ஊழல் என்றால் என்ன? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

361 views
Skip to first unread message

இம்சை அரசு

unread,
Feb 3, 2014, 11:40:38 AM2/3/14
to mint...@googlegroups.com, vallamai
ஊழல் என்றால் என்ன என்று தெளிவாக வரயறுக்க நமக்கு ஊழலியல் என்ற தர்ம ரீதியான விஞ்ஞான ரீதியான ஊழல் அறிவுவளம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமா?

ஊழல் என்றால் என்ன?

லஞ்சம் என்றால் என்ன? அதிலும் ல்ஞ்ச லாவண்யம் என்று சொல்லுவது எதைக் குறிக்கும்?

கையூட்ட்டு என்றால் என்ன?

சாம பேத தான தண்டம் என்ற நால்வகைக் குடிமைசார் நடைமுறைகளில் தானம் என்பது லஞ்சமா?

சொல்லுங்க சாமி சொல்லுங்க எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

இம்சை அரசு

Megala Ramamourty

unread,
Feb 3, 2014, 8:51:20 PM2/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

//ஊழல் என்றால் என்ன என்று தெளிவாக வரயறுக்க நமக்கு ஊழலியல் என்ற தர்ம ரீதியான விஞ்ஞான ரீதியான ஊழல் அறிவுவளம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமா?//


அவசியம் மட்டுமல்ல…காலத்தின் கட்டாயமும் கூட. உடனே உங்களுக்குத் தெரிந்த (நேர்மையான!) நீதிபதி யாரிடமேனும் இதுபற்றிப் பேசுங்கய்யா பேசுங்க. உங்களுக்குப் புண்ணியமாப் போகும். :-)


//ஊழல் என்றால் என்ன?//

ஊழ் என்பதற்கு முறை, விதி, பழவினை என்று பலபொருளுண்டு.

ஊழ்+அல் = ஊழல். ஊழ்(முறை) அல்லாதவைகளே ஊழல் ஆகும். அதாவது, முறை தவறிய, விதி மீறிய செயல்களே ஊழல் எனக் கூறலாம்.


இலஞ்சம் = ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக உயர் அதிகாரியிடமோ வேறு மனிதர்களிடமோ முறைகேடாகப் பணம் அல்லது பொருள் அளிப்பதே இலஞ்சம் என்று இதுநாள் வரை சொல்லப்பட்டு வருகின்றது.


லாவண்யம் என்றால் அழகு. இங்கே லஞ்சத்தோடு லாவண்யத்தைச் சேர்த்திருப்பது அதை பகடி செய்யவே; வஞ்சப் புகழ்ச்சி (புகழ்வதுபோல் இகழ்வது) என்று வைத்துக்கொள்ளுங்களேன்.


//கையூட்டு என்றால் என்ன?//

கையூட்டு = கை+ஊட்டு > கையிலே ஊட்டுவது என்றால் அது பெரும்பாலும் பணமாகவோ அல்லது பொருளாகவோதானே இருக்கமுடியும்! எனவே இலஞ்சத்திற்கான மாற்றுச் சொல்லாகக் கையூட்டைக் கருதலாம்.


//சாம பேத தான தண்டம் என்ற நால்வகைக் குடிமைசார் நடைமுறைகளில் தானம் என்பது லஞ்சமா?//

சாம தான பேத தண்டோபாயம் என்று எதிரியைப் பணியவைக்க நான்கு விதமான உபாயங்கள்/வழிகள் (சாணக்கியரால்?) சொல்லப்பட்டுள்ளன.


சாமம் – சமாதான வழியில், அன்பான வார்த்தைகளால் எதிரியைப் பணிய வைத்தல்.


தானம் – சாமம் பயன்படவில்லையானால் தானமாக (இலஞ்சம்தான்…சற்றே நாகரிகமாகத் தானம் என்கின்றனர்.) அவர் விரும்பும் பொருளைக் கொடுத்து வசப்படுத்துவது.


