
On Feb 12, 10:13 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.
>
திரு. கண்ணன் நடராசன்,
பழ. நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும்
கலந்துகொள்ளும் நிலையைப் புறக்கணிக்கும் செயலைத்
துவக்கிவைத்தவர் கலைஞர் என்று விளக்குகிறார்:
http://tamilthesiyam.blogspot.com/2010/02/blog-post_909.html
அன்புடன்,
நா. கணேசன்
உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் தமிழறிஞர்கள், தமிழார்வாளர்கள் அனைவரும்
கலந்துகொண்டு தமிழ்மொழியின் சிறப்பை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம்
என்பது தான் இம்மாநாடுகளை விரும்பியோரின் கனவு. காலவெள்ளத்தில் அரசியலின்
கோலம் மிகுதியினால் - தமிழை விட மாநாடுகளில் எவ்வாறு அரசியலை நுழைக்கலாம்
என்று சிலர் ஆராய்ந்தும், செய்தும் வருகின்றனர்!
பழ.நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும் கலந்துகொள்ளும்
நிலையைப் புறக்கணிக்கும் செயலைத்
துவக்கிவைத்தவர் கலைஞர் என்று குற்றம் சாட்டினாலும், அவரவர் காலத்தில்
செய்கின்ற தவறையன்றோ இவரும் செய்கிறார்!
தமிழ் மொழி ஆர்வாளராக விளங்கும் பழ.நெடுமாறன் - தமிழ்மொழிக்கு நடைபெறும்
ஒரு விழாவிற்கு கட்சிவேறுபாடின்றி, கொள்கைவேறுபாடின்றி நான்
கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தால் - தமிழரனைவருக்கும் தமிழ்
மொழியின்பால் இருக்க வேண்டிய ஈர்ப்பிற்கு ஓர் நல்லுதாரணமாக
விளங்கியிருப்பார். முன்னவர்கள் செய்த பிழையை இவரும்
எழுத்திலும்,செய்கையிலும் நிலைநாட்டுவதால் தவறுக்கும் தவறான தவறை
புரியும் வாய்ப்பு தொடர்கிறது.......
“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே"
என்ற "மக்கள் கவிஞர்" பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் தங்கவரிகள் தான்
"தமிழ்த்தாயி"டம் உள்ள தலைவர்களின் நிலையாமைக்கு விடை!
On Feb 13, 4:10 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> > பழ. நெடுமாறன் உலகத் தமிழ் மாநாடுகளை எல்லா தலைவர்களும் கலந்துகொள்ளும் நிலையைப் புறக்கணிக்கும்
> > செயலைத் துவக்கிவைத்தவர் கலைஞர் என்று விளக்குகிறார்.
>
> உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் தமிழறிஞர்கள், தமிழார்வாளர்கள் அனைவரும்
> கலந்துகொண்டு தமிழ்மொழியின் சிறப்பை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம்
> என்பது தான் இம்மாநாடுகளை விரும்பியோரின் கனவு. காலவெள்ளத்தில் அரசியலின்
> கோலம் மிகுதியினால் - தமிழை விட மாநாடுகளில் எவ்வாறு அரசியலை நுழைக்கலாம்
> என்று சிலர் ஆராய்ந்தும், செய்தும் வருகின்றனர்!
>
உத்தமம் (http://infitt.org) குழுக்களில் கூடப் பார்த்தேன். அருமை
நண்பர்கள் பலர்
திரு. கருணாநிதி நடத்தும் விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்றனர்.
சிலர் இலங்கைப் போர் இவ்வாறு ஆன நிலையில் செம்மொழி மாநாடு தேவையா?
என்ன அவசரம்? என்றும் வினாக்கள் பரவலாக உள்ளன.
ஆனால், முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் உத்தமத்தின் இணைய
மாநாடு அவர் போன்றோராலும், உத்தமம் செயற்குழுவாலும் திறம்பட நடத்த
ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
அரசு இவ்வளவு கோடிகள் செலவு செய்து கோவையில் நடத்தும் விழாவில்
தமிழ் மக்களுக்கு இணையத் தமிழை எடுத்துச் செல்ல ஒரு பெரிய வாய்ப்பாக
அமையும். அதனால் என் ஆதரவு உண்டு என்று அறிவித்தேன். அமெரிக்காவில்
இருந்து எவ்வளவு பேர் வருகின்றனர் என்று தெரியவில்லை. இண்பிட் செயலர்
கவிஅரசன், நான், வாசு ரெங்கநாதன் (பென்சில்வேலியா பல்கலை) - நிச்சயம்
இருப்போம்.
மற்ற நண்பர்களை கலந்துகொள்ளச் சொல்லி அழைக்கவும்.
நா. கணேசன்
On Feb 12, 10:13 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.
>
> இந்த மாநாட்டை ஒட்டி, தமிழ் காப்பியப் பாடல்களை "அனிமேஷன்" முறை மூலம் பள்ளி
> மாணவர்கள் வடிவமைக்கும் மாநில அளவிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
> இந்தப் போட்டியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, விடியோ கான்பரன்சிங் முறை
> மூலம் வெள்ளிக்கிழமை (12/02/10) தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி.
>
> அப்போது, அவர் ஆற்றிய உரை:-
>
> "தகவல் தொழில்நுட்ப தொழிற்கொள்கையை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம்
> முன்னோடியாக உருவாக்கிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கல்லூரிகளில்
> மட்டுமல்லாது பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை
> வழங்கும் நோக்கில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி மையங்கள்
> அமைக்கப்பட்டு கணினி அறிவியல் கல்வி கற்பிக்கப்பட்டது. தமிழக அரசின் கீழ்
> செயல்படும் துறைகள் அனைத்தையும் கணினிமயமாக்கவும், பள்ளிக் கல்வியில் தகவல்
> தொழில்நுட்பத்தை இணைக்கவும், தமிழ் மென்பொருளை உருவாக்கி பரப்பவும் பல்வேறு
> நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
>
இருந்தாலும், இன்னும் தமிழ்நாட்டு அரசாங்க வலைத்தளங்கள் ஒன்றும்
தமிழில் பெரிதாகக் காணோம். யூனிகோடில் இயங்கும் வகையில்
செய்தால் பலருக்கும் செய்திகள் கிட்டும்.
நா. கணேசன்
> *தகவல் தொழில்நுட்பப் பூங்கா...*
>
> இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், சென்னை தரமணியில் "டைடல்
> மென்பொருள் பூங்கா" அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாது,
>
> - கோவை
> - மதுரை
> - திருச்சி
> - நெல்லை
> - சேலம்
> - ஓசூர்
>
> போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பத் தொழில்கள் தொடங்கப்பட
> உள்ளன.
>
> அதற்குத் தேவையான அதிநவீன வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்ற வகையில் தகவல்
> தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றுள், கோவை தகவல்
> தொழில்நுட்பப் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. அரசின் பல்வேறு
> நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
> செய்யப்படும் மென்பொருள்களின் மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 680
> கோடியே 40 இலட்சம் அளவுக்கு உயர்ந்து மகத்தான வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
>
> *முதல் முறையாக...*
மாநாட்டின் போதும், மாநாட்டிற்கு பிறகும் சில தமிழ் வளர்ச்சிகள்
இருக்கவேண்டுவல்லவா - ஒருவேளை, நீங்கள் கூறுவதெல்லாம் படிப்படியாகத்
தோன்ற - திட்டயளவில் உள்ளதோ, என்னவோ!
தமிழின் ஒருங்குறியை ஒருங்கிசைவாக எதிர்ப்பார்போம்!

Vijayaraghavan
On 15 Feb, 12:57, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *செம்மொழி மாநாடு இன்னும் 129 நாள்கள்:- பிரமாண்ட அலங்கார ஊர்வலம்!*
>
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தை பிரமாண்டமாக நடத்த ஊர்வலக் குழு
> திட்டமிட்டுள்ளது.
>
> அந்த வகையில் அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்கள் குறித்து சென்னையில்
> ஞாயிற்றுக்கிழமை (14/02/10) ஆலோசனை நடத்தப்பட்டது.
>
> "அலங்கார ஊர்திகளில் இடம்பெறும் ஓவியங்களை முதல்வர் கருணாநிதி விரைவில் இறுதி
> செய்ய உள்ளார். அதைத்தொடர்ந்து ஓவியங்கள், சிற்பங்களை வடிக்கும் பணி
> தொடங்கும்" என எதிர்பார்க்கப்படுகிறது.
>
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு
> தலைமையில் ஊர்வல அமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
>
> இக்குழுவின் உறுப்பினர்களுடன் ஊர்வலத்தில் செல்லும் அலங்கார ஊர்திகள், அதன்
> கருப்பொருள் குறித்தும், வரையப்படும் ஓவியங்கள் குறித்தும் கனிமொழி எம்.பி.
> சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (14/02/10) கேட்டறிந்தார்.
>
> ஓவியர் மருது வரைந்த கருப்பொருள் மற்றும் ஓவியங்களையும் அவர் பார்வையிட்டார்.
> சங்க காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.
>
> 60க்கும் மேற்பட்ட கருப்பொருள்கள் அடங்கிய ஓவியங்களை ஓவியர் மருது
> வரைந்திருந்தார்.
>
> [image:http://www.dinamani.com/Images/article/2010/2/14/15kanimozhi.jpg]
>
> இதுபற்றி ஓவியர் மருது கூறுகையில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை
> முன்னிறுத்தி சங்க காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான தமிழர் வாழ்க்கை
> குறித்த சுமார் 60 ஓவியங்களை கருப்பொருளாக வரைந்து கொடுத்துள்ளேன் என்றார்.
>
> *ஓவியங்கள் விரைவில் தேர்வு:- *
தமிழ் மரபு அறக்கட்டளையின் காட்சியகம் (பூத்) ஒன்று அங்கிருக்க
ஏற்பாடுகள் நடந்துவருகின்றன!!
தமிழ் இணைய மாநாட்டு கட்டுரை தேர்வுக் குழு (வல்லுநர்)வில் நம் சுபா
இருக்கிறார். தேர்வுகள் நடந்துவருகின்றன.
முதுசொம் இருப்பு செம்மொழி மாநாட்டில் இருக்கும்!
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் http://www.tamilvu.org/ தளத்தை நீண்ட
காலத்திற்குப்பின் இன்று பார்த்தேன். அதில் பின்வரும் குறிப்பு கீழே
இட்டுள்ளனர்.
//TAB to Unicode Conversion is undergoing, core content and part of
the lessons are available in Unicode. If you have any problem in
unicode,
click here to view in TAB encoding.//
ஆம், உள்ளே பல பக்கங்கள் ஒருங்குறிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன.
அவ்வாறு அவர்கள் மாறுவதற்கு எனது வரவேற்பும் பாராட்டுகளும்.
Tamilnet99 வலைப்பக்கம் தமிழ்99 நியமங்களைத் தொடுக்கும் GOM-17 மற்றும்
தமிழ்99 விசைத்தொடர்கள் விவரிக்கும் Annexure -2 போன்ற பக்கங்களையும்
அவர்கள் விரைவில் ஒருங்குறிக்கு மேலும் மகிழ்ச்சியுருவேன்.
மேலும் நுழைவதற்கு முன் முதற் பக்கத்தில் புதிய தகவல்கள் பற்றிய
தலைப்புகளைக் காட்டும் ஓடையில் "Report on TACE16 and Mobile Phones" என்
கண்ணில் பட்டது.
அழுத்திப் பார்க்கையில் வரும் http://www.tamilvu.org/coresite/html/cwwhatnw.htm
பக்கத்தில் உள்ள பட்டியல்களில் TACE16 க்கான அறிக்கையும் Mobile Phones
அறிக்கையும் ஒவ்வொன்றுக்கும் ஆங்கில மற்றும் தமிழ் அறிக்கைகள் என
மொத்தும் 4 pdf உள்ளன.
TACE க்கான ஆங்கில அறிக்கை பதிவிறக்கி மேலோட்டமாக வாசித்தேன்.
அந்த அறிக்கை எப்போது வெளி வந்தது என யாராவது அறிந்தால் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.
தமிழக அரசு நினைத்தைச் சாதித்து ஒரு 16 bit குறியேற்ற முறையை எல்லாராலும்
ஏற்றுக்கொள்ள வைத்தது எனவோ அல்லது ஆம் முயற்சி ஒரு துன்பியல்
முடிவைத்தான் கண்டது எனவோ வருங்காலத்தில் வரலாற்றுக் குறிப்புகள்
கூறுமா?. நண்பர்களே, கருத்துக்கள் வாசிக்க விரும்புகிறேன்.
~சேது


இந்த அளவில் சுகாதாரம் பற்றி மக்களுக்கு விழிப்புனர்வு எழுத்தி,
எல்லோருக்கும் குடிக்கும் தண்ணீரும், சுகாதாரமுள்ள வீடுகளும், நகர
திட்டம் போடுவதல்லவா அரசின் தலையாய கடன். இந்த உத்வேகத்துடன் மக்கள்
வாழ்வு முன்னேற்ற செய்யத் தவறினால், செம்மொழி மாநாடு வீண்
விஜயராகவன்
On 27 Feb, 23:32, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *செம்மொழி மாநாடு:- இன்னும் 116 நாள்கள்: கண்காட்சியில் அரிய 1,000 பொருள்கள்
> *
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் தமிழர் வரலாறு
> தொடர்பான ஓவியங்கள், கல்வெட்டுக்கள் என 1,000 அரிய பொருள்கள் பார்வைக்கு
> வைக்கப்படுகின்றன.
>
> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்கள்,
> தமிழ் ஆர்வலர்கள் ஒருங்கே குழும உள்ளனர்.
>
> இவர்களை கவர்ந்திழுக்கும் வகையில்
>
> - தமிழ் மொழி
> - தமிழர் வரலாறு
> - தமிழர் பண்பாடு - நாகரிகம்
> - தமிழ் இலக்கியம்
> - தொல்லியல்
>
> என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது.
>
> இதற்காக 30க்கும் மேற்பட்ட அரங்குகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
>
> இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி
> அமைச்சர் தங்கம் தென்னரசு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>
> இக்கண்காட்சியில் தமிழர்கள் நாகரிகத்தின் ஆதாரமாக விளங்கும் தொல்லியல்
> சான்றுகளான
>
> - கல்வெட்டுக்கள்
> - பாறை ஓவியங்கள்
> - சிற்பங்கள்
> - ஓலைச்சுவடிகள்
> - பழங்கால நாணயங்கள்
>
> ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
>
> கற்காலம் முதல் அண்மைக்காலம் வரையிலானவை இதில் அடங்கும்.
>
> *சிந்து சமவெளி நாகரிகம்*:-
>
> மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவில் துணைத் தலைவராக
> உள்ள தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தமிழர்
> நாகரிகத்தின் தொடர்பு குறித்து தனி அரங்கு வைக்க உள்ளார்.
>
> இதுபோல பல தலைப்புகளில் அரங்குகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
>
> *தமிழறிஞர்கள் படம்*:-
>
> கண்காட்சியில், தமிழுக்காக உழைத்த அறிஞர்கள்
>
> - பரிதிமாற்கலைஞர்
> - ரா.சேதுப்பிள்ளை
> - உடுமலை நாராயணகவி
> - மு.வரதராசன்
> - கி.ஆ.பெ.விசுவநாதம்
>
> உள்ளிட்ட ஏராளமானவர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.
>
> மேலும் தமிழ் மொழி குறித்த ஆதாரமாக விளங்கும் அரிய பல புத்தகங்களும்
> இடம்பெறுகின்றன.
>
> இக்கண்காட்சி பற்றி *தொல்லியல்துறை ஆணையரும், கண்காட்சி ஏற்பாட்டுக் குழு
> ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ்.ஸ்ரீதர்* கூறியது:-
எந்த ஒரு நாட்டிலும், உலகளாவிய மொழி,கலை,பண்பாடு,விளையாட்டு மற்றும்
சமயம் சார்ந்த கூடல் நடைபெறுவது இயல்பு. அக்கூடல் நடைபெறும் போது
எதிர்மறையாக ஏதாவது சொல்லிக்கொண்டிருப்போரும் புதிது அல்ல! ஆண்டுக்கு ஒரு
முறை, இவ்வாறு தமிழ் மொழி மாநாடுகள் நடந்திருக்குமானால், விஜயராகவன்
சொல்வதில் பொருள் உள்ளது. 16 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ஒரு
தமிழ்க்கூடலுக்கு வீண் என்றால், ஆண்டாண்டுக் காலமாக, 14 ஆண்டுகள்
இராமபிரான் காட்டில் வாழ்ந்ததை நாம் இன்றும் கொண்டாடி வருகிறோமே, அதுவும்
வீண் என்ற நிலைக்கு வந்துவிடும் போலுள்ளது!
கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
நடைபெறுகிறது. இதையொட்டி, மருத்துவ வசதி, சிறப்பு மலர் மற்றும்
போக்குவரத்து வசதிக்கு ரூ.10.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்
நடைபெற்று வருகின்றன.
இதில், சுகாதாரத் துறை சார்பில் மட்டும் ரூ.1 கோடியில் மேம்பாட்டுப்
பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டுத் திடலிலும், பந்தலுக்கு வெளியேயும்
இரு தாற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.
பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 2 ஆயிரத்து 500 சதுரடி பரப்பளவில்
பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. அதில், தாற்காலிக மருத்துவமனைகள்
செயல்படும். இங்கு 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில்
இருப்பார்கள்.
அதேபோல, மூன்று ஆம்புலன்ஸ்கள் மாநாட்டுப் பந்தலிலும், வெளியேயும்
நிறுத்தி வைக்கப்படும். இந்திய மருத்துவ சங்கம், அரசு மற்றும் தனியார்
மருத்துவமனை மருத்துவர்கள் இதற்காக பணியமர்த்தப்பட உள்ளனர்.
நாளொன்றுக்கு 25 மருத்துவர்கள் வீதம் மாநாடு நடக்கும் 5 நாட்களுக்கு
மொத்தம் 125 மருத்துவர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 10 முதல் 15
ஆம்புலன்ஸ்கள் இதற்காக பயன்படுத்த உள்ளன.
அதேபோல, வ.உ.சி.பூங்காவில் இருந்து மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் வரை
நடமாடும் மருத்துவக் குழு ஆம்புலன்ஸில் வரும். அதில், செவிலியர்,
உதவியாளர் மற்றும் ஒரு மருத்துவர் பணியில் இருப்பார்கள்.
பேரணியில் கலந்து கொள்பவர்கள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள்
சுவையான, சுத்தமான உணவைச் சாப்பிட பத்மாவதி கல்யாண மண்டபம்,
வ.உ.சி.பூங்கா மற்றும் சுகுணா கல்யாண மண்டபத்தில் ஹோட்டல்கள் அமைக்கப்பட
உள்ளன. இங்கு உயர்தர சைவ உணவுகள் கிடைக்கும். சுத்தமான குடிநீர்
கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரப் பணியின் ஒரு பகுதியாக மாநகரில் கொசுக்களை ஒழிக்க அனைத்து
வடிகால்களையும் சுத்தம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. திறந்த
வெளிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.
மாநாட்டை முன்னிட்டு சுகாதாரத் துறை மேற்கொள்ளும் பணிகளில் 30 சதவீதம்
நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள 70 சதவீத பணிகள் விரைவில் முடிந்துவிடும்
என்றார் அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) குமரன்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்காகத்
1. தலைமைக் குழு
2. ஆய்வரங்க அமைப்புக் குழு
3. மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
4. விருந்தோம்பல் குழு
5. தங்கும் இட ஏற்பாட்டுக் குழு
6. வரவேற்புக் குழு
7. கண்காட்சி குழு
என 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களின் பணிகள் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போது குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் இறுதி கட்டத்தை
எட்டியுள்ளன.
அனைத்துக் குழுக்களின் பணிகளையும், தலைமைக் குழு தலைவராக உள்ள முதல்வர்
கருணாநிதி, ஓரிரு வாரத்தில் இறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.
மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வரும் தமிழ் அறிஞர்கள், முக்கிய
விருந்தினர்களை வரவேற்று, தங்கும் இடம் வசதி செய்து தருதல், மாநாட்டுக்கு
அழைத்து வருதல் போன்ற பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இதற்காக,
1. தங்கும் இடம் ஏற்பாட்டுக் குழு
2. வரவேற்புக் குழு
3. விருந்தோம்பல் குழு
4. வெளிநாட்டு பேராளர் குழு
ஆகிய 4 குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட முதல்வர் கருணாநிதி
அறிவுறுத்தி உள்ளார்.
இறுதி பெயர் பட்டியல்:-
"மாநாட்டில் ஆய்வரங்கத்தில் பங்கேற்பவர்களின் பதிவு செய்யும் பணியை,
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்து முடித்துள்ளது.
இன்னும் ஓரிரு வாரத்தில் இறுதி பெயர் பட்டியல் கிடைத்துவிடும். அதன்பிறகு
யார், யாருக்கு எந்த ஹோட்டலில் அறை ஒதுக்குவது போன்ற பணிகள்
மேற்கொள்ளப்படும்" என்றார் கோவை மாநகர மேம்பாட்டுக் குழுவின்
உறுப்பினரும், மாநாட்டு சிறப்புப் பணி அலுவலருமான டாக்டர் பிரபாகரன்.
விமான நிலையங்களில் வரவேற்பு குழுவினர்:-
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு அறிஞர்கள், முக்கிய விருந்தினர்களை
வரவேற்பதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள்
மற்றும் இரயில் நிலையங்களிலும் வரவேற்பு குழுவினர் நிறுத்தி வைக்கப்பட
உள்ளனர் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வழிகாட்டிகளாக மாணவர்களை ஈடுபடுத்த திட்டம்:-
இத்துடன் முக்கிய விருந்தினர்கள், வெளிநாட்டு அறிஞர்களுக்கு
வழிகாட்டுவதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களை தன்னார்வத்
தொண்டர்களாக ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை
பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜூன் முதல் வாரத்திற்குள்:-
செம்மொழி மாநாட்டு தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஜூன் முதல்
வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.
சிறு பணிகள் கூட நிலுவையில் இருக்காமல், அனைத்துப் பணிகளையும் விரைந்து
முடித்திடும்படி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், 21 குழுக்களின்
தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவையில் இந்த மாநாடு வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு
ஊழியர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து மாநாட்டு ஏற்பாடுகளையும், போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்பு
வசதிகளை சிறப்பாக நிறைவேற்றவும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு
துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு
சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டது.
இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு நடைபெற உள்ள கோவைக்கு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும் என்ற
கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதை ஏற்கும் வகையில்,
1. கோவை - திருப்பதிக்கு (சேலம் வழி) "இன்டர்-சிட்டி" விரைவு இரயில்
வாரம் 3 முறையும்
2. சென்னை - கோவை பகல் நேர "துரந்தோ" விரைவு இரயில் சேவையும்
இயக்கப்படும்
என்று இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏற்கெனவே கோடை கால
சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகளை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவைக்கு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு விரைவு இரயில்களை இயக்க தெற்கு
இரயில்வே திட்டமிட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் முக்கிய இரயில்கள், கோடை
சிறப்பு இரயில்கள் மற்றும் சரக்கு இரயில் போக்குவரத்து என கோவை
வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூர் - இருகூர் 2வது அகலப் பாதை:-
கோவை - இருகூர் இடையே (24 கிலோமீட்டர்) 2வது அகலப் பாதை ரூ. 100 கோடி
செலவில் அமைக்கப்படுகிறது.
தற்போது இந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இத்திட்டத்தின் நிலுவைப் பணிகளை நிறைவேற்ற ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்து
இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போத்தனூர் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மட்டும் நிலம்
கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தேவையான
நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைத்தால் மட்டுமே கோவை - இருகூர் 2வது அகலப்
பாதைப் பணிகளை நிறைவேற்ற முடியும்.
இதன்பின்னரே, கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு விரைவு
இரயில்களை இயக்க முடியும் என்று தமிழக அரசிடம் தெற்கு இரயில்வே
வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக இரயில்களில் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி
உள்ளது.
எனவே, சிறப்பு இரயில் சேவைகளை விரைவாக தெற்கு இரயில்வே அறிவிக்க
வேண்டுமெனில், அகலப் பாதை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட
பல்வேறு பணிகளில் மாநில அரசு தரப்பில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய நிலை
உள்ளது.
சிறப்பு விரைவு பஸ்கள்:-
மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கோவைக்கு சிறப்பு
பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
ச. குமரன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம்
தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு
நாடுகளிலிருந்தும், தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர்
வரவுள்ளனர்.
இவர்களின் பயன்பாட்டுக்காக தனித்தனி வாகனங்கள் மற்றும் கார்களை
பயன்படுத்துவது போக்குவரத்து நெரிசலையும், அதிக செலவையும் ஏற்படுத்தும்
என்பதால் "ஏ.சி. வால்வோ" பஸ்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பிரதிநிதிகளுக்கு என்று பிரத்யேகமாக இயக்கப்படும் இந்த பஸ்களில், அவர்கள்
இலவசமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த பஸ்கள் இப்போது சென்னையிலும் தமிழகத்தின் மற்ற சில பகுதிகளிலும்
இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 50 பஸ்கள், கோவைக்கு கொண்டு செல்லப்பட
உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:-
பிரதிநிதிகள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து, மாநாடு நடைபெறும்
இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மாநாடு தொடங்குவதற்கு 4 நாள்களுக்கு முன்பே இந்த ஏ.சி. பஸ்கள் கோவை
கொண்டு செல்லப்பட்டு இயக்கப்பட உள்ளன.
மாநாட்டுக்கு முன்பும், மாநாட்டுக்குப் பின்னும் உதகை உள்ளிட்ட கோவையைச்
சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கும் பிரதிநிதிகளுக்காக சிறப்பு பஸ்கள்
இயக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து மாநாட்டுக்குச் செல்ல விரும்பும்
பொதுமக்களின் வசதிக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு
தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
20 ஆயிரம் பஸ்களில் மாநாட்டு இலச்சினை ஸ்டிக்கர்:-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறியும்
வகையில் விளம்பரப்படுத்துவதற்காக, தமிழகத்தில் இயக்கப்படும் 20 ஆயிரம்
அரசு பஸ்களிலும் "மாநாட்டு இலச்சினை" ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. பஸ்ஸின்
இரண்டு பக்கவாட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பஸ் டிக்கெட்களிலும்
இலட்சினை அச்சிடப்படும். மாநாடு முடியும் வரை இந்த நடைமுறை தொடரும்.
மாநாட்டை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் இரயில் நிலையத்தில் சாலை
வசதி, கூடுதல் பஸ் வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த
வகையில் மேம்படுத்தப்படுகின்றன என்றார்.
கோவை நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம்
தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டு தொடக்க நாளில், கோவை வ.உ.சி. பூங்காவில்
இருந்து கொடீசியா அரங்கம் வரையில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.
மாநாட்டுக்கு முன்பாக "சென்னை சங்கமம்" நிகழ்ச்சி போல, 10 இடங்களில்
திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக 3 நாள்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை, கனிமொழி எம்.பி. ஏற்கெனவே
பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதில் 800 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர்
என்.சுரேஷ்ராஜன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா குழு
அமைக்கப்பட்டுள்ளது.
கலைநிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக கோவை வரும் கலைஞர்களுக்கு
போக்குவரத்து வசதி மற்றும் தங்கும் வசதியை இக்குழுக்கள் செய்கின்றன.
நடமாடும் கழிப்பறைகள்:-
மாநாட்டு நிகழ்ச்சியைக் காண கோவை நகருக்கு ஒரு இலட்சத்துக்கும்
அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்கு வருவோரின் வசதிக்காக 60க்கும் மேற்பட்ட நவீன நடமாடும்
கழிப்பறைகள் புதிதாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளன. ஊர்வலத்தில் அலங்கார
ஊர்திகள் செல்லும் பாதை என மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் இந்த நவீன
நடமாடும் கழிவறைகள் வைக்கப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
துணை முதல்வர் ஆய்வு:-
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை (05/03/10) கோவை செல்ல
உள்ளார். அப்போது, செம்மொழி மாநாட்டுக்காக நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு
பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார். மேலும், குழு அதிகாரிகளுடன் அவர்
பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.


கொடிசியா என்பது தமிழ் வார்த்தை கூட அல்ல, அங்கு செம்மொழி மாநாடு நடப்பது
`செம்மொழியின்` நிலையை சரியாகா காட்டுகிரது - அதாவது ஆங்கில ஆதரவு
இல்லாமல் `செம்மொழி` பேச்சு நடக்காது.
விஜயராகவன்
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் மக்களிடையே தழைத்துவருவது கண்கூடு.
பேச்சளவில் தமிழ், குழந்தைகளை முடிந்தால் ஆங்கிலக் கல்விக்கு
என்று பெற்றோர் முடிவெடுத்துக் கடன்பட்டாவது கான்வெண்ட் என்னும் நிலை.
திராவிட இயக்கத்தின் அடித்தளம் ஆங்கிலேயர்கள். தேவநேயப் பாவாணர் ஐயா
உயர்கல்விக்கு ஆங்கிலம் கல்லூரிகளில் தேவை என்ற கொள்கை கொண்டவர்,
ஏராளமான எழுத்துக்கள் பாவாணரிடமிருந்துண்டு. ஆனால், கல்லூரிக் கல்வி,
அறிவியல் போன்றவை ஆங்கிலவழி என்பதில் உறுதியாய் இருந்த பெரியவர் அவர்.
இன்று காலவளர்ச்சியில் இஞ்சினீயரிங் தமிழில் கற்பிக்க அரசு
முன்னெடுக்கிறது.
அரசு பணிகளில் முன்னுரிமை என்று அளித்தால் அதற்கும் கூட்டம் வரும்.
இணையம், விக்கிபீடியா, விக்சனரி, பொறியியல்/அறிவியல்/மருத்துவம்/கணியியல்
பட்டப் படிப்புகள் தமிழில், ... என்ற திட்டங்கள் முன்னேறும்போது
தமிழ் அடிப்படை அறிவியலைக் கதைக்க வழிவகைகளை உண்டாக்கிக் கொள்ளும்.
நா. கணேசன்
Most International seminars/conferences are conducted in halls/
convention centres where the name of the hall & the contents of the
seminar do not have connections. Even in western (developed)
countries, scientific & language conferences are conducted in halls
which bears the name of other languages!
A state of any language is more on the outlook of the individual
rather than the inclination over other languages:-)
இது குறித்து உலகத் தமிழ்ச் செம்மொழி மகாகவியரங்க அமைப்பாளர்கள் கவிதாசன், கோவை கோகுலன், செ.பழனிச்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை (09/04/10) வெளியிட்ட அறிக்கை:-
சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதியையும் பெற்றுத் தந்துள்ளன.
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ்நாட்டில் முதலாவதாக கன்னியாகுமரியில் ஏப்ரல் 17ம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 3,000 பேர் பங்கேற்கும் குறுந்தொலைவு திரள் ஓட்டம் (மினி மாரத்தான்) நடைபெற உள்ளது.
அங்கே ஸ்டால்கள் வைப்பதற்கான விளம்பரங்கள் செய்தித் தாள்களில் வந்ததாமே! இணைய தளத்திலும்
தகவல்களை இற்றைப்படுத்திக் கொண்டு வந்திருந்தால் உதவியாய் இருந்திருக்கும்.
ஸ்டால்கள் உண்டா? விண்ணப்பங்களை கொடுப்பது எங்கே?
யாராகிலும் அறிந்திருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்னர், சுபா கட்டுரை அளிப்பது பற்றி எழுதியிருந்தார்.
அதற்கு காலமிருக்கு என்பதால் இத்தருணத்தில் தவிர்த்திருந்தோம்.
--
ஆமாச்சு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23ல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்க, நிறைவு விழா, கண்காட்சி, பொது நிகழ்ச்சிகள் ஆகியன கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் வெளிப் பகுதியில் நடைபெறுகின்றன.
மாநாட்டின் ஆய்வரங்கம், பொழிவரங்கம் நிகழ்வுகள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் ஏ,பி,சி,டி,இ அரங்குகளில் நடைபெறுகின்றன.பிரம்மாண்ட பந்தல்:-
ஆய்வரங்குகள்...:-
கொடிசியா வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் பிரம்மாண்ட கோபுர நுழைவாயில் (ஆர்ச்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கண்காட்சி அரங்கம்:-
அப் பகுதியிலும் மண்கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.வாகன நிறுத்தும் இடங்கள்:முக்கிய விருந்தினர்கள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்களுக்கு என தனித்தனியே வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகின்றன.
முக்கிய அலுவலகங்கள்:கொடிசியா சாலையின் இடதுபுறத்தில் ஜென்னி கிளப் ஹோட்டலின் பின்பகுதியில் மாநாட்டின் தனி அலுவலர் அலுவலகம், காவல் கட்டுப்பாட்டு அறை, மருத்துவக் குழு அலுவலகம், அரசு அலுவலர்கள் உணவுக் கூடம் அமைக்கப்படுகிறது.
பசுமையாகும் கொடிசியா வளாகம்:-
ஆட்சியர் ஆய்வு:-

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தின் வெளிப் பகுதியில் செம்மொழி மாநாட்டின் துவக்க, நிறைவு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. பந்தல் அமைக்கும் பணியை ஆட்சியர் பி.உமாநாத் புதன்கிழமை (5/5/10) துவக்கி வைத்தார்.
சிறந்த முறையில் ஒலி பெருக்கி வசதிக்காக உயர்தொழில்நுட்ப மின்னணு ஒலி பெருக்கிகள் அமைக்கப்படுகின்றன. மாநாட்டு நிகழ்ச்சிகளை பந்தலில் உள்ள அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் 14 அடி அகலம் 8 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்.சி.டி வண்ணத் தொலைக்காட்சிகளும், 42 அங்குலம் அளவிலான 100 பிளாஸ்மா வண்ணத் தொலைக்காட்சிகளும் அமைக்கப்படுகின்றன. மின் வசதிக்காக 125 கே.வி.ஏ திறன் கொண்ட 15 ஜெனரேட்டர்கள் நிறுவப்படுகின்றன என்றார்.
மாநாட்டின் சிறப்பு பணி அலுவலர் எஸ்.பிரபாகரன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர்கள் முருகேசன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
> கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பணிகள், துவக்க விழாவுக்கான மைதானம் சமப்படுத்தும்
> பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் செவ்வாய்க்கிழமை (05/05/10) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நன்றி:- தினமணி
கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் அரங்க அமைப்பு பணிகள், உணவுக்
கூடம், திறந்தவெளி கலையரங்கம், கொடிசியா வளாகத்துக்கு வெளியே பந்தல்
அமைக்கும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாவட்ட
ஆட்சியர் பி.உமாநாத் ஆகியோருடன் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
செம்மொழி மாநாட்டிற்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்
ஏராளமானோர் வருகை தருவர். ஆகவே, சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்
என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார்.
அதேபோல மாநாட்டின் துவக்க மற்றும் நிறைவு விழாவில் இலட்சக்கணக்கான மக்கள்
கலந்து கொள்வர்.
கொடிசியா வளாகத்திலும், மாநாட்டுப் பந்தல் பகுதிகளிலும் தேவையான அளவில்
குடிநீர்த் தொட்டிகளை அமைத்து தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.
வணிக வரித்துறை இணை ஆணையர் ஆனந்தகுமார், வேளாண் விற்பனைக் குழுத் தலைவர்
ஆ.நாச்சிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் இ.ஆனந்தன்,
துடியலூர் பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.
அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.