சென்னை : நாவரசு கொலை வழக்கில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள்
தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இந்நிலையில் ஜான் டேவிட்டை கைது
செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜான் டேவிட் தற்போது ஆஸ்திரேலியாவில்
மத போதகராக உள்ளார். இதனால் அவரை கைது செய்வதில் போலீசாருக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புதுடில்லி : மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், அவரது
சீனியர் மாணவரான குற்றவாளி ஜான் டேவிட்டிற்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த
இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு(17);
1996ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்
கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி
விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி,
வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்குத் திரும்பவில்லை.நவம்பர் 7ம் தேதி,
சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை,
கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இதுகுறித்து
சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது
குறித்து விசாரித்து வந்தனர்.நாவரசு காணாமல் போனது குறித்து அவரது தந்தை
பொன்னுசாமி, நவம்பர் 10ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர்
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாவரசுவை நவம்பர்
6ம் தேதி மதியம், அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு
மாணவர் ஜான் டேவிட் தனது அறைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.நவம்பர்
11ம் தேதி ஜான் டேவிட், ராஜமன்னார்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில்
சரணடைந்தார். அவரை போலீசார், நவம்பர் 18ல் தங்கள் காவலில் எடுத்து
விசாரித்தனர். அதில், தேர்வு எழுதி விட்டு வந்த நாவரசுவை, ஜான் டேவிட்
வழிமறித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளார்.அப்போது,
ஜான் டேவிட் தாக்கியதில் நாவரசு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்து
விட்டதாகக் கருதிய ஜான் டேவிட், வெளியில் தெரியாமல் இருக்க, தனது
படிப்பிற்காக ஆய்வகக் கூடத்தில் பயன்படுத்தும், "டிசக்ஷன்' கருவிகளை
பயன்படுத்தி நாவரசுவின் தலை, கைகள் மற்றும் கால்களை தனித்தனியாக
துண்டித்துள்ளார்.
தலையை பாலிதீன் கவரில் சுற்றி, கல்லூரி வளாகத்தில் உள்ள குட்டையில்
வீசியுள்ளார். பின்னர் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, பெரிய சூட்கேசில்
அடைத்துள்ளார். அதேபோன்று, கைகள் மற்றும் கால்களை தனியாக, "பேக்' செய்து,
சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், கைகள்
மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடல் இருந்த சூட்கேசை, சென்னையில்
டவுன் பஸ்சில் வைத்துவிட்டு சிதம்பரம் திரும்பி வந்ததும், போலீசார்
சந்தேகிக்கவே கோர்ட்டில் சரணடைந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து,
போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை
நடத்தினர். ஜான் டேவிட் குறிப்பிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில்
உள்ள குட்டையில் தேடியதில், நாவரசுவின் தலை சிக்கியது; செங்கல்பட்டு
அருகே கால்கள் சிக்கின. இதையும், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட உடலில்
இருந்து எடுத்த திசுக்களை ஆய்வு செய்ததில், இறந்தது நாவரசு என்பது உறுதி
செய்யப்பட்டது.கல்லூரியில், "ராகிங்' கொடுமையால் மாணவர் நாவரசு கொடூரமான
முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் பீதியை
ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு கவனம்
செலுத்தியது.ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர்
செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த
வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக முன்னாள் நீதிபதி
கந்தசாமியும், ஜான் டேவிட் தரப்பில் பிரபல வக்கீல் விருத்தாசலம்
ரெட்டியாரும் ஆஜராகி வாதிட்டனர்.
நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள்
விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த
நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில்,
ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு
ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள்
தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான்
டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த
நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான்
டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான்
டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து
தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர்
அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை
கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு,
கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே' என,
தீர்ப்பளித்தது.
ஜான் டேவிட் சரணடைய உத்தரவு : நாவரசு கொலை வழக்கில் நீதிபதிகள் எழுதிய 41
பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:விசாரணை நடவடிக்கைகளில் நடந்துள்ள
சிறு தவறுகளை வைத்து, வழக்கில் உண்மையில்லை என, ஒட்டு மொத்தமாக கூறி விட
முடியாது. இந்த வழக்கில் பலமான சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. ஜான் டேவிட்
தான் குற்றவாளி என்பதை தர்க்க ரீதியாகவும், நுட்பமான வகையிலும் விசாரணை
அதிகாரிகள் நிரூபித்துள்ளனர். இந்த வழக்கை ஐகோர்ட் கையாண்ட விதம்
சரியில்லை. சாட்சியங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன.ஜான்
டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை, அவர் ஏக காலத்தில்
அனுபவிக்க வேண்டும். தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டியதில்லை. தண்டனை பெற்ற
ஜான் டேவிட் உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரண் அடைய வேண்டும்.
இல்லையெனில், அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த
வழக்கின் உண்மை நிலவரங்களை பார்க்கையில் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக
உள்ளது. மிகக் கொடூரமான முறையில் இளம் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியது கொடூரமான மற்றும் அச்சமூட்டும்
செயல்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருக்கிறாரா ஜான் டேவிட்? மாணவர் நாவரசு கொலை வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் இரட்டை
ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில்
மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய சாட்சி இல்லாத
காரணத்தால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.ஆயுள்
தண்டனையிலிருந்து விடுதலையான அவர், கிறிஸ்தவ மத போதகர் படிப்பு முடித்து
ஆஸ்திரேலியா சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஐகோர்ட் தீர்ப்பை
தள்ளுபடி செய்து, செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை தற்போது சுப்ரீம் கோர்ட் உறுதி
செய்துள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தாமாகவே முன் வந்து கோர்ட்
அல்லது போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய வேண்டும். தற்போது அவர் வெளிநாட்டில்
உள்ளதால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் கூட சரணடையலாம்.அப்படி இல்லாத
பட்சத்தில், கோர்ட் மூலம் தண்டனை பிடி ஆணை பிறப்பிக்கப்படும். அதன் பிறகு
அவர் உள்நாட்டில் இருந்தால், அவரது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டு
பின்னர் போலீசாரால் கைது செய்யப்படுவார். வெளிநாட்டில் இருந்தால், நம்
நாட்டில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திற்கும், அந்த நாட்டில் உள்ள நம்
நாட்டு தூதரகத்திற்கும் கோர்ட் உத்தரவு அனுப்பி வைக்கப்படும். அதன்
பின்னர் ஜான் டேவிட்டை அந்நாட்டு போலீசார் கைது செய்து, அங்குள்ள நம்
நாட்டு தூதரகத்தில் ஒப்படைப்பர். பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்டு,
கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்
என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஜான் டேவிட் குறித்த தகவல் சேகரிக்க 2 தனிப்படை: எஸ்.பி., : சுப்ரீம்
கோர்ட் தீர்ப்புகுறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் கேட்டபோது,
"இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு
எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஜான் டேவிட் தற்போது எங்குள்ளார்
என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர்
சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர்
தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோர்ட் உத்தரவு கிடைத்த
பின் ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Dinamalar
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாவரசு கொலைவழக்குக்கும் ஈவ் டீசிங்குக்கும் என்ன சம்பந்தமோ?மின்செய்தி
தொகுப்பாளர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டாமோ?
ஜான் டேவிடின் தாய் தந்தை இருவருமே மருத்துவர்கள். தாய் எஸ்தர், கரூர்
வெங்கமேட்டில் அந்த நாட்களிலேயே ஐந்து மாடி மருத்துவ மனை
வைத்திருந்தார்.பிரசவத்திற்கான மருத்துவமனை என்று பெயர்ப்பலகை
இருந்தாலும், வேறு வகையில் மிகவும் பிரபலம். தந்தை கரூர் அரசு
மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
திருச்சி கேம்பியன் பள்ளியில் தான் ஜான் டேவிடும், தம்பியும் படித்தனர்.
கொடூரமான நடத்தைக்காகத் தம்பியும் பின்னால் பள்ளியை விட்டு
வெளியேற்றப்பட்ட கதை தனி.
இந்தக் கொலை வழக்கில் முக்கியமான விஷயம், உச்ச நீதிமன்றம், சென்னை
உயர்நீதிமன்றம், வழக்கை முறையாக விசாரிக்காமலேயே ஜான் டேவிடுக்கு விடுதலை
கொடுத்ததைக் குறித்துக் கண்டனம் தெரிவித்திருப்பதுதான்! சென்ற
அக்டோபரிலேயே விசாரணை முடிந்துவிட்டது, விஜயதசமியை ஒட்டி தீர்ப்பு
வழங்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.அப்போதெல்லாம், குற்றவாளி
எங்கே இருக்கிறார் என்பதை, குற்றவாளி விடுவிக்கப்பட்டுப்
பத்துவருடங்களுக்குப் பின்னால் அப்பீல் செய்த தமிழக அரசோ, தமிழகக்
காவல்துறையோ விசாரிக்க ஏன் முனையவில்லை,ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவர
என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதைப்பற்றித் தெளிவான விவரம்
எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை என்பது தான் விஷயமே!
---------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
It's a sad story for Prof. Ponnusamy's family.
Thanks,
N. Ganesan
I am totally against blind conventions.
"It is the legal principle that the chain of circumstance should be
complete as well as continuous and link back to the accused. If one
link breaks, then the benefit of doubt can be given to the accused.
The high court acquitted him on the ground that the place of crime was
not established by the prosecution. However, the state filed an appeal
and argued that simply because one link is broken, one should not
throw out the entire case," Thananjayan said.
The state built its case on the fact that the victim's head was
recovered at the instance of the accused, the blood of the victim was
recovered from the suitcase and weapons used by the accused were
recovered from his room and also that the victim was last seen in the
company of the accused on the date of the murder.
While the judgment said the next step would be to secure the accused,
Cuddalore superintendent of police Ashwin M Kotnis said the department
had already begun efforts to trace David. Sources said David could be
in Australia and added that authorities would, in that case, need to
seek the help of the Centre to bring him back.
திரு நாகராஜன், மேலே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி வெளிவந்த இந்த
செய்தியைப் படித்துப்பாருங்கள்!
மகனை இழந்த திரு பொன்னுசாமியின் சோகம், இந்தத் தீர்ப்பினால்
மாறிவிடப்போவதில்லை! ஜான் டேவிட் மாதிரி, பொறுப்பற்ற தாய்தந்தையரால்
வளர்க்கப்பட்ட கொலைகாரர்கள் மீண்டும் உருவானால், தடுப்பதற்கு சட்டத்தில்,
ஆட்சிமுறையில் எந்த வழியும் இல்லை!
-------------------------------
கிருஷ்ணமூர்த்தி
> On Apr 21, 10:23 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> wrote:
On Apr 21, 9:52 am, coral shree <cora...@gmail.com> wrote:
> கொடுமையிலும் கொடுமை இது..........இப்பொழுது ஈவ் டீசிங் பெருமளவு குறைந்த்து
> போல்தான் உள்ளது..... ம்ற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை........
>
இந்திய ஸர்க்காரும், போலீஸும் ஜான் டேவிடை
பிடிக்கிறதா? பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளுமா?
- பார்ப்போம்,
நா. கணேசன்
http://www.inneram.com/2011042115755/tn-police-may-seek-interpol-support-to-arrest-john-david
ஜான்டேவிட் தலைமறைவு: சர்வதேச காவல்துறை உதவி நாடப்படும்!
வியாழன், 21 ஏப்ரல் 2011 12:52 சின்னமுத்து Tamil Nadu
நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கடலூர்
ஜான்டேவிட், ஆஸ்திரேலியாவில் கிறிஸ்தவ போதகர் வேடத்தில்
தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொலைக்
குற்றவாளியான ஜாண்டேவிட்டைத் தேடி கண்டுபிடிக்க 2 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கருத்து சொன்ன அதிகாரி ஒருவர்,
"உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு
கொண்டு பேசியுள்ளோம். நீதிமன்ற உத்தரவு இன்னும் எங்களுக்கு வந்து
சேரவில்லை. எனினும் எங்கள் பணியைத் தொடங்கியுள்ளோம். கொலைக்குற்றவாளி
ஜான்டேவிட்டைப் பற்றிய தகவல்களைத் திரட்டி வருகிறோம்.
சிதம்பரம் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள்
அமைக்கப்பட்டு உள்ளன. அண்ணாமலைநகர் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன்
மற்றும் சிதம்பரம் நகர ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இந்தப்
படைகள் அமைத்துள்ளோம்.
ஜான்டேவிட் வசித்த பழைய வீடுகள், விடுதிகள் போன்ற இடங்களில் நேரடியாக
விசாரணை நடத்துவதற்காக சென்னை, திருச்சி, கரூர் ஆகிய நகரங்களுக்குச்
தனிப்படை அதிகாரிகள் செல்ல உள்ளார்கள். அவர் வெளிநாட்டில் எங்காவது தங்கி
இருக்கிறாரா? என்றும் விசாரித்து வருகிறோம். வெளிநாட்டில் பதுங்கி
இருப்பது தெரியவந்தால் அவரது பாஸ்போர்ட் குறித்தும் விசாரணை நடத்தி
வருகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் கிடைத்த பிறகு கைது நடவடிக்கை
தொடரும்" என்று தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் ஜான்டேவிட்டை விடுதலை செய்து தீர்ப்பளித்ததும்
ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும், அங்கு அவர் கிறிஸ்தவ
பாதிரியாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து
அவரைக் கைது செய்ய சர்வதேச காவல்துறை உதவி (இண்டர்போல்) நாடப்பட்டு
இருப்பதாகவும், அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் சென்ற அக்டோபர் மதத்திலேயே தமிழக அரசு
செய்தமேல்முறையீட்டின் மீது விசாரணை முடிந்து தீர்ப்பு விஜயதசமியை ஒட்டி
வெளியாகும் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அப்போதே, இந்தக் குற்றவாளியின்
இருப்பிடத்தை உறுதி செய்ய, நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனேயே உள்ளே தள்ள
முன்னேற்பாட்டுடன் காவல்துறை இல்லை என்பது தான் விசித்திரம்!
இப்போதும் கூட, பிடிக்க மூன்று தனிப்படை, பெற்றோர்கள் தலைமறைவு,
ஆஸ்திரேலியாவில் மதபோதகராக, இல்லையில்லை இங்குதான் எங்கோ தலைமறைவாக என்று
கண்ணாமூச்சி ஆட்டம் இன்றோடு முடிவுக்கு வந்தது. இரட்டை ஆயுள் தண்டனை,
ஒன்றன் பின் ஒன்றாக என்று இல்லாமல் ஏக காலத்தில் அனுபவிக்க
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சிறைக்குள் நல்லபிள்ளையாக
இருந்தால், பத்து வருடங்களுக்குள் வெளியே வந்துவிடலாம்!
ஆனால்,பிள்ளையைப் பறிகொடுத்தவர்களுக்கோ, அவர்கள் வாழ்நாள் முழுவதும்
தண்டனை! சோகம்!
----------------------------------------------
இதற்குப் பெயர் சட்டப்படி நீதி!
--கிருஷ்ணமூர்த்தி
வெங்கமேட்டில் இருந்து ஜான் டேவிட் பெற்றோர்
தலைமறைவு என்று படித்தேன். அதிகாரம் மிக்கவர்கள்
லாபி துணையுள்ள ஜான் உள்ளே உண்மையில்
போகிறாரா? என்பது பொறுத்திருந்து பார்க்கணும்.
நா. கணேசன்
பொன்னுசாமியைப் பற்றி ஒன்று தெரியுமா?
பள்ளிக்கூடம் பல ஆண்டுகள் போகாமல்
பின்னர் தானாக பள்ளி இறுதி தேர்வு எழுதியவர்.
பின்னர் வேளாண்மையியலில் தலைசிறந்த
விஞ்ஞானி ஆனவர் அமெரிக்காவில்.
நாவரசின் அக்கா கன்னல் இன்றும் தம்பி
இறந்ததை நினைத்து அழுவார்.
> ----------------------------------------------
> இதற்குப் பெயர் சட்டப்படி நீதி!
>
> --கிருஷ்ணமூர்த்தி
பிரச்சினை, ஜான் டேவிட் இல்லை! இப்படிக் கொடூரமான பிள்ளையைப்
பெற்றுவெட்கிக் குறுகி அவமானம் என்பதே இல்லாமல், தைரியமாகப் பாதுகாக்க
முனைகிறார்களே என்பது ஒரு புறம், பிள்ளையைப் பறிகொடுத்தவர்களுக்கு
இந்தத்தீர்ப்பு எந்தவிதத்திலும் ஆறுதலாக இருக்கப்போவதில்லை என்ற
யதார்த்தம் ஒருபுறமாக இந்த வழக்கை அறிந்த என்னைப்போன்றவர்களைக்
கொந்தளிக்க வைக்கிறது.
---------------------------------
கிருஷ்ணமூர்த்தி
On Apr 23, 7:47 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
On Apr 23, 9:59 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> @கணேசன் ஐயா
> //பின்னர் வேளாண்மையியலில் தலைசிறந்த
> விஞ்ஞானி ஆனவர்//
> அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் Advanced study centre for crystalography and
> biophysics துறையில் பேராசிரியராக இருந்தவர். அவர் பெளதிகவியல் ஆய்வாளர் என்று
> நினைத்துக் கொண்டிருக்கிறேன்
> நாகராசன்
>
ஆம். பயோ-பௌதீகத்தில் தலைசிறந்த விஞ்ஞானி,
வேளாண்மைக்கு பயோ-டெக் எவ்வாறு பயன்படும்
என்று ஆராய்ந்தோரில் ஒரு முன்னோடி.
நா. கணேசன்
> 2011/4/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிவிடலாம்
என்று இருந்த பல விஞ்ஞானிகளுக்கு
“துணைவேந்தர் மகனை வெட்டியே ஒன்றும் ஆகலை.
நாம போனால் என்ன ஆகுமோ” என்று வீடுகளில்
மனைவிகள் ஒருகாலத்தில் பேச்சு ஆனது.
பின்னர் ஐ.டி. துறை வந்து அந்த ஐயம் போக்கிற்று.
நா. கணேசன்
On Apr 23, 9:59 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> @கணேசன் ஐயா
> //பின்னர் வேளாண்மையியலில் தலைசிறந்த
> விஞ்ஞானி ஆனவர்//
> அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் Advanced study centre for crystalography and
> biophysics துறையில் பேராசிரியராக இருந்தவர். அவர் பெளதிகவியல் ஆய்வாளர் என்று
> நினைத்துக் கொண்டிருக்கிறேன்
> நாகராசன்
>
உங்கள் ஊரிலிருந்து ஒரு 15 மைலில் உள்ள ஊரில்
பிறந்தவர் பொன்னுசாமி (உடுமலை அருகே).
தன் முயற்சியால் பயின்று புகழ்மிக்க வேளாண்,
பையோ-டெக் விஞ்ஞானி ஆனவர்.
அவரது அந்தக் கால வேளாண்மை பேப்பர் ஒன்று:
Title Propagation of Casuarina junghuhniana by planting shoots and
root suckers.
Authors Husain, A. M. M.; Ponnuswamy, P. K.
Journal Indian Forester 1980 Vol. 106 No. 4 pp. 298-299
ISSN0019-4816
நா. கணேசன்
> 2011/4/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>