துன்பம் நேர்கையில் யாழெடுத்து – நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா “
“” வெண்ணிலாவும் வானும் போலே வானும் போலே, வண்ணப் பூவும் மணமும் போலே, மகரயாழும் இசையும் போல…””
என்றெல்லாம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடியுள்ளார். ஆகா, யாழ் எனும் இசைக் கருவி இன்பத்துக்காக கருவி என்பது புலனாகிறது பண்டைய இலக்கியச் சங்க காலத்தில் இசை உலகில் சிறப்பாகத் திகழ்ந்துள்ள இந்தத் தமிழ் இசைக் கருவி கி.பி. 7- ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அதாவது தொல்காப்பியர் காலத்திலிருந்து மக்களால் பயன் படுத்தப்பட்ட ஒரு இசைக் கருவிதான் யாழ். சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் இதைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
யாழ் என்பதை யா + ழ் என்று பிரிக்கலாம்.
யா = என்பதற்கு யாக்கப்பட்டடு என்றும்,
ழ் = என்பதற்கு மீட்டுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இசைக் கருவியையும் அதிலிருந்து எழக்கூடிய இசையையும் குறிப்பாக “யாழ்” என்ற சொல் புலப்படுத்துகின்றது. சேக்கிழார் பெரிய புராணத்தில் யாழ் விற்பன்னர் திருநீலகண்டர் குறித்த பல செய்திகளை சேக்கிழார் குறிபிட்டுள்ளார். திருஞானசம்பந்தர் தமிழுடன் தம்மைப் பிணைத்து கொண்டு திருத்தலங்கள் தோறும் சென்று பாடினார். திருஞானசம்பந்தர் செய்த சமுதாயப் புரட்சி, தாழ்ந்த குலத்துத் திருநீலகண்டர் யாழ்ப்பாணரை அவருடைய மனைவியருடன் அழைத்துச் சென்றதும், கூடவே யாழ் வாசிக்குமாறு செய்ததும் பெரிய புராணச் செய்தி. இறுதி வரை திருஞானசம்பந்தர் பாடப் பாணர் யாழ் வாசித்தார். யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தர் பாடலை யாழில் வருகையில், “வீக்கு நரம்புடைய யாழினால் விளைந்த திது ” என்று கூறிக்கொண்டு, “போக்க ஒக்குதலும் தடுத்தருளி ‘ ஐயரே! உற்ற இசை அளவினால் நீர் ஆக்கிய இக்கருவினைத் தாரும்” என்று கூறி, திருஞானசம்பந்தர் யாழை வாங்கிக் கொண்டு, “ஐயர் ! நீர் யாழிதனை யாழில் அடங்காத பண் ஒன்றைப் பாடி அருளுமாறு வேண்ட “ மாதர் மடப்பிடியும் “ என்ற பதிகத்தைப் பாடினார். பாணர் அதனை யாழில் அடக்க இயலவில்லை. “இபிபெரியார் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச் செப்பியது இக்கருவியை நான் தொடுதலினன்றோ? என்று யாழை முரிந்து விட ஓங்கினார். திருஞானசம்பந்தர் அதனை கையில் வாங்கிக்கொண்டு,“ஐயர் ! நீர் யாழ் கருவியில் அடங்கும் என்று எதிர்பார்ப்பது சரியன்று; நீர் முன் போலவே இதனை வாசித்தருளூம் என்று கூறினார்.
யாழ் அமைத்து மீட்டி வாசிக்கும் இந்த நரம்புக் கருவி வீணை. தம்புரா ஆகியவற்றில் இருப்பது போல் இதன் இசை ஒலிபெருக்கி “தணக்கு” என்ற மரத்தினால் செய்யப்பட்டிருக்கிறது.. சத்தத்தைப் பெருக்கிக் காட்டும் யாழில் இது படகு வடிவில் இருக்கும். யாழின் இணைக்கப்பட்டிருக்கும் நரம்புகளைக் கணக்கில் கொண்டு இவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது. 21 நரம்புகளைக் கணக்கில் கொண்டது “ பேரியாழ்“” என்றும் 17 நரம்புகளைக் கணக்கில் கொண்டது “மகர யாழ் “ என்றும், 16 அல்லது 14 நரம்புகளைக் கணக்கில் கொண்டது “சகோட யாழ் “ என்றும், 7 நரம்புகளைக் கணக்கில் கொண்டது “செங்கோட்டு யாழ் ” என்றும், 4 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலக்கியங்களில் யாழ் வேறு பல வகைகளில் வழங்கப்படுகிறது. வில் யாழ், நாரத யாழ், தம்புறு யாழ், கீசக யாழ், மருத்துவ யாழ், ஆதி யாழ், என்று பலவகைகளில் யாழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. ஆயிரம் நரம்புகளைக் கொண்டது ஆதியாழ் என்று “விபுலானந்தர்’’ கூறுகிறார்.
