமா என்ற
> பீதியில் அலைந்து கொண்டிருந்தேன்.
>

உண்மை! உண்மை! நஞ்சுண்ட கண்டர் அன்று மட்டுமில்லை, இன்றும்
காப்பாற்றிவிட்டார். நான் வேறு மாதிரி சமாளிக்க இருந்தேன் ;-) பொதுவாக
என்னுள் ஊறிய ஒன்றே கவிதையாக வெளிவருகிறது. இதுவரை மற்றவர் சரக்கை கவிதை
ஆக்கியத்தில்லை. எனவே எனக்கும் தர்ம சங்கடம்தான்.

வேறொரு வகையில் நீங்கள் கவலை நீக்கலாம். புதுக்கவிதை 50 இழை
தொடங்கப்பட்டு விட்டது. அதில் சில கவிதைகளை இனம் காட்டலாம்.
சித்தன்......காதில் விழுகிறதா? ;-)

க.>

sk natarajan

unread,
Sep 6, 2009, 9:10:53 PM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/6 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>
1.சா கி நடாரஜன், நீங்கள் செய்வது அப்பட்டமான அடாவடி.
 நடராஜன்  ஸ்ரீநிவாசன்  அவர்களுக்கு  வணக்கம் 
 எது ஐயா அடாவடி. ஒரு தனி நபராகிய என்னிடம் சுற்றி சுற்றி பந்தாடு கின்றீர்களே  இதுவா   
 அல்லது நான் தவறு செய்து விட்டேன் என நீங்கள் சொல்லும் போது
சரியான வழியைக் காட்டுங்கள் என  நான் கேட்டதா ?
இந்தக் குழுமத்தை  நானும் ஒரு உறுப்பினர் என்று எண்ணி - நம் குழுமம் என நான் சொன்னேனே  அதுவா ?
இங்கு உள்ளோர் அனைவரும் என்னுடையா சகோதர , சகோதரிகள் என சொன்னேனே  அதுவா?
எதுவாக இருந்தாலும்  வார்த்தைகளை உபயோகிக்கும் போது நல்ல வார்த்தைகளையே  உபயோகியுங்கள்  ஐயா 

2.சமையல் சகிக்கலை என்று சொல்பவரையே சமைத்துக் காட்டுக என்று சவாலுக்கு அழைப்பது எவ்வகையில் சரி?
 
மன்னிக்கவும் நான் யாரையும் சவாலுக்கு அழைக்க வில்லை
எழுதிப் பாருங்கள் உங்களின் கவிதையைக் குற்றம் காணும் போது அதை சரி செய்ய முயலாமல் மீண்டும் மீண்டும் தாக்கும் போது   தான் மனதின்  வலி தெரியும்
சும்மா வருவதில்லை கவிதை 
மனம் சுகத்தால் /சோகத்தால்  - சுமந்தால்  வரும்
3.மரபுக் கவிதைதான் சிறந்தது என்று விமர்சித்தவர் சொல்லாதபோது ஏன் மரபுக் கவிதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்?
 கற்றோர் நிறைந்த சபை இது  என்று சொன்னார்களே ?ஏன் மரபுக் கவிதை இயற்ற முடியாதா ?பின்னர் எந்தக் கவிதை இயற்றினாலும் சரி என்று சொன்னேனே ?
 சரி நீங்களாகவே வந்துள்ளீர்கள்  சரமாரியானத் தாக்குதல்களுடன்
நீங்கள் என மண்ணின் குரலுக்கு பொருள் மாறாமல் மரபுக் கவிதை எழுதுங்கள் நானும் கற்கின்றேன்
 
 
4.எதுகை மோனைக்கு சற்றும் தொடர்பற்ற ஒரு சொற்குவையை எழுதிவிட்டு தேனி எழுதியதில் அவை எங்கே எனக் கேட்பது என்ன நியாயம்?
 ஐயா எனக்கு தமிழ் தேனீ ஐயா அவர்களை முன்னறேத் தெரியும் 
அவர்களின் தமிழிற்குத்  தலை வணங்குபவன் நான் 
 ஐயா அவரிடம் குறைக் காண நான் யார் ?
அவரிடம் நான் குறைக் கண்டதாக நீங்கள் ஏன் திசை திருப்புகின்றீர்கள்
எதுகை மோனை தேவையா என நான் அவரிடம் கேட்டேன் அதை நீங்கள் ஏன் குற்ற உணர்வுடன் பார்க் கின்றீர்கள்

5.அந்த சொற்குவையை மரபுக் கவிதையாக மாற்றுவது என்பது இயலாத காரியம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
 
 அதை யாரும் சொல்லவில்லையே ?
 
6. மரபுக் கவிதைகளில் எதுகைமோனை எந்த அளவுக்கு அவசியம் என்பதில் உங்களுக்கு அடிப்படைப் புரிதல் ஏதாவது இருக்கிறதா?
 
