திராவிட இயக்கத்தின் மகத்தான முன்னோடி டாக்டர் சி.நடேசன்

64 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 4, 2020, 6:04:31 PM4/4/20
to மின்தமிழ்
sourcehttps://www.hindutamil.in/news/opinion/columns/540082-dr-c-natesan.html

டாக்டர் சி.நடேசனார்: திராவிட இயக்கத்தின் மகத்தான முன்னோடி!

18 Feb 2020 

நீதிக் கட்சி உருவாவதற்குக் காரணமான முதல் மூவருள் முதல்வர் சி.நடேசனார். 1875-ல் பிறந்த இவருடைய பிறந்த நாளும் மாதமும் இன்னதென்று தெரியவில்லை. நடேசனார் தனது சிறு பருவத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். அக்காலத்தில் சென்னையில் தெலுங்கைப் பயிற்சி மொழியாகக் கொண்ட பள்ளிகளே அதிகமாக இருந்தன என்பதால், நடேசனாரும் தெலுங்கு மொழி மூலமாகவே கல்வி கற்றார். அம்மொழியிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். பிறகு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில், எம்பிசிஎம் என்பதே மருத்துவப் பட்டத்தில் முதல்தரப் பட்டம். இப்பட்டம் பெற நடேசனார் பல முறை முயன்றும் முடியவில்லை. எல்எம்எஸ் என்ற மருத்துவப் பட்டத்தைப் பெற்றே அவரால் மருத்துவராக முடிந்தது என்றாலும் வைத்திய நிபுணர் என்றும், கைராசிக்காரர் என்றும் மக்களிடம் அவர் நன்மதிப்பைப் பெற்றார்.

சென்னை ராஜதானியின் அப்போதைய அரசியல் நிலைகளால் உயர் சாதியினரால் அரசுப் பணிகளிலுள்ள இதர வகுப்பார் பாதிக்கப்படுவதும், உயர் சாதியினர் வெள்ளையர்களோடு சேர்ந்துகொண்டு சலுகைகள் பெறுவதும் தவிர்க்க முடியாததாய்த் தொடர்ந்தன. இந்நிகழ்வுகள் நடேசனாரைப் பொதுவாழ்க்கையில் ஈடுபட வைத்தன. பாதிக்கப்படுகிற வகுப்பாருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில், ஓர் அமைப்பை உருவாக்க எண்ணம் கொண்டு 1912-ல் ‘சென்னைத் திராவிடர் சங்கம்’ உருவாக்கினார். இவ்வமைப்பு சென்னையில் பொதுமக்களின் அமைப்பாக இயங்கிவந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இச்சங்கம் தொடங்கப்பட்டதன் விளைவாகத்தான் நடேசனாரின் நட்பு திரு.வி.க.வுக்குக் கிடைத்ததாக அவரது வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது. அரசு அலுவலகங்களில் பணியாற்றிவந்த பிராமணரல்லாதார், மாலை நேரங்களில் திராவிடர் சங்கத்தில் கூடி, தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்துப் பேசித் தீர்வு கண்டனர். இது மட்டுமன்றி சிந்தனையாளர் சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு, எல்.டி.சாமிக்கண்ணு, திரு.வி.க. போன்ற அறிஞர்களின் சொற்பொழிவுகள் திராவிடர் சங்கத்தில் அடிக்கடி நடைபெறும்.

திராவிடர் இல்லம்

இப்படித் தொடங்கிய திராவிடர் சங்கத்தின் பணிகள்தான் பின்னர் நீதிக் கட்சி தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்தன. 1919-ல் இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டு ஆய்வுக் குழுவினர் திராவிடர்களின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கென ஒரு பிரதிநிதியை அனுப்பிவைக்குமாறு இச்சங்கத்தினரைக் கேட்டுக்கொண்டதன் பேரில் சர் கே.வி.ரெட்டி நாயுடு அனுப்பிவைக்கப்பட்டார். திராவிடர் சங்கம் நடத்தியதுபோலவே ‘திராவிடர் இல்லம்’ என்கிற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசனார் நடத்தினார். திராவிட சமூக மாணவர்களின் பிற்போக்கான நிலையைக் கண்டு வருந்திய அவர் இவ்விடுதியைத் தொடங்கினார். அங்கே ஏழை மாணவர்கள் பணம் செலுத்தாமலேயே உணவருந்தினார்கள். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்களை நாட்டுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை திராவிடர் சங்கத்தைச் சார்ந்ததாகும்.

நடேசனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தது இல்லை. தான் தோற்றுவித்த அமைப்பின் மூலம் பிராமணரல்லாதாருக்கு உழைத்துவந்தார். இந்த நிலையில் பிராமணரல்லாதார் இயக்கத்துக்கு அரசியல் வடிவம் கொடுத்த பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களும் காங்கிரஸில் பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டு உழைத்துவந்தனர். அவர்களது நம்பிக்கையை காங்கிரஸின் நடைமுறை தகர்த்தெறிந்தது. நடேசனார் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு திராவிடர்களின் இழிநிலையைப் போக்க தியாகராயரையும் நாயரையும் கண்டு தம் கருத்தை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, இருவரையும் கொண்டு ஓர் அரசியல் கட்சி உருவெடுக்கக் காரணமாக இருந்தார்.

நடேசனார் முயற்சி இல்லையானால், நீதிக் கட்சி என்ற பிராமணரல்லாதார் இயக்கம் ஏற்பட்டிருக்க முடியாது. நடேசனார் கூட்டிய மாநாடுகளும் கூட்டங்களும் எண்ணிலடங்காதவை. இவற்றுக்கு நடேசனார் தனது கைப்பொருளையே செலவழித்தார். டி.எம்.நாயர் லண்டன் பயணப்பட்டபோது, நீதிக் கட்சியின் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டி.எம்.நாயரும் தியாகராயரும் காலமான பிறகு, தனியாக இருந்து நீதிக் கட்சியை நடத்திய பெருமை மிக்கவர் நடேசனார். ஆர்க்காடு ராமசாமி முதலியார் நீதிக் கட்சியின் மூளையாக விளங்கினாலும், நடேசனார் அக்கட்சியின் இதயமாகச் செயல்பட்டார்.

சட்டமன்றப் பணிகள்

1920-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார் நடேசனார். 1920 முதல், இடையில் ஒரு தடவை மட்டும் தோல்வியடைந்தாலும் 1937 வரை நடேசனாரின் சட்டமன்றப் பணி தொடர்ந்தது. அதாவது, அவர் இறக்கும் வரையில் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார். சட்டமன்றத்தில் நீதிக் கட்சியின் சீரிய குறிக்கோள்களுக்கும் கொள்கைகளுக்கும் அவர் வாதாடினார். அரசுப் பணிகளில் இருப்போருக்கு வகுப்புரிமைக்காக அடிக்கடி கேள்விகள் கேட்டும் வகுப்புரிமை கையாளப்படாததைச் சுட்டிக்காட்டியும் பிராமணரல்லாதார் நலம் பெறப் பெரிதும் உழைத்தார். இவர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானங்களிலேயே மிகச் சிறந்தது ‘பார்ப்பனர் அல்லாதார் யார்?’ என்பதைப் பற்றிய வரைவுதான்!

நீதிக் கட்சியின் போராட்டத்தின் விளைவாக 1919-ல் மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில், சட்டமன்றங்களில் பிராமணரல்லாதார் வகுப்புவாரி முறையில் இடம்பெற வகைசெய்யப்பட்டிருந்தது. இந்தச் சமூகப் பாதுகாப்புகளால் ஊக்கம் பெற்ற நீதிக் கட்சி, அரசு சார்ந்த பொது வாரியங்களிலும் நிர்வாகக் கழகங்களிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு போன்ற அமைப்புகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரியது. மேலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தாய்மொழிப் படிப்பை அலட்சியப்படுத்திவந்தது. நடேசனார் கொண்டுவந்த தீர்மானம்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிப் படிப்பை அறிமுகப்படுத்துவதற்குக் காரணமாக இருந்தது.

உட்கட்சி அரசியல்

முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே (1920) சென்னை மாநகரத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றும் நடேசனாரை நீதிக் கட்சி அமைச்சராக்கவில்லை. அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் சட்டசபையின் துணைத் தலைவர் ஆக்கப்பட்டார். இப்பதவியை அவர் பெறுவதற்குக்கூட ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரை தேவையாக இருந்தது. எந்த வகையில் அவர் தகுதி குறைவானவர் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் எல்லாம் திராவிட இயக்கக் கொள்கைகளை எதிரொலிப்பனவாக இருந்தன. நடேசனாருக்கு நீதிக் கட்சி பெரும் பொறுப்பு எதையும் தந்து சிறப்பிக்கவில்லை. தொழிலில் முதல் தர டாக்டர் பட்டம் பெற முயன்றார், முடியவில்லை. ஒரே மகன்; கல்லூரியில் படித்துவந்தபோது இறந்துபோனான். சென்னை மாநகராட்சியின் தலைவராக இரண்டு முறை போட்டியிட்டார்; ஆக முடியவில்லை. சென்னை மாநகரின் முதல் மேயராக வர வேண்டும் என்று நினைத்தார்; முடியவில்லை. இத்தனைக்கும் அவர் நீதிக் கட்சியை உருவாக்கிய மூவருள் ஒருவர்.

இரக்கமும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் இயல்பிலேயே உடையவர் நடேசனார். ஆனால், நீதிக் கட்சியின் உட்கட்சி அரசியலில் பிட்டி.தியாகராயர், சர்.ஏ.ராமசாமி முதலியார், முத்தையா செட்டியார் போன்றோர் இவர் மீது பகை கொண்டதற்கு உரிய காரணங்கள் எதுவும் நமக்கு இதுவரை தெரியவில்லை. டாக்டர் நடேசனார் மரணம் அடைந்தபோது ‘குடி அரசு’ இதழில் பெரியார் எழுதிய இரங்கல் குறிப்பைப் படித்துப் பார்த்தால் நடேசனாரின் கபடமற்ற தன்மையைப் புரிந்துகொள்ளலாம்:

“டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் எனும் சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனர் அல்லாத தமிழ் மக்கள் எவரும் இருந்திட மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவரும் நாட்டில் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகமற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் ஆகும்.”

- க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க வரலாற்றாசிரியர்.

பிப்ரவரி 18: சி.நடேசனார் நினைவுநாள்

தேமொழி

unread,
Apr 4, 2020, 6:16:21 PM4/4/20
to மின்தமிழ்
sourcehttp://www.keetru.com/index.php/2011-03-30-06-18-53/2013-sp-1166105119/24660-2013-08-20-07-03-31?

திராவிடத் தலைவர் டாக்டர் வி.நடேசனார்


ஆகஸ்ட் 2013

நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டாக்டர் சி.நடேசனார். இவர் 1875 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவரின் முன்னோர் சென்னையை அடுத்த பொன்னேரி, சின்னபுங்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தொடக்கக் கல்வியைத் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட பள்ளியில் தொடங்கியதால், உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் தெலுங்கு மொழியையே விருப்பப் பாடமாகப் படித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவராகச் சிறந்து விளங்கினார்.

சாதி பார்த்து மருத்துவம் பார்க்கும் காலத்தில் இவர் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் சிகிச்சை தந்தார். குறிப்பாகச் சென்னையில் வாழ்ந்து வந்த வறியோர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு இரவு பகல் பாராது சேவை செய்தார்.

டாக்டர் நடேசனார் தாம் பிறந்த திராவிட சமுதாயம் சமூக நிலையிலும் அரசியல் நிலையிலும் பொருளாதார நிலையிலும் மிக மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டார். இந்த அவல நிலையைப் போக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டார்.

1912 ஆம் ஆண்டு “சென்னை திராவிடர் சங்கம்” தோற்றுவித்தார். இந்த திராவிடர் சங்கம்தான் பார்ப்பனரல்லாத தலைமைப் பாதுகாவல் இடமாகத் திகழ்ந்தது. இச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் ம. சிங்காரவேலர், பேராசிரியர் இலட்சுமி நரசு, எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை, மற்றும் திரு.வி.க. போன்றோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

இங்கிலாந்து பார்லிமெண்டு கூட்டு செலக்ட் கமிட்டியினர் திராவிடர்களின் நலன்களைப் பற்றி உரையாட ஒரு பிரதிநிதியை அனுப்பும்படி இச்சங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். டாக்டர் நடேசனார் சர்.கே.வி. ரெட்டி அவர்களைச் சங்கத்தின் பிரதிநிதியாக அனுப்பிவைத்தார். அவர் மூலம் ஆங்கிலேயர்கள் திராவிடர்களின் நிலை இந்தியாவில் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

திராவிட சமுதாயத்தைச் சார்ந்த ஏழை மாணவர்கள் உயர்கல்வியைப் படிக்க சென்னை வரும்போது தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். காரணம் சென்னையில் பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்ப்பனரல்லாதோருக்குத் தங்குவதற்கோ, உட்கார்ந்து உணவு உட்கொள்வதற்கோ அனுமதி இல்லை. டாக்டர் நடேசனார் திராவிட மாணவர்கள் தங்கிப் படிக்க “திராவிடர் இல்லம்” என்ற பெயரில் ஒரு விடுதியைச் சென்னையில் தொடங்கினார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் உணவு வழங்கினார். வசதியுள்ள மாணவர்கள் பணம் கொடுத்து உணவு உண்டனர்.

ஆண்டுதோறும் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் திராவிட மாணவ பட்டதாரிகளுக்கு விருந்தளித்துப் பாராட்டி வழி அனுப்புவார். அதோடு திராவிட உணர்ச்சியையும் வீரத்தையும் அவர்களுக்கு ஊட்டிப் பார்ப்பனர்களோடு போட்டியிட்டு முன்னுக்கு வரவேண்டும் என வலியுறுத்துவார்.

காங்கிரசுக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்றோர் காங்கிரசுக் கட்சியில் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் வடநாட்டாரின் ஆதிக்கத்துக்கு ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வருவதைக் கண்டு வெகுண்டெழுந்து காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, பார்ப்பனரல்லாதோரின் நலனுக்காகப் பாடுபட முடிவு செய்ததை அறிந்த டாக்டர் நடேசனார், அவர்களை அணுகி திராவிடர்களின் உயர்வுக்காகப் பாடுபட ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் மூலம் செயல்படலாம் என்று அவர்களின் ஒப்புதலை பெற்றார்.

1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம்நாள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் சர்.பி. தியாகராயர், டி.எம். நாயர், சி. நடேசனார் மற்றும் 30 முக்கிய தலைவர்கள் ஒன்று கூடித் “தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட ஜஸ்டிஸ்  என்ற ஆங்கில ஏட்டின் பெயரையே இக்கட்சியின் பெயராக மக்கள் அழைத்தனர். (நீதிக் கட்சி)

டாக்டர் நடேசனார் 1920, 1923, 1926 மற்றும் 1931 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டப் பேரவையில் திராவிட சமுதாயத்தவர்களுக்காகக் குரல் கொடுத்துப் பல தீர்மானங்களை நிறைவேற்றித் தந்தார்.

சென்னை மத்திய செக்ரட்டேரியேட்டில் (தலைமை செயலகம்) பார்ப்பனரல்லாதார் மிக மிகக் குறைந்த அளவில் வேலை பார்த்து வந்தனர். பார்ப்பனர்களுக்கும் பர்ப்பனரல்லாதாருக்குமிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்காக வரும் 3 ஆண்டுகளுக்குப் பார்ப்பனரல்லாத சமூகத்திலிருந்தே அதிகாரிகள் மற்றும் எழுத்தர் வேலைகளுக்கு நியமிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன் காரணமாகவே சென்னை தலைமை செயலகத்தில் பார்ப்பனரல்லாதோர் நுழையவும் செல்வாக்கு பெறவும் முடிந்தது.

அரசு பதவிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு அந்தந்த இலாகாவினரே ஆட்களை நேர்முகமாக நியமித்து வந்தனர். இந்த முறையில் பெரிதும் பயன்பெற்றவர்கள் பார்ப்பனர்களே. 1922 ஆம் ஆண்டு பார்ப்பன பார்ப்பனரல்லாதார் சமூகத்தினருக்கு அவர்களின் விகிதாச்சாரப்படி உத்தியோகப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நடேசனார் வாதாடியதின் விளைவாகவே முதலில் ஸ்டாப் செலக்ஷன் போர்டும்  பின்னர் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும்  உருவாக்கப்பட்டன. எனவே பார்ப்பனரல்லாத மக்கள் அரசு பதவிகளில் நுழையப் பெரிதும் காரணமாக இருந்தவர் டாக்டர் நடேசனார் என்பதும் அதற்குக் காரணமாக இருந்தது நீதிக்கட்சி ஆட்சியேயாகும்.

டாக்டர் நடேசனார் காலத்தில் சட்ட இலாகா (உயர்நீதி மன்றம்) முழுவதும் பார்ப்பன மயமாகவே இருந்து வந்தது. சட்டமன்றத் தீர்மானங்களை அவர்கள் புறக்கணித்து வந்தனர். இதனை கண்டித்துச் சட்டமன்றத்தில் நடேசனார் உரையாற்றும் போது “இந்த மாகாண சர்க்கார் இயற்றும் சட்ட திட்டங்களின்படியும் உத்தரவுகளின் படியும் தான் உயர்நீதி மன்றம் உத்தியோக நியமனங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இதனைப் பொருட்படுத்துவதில்லை. எனவே, உயர்நீதிமன்றம் கோரும் மான்ய தொகை ரூ.5.45 இலட்சத்தை அனுமதிக்கக்கூடாது நம் சட்ட சபையையும் சர்க்காரையும் மதிக்காது நடந்து வரும் சட்ட இலாகா ஒழியட்டும்” என்று தனது கருத்தை ஆவேசமாக பதிவு செய்தார்.

1922 ஆம் ஆண்டு “இந்து மத ஸ்தாபன பரிபாலன மசோதா' சட்ட சபையில் பனகல் அரசால் கொண்டுவரப்பட்டது. அம்மசோதாவை ஆதரித்து நடேசனார் உரையாற்றினார் அவர் தனது உரையில் “இம்மசோதாவை நான் முழு மூச்சுடன் ஆதரிக்கிறேன். அறநிலையங்களில் முடங்கிக் கிடக்கும் செல்வத்தை நல்ல முறையில் செலவு செய்தல் வேண்டும். பன்னெடுங்காலமாகவே இத்தகைய ஏற்பாடு வரவேண்டுமென மக்களிடையே எண்ணமிருந்து வந்தது. ஆனால் மதவிசயத்தில் தலையிடுவதில்லை என வேதாந்தம் பேசி ஆங்கிலேயர் ஆட்சி தட்டிக் கழித்து வந்தது. மன்னர்கள் கோயில்களுக்கு வேலி வேலியாக விளை நிலங்களை எழுதி வைத்தார்கள். பொன், வைரம், வைடூரியம், என்று ஆபரணங்களைக் கோயில் விக்கிரகங்களுக்கு அடுக்கடுக்காய்ச் சாத்தினார்கள். அவ்வளவையும் கோயில் குருக்கள் தங்கள் சொத்துக்களாகப் பாவித்து அனுபவித்து வருகிறார்கள். கோயில்களின் சொத்து தண்ணீராய்ச் செலவழிக்கப்படுகிறது.”

இந்திய நாட்டில் காணப்படும் கோயில்களும், மடங்களும் அன்னச்சாவடிகளும் நம் மக்களைச் சோம்பேறிகளாகவும், திருடர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் மாற்றச் செய்ததே தவிர, நற்பண்புடையவர்களாகச் செய்யவில்லை. இத்தகைய பொதுவுடைமை கேட்கும் மசோதாவை யாவரும் சட்டமாக்க உதவ வேண்டுவது அவசியமாகும்”. எனத் தனது எண்ணத்தைப் பதிவு செய்தார். தீர்மானம் பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் மீறி சட்டமாகியது.

இந்தியாவிலேயே தொழிற்சங்க முறை அடிப்படையில் முதன் முதலில் “சென்னை தொழிலாளர் சங்கம்” பின்னி மில் தொழிலாளர்களுக்காகத் திரு. வி.க. அவர்களால் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கம் தொடங்குவதற்கு டாக்டர் சி. நடேசனார், திரு.வி.க.வுக்குத் துணையாக இருந்தார். அதோடு பக்கிங்காம் மில் கதவடைப்பு மற்றும் அதனால் ஆதிதிராவிடர்களுக்கும் மற்ற சாதியினருக்கும் ஏற்பட்ட பகைமை, வீடுகளுக்குத் தீ வைத்தல், ஒருவரையொருவர் கொலை செய்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற நிகழ்வுகள் நடந்த நேரத்தில் டாக்டர் நடேசனார் தன்னந்தனியாக பெரம்பூர் புளியந்தோப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் இடையே அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டார்.

டாக்டர் டி.எம். நாயர் இறந்தவுடன் சர்.பி.தியாகராயருடன், தியாகராயர் இறந்தவுடன் தனியாகவும் கட்சியைப் புகழ்பட நடத்தி வந்த பெருமை நடேசனாரையே சாரும்.

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை 17.12.1920 அன்று பொறுப்பேற்றது. சர்.பி. தியாகராயர் முதலமைச்சராக பொறுப்பேற்க மறுத்ததால் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சாராகவும் பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்) மற்றும் ரெட்டி நாயுடு ஆகியோர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு இடமில்லை.

இரண்டாவது அமைச்சரவை 31.10.1923 அன்று பொறுப்பேற்றது பனகல் அரசர் முதலமைச்சராகவும், சர்.ஏ.பி. பாத்ரோ மற்றும் டி.என். சிவஞானம் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இம்முறை ஒரு தமிழருக்கு இடம் தரப்பட்டது. திராவிட இயக்கத்திற்கு வித்திட்ட டாக்டர் சி. நடேசனார் போன்ற அரசியல் முதிர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்புத் தராமல் அரசியலில் அனுபவம் பெறாத ஒருவருக்கு இடம் தரப்பட்டது. நீதிக்கட்சி தலைவர்களுக்கு இடையே தமிழர் – தெலுங்கர் என்ற வேற்றுமை பூதாகாரமாகவே இருந்து வந்தது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

நீண்டகாலம் சென்னை நகர சபை அங்கத்தினராக இருந்து “நகரத் தந்தை' எனப் பலராலும் புகழத்தக்க வகையில் வாழ்ந்த டாக்டர் நடேசனார் நகர சபை மேயராக பொறுப்பேற்க விரும்பி மூன்று முறை போட்டியிட்டார். முதல் இரண்டு முறை ஏ. இராசாமி முதலியார் அவரை எதிர்த்து வீழ்த்தினார் மூன்றாம்முறை முத்தைய செட்டியார் என்ற இளைஞர் அவரை எதிர்த்து நின்று பணத்தை வாரி இறைத்துத் தோல்வி அடையச் செய்தார்.

தொண்டு செய்வதே தனது முழு நேர பணியாகக் காலம் முழுவதும் உழைத்த திராவிட இயக்கத்தின் தந்தை டாக்டர் சி.நடேசனார் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாள் தனது 62 ஆவது வயதில் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

தந்தை பெரியார் 1938 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியைத் தூக்கி நிறுத்தினார்.

தனக்கென வாழாது பிறருக்காகவே வாழ்ந்து, மனித சமுதாயத்தை மேன்மையடையச் செய்த பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய டாக்டர் வி. நடேசனாரின் தூய தொண்டு பொதுப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும்.

வாழ்க நடேசனார் புகழ்.



 

தேமொழி

unread,
Apr 4, 2020, 6:23:47 PM4/4/20
to மின்தமிழ்

Dr.C.Natesan.jpg

----

Pandiyaraja

unread,
Apr 5, 2020, 2:48:51 AM4/5/20
to மின்தமிழ்
அருமையான பதிவு. இதுவரை நான் அறியாதது.மிக்க நன்றி,தேமொழி அம்மையே.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Apr 5, 2020, 6:16:18 AM4/5/20
to மின்தமிழ், vallamai
நடேசமுதலியார் பற்றிய செய்திகள் அறிந்தேன். திராவிடர் சங்கம் (1912) பற்றிய முழுமையான வரலாறு எழுதப்படல் வேண்டும்.
கால்ட்வெல் திராவிட நூல்களின் ஒப்பிலக்கணம் எழுதினார். அதன் தாக்கம் நடேசனாரின் சங்கப் பெயரில் தெரிகிறது.

திரு. சி. நடேசன் எம்பிபிஎஸ் இல்லாத, எல்எம்எஸ் (டிப்ளமா போன்றது இது) டாக்டர் என அறிந்தேன். நன்றி.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/70211f84-093f-4169-8b24-07302b7622d5%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 5, 2020, 7:20:01 AM4/5/20
to மின்தமிழ், vallamai

பெரியார் சி. நடேசன் எழுதிய அஞ்சலிக்குறிப்பு உள்ளது. முழுதுமாக, யாராவது தட்டச்சலாமே (அல்லது கூகுள் எழுத்துணரி)

இந்தப் படத்தில் இருப்பவர்கள் யார் யார்? கி.ஆ. பெ. விசுவநாதன் தெரிகிறார்.

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 5, 2020, 4:33:17 PM4/5/20
to மின்தமிழ்
Dr. நடேசன் நலிந்தார்

டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம்நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்கமாட்டார்கள், அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விஸ்வாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்கமாட்டான், தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும்.

சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப்போட்டியில் ஒரு நாளும் வெற்றிபெறமாட்டான் என்கின்ற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும் உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை . ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார். சென்னை வாசிகள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்கின்ற வேண்டுகோளின் மீது ஒருவார்த்தை சொல்லுகிறோம். அதாவது நடேசன் நலிவால் சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும் கவலையும் இருந்த மக்களில் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்து விட்டார் என்று சொல்கிறோம். அது மாத்திரமா என்றால் இன்று அவருக்கடுத்த நிலையில் இரண்டாவதவர் மூன்றாவதவர் தான் யார் என்று தேடித்திரிய வேண்டிய நிலையில் தமிழ்மக்களை விட்டு மறைந்து விட்டார் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதை நினைக்கும்போது நடேசன் நலிவால் தமிழ் மக்கள் உள்ளத்தில் துக்க தீப்பொறி குடிகொண்டு விட்டது என்றே கூறுவோம்.

ஒரு தனிப்பட்ட மனிதனை நம்பிவாழும் நாடோ சமூகமோ சுதந்திரமும் வீரமும் உள்ள நாடோ சமூகமோ ஆகாது. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நலி ஏற்படக்கூடாது என்பதே நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக. நாம் ஒவ்வொருவரும் நடேசனே ஆக நாடுவோமாக.

குடி அரசு - இரங்கல் கட்டுரை - 21.02.1937 
குடி அரசு - 1937 (1) - பக்கம் 180 


 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Apr 5, 2020, 8:21:44 PM4/5/20
to vallamai, மின்தமிழ்
நன்றி தேமொழி. கட்டுரை அறியாத தகவல்களை கொடுக்கிறது

ஞாயி., 5 ஏப்., 2020, பிற்பகல் 4:49 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfKdc-zRgSMu-J3dgV4JdiW%3D_27P_SfrYZdToZ8DzCfHA%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 6, 2020, 6:11:10 AM4/6/20
to மின்தமிழ், vallamai
பெரியார் எழுதிய மாதிரி தெரியவில்லை. அவர் கருத்துகளைச் சொல்லியிருப்பார்.
பத்திரிகையாளர்கள் (ஈழத்தடிகள், அண்ணா, ...) போன்றோர் செம்மையாக எழுதியிருப்பர்.

நடேசனார் பற்றி அறிய முடிகிறது.

நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d9a65d40-e699-45be-b2ab-4e2cff30405a%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages