paari chezhian
unread,Jan 14, 2011, 12:23:56 PM1/14/11Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to tamil...@googlegroups.com, Neduchezhian T. Chezhian, Sakya group, mint...@googlegroups.com, dalitco...@googlegroups.com, Bhahujan Students, Buddhis...@yahoogroups.com, bliac...@yahoo.com, Keetru e-Journal, jeyamoha...@gmail.com, Kavitha Muralidharan, mumbai tamil dot com, Aiswarya Rao, tamilbloggersunit, uyirmmai *, விருத்தி கல்வி மேம்பாட்டு குழு, விடுதலைச் சிறுத்தைகள், veer...@gmail.com
முதல் மொழிப்போர்
முதல் களப்பலி
நடராசன் உயிர் நீத்த சனவரி 15
மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழகத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரில் (1938) ஈடுபட்டு ஜனவரி 15 ,1939 தமிழ் மொழி காப்பிற்காக முதல் உயிர்த்தியாகம் செய்தவர் எசு.நடராஜன் என்னும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.அவருக்கு அடுத்தே மார்ச் மாதம் 11 , 1939 இல் தாளமுத்து என்னும் தோழர் உயிர்த்தியாகம் செய்தார் இவர் இடைநிலை சாதியை சேர்ந்தவர். ஆனால் வரலாற்று ஏடுகளில் பெயர் சூட்டலில் "தாளமுத்து நடராஜன் " என்று தாளமுத்து முன்பாகவும், நடராஜன் இரண்டாவதாகவும் மோசடியாக எழுதப்படுகிறது. ஆனால் இது 1960 பிறகு நடந்த மோசடிதான். அதற்கு முன் "நடராஜன் -தாளமுத்து" என்றே வழங்கிவந்த இந்த கூட்டு அடையாளம். இடைநிலை சாதி வெறியர்களால் நடராஜனின் பெயரை இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கி தள்ளியுள்ளது . அதை எந்த சாதி ஒழிப்பு, சாமத்துவ, சுயமரியாதை தமிழ்தேசியம் .. பேசுற எவனும் கேட்கவில்லை.
சென்னை வள்ளலார் நகரை அடுத்துள்ள மூலகொத்தளம் இடுகாட்டில் உள்ள அவர்களது நினைவு சின்னத்தில் "நடராஜன் -தாளமுத்து" என்றுதான் இன்றும் இருக்கிறது. ஆனால் தி மு க அரசு எழுப்பியுள்ள அரசு மாளிகை ஒன்றுக்கு "தாளமுத்து -நடராசன்" என்ற பிழையான வரிசையில் பெயர்சூட்டி
ஒரு உண்மை தியாக வரலாற்றை மோசடி செய்து விட்டது.
தமிழ், தமிழ்தேசியம், சாதி ஒழிப்பு ,சுயமரியாதை,சமதர்மம் ..பேசுகிற கட்சிகளும் வாய்பொத்தி வேடிக்கைதான் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் .....
பாரி செழியன்