பேதம் – அந்த நபரை தம் கூட்டத்திலிருந்து பேதப்படுத்தி, ஒதுக்கிவைத்துப் பணியவைத்தல். (சினிமாவில் வரும் நாட்டா(ண்)மைகள் பெரும்பாலும் இதைச் செய்வதைப் பார்த்திருக்கலாம்.)


இதுவரைக் கையாளப்பட்டு வந்த அன்பான அணுகுமுறைகள் மாற்றம் பெற்று அடக்குமுறை ஆரம்பமாவது பேதத்திலேயே தெரியவருகிறது.


தண்டம் – தண்டித்தல். (தடி, உருட்டுக்கட்டை எது வசதியோ அதைப் பயன்படுத்தலாம்). :-)

அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவார்களோ?? (தேமுதிக தலைவருக்குப் பிடித்ததும் இந்த அணுகுமுறையே என்பதை இந்த மன்றத்தில் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.)

 

’நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை நம் எதிரியே தீர்மானிக்கிறான் என்ற ‘மாவோ’வின் பொன்மொழியும் இப்ப ஞாபகத்துக்கு வருதுங்க பேராசிரியரே!


அன்புடன்,

மேகலா



2014-02-03 தேமொழி <them...@yahoo.com>:

 

////சாம பேத தான தண்டம் என்ற நால்வகைக் குடிமைசார் நடைமுறைகளில் தானம் என்பது லஞ்சமா?////

பலன் எதிர்பார்க்காமல் வழங்குவது தானம்/தர்மம் செய்வது என்று சிறு வயதில் சொல்லிக் கொடுத்தார்கள்.

தர்மம் தலைகாக்கும் என்று வழங்குவதும்
சொர்க்கம் கிடைக்கும் என்று செய்யும் தானமும் இந்த அடிப்படை வரையறையை உடைக்கும் பொழுதே நான் குழம்பிப் போகிறேன். 

a Good Samaritan is a charitable or helpful person (with reference to Luke 10:33) என விவிலியம் சொல்வதிலோ
கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்று கீதை சொல்வதிலோ என்னால் வேறுபாடு காண இயலவில்லை.

ஆனால் அதில் தனக்கு ஏதோ  நன்மை வரும் என்ற தன்னலம் கலக்கிறது, அப்பொழுது எனக்கு அதன் மேல் உள்ள மரியாதை போய் விடுகிறது.


ஊழல் என்றால் என்ன?
தேனை எடுக்கும் பொழுது புறங்கையை நக்குவது ஊழல்; சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் கமிஷன் அடிப்பது.

லஞ்சம் என்றால் என்ன?/கையூட்ட்டு என்றால் என்ன?
விலையற்ற உதவி செய்து வேறுலகச் சொர்க்கமோ, இவ்வுலக ஆட்சியோ பெற நினைப்பது கையூட்டு/லஞ்ச லாவண்யம், இது தானமே அல்ல.

குழந்தை ஓட்டப்போடிட்யில் முதலில் வந்தால் கோப்பை தருவது தகுதியைப்  பாராட்டி  ஊக்கப் படுத்தக் கொடுக்கும் பரிசு.
குழந்தையிடம் அமைதியாய் இருந்தால் ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேன் (எனக்குத் தேவையானதைச் செய்தால்) என்பது லஞ்சம்

ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு, பள்ளிக் கட்டணம் கிடையாது என்பது கர்மவீரர் பொதுநல நோக்கில் வழங்கிய உதவி.
கல்வி, உணவு, உடை, மருத்துவம் என்பது போன்ற அடிப்படை உதவிகளை, அவற்றைப் பெற  இயலாதவர்களுக்கு வழங்கும் பலன் கருதா நோக்கு அது.
அதற்கு அவர் கண்ட பலன் அவர் தொகுதியிலேயே அவர் தோற்றது <<< ஐயா சாமீ இங்கே தர்மம் தலை காக்கலீங்களே.
:-((

இக்கால கழகக் கட்சிகள் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் விலையற்ற உதவிகளைச் செய்வது தானத்தில் எப்படி அடங்கும்? தானம்/ தர்மம்/நன்கொடை என்ற போர்வையில் தரும் கையூட்டு.... லஞ்சம்.
காரியவாதிகள் தருவது.
நேற்று இலக்குவனார் திருவள்ளுவன் கொடுத்த செய்தியில் தாய்ஆடு ஒதுக்கிய குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்! செய்வதே உண்மையான தானம்.


..... தேமொழி


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

K. Loganathan

unread,
Feb 3, 2014, 9:44:27 PM2/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பர்க்ளே

நல்ல கேள்வி. ஆராயப்பட வேண்டிய நல்லவோர் விசயம். ஆனால் சொல்லாராய்ச்சியிலேயே இது முடிந்து விடுமா? ஊழல் பெருகி வரும் காரணத்தை சொல்லாராய்ச்சி தந்து விடுமா?

முடியாது என்றே நினைக்கின்றேன். இங்கு கள ஆராய்ச்சி(field work) வேண்டும் ஊழல் செய்வோரைக் கண்டு யாதாவது ஓர் அணுகு முறை வழி அவர்கள் ஏன் ஊழல் செய்கின்றார்கள் என்பதை அறிய வேண்டும்

பல்கலைப் பேராசிரியர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி மாணவர்களை கள ஆய்வு செய்யும்படித் தூண்டலாம்.

பண்டை காலத்தில் இப்படிப்பட்ட விசயங்கள் புறப் பொருள் எனப்பட்டது. ஐயனாரிதனார் காலத்தில் களவாய்வு இருந்ததாகத் தெரிகின்றகின்றது, அதன் பிறகு புறத்திரட்டு போன்ற நூற்கள் எழுந்தாலும் கள ஆய்வு இல்லை, உலகம் ஒதுக்கப்பட மக்களை ஆய்வது இல்லாது போக, இலக்கியங்களே எல்லாவற்றிற்கும் மூலம் என்ற கருத்து பலகிட,  மக்களின் வாழ்க்கையை முறைப்படி ஆராயும் போக்கு இல்லாது போய்விட்டது

கதைகள் கூறி விளக்குவதே பண்பாடாகி விட்டது.

உலகன்


2014-02-04 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

Megala Ramamourty

unread,
Feb 3, 2014, 10:21:13 PM2/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//ஊழல் பெருகி வரும் காரணத்தை சொல்லாராய்ச்சி தந்து விடுமா?//

 ஊழலை ஒழிக்கச் சொல்லாராய்ச்சி நிச்சயம் பயன்படாது உலகன் ஐயா.
அந்தச் சொற்களின் ‘வேர்’ என்ன என்பதை விளக்கவே நான் என் மடலில் சிறிது சொல்லாராய்ச்சி செய்துள்ளேன்.

மிக ஆழமாக வேர்விட்டுவிட்ட இலஞ்சம் எனும் இந்த  நச்சு மரத்தை வேரோடு வெட்டி வீழ்த்துவதே இதற்கான ஒரே தீர்வு (கடினமான செயல் என்றாலும் கூட). இத்தகைய சமூகவிரோதச் செயல்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

இதனாலன்றோ,
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து’ என்றார் வள்ளுவப் பேராசான்.

//இங்கு கள ஆராய்ச்சி(field work) வேண்டும் ஊழல் செய்வோரைக் கண்டு யாதாவது ஓர் அணுகு முறை வழி அவர்கள் ஏன் ஊழல் செய்கின்றார்கள் என்பதை அறிய வேண்டும்//

ஐயா மன்னிக்கவேண்டும். ஆராய்ச்சி செய்து சீர்செய்யும் காலம் கடந்துவிட்டது. மனிதர்களிடம் பெருகிவிட்ட பேராசையும், குறுக்குவழியிலேனும் பணம் சேர்த்துப் பணக்காரர் ஆகவேண்டும் எனும் தன்னல எண்ணமுமே இதற்கெல்லாம் மூல காரணம் என்பது என் தாழ்மையான கருத்து.

