திருக்குறள் சொற்களஞ்சியம்

206 views
Skip to first unread message

nkantan r

unread,
Feb 21, 2015, 10:33:54 AM2/21/15
to mint...@googlegroups.com
hi all!

we all know there are 1330 couplets in our thirukkural; that means approximately (considering seven seer /cheer) 10000 word combos. do we (in tamil publications) have a database or சொற்களஞ்சியம் covering and consisting all the word combos in thirukkural?

regards
rnkantan

திருக்குறளில் 1330 குறட்பாக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏழு சீர்களின் அடிப்படையில் மொத்தம் 10000 சொற்சொடர்கள் இருக்கின்றன. இந்த சொற்களின் அடிட்படையில் ஏதேனும் சொற்களஞ்சியம் உள்ளதா? அப்படி இல்லாத நிலைமையில் அப்படி ஒன்றை அமைக்க என்ன வழி?

rnkantan

Hari Krishnan

unread,
Feb 21, 2015, 10:43:26 AM2/21/15
to mintamil

2015-02-21 21:03 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
திருக்குறளில் 1330 குறட்பாக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏழு சீர்களின் அடிப்படையில் மொத்தம் 10000 சொற்சொடர்கள் இருக்கின்றன. இந்த சொற்களின் அடிட்படையில் ஏதேனும் சொற்களஞ்சியம் உள்ளதா? அப்படி இல்லாத நிலைமையில் அப்படி ஒன்றை அமைக்க என்ன வழி?

திருக்குறள் சொல்லடைவு என்ற நூலை சாமி வேலாயுதனார் தொகுத்து, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 2002ம் ஆண்டு வெளியிட்டது.  இதில் பகுபத முடிவு, இலக்கணக் குறிப்பு, பொருள், இருப்பிடக் குறிப்புகளுடன் திருக்குறளில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சொற்களும், (அ என்பது அந்த என்ற பொருளில் எந்தெந்தக் குறளில் இடம்பெற்றுள்ளது, உடைய என்ற பொருளில் எந்தெந்தக் குறளில் இடம் பெற்றுள்ளது என்பது தொடங்கி, எடுத்துக்காட்டாக அகத்தான் என்ற சொல் மனத்துடனாகிய என்ற பொருளில் 93ம் குறளில் இடம் பெற்றுள்ளது, அகம்+அத்து+ஆன், இட. 3ம் வேற்றுமை என்பது போன்ற இலக்கண விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

திருக்குறளில் இடம் பெற்றுள்ள மொத்த சொற்கள் 4303.  கடைச் சொல்லடைவு என்ற ஈற்றுச் சீர் தொகுப்பில் 419 நுழைவுகள் இடம் பெற்றுள்ளன.

நம் முன்னோடிகள் நம்மிலும் வலியவர்தாம்.  நாம் சிந்திப்பதற்கு முன்னதாகவே சிந்தித்து, தொகுத்து, நூலும் வெளியிட்டுவிடுகிறார்கள்.  :)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

nkantan r

unread,
Feb 21, 2015, 11:11:19 AM2/21/15
to mint...@googlegroups.com
thank you very much; in 1980 myself and one of my friends (P Srinivasan, who joined world bank and left india) started on this and then we could not continue as he left suddenly and we lost touch as I changed my location in Mumbai,

Nice to hear the book is already in print; tried to look at Kazhagam, Southindian saiva siddhantha works. Couldnot get the correct publishing website. any link would be welcome so I can place an order for the same.

thanks again and regards
rnkantan

Hari Krishnan

unread,
Feb 21, 2015, 11:16:50 AM2/21/15
to mintamil

2015-02-21 21:41 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:

Nice to hear the book is already in print; tried to look at Kazhagam, Southindian saiva siddhantha works. Couldnot get the correct publishing website. any link would be welcome so I can place an order for the same.

thanks again and regards
rnkantan

NHM முதலான ஆன்லைன் புத்தக விற்பனை நிலையங்களில் கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் எந்த இடத்தில் வசிக்கிறீர்கள்?

nkantan r

unread,
Feb 21, 2015, 11:17:04 AM2/21/15
to mint...@googlegroups.com

regards
rnkantan

On Saturday, February 21, 2015 at 9:13:26 PM UTC+5:30, Hari wrote:

nkantan r

unread,
Feb 21, 2015, 11:21:49 AM2/21/15
to mint...@googlegroups.com
the book is available as a scanned copy for free view in Tamil virtual library; as given by Dialogue /reference section in the wiki link


(இந்நூலை, தற்போது மின்வருடல் படக்கோப்பாக தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலகத்தில் வாசிக்க முடியும்;)

thanks to all

rnkantan


சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 21, 2015, 12:44:46 PM2/21/15
to mintamil
நம் குழும நன்பர் பெரியவர் திரு பாண்டியராஜா அவர்களுடைய பெருமுயற்சியால் சங்க நூல்கள் பெரும்பாலனவற்றிற்குச் சொல்தொடரடைவு எழுதப்பட்டது. நம் குழுமத்தில் தேடினால் படிப்படியான பகிர்வுகல் கிடைக்கும்.
7.7.2014 தேதியிட தினமலரில் வந்த செய்திக்குறிப்பினை அறியத்தந்துள்ளேன். நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
Advertisement

பதிவு செய்த நாள்

07ஜூலை
2014 
00:00

பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்பவர்களுக்கும், அவற்றில் ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கும், அவற்றின் சொல் அடைவு (Concordance) எனப்படும் சொற்களின் பட்டியல் ஓர் அவசியத் தேவையாகும். மேல் நாடுகளில், குறிப்பாக ஆங்கில இலக்கிய நூல்களில் பெரும்பாலானவற்றிற்கு இந்த சொல்லடைவுகள், தற்போது கணினியில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. தமிழில் இந்த அரிய முயற்சியினை, மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் பாண்டியராஜா மேற்கொண்டு தந்துள்ளார். இவரின் சொல்லடைவுகள் http://sangamconcordance.in/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பதியப்பட்டு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. 
இந்த தளத்தில் சென்றவுடன், முதல் அறிமுகப்பக்கத்தினை அடுத்து, நாம் எதிர்கொள்ளும் மெனுவில் சொற்பிரிப்பு நெறிகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் கம்பராமாயணம் ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன. இவற்றில் எது நமக்குத் தேவையோ, அதன் மீது கிளிக் செய்து, உள்ளே செல்லலாம். எடுத்துக் காட்டாக, சங்க இலக்கியம் என்பதில் கிளிக் செய்திட, தொடரடைவு சங்க இலக்கியம் என்பதின் கீழ் அனைத்து தமிழ் எழுத்துக்களும் கட்டமிடப்பட்டுள்ளன. நமக்கு எந்த சொல் தேடி அறிய வேண்டுமோ அதன் முதல் எழுத்தில் கிளிக் செய்தால், அந்த எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும், அனைத்து சங்க நூல்களிலும் (பத்துப்பாட்டு + எட்டுத் தொகை) உள்ள வரிகள் காட்டப்படும். பின்னர் இதில் Alt+F கீகளை அழுத்தி, நமக்கு வேண்டிய சொல் மட்டும் தேடிப் பெறலாம். எடுத்துக் காட்டாக “பே” என்ற எழுத்தை அழுத்த, நமக்கு “பே” என்று தொடங்கும் சொற்கள் உள்ள வரிகள் அனைத்தும் காட்டப்படும். இதில் “பேயும் அறியா” என்று தேடல் கட் ட த்தில் அமைத்துத் தேடினால், அந்த சொற்கள் உள்ள வரிகள் மட்டும் கிடைக்கும். வரிகளின் முடிவில், அந்த வரி எந்த நூல், எந்த பாடல் எனக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, அகம், குறுந்தொகை 304 என நூல், பாடல் எண் காட்டப்படும்.
சங்க இலக்கிய நூல்கள் அனைத்தின் பாடல்கள் டெக்ஸ்ட்டாக வேண்டும் எனில், முகப்பு பக்கத்தின் வலது கட்டத்தில் அவை பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் கிளிக் செய்து பாடல்களுக்கான டெக்ஸ்ட்டினைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, தொல்காப்பியம் என்பதில் கிளிக் செய்தால், மூன்று அதிகாரப் பிரிவுகளும், அவற்றின் கீழ் ஒன்பது இயல் பிரிவுகளும் இருப் பதனைக் காணலாம். தேவையானதைக் கிளிக் செய்து, டெக்ஸ்ட்டினக் காணலாம்.
இந்த அடைவினைத் தயாரிப்பது எளிமையான செயல் திட்டம் அல்ல. தனியொரு மனிதராய், பழந்தமிழ் இலக்கியத்திற்கு இதனைத் தயாரித்து வழங்கிய பேராசிரியர் பாண்டியராஜா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணிதத்துறைப் பேராசிரியராகச் செயல்பட்டவர். தமிழ் இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கியத்தினைக் கற்று, பின்னர் கணினியியல் கற்று, இதனைத் தயாரித்து வழங்கியுள்ளார். 
பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் மற்றும் பாடம் நடத்தும் பேராசிரியர்களுக்கு இந்த சொல்லடைவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேராசிரியரைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள், தளத்தின் முகப்பு பக்கத்தில் தரப்பட்டுள்ள அவர் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Pandiyaraja

unread,
Feb 21, 2015, 1:07:36 PM2/21/15
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு.வினைதீர்த்தான் அவர்களே.
திரு.நீலக்ண்டன் அவர்கள் கேட்டது திருக்குறள் பற்றிய சொற்களஞ்சியம். திரு.ஹரி அவர்கள் குறிப்பிட்டது, திருக்குறளில் சொல், பொருள், இலக்கணக்குறிப்பு, நிகழ்விடம் ஆகியவற்றைத் தரும் சொல்லடைவு. நான் உருவாக்கியுள்ளது தொடரடைவு (Concordance). அதாவது ஒவ்வொரு சொல்லும் வருமிடத்தோடு, அது வரும் பாடல் அடியையும் தருவது. இதனை sangamconcordance.in என்ற என் வலைத்தளத்தில் பார்க்கலாம். இதில் திருக்குறளுக்கு மட்டும் இருவகையான தொடரடைவுகள் தரப்பட்டுள்ளன. முதலில் பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் வரும் அனைத்துச் சொற்களுக்குமான தொடரடைவு. இதில் திருக்குறளும் அடங்கும். இதில் பாடலில் குறிப்பிட்டுள்ள சொல்வரும் அடி மட்டுமே தரப்படும். அடுத்தது திருக்குறளுக்கு மட்டும் தனியாக ஒரு தொடரடைவு தரப்பட்டுள்ளது. இதில் திருக்குறளில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும், அவை இடம்பெறும் முழுக்குறள்(கள்) தரப்படும். ஆனால் இங்கு சொற்பொருள், இலக்கணக்குறிப்பு ஆகியவை இல்லை.
பத்துப்பாட்டு நூல்கள் பத்தினுக்கும் சேர்த்துத் தனியாக மேற்கண்ட தொடரடைவு, சொற்பொருள், இலக்கணக்குறிப்பு ஆகியவற்றோடு தரப்பட்டுள்ளன. இவை தொடரடைவுக்கான Main Menu - வில் இடப்பக்கத்தில் சொல்வகுப்புத் தொடரடைவு என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளன. இதனைப் பத்துப்பாட்டுகுரிய சொற்களஞ்சியத் தொடரடைவு எனலாம். இது ஏன் சொல்வகுப்புத் தொடரடைவு (Word Class concordance) என அழைக்கப்படுகிறது என்பதுவும் அப் பகுதியிலேயே விளக்கப்பட்டுள்ளது.
இதனை விளக்கக் கொடுத்த சந்தர்ப்பத்துக்காக அனைவருக்கும் மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

Innamburan S.Soundararajan

unread,
Feb 22, 2015, 12:11:14 AM2/22/15
to mintamil
தமிழ் தென்றல் திரு.வி.க. கேட்டு மகிழ்ந்து அணிந்துரை எழுதிய நூல். அடுத்து வந்த சொ.வி. யின் & பாண்டியராஜாவின்  மடல்களையும் படித்தேன், த.ம.அ. வுக்கு உகந்த மடல் இழை இது.
எனக்கு பாடமும் ஆனது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Feb 22, 2015, 12:26:49 AM2/22/15
to mint...@googlegroups.com
மிகவும் நன்றி அய்யா! உங்கள் வலைதளம் sangamconcordance.in மிகவும் அற்புதம்..

I visited this today to look for words which are supposedly dual language based (example Arasu அரசு).
thanks again
rnkantan

Pandiyaraja

unread,
Feb 22, 2015, 4:45:02 AM2/22/15
to mint...@googlegroups.com
Thank you very much, Sir. The credit goes to Mr.vinaitheerththaan.
P.Pandiyaraja

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 22, 2015, 10:51:24 AM2/22/15
to mintamil
வணக்கம்.
முன்பே தங்களது வலைத்தளம் பற்றி அறிந்திருந்தாலும், இன்றுதான் சென்று பார்க்க நேரம் கிடைத்தது.  மிகவும் அருமை.  உலகு, உலகம், உலகத்து, உலகத்தார் இச்சொற்களின் பயன்பாட்டை ஆராய்வதற்குப் பெரிதும் துணையாகத் தங்களது வளைத்தளம் அமைந்துள்ளது.

மிக்க நன்றியுடையேன்.
அன்பன்
கி.காளைராசன்

Rathinam Chandramohan

unread,
Feb 24, 2015, 1:58:41 AM2/24/15
to mint...@googlegroups.com
Great Going Mintamil. Nice interactions. Amazing Sharing. With mintamil any thing is possible

Have a great Day. An Evening away from Greatness

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Reply all
Reply to author
Forward
0 new messages