கண்ணெதிரே 2300 ஆண்டுகள் பழைமையான கரிகாலனின் கல்லணை.ஆறுகள்,கால்வாய்கள் (தாய்லாந்திலும்,.யப்பானிலும்
காவா, என்றே இன்றும்) வாயக் கால்கள். மடைகள், குண்டுகள் எனவும், கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், ஏரி, மடு, குட்டை, என பெயரிட்டு ஒவ்வொரு சொட்டு நீரையும் காத்து, நீர் மேலாண்மையில் தேர்ச்சி பெற்றவன் தமிழன்.
நீர் மேலாண்மைக்கு உலகமே தமிழரை உற்று நோக்க, அனைத்துலக பொறியியல் பல்கலைக் கழகங்கள் பாடமாகவே படித்து தமிழர்தம் நீர் மேலாண்மையைப் போற்ற........
ஐநா அவையின் நீர் மேலாண்மை வல்லுநர்கள் வியந்து வாய்நிறைய பாராட்டிய தமிழரின் நீர் மேலாண் திறனை......
இன்றோ ??????????????
ஏரி, கண்மாய், கரனை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று நீர்நிலைகளை வரிசைப்படுத்திச்சொல்வதை https://groups.google.com/forum/#!topic/mintamil/MZisnwweV1k என்ற இடுகையிற் பார்த்தேன். அதில்வரும் படம் விவரமானது. ஏரி, கண்மாய், தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை போன்றவற்றிற்குத் தனிப்பட்ட எடுத்துக்காட்டுக்களைக் காட்டமுடியும். ஆனால் இதில் வரும் ”கரனை” என்ற சொல் தமிழிற் கிடையாது. அதைக் கரணை என்று சொல்லவேண்டும். அடிப்படையில் அதுவொரு சதுப்புநிலம். கரணைநிலத்தில் வெள்ளக்காலத்தில் அகண்டநீர் தேங்கிக்கிடப்பதால் அதை ஏரி, கண்மாய் போலக் கொள்வது தோற்றப்பிழையாகும். கரணையின் விளக்கத்தையும் சதுப்பு நிலத்தின் விளக்கத்தையும் கீழே பார்ப்போம்.
.
சொள்ளை என்பது துளையைக்குறிக்கும். சொள்>சொளு>சொளுசொளுத்தல் = மழையால் தரை கூழ்போற்குழைதல், சேறாதல் to become muddy, slippery as the ground by rain. இது தென்பாண்டி வழக்கு. பேச்சுவழக்கில் சொளுதல், சொதுதலுமாகும். சொதுத்தலைச் சொதுசொதுத்தலென்று அழுத்திச்சொல்வதுமுண்டு. சொதுத்தலின் பெயர்ச்சொல் சொதுப்பு. சொதுப்பு>சதுப்பு என்று திரியும். அடிப்படையில் சேறானநிலத்தையே சதுப்புநிலமென்கிறோம். பெரும்பாலும் சதுப்புநிலம் களிமண் நிலத்திலேயே ஏற்படும். இந்நிலங்களிற் கிடக்கும் மண்ணின் துகள்ப்பரம்பலைப் (particle distribution) பொறுத்து புவிக்குள்நீரிறங்கும். இதைப் பொசிமை (permeability) மூலம் உணர்த்துவார். பொதுவாக களிமண்மேற்கிடக்கும் நீர் மிகமெதுவாகவே புவிக்குளிறங்கும். சிலபோது மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் நீர் உள்ளேயிறங்காமற் கூடக் கிடக்கலாம். சதுப்பு நிலங்களில் நீர் பொசிவதால் மட்டுமின்றி சூடேற்றத்தாலும் ஆவியாகலாம். நீரெல்லாம் நகர்ந்து நிலம் உலர்ந்து முடிவில் தங்கியுள்ள களி சிறுசிறு உருண்டைகளாய்த் திரளும். எனவே பொது அறிவுப்புலத்தில் களிமண் உருண்டைகளும் சிற்றளவு நீருஞ்சேர்ந்த நிலத்தையே சதுப்புநிலம் என்றழைப்பார். களிமண் உருண்டைகள் கரண்டைகள், கரணைகள் என்றும் சொல்லப்படும். (கரள்தல் = திரள்தல், உருள்தல். கரணைகள் என்பவை கற்கள் அல்ல. அவை மண் திரள்கள்.) காய்ந்துபோன சதுப்பு நிலமும் கரணையென்றே அழைக்கப்படும். சென்னைக்கருகில் வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை, பள்ளமாய்க்கிடக்கும் கரணைநிலமாகும். நண்பர் KRS இதுபற்றிச்சொல்லியிருக்கிறார். [https://twitter.com/kryes/status/647846860753911808]. கரணைக்கிழங்கின் பெயர் சதுப்புநிலத்தில் வளர்வதாலேற்படவில்லை. அதன்பரப்பு கரணைதட்டித் தெரிவதால் சொல்லப்படுகிறது. (கரணை தட்டுதல் = அங்கங்கே கெட்டிபட்டுப்போதல்).