அன்புடன்,
மேகலா


2014-02-03 K. Loganathan <k.ula...@gmail.com>:

N. Kannan

unread,
Feb 4, 2014, 1:58:42 AM2/4/14
to மின்தமிழ்
இம்சை அண்ணா!

போன சனிக்கிழமை விஜய் டிவி நேரடி ஒலிபரப்பு பார்த்து நட்டுக் கழண்டுவிட்டது. எவ்வளவு நேரம் விளம்பரத்திற்கு? தமிழகத்தில் தரம் என்பதோ தரக்கட்டுப்பாடு என்பதோ காணாமல் போய்விட்டது. உலகில் வேறெங்கும் காணாத அளவில் தரம் குறைந்துள்ளது. தரம் என்பதில் நாணயம் என்பதும் சேரும். மிக உயர்ந்த தத்துவங்கள் நிற்கும் நாட்டில் செயற்பாடு நிற்பதில்லை! இந்தியர்கள் மற்றவர் போல் மதங்களை உருவாக்காமல், ‘தர்மங்களின் வழி’ செயல்படுதலே மதவாழ்வு என்றனர். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பது ஔவை வாக்கு. அறன் ஏன் அங்கு நிற்கவில்லை?

ஊழல் என்பதை மிக நூதன வடிவில் கட்டமைத்து, அரசியலையாக்கி, மக்களைப் பங்குதாரர் ஆக்கி ஒரு புதிய மக்களாட்சி முறையை இந்தியா உருவாக்கி நடத்தி வருகிறது. இது சரியா? பிழையா? என்று தெரியவில்லை.

அறன் என்பது பொது நலத்தை முன்வைப்பது.
ஊழல் என்பது தன்னலத்தை முன்வைப்பது.

அறன் தூர நோக்கு.
ஊழல் கிட்டப்பார்வை.

இந்தியாவின் அளப்பரிய ஜனத்தொகை ஒரு பிரச்சனையா? தினம் இரண்டு முறை குளித்து, பூஜை புணஸ்காரமென இருக்கும் தமிழன் வீட்டுக்குப்பையை வெளியே கொட்டுவதற்குத்தயங்குவதே இல்லையே ஏன்? இதன் உளவியல் என்ன? எப்படி ரங்கநாதன் தெருக்காரர்கள் குப்பையைத்தெருவில் கொட்டிவிட்டு அதில் நின்று நிதானமாக சமோசா, டீ குடிக்க முடிகிறது. விலங்கு நிலைக்கு தாழ்ந்துவிட்டோமே என்ற உணர்வு கூட இல்லாமல், ‘எல்லாவற்றிற்கும் பழகிவிடும்’ மனப்பான்மை ஏன்?

எங்கே கோளாறு என்றே தெரியவில்லை. 2020-ல் இந்தியா முதல் உலகம் என்று கனவு காணச்சொல்கிறார் கலாம்.!

நா.கண்ணன்


2014-02-04 இம்சை அரசு <radius.co...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

K. Loganathan

unread,
Feb 4, 2014, 2:57:46 AM2/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
நின்னா மேகலா அவர்களே

 தங்கள கருத்டு'

//ஐயா மன்னிக்கவேண்டும். ஆராய்ச்சி செய்து சீர்செய்யும் காலம் கடந்துவிட்டது. மனிதர்களிடம் பெருகிவிட்ட பேராசையும், குறுக்குவழியிலேனும் பணம் சேர்த்துப் பணக்காரர் ஆகவேண்டும் எனும் தன்னல எண்ணமுமே இதற்கெல்லாம் மூல காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. 
//

இது தங்களது interpretation,  புரிதல். இந்த புரிதல் எந்த அளவிற்கு பிறரோடு ஒத்துப் போகின்றது?