 புரிய வைக்கும் படியல்லவா இதுகாறும் உங்களைக் கேட்டு வருகின்றேன் நீங்கள் இழையின் ஆரம்பம்  முதலே படித்து விட்டு வாருங்கள் ஐயா 

sk natarajan

unread,
Sep 6, 2009, 9:15:24 PM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/7 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>
ஒரு நடராஜனுக்கு இன்னொரு நடராஜனின் பதில்!
 :))))
 
சா கி நடராஜனின் சொற்குவை:
 எனது  - கிறுக்கல்கள்  சொற்குவை  என்பதில் மகிழ்ச்சிதானே உங்களுக்கு

sk natarajan

unread,
Sep 6, 2009, 9:20:12 PM9/6/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன் ஐயா  அவர்களுக்கு
வணக்கம்
உங்களின் உயர்ந்த  உள்ளத்திற்கு  நன்றிகள் ஐயா
என்றும் அன்புடன்
சா.கி. நடராஜன்.

2009/9/7 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

sk natarajan

unread,
Sep 6, 2009, 9:24:34 PM9/6/09
to mint...@googlegroups.com
அன்புள்ள கண்ணன் ஐயாவிற்கு
வணக்கம்
நான் வேறு மாதிரி சமாளிக்க இருந்தேன் ;-) ஐயா அது என்ன என்று கூறுங்கள்
அறிய ஆவலாக இருக்கின்றேன்
என்றும் அன்புடன்
சா.கி. நடராஜன்

2009/9/7 N. Kannan <navan...@gmail.com>

Kamala Devi

unread,
Sep 6, 2009, 9:44:17 PM9/6/09
to mint...@googlegroups.com
அன்புத்தம்பி
கவலை வேண்டாம் ,ஏன் இவ்வளவு வருத்தம்?
வேண்டாம் , வருந்தாதீர்கள்
என்ன சம்சயமிருந்தாலும் கண்ணனுக்கு எழுதுங்கள். அவர் உதவுவார்.
யார் சார்பில் நிங்களுக்கு கோபமிருந்தாலும் ஞான் மன்னிப்பு கேட்கிறேன்.
மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்,வருத்தம் விடுங்கள்.
சந்தோஷமாக  இருங்கள்.இங்கு எல்லோரும் நல்லவர்களே.
சமயத்தில் நமக்கே  வாய் பிழறிவிடுகிறது அல்லவா?
அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். மனசு சஞ்சலம் வேண்டாம்


அன்பு சேச்சி

N. Kannan

unread,
Sep 6, 2009, 9:55:55 PM9/6/09
to mint...@googlegroups.com
முற்றுப் பெறாத சோகம், மனதினில் வறண்டு போன நம்பிக்கை! எழுத்துக்களில்
எட்டிப் பார்கின்றதே இளைஞனே!
முக - வரி வந்தாலும் உன் முகவரியைத் தொலைத்துவிடாதே!
தளர்சியுற்றும் முதிர்ச்சியின் பக்கம் சாய்ந்து விடாதே!

இன்னமும் உன்னிடம் நிறைய எதிர்பார்த்து எதிர்பார்த்து இமை சரியாமல்
நிற்கின்றது உலகம்.
இளம் - புயலே இன்னல்கள் களைந்திட விடியலில் வந்துவிடு! விடுதலை தந்துவிடு!!

நண்பரே!

இது உங்கள் வரிகள்தான்.
இப்படி எழுதுவது கலைஞர் பாணி. கவித்துவமான உரைநடை என்பர் கழகத்தவர்.

கண்ணன்

2009/9/7 sk natarajan <sknatar...@gmail.com>:

sk natarajan

unread,
Sep 7, 2009, 9:54:10 AM9/7/09
to mint...@googlegroups.com
நன்றி  கண்ணன்   அவர்களுக்கு

2009/9/7 N. Kannan <navan...@gmail.com>

sk natarajan

unread,
Sep 7, 2009, 9:58:46 AM9/7/09
to mint...@googlegroups.com
அன்பு சேச்சி  அவர்களுக்கு வணக்கம்
எனக்கு எந்த வருத்தமுமில்லை
தங்களின் கடிதம் உங்களின் அருமையான உள்ளத்தைக் காட்டுகின்றது
தாங்கள் எதற்காகவும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
2009/9/7 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

N. Kannan

unread,
Sep 7, 2009, 10:32:05 AM9/7/09
to mint...@googlegroups.com
2009/9/7 sk natarajan <sknatar...@gmail.com>:

> தாங்கள் எதற்காகவும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை

நானும் சொல்ல நினைத்தேன். இணையம் என்பது தமிழின் தரத்தை நீர்த்துப்போக
வைத்தல் கூடாது. தரக்கட்டுப்பாடு பற்றிப் பேசுவது நல்லதே.

மின்தமிழின் தரம் பற்றிய அக்கறையில்தான் சித்தனும் அவ்வாறு
எழுதியிருக்கிறார். நல்ல எழுத்துக்கள் வரும் போது அது பற்றிய ஒருவரி
விமர்சனம் கூட செய்யத்தெரியாத ஒரு குழு. ஒரு சின்னக்கவிதையை வைத்து
மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கிறது என்றால், நாம் சீரிய
விஷயங்களிலிருந்து கேளிக்கைக்கே புலம் பெயரத்துடிக்கிறோம் என்பதைக்
காட்டுவதாகவே உணர்கிறேன்.

சுபா நம் தரம் பற்றி அடிக்கடி நினைவுறுத்துவது இங்கு உற்று நோக்கத்தக்கது.

தனியிழையில் கூட இது பற்றிப் பேசலாம்.

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages