தம்பட்டம் அடிக்கும் டம்பாச்சாரியின் சுயப் பிதற்றல் அல்ல
நினைவு தெரிந்த நாளில் இருந்து அதுவாகப்பட்டது அரை நூற்றாண்டுக்குமுன் நான் உள்ளே புறமே முன்னே நடந்த காட்சிகளை என் வழக்கமான பார்வையில் முன்வைக்க முன்னெடுக்கும் சிறு முயற்சி இது
முதலில் கணியன் என்ற பெயர் தொடர்பான தன்னிலை விளக்கம். நான் பிறந்து வளர்ந்து சுற்றிவந்த நிலப்பகுதி அறிவர்கள் என்ற சித்தர்களும் பண்டாரங்களும் நிமித்திகம் வைத்தியம் பழகும் வள்ளுவர்களும் வாழ்ந்த நிலப்பகுதி. ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து ஞானம் பெற்றுப் பிறப்பறுக்கும் நோக்கம் இல்லாமல் இறையருளால் அருளாசி பெற்றுச் சராசரி மனிதர்களைவிட மிகுந்த ஆற்றல் திறனை வளர்த்துக்கொண்டு தொண்டூழியம் செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே கணியன் என்போர் கணினி வல்லுனர்கள் என்ற இன்றைய சொல்லாட்சியைக் கடந்து கவின்கலை நுண்கலை மற்றும் பிணி தீர்க்கும் கலைகளைக் கற்றுத் தங்களைச் சுற்றியுள்ள வல்லமையற்ற மக்களைக் கடைத்தேற்ற முயற்சி செய்த தன்னார்வம் மிக்க மனிதர்களைக் குறிப்பதாக ஒரு கோணத்தில் என் பார்வையைச் செலுத்துகிறேன்
என்னுடைய பிறந்த ஊர் ஆயக்குடி பழனிக்கு முன்னதாகத் திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம். என்னுடைய உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பண்டித முருகேச முதலியார் எங்கள் கிராமம் மிகவும் பழமையானது சங்க இலக்கியத்திலும் சங்கம் மருவிய இலக்கியத்திலும் இடம்பெற்றதகக் கூறுவார். ஆயர்பாடிக் கண்ணனும் பலராமனும் பெண் எடுத்தது ஆயக்குடியில் என்றும் ஆயர்களின் முல்லை நிலம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்ததாக இரண்டு ஆயக்குடிகள் இருப்பது ஒரு வரலாற்று குழப்பம். பொதிகை மலையில் ஒரு ஆயக்குடியும் பழனிமலையில் இன்னொரு ஆயக்குடி இருப்பதுமே குழப்பத்துக்குக் காரணம்.
இணையத்தில் பழமையான தமிழகத்தின் நாடுகளைச் சுட்டும் வரைபடங்கள் காணக் கிடைக்கின்றன, அவற்றில் கி.மு 100 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தென்குமரி அருகே ஆய் நாடு என்ற ஒரு நாடு இருந்ததாகக் குறிப்புள்ளது. அந்த ஆய் நாட்டினர் பாண்டியச் சேர நாடுகளுக்கு இடையில் இருந்த நிலப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களை வென்று கொங்குநாட்டை நிறுவினர் என்ற வரலாற்று குறிப்பும் உள்ளது. கி.பி முதலாம் ஆண்டு வரைபடம் மூவேந்தர்களைத் தவிர ஆய் மற்றும் கொங்குநாட்டை உள்ளடக்கியதாகக் காட்டப்பட்டுள்ளது. தென் கொங்குப்பகுதியில் திருஆவினன்குடி நாடு என்ற பகுதியில் அமைந்துள்ளதே நான் பிறந்த ஊர்.
என்னுடைய உயர்நிலைப்பள்ளி நாட்களில் தொடங்குவது சரியாக இருக்கும் என்று எண்ணி என் நினைவுகளைத் தொகுக்க விரும்புகிறேன். பழனியில் அமைந்துள்ள முனிசிபல் உயர்நிலைப்பள்ளியில் முதலாம் படிவத்திலிருந்து ஆறாம் படிவம் வரை படித்தேன். என் வகுப்புத் தோழர்களைத் தவிர என்னுடைய பேச்சுத் திறமையாலும் விளையாட்டுத் திறமையாலும் பள்ளி மாணவர்களைத் தாண்டி சுற்றுவட்டாரப்பகுதிகளும் அறியப்பட்டவனாகப் பெரிய தொடர்பு வலையை உருவாக்கிக்கொள்ள முடிந்தது
ஆயக்குடி இளைய ஜமீனும் நெய்க்காரபட்டி இளைய ஜமீனும் பழனி அடிவாரத்தில் கடைவிரித்தும் மலைமேல் கோவிலில் ஆதிக்கம் செலுத்திய பண்டாரங்களின் பிள்ளைகள் பள்ளித் தோழர்கள். பாலப்பருவத்தில் அரசியல் நெடியும் கொஞ்சம் அதிகமாகவே தாக்கி உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டியது. அதன் காரணமாக எங்கள் ஊர்ப்பகுதிக்கு வரும் அரசியல் தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது
தற்போதைய ஆயக்குடி மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது பழைய ஆயக்குடி புது ஆயக்குடி ஓபுளாபுரம் என்ற மூன்று ஊர்களும் ஆயக்குடிக்குள் அடங்கும். ஊர் பழனிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முல்லை நிலப்பகுதி. இந்தப் பழனி மலை மேற்குத் தொடர்ச்ச்9 மலையில் ஒரு பகுதி. கொடைக்கானல் மலைப்பகுதி இங்கே அமைந்துள்ளது. கொடைக்கானல் என்ற குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இப்போது முருகன் தண்டாயுதபானியாக அமைந்துள்ள குன்று பழனிமலை என்றழைக்கப்பட்டாலும் அது குறிஞ்சி நிலம் அல்ல என்பதால் நாயக்கர் காலத்தில் இந்தக் கோவில் உருவாகியிருக்கலாம. எங்கள் ஊர் ஜமீன் ஆயக்குடி ஜமீன் என்றழைக்கப்பட்டது ஜமீன் அரண்மனை புது ஆயக்குடியில் அமைந்திருந்தது. பழனி சுற்றுவட்டாரப்பகுதியில் பல ஜமீன்கள் இருந்தன, ஆயக்குடி தவிர நெய்க்காரபட்டி விருப்பாட்சி ஆகிய ஜமீன்களும் இருந்ததாகக் குறிப்பு உள்ளது. பழனி முனிசிபல் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் வகுப்புத் தோழர்களாக ஆயக்குடி நெய்க்காரபட்டி ஜமீன் வாரிசுகள் என்னுடன் படித்தனர் என்பது ஒரு கொசுறுத் தகவல்
பழைய ஆயக்குடியில் ஒரு பெருமாள் கோவில் அமைந்து அதன் பூசகராக ஒரு பிராமணர் மற்றும் கடைவீதியில் கோமள விலாஸ் உணவு விடுதி நடத்திய மணி ஐயர் தவிர வேறு பிராமணர்கள் இல்லை. அக்கிரகாரம் பார்க்கவேண்டும் என்றால் பழனிக்குத் தான் போக வேண்டும். தென்கொங்குப்பகுதியில் பழனியில் திருஆவினன்குடி குன்றின்மேல் பழனி தண்டாயுதபாணி என்று இரண்டு முருகன் கோவில்கள் அமைந்துள்ளது. பெரிய நாயகி அம்மன் கோவிலில் தேர் மற்றும் யானைகள் கட்டும் இடம் அமைந்துள்ளது
எங்கள் ஊர் பழனிமலை அடிவாரத்தில் அமைந்திருந்ததால் சம வெளியில் பழங்களையும் மலைப்பகுதியில் வாழை காபி போன்ற பயிர்களையும் சமவெளியில் நெல் வெற்றிலை ஆகிய பயிர்களையும் விவசாயம் செய்தனர். எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் பெருமாள் மலை தாண்டிக்குடியில் வாழை வளர்த்த்து சந்தைக்குக் கொண்டுவரக் குதிரைகளை வளர்த்தனர். அவர்களின் வாழைத் தோட்டங்களில் பணிபுரிந்த பளியர்கள் வாரம் ஒருமுறை மலையிலிருந்து கீழிறங்கி வருவதுண்டு. ஊர் வழக்கப்படி ஆண்டுக்கொருமுறை வேட்டைக்கு ஊர்மக்கள் மலைக்காடுகளுக்குச் செல்வதுண்டு
கொடிக்கால் விவசாயம் செய்யும் பாண்டிய வேளாளர்கள் வாழக்காய்த் தோட்டத்துக்குச் சொந்தமான தெலுங்கு செட்டிமக்கள் பழம் விளைவிக்கும் மள்ளர்கள் விவசாயத்தில் பணம் பார்த்துப் பசையுடன் வாழ்ந்தவர்கள். பணம்புரளும் மக்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கத் தினசரிப் பழனிக்கும் அடிக்கடி கோவைக்கும் மதுரைக்கும் (இரண்டுக்கும் நடுவில் அமைந்ததால்) காரில் பயணம் செய்வதுண்டு. காலையில் கிளம்பிப் பொடி நடையாக மலை அடிவாரம் சென்று மலை ஏறினால் நான்குமணி நேரத்தில் கொடைக்கானல் சென்றுவிடலாம். கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள குறிஞ்சியாண்டவர் கோவிலில் நின்று பார்த்தால் பழனி மலை தண்டாயுதபாணி கோவில் கோபுரம் தெரியும்
சிறுவயதில் இந்த மூன்று முருகர் வழிபாடு நடக்கும் கோவில்களும் குழப்பத்தையே தந்தன. அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன்குடி கோவில்களில் திருமண நிகழ்வுகள் நடக்கும். மேலே உள்ள மலைக்கோயில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முருகனைக் குறிப்பிடுவதா என்பதே ஒரு ஐயமாக இருந்தது. பழனி தண்டாய்தபானி ஸ்வாமி தெலுங்கு நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சாட்சி இன்றும் கோவில் பூசனைப்பொருட்கள் ஆயக்குடி ஜமீன் வழியாகவே கிடைக்கும் தகவலைக்கொண்டு உறுதி செய்யலாம்
பழனிக் கோவில் வழிபாட்டுக்கு வருபவர்கள் கேரளத்தில்ர இருந்தும் அதற்கு அடுத்தபடியாகக் கொங்கு மண்டலத்திலிருந்தும் மூன்றாவதாகச் செட்டி நாட்டிலிருந்தும் வருபவர்கள். அவர்கள் தங்கிச் செல்வதற்குப் பல மடங்கள் தங்குமிடங்களாக அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றித் தண்டாயுதபாணி அதிகம் காணப்படும் ஊர் பழனி என்றால் மிகையாகாது
பிச்சைக்காரர்களைத் தவிர முருகன் பெயரால் பால் பழம் பஞ்சாமிர்தம் சாப்பிட்டு உடல்வலிமையை வளர்த்துக்கொண்ட பண்டாரங்கள் ( காங்கிரஸ் அரசு காவல்துறையை வைத்து இவர்களைக் கோவிலில் இருந்து வெளியேற்றப் படாதபாடு பட்டது) உணவே இல்லாமல் மூலிகையை உண்டு சித்து விளையாடிய சித்தர்கள், வாலிப வயோதிகர்களே என்று சிறுநீர் கழிக்க உட்காரும் மக்களுக்குப் பெரிய எழுத்தில் விளம்பரம் செய்து பெரும் பணம் சம்பாதித்த சித்த வைத்தியர்கள், சோதிடம் மாயம் மாந்திரீகம் என்று பிழைப்பு நடத்திய வள்ளுவர்கள் எனப்பலரின் அந்தப்புரக் கதைகள் அங்கே அதிகம் புழங்கியதும் அக்கதைகளின் உண்மை நிகழ்வுகளை இளம் பள்ளிப்பருவத்தில் கண்ணால் கண்டதும் உண்டு.
கோவில் இருந்த இடம் என்பதால் கவின் கலைகளுக்கும் அரை வளர்த்த கலைஞர்களுக்கும் பஞ்சம் இல்லை. என் பள்ளி நாட்களின் நாதசுரம் பொண்ணுத்தாய் நாடக உலகில் ஒரு நடிகையாக இருந்த கே.ஆர்.விஜயாவையும் நன்கறிவேன்
என்னுடைய பள்ளி நாட்களில் நான் கண்ட காசிகளையும் சந்தித்த மனிதர்களையும் என் நினைவிலிருந்து என் பார்வையில் முன்வைக்க முனைகிறேன்
மூத்த கணியன்
வணக்கம்.
கணியன் பூங்குன்றனார் பாடல் போன்று சுவை மிகுந்த பதிவு.
நான் தெரிந்து கொள்ள விரும்புவன மூன்று !
1) பழனி பால தண்டாயுதபாணி க்குப் பூணூல் உண்டா?
2) பூசை செய்து வந்த பண்டாரங்கள் பூணூல் அணிந்தவரா ?
3) பூணூல் அணியாத தெய்வங்களுக்குப் பூணூல் அணிந்த ஐயர் பூசைகள் செய்வரோ ?
இழையின் தலைப்பிலிருந்து விலகும் என நினைந்தால் தனியிழை துவங்கிடலாம்.
அன்பன்
கைக்கணினியான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
கணியன் பூங்குன்றனார் பாடல் போன்று சுவை மிகுந்த பதிவு.
நான் தெரிந்து கொள்ள விரும்புவன மூன்று !1) பழனி பால தண்டாயுதபாணி க்குப் பூணூல் உண்டா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.