'தெற்காசியாவின் தாய்நிலம்': வரலாற்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

76 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 24, 2022, 4:24:18 PM9/24/22
to மின்தமிழ்

1.jpg
-----------------------------------------------------------

சிந்து சமவெளி நாகரிகத்துடன் நம்மை இணைக்கும் பாலம் சங்க இலக்கியங்கள் - வரலாற்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கருத்து


22 Sep, 2022
ஆர்.பாலகிருஷ்ணன்.jpg
சென்னை: இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல், ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளின்படி, சிந்து சமவெளி நாகரிகத்தை முதன்முதலில் கண்டறிந்தார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1924 செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வின் 98-வது ஆண்டை நினைவூட்டும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ‘தெற்காசியாவின் தாய்நிலம்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் பேசியதாவது;

இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிரியவில்லை என்பதை அறிய 1924-ம் ஆண்டு வரை இந்த உலகம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஜான் மார்ஷல் சிந்துசமவெளி நாகரிகத்தை அறிவித்த பின்னர்தான் அனைத்து சூழல்களும் மாறின. ஆரியர்களுக்கு முன்பும் மிகச் சிறந்த நாகரிக வளர்ச்சியை சிந்து சமவெளி மக்கள் அடைந்திருந்தனர்.

அத்தகைய சிந்து சமவெளி நாகரித்துடன் நம்மை இணைக்கும் பாலமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் இடையே உள்ள இடைவெளியை அறிய வழிசெய்ததும் சங்க இலக்கியங்கள்தான்.

தெற்காசியாவின் கடந்த காலத்தை மீண்டும் உருவாக்க சங்க இலக்கியத்தின் கூறுகள் அவசியம். அதில் பாலைவனம் உட்பட புவியியல் சார்ந்த அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மொழிவாரியாக திராவிடர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை வரலாற்று ரீதியாக எடுத்துக்கூறி வருகிறோம்.

இந்த நிலத்தில், உறவுக்குள் திருமணம் செய்யும் முறை இருந்ததற்கான சாத்தியம் உள்ளது. தற்போது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையேயான வேறுபாடு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் பலர் பேசிவருகின்றனர். ஆனால், ஒருங்கிணைந்த தமிழினத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, திராவிடர் உள்ளிட்ட பிரிவுகள் அவசியமானவை.

சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அம்பா என்னும் சொல்கூட ஆரிய மொழி கிடையாது. அது திராவிட மொழிதான். கிழக்கு ஈரானிய மொழி, நேபாளி, அசாமி உட்பட 11 மொழிகளில் சிந்து சமவெளியில் பேசப்பட்ட ‘ஆய், இ’ எனும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கு அம்மா என்ற பொருளும் உணர்த்தப்பட்டுள்ளது.

இந்திய-ஐரோப்பா மொழிகளில் இருந்து ஸ்பானிஷ், உக்ரேனியன், ஆங்கிலம் என பல்வேறு கிளை மொழிகள் உருவாகியுள்ளன. ஏனெனில், இங்குள்ள மா-டர் என்ற சொல் ஆங்கிலத்தில் மதர், சம்ஸ்கிருதத்தில் மாத்ரு என பொருள்படுகிறது. இதன்மூலம், சிந்துசமவெளி நாகரிகம் பரந்து காணப்பட்டதை நாம் அறியமுடிகிறது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

நன்றி - https://www.hindutamil.in/

தேமொழி

unread,
Sep 24, 2022, 4:47:32 PM9/24/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid037SBwg5Zx1HX2rQwXJTpysn2fBNseQxxVRGPJbqQywa1LRjgcL6fryV9WCzWvzo1cl&id=100011737148867


ஆய் மண்ணே வணக்கம்!
அக்காள் மகளை மாமன் மகளை அத்தை மகளை திருமணம் செய்யும் "நம்மூர்காரர்களையே" இப்போது "ஆய்" இவ்வளவு குடைகிறாள் என்றால் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் புதிதாக வந்தவர்களை சிந்துவெளி பகுதிகளில் இன்று வரை வாழும் திராவிட மொழியினரான பிராகுயி பழங்குடிகளின் ஆய், இப்போது தங்களது திராவிட மொழியை இழந்து விட்ட வில் (Bhil) பழங்குடியினரின், கீர் காட்டு பாணர்களான சரண்களின் "ஆய்' எவ்வளவு குடைந்திருப்பாள். ! இத்தனையையும் மீறி அங்கும் "ஆய்" இன்றும் இருக்கிறாள் என்பது தான் அதிசயம்.
கடந்த காலம் தான் நம்மை கடந்து செல்கிறது மீண்டும் மீண்டும்....
வரலாறு என்பது வரல் ஆறு...
அதாவது வந்த வழி!
-----------------------------------------

RB1.jpg
RB2.jpg
-------------------------------------------------------------------------

Raman M P

unread,
Oct 1, 2022, 10:37:10 PM10/1/22
to mint...@googlegroups.com
வணக்கம்.
தங்களின் மின்னஞ்சல் குழுவில் மீண்டும் இணைக்கவும்.
நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/fd93ee66-0609-4884-9081-f77682659936n%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 1, 2022, 10:58:05 PM10/1/22
to மின்தமிழ்
உங்கள் குழும மின்னஞ்சல் தேர்வு 
subscription settings "each mail" என்று இல்லாமல் இருந்தது. 

இப்பொழுது ஒவ்வொரு மின்னஞ்சலும் உங்களுக்கு வந்து சேரும்படி 
subscription settings "each mail" 
முறைக்கு மாற்றிவிட்டேன் 

கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி 

Raman M P

unread,
Oct 4, 2022, 9:27:53 AM10/4/22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி


Reply all
Reply to author
Forward
0 new messages