1. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார் ++ 2. வெருளி நோய்கள் 766-770: இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 3, 2025, 4:02:20 PM (12 hours ago) Dec 3
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 766-770: இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்      04 December 2025      அகரமுதல


(வெருளி நோய்கள் 761-765: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 766-770

  1. காவல் நாய் வெருளி-Kanmengphobia

காவல் நாய் குறித்த அளவுகடந்த பேரச்சம் காவல் நாய் வெருளி.
காவல் நாய்கள் பல பெருத்த உருவிலும் பருத்த தோற்றத்திலும் பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் வகையிலும் இருக்கும். இதனாலும் எங்கே காவல் நாய்மேலே பாய்ந்து சதையைப் பிடுங்கி விடுமோ என்ற பேரச்சத்திலும் காவல் நாய் வெருளிக்கு ஆளாகின்றனர். நாய் மீதான அச்சம் உள்ளவர்களுக்கும் விலங்கு வெருளி உள்ளவர்களுக்கும் காவல் நாய் வெருளி வருகிறது.

00

  1. காவல்துறையினர் வெருளி – Astynomiaphobia

காவல்துறையினர் குறித்த வரம்பற்ற பேரச்சம் காவல்துறையினர் வெருளி.
காவல்துறையினர் சிலரின் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் நேரில் பார்ப்பதாலும் செய்தித்தாட்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள் பிற ஊடகங்கள் வாயிலாக அறிவதாலும் காவல்துறையினர் வெருளி வருகிறது. பொது மக்களுடன் கண்ணியமாகப் பழகித் தங்கள் கண்ணியத்தைக் காக்கும் காவல்துறையினர் மீது வெருளி வர வாய்ப்பில்லை.
Astynomia” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காவல் அலுவலர்.
Astynomia என்றால் நகரம் nomia என்பது சட்டம் என்னும் பொருளுடைய nomos என்னும் சொல்லில் இருந்து உருவானது. எனவே, இதன் நேர் பொருள் நகரத்தின் சட்டம். நகரத்தின் சட்டத்தைப்பேணும் அதற்குப் பொறுப்பான அலுவலர்களாகிய காவல் அலுவலர்களைக் குறிக்கிறது.
00

  1. காழநீராக்கி வெருளி – Kafetiphobia
    காழநீராக்கி(coffee maker) குறித்த வரம்பற்ற பேரச்சம் காழநீராக்கி வெருளி.
    காண்க: காழநீர் வெருளி – Leguminophobia/Fabaphobia/Cafephobia
    00
  2. காழநீர் வெருளி – Leguminophobia/Fabaphobia/Cafephobia

காழநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காழநீர் வெருளி.
பெரும்பாலும் சிறுவர்களிடம் காழநீர் வெருளி காணப்படுகிறது.
இவ்வெருளிக்கு ஆட்பட்டவர்களுக்குக் காழநீர் மணமே துன்பம் தருகிறது. காழநீர் பருகவும் அதன் சுவைக்காகவும் அஞ்சுவோரும் அருகில் வேறு யாரும் காழநீர் குடித்தாலும் சுவைக்காழ் அரைக்கப்படும் இடத்தில் இருந்தால் அங்கு வரும அதன் மணத்திற்காக அஞ்சுவோரும் உள்ளனர்.
Leguminophobia என்றால் அவித்த அவரை வெருளி என்றுதான் நேர் பொருள்.
தொடக்கத்தில் சுவைக்காழுக்குத் தனிப்பெயர் இல்லாமல் அவரை(beans) என்னும் சொல்லையே பயன்படுத்தினர். எனவே, இங்கே அவரை என்பது சுவைக்காழையே குறிக்கிறது
.
சுவைக்காழில் உள்ள கிளரியால்(காஃபின்/caffeine)இதற்குக் காஃபி எனப் பெயர் வந்தது. எனினும் தென் எத்தியோப்பியா நாட்டில் உள்ள காஃவா (Kaffa) என்ற இடத்தில் விளைந்த செடி என்பதால் அப்பெயர் வந்தது என்பர். இதிலுள்ள ஊக்கியே, கிளரி(காஃபின்/caffeine) எனப்பட்டது. இது வேறு பிற செடிகளின் விதைகள் அல்லது கொட்டையில் இருந்தாலும் சிறப்பாக இதற்கு மட்டுமே இப்பெயர் வந்தது.


இதனைத் தமிழில், காபி, குளம்பி, கோப்பி, கொட்டை வடி நீர் என்கின்றனர். கன்றுக்குட்டியின் குளம்படிபோல் இருப்பதால் குளம்பி என்றார் தேவநேயப் பாவாணர். மூலப்பொருள் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிட்டதாகப் பலர் எழுதியிருந்தாலும் மூலப்பொருள் கிளரி என்பதே ஆகும். குளம்பி என்பதைக் குழம்பி என்றே பலரும் தவறாகக் கையாள்வதாலும் குளம்பி என்பது குளம்புடைய விலங்குகளைக் குறிப்பதாலும் இச்சொல்லாட்சி தேவையில்லை. மேலும், செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலேய இச்சொல் இடம் பெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கொட்டை வடி நீர் என்பதைக் கிண்டலுக்குரியதாகப் பலர் கூறுவதால் நிலைக்கவில்லை. எனவே, கொட்டை என்னும் பொருள் கொண்ட காழ் என்பதன் அடிப்படையில் சுவைக்காழ் என்றும் இதிலிருந்து உருவாக்கும் சுவைநீரைக் காழநீர் என்றும் அழைக்கலாம் எனக் கருதுகிறேன்.
பயிற்றினம் அல்லது விதையினத்தைக் குறிப்பிடும்leguminous என்பது இங்கே சுவைக்காழைக் குறிக்கிறது.
Faba என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அவரை. இதனடிப்படையில் Fabaphobia என்பதைப் புதிய வெருளி என்கின்றனர். காழநீர்க்கேட்பு வெருளி எனத் தனியாகக் குறிக்கலாம் என்றாலும் சுவைக்காழ் வெருளியிலேயே இதைச் சேர்க்கலாம்.
00

  1. காழ் அரவை வெருளி – Mlafenphobia

காழ் அரவை (coffee grinder) குறித்த வரம்பற்ற பேரச்சம் காழ் அரவை வெருளி.
காண்க: காழநீர் வெருளி – Leguminophobia/Fabaphobia/Cafephobia
00

தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன் 

வெருளி அறிவியல் 2/5

++

கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்


ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன் 
     04 December 2025      கரமுதல


(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

புலவர் வி.பொ.பழனிவேலனார்

ஆ.தமிழர்

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3

இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை

இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர்.

இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது இலங்கையரசு. இந்த முடிவு இந்திய அரசுக்குப் பெருந்தலைவலியாகிவிடும் என்ற அச்சத்தால் இராசீவு காந்தி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசின் தலைவர் செயவர்த்தனாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி இந்திய அரசு ஒரு பெரும்படையை இலங்கையில் வைத்து, தமிழர்க்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டத் தமிழ்ப்போராளிகளின் போர்க்கருவிகளை அகற்றி இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதென்றும் வெளிப்படையான அறிவிப்பு. ஆனால், கமுக்கமான உடன்பாடு தமிழ்ப்போராளிகளை ஒழித்துக்கட்டுவதே!

