தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் 📚📚📚

175 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 3, 2026, 4:31:45 PMAug 3
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

Gemini_Generated_Image_poster.png

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகப் பிரிவின் மேலும் புதிய ஐந்து நூல்கள்...  நூல்களை விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த ஐந்து நூல்களும் நிச்சயம் ஆர்வத்தைத் தூண்டும்.

வெள்ளி விழா நிகழ்வில் சென்னையில் இந்த ஐந்து நூல்களும் விரைவில் வெளியிடப்படும்.

தேமொழி

unread,
Aug 5, 2026, 1:22:34 PMAug 5
to மின்தமிழ்

THFi Kannan Book wrapper.jpg

மகிழ்ச்சியான அறிவிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கரத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன. 

அந்த நூல்களின் வரிசையில் முதலாவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் துணைத் தலைவரும் இந்த அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவருமான உலகப் புகழ் பெற்ற, சுற்றுச்சூழல் பேராசிரியர் டாக்டர் நா. கண்ணன் அவர்கள் எழுதிய

கிராமத்திலிருந்து உலகு வரை: ஒரு சூழலியல் கதை

என்ற தலைப்பில் அமைந்த தமிழ் அறிவியல் நூல். ஒரு வகையில் சுயசரிதையாகவும் இந்த நூல் அமைகின்றது. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் பற்றிய தரவுகள் உலகளாவிய ஆய்வுக்கூடங்கள் அங்கு நடைபெறுகின்ற சூழலியல் தொடர்பான ஆய்வுகள் பற்றியும் இந்த நூல் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. 

காத்திருங்கள்..

22 ஆகஸ்ட் 2026 சனிக்கிழமை நமது வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் இந்த நூல் வெளியீடு காண்கின்றது. 

அன்றிலிருந்து நூல் விற்பனைக்குக் கிடைக்கும். 

- தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பதிப்பகப் பிரிவு.

தேமொழி

unread,
Aug 6, 2026, 11:55:51 PMAug 6
to மின்தமிழ்

THFi Themozhi Book wrapper.jpg

மகிழ்ச்சியான அறிவிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் இரண்டாவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளரும் ஆய்வறிஞருமான முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய நூல்.

குறளுக்கு உரிமை கோரல்

என்ற தலைப்பில் அமைந்த திருக்குறள் கட்டுரைகள் அடங்கிய நூல். ஒரு வகையில் திருக்குறள் தொடர்பான சிந்தனைகளைத் தூசு தட்டி மறு வாசிப்புக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு நூல்.

தேமொழி

unread,
Aug 8, 2026, 2:28:09 AMAug 8
to மின்தமிழ்

THFi Arul Mervin Book wrapper.jpg

மகிழ்ச்சிக்குறினய அறிவிப்பு


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் மூன்றாவதாக அமைகின்றது திரு அருள் மெர்வின் எழுதிய நூல்.

*சங்ககாலத்தில் ஜென்Z*

என்ற தலைப்பில் அமைந்த நூல். சங்கச் செய்யுள்களை இக்காலத்து அறிவியல் துறையில் பணியாற்றும் இளைஞர்களும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.. அவற்றை சமகால செய்திகளோடு தொடர்பு படுத்தி புரிந்து மகிழ முடியும் என்பதற்குச் சான்றாக அமைகிறது இந்த நூலில் எழுதப்பட்டுள்ள 40 கட்டுரைகள். வாசிப்போருக்குச் சங்க இலக்கியத்தை நெஞ்சுக்கு மிக நெருக்கமாக் கொண்டு செல்லும் பாங்கோடு எழுதப்பட்டவை இதில் அடங்கியிருக்கும் கட்டுரைகள்.

தேமொழி

unread,
Aug 8, 2026, 10:42:01 PMAug 8
to மின்தமிழ்

THFi Suba Book wrapper.jpg

மகிழ்ச்சி தரும் அறிவிப்பு


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் நான்காவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷிணி எழுதிய நூல்.

மரபணுக்கள் எழுதும் மனித வரலாறு

என்ற தலைப்பில் அமைந்த நூல்.
டிஎன்ஏ அறிவியலின் தொடக்கம் மற்றும் அவை ஏற்படுத்தி இருக்கும் சாதனைகள், டார்வின், அவரின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றோடு இன்று வரை உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட வெவ்வேறு மனித இனங்களைப் பற்றிய விரிவான அறிவியல் தகவல்களோடு அறிவியலை எளிய தமிழில் கொண்டுவரும் பயிற்சியாக இந்த நூல் வெளி வருகிறது.

தேமொழி

unread,
Aug 10, 2026, 12:52:25 AMAug 10
to மின்தமிழ்
THFi Kalvettu Book wrapper.jpg

மகிழ்ச்சி தரும் அறிவிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் இறுதியாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு நம்மோடு 12 ஆண்டுகள் சேர்ந்து பயணித்து கொரோனா காலத்தில் மறைந்த பொறியியலாளரும் கல்வெட்டு ஆய்வாளருமான திரு துரை சுந்தரம் அவர்கள் எழுதிய நூல்.

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மின்தமிழ் மடலாடர் குழுவில் தொடர்ந்து அவர் எழுதி வந்த கல்வெட்டு பயிற்சி தொடர்பான கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சோழர் கால பல்லவர் கால தமிழ் எழுத்துக்களை பயிற்சி செய்து கொள்ள வரலாற்று ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும் ஒரு நூல் இது.

தேமொழி

unread,
Aug 21, 2026, 10:56:59 AMAug 21
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் 📚📚📚

Book Price List.jpg
page about.jpg
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
Book Price List.jpg

தேமொழி

unread,
Aug 31, 2026, 3:29:56 AMAug 31
to மின்தமிழ்
kannan book.jpg
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் எனும் சிறு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் எப்படி ஜப்பான் ஜெர்மனி தென் கொரியா மலேசியா அமெரிக்கா அட்லாண்டிக் பெருங்கடல் என உலகம் சுற்றி உலகம் போற்றும் ஒரு சூழலியல் விஞ்ஞானியாக வளர்ச்சி கண்டார் என்ற செய்தியைச் சுவைபடக் கூறும் ஒரு எளிய நூல் - கிராமத்திலிருந்து உலகு வரை: ஒரு சூழலியல் கதை.

சூழலியல் விஞ்ஞானி பேராசிரியர் டாக்டர் கண்ணன் எழுதிய புதிய நூல். 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகத்தின் ஊடாக வெள்ளி விழா நிகழ்ச்சியின் சிறப்பு வெளியீடாக வந்த நூல்.

இப்போது இந்த நூல் அனைவரும் வாங்கிக் கொள்ள தயாராக இணையம் வழி கிடைக்கின்றது.

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

வாங்கி வாசித்து மகிழுங்கள்.

தேமொழி

unread,
Sep 1, 2026, 12:30:37 PMSep 1
to மின்தமிழ்

suba book.jpg
மனித வரலாறு என்பது ஒரு தனிப்பட்ட இனத்தில் அல்லது நாட்டின் வரலாறு மட்டுமல்ல:அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாறு. இன்று ஆப்பிரிக்காவில் கிடைக்கும் ஒரு புதைபடிவமும். ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு கற்கருவியும், தமிழகத்தில் வெளிச்சத்துக்கு வரும் ஒரு பழங்கால வாழ்விடமும் ஒன்றோடொன்று தொடர்புடைய செய்திகளையே நமக்குச் சொல்கின்றன. அறிவியல் எல்லைகளைப் பார்க்காது: அது ஆதாரங்களை மட்டுமே பார்க்கிறது. அதனால்தான் உலகின் எந்த மூலையில் கிடைக்கும் ஒரு கண்டுபிடிப்பும். மனிதரைப் பற்றிய புரிதலை தெளிவாக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. இந்த நூல், மனிதப் பரிணாம வரலாற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகளைத் தமிழில் வழங்குகின்றது!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. தற்போது விற்பனையில்.

தேமொழி

unread,
Sep 4, 2026, 3:40:02 AMSep 4
to மின்தமிழ்
arul book.jpg 

சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வது கடினம் என்ற எண்ணம் பலரிடமும் நிலவுகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர். பழந்தமிழ் மொழிநடையின் காரணமாக அவற்றை அணுகுவதில் தயக்கம் காட்டுவது இயல்பு. அந்தத் தயக்கத்தைப் போக்கும் அழகிய முயற்சியாக இந்நூல் உருவாகியுள்ளது.
இளம் தலைமுறையும் சங்கத்தமிழ் பாடல்களை வாசிக்கலாம் புரிந்து கொள்ளலாம் சமகால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்த நூலை இதன் ஆசிரியர் அருள் மெர்வின் படைத்திருக்கின்றார்.
இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. தற்போது விற்பனையில்.

தேமொழி

unread,
Sep 7, 2026, 2:41:55 PMSep 7
to மின்தமிழ்
திருக்குறள் பற்றிய புதிய ஆய்வு நூல் - எனது அணிந்துரை

– நா.முத்துநிலவன்



திருக்குறளுக்குத்தான் எத்தனை எத்தனை ஆய்வுகள்! தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்களில் திருக்குறள் அளவுக்கு ஆய்வு செய்யப்பட்ட வேறு நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஆனாலும், ‘அறிதோறும்’ ஆய்வாளரின் ‘அறியாமை’யைக் காட்டிக் கொண்டே இருப்பதும் இன்று வரை இந்தத் திருக்குறள் தான்!

அண்மையில், திருச்சியில் பிறந்து இப்போது அமெரிக்க வாசியாக உள்ள முனைவர் தேமொழி அவர்களின் நூல் தனிச்சிறப்பானது! இதற்கோர் அணிந்துரை எழுதக் கேட்ட முனைவர் தேமொழிக்கு நன்றி!

-----------------------------------------
kuralukku urimai koral.jpg

இந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரை கீழுள்ளது –
முன்னுரையைப் படித்த கையோடு, முனைவர் தேமொழியின் நூல்களை மட்டுமின்றி தமிழ்மரபு அறக்கட்டளைப் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ள நூல்களையும் வாங்கிப் படிக்கும்படி புதுப்புதிய சிந்தனைகளை வரவேற்கும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

-----------------------------------------------

தேமொழி உரைத்தது, செவ்வை நன்மொழி!

அணிந்துரை – நா.முத்துநிலவன்

முனைவர் பட்ட ஆய்வுகள், பல்கலைக் கழக ஆய்வு நூல்கள் பலவும் –தரவுகளின்  திரட்டுகள்  என்பதைத் தாண்டி, புதிய சிந்தனைகளுக்கான ஆய்வு நூல்களாக இருப்பதில்லை.

தரவுகளைத் திரட்ட, இப்போதுள்ள கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகள், செய்யறிவு (ஏ.ஐ.) உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் வரும் முன்பே, தமக்குத்  திரட்டக் கிடைத்த உதவிகளை பதிப்பின் பின் இணைப்புகளில் தந்துசென்ற பேரறிஞர் பலருக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடன்பட்டுள்ளது.

 ஓலைச் சுவடிகள் பலவற்றைச் சேகரித்து, ஒப்பிட்டு, அச்சேற்றும் கடுமையான பணியில் தம் வாழ் நாளைக் கரைத்துக் கொண்ட ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதர், மறைமலை அடிகள், எஸ்.வையாபுரியார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் திருவரங்கனார் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்குப் பேருதவியாக, ‘சொல்லடைவு’ (https://tamilconcordance.in/) கண்டு தந்த பேரா. முனைவர் ப.பாண்டியராஜா   போலும் பெருந்தமிழறிஞர்களை நாம் மறக்கவோ மறைக்கவோ கூடாது. ஆயினும் சிலர், அந்தத் திரட்டை, ‘தமது’ ஆய்வு போலவே காட்டிக் கொள்ளும் ‘திருட்டு’ வேலையும் நடந்திருக்கிறது. அவர்கள், இந்தத் தகவல்களை வெறும் ‘வியாக்யானங்களாக’ – விளக்கங்களாகவே – தந்தனர்.

உலகத்தைப் பற்றிய விளக்கங்களைப் பலரும் தந்துள்ளனர், ஆனால், இவ்வுலகை மாற்றுவது எப்படி? என்பதே கேள்வி - மார்க்ஸ்

அரிய மாற்றுச் சிந்தனைகளைக் கொண்ட எழுத்தாளர் தேமொழி. ஆய்வுகளுக்கு உதவிய நூல் பட்டியலையும் தவறாமல் தருவது, இவர் எழுத்துகளின் மீதான மரியாதையை, நம்பிக்கையை அதிகரிக்கிறது.

ஏற்கெனவே சிறுகதைகள், அறிவியல் - சமூக இலக்கிய ஆய்வுகள் என 23 நூல்களை எழுதி, தமிழ் கூறும் நல்லுலகில் தமக்கென ஓர் இடம் பிடித்திருக்கும் தோழர் தேமொழி, தமுஎகச விருது உள்ளிட்ட, கவுரவமான விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்நூல், விருதுகளைத் தாண்டிய சமூக உணர்வு மிக்கவர் இவர் என்பதையும் உணர்த்துகிறது,

“குறளுக்கு உரிமை கோரல்” எனும் கவனம் ஈர்க்கும் தலைப்பைக் கொண்ட இந்நூல், 17 தலைப்புகளில் ‘ஒரு பொருள் குறித்த பலகோண ஆய்வு” எனும்படி, வியப்பும் மகிழ்ச்சியும் தருகிறது!  குறள் குறித்த பொதுவான பற்பல செய்திகளுடன், பலர் அறியாத, அறிந்தால் வியக்கத்தக்க பல அரிய செய்திகளைத் தாங்கி, ஆய்வாளர்க்கு நிறைவு தரும் நூலாக வந்திருக்கிறது. இதற்காகத் தோழர் தேமொழி அவர்களுக்கு எனது இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

‘தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி’ – நன்றி : சிலம்பு

தமிழ் நூல்களில் திரு என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்திருக்குறள் என்னும் செய்தியை முதல் கட்டுரையிலேயே தருகிறார் தேமொழி.  இது,   எனக்கு வேறுபல சிந்தனைகளைத் தருகிறது!

மணமாகி யிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண்களுக்குத்  ‘திரு’ என அடைமொழி தருகிறோம். ஆனால், மணமான பெண்ணுக்கு  ‘திருமதி’ என்றும் மணமாகாத பெண்ணுக்கு  ‘செல்வி’ என்றும் அடைமொழி தந்து ஆண்-பெண் பேதத்தை வளர்க்கிறோம். இதைப் பொதுமைப்படுத்த, ‘திருமிகு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதே. எனினும், திரு என்னும் சொல்லே ‘இந்துமதப் படுத்தும்’ சொல்லாக இருப்பதை - நூல்கள் மட்டுமின்றி பெயர், ஊர், நிகழ்வுகள், செயல்கள் அனைத்திலும்  இருப்பதை - நுட்பமாகக் கவனிக்கத் தவறிவிட்டோமே!

தமிழில் திரு எனும் அடைமொழி கொண்ட திருவாசகம் போலும்  நூல்கள், திருநாவுக்கரசர் போலும் பெயர்கள், திருவையாறு போலும் ஊர்ப்பெயர்கள் என அனைத்தும் “இந்துமயமாக்க”ப் பட்டவை தானே?

இனி, ‘திரு’ என்னும் சொல்லுக்கு மாற்றாக - அதற்கு நிகராக - மதச்சார்பற்ற வேறு ஒரு சொல்லை நாம் கண்டுபிடிக்க வேண்டும்!

இதன் பண்பாட்டுத் தாக்கமாகவே தமிழகக் கிறித்துவர் பயன் படுத்தும்திருத்தந்தை(Father/Fr.) அருட்திரு(Reverend/Rev.) பேரருட்திரு(VeryReverend/VeryRev)முதலான சொற்களைக் கவனிக்க  வேண்டும்.

இந்த இடத்தில், தமது மதப் பண்பாட்டைக் கலப்பின்றிக் காத்துவரும் இஸ்லாமியர்கள், திரு என்னும் அடைமொழியைத் தவிர்த்து வருவதைக் கவனிக்கலாம். ‘ஹஜ்’ சென்று வந்த இஸ்லாமியப் பெரியவரை ‘ஹாஜி’ என்றும், பிற இஸ்லாமியரைக் குறிக்கும் போது -- திரு என்னும் இந்துமதச் சார்புச் சொல்லைத் தவிர்த்து –- உருது, பாரசீக மொழியிலிருந்து வந்த ‘ஜனாப்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதையும் கவனிக்க! என்றாலும், தம் புனித நூலாகக் கருதும் குர்ஆனை, "திருக்குர்ஆன்" என்றே தமிழக இஸ்லாமியர் வழங்குவதும் கவனிக்கத் தக்கது.

குறளின் பழைய உரையாசிரியர் பதின்மர் பெயர்களைக் குறிப்பிடும் தேமொழி, அவர்தம் உரை வேறு பாடுகளை மட்டுமின்றி குறள் எண்களை மாற்றி யிருப்பதையும் குறிப்பிடுவது முக்கியமான குறிப்பு. “இன்றைய தமிழ் உலகம் பயன்படுத்தி வரும் குறள் வரிசை எண், இயல் பிரிவுகள் அனைத்தும், பரிமேலழகர் தந்தவை தான்””  என்னும் செய்தியே பலரறியாத செய்தி தான்! மணக்குடவர் முதல், தமிழறிஞர் சாலமன் பாப்பையா வரை குறளின் பால் வரிசை மாறுபாடுகளை எடுத்துச் சொல்லியிருந்தும் பொதுச் சமூகம் வரை இச்செய்தி போய்ச் சேரவில்லை!

வரிசை எண்களும் இயல் பிரிவுகளும் வள்ளுவர் தந்ததாகவே நினைக்கும் அளவுக்கு, பரிமேலழகரின் உரை பரவலாக்கப் பட்டதும் கூட இந்துத்துவ மேலாதிக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்! பரிமேலழகர் தான் அறத்துப்பால் உரைப் பாயிரத்தின் தொடக்கத்திலேயே, “அறமாவது மநு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம்” எனத் தனது இந்துமதத் திணிப்பைத் தெளிவாகத் தொடங்குகிறார்!

அவர் உரையின் இடையிடையே வேத - வைதீக, மநு, கீதை நூல்களின் விளக்கங்களை எடுத்துச் சொல்லி, குறளை ‘இந்துமயப் படுத்தியது மட்டுமின்றி, அதன் மதப் பொதுமைக் கருத்துகளைப் பின் தள்ளி ‘அனைத்து மதத்தவர்க்கும் உரிய -இந்துமத- நூல்’ என குறளைப் ‘பொதுமைப்படுத்திய’ பெருமை(?)யும் பரிமேலழகரையே சாரும்! இதுபற்றித் தனியாகவும்  விரிவாகவும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது!    

இந்த இடத்தில்,  “உலகப் பொதுமறை என்பது தவறான அடைமொழி! பொது என்பதும் மறை என்பதும் ஒன்றுக்கொன்று எதிரான சொற்கள், பொதுவான எதுவும் மறைவாக இருக்க முடியாது, மறைவான எதுவும் பொதுவாக இருக்க முடியாது, எனவே குறளை “உலகப் பொது முறை” என்று சொல்வதே சரியானது” என்னும் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் கூற்றே சரியாகத் தோன்றுகிறது.

“பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும்   திருக்குறளைப் புலவர் பலர் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை என்ற நூலாகும்” எனும் கருத்து சரியல்ல! ‘திருவள்ளுவ மாலை’ பற்றி  நான் எழுதிய -- தோழர் தேமொழியே எடுத்து வெளியிட்ட - கட்டுரை இது பற்றிய கூடுதல் சிந்தனைகளைத் தரும் என்றுநம்புகிறேன். விரும்புவோர் பார்க்க வேண்டிய இணைப்பு:  https://mymintamil.blogspot.com/2022/01/blog-post_29.html

குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் பல சிறப்புச் செய்திகளைத் தொகுத்துத் தருகிறார் தேமொழி. இதில் வள்ளுவர் வழியில் திருமணம்  என்பதும் ஒன்று! என் மகள் உட்பட  - ஏராளமான வேத வைதீகச் சடங்குகளை  மறுத்து நடத்தப்படும் பகுத்தறிவுத் திருமணங்கள், வள்ளுவர் சாட்சியாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன.

“வள்ளுவரின் மேல் புகுத்தப்பட்ட புனைவுகள்” என்னும் ஒரு பத்தி தனி ஒரு நூல் போலவே ஆழமாக உள்ளது “எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை.  அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச் செருகலாக நுழைக்கப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்தி தாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது”  என்று, (காலந்தோறும் வள்ளுவர் வரலாறு - கட்டுரை) தமிழ்மரபு அறக்கட்டளை  பன்னாட்டு அமைப்பின் தலைவர் தோழர் க.சுபாஷிணி அவர்களின் மேற்கோளைக் காட்டியிருப்பதும் சிறப்பானது.

திருக்குறள் “மொழிபெயர்ப்பு” பற்றிய தகவல்களைத் திரட்டித்  தேமொழி, இந்தியமொழிகளில்  அவாதி, அஸ்ஸாமி, இந்தி,  உருது, ஒரியா, கரோ, கன்னடம், காஷ்மீரி, குஜராத்தி, கொங்கணி,  கொடவா, கொரகா, சந்தாலி, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரா,  டோக்ரி, துளு, தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, படுகா, பிராஹுவி, போடா, போஜ்பூரி, மணிப்பூரி, மராத்தி,  மலையாளம், மைத்திலி, வக்ரிபோலி, வங்காளம் ஆகிய 30 மொழிகளில் வந்திருப்பதைக் குறிப்பிடுகிறார்!

‘வக்ரிபோலி’ என்பது நரிக்குறவர் பேச்சுமொழி! அவர்கள் இடம் பெயரும் மாநில மொழிகளின் கலப்பு மொழியாகவே உள்ள இம்மொழிக்கு  எழுத்துகள் இல்லாததால், ஆய்வாளர்கள் இம்மொழியை ஆவணப்படுத்த தமிழ், ஆங்கில எழுத்துக்களை (ஒலிபெயர்ப்பு முறையில்) பயன்படுத்தி வருகின்றனர்! அந்த வக்ரிபோலியிலும் வெளிவந்திருப்பது, வள்ளுவரின் வாழ்வியல் கருத்துகளின்  வலிமை என்பதன்றி வேறென்ன?!

ஒரு கருத்தை ஆய்வு செய்யும் போது, பலவழிகளிலும் அதன் உண்மைத் தன்மையை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று வள்ளுவர் இரண்டு குறள்களில் கூறுகிறார். அதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தேமொழி மூன்று தளங்களை விளக்குவது அருமை!

“தரவுகளின் உண்மை அறிய வள்ளுவர் காட்டும் வழிமுறைகள் ... அரசர் ஒற்றர் மூலம் அறியும் உளவுச் செய்தியை எவ்வாறு ஆராய வேண்டும் என்று அறிவுறுத்த விரும்பும் வள்ளுவர்,

     ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

     ஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள்-588) என்கிறார். என்று ‘காரண காரியத்தோடு’ தேமொழி காட்டும் சான்றுகள் ஆய்வு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டாகவே இருக்கிறது.

     அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும் - என்னும் 7ஆவது கட்டுரையில் ‘இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களை யும், அயலகத்தில் தோன்றிய சமயங்களையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் பலசமய நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கிய நூல்கள் தமிழில் உண்டு என்ற சிறப்பிற்கு உரியது நம் தமிழ்மொழி” என்பது தமிழின் உண்மையான பெருமைகளில் ஒன்று!

சமணத்திற்குச் சிந்தாமணி,
பவுத்தத்திற்கு மேகலை,
சைவத்திற்குப் பெரியபுராணம்,
வைணவத்திற்குக் கம்பராமாயணம்,
இஸ்லாத்திற்கு சீறாப்புராணம்,
இருகிறித்துவத்திற்கும் தேம்பாவணி, ரட்சணிய யாத்திரிகம்,
பகுத்தறிவாளர்க்கு இராவண காவியம் என –
நம் தமிழ்தான், உலக மொழிகளிலேயே, ‘ஜனநாயக மொழி’!
என்பது எனது கருத்து! சரிதானே?

தொடர்ந்து,  “அறம் என்பது வெறும் நீதி அல்லது சட்ட விதிகளை மட்டும் குறிக்காமல், அடிப்படை வாழ்வியல் கொள்கையாகப் பார்க்கப் படுகிறது” என்பது முக்கியமான கருத்து. அறம்,  தர்மம், சட்டம்,  நீதி என்பன தனித்தனிப் பொருள் தரும் சொற்கள் என்பது பற்றி அறிஞர் ராஜ் கௌதமன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கருத்துகளும் முக்கியமானவை.

இந்தப் பொருளில் ”நாலடி இரண்டடி கற்றவரிடத்தே வாயடி கையடி ஆகாது” போல குறளோடு ஒப்ப வைத்துப் போற்றப்படும்  நாலடியார் கூட குறளுக்குச் சமமானதல்ல! நாலடியாரில் முதலில் வருவதும், அதிக எண்ணிக்கையிலான 120 பாக்களைக் கொண்டதும் துறவற வியல்தான்! அடுத்து வரும் இல்லறவியலில்  10வெண் பாக்கள்! ஆனால்  குறளில் முதலில் வரும் இல்லற வியலில் 200பாக்களும், அடுத்த துறவறவியலில் 130பாக்களும் உள்ளன எனும்போது, நாலடியார் துறவுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறிந்து, நாலடிக்கும் குறளுக்குமாக ‘பொதுப் புத்தியில்’ ஏற்றப்பட்டுள்ள ஒப்பீடுகள் சரியல்ல என்று தெளிவடையலாம்.

பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை எனும் கட்டுரையில் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேறல் அதிகாரங்கள்  -இக்காலத்திற்குப்  பொருந்தாது என்றால் அந்த  உண்மையை நாம் ஏற்க வேண்டும் என்னும்  கலைஞரின் உரை ஏற்கத் தக்கதுதான்! இந்த அதிகாரங்களுக்குக் கலைஞர் உரையே காலத்திற் கேற்பப் பொருந்துபவை  என்பதைப் பின்வரும் குறளுக்கு மற்ற அனைவரின் உரையிலிருந்து மாறுபட்ட உரையைத் தந்த கலைஞரின் உரையோடு ஒப்பிட்டது சிறப்பு

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் குறளுக்கு கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உரையே சிறப்பு  என்பதை இதைப் படிப்பவர்கள் அந்த உரையை எடுத்துப் படித்துப் பார்த்தால்தான் புரியும். இதே தலைப்பில், ‘ஈன்ற பொழுதில்’ எனும் குறளில் வரும் ‘கேட்ட தாய்’ என்பதற்குப் பரிமேலழகர் தரும் ‘மநு’வழி உரையை ஒப்பிட்டுப் பார்த்தால், கலைஞரின் உரைச் சிறப்பும் புரியும்.

சிவிகைப் பயணமும் அறவழியும் கட்டுரையில்... குன்றக்குடி அடிகளார் உரையை மேற்கோள்  காட்டி  “பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்ய விரும்பும் ஆதீனங்கள் உள்ள இக்காலத்தில், “அறவோர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பல்லக்கில் பயணிப்பது அறம் பிழைபட்ட செயல்” என்று மறுத்துக் கூறியவர் ஓர் ஆதீனத் தலைவர் என்பது சிறப்பு!

திருக்குறள் வைப்பு முறை- கட்டுரை சிறப்பானது! இந்துச் சமயங்கள்  மனிதர் அறிய வேண்டிய மெய்ப் பொருள்கள் (புருஷார்த்தம்-தருமம்/ அறம்,  அருத்தம்/பொருள்,  காமம்/இன்பம், மோட்சம்/ வீடு) என்று நான்கு வகைப் பட்டாலும் வள்ளுவரின் குறளை இதுவரை யாரும் வீடு என்ற பிரிவுக்குள் வகைப்படுத்த வில்லை என்னும் தேமொழியின் ஆய்வு சரியானதே. பின் வந்த -- “அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” என்ற -- நன்னூல்தான் இவ்வாறு பிறழ்உரை கூறுவோர்க்கான அடிப்படை என்பதையும் புரிந்து கொள்க!

திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம் வெளியீடாக முப்பாலுக்குமான  “திருக்குறள் உரைக்கொத்து”  சிறப்பாக  வந்துள்ளது.  இந்நூல்பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் உரைகளின் தொகுப்பாக உள்ளது. மற்றும், ‘அறியப்படாத தமிழ்மொழி’ எனும் அரிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ள பேராசிரியர்திருகண்ணபிரான்ரவிசங்கர் (‘கரச’) இந்த ‘வைப்புமுறை’ பற்றிச் சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார்.

நமது கல்வி முறை கட்டுரையில் “...தமிழகத்தில் தொடங்கிய போராட்டத்தால்...  என்பதன் முன்ஒட்டாக, ‘தந்தை பெரியார்’  என்னும் இரண்டு சொற்களைச் சேர்த்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டுக் களஞ்சியம்- இயற்கையில் இருந்தும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கருவிகள்  பற்பலவும் வள்ளுவரால் எடுத்துக் காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஒரு பெரும் பட்டியலையே தருகிறார்!  அப்பப்பா! சற்றொப்ப 350 எடுத்துக் காட்டுகளை தமிழறிஞர் ஒருவர் சொல்வதாகச் சொல்லியிருப்பது தேமொழியின் ஆய்வு நேர்மை

பள்ளிப் பாடங்களில் திருக்குறள்  - இது பற்றி எனக்கே வேதனையான சில அனுபவங்கள் உண்டு! ‘மாதானு பங்கி’ போலும் அடைமொழிகள் தேவையற்றவை என்றும் ”காந்தியைத் தமிழ் படிக்க வைத்து, தமிழில் மோ.க.காந்தி என்று கையொப்பம் இட வைத்தது திருக்குறள் என்று போட வேண்டும் என்றும் பாடத்திட்டக் குழுவில் போராடியும் முடியாததால் நான் வெளியேறிய அனுபவங்கள் எனக்குண்டு!

"திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்"  கட்டுரையில் கோரிக்கை  பற்றி மட்டும் சொல்லாமல், சங்கர மடத்தின் 108குறள் என்னும் உரைநூலுக்கு “அதுஎன்ன 108” என்பது பற்றியும் ஆய்வு செய்கிறார் இதெல்லாம் பலரும் பேசாப்பொருள்! பேசியிருக்கிறார் தேமொழி!

இறுதியாக நூலின் தலைப்புக் கட்டுரை மிகச் சிறப்பு! இது பற்றியே 5,6 பக்கங்களுக்கு எழுதலாம்! ஆனால் “தோட்டத்தில் பாதி கிணறு” கதையாகி விடக் கூடாது என்றே நிறுத்துகிறேன். ஒரு நல்ல, விருப்பு வெறுப்பற்ற, தரவுகள் நிரம்பிய, குறள் பற்றிய பலநூறு ஆய்வுகளிடையே, தனித்துவமான பார்வை கொண்ட ஆய்வு நூல் இது என்னும் வகையில் தோழர் தேமொழிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

தோழமையுடன்,

நா.முத்துநிலவன்,

---------------------------------------------------------------------------
Booklist2026THFi.png


நீங்களும் இந்த நூல்களைப் பெற
இணைய வழி இணைய -
https://tamilheritage.org/

-----------------------------------------------------------

கவிஞர்  நா.முத்துநிலவன், புதுக்கோட்டை. செப்டம்பர் 07, 2026

தேமொழி

unread,
Sep 20, 2026, 4:19:13 PMSep 20
to மின்தமிழ்
https://www.facebook.com/subashini.thf/posts/pfbid026QqQ4fR38DxPnpHksrPzYTKW9Ym8Sbh5tjPvxNgzHafATjvQBVERSm7V8PpoQWk2l


20.9.1924 ... சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி அகழாய்வு அறிக்கையை உலகிற்கு வெளியிட்ட நாள். நூற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
தமிழின் தொன்மையைத், தமிழரது நாகரீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. இன்று நம்மிடையே சிந்துவெளி பண்பாட்டின் கூறுகளையும் அதன் தமிழ் தொடர்ச்சியையும் பரவலாக்கம் செய்து வருபவர் சிந்துவெளி ஆய்வாளர் திரு ஆர் பாலகிருஷ்ணன். அவரது முயற்சிகள் சிந்துவெளிப் பண்பாட்டின் ஆய்வுப்பூர்வமான அகழாய்வு செய்திகளையும் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுகளைப் பரவலாக்கம் செய்யும் பெரும் இயக்கமாக இன்று வளர்ச்சி கண்டிருக்கின்றது.
அவரது பேட்டி அடங்கிய நூலினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 23.8.2024 அன்று வெளியீடு செய்தோம். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் இப்பொழுது வெளிவந்துள்ளது.

ivc Tamil.jpg ivc English.jpg
ஏறக்குறைய 100 பக்கங்களில் இந்த நூல்கள் மிக எளிமையாக சிந்து வெளி பண்பாட்டின் முக்கியத்துவம், அகழாய்வுச் செய்திகள் பற்றி பேசுகிறது. அனைவரும் வாங்கி வாசிக்கவேண்டிய நூல். அதுமட்டுமல்ல, உங்கள் நண்பர்களுக்கும் பரிசாக வாங்கி அளிக்க இவை சிறந்த நூல்கள்.
சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
விலை: 120/-ரூ
Ancient Tamil Corpus: A Key To Understand The Indus Riddleவிலை: 120/-ரூhttps://www.commonfolks.in/books/d/ancient-tamil-corpus-a-key-to-understand-the-indus-riddle
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்களைப் பெற கீழ்க்காணும் லின்க் செல்க:https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

தேமொழி

unread,
Sep 20, 2026, 4:29:34 PMSep 20
to மின்தமிழ்


 kuralukku urimai koral.jpg
குறளுக்கு உரிமை கோரல் - நூல் திறனாய்வு
க.சுபாஷிணி
“குறளுக்கு உரிமை கோரல்” என்ற சிந்திக்கத் தூண்டும் தலைப்புடன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய அண்மைய நூல் வெளியிடப்பட்டது.
பக்கங்கள் : 130
விலை : ரூ.180/-
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்
திருக்குறளை மையமாகக் கொண்ட 17 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் தனிச்சிறப்புகளில் ஒன்று, ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி தலைப்பில் அமைந்திருப்பதால், வாசகர் தமக்குப் பிடித்த தலைப்பிலிருந்து வாசிப்பைத் தொடங்கிக்கொள்ள முடியும் என்பதாகும். இருப்பினும், ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் வாசகரிடம் ஆர்வத்தையும் கேள்விகளையும் எழுப்பும் வகையில் அமைந்துள்ளதால், நூலை முதலாவது கட்டுரையிலிருந்து தொடங்கி வாசிப்பதே சிறப்பான அனுபவமாக இருக்கும்.
நூலில் இடம்பெற்றுள்ள 17 கட்டுரைகளும் திருக்குறளைப் பற்றிய ஒரு புதிய பார்வையை வாசகர்களுக்கு முன்வைக்கின்றன. திருக்குறளைப் பற்றி எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன; தொடர்ந்து வெளிவந்துகொண்டும் இருக்கின்றன. ஆனாலும், திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் நாம் இன்னும் புதிதாகப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அந்தத் தேடலுக்கான ஒரு முயற்சியாகவே இந்நூல் அமைகிறது.
இதுவரை வழக்கமாக முன்வைக்கப்பட்ட கருத்துகளையே மீண்டும் எடுத்துரைப்பதற்குப் பதிலாக, மாற்றுப் பார்வை, சமகாலச் சுயபரிசோதனை, மீள்வாசிப்பு, ஆழமான ஆய்வு ஆகிய கோணங்களில் ஆசிரியர் தனது சிந்தனைகளை இந்த 17 கட்டுரைகளிலும் முன்வைக்கிறார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளை மட்டும் சற்று கோடிட்டுக் காட்டலாம்.
ஐந்தாவது கட்டுரை “வள்ளுவர் என்றோர் ஆய்வாளர்” என்ற தலைப்பிலும், ஆறாவது கட்டுரை “ஆய்வு வழியில் வள்ளுவர்” என்ற தலைப்பிலும் அமைந்துள்ளன.
வள்ளுவர் மெய்யுணர்தல், உண்மையைத் தேடுதல், ஆராய்ந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கு திருக்குறளில் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை இவ்விரு கட்டுரைகளும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில், “இன்று ஆய்வாளர்கள் இந்த உண்மைநெறியைத் தங்கள் ஆய்வுகளில் கடைப்பிடிக்கின்றார்களா?” என்ற முக்கியமான கேள்வியையும் இக்கட்டுரைகள் நம்முன் வைக்கின்றன.
உண்மையை அறிதலும், அதற்காக ஆய்வு மேற்கொள்வதும் கல்வித்துறைக்கு மட்டுமே உரிய செயல்கள் அல்ல. நாம் வாழ்வில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் நுணுக்கமாகச் சிந்தித்து, பகுத்து, ஆராய்ந்து, அதில் உண்மையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையே திருக்குறள் நமக்கு உணர்த்துகிறது என்ற கருத்தை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
“பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை” என்ற தலைப்பிலான எட்டாவது கட்டுரை, ஏனைய உரையாசிரியர்களின் விளக்கங்களுடன், குறிப்பாக விவாதத்திற்குரிய சில திருக்குறள்களுக்கு கலைஞர் வழங்கியுள்ள உரை விளக்கங்களை ஏனைய சில உரையாசிரியர்களுடன் ஒப்பிட்டு அவை எவ்வாறு பொருந்துகின்றது என்பதை காட்டுகின்றது.
இந்த ஒப்பீட்டின் வழியாக, கலைஞரின் சிந்தனையும் உரை விளக்கமும் சமகாலப் பார்வையுடன் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, பெண்ணியப் பார்வையில் திருக்குறளை அணுகும் முயற்சி இக்கட்டுரைக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தை வழங்குகிறது.
நமது அன்றாடப் பேச்சில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் “எனக்குத் தெரிந்தவரை” என்ற சொல்லாடலுக்கு நெருக்கமான வகையில், “யாம் அறிந்த வரையில்” என்ற கருத்தைத் திருவள்ளுவர் தனது குறட்பாக்களில் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை ஒரு கட்டுரை ஆராய்கிறது.
குறிப்பாக, “யாம்” என்ற சொல்லின் மூலம் திருவள்ளுவர் தன்னையே சுட்டிக்காட்டும் அகப்பொருள் சார்ந்த குறட்பாக்களை எடுத்துரைக்கும் பகுதி சுவாரசியமானது. வழக்கமாகப் படித்துச் செல்லும் குறள்களில் மறைந்திருக்கும் இத்தகைய நுண்ணிய மொழிப்பயன்பாடுகளை வெளிக்கொணர்வது நூலின் சிறப்புகளில் ஒன்றாகும்.
திருக்குறள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ள வரலாற்றையும், கல்வித் திட்டத்தில் அது பெற்றுள்ள இடத்தையும் ஆராயும் கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு முதல் திருக்குறள் இணைக்கப்பட்டுள்ள விதம் குறித்த தகவல்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
திருக்குறள் ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினரிடம் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் ஒரு வாழ்வியல் சிந்தனை வளமாகவும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது என்பதைப் இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
நூலின் இறுதியில் இடம்பெறும் “குறளுக்கு உரிமை கோரல்” என்ற கட்டுரை, இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. மிகவும் துணிச்சலான, அதேவேளை ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு பார்வையுடன், திருக்குறளின் சமயச் சார்பின்மை குறித்தும், வெவ்வேறு சமயங்கள் திருக்குறளைத் தங்களுக்குரியதாக நிலைநிறுத்த முயன்ற விதங்கள் குறித்தும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
குறிப்பாக, “திருக்குறள் வேதங்களின் சாரம்” என்ற கருத்தை முன்னிறுத்திய முயற்சிகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, அவற்றுக்கு முன்வைக்கப்படும் மறுப்புகளையும் ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இதன் மூலம், திருக்குறளை ஒரு குறிப்பிட்ட சமயக் கண்ணோட்டத்திற்குள் மட்டுப்படுத்தாமல், அதன் பரந்த சிந்தனைப் பரப்பில் இருந்து வாசிக்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.
இவ்வாறு, ஒவ்வொரு கட்டுரையும் காலத்திற்கேற்ற முக்கியமான கருத்துகளைச் சிறிய கட்டுரை வடிவில் முன்வைக்கின்றன. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், திருக்குறள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுவதற்கான முயற்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
திருக்குறளைப் பற்றிய பழைய விளக்கங்களை மீண்டும் கூறுவதைக் காட்டிலும், “இன்றைய உலகில் திருக்குறளை எவ்வாறு வாசிப்பது? அதன் சிந்தனைகளை எவ்வாறு மீள்பரிசீலனை செய்வது?” என்ற கேள்விகளுக்கான தேடலாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்த நூலுக்கு கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை நூலின் ஆழத்தை மேலும் விரிவாக்குகின்றது. உரையாசிரியர்கள் தொடர்பாக அவர் முன்வைக்கின்ற கருத்துக்கள் சிந்தனை முத்துக்கள்.
திருக்குறள் என்பது காலத்தைக் கடந்த ஒரு படைப்பு. அதனால், ஒவ்வொரு தலைமுறையும் அதனைத் தங்கள் காலத்தின் கேள்விகளோடு மீண்டும் வாசிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், “குறளுக்கு உரிமை கோரல்” நூல் வாசகர்களை வெறுமனே குறளைப் படிக்கச் செய்வதோடு நின்றுவிடாமல், குறளைப் பற்றி சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், விவாதிக்கவும் தூண்டும் நூலாக அமைகிறது.
காலத்திற்கேற்ற இந்தச் சிந்தனைப் பயணம் தமிழ் வாசகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
இதுவரை இந்த நூலை நீங்கள் வாங்கவில்லை என்றால், வாங்கி வாசியுங்கள். அதோடு நிறுத்திவிடாமல், இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் எழுப்பும் கேள்விகளையும் கருத்துகளையும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துரையாடுங்கள். அத்தகைய உரையாடல்களே திருவள்ளுவரின் சிந்தனையை நம் காலத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு சேர்க்கும் முக்கியமான வழிகளில் ஒன்றாக அமையும்.

தேமொழி

unread,
Sep 20, 2026, 11:31:09 PMSep 20
to மின்தமிழ்

ஆமசான் தளத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் :

23. Thamizhar Pulappeyarvu.jpg
தமிழர் புலப்பெயர்வு | Thamizhar Pulapeyarvu

க. சுபாஷிணி | Dr.K.Subashini (Author)  
₹430
https://www.amazon.in/dp/8196263686
-------------

3. Ariyappadavendiya Thamizhagam.jpg
அறியப்படவேண்டிய தமிழகம் | Ariyapadavendiya Tamizhagam
க. சுபாஷிணி | Dr.K.Subashini (Author)  
₹80
https://www.amazon.in/dp/1647865344
-------------

11. Rajarajanin Kodai.jpg
ராஜராஜனின் கொடை | Rajarajanin Kodai
க. சுபாஷிணி | Dr.K.Subashini (Author)  
₹180
https://www.amazon.in/dp/1647865530
-------------

14. Varalatru Aivil Kalappanigal.jpg
வரலாற்று ஆய்வில் களப்பணிகள் | Varalaatru Aaivil Kalappanikal
க. சுபாஷிணி | Dr.K.Subashini (Author)  
₹120
https://www.amazon.in/dp/8196263635
-------------

human evolution book - Suba.jpg
மரபணுக்கள் எழுதும் மனித வரலாறு | Marabanukkal Ezhuthum Manitha Varalaru
க. சுபாஷிணி | Dr.K.Subashini (Author)  
₹220
https://www.amazon.in/dp/8168931602
-------------

22. nakkeerar Nadaipayanam.jpg
நக்கீரர் நடைப்பயணம் (நெடுநல்வாடை) | Nakeerar Nadaipayanam
ப. பாண்டியராஜா | Dr. P. Pandiyarajah  (Author)
₹180
https://www.amazon.in/dp/8196962673
-------------

12. Kanithaviyal.jpg
கணிதவியல் - பொதுக் கட்டுரைகள் | Kanithaviyal
ப. பாண்டியராஜா | Dr. P. Pandiyarajah  (Author)
₹180
https://www.amazon.in/dp/B0HHNB93W5
-------------

15. Thamizhagatthil Bowtham.jpg
தமிழகத்தில் பௌத்தம் | Thamizhagathil Bautham
தேமொழி | Themozhi (Author)
₹120
https://www.amazon.in/dp/8196263619
-------------

8. Varalatril Poigal.jpg
வரலாற்றில் பொய்கள் | Varalatril Poykal
தேமொழி | Themozhi (Author)
₹100
https://www.amazon.in/dp/1647865506
-------------

13. Ilakiya Mellaivu.jpg
இலக்கிய மீளாய்வு | Ilakkiya Meelayvu
தேமொழி | Themozhi (Author)
₹150
https://www.amazon.in/dp/B0HHNV29Y6
-------------

kural book wrapper final.jpeg
குறளுக்கு உரிமை கோரல் | Kuralukku Urimai Koral
தேமொழி | Themozhi (Author)
₹180
https://www.amazon.in/dp/8168931637
-------------

5. kongunaatuk Kalvettugal.jpg
கொங்குநாட்டுக் கல்வெட்டுகள் | Kongu Naattu Kalvettukal
துரை சுந்தரம் |  Durai Sundaram (Author)
₹160
https://www.amazon.in/dp/1647865514
-------------

6. Kongunaattu tholliyal Sinnangal.jpg
கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் | Kongu Naattu Tholliyal Sinangal
துரை சுந்தரம் |  Durai Sundaram (Author)
₹140
https://www.amazon.in/dp/1647865522
-------------

inscription-durai sundharam.jpg
கல்வெட்டு எழுத்துக்கள் கற்போம் | Kalvettu Ezhuthukal Karpom
துரை சுந்தரம் |  Durai Sundaram (Author)
₹100
https://www.amazon.in/dp/8168931610
-------------

ecology - kannan.jpg
கிராமத்திலிருந்து உலகு வரை | Kramathilirunthu Ulaguvarai
நா.கண்ணன்   |  Na. Kannan(Author)
₹180
https://www.amazon.in/dp/8168931610
-------------

18. Neelakkadal Muzhuthum Kappal Viduvom.jpg
நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் | Neelakkadal Muzhuthum Kappal Viduvom
நரசய்யா  |   Narasaiya (Author)
₹150
https://www.amazon.in/dp/8196263643
-------------

sangam poems - Arul.jpg
சங்ககாலத்தில் ஜென்Z | Sangakaalathil GenZ

அருள் மெர்வின் |  Arul Mervin (Author)
₹200
https://www.amazon.in/dp/8168931653
-------------

தேமொழி

unread,
Oct 4, 2026, 2:53:32 PM (8 days ago) Oct 4
to மின்தமிழ்
திருக்குறளின் தனித்துவ மீட்டெடுப்பு!

— எம் ஜே.பிரபாகர்

themozhi.png

எழுத்தாளரும் ஆய்வாளருமான முனைவர் தேமொழி எழுதிய 'குறளுக்கு உரிமை கோரல்' என்னும் நூல், திருக்குறளின் தனித்தன்மையை மீட்டெடுப்பது குறித்தும், அதன் மீது பல்வேறு தரப்பினரால் திணிக்கப்படும் மதச் சாயல்கள் மற்றும் குறுகிய ஆதிக்கக் குறுக்கீடுகளை எதிர்த்தும் விவாதிக்கும் மிக முக்கியமான திறனாய்வு நூலாகும்.

திருக்குறள் என்பது உலகப்பொதுமறை அது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ, சாதிக்கோ அல்லது இனத்திற்கோ மட்டுமானதல்ல என்ற உலகளாவிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பரிமேலழகர் போன்ற பிற்கால உரையாசிரியர்கள் திருக்குறளுக்குத் தங்கள் சொந்தச் சமயச்சார்பான நிறம் பூசியதையும், சமஸ்கிருத-வைதீகத் தாக்கங்கள் மூலம் வள்ளுவரின் கருத்துகளைக் குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் சுருக்க முயன்றதையும் இந்நூல் வன்மையாகக் கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழர்களின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை மரபிலிருந்து திருக்குறளை அணுகும் நூலாசிரியர், அதன் மதச்சார்பற்ற, அறம் சார்ந்த தூய முகத்தை வெளிக்கொணர்கிறார். 17 செறிவான கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் 'காலந்தோறும் வள்ளுவர் வரலாறு', 'பெண்ணியப் பார்வையில் கலைஞரின் உரை, 'பள்ளிப் பாடங்களில் திருக்குறள்', 'குறளுக்கு உரிமை கோரல்' உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கு எழுத்தாளர் நா. முத்துநிலவன்  சிறந்த அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்.

இன்றைய திருக்குறளைச் சில குறிப்பிட்ட  அரசியல் மற்றும் மத அடையாளங்களுக்குள் அடைக்க முயலும் போக்குகளுக்கு வீரியமிக்க எதிர்வினையாக இந்நூல் விளங்குகிறது. திருக்குறளை அதன் தூய வடிவில், சமயச் சார்பின்றி அணுக விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய இச்சிந்தனைச் சிற்பக் கருவூலம், பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் தவறாமல் இடம்பெற வேண்டிய அத்தியாவசியமான படைப்பாகும்.



குறளுக்கு உரிமை கோரல்
ஆசிரியர் முனைவர் தேமொழி
வெளியீடு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
விலை: ₹180/-
மின்னஞ்சல்: myth...@gmail.com
 
'குறளுக்கு உரிமை கோரல்' நூலின் மதிப்புரை
தீக்கதிர், 05-10-2026;  பக்கம் 5, நூலாற்றுப்படை பகுதியில்  வெளியாகியுள்ளது

my book review 2.jpg
my book review 1.jpg

நன்றி: தீக்கதிர் - நாளிதழ் 

~~~

Jeyapal K

unread,
Oct 4, 2026, 10:08:34 PM (8 days ago) Oct 4
to mint...@googlegroups.com
Kindle இல் கிடைக்குமா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/cd1f7ad7-9233-4f87-b176-d43f81d1a6a6n%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 5, 2026, 10:08:26 PM (7 days ago) Oct 5
to மின்தமிழ்

இல்லை ஐயா, அச்சு நூலாக மட்டுமே வெளிவந்துள்ளது, நன்றி 
Reply all
Reply to author
Forward
0 new messages