தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்.. (கவிதை) வித்யாசாகர்!

16,528 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
May 24, 2015, 4:46:20 PM5/24/15
to தமிழ் சிறகுகள், பகலவன், மின்தமிழ், தமிழ் பிரவாகம், தென்றல், பண்புடன், தமிழ் அமுதம், தமிழுலகம், வித்யாசாகர் முகநூல் குழுமம், வல்லமை, Gulf_tami...@yahoogroups.com, முத்தமிழ்
"தாத்தா"
இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து
முளைத்தது தான்
எங்களின் மூன்று தலைமுறையும்..

ஊரெல்லாம் சுற்ற
எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு
எங்களின்
தாத்தாவின் தோள்களும்
நடந்தோடும் கால்களும் தான்..

அம்மா அடித்தாலும்
அப்பா  அடித்தாலும்
ஓடி ஒளியவும்
கண்ணீர் துடைக்கவும்
தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு
முதல் முந்தானையாக இருந்தது..

விலை மலிந்து கிடைக்கும் 
பழைய பழமும்
நிலக்கடலையும்
முருக்கும்
உடைந்த ஓட்டடையும்
அவர் வாங்கிவந்ததைவிட
சுமந்துவந்ததே நெஞ்சில் மிட்டாயாய்
இனித்துகிடக்கும்..

வானில் ஒருகோடி நட்சத்திரமென்று
கடலில் குமரியே கவிழ்ந்ததென்று
நடந்துப்பார் உலகம் மிக சிறியதென்று
கண்களைமூடி - 
எதையோ காற்றிலிருந்து பறித்ததுபோல்
சொன்னாலும்
அதைப்பற்றியெல்லாம் எங்களை
அன்றே யோசிக்கவைத்த ஆசான்
எங்களுக்கெங்க தாத்தாதான்..

எம்ஜிஆரை தெரியும்
சிவாஜி என் சிநேகிதன்
முதலமைச்சரெல்லாம் என்னிடம்
தொலைபேசியில் பேசுவாங்கடா என்று
நாளுக்கு நான்குமுறை வாய்கூசாது
புருடா விட்டாலும் -
எங்களுக்கு முதல் ஹீரோன்னா அது
எங்கப்பாவை நின்றுமிரட்டும்
எங்க தாத்தா மட்டும்தான்..

ரயில்வண்டி ஓட்டி தெருக்கடைக்கு போக
பனங்காயில் கொம்பு சொருகி -
ஊரெல்லாம் உருட்ட
குளத்தில் மீன்பிடிப்பதை -
தோளில் உட்கார்ந்துப் பார்க்க
வாயிலேயே வண்டிசெய்த விஞ்ஞானி 
எங்க தாத்தாவாகத் தானிருக்கும்..

சட்டையை இழுத்துவிட்டு ஓடிவிடுவதும்
தலையில் கொட்டிவிட்டு -
கீழே அமர்ந்துக்கொள்வதும்
கால்கழுவ அவர் குளத்தில் இறங்குகையில்
வெளியிலிருந்து நாங்கள் கல்லெறிவதும்
எல்லா எங்களின் சேட்டைகளுக்கும்
தெத்துப்பல் பட்டையாய் தெரியஅவர் சிரிப்பதும்,
வீட்டின் கட்டுப்பாட்டுச் சங்கிலி அவிழ்த்து
ரோட்டில் கைவீசி நடக்க எங்களுக்கு
சுதந்திரத்தை வாங்கித் தந்ததும்
எங்க தாத்தா மட்டும்தான்..

வெள்ளையாய் உடுத்தி
செருப்பில்லாக் கால்களை எங்களுக்காகவே
தேய்த்து
ஊரெங்கும்
எங்களின் கனவுகளை
அவருடையப் பார்வையில் சுமந்து நடந்தவர்
எங்க தாத்தா..

அவரின் வெள்ளிமுடிதான்
எங்களுக்கு தங்க இருப்பு போல,
 
அவரின்
தோலில் விழுந்த சுருக்கங்கள்தான்
எங்களுக்கு
வரையாது கிடைத்த ஓவியம்  போல,
 
அவருடைய
தொங்கும் கை சதையில்
ஆம்ஸ் அழுத்திப் பார்த்துதான்
நாங்கள் கராத்தே கற்கவே
முதல்சீட்டு வாங்கினோம்,

கதர் நெய்த வயதிலிருந்தே
அவர் கண்ணாடி போடாதவர்,
மாத்திரை போடாமலே 
கடைசிவரை மிடுக்கோடு நடந்தவர்,
தொன்னூற்றி ஐந்து வருடகாலத்தை
மிக கம்பீரமாய்
வாழ்ந்துத் தீர்த்தவர்;

எங்கள் வீட்டின் தேசியக்கொடியாய்
நாங்கள் அதிகம் பறக்கவிட்டதுகூட
எங்களுடைய
தாத்தாவின்
கொடியில் காயும் 
கோமணத்தைத் தான்..

இன்று அது
வெறுமனே
காற்றில் பறந்து பறந்து ஒரு ஓரத்தில்
ஆடிக்கொண்டிருக்கிறது,
எங்க தாத்தா -
எடுக்க மறந்து விட்டுச்சென்ற
அவருடைய தோள்துண்டைப் போலவே
எங்களையும் விட்டுச்
சென்றுவிட்டார்.,

போன கையோடு திரும்ப 
வருவேன்னுச் சொன்னவர் 
வராமலேப்
போய்விட்டார்.,

சேதிகேட்டு 
காற்றில் விளக்கனைந்ததைப்போல
வீடு -
இருட்டாகிவிட்டது.,

இடிவிழுந்த 
மரத்தைப்போலவே 
மனம் 
பிரிவில் 
கருகி போகிறது.,

பொசுக்கென ஜோடிப்பறவையை 
சுட்டதைப்போல 
எல்லோரும் தனித்தனியே 
நின்று அழுகிறார்கள்.,

அப்பா போயிட்டாரே என்று
என் அப்பா அழுகிறார்,
அப்பா போயிட்டாரே என்று
என் அம்மாவும் அழுகிறாள்,
அப்பா போயிட்டியேன்னு இங்கே
நிறையப் பேர் அழுகிறார்கள்,
 
தாத்தா நீ போயிட்டியேன்னு என்னால்
நினைக்கவே முடியவில்லை
அழையழையாய் மட்டும்
வருகிறது..
அழையழையாய் மட்டும்
வருகிறது..
--------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

N. Ganesan

unread,
May 24, 2015, 5:13:22 PM5/24/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, May 24, 2015 at 1:46:20 PM UTC-7, வித்யாசாகர் wrote:

அருமை, கவிஞரே!


தாத்தா நீ போயிட்டியேன்னு என்னால்
நினைக்கவே முடியவில்லை
அழையழையாய் மட்டும்
வருகிறது..
அழையழையாய் மட்டும்
வருகிறது..

’அலையலையாய்’  என இருக்கணுமோ?

நா. கணேசன்

Gopalan Venkataraman

unread,
May 24, 2015, 11:33:52 PM5/24/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai
சில குடும்பங்களில் 'தாத்தா' 'பாட்டி' இவர்களின் அருமை புரியாமல் போயிருக்கலாம். ஆனால், இன்னமும் நம் நாட்டில் தாத்தா பாட்டி உறவு இனிய நினைவுகளைக் கொடுக்கக்கூடியவைகளே. கவிதையைப் படித்து தாத்தாவுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் அதுவே தாத்தாக்களுக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும். நெஞ்சத்தை ஊடுறுவும் நல்லதொரு கவிதை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

Pasupathi Selvam

unread,
May 25, 2015, 7:45:55 AM5/25/15
to mint...@googlegroups.com
எல்லாருக்கும் தாத்தா அருமையாக இருக்க முடியுமா. தாத்தாக்களும் நாளடைவில் கொஞ்சம் tired ஆகிவிடுகிறார்கள்.
Especially if you are a "Molcolm in the middle" you get less fondling and attention.
எல்லாம் அந்த மூத்ததுகளுக்கெ?! ஹூம்!

Pasupathi Selvam

unread,
May 25, 2015, 7:46:01 AM5/25/15
to mint...@googlegroups.com
அழுகை அழுகையாய் வருகிறது.

வித்யாசாகர்

unread,
May 26, 2015, 11:48:28 AM5/26/15
to வல்லமை, mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள்
நன்றி ஐயா..,  பிரிவில் துடித்துக் கிடக்கையில் இலக்கணம் தேடவில்லை மனம். அதொரு; மனவலியில் எல்லாம் மறந்து குழந்தையாய் வெம்பி அழை அழையாய் வருவதை முன்வைக்கும் மனநிலை அவ்வளவுதான்..

வித்யாசாகர்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!
Reply all
Reply to author
Forward
0 new messages