இங்கு கள ஆய்வு போலத் தோன்றும் ஓர் கருத்தை தாங்கள் கூறி உள்ளீர். தவறு இல்லை, ஆயினும் இது துல்லியமான  கள ஆய்வு இல்லை, மேலும் பலரால் உடன்படக் கூடிய ஓர் கருத்துக் கணிப்பு இது என்றாலும், எப்படி இதனை விளக்குவது?. ஏன் இந்தியாவில் மிகப் பரவலாக இந்த ஊழல் பரந்திருக்கின்றது? ஏன் இது இப்பொழுது ஓர் பெரும் அரசியல் பிரச்சினை ஆகியுள்ளது?

ஏன் ஓர் இந்தியன் ஊழலிற்கு அடிமை ஆகின்றான? அவன் பண்பாட்டில் கல்வியில் வளர்ப்பு முறையில் இந்த பழக்கம் எப்படி  வந்து சேர்ந்தது?

இதன் மூலத்தை அறியாவிட்டால இந்த நோயை நம்மால போக்க முடியுமா? கடுமையான தண்டனை வேண்டிய மாற்றத்தைக்  கொண்டு வந்து விடுமா?

தூக்குத் தண்டணை கொலை வெறியை நிறுத்திவிட்டதா?

இன்றைய சூழ்நிலையில் இந்து பண்பாட்டில் கள ஆய்வு என்பது சிந்திக்க முடியாத ஒன்றாகி விட்டது.

கள ஆய்வு ஏன் தேவை?

ஓர் சிறிய விளக்கம். நான் வளர்த்து வரும் ஆகமவுளவியலில் தருத் தேர்வு வழி கள ஆய்வு செய்கின்றோம் அதில் நான்கு தருக்கள் எழுதும் புது தருத் தேர்வில், 'கால அகலம்' என்றோர் உறுப்பு இருக்கின்றது.  சிலர் முன்னோக்கு நெடுங்காலத்தை தொட்டிருக்க, இன்னும் பல ஆண்டுகட்குப் பிறகும் தான் எவ்வாறு வாழவேண்டும் என்று ஓரளவு கணித்து வைத்திருப்பார்கள், சிலர் அப்படி அல்லாது நாளைக்கு என்ன செய்வோம் என்றே சிந்தியாது குறுகிய கால அகலத்தோடு இருப்பார்கள்,

இங்கு யார் நீண்ட கால அகலத்தோடு வாழ்கின்றார்க்ளோ அவர்கள் ஊழல் செய்தால் வரக்கூடிய கேடுகளை நினைத்து அவற்றைத் தவிர்ப்பர்.

ஆனால் குறுகிய கால அகலம் உடைய்வர்கள் அப்படியில்லாது ஊழல் பண்பாட்டிற்கு எழிதில் அடிமை யாகுவர்,

ஊழல் மிகவும் பரவி இருந்தாலும் இப்படிப்பட்ட களவாய்வு வழியாகத்தான் அதன் மூல காரணத்தைக் கண்டு பிடிக்க முடியும். மூல காரணத்தைக் கண்டு பிடிக்காது எப்படி நோயை சரி செய்வது?

ஒருவனின் கால அகலம் மிகவும் குறுகியதாக இருந்தால் நோயைத் தீர்க்கும் வழி கிடைக்கின்றது- தக்க பயிற்சிகள் கொடுத்து அவன் கால அகலத்தை நீட்டுவிப்பதே மருந்து.

இது ஓர் உதாரணம் தான். இதனால்தான் ஊழல் பல்கிவிட்டது என்பதில்லை, 

பண்பாட்டுச் சிதைவு போலி சமய வாழ்க்கை இறை நம்பிக்கை இன்மை என்றவாறு இன்னும் பல காரணங்கள் இருக்கலாம. தக்க கள ஆய்வில்லாது எது தான் என்று நம்மால அறிய முடியாது சிக்கலையும் தீர்க்க முடியாது என்றுதான் கூற வருகின்றேன்

உலகன்

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Feb 4, 2014, 4:06:51 PM2/4/14
to mint...@googlegroups.com, vallamai
"இளைதாக முள்மரம் கொல்க"

இது கொட்டை எழுத்துக்களில் "காவல் நிலயங்களில்" தொங்க விடப்பட வேண்டியவை தான்.வீடுகளில் "அடியாத மாடு படியாது" என்று கையும் கம்புமாக திரிந்த பெற்றோர்கள் யுகம் 50 கள் வரைக்கும் இருந்தது.இன்னும் சில இடங்களில் இருக்கலாம்."நீராரும் கடலுடுத்த.."என்ற பாடும்போதே பிரம்புகள் கூட உள்ளே பிரம்மமாய் ஒளிந்திருக்கும் பள்ளிகளும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம்.

எனக்கு எழுகின்ற கேள்வி இது தான்.விதைத்ததே முளைக்கும்.நாம் ஏன் இந்த 
பத்து கை நாலு கை கடவுள்களின் கையில் நிறைய ஆயுதங்களைப்படைத்து
முள் மரம் வளர்த்தோம்.படைக்கும் கடவுளே முள் இல்லாத ரோஜாவை படைக்காமல் விட்டிருக்கலாம்.மனிதன் ஜெனடிக் இஞ்ஜினீயரிங்கில் (மரபணு இயக்கவியல்) முள் இல்லாமல் மற்ற நிறத்து ரோஜாக்களையும் படைக்க ஆரம்பித்திருக்கிறான்."எல்லாருக்கும் எல்லாம் வேண்டும்" என்று "வேண்டுதல் வேண்டாமை"யின்றி எல்லா கடவுட்களும் கூறியபோதும் அதற்கும் ஏன் ஆயுதங்கள் தேவைப்பட்டன.பாருங்கள் பங்காளி தர்மத்துக்கே கிருஷ்ணன் பாஞ்சு வந்து "பாஞ்ச ஜன்யம்" முழங்க வேண்டியிருக்கிறது.குருஷேத்திரத்துக்கு
குங்குமும் பொட்டும் வைத்து கும்பிட்டவர்கள் பொது உடைமை என்று வரும்போது குலம் கோத்ரம் வர்ணம் என்று முள்வேலி போட்டுக் கொண்டார்கள்.அதற்கு முள் விதைகளை விதைக்கும்போதே பார்த்து விடுவது 
நல்லது என்றும் வள்ளுவர் எண்ணியிருப்பார்.முளைத்து விட்ட இளஞ்செடிகளிலும் அது தெரிய வாய்ப்பில்லை.குத்தும்போது தான் அது குத்தட்டமா வெத்தாட்டமா என்று தெரிகிறது.

இளைதாக என்பதை சிந்தனையின் பின்னோட்டமாகவே (ரெட்ரோஸ்பெக்டிவ் இன்டர்பொலேஷன்)சென்று பார்த்தால் நிறைய உணமைகள் விளங்கும்.வள்ளுவர்சொல்லுவதும் அந்த நச்சு விதைகளை ஊன்றாமல் இருப்பதே நல்லது என்பதைத்தான்.இப்போது நாம் பார்க்கும் காழ்த்த சிந்தனைகள் நம் முள் மண்டிய மனப்போக்குகளால் ஆனவை தான் .அர்ஸ்டாட்டில் மனிதனை சமுதாய மிருகம் என்றார்.இந்த மிருகங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த 
வந்த மதங்களே வெறுமனே வெறியூட்டப்பட்டவையாக மைதானங்களில் வர்ணத்தோரணங்களோடு விழா நடத்திக்கொண்டிருக்கின்றன.ஊழலின் அந்த மூக்கணாங்கயிறுகள் அறுந்து போய் விட்டன.பார்ப்போம்.இவையும் அடங்கும்
காலக்கட்டங்கள் வரும்.

=========================================================ருத்ரா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Feb 4, 2014, 4:31:28 PM2/4/14
to mint...@googlegroups.com, vallamai
"முள் இல்லாத ரோஜாவை படைக்காமல் விட்டிருக்கலாம்."என்பதை
முள் இல்லாத ரோஜாவை படைத்து விட்டிருக்கலாம் என்று திருத்திக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

____________________________________ருத்ரா

On Monday, February 3, 2014 8:40:38 AM UTC-8, இம்சை அரசு wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages