1. குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 1461 -1465: இலக்குவனார் திருவள்ளுவன்

6 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 23, 2026, 4:29:05 PM (24 hours ago) May 23
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ       அகரமுதல    இலக்குவனார் திருவள்ளுவன்      24 May 2026      



குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள்

நூலாய்வு: 1.

சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை.

இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டதுடன் ‘பெரியார் வாழ்க(தமிழ் வாழ்க, இந்தி ஒழிக)’ என்று தம் குறிப்பேட்டில் எழுதினார்.

இவரின் முதல் கவிதையே “பெரியார் வாழ்க” என்பதுதான். இஃது அப்போது தி.மு.க. தீவிர ஏடாக இருந்த நாத்திகம் இதழில் வந்தது. திராவிட இயக்க இதழான விடுதலை, பகுத்தறிவு, தமிழரசு, பெரியாரியம், மாணவமணி, தமிழ் சூரன், வெற்றி முரசு, முதலியவற்றிலும் எழுதி வந்தார். மேலும், தமிழிய-திராவிடப் பொதுநிலை இதழ்களான தமிழ் இலெமூரியா, அன்புப்பாலம், எழுகதிர், மீண்டும் கவிக்கொண்டல், கண்ணியம், கனிமொழி, குயில், ஏழைதாசன், தாழம்பூ, சமுதாயமுரசு, கிறித்துவர் குரல், மாந்தன், வாழ்வியல் முன்னேற்றம், ஆத்திமாலை, கதம்பம், தினமணி முதலியவற்றிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். இலங்கை இதழ்களான வீரகேசரி, சுதந்திரன், தீப்பொறி ஆகியவற்றிலும் இவரின் எழுத்தோவியங்கள் வந்துள்ளன. இப்போதும் இதழ்களில் எழுதி வருகிறார்.

இந்நூலுக்கான அணிந்துரையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“ஆசிரியர் தோழர் வை.மு.கும்பலிங்கன் அவர்கள், பகுத்தறிவாளர், விடுதலை உட்பட பல ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதி வரக்கூடியவர். அவரிடம் மொழி ஆய்வும் மொய்த்துள்ளது என்பதை இந்த நூலின் வழி அறிய முடிகிறது. … தோழர் வை.மு.கும்பலிங்கனின் இந்த நூல் முதலாவதாக ஏடுகள் இதழ்கள் நடத்துவதற்குப் பெரும் துணைவன் என்றே சொல்ல வேண்டும்.” என்கிறார்.

மதிப்புரையில் தமிழ்த்தேசியத் தலைவர் பழ.நெடுமாறன்,

“தமிழைப் பிழையில்லாமல் எப்படி எழுத வேண்டும் என்பதை நன்கு விளக்கும் இந்நூலை மாணவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் இதழாசிரியர்களும் படித்துப் புரிந்து கொண்டால், எழுத்தாக்கங்களும் இதழ்களும் பிழையற்ற தமிழில் வெளிவரும்.” என்கிறார்.

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அணிந்துரையில்,

“சொல்லின் மூலமான வேரின் வழி நின்றல்ல – சொல்லில் மறைந்துள்ள பொருளின் துணை கொண்டு தன் சொல்லாய்வினைக் கும்பலிங்கனார் நிகழ்த்துகிறார்….. இன்றமிழ்ச்சொல் காணல் மட்டுமின்றி – சொற்புணர்ச்சிப் பிழை களைதல், நேரிய சொற்பயன்பாடு கூறல் ஆகியனவும் இடம் பெற்றுள்ளமை இந்நூலின் சிறப்பாகும்.” என்கிறார்.

ச.மெ.மீனாட்சிசுந்தரம், பதிப்புரையில்,

“தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு புலவருக்கும் பேராசிரியருக்கும் மேம்பட்ட அளவில் சொல்லாய்வுச் செய்திகளைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வருகிறார் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்; செயற்பாடும் ஆகும். நாம் நம் அன்றாடவாழ்வில் பல சொற்களைப் பேசியும் எழுதியும் பயன்படுத்தி வருகிறோம். நாம் அவற்றைப் பொருள் புரியாமலும் காரணம் தெரியாமலும் பேசி  வருகிறோம் என்பதுதான் பேருண்மை. எனினும் நூலாசிரியர் நாம் அன்றாடம் பேசிப் பயன்படுத்தி வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் காரண காரியத்தோடு தரும் விளக்கம் அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது.இதன் பொருள் அறிய அறிஞர் துணை தேவையில்லை. அவர் விளக்கும் பாங்கும் எழுதிச் சொல்லும்,எழுதிச் செல்லும் பாங்கும் மிக மிக எளிமையாக உள்ளது.” என்கிறார்.

மீண்டும் கவிக்கொண்டல், சமுதாய முரசு, விடுதலை-ஞாயிறு மலர், மூவேந்தர் முரசு, குயில், தாழம்பூ, வண்ணப்பூங்கா, ஆத்திமாலை, மார்த்தாண்டம் மாலை, எழுகதிர், கிறித்தவர் குரல், கனிமொழி, ஏழைதாசன், தமிழ் இலெமூரியா, தெய்வத்தமிழ்த்தேன், மாந்தன், வெற்றி முரசு முதலிய பல இதழ்களில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 1461 -1465: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ        அகரமுதல       இலக்குவனார் திருவள்ளுவன் 
     24 May 2026      



(வெருளி நோய்கள் 1456 -1460: தாெடர்ச்சி)

வெருளி நோய்கள் 1461 -1465

  1. நிகழமைவுக் காட்சி வெருளி – Magnufraterphobia
    மெய்ம்மைக்காட்சி எனப்படும் நிகழ்வதை உள்ளவாறு காட்டும் நிகழமைவுக் காட்சி(reality television show) குறித்த அளவுகடந்த பேரச்சம் நிகழமைவுக் காட்சி வெருளி.
    உள்ளதை உள்ளவாறு காட்டுவதுதான் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நோக்கம். எனினும் பலவும் முன்னதான ஆயத்த ஒத்திகைக்குப் பின்னர் அங்கேறும் நாடகமாகத்தான் உள்ளன. எனவே, மெய்ம்மைக்காட்சி என்று அழைக்க விரும்பவில்லை.
    இலத்தீனில் Magnus = பெரிய என்றும் frater = உடன்பிறந்தான் என்றும் பொருள். எனவே, magnufraterphobia என்பதன் நேர் பொருள் பெரியண்ணன் குறித்த வெருளி என்பதுதான்

00

  1. நிகற்ப எண் வெருளி – Decemteraphobia
    நிகற்ப எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிகற்ப எண் வெருளி.
    நிகற்பம் என்பது 1,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்.
    00
  2. நிகற்ப நிகற்ப எண் வெருளி – Exaphobia
    நிகற்ப நிகற்ப எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நிகற்ப நிகற்ப எண் வெருளி.
    நிகற்ப நிகற்பம் என்பது 10,00,00,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்.
    ‘நிகற்பம் = அர்த்தம்’ என இப்பொழுது குறிக்கப் பெறுகிறது. கோடி கோடி என அடுக்கில் கூறுவதுபோல் நிகற்ப நிகற்பம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. நள்ளெண் என்றுகூடச் சொல்லலாம் என எண்ணுகிறேன்.
    00
  3. நிசான் வண்டி வெருளி – Nissanphobia

நிசான் வண்டிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நிசான் வெருளி.
பன்னாட்டு உந்து நிறுவனமான நிசான் பொறியுந்து நிறுவனம்(Nissan Motor Co., Ltd.) சுருக்கமாக நிசான் என அழைக்கப்பெறுகிறது.
00

  1. நிஞ்சா வெருளி > கரவு ஆமை வெருளி – Ninjaturtlephobia
    புனைவுருவான நிஞ்சாக் கடலாமை/ கரவு ஆமை (Ninja Turtles) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நிஞ்சா வெருளி.
    கரவாமை என்று சொன்னால் மறைக்காமை என வேறு பொருளாகும். எனவே, ஒளித்தலையும் மறைத்தலையும் குறிப்பதால் கரவு ஆமை என்பதே சரி.
    நின் என்னும் சப்பானியச் சொல் மறைந்திருந்து தாக்கும் தற்காப்புக்கலையைக் குறிக்கிறது. சா என்னும் சப்பானியச் சொல் ஆள் என்பதைக் குறிக்கிறது. நின்+சா=நிஞ்சா. கரத்தல் என்பது மறைத்தலைக் குறிக்கும். எனவே கரவு நிலை ஆமையைக் குறிப்பதற்குக் கரவு ஆமை எனலாம்.
    00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages