காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு.
சேலம் மாநகரிலிருந்து எட்டு கி.மீ. தென்மேற்கே உள்ள கஞ்ச மலைக்கு யார் அந்தப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே கஞ்சமலை, கஞ்ச-மலை அல்ல. சேலம் மாவட்டம் கனிவளத்திற்கு, அதாவது மாங்கனி வளத்திற்கு பெயர் பெற்றதென்றால், நம் சேலம் நகரம் கனிம வளத்திற்கு, அதாவது மேக்னடைட் மற்றும் மேக்னசைட் கனிம வளங்களுக்கு புகழ் பெற்றது. கஞ்சமலையில் மேக்னடைட் எனும் இரும்புத்தாது பெருமளவில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான இரும்புத்தாது -ஹெமடைட். அது இங்கே அதிகம் இல்லை. இந்த மேக்னடைட் தாது Banded Magnetite Quartzite (நம் தமிழில், “பட்டை இரும்புக் கல்”) எனும் பாறையிலிருந்து கிடைக்கிறது..
கஞ்சமலையின் நீளம் சுமார் எட்டு கி.மீ., அகலம் சுமார் மூன்றரை கி.மீ., உயரம் அங்குள்ள தரைமட்டத்திலிருந்து சுமார் அறுநூறு மீ. இந்த மலை முழுவதுமே, பட்டை இரும்புக் கல்லால் ஆனது அல்ல. வேறு பலவிதமான பாறைகளும் கலந்தே இருக்கின்றன.
புவியியல் அமைப்புப்படி , கஞ்சமலை ஒரு குழிமுக மடிப்பு மலை, அதாவது பாறைகளின் பரப்பு எல்லா மலைகளையும் போல் வெளிப்புறம் சரிந்திருந்தாலும், பாறை அமைப்புகள் உட்புறமாக சரிந்துள்ளன, ஒரு தோணி யைப் போல. (கூகுள் படத்தில் இரு முனைகளிலும் மடிப்பைப் பார்க்கலாம்). பட்டை இரும்புப் பாறை, மூன்று பெரும் கிடைகளாக மலையின் எல்லாப்பக்கத்திலும் காணப்படுகிறது ( கூகுள் படத்தில் கரும் பச்சை நிறத்தில் உள்ளவை).
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் முதன்முதலில் பறங்கிப்பேட்டை எனும் இடத்தில்தான் இரும்பு உருக்காலை துவங்கப்பட்டது. பறங்கிப்பேட்டைக்கு போர்ட்டோ நோவோ எனும் பெயரும் உண்டு..போர்த்துகீசிய மொழியில் புதிய துறைமுகம் என்று பொருள். இசுலாமியர்கள் முகம்மது பந்தர் என்று அழைப்பார்கள். அங்கே JOSHUA MARSHALL HEATH எனும் வெள்ளையரின் பெரும் முயற்சியால் 1830ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின் 1877 ஆம் ஆண்டு வரை POTONOVO IRON WORKS எனும் பெயரில் இரும்பு ஆலை நடத்தப்பட்டது. அந்த ஆலைக்கு வேண்டிய இரும்புத் தாது சேலத்திலிருந்துதான் கொண்டு செல்லப்பட்டது. மலையை சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாக தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில் வசதி இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை எப்படிக் கொண்டு செல்வது.
ஆச்சர்யப்படாதீர்கள். காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு வழியே பரிசல்களில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது ( கே.ஆர். சாகர், கபினி அணை , மேட்டூர் எதுவும் இல்லை அல்லவா.). ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முன்னூறு கி.மீ. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, கஞ்சமலை இரும்புத் தாது.
சேலத்தில் தரத்தில் உயர்ந்த இரும்புத் தாது ஏராளமாக உள்ளது என அக்காலக் குறிப்புகளில் காணப்படுகிறது. பறங்கிப் பேட்டையில் தயாரான இரும்பு இங்கிலாந்தில் மிகவும் விரும்பி வாங்கப் பட்டதாம். இப்போதும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் “ MADE IN PORTO NOVO” என எழுதப்பட்ட இரும்புத்தூண்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். இதை விட முக்கியம் என்னவெனில்,சேலம் இரும்புதாதுவிலிருந்து,பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR மற்றும் STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில் பயன் படுத்தப்பட்டது- மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில் பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்..
சரி, முடிவாக சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு சுமார் 75 மில்லியன் டன்கள். மலையை சுற்றியு கீழே விழுந்த
தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல; உருட்டாலை. இங்கே எந்தக் கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
2016-04-26 16:54 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:காவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு.
அருமை.
இந்தப் பதிவை மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
சுபா
கஞ்சமலை என உலோக மலையைக் குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே.கஞ்ச என்றால் வெண்கலம்.கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்.
கஞ்சமலை என உலோக மலையைக் குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே.கஞ்ச என்றால் வெண்கலம்.கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்.
..... தேமொழி
###கஞ்சன் என்ற ஆள் பெயரில் அம்மலை குறிக்கப்பட்டிருக்கலாம். ராசசுதானம், பஞ்சாபு பகுதிகளில் இப்பெயர் உண்டு.####நண்பரே , அது கஞ்சன் அல்ல, கான்ச்சன்.- எனக்கும் அந்தப் பெயரில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.
On Tuesday, April 26, 2016 at 9:35:34 AM UTC-7, தேமொழி wrote:கஞ்சமலை என உலோக மலையைக் குறிக்க அவ்வாறு சொல்லியிருப்பார்களோ!!!பொன் என்பது இரும்பு என்றும் உலோகம் என்றும் பொருள் கொடுப்பது உண்டே.கஞ்ச என்றால் வெண்கலம்.கஞ்சிரா எனத் தாளக்கருவிக்கு பெயர் கொடுக்கப்பட்டவிதம் அதனால்தான்...... தேமொழி
On Wednesday, April 27, 2016 at 6:28:20 AM UTC-7, singanenjan wrote:###கஞ்சன் என்ற ஆள் பெயரில் அம்மலை குறிக்கப்பட்டிருக்கலாம். ராசசுதானம், பஞ்சாபு பகுதிகளில் இப்பெயர் உண்டு.####நண்பரே , அது கஞ்சன் அல்ல, கான்ச்சன்.- எனக்கும் அந்தப் பெயரில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.அன்பின் சிங்கநெஞ்சன், காஞ்சன் என்பது உங்கள் நண்பர் பெயர். காஞ்சனன் என்று தமிழில் பெயர்கள் உண்டு.வெயில் காய்கிறது, காய்ஞ்சது (காஞ்சது) என்கிறோமே, அதில் இருந்து இந்தப் பழமையான உலோகப்பெயர்கள் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்திற்குத் தரும் சொல் ஆகும்.
மிக்க நன்றி...நல்ல தகவல்கள்.இரும்புத் தாது இருக்குமிடத்தில் மணி கள் இருக்கும் என்பதில்லை. அருகே உள்ள சித்தம்பூண்டியில் ரூபி, கரூர் குளித்தலை பகுதிகளில் பெரில், அக்குவாமரின் போன்றவை கிடைக்கின்றன.
திரு. ஐ. மகாதேவன், இந்தச் சாசனத்தைச் சரியாகவே படித்திருக் கிறார். ஆனால், இவர், வேண் காசிபன் என்பதை வேன்காசிபன் என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது.
இனி, இந்தப் பிராமி எழுத்து வாசகத்தை நாம் படித்து பொருள் காண்போம்.
வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்
என்று இதைப் படிக்கிறோம். இதனை விளக்கிக் கூறுவோம். முதற்சொல் வெண் என்பது. பிராமி எழுத்தில் எகரமும் ஐகாரமும் ஒரே மாதிரி எழுதப்படுகிறது. இதை வெண் என்றும் வேண் என்றும் படிக்கலாம். மேலே கூறப்பட்ட அறிஞர்கள் இதை ‘வேண்’ என்று படித்துள்ளனர். ஆனால் ‘வெண்’ என்று படிப்பதே இந்த இடத்துக்குப் பெரிதும் பொருந்து கிறது. முதல் ஆறு எழுத்துக்களையும் ‘வெண்காசிபன்’ என்று படிக்கலாம். சங்ககாலத்தில் வெண் என்னும் தொடக்கத்தை யுடையவர் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். வெண்கண்ண னார், வெண் கொற்றனார், வெண்பூதனார், வெண்பூதியார், வெண்மணிப்பூதியார் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம்.
வெண்கண்ணனார் அகநானூறு 130, 192ஆம் செய்யுள்களைப் பாடிய புலவர். வெண்கொற்றனார் குறுந்தொகை 86ஆம் செய்யுளைப் பாடிய புலவர். வெண்பூதனார் குறுந்தொகை 83ஆம் செய்யுளைப் பாடியவர். வெண்பூதியார் குறுந்தொகை 97, 174, 219 ஆம் செய்யுள்களைப் பாடியவர். வெண்மணிப்பூதியார் குறுந்தொகை 299 ஆம் செய்யுள்களைப் பாடியவர். ஆகையால், இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தில் கூறப்படுபவரை வெண்காசிபன் என்று
கொள்வதுதான் சாலப் பொருத்தம் ஆகும். இப்படிக் கொள்வதுதான் அந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது.
அடுத்த நான்கு எழுத்துக்கள் ‘குடுபித’ என்றிருக்கின்றன. இந்தச் சொல் ‘குடுப்பித்த’ என்றிருக்க வேண்டும். தகர ஒற்றெழுத்து எழுதப்படவில்லை. இது கற்றச்சனுடைய பிழையாக இருக்கலாம். குடுஎன்பதும் கொடு என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள். குடு, கொடு என்னும் சொற்கள் சாசனங்களில் பயின்று வந்துள்ளன.
இதற்கு அடுத்த இரண்டு எழுத்துக்கள் ‘கல’ என்று எழுதப் பட்டிருக்கிறது. இதைக் கல் என்று வாசிக்கிறோம். புள்ளியிடப்பட வேண்டிய எழுத்துக்கள் புள்ளியிடப்படாமலே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. ஆகவே இதைக் கல் என்று ஐயமில்லாமல் படிக்கலாம். கல் என்றால் மலை என்பது பொருள்.
கடைசி ஐந்து எழுத்து ‘கா ஞ ச ண ம’ என்றிருக்கிறது. புள்ளி வைக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி வைத்துப் படித்தால் ‘காஞ்சணம்’ என்று படிக்கலாம். இது தமிழ்ச் சொல் அன்று. பிராகிருத மொழிச் சொல்லாக இருக்கலாம். இதனுடைய நேரான பொருள் தெரியவில்லை. இந்த இடத்தில் இது கற்படுக்கைகளைக் குறிக்கிறது.
வெண் காஸிபன் கொடுப்பித்த கல் காஞ்சணம் என்று படிக்கிறோம்.