வீடு வீடாகச் சென்று தமிழ் மக்களிடம் இருந்த படைக்கலங்களைப் பிடுங்கினார்களே தவிரச் சிங்களப் போராளிகளிடமிருந்த   படைக்கலங்களைப்   பிடுங்கவில்லை. இது ஈழத்தமிழ்ப் போராளிகட்கு மனநிறைவளிக்கவில்லை, எனவே, எதிர்த்தனர். மேலும், ஏழைத்தமிழர்க்கு இன்னலும் இழைத்தனர். இந்த அமைதிப்படைக்காக இந்திய அரசுக்கு ஒருநாளைக்கு ஒரு கோடி உருபாவுக்குமேல் செலவாயிற்று. இது ஈழத்தமிழர்க்கு உதவவா? இந்தியாவை அயல்நாட்டுத் தாக்குதலினின்றும் பாதுகாக்கவா? என்பது ஆய்வுக்குரியது.

ராசீவு காந்தி படுகொலையும் ‘தடாவும்’

21.5.1991-இல் இராசீவு கொலைக்குப் பிறகு காவல்துறையும், புலனாய்வுத்துறையும் கொலைக்கு யார்காரணம் என்று புரியாமல் திண்டாடி, இறுதியில் விடுதலைப்புலிகள்தாம் என்று உறுதி செய்து, அதற்கு வேண்டிய சான்றுகளை அணியஞ்செய்தன.

இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் விடுதலைப்புலிகள் நடமாட்டத்தைத் தடைசெய்து ஒடுக்க இந்திய அரசும் தமிழக அரசும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

வடநாட்டார்க்கு வால்பிடிக்கும் இந்திரா பேராயத்ததினர், விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய அரசையும், தமிழ் மாநில அடிமை அரசையும், அடிக்கடி தூண்டுதல் செய்து கொண்டேயிருக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா விடுதலைப்புலிகளை அறவே  வெருட்டி  விட்டதாகப்  பெருமையடித்துக் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்திய நாடாளுமன்றில் ஒரு தமிழக நாடாளுமன்ற இ.கா. உறுப்பினர் இந்தியாவில் இன்னும் புலிகள் நடமாட்டம் உளது என்று எச்சரித்துளார்.

“இத்தடாபுடா” சட்டத்தைக் கொண்டு வேண்டாதவர்களை, விடுதலைப்புலிகட்கு ஏதோ ஒருவகையில் உதவினர் என்று குற்றம் சுமத்தி, தமிழர் பலரையும் சிறையிலிடுகின்றனர்.

இப்பொழுது (10.03.1992) எவராவது விடுதலைப்புலிகட்குச் சார்பாகப் பேசினால் கூடப் பிடித்துக் காவல் கூடத்திடுகின்றனர். இத்தடைச்சட்டம் எல்லார்க்கும் அச்சமூட்டுவதாகிவிட்டது.

இந்தியாவும் இலங்கையும்

இந்தியா மொழிவழி மாநிலம் பிரித்து எல்லா மாநிலங்களையும் அடிமை நிலையிலேயே வைத்துள்ளது. இலங்கையும் மாவட்டங்களாகப் பகுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களை அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. 1983 இல் தமிழர்களைக் கோரக் கொலை செய்து நூழிலாட்டு ஆடினர். இலங்கைத் தமிழர்கள் உயிர்பிழைக்க இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் ஏதிலிகளாகப் போய் அடைக்கலம் புகுந்தனர்.

1983 ஆம் ஆண்டு சிங்களவர் செய்த கொடுமைகளைக் கண்டு தமிழீழ இளைஞர்கள் வாழ்வு அல்லது சாவு என முடிவெடுத்து   வேலுப்பிள்ளை   பிரபாகரன்   தலைமையில் “விடுதலைப்புலிகள்”  என ஒருபடை அமைத்து, சிங்கள அரசுடன் போராடுகின்றனர்.

இந்திய அரசு போராளித் தமிழர்களை அடக்கி இலங்கை அரசுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் படைக் கலன்களைப் பிடுங்கியது. திரு. இராசீவு காந்தியை விடுதலைப்புலிகள் தாம் கொன்றனர் எனக் குற்றம் சுமத்தி அவர்களுக்குத் தடைவிதித்து  விட்டது. தமிழ்நாட்டிலிருந்த இலங்கை ஏதிலித் தமிழர்களை வலிந்து வெளியேற்றுகிறது. 

இந்தியாவில் விடுதலை வேண்டிப் போராடும் இந்திய மக்களை, இந்திய  அரசு   பாதுகாப்புப்  படைகளைக் கொண்டு கொன்று குவிக்கிறது. அவர்களைப் பயங்கரவாதி, தீவிரவாதி எனப் பட்டஞ் சூட்டியுளது. இலங்கையரசும் பாதுகாப்புப் படைகளையமைத்து இலங்கைத் தமிழர்களை நாள்தோறும் கொன்று குவிக்கிறது. தமிழர்களை அழிப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழர்தாம் வடவர்க்கு அடிமையாயிற்றே!

இந்தியா நேர்மையானதா?

தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டிக்கிற இந்தியா, இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களைத் தீண்டப்படாதவர் என்று ஒதுக்கிவைத்துள்ளதை எவர் கேட்கிறார்? அரசு அவர்கட்கு வீடுகள், ஏனையோர் வாழும் இடங்களில் கட்டிக்கொடாமல், ஒதுக்கமான காடு, கரைகளில் கட்டிக்கொடுக்கிறது. எப்படிப்பட்ட வீடுகள்? கோழிக்கூடுகள் போன்றவை!

அன்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களில் பூசை செய்யத்தகாதவர்  என்று  இந்திய  மீயுயர் முறைமன்றம் (ளுரிசநஅந ஊழரசவ) தீர்ப்பளித்துள்ளதே! அஃது இன ஒதுக்கல் அல்லவா?

பீமராவு அம்பேத்துகர்க்கு விழா நடத்திப் பாராட்டும் இந்திய அரசு எல்லாவகையிலும் சமவுரிமை அளிக்கிறதா? உயர்சாதியென்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனர் தாழ்த்தப்பட்டவர்களைச் சமமாக மதித்து நடத்துகிறார்களா?

அவர்கள் வீடுகளில் நடக்கும் நன்மை தின்மைச் சடங்குகட்குச் செல்கிறார்களா?

தென்னாப்பிரிக்காவில் கறுப்பர், வெள்ளையர் என்கிற வேறுபாடே தவிர, இந்தியாவில் இருப்பது போன்ற இன ஒதுக்கலன்று.

நமீபியாவுக்கு விடுதலை வழங்க வேண்டுமென்று வாதாடிய இந்தியா தனக்கு அடிமையாக வைத்துள்ள மாநிலங்கட்கு விடுதலையளிக்க மறுப்பது ஏன்? மேலும், காவிரி நீர்ச்சிக்கலைத் தீர்க்கவியலாமல் நடுவர் மன்றத்திடம் விட்டதே! நடுவர் மன்றம் செய்த தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்தியதா?

பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறது இப்பொழுது. முன்னரே அந்த அறிவு எங்கே போயிற்று? சட்டத்தை மதிக்காத அரசை ஏன் கலைக்கவில்லை?

கருநாடகத்தார் தமிழர் பலரைப் பலியிட்டு, பல்லாயிரம் கருநாடகத் தமிழர்களை ஏதிலிகளாகத் தமிழகத்திற்கு வெருட்டியடித்த பிறகுதான் இந்த முடிவு! எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதன்  பொருள் யாது?

இனப்பற்று தமிழகத் தமிழர்க்கிருப்பது தவறா?

தமிழர் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர். அங்கு கூலிகளாகவும், அடிமைகளாகவும், வாழ்கின்றனர். அயல்நாடுகளிலும் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்களும் ஏதிலிகளாக இந்தியாவிற்கும் ஏனை அயல்நாடுகளுக்கும் சென்று வதிகின்றனர்.  தமிழினம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அதனிடம் இரக்கங்காட்டுவது குற்றமா? இன்னல்படும்போது உதவக்கூடாதா?

(தொடரும்)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages