"ஞான பீடம்" அமர்ந்த
கவிப்பேரரசு அவர்களுக்கு
எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
கவிதை எனும்
மயில் பீலி குத்திக்கிழித்தா
இந்த கும்மிருட்டுகள் தொலந்து போகின்றன?
என்று வியந்திருக்கிறேன்.
சொற்களைக் கொண்டே
சொற்களில் கூர் தீட்டிய
ஒளி அம்புகள் அல்லவா
உன்னுடயவை?
உன் எந்தக்கவிதையை
முகர்ந்து பார்த்து அதில்
முகிழ்த்து வரும்
ஆயிரம் கவிதைளின்
பதியம்தனை நாம் உணர்வது?
சினிமாப்பாட்டுகள் எனும்
கொச்சையான உலகத்துள்ளும்
கோஹினூர்களை
கொட்டி கொட்டித்தந்தவன் நீ!
உன் சிகரத்தில்
இந்த வானங்களால் இன்னும்
முட்ட முடியவில்லையே!
ஒரு உயிர்ப்பின்
ஒரு சிலிர்ப்பின்
மகரந்தங்கள் உதிர்ந்த தருணங்கள்
அந்த இசையா?
உன் எழுத்துக்களா?
இந்த பட்டி மன்றம் முடியவே
முடியாது.
ஏனெனில் இதில்
"நின்று" கொண்டிருக்கும்
நீயே ஒரு மொத்தமான
இலக்கியத்தராசு!
.உன் தமிழ் ஒளியே
எங்கள் கவிதைகளின் வெளிச்சம்.
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
__________________________________________________
சொற்கீரன்