கரணையைச் சுட்டும் வேறு ஊர்ப்பெயர்களிருந்தால் தெரிவியுங்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
/அந்தப் பள்ளிக்கரணை பற்றித்தானே என் மடலிற் பேசினேன்.//ஐயா,தங்கள் மடலை நான் ஊன்றிப் படிக்காததால் தோன்றிய பிழையது!மன்னிக்கவும்!அன்புடன்,மேகலா
தில்லைகங் காநகரில் சென்ற திசையெல்லாம்
எல்லையொன்றில்லா இடம்பிடிப்பு - கல்லறைமேல்
வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!
ஈடுண்டோ இங்கே இதற்கு. (34)
தாங்கல் = ஐய்யப்பன் தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல் - சென்னைக்கு அருகில். இந்தச் சொல்லைத் தொண்டமண்டலத்திலேயே அதிகங் காண்கிறேன். மற்ற மண்டலங்களில் அதிகம் பயன்படவில்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கலாம்புழல் ஏரி = சென்னைக்கு அருகில். வீரநாராயணபுரம் ஏரி என்னும் வீராணம் ஏரி கொள்ளிடத்திற்கு அருகில், மதுராந்தகம் ஏரி - ஏரிகள் தமிழகத்திர் கணக்கில்லை.கண்மாய் = சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ம்மாவட்டங்களில் ஏறளமான கண்மாய்கள். எங்கள் ஊரின் வையக்கரைக் கண்மாய்தாங்கல் = ஐய்யப்பன் தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல் - சென்னைக்கு அருகில். இந்தச் சொல்லைத் தொண்டமண்டலத்திலேயே அதிகங் காண்கிறேன். மற்ற மண்டலங்களில் அதிகம் பயன்படவில்லை.ஏந்தல் = சொக்கனேந்தல், சிவகங்கைமாவட்டம் காரைக்குடி/ஆத்தங்குடிக்கு அருகில். மற்ற பகுதிகளில் இச்சொல்லின் பயன்பாடு உண்டா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் ஐயா.2015-12-09 10:10 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:ஒவ்வொன்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கலாம்புழல் ஏரி = சென்னைக்கு அருகில். வீரநாராயணபுரம் ஏரி என்னும் வீராணம் ஏரி கொள்ளிடத்திற்கு அருகில், மதுராந்தகம் ஏரி - ஏரிகள் தமிழகத்திர் கணக்கில்லை.கண்மாய் = சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ம்மாவட்டங்களில் ஏறளமான கண்மாய்கள். எங்கள் ஊரின் வையக்கரைக் கண்மாய்தாங்கல் = ஐய்யப்பன் தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல் - சென்னைக்கு அருகில். இந்தச் சொல்லைத் தொண்டமண்டலத்திலேயே அதிகங் காண்கிறேன். மற்ற மண்டலங்களில் அதிகம் பயன்படவில்லை.ஏந்தல் = சொக்கனேந்தல், சிவகங்கைமாவட்டம் காரைக்குடி/ஆத்தங்குடிக்கு அருகில். மற்ற பகுதிகளில் இச்சொல்லின் பயன்பாடு உண்டா?
அன்னியனேந்தல்
செல்லப்பனேந்தல்
வாவியாரேந்தல்
வில்லியாரேந்தல்
பனையனேந்தல்
முத்தனேந்தல்
கச்சனேந்தல்
ஒவ்வொன்றுக்கும் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கலாம்புழல் ஏரி = சென்னைக்கு அருகில். வீரநாராயணபுரம் ஏரி என்னும் வீராணம் ஏரி கொள்ளிடத்திற்கு அருகில், மதுராந்தகம் ஏரி - ஏரிகள் தமிழகத்திர் கணக்கில்லை.கண்மாய் = சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ம்மாவட்டங்களில் ஏறளமான கண்மாய்கள். எங்கள் ஊரின் வையக்கரைக் கண்மாய்தாங்கல் = ஐய்யப்பன் தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல் - சென்னைக்கு அருகில். இந்தச் சொல்லைத் தொண்டமண்டலத்திலேயே அதிகங் காண்கிறேன். மற்ற மண்டலங்களில் அதிகம் பயன்படவில்லை.
--
நீர்மேலாண்மை பற்றிய குறிப்புகளைப் படித்ததும் அண்மையில் பார்த்த ஒருகல்வெட்டு நினைவுக்கு வந்தது. இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:கல்வெட்டின் பாடம்;ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டருளின (ஸ்ரீ) சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு (இருப)தின் எதிராமாண்டு அழகர் திருவிடையாட்டம் வடபறப்பு நாட்டுப் பறம்பான திருநாராயணமங்கலத்து குளம் கரையும் வளர்த்து வயல்நீர் கலையாமற் கல்லும் படுப்பித்து கலிங்கும் நாட்டுவித்தான் கோவூருடையான் ஆள்வான் சக்கரத்தையன் ஸ்வஸ்திஸ்ரீசுந்தரம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--Suba.T.http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருச்சி விமானநிலையம் அருகே அமைந்துள்ளது, கொட்டப்பட்டு ஏரி. இது, திருச்சி மாநகரின் மிக முக்கியமான நீர்பிடிப்பு பகுதியாகவும், வடிகாலாகவும், நிலத்தடி நீருக்கான ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியானது சமீபகாலமாக தொடர் சோதனைகளை சந்தித்து, சுருங்கிக் கொண்டே வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, இந்த ஏரியை அரசாங்கமே படிபடியாக ஆக்கிரமித்து வருகிறது. ஏரிப்பகுதியில் ஆவின் பால் பண்ணை, கோளரங்கம் ஆகியவற்றை அமைத்து இந்த ஏரியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக இந்த ஏரிக்குள் மண்ணைப் போட்டு சாலை அமைக்கும் பணி வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்லாமல், திருச்சி மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இப்பகுதி மக்களோடு இணைந்து இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ள தண்ணீர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத் ராஜ் சேஷன் நம்மிடம் பேசியபோது ‘‘இந்த ஏரியோட உண்மையான மொத்த பரப்பளவு எவ்வளவுனு தெரியலை. இந்த ஏரியில பல ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு தான் கோளரங்கம், ஆவின் பால் பண்ணையும் மிக பிரமாண்டமா கட்டப்பட்டிருக்கு. இதெல்லாம் போக, இந்த ஏரியில் இப்ப மிச்சமுள்ள பகுதி 48 ஏக்கர். இந்த ஏரியை பாதுகாக்கலைனா திருச்சி மக்கள் பலவிதமான சோதனைகளையும், ஆபத்துகளையும் சந்திக்க வேண்டி வரும். அதற்குக் காரணம், கே.கே. நகர், காஜாமலை, விமான நிலையம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் மழைக் காலங்களில் உருவாகக்கூடிய வெள்ளநீரானது, இந்த கொட்டப்பட்டு ஏரியில்தான் வடிஞ்சிக்கிட்டு இருக்கு. திருச்சி விமானநிலையத்துக்கு தென்மேற்குல இருக்குற செம்பட்டு ஏரியில நிரம்பக்கூடிய தண்ணீரும், இதே கொட்டப்பட்டு ஏரியிலதான் வடியும். 2005-ம் ஆண்டு மழை வெள்ளம் வந்தபோது ஆவின் பால் பண்ணைக்குள்ள தண்ணீர் புகுந்து மிஷின்கள் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய சேதாரம் எல்லாம் உருவாச்சு. 2006-ல், நீர்நிலைகளை ஆக்கிரமிச்சு வேறு எந்த ஒரு பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தக்கூடாதுனு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
\
2008-ல் திருச்சி மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையினரும் இந்த ஏரிக்குள்ளத்தான் வீட்டுமனை பட்டா போட்டு பத்திரிக்கையாளர்களுக்கு மானிய விலையில விற்பனை செஞ்சிருக்காங்க. ஏரிக்குள்ள கொடுத்திருக்குற வீட்டு மனைகள் பாதுகாப்பானதல்ல. கடந்த ஆண்டு சென்னையில ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளே மிகப்பெரிய பாடம். பத்திரிக்கையாளர்களுக்கு வேறொரு இடத்துல வீட்டு மனைகளை மாத்திக் கொடுக்கணும். ஏரிக்குள் இருக்கக்கூடிய வீட்டுமனைகளுக்கு,போய்வர இப்ப சாலை அமைக்கப்பட்டால் எதிர்காலத்துல ஆக்கிரமிப்புகளும் அதிகமாகும். இப்பகுதி மக்கள் போராட்டங்கள் மூலமாகவும் நீதிமன்றம் மூலமாகவும் இதை தடுத்து நிறுத்தப் போறாங்க. இந்த ஏரியை முழுமையாக ஆழப்படுத்தி, கரைகள் அமைத்து முறையா பராமரிச்சாலே, திருச்சி மாநகர மக்களின் தண்ணீர் தேவையில போதுமான அளவு தண்ணீரை இந்த ஏரியே கொடுத்திடும்’’ என்றார்.
ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தமிழகத்தில் குடிநீர், விவசாயம் இரண்டுக்கும் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள், பராமரிப்பின்றித் தூர்ந்துபோய் இருக்கின்றன. அதே நேரத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழக மக்கள் தவித்து வருகின்றனர். ஆங்காங்கே பல தொண்டு நிறுவனங்களும், மக்கள் பிரதிநிதிகளும் நீர்நிலைகளை தூர்வாரிப் பராமரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நீர்நிலைகளைப் பராமரிக்க 'குடிமராமத்து' என்ற பழங்கால முறையினை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் சிறிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. குடிமராமத்து எவ்வளவு தூரத்துக்குப் பயன் அளிக்கும்?
365 நாட்களும் பராமரிப்பு
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் 1837-ம் ஆண்டு வரை குடிமராமத்து முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கால்வாய் மணியம் என்ற பெயரில் ஒரு வாய்க்காலுக்கு ஒரு மணியக்காரர் இருப்பார். ஒரு குடும்பத்துக்கு இருவர் வீதம் குடிமராமத்துப் பணிகளில் மக்கள் ஈடுபடுவார்கள். ஏரி மட்டுமின்றி வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்வார்கள். இதனால் ஏரியில் தண்ணீர், இருந்தாலும் இல்லாவிட்டாலும் 365 நாட்களும் பராமரிப்பு இருக்கும். குடிமராமத்து மூலம், ஏரிகள் கிராமத்தின் உயிர்நாடியாகவே இருந்தன. அரசின் திட்டம் பலன் அளிக்குமா?
தனியாரிடம் விடக்கூடாது
பண்டைய காலத்தில் மக்கள் பங்களிப்புடன் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகளில் அரசின் ஆதிக்கம் தொடங்கியபோதுதான் குடிமராமத்து முற்றிலும் தடைபட்டுப்போனது. இப்போது 10 லட்சம் ரூபாய்க்கு உள்பட்ட பணிகளை மட்டுமே மக்களைக் கொண்டு குடிமராமத்து செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது. இதுகுறித்து தஞ்சை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசியபோது, "குடிமராமத்துப் பணிகள் என்பது 1963-ம் ஆண்டுவரை செம்மையாக நடந்தது. நீர்நிலைகள் பராமரிப்பு என்பதில் அரசியல் நுழைந்த பிறகு, ஒப்பந்தக்காரர்கள் கையில் போனபிறகு குடிமராமத்து முறை இல்லாமல் போய்விட்டது.
நீர்நிலைகளை பராமரிக்கிறோம் என்ற பெயரில் எந்த ஒரு தனியாரிடமும் ஒப்பந்தம் இல்லாமல், மக்களைக் கொண்டு செம்மையாக செய்தால் நீர்நிலைகளில் மிகக் குறைந்த அளவிலான நீரைக் கூட சேமிக்க முடியும். இப்போது குடிமராமத்து பணிகளைச் செய்ய வேண்டும் எனில், 1950 ஆண்டுக்கு முன்பு உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி உள்ள நீர்நிலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
தன்னார்வ முயற்சிகள்
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கனமழை பெய்தபோதும் அப்போது கிடைத்த மழை நீர் சேமிக்கப்படவே இல்லை. காரணம் சென்னையைச் சுற்றி இருக்கும் நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததும், பராமரிக்கப்படாததும்தான். இதை உணர்ந்த தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை தாங்களாகவே தூர்வாரி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் பேசினோம். "பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளைப் பாதுகாக்க களம் இறங்கி உள்ளன. விகடன் குழுமத்தின் சார்பில் படப்பை அருகில் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. குடிமராமத்துப் பணிகளின்போது ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளும்படி விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கலாம். அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளை அனுமதிக்கக் கூடாது. அதே போல 100 நாள் வேலைத் திட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் செய்யக்கூடாது" என்றார்.

ஆக்கிரமிப்புகளை என்ன செய்வீர்கள்
நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது நல்ல விஷயம்தான். ஆனால், இப்போது நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர், ஜனகராஜனிடம் பேசினோம். "நீர்நிலைகளைப் பராமரிப்பதில் அரசுக்கு திடீரென ஞானோதயம் வந்திருக்கிறது. இப்போது ஏரியில் பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்பேட்டைகள் இவையெல்லாம்தான் இருக்கின்றன. குடிமராமத்து செய்யப்போகும் அரசு இதையெல்லாம் என்ன செய்யப்போகிறது. குடிமராமத்தின்போது ஏரியின் வரத்துக்கால்வாய், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மற்றபடி குடிமராமத்து என்பது ஒரு மாற்றத்துக்கான விஷயம்தான்" என்றார்.
தமிழகம் தண்ணீர் இன்றி தவிப்பதற்கு நீர் நிலைகள் பராமரிப்பு மோசமான நிலையில் இருப்பதுதான் காரணம். தமிழகம் தகிப்பது ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், மக்களைத் தவிக்க விட்டுவிட்டு அரசு மெளனமாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.
- கே.பாலசுப்பிரமணி
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் 1837-ம் ஆண்டு வரை குடிமராமத்து முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கால்வாய் மணியம் என்ற பெயரில் ஒரு வாய்க்காலுக்கு ஒரு மணியக்காரர் இருப்பார். ஒரு குடும்பத்துக்கு இருவர் வீதம் குடிமராமத்துப் பணிகளில் மக்கள் ஈடுபடுவார்கள். ஏரி மட்டுமின்றி வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்வார்கள். இதனால் ஏரியில் தண்ணீர், இருந்தாலும் இல்லாவிட்டாலும் 365 நாட்களும் பராமரிப்பு இருக்கும். குடிமராமத்து மூலம், ஏரிகள் கிராமத்தின் உயிர்நாடியாகவே இருந்தன. அரசின் திட்டம் பலன் அளிக்குமா?
~ என் தாத்தா டெல்டா பிரதேசத்தில் மணியக்காரராக இருந்ததால், இந்த உண்மை எனக்குத்தெரியும். குடிமராமத்து பராமரிப்பு ஜமாபந்தியில் தீர அலசப்படும். கலோனிய அரசு, தன்னுடைய ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்கு, இதை பாடமாக வைத்திருந்தார்கள். மக்களும், அரசும் கை கோர்த்து வேளாண்மையை வளர்க்கும். விடுதலை கிடைத்த பின் ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார போன்றோர், கிராம நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்ததால், ஓரளவு இந்த சேவையை தொடர்ந்தனர். திராவிடகட்சிகள் தலையெடுத்த பின் குடிமராமத்து பாதிக்கப்பட்டது. வேண்டப்பட்டவனுக்கு, துட்டு கொடுத்தவனுக்கு முன்னுரிமை, ஏரி அழிப்பு, ஆக்கிரமிப்பு எல்லாம் வருடாவருடம் இன்னலாக பெருகி வந்தன. எல்லாம் ஆண்டவன் செயல் அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இன்னம்பூரான்