தொடங்குகிறேன்.
கோவிலூர் ஆதீனத்தின் மூன்றாவது மடாதிபதியாகச் சீர் வளர் சீர்
சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி சுவாமிகள் அருளாட்சி செய்து வ்ந்த காலம்.
பிள்ளையவர்களிட்ம் ப்யின்று வந்த தேவகோட்டையைச் சார்ந்த வ்ன்றொண்டர்;
என்ற சின்னையச் செட்டியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஐயரவர்களுடன்
நகரத்தார் வாழ்ந்து வந்த செட்டி நாட்டுக்குப் பிள்ளையவ்ர்கள் வந்தார்.பிள்ளையவர்
களுக்கும் கடன் சுமை அதிகமாக இருந்தபடியால் செட்டி நாட்டிலுள்ள தலங்கள் சில
வற்றிற்கு உரிய தலபுராணங்களை எழழுதினால் செட்டி ம்க்கள் ந்லல முறையில்
பெருமைப் ப்டுத்துவார்கள் என்றெண்ணிப் புராணங்களை எழுதச் செய்தார்கள்.அவரும்
சூரை மாநகர்ப் புராணம்,வீரவனப் புராணம்,க்ண்டதேவிப் புராணம்,கோவிலூர்ப் புராண்ம்
முத்லியவ்ற்றை எழ்தியதில் ரூ.5000.கிடைத்தது.அவர் கடனும் தீர்ந்தது.கோவிலூர்ப்
புராணத்தை எழுதியமைக்கு உரிய அன்பளிப்பாக ரூபாய் ஆயிரம் வ்ழ்ங்கப் பெறற்து.
இதுதான் கோவிலூர்ப் புராணம் தோன்றிய வரலாறு.முத்லில் புராணத்தின் உரை நடை
யினைத் தருகின்றேன்.
காப்பியக் க்விஞர.நா.மீனவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்பன்
கி.காளைராசன்

முனைவர் காளைராசன்,சந்தோஷமான தகவலைத் தந்திருக்கின்றீர்கள். உங்களுக்கும் டாக்டர் வள்ளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
--
சமிவனச் சேத்திர மான்மியம்.
இதுதான் கோவிலூர்ப் புராணத்தின் வடமொழிப் பெயர்.சமி என்பதன் பொருள் வன்னி மரம் என்பர்.வன்னி மரங்கள் நிறைந்த
காடு என்பதால் இதனை வன்னி வனம் என்றனர்.இன்றும் இங்கே வ்ன்னி மரங்களை அதிக அளவில் காணலாம்.பின் நாளில்
இங்கு வீரபாண்டியன் என்ற ம்ன்னன் ஈசனுக்கு ஒரு சிறு கோவில் கட்டினான்.அதனால் இது வீரபாண்டிய புரம் என்ற பெயராலும்
அழைக்கப்பட்டது.வயல்கள் அதிகமாக இருந்தமையால் கழனி வாசல் என்றும் அழைக்கப் பட்டது.பாண்டிய மன்னர்களுக்கு உரிய ஏழகப் படைகள் ஏழு பெருந்தெருக்களில் இங்கு இருந்தமையால் ஏழகப்பெருந்தெரு என்றும் வழங்கப் பட்டது.பின்னாளில்
கோவிலூர் ம்டாலயத்தையும் பெரிய கோவில் ஒன்றையும் ஆண்டவர் என்று அழைக்கப் பட்டு வந்த முதல் ம்டாதிபதியான
முத்துராமலிங்க தேசிகர் கட்டிய காரண்த்தால் இது கோவிலூர் என்ற பெயரைப் பெற்றது.
நகரத்தார்கள் ஆதியில் ஏழு கோவிற் பிரிவினராக இருந்தனர்.பின்னர் சில காரணங்களால் ஒன்பது பிரிவினர் ஆகினர்.இன்றைய
நாளில் நகர்த்தார்.திருமண வீடுகளில் எழுதும் இசைகுடிமானம் என்ற பதிவுப் புத்தகத்தில் ஒன்பது கோவில்களுக்குள் அடங்கிய
மாற்றூர்க் கோவிலார்,வயிரவன் கோவிலார்,ஆகியோர் முறையே கேரள சிங்க வளநாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீர
பாண்டியபுரத்தில் என்றும்,கேரள சிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டிய புரத்தில் என்றும் எழுதி வரும் வழக்கம் இன்றும் உள்ளது.கோவிலூரின் வட பகுதியில் ஏழகப் பெருந்திரு விண்ணகரம் என்ற பெயரில் ஒரு பெருமாள் கோவில் சிதைந்த நிலையில் உள்ளது.ஏழைபெண் ஒருத்திக்காக நெல்லைக் காத்தமையால் நெல்காத்த நாயகி என்று அழைக்
கப் பெற்றாள்.வட மொழியில் சாலிவாடீஸ்வரி என்ற பெயரால் குறித்தனர்.பின்னாளில் ம்க்கள் திருநெல்லை நாயகி என்ற.
பெயரால் அழைக்கத் தொடங்கினர்.
y, October 11, 2013 8:49:12 AM UTC+5:30, meenavan2 wrote:
அன்புள்ள சுபா அவர்களே
நான் முன்னர்க் குறிப்பிட்டிருந்தது போல் கோவிலூர்ப் புராண வரலாற்றை எழுதத்
தொடங்குகிறேன்.கோவிலூர் ஆதீனத்தின் மூன்றாவது மடாதிபதியாகச் சீர் வளர் சீர்
சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி சுவாமிகள் அருளாட்சி செய்து வ்ந்த காலம்.
பிள்ளையவர்களிட்ம் ப்யின்று வந்த தேவகோட்டையைச் சார்ந்த வ்ன்றொண்டர்;
என்ற சின்னையச் செட்டியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஐயரவர்களுடன்
நகரத்தார் வாழ்ந்து வந்த செட்டி நாட்டுக்குப் பிள்ளையவ்ர்கள் வந்தார்.பிள்ளையவர்
களுக்கும் கடன் சுமை அதிகமாக இருந்தபடியால் செட்டி நாட்டிலுள்ள தலங்கள் சில
வற்றிற்கு உரிய தலபுராணங்களை எழழுதினால் செட்டி ம்க்கள் ந்லல முறையில்
பெருமைப் ப்டுத்துவார்கள் என்றெண்ணிப் புராணங்களை எழுதச் செய்தார்கள்.அவரும்
சூரை மாநகர்ப் புராணம்,வீரவனப் புராணம்,க்ண்டதேவிப் புராணம்,கோவிலூர்ப் புராண்ம்
முத்லியவ்ற்றை எழ்தியதில் ரூ.5000.கிடைத்தது.அவர் கடனும் தீர்ந்தது.கோவிலூர்ப்
புராணத்தை எழுதியமைக்கு உரிய அன்பளிப்பாக ரூபாய் ஆயிரம் வ்ழ்ங்கப் பெறற்து.
இதுதான் கோவிலூர்ப் புராணம் தோன்றிய வரலாறு.முத்லில் புராணத்தின் உரை நடை
யினைத் தருகின்றேன்.
காப்பியக் க்விஞர.நா.மீனவன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கோவிலூர்ப் புராணம் தொடர்ச்சி
இறைவன் திருநாமம் கொற்றவாளீசர் என்பதாகும்.வ்டமொழியில் ராஜகட்க பரமேஸ்வரர் என்றழைத்தனர்.இது கோவிலூரைப்
பற்றிய முன்னுரை.புராண வரலாற்றை நாம் இனித் தொடரலாம்.தற்காலச் செய்திகளைப் பின்னர்க் காணலாம்.
புராணம் தோன்றக் காரணம்:-திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை அறியாதார் த்மிழ்
நாட்டில் யாரும் இலர்.இந்தத் தலைமுறை எப்படியோ எனக்குத் தெரியாது.ஏடுகள் பலவற்றைத் தேடி எடுத்துச் சங்க நூல்களை
யும்,வேறு பல தமிழ் நூல்களையும் நமக்களித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்கள் என் சரித்திரம் என்ற நூல் வழியாகவும்,
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற நூல் வழியாகவும் அவர் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.அதன்
மூலம் ஐயரவர்கள் பிள்ளையவர்களுடன் செட்டி நாட்டுப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிய வ்ருகின்றது.
செட்டி நாட்டில் உள்ள தேவகோட்டை என்னும் நகரைச் சார்ந்த வன்றொண்டர் எனற சின்னைய செட்டியார், பிள்ளை அவர்க
ளிடம் மாணாக்கராய் இருந்தபோது செட்டி நாட்டுப் பகுதிக்கு வ்ருமாறு அழைத்தார்.அதனை ஏற்றுப் பிள்ளையவரகளும் செட்டி
நாட்டுக்குப் பயணம் ஆனார்கள்.அவ்வாறு அவர் வந்த செய்தி அறிந்த நகரத்தார் பெருமக்கள் அன்புடன் வரவேற்றனர்.(இங்கே
குறிப்பிட்டுள்ள சின்னைய செட்டியார் அவர்களிடம் பண்டிதமணி கதிரேசச் செட்டியார்,சித்தாந்தச் செல்வர் காரைக்குடி இராம.
சொக்கலிங்க ஐயா,என்னுடைய ஐயா புலவர் கூத்தலூர் இராமநாதச் செட்டியார் ஆகியோர் தமிழ் பயின்றனர்.)அப்பொழுதுதான்
நகரத்தார் பெருமக்களின் வேண்டுகோட்படி சூரை மாநகர்ப் புராண்ம்,வீரவனப் புராணம்,கண்டதேவிப் புராணம் முதலியவற்றை
இயற்றினார்.கோவிலூர் வேதாந்த மடத்தின் மூன்றாம் மடாதிபதியான் சீர வளர் சீர் சிதம்பர ஞான தேசிகர் என்ற கருணாநிதி
சுவாமிகளின் வேண்டுகோட்படி கோவிலூர்ப் புராணம் தோன்றியது.சீர வளர் சீர் சிதம்பர ஞான தேசிகர் அதற்கு அன்பளிப்பாக
ஆயிரம் ரூபாயை வழங்கினார்கள்.இனி உரைநடை வ்ழியாகப் புராணத்தை அறிவோம்.உரைநடை வ்ரலாறு முடிந்த பின்னர்,
பிள்ளையவர்களின் செய்யுள்களைக் காண்போம்.
இப்புராணத்திற்கு மூலம் வடமொழியிலுள்ள ஸ்காந்த புராணம்.வடமொழிப் புராணத்தைத் தமிழில் உரைநடை வ்டிவாக்கியவர்
திருவிடை மருதூர்ப் பிச்சு சாஸ்திரிகள்.இதன் அடிப்படையில்தான் பிள்ளையவர்கள் புராணத்தை இயற்றினார்கள்.இனி உரை நடை வ்டிவினைக் காண்போம்.(மணிப்பிரவாள ந்டையை மாற்றித் தூய ந்டையில் தரப்படுகிறது)
சமிவனச் சேத்திர மான்மிய வசனம்
பாயிரம்
துன்பங்கள் அனைத்தையும் நீக்குகிற விநாயகரையும்,ஞான குருவான சண்முகப் பெருமானையும்,சத்திய ஞானானந்த வ்டிவி
னராய்,முழுமுதற் பொருளாய் விளங்குகின்ற் திரிபுவனேசுவரரையும்(கொற்றவாளீசரின் மற்றொருபெயர்)பேரின்ப வ்டிவின
ளாயும்,வேண்டுவார்க்கு வேண்டியன தருபவளாயும்,பேராற்றல் உடையவளாயும்,உலகம் அனைத்திற்கும் தாயாகவும் விளங்கு
கின்ற திரிபுவனேஸ்வரியையும்(திருநெல்லை) இவர்களின் அடியவர்களையும் மனம்,வாக்கு,காயங்களால் வணங்குவாம்.
இனி ஆறு சங்கிதைகளை உடையதாய் இலட்சம் சுலோகங்களோடு விளங்கும் ஸ்காந்த புராணத்தில் முதலாவதாக விளங்கும்
சனற்குமார சங்கிதையில் சேத்திர காண்டத்தில் உள்ள வன்னி வன மான்மியத்தைச் சூத முனிவர் நைமிசாரணியம் என்ற
வனத்தில் வசிக்கின்ற முனிவர்களுக்குக் கூறியபடி நான் என் புத்திக்குத் தோன்றிய அளவில் தமிழில் சொல்லுகின்றேன்.
பாயிரம் நிறைவுற்றது.
வணக்கம் ஐயா.மின்தமிழுக்குத் தங்களது நல்வரவால் அருள்மிகு திருநெல்லை உடனாய திருக்கொற்றவாளீசர் புராணம் படிக்கும் பேறு கிடைக்கப் பெற்றோம்.
தாங்களும் தங்களது குடும்பத்தினரும்,தங்களை மின்தமிழுக்கு அழைத்து வந்த அருமை அன்பர் திரு.வினைதீர்த்தான் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும்அருள்மிகு திருநெல்லை மற்றும் கொற்றவாளீசர் திருவருளால் எல்லா நலன்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.அன்பன்கி.காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
என் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.
ஒரு முறை தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால் இந்த புராண நூல் பற்றிய விவரங்களை காப்பியக் கவிஞரை பேசச்செய்து ஒலிப்பதிவு பேட்டி ஒன்று செய்து தாருங்கள். தீபாவளிக்குப் பிறகு.
--
அகத்தியர் சைமினி முனிவருக்கு வீரபாண்டியன் பெருமை உரைத்த பகுதி
முற்காலத்தில் சமிவ்னத்தில் இருக்கின்ற தேனாற்றங்கரை என்ற மதுபுட்கரணி தீரத்தில் மதுப்பிரியர்
என்னும் மகா முனிக்கு நான்முகனால் இந்த்ப் பரசிவ ஞானம் உபதேசிக்கப் பட்டுள்ளது.இதன் பொருள் யாதென்று நம்மை வீர
பாண்டியன் என்ற அரசன் கேட்க நாம் அதனை அவனுக்குச் சொல்லி இருக்கின்றோம்.அதனை இப்போது உனக்குச் சொல்லுகிறோம்.
இந்தச் சமிவனத்திற்குத் தெற்கே இரண்டு யோசனை தொலைவில் பிரகார மாட மாளிகையினால் அலங்கரிக்கப் பட்டதாய்
அனைத்துச் செல்வங்களும் நிறைந்ததாய் பலவிதமான் ம்ரங்களுடன் பூக்களால் அலங்கரிக்கப் பட்டதான காளையார் கோவில்
என்றும் காளியபுரம் என்றும் அழைக்கப்படும் ஒரு சிவத்தலம் உள்ளது.
கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி
அச்சிவப் பதியில் பெரு வலிமை உடையவனும்,கையிலே வில்லுடையவனாயும் பகைவர் பலரை வென்றவனாகவும் சிவபக்தி காரணமாகச் சிவவழிபாட்டில் மேம்பட்டவனாகவும் அனத்து உயிர்களிடத்து எப்பொழுதும் கருணை உடையவனாய,முத்துமாலை,பவளமாலை,உருத்திராக்க மாலைகளோடு விபூதி அணிந்தவனாய் உள்ள மன்னன் ஒருவன் வீரபாண்டியன் என்ற பெயருடன் விளங்கி வந்தான்.
அம்மன்னன் காளீசுவரர் (காளையார் கோயிலில் உள்ள சுயம்புலிங்கம்) அருளால் மிகச் சிறந்த ஒரு வாளைப் பெற்றான். அவ்வாளினால் அனைத்துப் பகை அரசர்கள் அனைவரையும் வென்றபடியால் அவ்வாளுக்குக் கொற்றவாள் என்ற பெயர் வந்தது.பொன்மயமான உறையில் போடப்பட்டு விளங்கும் கொற்றவாள் என்னும் அந்த வாளை அரசன் எவ்விடம் சென்றாலும் கைவிடாமல் அணிந்து கொண்டிருந்தான்.
ஒரு சமயத்தில் அம்மன்னன் வேட்டையில் விருப்பம் உடையவனாய்க் கத்தி,அம்பு,வில் ஆகிய ஆயுதங்களோடு உடும்பின்
தோலால் மறைக்கப்பட்ட வலிய கவசம் உடையவனாய்க் குறைந்த எண்ணிக்கையிலான சேனைகளோடு வேடர்கள் வழி காட்ட வனத்திற்குள் சென்றான்.
பனை,பலா,மா,மகிழ்,இலுப்பை,அரசு,முருக்கு,பாதிரி,நாவல்,விளா,புன்னை,கருங்காலி,இலந்தை,வில்வம்,தாணி,நாரத்தை,
எலுமிச்சை,மந்தாரை,வேம்பு,தாழி,அலரி, நொச்சி முதலான பல்வகை மரங்கள் நிறைந்ததாய்,தேன் குடித்த வண்டுகள் இசை பாட,சிங்கம்,புலி முதலான வனவிலங்குகள் பலவற்றை உடையதாய்,சிங்கத்தால் பிளக்கப் பட்ட யானையின் மத்தகத்தில்
இருந்து சிதறிய முத்துக்களை உடையதாய்,கோரைக் கிழங்கிற்காகப் பன்றியால் பறிக்கப்பட்ட பூமியை உடையதாய்ப் பெரிய
பாம்புகள் சுற்றித் திரிய மிகவும் அச்சம் தருகின்ற அக்காட்டில் வேட்டைக்கு வேண்டிய பலவிதமான கருவிகளுடன் புகுந்து,
ஆங்காங்கே வ்லைகளைக் கட்டிப் பள்ளங்களையும் உண்டாக்கிச் சேனைகளின் மூலம் அம்மிருகங்களை வெருண்டோடச் செய்து வரும்போது புலி,கரடி,பன்றி,எருமை,மான் முதலான விலங்குகள் பேரொலியுடன் நான்கு திசைகளில் இருந்தும் கிளம்பி ஓடின.
அப்போது அந்த அரசன் வேட்டையாடுவதில் விருப்பமுற்று நாணில் பூட்டப் பெற்ற அம்புடன் வலை,பள்ளங்களில் அகப்பட்ட
விலங்குகளைத் தானே கொன்று, தன் சேனைகளுடன் வெகு நேரம் வேட்டையாடி வரும்போது மிக்க வேகத்துடன் கூடிய அழகான மான் ஒன்று ஓடக் கண்டான்.
அந்த மானைக் கொல்லும் எண்ணம் உடையவனாய்த் தான் ஒருவனாகவே துரத்தும் போது, அந்த மானும் அஞ்சி ஓடியது. சில
பொழுது கண்ணுக்குத் தெரிந்தும், சில பொழுது மறைந்தும் ஓடி அந்த அரசனை வஞ்சித்துக் காட்டிற்குள் இழுத்துக் கொண்டு
போனது. அவ்வாறு செல்லும் போது முன் செய்த புண்ண்ணியப் பயனால் சமிவனம் என்னும் தலத்தை அடைந்தான். அங்கே
பார்க்கும் பொழுது தூய நீருடையதாய், அனைத்துப் பாவங்களையும் போக்குவதாய், மங்களகரமாய் விளங்கும் மதுபுட்கரணி
என்னும் தீர்த்தத்தைக் கண்டான்.அத்தீர்த்தத்தில் நீராடித் தினசரிக் கருமங்களை முடித்துப் பழம் முதலியனவற்றை உண்டு,
அத்தண்ணீரை அருந்தி, அங்கே தழைத்து வளர்ந்திருந்த ஒரு மர நிழலில் துணியை விரித்து அதில் படுத்துச் சுகமாக நித்திரை
செய்தான்.
அனைத்துச் சக்தியுடையவரும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுபவருமான பரமேசுவரன் அவ்விடத்தில் நித்திரை செய்யும் பக்தனான வீரபாண்டிய மன்னனது இதயத்தில் உள்ள பக்தியையும்,வீரம் முதலியவற்றையும் சோதிக்க
--

///இது உண்மையான புராணமா அல்லது யாரோ ஒருவர் மனதில் எழுந்த கற்பனையா?///
புலி பேசியது என்பது போன்ற விளக்கங்கள் கொடுக்கப்படும் படைப்புகள், குழந்தைகளை நன்னெறி படுத்துவதற்காக சொல்லப்படும் ஐவகை சூழ்ச்சி கதை வகைகளைச் சார்ந்தவை என்பதில் ஐயமில்லை.
இதுபோன்ற படைப்புகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உண்டு.
ஆனால் அந்த முக்கியத்துவம் தலவரலாற்றிலோ, வழிபாட்டு ஆற்றுப்படுத்தலிலோ நிச்சயமாக அல்ல.
படைப்பு படைக்கப்பட்ட காலத்தில் சமுதாயத்தில் மக்களின் நிலை என்ன? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? மக்களின் சிந்தனை எந்த வழி சென்றது? இது போன்ற படைப்புகளினால் மக்களுக்கு சொல்லப்படும் செய்தி யாது? அதன் விளைவு எவ்வாறாக எதிர்பார்க்கப்பட்டது என்பது போன்றவற்றை அறிந்து கொள்ளவது மட்டுமே கவனிக்கப் பட வேண்டியவையாக எனக்குத் தோன்றுகிறது. . இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பதால் அக்கால நிலையைப் படம் பிடிக்கிறது. அக்கால தலபுராணமோ, இக்கால காஞ்சிப்பெரியவர் போன்ற ஆன்மீக வாதிகளின் வரலாறோ கல்வெட்டுகள் போன்று கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை.
இவை படைக்கப்பட்ட நோக்கத்தையும் மீறி அறியத் தருவது நமது பண்பாட்டின் ஒவ்வொரு காலநிலை நடைமுறைகளை, சிந்தனைகளை. பக்தியுடன் வழிபட ஒரு மணித்துளி மனதில் வாங்கினாலும் போதுமானது இல்லாவிட்டாலும் தன்னை வணங்காதவர்களை தண்டிப்பது கடவுளின் பண்பாக இருப்பதற்கு நியாமில்லை. அது இக்கால அரசியல்வாதிகளின் பண்புகளை கடவுளின் மீது ஏற்றுவது. இலக்கியத்தின் கலை அழகையோ, காலவரலாற்றையோ மட்டும்தான் நான் கருத்தில் கொள்வதால் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளேன்.
அன்புடன்
..... தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கோவிலூர்ப் புராணம் 12 அத்தியாயங்களை உடையது.
கோவிலூர்ப் புராணம் - தொடர்ச்சி(5 ஆம் அத்தியாயம்)
இப்படிப் பலவாறு மன்னன் வீரபாண்டியன் பலவாறு இறைவனைத் துதித்துப் போற்றினான்.பக்திப் பரவசத்தில் மூழ்கி இருக்கும் போது,அநேக கோடிச் சூரிய ஒளியுடன் குளிர் பிறையை முடியில் தாங்கி ம்லைமகள் உடனாக விடையில் ஏறி நான்கு கரங்களோடு
நீல கண்டமுடையவராய் மூன்று கண்களோடு கங்கையைத் தலையில் தாங்கியவராய்க் கருணைக் கடலான பரமசிவன் அங்கிருந்த
பெரிய இலிங்கத்தில் இருந்து அவன் கண் காண வெளிப்பட்டு,வேந்தனே! உன்னுடைய வீரத்தையும் நம்மீது கொண்ட பக்திப் பெருக்
கையும் சோதிக்கும் பொருட்டு நம்முடைய மாயாவ்லிமையினால் ஒரு புலியை உண்டாக்கினோம்.அப்புலி ஓர் அந்தணனைக் கடிக்குமாறும் செய்தோம்.அவனைக் காப்பாற்ற நீ வ்ரும்போது உன்னுடைய கொற்றவாளையும் மறைத்தோம்.இதோ அந்த உடை
வாள்,நீ எடுத்துக் கொள்க என்று கூறி அவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்தான்.கொற்றவாளைப் பெற்றுக் கொண்ட
வேந்தன்,இறைவனை வண்ங்கிப் பெருமானே! உமது கையால் என்னுடைய கொற்றவாளை யான் அடைந்தமையால் இன்று முதல்
கொற்றவாளீசர் என்ற பெயருடனும் வன்னி மரத்தடியில் உம்மைத் தரிசித்தமையால் இத்தலத்திற்கு வன்னி வனம் என்ற பெயரு
டனும் விளங்கி அருள் பாலிக்க வேண்டும் என்று வணங்கி வேண்ட,இறைவனும் அவ்வாறே ஆகுக என்று கூறி அந்த இலிங்கத்துள்
மறைந்தான்.அன்று முதல் இறைவன் கொற்றவாளீசர் என்ற பெயரும்,அத்தலத்திற்கு வன்னி வனம் என்ற பெயரும் விளங்கி வரு
கின்றது.
அதன் பிறகு வீரபாண்டியன் கொற்றவாளீசரைப் பன்முறை வணங்கி,அங்குள்ள மரஞ்செடி கொடிகள் அனைத்தையும் வெட்டிச்
சுத்தம் செய்து பூமியைச் சமமாக்கி புதிய பெரிய கோபுரங்களோடு கூடிய சிவாலயத்தை உண்டாக்கி அதற்கான பெரும் பொருள்க
ளையும் அளித்தான்.