ஆள் உரு - அ, முதல்செவ்வகம் - ட், அடுத்த செவ்வகம் - ட, கையில் மீன் - ச், இன்னொரு கையில் மீன் - ச, மீன் - ச, மூன்று கோடுகள் - த. இதில் உள்ள ஒலிகள் அட்டச்ச சத என்பது. இதை ஒற்றெழுத்து சேர்த்து இறுதியில் ஆண்பால் ஈறு 'அன்' இட்டு அட்டச்ச்ச(த்)த(ன்) என படிக்க வேண்டும்.
இந்த முத்திரையில் மீன் கீழ்நோக்க குறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிந்து முத்திரைகளில் மீன் மேனோக்வே குறிக்கப்படும். முத்திரையில் இடம்பெறும் சத்த என்ற பெயர் இகர ஈறு பெற்று சத்தி, சத்திமுற்றம் ஆகிய ஊர் பெயர்களில் வழங்குகின்றது. துருக்கியை ஆண்ட மித்தானி அரசர் பெயரிலும் சத்த வழங்குகின்றது Suttaran I 1490 - 1470 BCE > சத்த + அரண = சத்தரண. ஒரு கொரிய அரசர் பெயர் Sudo 634 - 615 BCE > சத்த. ஒரே பெயர் பிற நாகரிகங்களில் வழங்குவதானது தமிழர் உலகம் முழுவதும் பரவினர் என்பதைக் காட்டுகின்றது.
எழில்மிக்க இந்த முத்திரையில் மரத்தின் மீது ஒரு ஆளும் அதன் கீழே ஒரு புலியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆள் உரு - அ, ஆளின் கால் - வ, மேலே ஒற்றைக்கோடு - ன், செதில் மீன் - சா, ஒரு நெடுங்கொம்பு - ண, கொம்பில் தேன் - ங், இரு கோடுள்ள கோப்பை - கா, பெரிய சிறிய கோடுகள் - ன், மேலே சிறு இரட்டைக் கோடுகள் - அ, பந்து - ன். இதில் உள்ள ஒலிகள் அவன் சாணங்க கான்அன். இதை ஒற்றெழுத்துடன் அ(வ்)வன் சாணங்ககானன் என படிக்க வேண்டும். கானத்தூர் சென்னையின் ஓர் ஊர்.
தேய்ந்துள்ள இந்த முத்திரையின் சிறப்பு இருஓரங்களிலும் தவமியற்றும் ஓகியர் உருவங்கள் உள்ளன. அவற்றினிடையே நான்கு எழுத்துகள் உள்ளன. முதல் குறி இருபுறம் கோடுள்ள கோப்பை - கா, ஆங்கில V - க, இருபுறமும் மேலும் கீழும் செதில் உள்ள மீன் - சே, ஐந்து முள் சூலம் - ய என்பது. இதில் உள்ள ஒலிகள் காகசேய என்பது. ஈற்றில் னகர மெய் இட்டு காகசேய(ன்) என படிக்க வேண்டும்.
காகபுசண்டர் என்பது ஒரு சித்தர் பெயர். காக(ன்) + பூயன் + அண்டன் > காகபுசண்டன் என திரிந்துள்ளது. ஐந்தாம் தலைமுறை எகிபதிய அரசன் பெயர் Neferirkare Kakai 2475 - 2455 BCE. சப்பானை ஆண்ட பேர்ரசரின் ஈம்ப் பெயர் Koken 749 - 758 AD.
இந்த முத்திரை நேர்த்தி இல்லாமல் கையாலேயே வடிக்கப்பட்டுள்ளதால் எழுத்துகள் கோணலாக எழுதப்பட் டு உள்ளன. முதல் எழுத்து கோப்பை - க, உண்டிவில் தலைகீழாக -ண, நாமம் -ங், ஆங்கில D ஊடே கோல் - தி, இன்னொரு கோடு - ண், செவ்வகம் - ட, செவ்வகத்தில் இரு கோடுகள் - ன். இதில் உள்ள ஒலிகள் கணங்கதிண்டன். இதை கண்ணங்கதிண்டன் என படிக்க வேண்டும்.
பலி மேடையில் காளை உள்ள முத்திரை. ஆள் உரு - அ, முக்கோணம் - ம், அரசிலை ஊடே ஒரு கோடு - பி, இருபுறமும் இரு கோடுள்ள கோப்பை - கா, இரு நெடுங்கோடு - ன, எதிரெதிர் அடைப்புக் குறி - ன், இருபுறமும் இரு கோடுள்ள கோப்பை - கா, stool கீழே chess pan - ன, stool வடிவு - ப, இறுதிக் குறி - ன். இதில் உள்ள ஒலிகள் அம்பி கானன் கானபன் என்பது. இதை அம்பி கானன் கான(ப்)பன் என பகர மெய் இட்டு தெளிவாகப் படிக்க வேண்டும்.
அம்பன், அம்பான், அம்பத்து, அம்பத்தன் ஆகிய பெயர்கள் உண்டு. அம்பான்+துறை > அம்பாத்துறை, அம்பத்து + ஊர் > அம்பத்தூர். அம்பன் இகர ஈறு பெற்று அம்பி என்றும் வழங்கும்
இது ஒன்றைக் கொம்பனுடன் இரவு விளக்கு குறி கொண்ட முத்திரை. இதில் இரவு விளக்கை உற்று நோக்குங்கால் அதன் மேல் உள்ளது வெண்கொற்றக் குடை போல் தோன்றுகிறது. இனி எழுத்தை நோக்குவோம்.
காளையின் முதுகின் மேல் வேல் மீது அமைந்து முக்கோணம் - ம, வேல் - ஞ்ச, X - ன், ஆள் உரு - அ, இருபுறம் கோடுள்ள கோப்பை - கா, கால் மடித்த ஆள் உரு - ன், மேலே இரு கோடுள்ள கோப்பை - கான், சிறிதும் பெரிதுமான இரு கோடுகள் - அ, பிறை நிலா - ன். இதில் உள்ள ஒலிகள் மஞ்சன் அகான் கான்அன். இதை மஞ்சன அகான் கான்ன் என படிக்க வேண்டும்.
இந்த வண்ணப்படம் photoshop ஒப்பனைக்கு உட்பட்டது போல் தோன்றுகின்றது. எனினும் இதிலும் ஒன்றைக்கொம்பனும் விளக்குக் குறியும் உள்ளன. இம்முத்திரையில் எழுத்துகள் சாய்வாக எழுதப்பட்டுள்ளன. நெடுங்கோடு - ந, நாம்ம் - ங, மீன் - ச, செதில் மீன் - சா, மூன்று இணைகோடுகள் - த, கீழே நான்கு கோடுகள் - ன். இதில் உள்ள ஒலிகள் நஙசசாதன் என்பது. இதை நங்க(ச்)சசா(த்)தன் என ஒற்றெழுத்திட்டு படிக்க வேண்டும்.
நங்க(ன்)நல்லூர், நங்கன்விளை ஆகிய ஊர்ப் பெயர்களில் இப்பெயர் வழங்குவதானது நங்கன் என்ற பெயர் கொண்ட ஆடவர்க்கு இவ்வூர்கள் உரிமைப்பட்டிருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது. நங்கன் என்ற ஆண் பெயரே இராது என தவறாக்க் கொண்டு நங்கநல்லூரை எவரோ நங்கைநல்லூர் என தவறாகப் பெண்பாலில் பொருள் விளக்கி உள்ளார். பண்டு பெண்களுக்கு ஊருடைமையோ, ஊர்க்கொடையோ ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நோக்க வேண்டும். அவ்வை அவ்வன் ஆகாது என்ற வாதம் எவ்வாறு தவறோ அவ்வாறே இதுவும் தவறானது.
இதிலும் ஒற்றைக் கொம்பனும் வெண்கொற்றக்குடை விளக்கும் உள்ளன. ஆங்கில X - ந, stool - ப, இருகோடுள்ள கோப்பை - கா, செதில் மீனுள் கோடு - ஞ், செதில் மீன் - சா, நாலு செதில் உள்ள மீன் - சே. இதில் உள்ள எழுத்துகள் நபகாஞ்சா சே என்பது. ஒற்றெழுத்திட்டு ந(ப்)ப காஞ்சா(ன்) சே(அன்) என படிக்க வேண்டும். ஒரு தெலுங்கு தலித் இயக்கத் தலைவர் பெயர் காஞ்சா இல்லைய்யா என்பது. http://en.wikipedia.org/wiki/Kancha_Ilaiah.
இதிலும் ஒற்றைக் கொம்பனும் வெண்கொற்றக்குடை விளக்கும் உள்ளன. செதில் மீன் - சா, கீழே இணைக்காத கட்டம் - ப, வலையிட்ட கட்டம் - ன், இரு கோடுள்ள கோப்பை - கா, மீனுள் கட்டம் - ஞ்ச, மேலே முக்கோணம் -ம, வளையிட்ட கட்டம் - ன், அடுத்து ஒரு கட்டம் - ன். இதில் உள்ள ஒலிகள் சாபன் காஞ்சமன்ன் என்பது. இதை ஒற்றெழுத்திட்டு சாப்பன் காஞ்சமன்ன் என படிக்கவேண்டும். மன் ஈறும் பண்டு வழங்கி வந்துள்ளது. னகர மெய் ஈறு இருமுறை எழுதப்படுவது சில சிந்து முத்திரைகளில் இயல்பாகக் காணப்படுகிறது.
குறில் உயிரெழுத்துகள் இரட்டித்து வந்தால் நெடில் ஆகும் என்றபடி இரு சீப்புகள் - ஈ, சூலம் - உ, கீழ் மூன்று கோடுகள் - த், மேல் மூன்று கோடுகள் - த, ஆங்கில x - ன். இதை ஈ உத்தன் என படிக்க வேண்டும். இதில் ஈ ஒரு பெயரின் முதலெழுத்தாக இருக்கலாம்.
சீப்பு - இ, ஆள் - அ, இரு கோடுள்ள கோப்பை - கா, இரு நெடுங்கோடுகள் - ன, ஒட்டிய நீள்வட்டங்கள் - ன். இதில் உள்ள ஒலிகள் இ அ கானன். இதை இய கானன் என படிக்க வேண்டும்.
திமில் உள்ள காளைப் படம். தலை வாரும் சீப்பு - இ, அடைப்பில் பறவை - ல், ஆளின் இருபுறமும் கட்டம் - ஓ, ஆள் - அ. இதில் உள்ள ஒலிகள் இல்ஓஅ என்பது. இதை இல்ஓவ(ன்) என னகர மெய்யை ஈற்றில் இட்டு படிக்க வேண்டும்.