வேடன் ஒருவன் அம்பு விடும்போது வில்லில் இருந்து ஒருவித ஒலி எழுந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது வில் யாழ். குமிழமரக் கொம்புகளைக் கொண்டு வில்லாக வளைத்து,மர நாரிலே திரித்த கயிற்றினை நாணாகக் கட்டி ஒரே அளவான 7 விற்கள் கொண்டு வில் போல் அமையப்பெற்றிருப்பது வில் யாழ். நாண்களை தளர்த்தியும் உயர்த்தியும் இசை வேறுபாடுகளை வேடர்கள் உருவாக்கினர். இந்த வில் யாழின் துணையோடு குறிஞ்சி பாடல்கள் இசைக்கப்பட்டதாக இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது.இந்த வில் யாழ்தான் மற்ற யாழ் வகைகள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது. “” தொடைபடு பெரியாழ் பாலை பண்ணி விரல்கலர் பேரியாழ் பாலை பண்ணி “” என்னும் பதிற்று பத்துப் பாடலின் மூலம் சங்க காலத்தில் பேரியாழில் பாலைப் பண் இசைக்கப்பட்ட செய்தி அறிந்துகொள்ளலாம்.. பெருங்கதைக் குறிப்புகளின் வழியாக இந்த யாழ் தெய்வத்தன்மை கொண்டது என்று அறியலாம்.
வீணையைப் போன்று யாழும் தொன்று தொட்டுப் பயன்பாட்டில் இருந்த பழைமையான இசைக்கருவி. பழந்தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம்,மணிமேகலை, பெருங்கதை ஆகியவற்றின் மூலம் யாழ் பற்றிய செய்திகள் அறிந்துக்கொள்ள முடிகிறது. சிலப்பதிகாரத்தில் யாழைப் பற்றிப் பல தகவல்கள் அறிய முடியும். சிலப்பதிகாரத்தில் யாழைப் பற்றிப் பற்றிக் குறிப்பிடுகையில் செம்பகை,ஆர்ப்பு,அதிர்வு,கூடம் என்ற நான்கு குற்றங்களையும் நீக்கி வாசிக்கக் கூடியவனே யாழ் வல்லோன் என்று கூறப்பட்டுள்ளது.
“குழல் வழி நின்றது யாழே” என்று குழலுக்கு அடுத்த இடத்தை யாழுக்கு தந்துள்ளார் இளங்கோவடிகள்.மாணிக்க வாசகர் இயற்றிய திருவெம்பாவையில்… “ இன்னிசை வீணையர் ஒருபால் யாழினர் ஒரு பால் “ என்றொரு வரி உண்டு.இதன் மூலம் யாழும், வீணையும் சமகாலத்து இசைக் கருவிகள் என அறியமுடிகிறது. வீணையின் உள்ளே ஒரே நரம்பில் பல சுரங்கள் இசைக்க கூடிய வசதி இருப்பதால் எந்த இராகம் வேண்டுமானாலும் எப்போது இசைக்கலாம்.எனவே வீணை இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.. இத்தகைய வசதி இல்லாமையால் யாழ் 10 அல்லது 11 நூற்றாண்டுகளில் தென்னிந்திய இசையிலிருந்து மறைந்து போகத் தொடங்கியது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.. தற்போது வழக்கத்தில் இல்லாத தமிழ் இசைக் கருவி யாழ் பல நரம்புக் கருவிகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது.
அன்பொடு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.