தூயதமிழ் - பிற மொழிச் சொற்களை தவிர்க்க உதவும் செயலி

1,019 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 25, 2017, 8:38:55 PM6/25/17
to மின்தமிழ்
தூய தமிழ்

-- சிவதி
கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2017
 
ref: http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3658-karunchattai-jun-2017/33350-2017-06-24-01-45-52

https://play.google.com/store/apps/details?id=com.omtamil.tooyatamil&hl=en

[...]

நாட்காட்டியை வாங்கிப்பார்த்த மாணவன் ஒருவர் சொன்னாராம். ‘‘இந்த வருஷம் லீவு ஜாஸ்தி’’ என்று. இதில் வருஷம் என்பது சமஸ்கிருதம், லீவு என்பது ஆங்கிலம், ஜாஸ்தி என்பது உருது. எல்லாம் போக தமிழில் ‘‘இந்த’’ என்ற சொல் மட்டுமே நிற்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் சொற்களில் ஏராளமான பிற மொழிச் சொற்கள் நம்மை அறியாமலேயே கலந்துவிடுகின்றன. இதனை அடையாளம் கண்டு தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.

தூய தமிழ்ச்சொல் எனும் செயலி நமக்கு உதவும் google Play Store செல்லுங்கள். TooyaTamil என தட்டச்சுங்கள். செயலியை தரவிரக்கம் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு ஐயமான தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்து இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்தலாம்.

பொதுவாக, கிரந்த எழுத்துகள் கலந்த சொற்கள் தமிழ் சொற்களாக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான சொற்களோ அல்லது பொருள் தெரியாமல் வழக்கத்தில் பயன்படுத்தும் சொற்களோ இருக்குமானால் நேராக இச்செயலியில் தட்டச்சு செய்து பார்க்கலாம்.

உயிர், மெய், கிரந்த எழுத்துகள் அடங்கிய விசைப்பலகையினை இச்செயலியில் அளித்துள்ளனர். இதில் தொடு தேர்வு மூலமே சொற்களை வடிவமைத்து அதற்கிணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறியலாம்.

நீண்ட நெடு நாள்களாக தமிழ்ச்சொற்களென நாம் நினைத்துப் பயன்படுத்தி வந்த பிற மொழி சொற்களை நாம் அடையாளம் காணவும் முடியும்

அடிக்கடி பயன்படுத்தும் சொற்களைச் சேமித்து வைத்து காண்பிக்கும் வசதி இதில் கொடுத்திருக்கிறார்கள். அர்த்தம், சந்தோஷம், இஷ்டம், சுலபம், தினம், நமஸ்காரம், புஷ்பம், ரதம், விஷயம் போன்ற சொற்களை நாம் மீண்டும் மீண்டும் நடைமுறையில் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். ஆனால் இவையாவும் தமிழ் சொற்கள் அல்ல.

அதற்கிணையான தமிழ்ச் சொற்களாக முறையே பொருள், மகிழ்ச்சி, விருப்பம், எளிது, நாள், வணக்கம், மலர், தேர், செய்தி எனத் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி நாம் நம்முடைய தாய்மொழியை செம்மைப்படுத்துவோம். 

[...]

Suba

unread,
Jun 26, 2017, 2:54:19 AM6/26/17
to மின்தமிழ்
அருமை.
நானும் தரவிறக்கிக் கொள்கிறேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

Prakash Sugumaran

unread,
Jun 26, 2017, 4:24:21 AM6/26/17
to mintamil
’நாசம்’ தமிழ் வார்த்தையா என தேடினால் பதில் சொல்ல மறுக்கிறது :-)

Innamburan S.Soundararajan

unread,
Jun 26, 2017, 4:26:17 AM6/26/17
to mintamil
நானும் தரவிறக்கிக் கொள்கிறேன்.
On Mon, Jun 26, 2017 at 1:54 PM, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
’நாசம்’ தமிழ் வார்த்தையா என தேடினால் பதில் சொல்ல மறுக்கிறது :-)

--

தேமொழி

unread,
Jun 26, 2017, 5:13:20 AM6/26/17
to மின்தமிழ்

On Monday, June 26, 2017 at 1:24:21 AM UTC-7, Prakash Sugumaran wrote:
’நாசம்’ தமிழ் வார்த்தையா என தேடினால் பதில் சொல்ல மறுக்கிறது :-)

நாசம் = அழிவு, கேடு.

தேவையானால் இணைப்பில் உள்ள நீலாம்பிகை அம்மையார் நூலையும் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள் 

 ..... தேமொழி 
Sanskrit_Tamil_Dictionary.pdf

Prakash Sugumaran

unread,
Jun 26, 2017, 5:32:54 AM6/26/17
to mintamil
நீலாம்பிகை அம்மையார் நூலையும் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள் //

அருமை. நன்றி! 

nkantan r

unread,
Jun 26, 2017, 5:48:46 AM6/26/17
to மின்தமிழ்
it is sanskrit root!

"ast" means existing (that is why aasthic for believer who accept that god exists; naastic is for people who believe that god does not exist);  naas means not existing or destroyed; so naasam is something destroyed!

without resorting to the app, the tooyatamil word, is அழிவு
regards
rnk

Prakash Sugumaran

unread,
Jun 26, 2017, 6:27:10 AM6/26/17
to mintamil
அஸ்திக - நஸ்திக என்ற வார்த்தைகளுக்கும் நாசம் என்பதற்கும் தொடர்பில்லை என்று தோன்றுகிறது.

அஸ்திகர் அல்ல என்பதே ’அந’அஸ்திகர். உதாரணம்: ஸூர - அஸூர; ஆர்ய  - அநார்ய; அஸ்யூ (or) வஸூ - தஸ்யூ; ஆர்ய - தார்ய; யஜ்யூ - தஜ்யூ; நாஸ் - விநாஸ்;

நாசம் - அழிதல்; கேடு என்பதே சரியாக பொருந்துகிறது.

ஹு-ஷாஹ்-ம் (hu-shah-m) என்ற உருது வார்த்தையில் இருந்து நாசம் உருவாகி இருக்கலாம்.

Husam (அரபு), Hassam (ஆங்கிலம்) ஆகிய வார்த்தைகளின் எதிர்பதமாக Nassam அமைந்திருக்கிறது.

தேமொழி

unread,
Jun 26, 2017, 6:41:23 AM6/26/17
to மின்தமிழ்

On Monday, June 26, 2017 at 2:48:46 AM UTC-7, nkantan r wrote:
it is sanskrit root!

"ast" means existing (that is why aasthic for believer who accept that god exists; naastic is for people who believe that god does not exist);  naas means not existing or destroyed; so naasam is something destroyed!

nasty மற்றும் aesthetic  என்பவற்றுடன்  தொடர்பிருக்க வாய்ப்புள்ளதா?

nasty :
noun
informal
noun: nasty; plural noun: nasties  an unpleasant or harmful person or thing.
physically or mentally damaging or harmful.
"a nasty, vicious-looking hatchet"

aesthetic:
late 18th century (in the sense ‘relating to perception by the senses’): from Greek aisthētikos, from aisthēta ‘perceptible things,’ from aisthesthai ‘perceive.’ The sense ‘concerned with beauty’ was coined in German in the mid 18th century and adopted into English in the early 19th century, but its use was controversial until late in the century.

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 26, 2017, 7:20:05 AM6/26/17
to mintamil

மிக்க மிக்க நன்றி.

iraamaki

unread,
Jun 26, 2017, 7:49:57 AM6/26/17
to mint...@googlegroups.com
சங்கதம்போல் பலுக்கும் காரணத்தாலேயே ஒருசொல்லைக் கேட்டவுடன் கண்ணை மூடிக்கொண்டு பலரும் குறிப்பிட்டசொல் சங்கதமென்ற முடிவிற்கு வந்துவிடுகிறீர்கள். ஆய்ந்துபார்த்தால் அப்படியிருக்கத் தேவையில்லை. நாம் இப்படித்தொலைத்த தமிழ்ச்சொற்கள் ஏராளம். முதலிற் சங்கதத்திற்குத் தண்டனிடும் வழக்கத்தை நிறுத்துங்கள். (சங்கதம் படிப்பது வேறு. அதற்குத் தண்டனிடுவது வேறு.)
 
(நீலாம்பிகை அம்மையார் காலம் ஆய்வுதொடங்கிய காலம். அப்பொழுது தமிழ்ச் சொற்பிறப்பியல் அவ்வளவாக வளரவில்லை. எனவே பழைய பொத்தகங்கள் நல்ல தமிழ்ச்சொற்களையும் சங்கதமாய்க் காட்டலாம். எனவேதான் அவற்றை முதற்றொடக்கமாய்க் கொண்டு அதற்கப்புறம் வந்த ஆய்வுகளைப் பாருங்கள். காண்க: செந்தமிழ்ச் சொற்பிறப்பிடல் பேரகரமுதலி ஐந்தாம் மடலம் முதற்பாகம் பக். 392-393.) நாசத்திற்கு விளக்கம் அங்கே போட்டிருக்கும். நான் அதோடு என் விளக்கத்தையும் சேர்த்துத் தருகிறேன்.
 
நுல்>நுள்>நொள்>நொய்>நய்>நை>நசி>நாசம்
 
நொய்ந்து போனால் நோய்
நய்ந்து>நைந்து போனால் இற்றுப்போனது என்று பொருள்.
நசித்துப் போனது அழிந்துபோனது.
நாசம் = அழிவு.
”நாசமாய்ப் போ” என்றால் ”நசிந்து போ” என்று பொருள்.
 
மேலேயுள்ள சொற்களையொட்டி இன்னும் 50 தமிழ்ச்சொற்களையாவது என்னாற் தொடர்புச்சொற்களாய்ச் சொல்லமுடியும். அருள்கூர்ந்து பொறுமை கொள்ளுங்கள். தமிழுக்குள் தேடுங்கள். முத்துக்கள் கிடைக்கும். நம்மிடம் இருப்பதைத் தொலைக்காதீர்கள். பேசும் தமிழையே தொலைத்துவிட்டால் தமிங்கிலம் தான் முடிவில் தங்கும்.  அவரவரிடம் இருக்கும் தமிழ்ச் சொற்றொகுதியைக் கூட்டிக்கொள்ளுங்கள். இன்று 50 சொற்கள் தெரிந்தால் நாளைக்கு 51 ஆவது தெரிய முயலுங்கள். 100 நாளைக்கே வரட்டும் என்று நான் சொல்லவில்லை. மனமிருக்கவேண்டும். அவ்வளவு தான்.
 
அன்புடன்,
இராம.கி. 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jun 26, 2017, 7:52:18 AM6/26/17
to மின்தமிழ்
Very true mr sugumaran (sukumaran?)

i tried to play around the word अस्  अस्ति  आस्तिक    नाशम्  विनाशम्  ; but in the back of mind there is a vague idea about a prakrit quote about आश्  as to preserve; and so i linked up this to नाशम् ;  i am not able to recollect the passage or the context and google is not so good at catching prakrit roots

btw, i expected dev sir, or arizonan or ganeshan to pounce on me on linking अस्   and  नाशम् 

regards
rnkantan

nkantan r

unread,
Jun 26, 2017, 8:15:51 AM6/26/17
to மின்தமிழ்
though i am not a etymologist, either by interest or qualification, i see  many posts here to link words across languages; and i have also seen posts that boldy claim and quote that this is tamil and this is sanskrit; unless we can date these words and bring out unambgousoly the usage pattern and time we can not claim that a particular word is of sanskrit origin or tamil origin; there are many words or cross use;

what i have indicated is the usage prevalent in sanskrit ( i dont pay obeisance - தண்டனிடுவது - to either sankrit or tamil, they are just languagaes , one  is my mother tongue and the other a lanugage i am acquainted with since my infancy and i am not a well qualified linguist also!)  and you have shown how நசி>நாசம் exists in tamil;

i am sure you can clairify the pronunciation of நசி>நாசம் especially of சி - is it chi, si or shi;

suffix it to say that this word is in use in both tamil and sanskrit for a long time; if we can date them and find alternates before and after that time, then we can see how the word migrated

regards
rnkantan

On Monday, June 26, 2017 at 5:19:57 PM UTC+5:30, இராம.கி wrote:
சங்கதம்போல் பலுக்கும் காரணத்தாலேயே ஒருசொல்லைக் கேட்டவுடன் கண்ணை மூடிக்கொண்டு பலரும் குறிப்பிட்டசொல் சங்கதமென்ற முடிவிற்கு வந்துவிடுகிறீர்கள். ஆய்ந்துபார்த்தால் அப்படியிருக்கத் தேவையில்லை. நாம் இப்படித்தொலைத்த தமிழ்ச்சொற்கள் ஏராளம். முதலிற் சங்கதத்திற்குத் தண்டனிடும் வழக்கத்தை நிறுத்துங்கள். (சங்கதம் படிப்பது வேறு. அதற்குத் தண்டனிடுவது வேறு.)
 
(நீலாம்பிகை அம்மையார் காலம் ஆய்வுதொடங்கிய காலம். அப்பொழுது தமிழ்ச் சொற்பிறப்பியல் அவ்வளவாக வளரவில்லை. எனவே பழைய பொத்தகங்கள் நல்ல தமிழ்ச்சொற்களையும் சங்கதமாய்க் காட்டலாம். எனவேதான் அவற்றை முதற்றொடக்கமாய்க் கொண்டு அதற்கப்புறம் வந்த ஆய்வுகளைப் பாருங்கள். காண்க: செந்தமிழ்ச் சொற்பிறப்பிடல் பேரகரமுதலி ஐந்தாம் மடலம் முதற்பாகம் பக். 392-393.) நாசத்திற்கு விளக்கம் அங்கே போட்டிருக்கும். நான் அதோடு என் விளக்கத்தையும் சேர்த்துத் தருகிறேன்.
 
நுல்>நுள்>நொள்>நொய்>நய்>நை>நசி>நாசம்
 
நொய்ந்து போனால் நோய்
நய்ந்து>நைந்து போனால் இற்றுப்போனது என்று பொருள்.
நசித்துப் போனது அழிந்துபோனது.
நாசம் = அழிவு.
”நாசமாய்ப் போ” என்றால் ”நசிந்து போ” என்று பொருள்.
 
மேலேயுள்ள சொற்களையொட்டி இன்னும் 50 தமிழ்ச்சொற்களையாவது என்னாற் தொடர்புச்சொற்களாய்ச் சொல்லமுடியும். அருள்கூர்ந்து பொறுமை கொள்ளுங்கள். தமிழுக்குள் தேடுங்கள். முத்துக்கள் கிடைக்கும். நம்மிடம் இருப்பதைத் தொலைக்காதீர்கள். பேசும் தமிழையே தொலைத்துவிட்டால் தமிங்கிலம் தான் முடிவில் தங்கும்.  அவரவரிடம் இருக்கும் தமிழ்ச் சொற்றொகுதியைக் கூட்டிக்கொள்ளுங்கள். இன்று 50 சொற்கள் தெரிந்தால் நாளைக்கு 51 ஆவது தெரிய முயலுங்கள். 100 நாளைக்கே வரட்டும் என்று நான் சொல்லவில்லை. மனமிருக்கவேண்டும். அவ்வளவு தான்.
 
அன்புடன்,
இராம.கி. 

iraamaki

unread,
Jun 26, 2017, 8:59:23 AM6/26/17
to mint...@googlegroups.com
தமிழில் வல்லின மெய்களை ஒலிப்பது மிக எளிது. அவற்றிற்குக் கூடியதாய் 3 விதிகள்தாம் உண்டு.
 
சொல்லின் முதலில்  சகரம் வந்தால் அதை எப்பொழுதும் ch என்றுதான் பலுக்கவேண்டும்.  (சகடு = chahatu)
சொல்லின் இடையில் சகரத்திற்கும் முன்னும் பின்னும் உயிரொலிகள் (intervocalic) வருமானால் s என்றுதான் பலுக்கவேண்டும். (நசி = nasi)
சொல்லின் இடையில் சகரத்தின் முன்  இணைமெல்லொலி இருக்குமானால்  j என்றுதான்  பலுக்கவேண்டும்.  (நஞ்சு = nanju) (ஞ் என்பது ச் இன் இணை மெல்லொலி.)
 
இதேபோல் ககரத்திற்கும் மூன்று ஒலிப்புகள் உண்டு.
 
சொல்லின் முதலில்  ககரம் வந்தால் அதை எப்பொழுதும் K என்றுதான் பலுக்கவேண்டும்.  (கதிர் = kathir)
சொல்லின் இடையில் ககரத்திற்கும் முன்னும் பின்னும் உயிரொலிகள் (intervocalic) வருமானால் h என்றுதான் பலுக்கவேண்டும். (பகல் = pahal)
சொல்லின் இடையில் ககரத்தின் முன்  இணைமெல்லொலி இருக்குமானால்  g என்றுதான்  பலுக்கவேண்டும்.  (தங்கம் = thangam) (ங் என்பது க் இன் இணை மெல்லொலி.)
 
த், ப் என்ற மெய்களுக்கு இரண்டு ஒலிப்புக்களேயுண்டு. மேலே வருவதில் இரண்டாவது முறை கிடையாது.
 
ட் என்ற மெய்க்கு மூன்றாவது ஒலிப்பு மட்டுமே சொற்களின் இடையிலும், கடையிலும் வரும். டகரம் எந்தத் தமிழ்ச் சொல்லிலும் முதலில் வராது. தனியே இடுகையில் அதை T என்றே பலுக்கவேண்டும்.
 
ற் என்பது ஓரொலி மட்டும் தான்.

N. Ganesan

unread,
Jun 26, 2017, 9:30:00 AM6/26/17
to மின்தமிழ், vallamai

On Monday, June 26, 2017 at 4:52:18 AM UTC-7, nkantan r wrote:
Very true mr sugumaran (sukumaran?)

i tried to play around the word अस्  अस्ति  आस्तिक    नाशम्  विनाशम्  ; but in the back of mind there is a vague idea about a prakrit quote about आश्  as to preserve; and so i linked up this to नाशम् ;  i am not able to recollect the passage or the context and google is not so good at catching prakrit roots

This is clearly an Indo-European word, not Semitic, Dravidian etc.,

Proto-IE: *nek'-
Meaning: corpse; to die
Tokharian: A, B näk- (PT *näk-) 'destroy' (Adams 335)
Old Indian: náśyati, náśati `to be lost, perish, disappear', caus. nāśáyati, ptc. naṣṭá-; nāśa- m. `being lost, loss, disappearance'
Avestan: nasyeiti `verschwindet', ptc. našta- `verlorengegangen', nasu- Leichnam, Aas
Old Greek: nekró-s m. `Leiche, Leichnam, der Tote'; nekró- `tot', nékǖ-s, nachhom. nékü-s `id.'; {pl. nékes `труп, покойник' Hsch. - nowhere found!}, pl. nekádes `the dead' (AP, cf. EM), nō̂kar, -aros n. `Tötenschlaf'

N. Ganesan

nkantan r

unread,
Jun 26, 2017, 10:38:45 AM6/26/17
to மின்தமிழ்
நன்றி ஐயா ! இந்த உச்சரிப்பு விதிகள், எந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் -  (தொல்காப்பியம்? ) தந்தால் இன்னும் சிறப்பு.

1) பகல் எனும் சொல்லை (பல் -- ha   என்று சொல்ல வேண்டுமா, பல் ---ga என்று சொல்ல வேண்டுமா?)
2) நீங்கள் சொல்லியது:  "த், ப் என்ற மெய்களுக்கு இரண்டு ஒலிப்புக்களேயுண்டு. மேலே வருவதில் இரண்டாவது முறை கிடையாது" ;  இவ்வடிப்படையில் கதை எனும் சொல்லை -- kathai என்று சொல்ல வேண்டுமா?  kadhai என்று சொல்ல வேண்டுமா?   அதை,  இதை எனும் சொற்களை?
3) தாங்கள் மற்ற நிலைகளை  சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.
3அ ) முன்னால் அதே மெய்யும், பின்னால் உயிரொலியும் வருமானால்? (உ-ம்: கத்தி, பக்கம், அத்தை...)
3ஆ ) முன்னால்  வேறு மெய்யும், பின்னால் உயிரொலியும் வருமானால்? (உ-ம்: மெய்ளுக்கு, விட்டீர்ள்...)

regards
rnkantan

N. Ganesan

unread,
Jun 26, 2017, 10:51:51 AM6/26/17
to மின்தமிழ்

On Monday, June 26, 2017 at 7:38:45 AM UTC-7, nkantan r wrote:
நன்றி ஐயா ! இந்த உச்சரிப்பு விதிகள், எந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் -  (தொல்காப்பியம்? ) தந்தால் இன்னும் சிறப்பு.

1) பகல் எனும் சொல்லை (பல் -- ha   என்று சொல்ல வேண்டுமா, பல் ---ga என்று சொல்ல வேண்டுமா?)

pagal, piRagu, murugan, kazhagam, .... என்பது பிழை. தெலுங்கு-கன்னட உச்சரிப்பு அது.

நா. கணேசன்

பழமைபேசி

unread,
Jun 26, 2017, 1:35:31 PM6/26/17
to மின்தமிழ்
Very useful

nkantan r

unread,
Jun 27, 2017, 5:47:30 AM6/27/17
to மின்தமிழ்
நல்ல விடைக்கு காத்திருக்கிறேன்; 

ஏனென்றால், வரி வழியாக எப்படி உச்சரிப்பையும், உச்சரிப்பு  மாற்றங்களையும் (sa, cha, ja, ka, ga, pa, ba, ta, da, tha, dha..) காட்டவும், கற்றுத் தரவும் முடியும் எனத்தெரிய அவா!  மேலும்,  இங்கு தரப்பட்ட உச்சரிப்பு விதிகள் எங்கே  (தொல்காப்பியம், நன்னூல்?) தரப்பட்டுள்ளன என  அவ்விதி பாடங்களின் மூலமும், விளக்கவுரையும்  வேண்டும்.

ஆக  வரி வடிவம் இல்லாமல் முதலேயே ஸ, ச, ஜ ,  மற்றும் ப, த , க எனும் வல்லின எழுத்துக்களின் மாறுபட்ட பலுக்க முறைகளும் இருந்திருக்கின்றன; அப்படி இருக்கையில் கிரந்த எழுத்துக்கள் ஏன் "ச" க்கு மட்டும் உள்ளன;  "க, ப, த, ட"  க்களுக்கு இல்லை?

regards
rnkantan

iraamaki

unread,
Jun 27, 2017, 8:00:48 AM6/27/17
to mint...@googlegroups.com
நானெழுதியது ஒருசில முகன விதிகள் (main rules) மட்டுமே. இன்னும் சில நுணவ விதிகளும் (minor rules) உள்ளன.  அவற்றில் நீங்கள் கேட்ட சொற்களின் பலுக்கலைக் காட்டமுடியும். அவற்றை இற்றை மொழியியலார் (linguists) தொகுத்துக் காட்டியிருக்கிறார். மொமியியலாரைக் காட்டிலும் ஒலியியலார் (phoneticists)  சொல்வது இன்னும் முகன்மை. தமிழ் என்பது ஒலியன் வழியான மொழி.(phonemic language) ஒவ்வொரு எழுத்துக்கும் அடிப்படையொலியும் மாற்றொலிகளும் (allophones) உண்டு (காண்க “பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு” முனைவர் புனல் க.முருகையன். காந்தளகம் வெளியீடு 2010. பேரா. முருகையன் தமிழில் 100 ஒலிகளைக் காட்டுவார். வியந்துபோவோம்.) என்னைப்போன்ற அரைகுறைப் படிப்பாளி (நான் அடிப்படையில் ஒரு பொறிஞன். தமிழை ஆர்வத்தால் தொடுபவன்.) சொல்வதைக் காட்டிலும் மொழியறிஞர் சொல்வதே சரி.  
 
சூற்ற நூல்களான தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் நூற்பாக்களால் ஒலிப்புகள் பற்றி ஒரு தொடக்கமே கிடைக்கும். அவை ஆழமாய்ப் போகும் நூல்கள் அல்ல. அகலமாய் ஒரு மொழியின் இலக்கணம் சொல்லப் புகுந்தவை. அவற்றின் விரிவுரைகளை மொழியாளரே சொல்வழி தேடவேண்டும்.
 
இப்பொழுது திருவள்ளுவராண்டு பற்றிய கட்டுரைப்பணியில் ஆழ்ந்துள்ளேன். இதுமுடிந்தபின் உங்கள் வேண்டுகோளுக்கு வருவேன். என்னைப் பொறுத்து மன்னியுங்கள்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Singanenjam Sambandam

unread,
Jun 27, 2017, 9:43:27 AM6/27/17
to mint...@googlegroups.com
பயனுள்ள இழை.....படித்துவருகிறேன்.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Jun 28, 2017, 8:21:58 AM6/28/17
to mintamil
//நய்ந்து>நைந்து.. நசித்துப் போனது//

அருமையான விளக்கம் ஐயா! மிக்க நன்றி!!

Prakash Sugumaran

unread,
Jun 28, 2017, 12:29:33 PM6/28/17
to mintamil
மதிப்புக்குரிய ராமிகி ஐயா..

கட்சி என்ற சொல்லின் அடிப்படையை விவரித்தால் பயனுடையதாக அமையும்!

Prakash Sugumaran

unread,
Jun 28, 2017, 12:34:50 PM6/28/17
to mintamil
//வரி வடிவம் இல்லாமல் முதலேயே வல்லின எழுத்துக்களின் மாறுபட்ட பலுக்க முறைகளும் இருந்திருக்கின்றன//

உதாரணமாக.. சங்கமம்.

திரிவேணி சங்கமம் தமிழகம் தவிர வேறெங்கும் காணக் கிடைக்கவில்லை!

iraamaki

unread,
Jun 28, 2017, 9:29:41 PM6/28/17
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்புள்ள பிரகாசுக்கு,
 
கட்சி பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். கள் என்னும் வேர்ச்சொல் கட்டுதலைக் குறிக்கும். கூட்டமாய் இருப்பதையும் கள்ளுதலென்றே குறிக்கிறோம். பறவைகள், விலங்குகள், மாந்தர்கள், தமிழர்கள் என்று சொல்கிறோமில்லையா? அந்தக் கள், கூட்டப்பொருளைத் குறிக்கிறது. களமென்ற சொல் மக்கள்கூடும் இடத்தைக்குறிக்கும். கட்சிக்கும் களமென்ற பொருளுண்டு. களம்/கூட்டம் என்ற பொருளில் கட்சி என்ற சொல்லும் ஆளப்பட்டிருக்கிறது. கள் + சி = கள்சி ஆகிப் புணர்ச்சி விதியால் கட்சியாகும். (சி என்பது பெயர்ச்சொல்லாக்க ஈறுகளில் ஒன்று.) கூட்டமாய் இருப்போர் என்று பொருள். எதற்கு வேண்டுமானாலும் கூட்டம் சேரலாம். மக்களாட்சி மிகுந்த இந்த நாளில் இச்சொல்லின் பயன்பாடு கூடிப்போனது.
 
ஒரு காலத்தில் வெவ்வேறு மெய்யியலார், சமயத்தார் பட்டிமண்டபங்களில் “நாவலோ நாவல்” என்று முழக்கமிட்டுக்கொண்டு தம் கொள்கை வாதங்களைப் பேசுவர். இதுபற்றி மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களில் அறியலாம் (வளையாபதி, குண்டலகேசியைத் தொலைத்துவிட்டோம். அவையும் அதுபோன்ற நூல்கள் தான்.) றுஇதுபோன்ற பட்டி மண்டபங்கள் அக்கால மகதத்திலும், தமிழகத்திலும், கி.மு.600க்கு முன்னிருந்தே பழக்கமாய் இருந்திருக்கவேண்டும். ”இந்தாப் பார்றா! இவனும் கட்சிக்கட்டிக்கினு பேசுறான்” என்று இன்றுவரை இச்சொல் நாட்டுப்புறத்திற் பயன்படுகிறது.  (கட்டுதல் என்ற வினைச்சொல்லைப் பாருங்கள். கட்சியின் சொற்பிறப்பு புரிந்துவிடும்.)
 
மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சிசூடுக விறல்வெய் யோனே!
 
என்று சிலப்பதிகாரம் வேட்டுவவரியின் கடைசி 4 வரிகளில் ”கட்சி” வரும். மறைமுது முதல்வன் என்பது இங்கே சிவனைக் (செயினர் ஆதிநாதர் என்பார்) குறிக்கும். பாண்டியர் செயினராகவோ, சிவ நெறியாளராகவோ தான் பெரும்பாலும் இருந்தார். ”பொறையுயர் பொதியிற் பொருப்பன்” என்பது பொதியமலையைக் கொண்ட பாண்டியனைக் குறிக்கும். பிறர்நாட்டு கட்சி என்பது கரந்தைப்போர் செய்து தம் ஆக்களைக் காப்பற்றிக்கொள்ளும் பிறர்நாட்டுக் கூட்டம், கரந்தை என்பது ஆக்களைக் காக்கும் தொழில். வெட்சி, ஆக்களைக் கவருந் தொழில். அக்காலத்தில் பல்வேறு சண்டைகளில் வெட்சி X கரந்தைச் சண்டை முகன்மையானது. முல்லைநிலத்தில் பெரிதுஞ் செய்வது.
 
விறல்வெய்யோன் என்பது திறமையான வெய்யை ஆற்றுக்காரனைக் குறிக்கும். வெய்யை = வையை. வெய்யோன் = பாண்டியன். வெள்கை வெய்யை ஆனது. தொடக்க காலத்தில் வையைநீர் பெருக்கெடுத்துக் குறைந்ததொலைவில் பெருஞ்சரிவிலிருந்து ஓடிவந்தமையால் வேகங்கூடி நுரைதள்ளி வெள்ளையாய் ஓடி வரும். பார்ப்பதற்கு வெள்ளையாய்த் தோற்றும். வையைப்பெயரின் உட்பொருள் அதுதான். வெள்ளை, பாண்டியருக்கு மிகவும் வேண்டிய நிறம். பாண்டில் என்றாலே வெள்ளைதான். மதுரைக்கோயிலும் வெள்ளியம்பலம் தான். வெள்ளையையும் பாண்டியரையும் பற்றி நிறையப் பேசலாம். வேறிடத்திற் பார்ப்போம். இங்கே நாலு வரிகளில் ”பிறர்நாட்டு ஆக்களை பாண்டியன் கவர்ந்துவரட்டும்” என்று வேட்டுவ வரி சொல்கிறது. அந்த வெட்சிப்போரில், பிறர்நாட்டுக் கட்சி பாழ்படட்டும் என்றுஞ் சொல்கிறது.
 
”கட்சி” வடசொல் என்றால் கள்ளில் அமையும் 100க் கணக்கான சொற்கள் தமிழில்லாது போகும். நன் பார்த்தவரை கட்சி என்ற சொல் முதலில் ஆளப்பட்டது சிலப்பதிகாரத்திற்றான்.. 
 
இனி வடசொல் வழக்கிற்கு வருவோம். கள்ளுதல் என்பது உறுப்புகள் சேருவதற்கும் பயன்படும். கள்ளுதல் என்பது புணர்ச்சியில் கட்டுதல் என்றுமாகும். தோளும் மேற்கையும் சேருவது ஒரு கட்டு. மேற்கையும் முழங்கையும் சேர்வது ஒரு கட்டு. இதுபோல் உடம்பில் பல்வேறு கட்டுகள்/மூட்டுகள் உள்ளன. தோளும் மேற்கையும் சேருமிடத்தில் குழிவான இடம் உள்ளார்ந்திருக்கிறது. கள்ளுக்குள் என்றபொருளில் அது கள்க்கு + உள் = கள்க்குள் என்றாகும். புணர்ச்சிவிதியால் கட்குளென்றும் பின்= பேச்சுவழக்கில் கக்குளென்றும் ஆகும். பின், முதற்ககரம் தவிர்த்து அக்குளென்றுஞ் சொல்வோம். கக்குள் கக்கமென்றுஞ் சொல்லப்படும். ”கக்கத்துக்குளே என்னடா வச்சிருக்கே?” கக்கமென்ற சொல் வடக்கேபோய்க் கக்க என்றாகும். கட்சிசேர்பவரைக் கட்சிப்,பெரியவர் எப்படியேற்றுக்கொள்வார்? தன் கக்குளில் அணைத்து, சேர்பவர் தோளில் கைபோட்டுச் சேர்ப்பாரில்லையா? இச்செயலுக்குக் கக்க>கக்ஷ என்று அங்கு பெயர்.. அப்படித்தான் மோனியர் வில்லியம்சு சங்கத அகரமுதலி சொல்லும்.. அங்குபோய்த் தேடுங்கள். இந்தச் சொல்லுக்கு இகர முடிப்பு சங்கதத்தில் வராது. கக்ஷ மட்டுமேயுண்டு.
 
இரண்டு மொழிச் சொற்களின் தோற்றம் இப்படித்தான். கக்ஷ என்ற சொல் மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் நானறிந்தவரையில்லை. பெரும்பாலும் தெற்கிருந்தே இச்சொல் சங்கதத்துள் போயிருக்க வாய்ப்புண்டு. இதன் முதற்பயன்பாடு சிருங்கேரி சாரதாபீடத்தின் 12 ஆவது சங்கராச்சாரியார் (இவர்தான் விசயநகரப் பேரரசின் அரசகுரு. வித்யாரண்யர் என்று பெயர். கி.பி. 1380-86 இல் ஆச்சாரிய பட்டம் பெற்றார்.) எழுதிய “சர்வதர்ஷன சங்க்ரஹ” என்ற நூலில் உள்ளது. அதுவும் வெவ்வேறூ சமயக்கொள்கைகளை விளக்கும் நூல் தான். முடிவில் அல்லிருமைக் (அத்வைதம்) கொள்கையை உயர்த்திச் சொல்லும். (இது.சிவநெறிக்கொள்கையை உயர்த்திச் சொல்லும் சிவஞான சித்தியார் போன்றது.) அருமையான நூல். மெய்யியலில் ஆர்வமுள்ளோர் படிக்கவேண்டியது.
 
புரியாமல் இங்கு ஒருவர் கக்ஷி கட்டிக்கொண்டிருக்கிறார். பேசாமல் கட்சி என்றெழுதலாம். நாம் சொல்லிக் கேட்கவா போகிறார்?
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, June 28, 2017 9:59 PM
Subject: Re: [MinTamil] தூயதமிழ் - பிற மொழிச் சொற்களை தவிர்க்க உதவும் செயலி
 
மதிப்புக்குரிய ராமிகி ஐயா..
 
கட்சி என்ற சொல்லின் அடிப்படையை விவரித்தால் பயனுடையதாக அமையும்!

rajam

unread,
Jun 28, 2017, 10:13:32 PM6/28/17
to tamil...@googlegroups.com, mintamil, tamil_...@googlegroups.com
அன்புள்ள இராம.கி. ஐயா, வணக்கம்.

///”கட்சி” வடசொல் என்றால் கள்ளில் அமையும் 100க் கணக்கான சொற்கள் தமிழில்லாது போகும். நன் பார்த்தவரை கட்சி என்ற சொல் முதலில் ஆளப்பட்டது சிலப்பதிகாரத்திற்றான்.. /// 

சங்கப்பாடல்களிலேயே ‘கட்சி' என்ற சொல் பறவைகள் (மயில், அன்றில்) விலங்குகள் (மடமா(ன்) ) ஆகியவற்றிற்குப் புகலிடம் என்ற பொருளில் புழங்குகிறது.

முதுகலை வகுப்பில் படித்த காலத்தில் இதை நாங்கள் "கண் (orifice, hole) + சி > கட்சி (abode)" என்று புரிந்துகொண்டோம்.

அன்புடன்,
ராஜம்

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

rajam

unread,
Jun 28, 2017, 11:11:21 PM6/28/17
to tamil...@googlegroups.com, mintamil
இல்லை, செல்வா, சங்கப்பாடல்களில் புழங்கும் ‘கட்சி’ என்ற சொல் ஒரு பறவையின்/விலங்கின் காக்கும்/ஆளும் நிலப்பரப்பைக் (territory) குறிக்கவில்லை என்பது என் கருத்து. பாடல்பொருளையும் கட்சி என்ற சொல்லின் சூழலையும் புரிந்து படித்தால் நான் சொல்லுவது புரியும். எல்லாவறையும் எடுத்து விளக்க இப்போதைக்கு எனக்கு நேரமில்லை. 

பாடல் சூழல்: அகநானூறு 392, ஐங்குறுநூறு 250, குறுந்தொகை 160, நற்றிணை 13, 117, 276, புறநானூறு 60, 157, 202, மலைபடுகடாம்: 235

[ஓர் ஆசிரியர், கட்சி என்ற சொல்லுக்கு refuge என்றே பொருள் சொன்னார். அவர் ஒரு தி.மு.க. ஆர்வலர், இந்தக் கட்சி என்ற இலக்கியச்சொல்லையும் அரசியலையும் இணைத்து, குறிப்பாக மக்கள் கட்சி மாறுவதைப் பற்றி நகைச்சுவையாகச் சொன்ன நினைவு. அந்தக்காலம், அறுபதுகளின் தொடக்கம், தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிய காலமல்லவோ!]

அன்புடன்,
ராஜம்

On Jun 28, 2017, at 7:20 PM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

வணக்கம்.

//சங்கப்பாடல்களிலேயே ‘கட்சி' என்ற சொல் பறவைகள் (மயில், அன்றில்) விலங்குகள் (மடமா(ன்) ) ஆகியவற்றிற்குப் புகலிடம் என்ற பொருளில் புழங்குகிறது.//

பி.எல் சாமி அவர்கள் (ஆசிரியர், சங்க இலக்கியத்தில் பறவையின விளக்கம் என்னும் நூல்)
கட்சி என்பது ஆங்கிலத்திலே குறிப்பிடப்படும் territory என்பதற்கு ஈடான சொல்லாகக் காட்டுவார்.
அதாவது எல்லைகளைக் குறித்து, தான் காக்கும் அல்லது ஆளும் நிலம் என்பதைக் குறிக்கும் என்னும்
பொருளில் ஆளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இது பொருந்துமா என சங்க இலக்கியப்
பேரறிஞர் முனைவர் இராசம்  என்ன சொல்வார்கள் என அறிய ஆவல். 

அன்புடன்
செல்வா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Jun 29, 2017, 12:08:58 AM6/29/17
to மின்தமிழ், vallamai
On Wed, Jun 28, 2017 at 9:29 AM, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
கட்சி என்ற சொல்லின் அடிப்படையை விவரித்தால் பயனுடையதாக அமையும்!

--

party - எனப் பொருள்படும் கட்சி என்பது கக்‌ஷி என்று இந்தியா முழுதும் பயன்படுகிற சொல்லின் 
கிரந்த எழுத்தை நீக்கி எழுதும் தற்பவம்.  கக்ஷி (party) தமிழ் மூலம் கொண்ட சொல் அல்ல.

பாரதியார், பெரியார் கக்ஷி என்று பயன்படுத்தினர். அண்ணா காலத்தில் இருந்து
கக்‌ஷி > கட்சி என மாறியுள்ளது. எத்தனையோ வடசொற்கள் தமிழில் வழங்குவதுபோல்,
கக்‌ஷி/கட்சி தமிழில் உள்ளது.

நா. கணேசன்
 
--

iraamaki

unread,
Jun 29, 2017, 12:26:53 AM6/29/17
to mint...@googlegroups.com
மோனியர் வில்லியம்சில் இல்லாத சொல்வடிவங்களை எல்லாம் சம்ஸ்க்ருத விற்பன்னர் நா.க. கண்டுசொல்வது நன்றாகவேயிருக்கிறது.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, June 29, 2017 9:38 AM
Subject: Re: [MinTamil] தூயதமிழ் - பிற மொழிச் சொற்களை தவிர்க்க உதவும் செயலி
On Wed, Jun 28, 2017 at 9:29 AM, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
கட்சி என்ற சொல்லின் அடிப்படையை விவரித்தால் பயனுடையதாக அமையும்!
--
 
party - எனப் பொருள்படும் கட்சி என்பது கக்‌ஷி என்று இந்தியா முழுதும் பயன்படுகிற சொல்லின்
கிரந்த எழுத்தை நீக்கி எழுதும் தற்பவம்.  கக்ஷி (party) தமிழ் மூலம் கொண்ட சொல் அல்ல.
 
பாரதியார், பெரியார் கக்ஷி என்று பயன்படுத்தினர். அண்ணா காலத்தில் இருந்து
கக்‌ஷி > கட்சி என மாறியுள்ளது. எத்தனையோ வடசொற்கள் தமிழில் வழங்குவதுபோல்,
கக்‌ஷி/கட்சி தமிழில் உள்ளது.
 
நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 29, 2017, 12:47:31 AM6/29/17
to வல்லமை, மின்தமிழ்

On Wednesday, June 28, 2017 at 9:45:20 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
சாக்ஷி சாட்சி ஆனது போலவா?

ஆமாம், கல்பட்டாரே.

நா. கணேசன்
 
2017-06-29 9:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wed, Jun 28, 2017 at 9:29 AM, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
கட்சி என்ற சொல்லின் அடிப்படையை விவரித்தால் பயனுடையதாக அமையும்!

--

party - எனப் பொருள்படும் கட்சி என்பது கக்‌ஷி என்று இந்தியா முழுதும் பயன்படுகிற சொல்லின் 
கிரந்த எழுத்தை நீக்கி எழுதும் தற்பவம்.  கக்ஷி (party) தமிழ் மூலம் கொண்ட சொல் அல்ல.

பாரதியார், பெரியார் கக்ஷி என்று பயன்படுத்தினர். அண்ணா காலத்தில் இருந்து
கக்‌ஷி > கட்சி என மாறியுள்ளது. எத்தனையோ வடசொற்கள் தமிழில் வழங்குவதுபோல்,
கக்‌ஷி/கட்சி தமிழில் உள்ளது.

நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

N. Ganesan

unread,
Jun 29, 2017, 1:18:51 AM6/29/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com

On Wednesday, June 28, 2017 at 9:47:31 PM UTC-7, N. Ganesan wrote:

On Wednesday, June 28, 2017 at 9:45:20 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
சாக்ஷி சாட்சி ஆனது போலவா?

அக்‌ஷரம் > அட்சரம், தக்‌ஷிணம் > தட்சிணம், லக்ஷ்மி > லட்சுமி, சாக்ஷி > சாட்சி, ..... இதுபோல் நூற்றுக்கணக்கான சொற்களை -ட்ச- என்றாக்கி தமிழில் புழங்குகிறோம் அல்லவா?
அதே தான் இங்கேயும்: கக்‌ஷி > கட்சி. பாரதியார் எழுத்துக்களில், பெரியார் எழுத்துக்களில் கக்‌ஷி என்றிருந்தது
ஜனநாயக எலெக்ஷன்கள் வந்தபிறகு (இப்போது குவார்ட்டர், பிரியாணி, + காந்தி நோட்டு என வ்ருத்தி) கக்‌ஷிக்காரர் என்பதை கட்சிக்காரர் என தமிழ்ப்படுத்தியுள்ளோம்.
ஏனை பாரத மாகாணங்களில் இன்னமும் கக்ஷி அதன் ஒரிஜினலாக இருக்கிறது. கட்சி < கக்‌ஷி, இது தமிழுக்கு வடமொழி தரும் loan word.

நா. கணேசன்

Prakash Sugumaran

unread,
Jun 29, 2017, 2:03:46 AM6/29/17
to mintamil
//கள் என்னும் வேர்ச்சொல் கட்டுதலைக் குறிக்கும். கூட்டமாய் இருப்பதையும் கள்ளுதலென்றே குறிக்கிறோம். பறவைகள், விலங்குகள், மாந்தர்கள், தமிழர்கள் என்று சொல்கிறோமில்லையா? அந்தக் கள், கூட்டப்பொருளைத் குறிக்கிறது. களமென்ற சொல் மக்கள்கூடும் இடத்தைக்குறிக்கும். கட்சிக்கும் களமென்ற பொருளுண்டு. களம்/கூட்டம் என்ற பொருளில் கட்சி என்ற சொல்லும் ஆளப்பட்டிருக்கிறது.//

மிகவும் அரியதொரு விளக்கம் தந்தீர் ஐயா. முக்குளத்தோரில் ’கள்ளர்’ சமூகத்திற்கான பெயர் காரணம் பற்றிய நீண்ட நாள் குழப்பங்களும் இதனால் தீர்ந்தன. தங்களுடைய ஆழ்ந்த புரிதலையும், மொழிப் புலமையையும் எண்ணி உண்மையில் அதிசயித்து நிற்கிறேன். மிக்க நன்றி.

Prakash Sugumaran

unread,
Jun 29, 2017, 2:13:00 AM6/29/17
to mintamil
பல்வேறு சண்டைகளில் வெட்சி X கரந்தைச் சண்டை முகன்மையானது//

வேறொரு இழையில், ஏறக்குறைய இதே காரணத்தை முன்னிறுத்தி, திரு. அரிசோனன் அவர்களிடத்தில் பாண்டிய மண்டலம் - தொண்டை மண்டலம் இடையிலான பகை இன்னும் கொஞ்சம் மிச்சம் என்று குறிப்பிட்டேன். :-)

பாண்டியர்களின் சமயப் பொறவு குறித்தும் குறிப்பிட்டு, தமிழகத்தின் அன்றைய, இன்றைய பல சிக்கல்களில், முதன்மையான பிரச்னை குறித்தும் மிக எளிதாக விளக்கி இருக்கின்றீர்கள் ஐயா.

//திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்// (காடுகாண் காதை)

Prakash Sugumaran

unread,
Jun 29, 2017, 3:56:42 AM6/29/17
to mintamil
சங்கப்பாடல்களிலேயே ‘கட்சி' என்ற சொல் பறவைகள் (மயில், அன்றில்) விலங்குகள் (மடமா(ன்) ) ஆகியவற்றிற்குப் புகலிடம் என்ற பொருளில் புழங்குகிறது.//

ராஜம் அம்மா குறிப்பிடுவது ’கச்சேரி’ என்பதை முன்னிருத்துகிறது.

காவல்நிலையங்கள் எல்லாம் முன்பு கச்சேரி(றி!) என்று வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் புகலிடம்!

Rajagopalan

unread,
Jun 29, 2017, 5:02:52 AM6/29/17
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
'கள்' என்கிற வினைச்சொல், களை நீக்கு என்ற பொருளில் வரும். நெல்லிலிருந்து களை ப்ரித்து நீக்கபடுவதாலேயே அந்த இடம் 'களம்' எனப்படுவதாயிற்று. நெல்லும் களையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. வேண்டாததைத் தடை செய்து இன்னொன்றை வளரவிடுகிறோம். ஒருவருக்கொருவர் வேண்டப்படாத எதிரிகளாகி இரு நாட்டு வீரர்களும்  மாறுபாடுடையவர்களாக இருவேறு அணியாகப்  பிரிந்தவர்கள் மோதுகிற இடம் போர்க் 'களம்' ஆகும். மாறுபட்ட கொள்கைகளை உடையவர்கள் வேறு வேறு கூட்டங்களாகப் பிரிந்து நிற்பதால் அவை கட்சிகள் ஆகின்றன.ஆங்கிலத்தில்  Party  என்கிற சொல்லோடு ஒப்புநோக்குக. பிரிந்து நிற்பவர்கள் தங்கள் தங்கள் அணிகளுக்குக் கூட்டம் சேர்ப்பது கட்சி கட்டுதல் ஆகும். கட்சிகளில் எது நெல் எது களை என்று தீர்மானிப்பதே 'தேர்தல் களம்' ஆகும். என்றுதான் நான் கருதிக் கொண்டிருந்தேன். 

அ.ரா 

On Thursday, 29 June 2017 06:59:41 UTC+5:30, இராம.கி wrote:
அன்புள்ள பிரகாசுக்கு,
 
கட்சி பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். கள் என்னும் வேர்ச்சொல் கட்டுதலைக் குறிக்கும். கூட்டமாய் இருப்பதையும் கள்ளுதலென்றே குறிக்கிறோம். பறவைகள், விலங்குகள், மாந்தர்கள், தமிழர்கள் என்று சொல்கிறோமில்லையா? அந்தக் கள், கூட்டப்பொருளைத் குறிக்கிறது. களமென்ற சொல் மக்கள்கூடும் இடத்தைக்குறிக்கும். கட்சிக்கும் களமென்ற பொருளுண்டு. களம்/கூட்டம் என்ற பொருளில் கட்சி என்ற சொல்லும் ஆளப்பட்டிருக்கிறது. கள் + சி = கள்சி ஆகிப் புணர்ச்சி விதியால் கட்சியாகும். (சி என்பது பெயர்ச்சொல்லாக்க ஈறுகளில் ஒன்று.) கூட்டமாய் இருப்போர் என்று பொருள். எதற்கு வேண்டுமானாலும் கூட்டம் சேரலாம். மக்களாட்சி மிகுந்த இந்த நாளில் இச்சொல்லின் பயன்பாடு கூடிப்போனது.
 
ஒரு காலத்தில் வெவ்வேறு மெய்யியலார், சமயத்தார் பட்டிமண்டபங்களில் “நாவலோ நாவல்” என்று முழக்கமிட்டுக்கொண்டு தம் கொள்கை வாதங்களைப் பேசுவர். இதுபற்றி மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களில் அறியலாம் (வளையாபதி, குண்டலகேசியைத் தொலைத்துவிட்டோம். அவையும் அதுபோன்ற நூல்கள் தான்.) றுஇதுபோன்ற பட்டி மண்டபங்கள் அக்கால மகதத்திலும், தமிழகத்திலும், கி.மு.600க்கு முன்னிருந்தே பழக்கமாய் இருந்திருக்கவேண்டும். ”இந்தாப் பார்றா! இவனும் கட்சிக்கட்டிக்கினு பேசுறான்” என்று இன்றுவரை இச்சொல் நாட்டுப்புறத்திற் பயன்படுகிறது.  (கட்டுதல் என்ற வினைச்சொல்லைப் பாருங்கள். கட்சியின் சொற்பிறப்பு புரிந்துவிடும்.)
 
மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சிசூடுக விறல்வெய் யோனே!
 
என்று சிலப்பதிகாரம் வேட்டுவவரியின் கடைசி 4 வரிகளில் ”கட்சி” வரும். மறைமுது முதல்வன் என்பது இங்கே சிவனைக் (செயினர் ஆதிநாதர் என்பார்) குறிக்கும். பாண்டியர் செயினராகவோ, சிவ நெறியாளராகவோ தான் பெரும்பாலும் இருந்தார். ”பொறையுயர் பொதியிற் பொருப்பன்” என்பது பொதியமலையைக் கொண்ட பாண்டியனைக் குறிக்கும். பிறர்நாட்டு கட்சி என்பது கரந்தைப்போர் செய்து தம் ஆக்களைக் காப்பற்றிக்கொள்ளும் பிறர்நாட்டுக் கூட்டம், கரந்தை என்பது ஆக்களைக் காக்கும் தொழில். வெட்சி, ஆக்களைக் கவருந் தொழில். அக்காலத்தில் பல்வேறு சண்டைகளில் வெட்சி X கரந்தைச் சண்டை முகன்மையானது. முல்லைநிலத்தில் பெரிதுஞ் செய்வது.
 
விறல்வெய்யோன் என்பது திறமையான வெய்யை ஆற்றுக்காரனைக் குறிக்கும். வெய்யை = வையை. வெய்யோன் = பாண்டியன். வெள்கை வெய்யை ஆனது. தொடக்க காலத்தில் வையைநீர் பெருக்கெடுத்துக் குறைந்ததொலைவில் பெருஞ்சரிவிலிருந்து ஓடிவந்தமையால் வேகங்கூடி நுரைதள்ளி வெள்ளையாய் ஓடி வரும். பார்ப்பதற்கு வெள்ளையாய்த் தோற்றும். வையைப்பெயரின் உட்பொருள் அதுதான். வெள்ளை, பாண்டியருக்கு மிகவும் வேண்டிய நிறம். பாண்டில் என்றாலே வெள்ளைதான். மதுரைக்கோயிலும் வெள்ளியம்பலம் தான். வெள்ளையையும் பாண்டியரையும் பற்றி நிறையப் பேசலாம். வேறிடத்திற் பார்ப்போம். இங்கே நாலு வரிகளில் ”பிறர்நாட்டு ஆக்களை பாண்டியன் கவர்ந்துவரட்டும்” என்று வேட்டுவ வரி சொல்கிறது. அந்த வெட்சிப்போரில், பிறர்நாட்டுக் கட்சி பாழ்படட்டும் என்றுஞ் சொல்கிறது.
 
”கட்சி” வடசொல் என்றால் கள்ளில் அமையும் 100க் கணக்கான சொற்கள் தமிழில்லாது போகும். நன் பார்த்தவரை கட்சி என்ற சொல் முதலில் ஆளப்பட்டது சிலப்பதிகாரத்திற்றான்.. 
 
இனி வடசொல் வழக்கிற்கு வருவோம். கள்ளுதல் என்பது உறுப்புகள் சேருவதற்கும் பயன்படும். கள்ளுதல் என்பது புணர்ச்சியில் கட்டுதல் என்றுமாகும். தோளும் மேற்கையும் சேருவது ஒரு கட்டு. மேற்கையும் முழங்கையும் சேர்வது ஒரு கட்டு. இதுபோல் உடம்பில் பல்வேறு கட்டுகள்/மூட்டுகள் உள்ளன. தோளும் மேற்கையும் சேருமிடத்தில் குழிவான இடம் உள்ளார்ந்திருக்கிறது. கள்ளுக்குள் என்றபொருளில் அது கள்க்கு + உள் = கள்க்குள் என்றாகும். புணர்ச்சிவிதியால் கட்குளென்றும் பின்= பேச்சுவழக்கில் கக்குளென்றும் ஆகும். பின், முதற்ககரம் தவிர்த்து அக்குளென்றுஞ் சொல்வோம். கக்குள் கக்கமென்றுஞ் சொல்லப்படும். ”கக்கத்துக்குளே என்னடா வச்சிருக்கே?” கக்கமென்ற சொல் வடக்கேபோய்க் கக்க என்றாகும். கட்சிசேர்பவரைக் கட்சிப்,பெரியவர் எப்படியேற்றுக்கொள்வார்? தன் கக்குளில் அணைத்து, சேர்பவர் தோளில் கைபோட்டுச் சேர்ப்பாரில்லையா? இச்செயலுக்குக் கக்க>கக்ஷ என்று அங்கு பெயர்.. அப்படித்தான் மோனியர் வில்லியம்சு சங்கத அகரமுதலி சொல்லும்.. அங்குபோய்த் தேடுங்கள். இந்தச் சொல்லுக்கு இகர முடிப்பு சங்கதத்தில் வராது. கக்ஷ மட்டுமேயுண்டு.
 
இரண்டு மொழிச் சொற்களின் தோற்றம் இப்படித்தான். கக்ஷ என்ற சொல் மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் நானறிந்தவரையில்லை. பெரும்பாலும் தெற்கிருந்தே இச்சொல் சங்கதத்துள் போயிருக்க வாய்ப்புண்டு. இதன் முதற்பயன்பாடு சிருங்கேரி சாரதாபீடத்தின் 12 ஆவது சங்கராச்சாரியார் (இவர்தான் விசயநகரப் பேரரசின் அரசகுரு. வித்யாரண்யர் என்று பெயர். கி.பி. 1380-86 இல் ஆச்சாரிய பட்டம் பெற்றார்.) எழுதிய “சர்வதர்ஷன சங்க்ரஹ” என்ற நூலில் உள்ளது. அதுவும் வெவ்வேறூ சமயக்கொள்கைகளை விளக்கும் நூல் தான். முடிவில் அல்லிருமைக் (அத்வைதம்) கொள்கையை உயர்த்திச் சொல்லும். (இது.சிவநெறிக்கொள்கையை உயர்த்திச் சொல்லும் சிவஞான சித்தியார் போன்றது.) அருமையான நூல். மெய்யியலில் ஆர்வமுள்ளோர் படிக்கவேண்டியது.
 
புரியாமல் இங்கு ஒருவர் கக்ஷி கட்டிக்கொண்டிருக்கிறார். பேசாமல் கட்சி என்றெழுதலாம். நாம் சொல்லிக் கேட்கவா போகிறார்?
 
அன்புடன்,
இராம.கி.

Prakash Sugumaran

unread,
Jun 29, 2017, 7:23:54 AM6/29/17
to mintamil

கள் – களை; களை ’பிரிக்கும்’ இடம் – களம்; அணிகளுக்கு ’கூட்டம் சேர்ப்பது’ – கட்சி கட்டுதல்.

இவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அர்த்தங்கள் தருகின்றனவே..

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2017, 8:56:18 AM6/29/17
to vallamai, மின்தமிழ்

28 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 10:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, June 28, 2017 at 9:47:31 PM UTC-7, N. Ganesan wrote:

On Wednesday, June 28, 2017 at 9:45:20 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
சாக்ஷி சாட்சி ஆனது போலவா?

அக்‌ஷரம் > அட்சரம், தக்‌ஷிணம் > தட்சிணம், லக்ஷ்மி > லட்சுமி, சாக்ஷி > சாட்சி, ..... இதுபோல் நூற்றுக்கணக்கான சொற்களை -ட்ச- என்றாக்கி தமிழில் புழங்குகிறோம் அல்லவா?
அதே தான் இங்கேயும்: கக்‌ஷி > கட்சி.  தரும் loan word.

அக்கரம், தக்கணம், இலக்குமி, சாக்கி, கக்கி என்றுதானே சங்க காலத்தில் மருவும். பிற்காலத்தில்தான் நீங்க சொல்லியபடி ஆனது. 

iraamaki

unread,
Jun 29, 2017, 9:12:03 AM6/29/17
to mint...@googlegroups.com
கள் என்ற வேர்ச்சொல்லிற்கு திரளுதல், கூடுதலென்ற பொருள்மட்டுங் கிடையாது. களை பிடுங்குதல், பறித்தல், திருடுதல், ஏய்த்தலென்ற பொருள்களும் அதற்குண்டு.  இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். களம், களைபிரிக்கும் இடமென்பது ஒரு பக்கப்பார்வை. பொதுவாகப் பயிர்வளரும் காலம்முழுதும் களைகள் நீக்கப்படும்.  அவை அறுவடையின்போது மட்டும் பிரிக்கப்படுவதில்லை.  களத்துமேட்டில் எல்லாவிதமான வேலைகளும்தான் நடக்கும், பொதுவாய் ஆட்கள், கருவிகள், பயிர்கள், விளைச்சல்கள் என எல்லாஞ் சேருமிடம் களமாகும்.
 
கள் பற்றி முழுதும் அறிய அருள்கூர்ந்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இரண்டாம் மடலம் முதற்பாகம் பாருங்கள்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, June 29, 2017 4:53 PM
Subject: Re: [MinTamil] தூயதமிழ் - பிற மொழிச் சொற்களை தவிர்க்க உதவும் செயலி
 
கள் – களை; களை ’பிரிக்கும்’ இடம் – களம்; அணிகளுக்கு ’கூட்டம் சேர்ப்பது’ – கட்சி கட்டுதல்.

இவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அர்த்தங்கள் தருகின்றனவே..

--

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2017, 9:14:57 AM6/29/17
to தமிழ் மன்றம், mintamil

28 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:11 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

இல்லை, செல்வா, சங்கப்பாடல்களில் புழங்கும் ‘கட்சி’ என்ற சொல் ஒரு பறவையின்/விலங்கின் காக்கும்/ஆளும் நிலப்பரப்பைக் (territory) குறிக்கவில்லை என்பது என் கருத்து. பாடல்பொருளையும் கட்சி என்ற சொல்லின் சூழலையும் புரிந்து படித்தால் நான் சொல்லுவது புரியும். எல்லாவறையும் எடுத்து விளக்க இப்போதைக்கு எனக்கு நேரமில்லை. 

பாடல் சூழல்: அகநானூறு 392, ஐங்குறுநூறு 250, குறுந்தொகை 160, நற்றிணை 13, 117, 276, புறநானூறு 60, 157, 202, மலைபடுகடாம்: 235

[ஓர் ஆசிரியர், கட்சி என்ற சொல்லுக்கு refuge என்றே பொருள் சொன்னார். அவர் ஒரு தி.மு.க. ஆர்வலர், இந்தக் கட்சி என்ற இலக்கியச்சொல்லையும் அரசியலையும் இணைத்து, குறிப்பாக மக்கள் கட்சி மாறுவதைப் பற்றி நகைச்சுவையாகச் சொன்ன நினைவு. அந்தக்காலம், அறுபதுகளின் தொடக்கம், தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிய காலமல்லவோ!]

புகலிடம், தங்கு இடம் சரியான பொருள்

 ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும்”
 
”நெடுங் கால் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்”

வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ”

புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர”

வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்”

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு”

”எல் படு பொழுதின் இனம் தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல் ஏறு”

 தன் இனத்தைக்காணாத ஏறு என கொண்டால் இராம கி ஐயா சொல்லியது ( அரசியல் கட்சி, கழகம் எனும் பொருள்) பொருந்தும்.

N. Ganesan

unread,
Jun 29, 2017, 10:08:32 AM6/29/17
to மின்தமிழ், vallamai
கள்-/கண்-/கட்- என்று த்ராவிட மொழிகளின் அடிப்படையான சொல்லாக்க விதிகளில் அமைந்த சொல் சங்க இலக்கியக் “கட்சி” மேற்கோள்கள்.
விள்-/விண்-/விட்- ... இதுபோல் நூற்றுக்கணக்கான தொகுதிகள் உண்டு. ரெட்ரோஃப்லெக்ஸ் -ள்-/-ட்-/-ண்- இரண்டாம் எழுத்தாக அமையும் சொற்கள்
இவை. பல உதாரணங்கள் ரெட்ரொஃப்லெக்ஸ் வளைநா எழுத்துக்கள் இந்திய மொழிகளில் உருவாக இவ்விதி துணை செய்திருக்கிறது என்பதைக்
காட்ட உதவும்.

--------------

ஆனால், கக்‌ஷ, கக்‌ஷய என்னும் சொற்கள் த்ராவிட/தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் என சம்ஸ்கிருத விற்பன்னர்கள்
எழுதியுள்ளனர். armpit, waist, girdle, side, edge என்னும் பொருள் உடைய ஆரிய மொழிகலின் சொற்கள் இவை. 

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jun 29, 2017, 10:19:41 AM6/29/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
பாரதியார், பெரியார், ... போன்றோரும் பிறரும் 1960-கள் வரை மிகப் பரந்து பயன்பட்ட கக்‌ஷி இப்பொழுது கட்சி என்று ஆனதற்கு உதாரணங்கள் தந்தேன்.
ruling/opposition party என்பதை தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் கக்‌ஷி என்று குறிப்பிடுகின்றனர். கக்ஷி > கட்சி என தமிழ்நாட்டில் இவ் ஆரியச் சொல்
ஆதலும் உண்டு.

கக்‌ஷ, கக்‌ஷய என்னும் சொற்கள் த்ராவிட/தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் என சம்ஸ்கிருத விற்பன்னர்கள்
எழுதியுள்ளனர். armpit, waist, girdle, side, edge என்னும் பொருள் உடைய ஆரிய மொழிகளின் சொற்கள் இவை.  இப் பொருள்களில் கட்சி
என்று சங்க காலத்தில் ஆட்சி இல்லை.

-க்‌ஷ- தற்பவம் ஆகுகையில் -ட்ச-, -க்க-, -ச்ச- என்றாகும். உ-ம்: லக்ஷ்மி > லட்சுமி/லக்குமி/லச்சுமி.
கக்‌ஷ என்னும் ஆரியச் சொல் தரும் ஒரு சொல்: கக்‌ஷ > கச்சை என்பர் ஸம்ஸ்கிருத விற்பன்னர்கள். பல வட பிராகிருதங்களில் உள்ள சொல்.

--------------

கள்-/கண்-/கட்- என்று த்ராவிட மொழிகளின் அடிப்படையான சொல்லாக்க விதிகளில் அமைந்த சொல் சங்க இலக்கியக் “கட்சி” மேற்கோள்கள்.
விள்-/விண்-/விட்- ... இதுபோல் நூற்றுக்கணக்கான தொகுதிகள் உண்டு. ரெட்ரோஃப்லெக்ஸ் -ள்-/-ட்-/-ண்- இரண்டாம் எழுத்தாக அமையும் சொற்கள்
இவை. பல உதாரணங்கள் ரெட்ரொஃப்லெக்ஸ் வளைநா எழுத்துக்கள் இந்திய மொழிகளில் உருவாக இவ்விதி துணை செய்திருக்கிறது என்பதைக்
காட்ட உதவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 29, 2017, 10:36:42 AM6/29/17
to மின்தமிழ், vallamai
On Thursday, June 29, 2017 at 2:02:52 AM UTC-7, Rajagopalan wrote:
'கள்' என்கிற வினைச்சொல், களை நீக்கு என்ற பொருளில் வரும். நெல்லிலிருந்து களை ப்ரித்து நீக்கபடுவதாலேயே அந்த இடம் 'களம்' எனப்படுவதாயிற்று. நெல்லும் களையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. வேண்டாததைத் தடை செய்து இன்னொன்றை வளரவிடுகிறோம். ஒருவருக்கொருவர் வேண்டப்படாத எதிரிகளாகி இரு நாட்டு வீரர்களும்  மாறுபாடுடையவர்களாக இருவேறு அணியாகப்  பிரிந்தவர்கள் மோதுகிற இடம் போர்க் 'களம்' ஆகும். மாறுபட்ட கொள்கைகளை உடையவர்கள் வேறு வேறு கூட்டங்களாகப் பிரிந்து நிற்பதால் அவை கட்சிகள் ஆகின்றன.ஆங்கிலத்தில்  Party  என்கிற சொல்லோடு ஒப்புநோக்குக. பிரிந்து நிற்பவர்கள் தங்கள் தங்கள் அணிகளுக்குக் கூட்டம் சேர்ப்பது கட்சி கட்டுதல் ஆகும். கட்சிகளில் எது நெல் எது களை என்று தீர்மானிப்பதே 'தேர்தல் களம்' ஆகும். என்றுதான் நான் கருதிக் கொண்டிருந்தேன். 

அ.ரா 

களம் என்ற சொல் களைதல் என்ற வினைதான். நெல் பொலி தூற்றக் வயல் அருகே களம். சாமைக்களம் என்ற ஊரே கோவை அருகே உண்டு. பாரதி மறவன்பாட்டில் சொல்லும் கருத்தை அவ்வூர் நாராயணையங்கார் பாடிய சிலேடை வெண்பாக் கொடுத்துள்ளேன். அடுக்களம் அடுக்களை என்கிறோம். சமையல் களத்துக்கும் போர்க் களத்துக்கும் ஒப்புமை காட்டிப் பாடும் சங்கப் பாடல்கள்
இருக்கின்றன. தேர்தல் போர்க்களம் சுருங்கி தேர்தல் களம். ரிக் வேதத்தில் உலூகலம் இருக்கிறது. இது அவுரி (indigo plant, first used to create blue jeans in 19-20th century) பயிரை உரலில் இட்டு நீல வண்ணம்
தயார் செய்யும் களம் என விளக்கியுள்ளேன். காரணம். ஹரப்பா, மொகஞ்சதாரோ இவற்றில் செங்கற்களால் ஆன வட்டமான களங்கள் (ப்லாட்ஃபோர்ம்ஸ்) பல உள்ளன. நடுவே மண்குழி இருப்பவை.
அங்கே மர உரல்களை வைத்து இந்த நீலவண்ணம் தயாரித்துள்ளனர். ஆர்க்கியாலஜி இண்டிகோ ப்லாண்ட் எடுத்துள்ளது. எனவே ரிக்வேத உலூ-கல என்பது உரல்-களம் என்பதின் திரிபு ஆகும்.
வேலன், குறத்தி போன்றோர் ஆடும் களம் உண்டு. களம் வரைதல் அணங்கு பேயாடல். இதற்கு நம்மாழ்வார் பதிகம் பொருள் வாய்ந்தது.

கட்சி < கக்‌ஷி என்னும் ஆர்ய வார்த்தை. (used nowadays for parties contesting in elections).

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jun 29, 2017, 10:49:19 AM6/29/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
Raju Rajendran wrote:
> அக்கரம், தக்கணம், இலக்குமி, சாக்கி, கக்கி என்றுதானே சங்க காலத்தில் மருவும். பிற்காலத்தில்தான் நீங்க சொல்லியபடி ஆனது. 

லக்ஷ்ய > இலக்கியம், லக்ஷண > இலக்கணம். தொல்காப்பியர் போன்ற சமணர்கள் ஆர்யச் சொற்களை தமிழ் ஆக்கித் தந்துள்ளனர்.
விரிவாக அறிய சுவெலெபில் நூல்களில் காணலாம்.

NG

Prakash Sugumaran

unread,
Jun 29, 2017, 1:33:04 PM6/29/17
to mintamil
களம் என்ற சொல் களைதல் என்ற வினைதான்.//

கணேசன் ஐயா.. ’வாரணாசி’ என்பதன் பெயர், வினை, உரிச்சொல் காரணங்களை விளக்கலாமே..!

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2017, 1:53:29 PM6/29/17
to vallamai, மின்தமிழ்

29 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 7:49 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

Raju Rajendran wrote:
> அக்கரம், தக்கணம், இலக்குமி, சாக்கி, கக்கி என்றுதானே சங்க காலத்தில் மருவும். பிற்காலத்தில்தான் நீங்க சொல்லியபடி ஆனது. 

லக்ஷ்ய > இலக்கியம், லக்ஷண > இலக்கணம். தொல்காப்பியர் போன்ற சமணர்கள் ஆர்யச் சொற்களை தமிழ் ஆக்கித் தந்துள்ளனர்.
விரிவாக அறிய சுவெலெபில் நூல்களில் காணலாம்.

லக்ஷ்ய > இலக்கியம், லக்ஷண > இலக்கணம்.
இவைகளுக்கு வடமொழியிலும் இவைதான் சொற்களா? 

N. Ganesan

unread,
Jun 30, 2017, 8:58:33 AM6/30/17
to மின்தமிழ், vallamai

On Thursday, June 29, 2017 at 6:14:57 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

புகலிடம், தங்கு இடம் சரியான பொருள்

ஆமாம். 

கட்சி¹ kaṭci , n. prob. kakṣa. 1. Forest; jungle; காடு. கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் (மலை படு. 235). 2. Refuge; புகலிடம். கட்சிகாணாக் கட மா நல்லேறு (புறநா. 202). 3. Bed, sleeping place; மக்கள்துயிலிடம். (திவா.) 4. Bird's nest; பற வைக்கூடு. (பிங்.)

------------------

ஆனால்,
கட்சி² kaṭci

n. < kakṣyā. 1. Faction, party, clique; விவாதப்பட்ட பிரிவு. அவன் ஒருகட்சியி லும் சேராதவன். 2. Battle-field; போர்க்களம். கட்சியுங் கரந்தையும் பாழ்பட (சிலப். 12, உரைப். 23).

இது ஆர்ய மொழிகளின் வார்த்தை. கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.

.

கக்‌ஷ, கக்‌ஷய என்னும் சொற்கள் த்ராவிட/தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் என சம்ஸ்கிருத விற்பன்னர்கள்
எழுதியுள்ளனர். armpit, waist, girdle, side, edge என்னும் பொருள் உடைய ஆரிய மொழிகளின் சொற்கள் இவை.  இப் பொருள்களில் கட்சி
என்று சங்க காலத்தில் ஆட்சி இல்லை.

-க்‌ஷ- தற்பவம் ஆகுகையில் -ட்ச-, -க்க-, -ச்ச- என்றாகும். உ-ம்: லக்ஷ்மி > லட்சுமி/லக்குமி/லச்சுமி.
கக்‌ஷ என்னும் ஆரியச் சொல் தரும் ஒரு சொல்: கக்‌ஷ > கச்சை என்பர் ஸம்ஸ்கிருத விற்பன்னர்கள். பல வட பிராகிருதங்களில் உள்ள சொல்.

நா. கணேசன்

Raju Saravanan

unread,
Jun 30, 2017, 9:39:29 AM6/30/17
to mint...@googlegroups.com
Assamese  
---------------
দল(Dala)  
পার্টি(Pārṭi)

Bengali
----------
 আসর(Āsara)
জোট (jōṭa)
তরফ (tarapha)
দল (dala)
দলীয় (dalīẏa)
পক্ষ (pakṣa)
পার্টি (pārṭi)
পার্টি করা (pārṭi karā)
মজলিশ (majaliśa)
সংঘ (saṅgha)

Gujarati
-----------
જૂથ (jūtha)
ટુકડી(ṭukaḍī)
પક્ષકાર(pakṣakāra)

Hindi
-------
अपराध सहकारी(aparaadh sahakaaree)
उत्सव(utsav)
गोष्ठी(goshthee)
जत्था(jattha)
जनसमूह(janasamooh)
जश्न(jashn)
टोली(tolee)
दल(dal)
दावत(daavat)
पक्षकार(pakshakaar)
पञ्चायत(panchaayat)
पार्टी(paartee)
पार्टी चलना(paartee chalana)
पार्टी में जाना(paartee mein jaana)
प्रीति भोज(preeti bhoj)
प्रीतिभोज(preetibhoj)
फरीक मुकदमा(phareek mukadama)
फौज का भाग(phauj ka bhaag)
भोजन(bhojan)
रंग-बिरंगे(rang-birange)
वादी(vaadee)
विशिष्ट जन(vishisht jan)
व्यक्ति(vyakti)
समर्थक(samarthak)
समाज(samaaj)
समारोह(samaaroh)
सहायक(sahaayak)
साझी(saajhee)

Marathi
----------
उपाहार(Upāhāra)
पक्ष(pakṣa)
पक्षकार(pakṣakāra)
पथक(pathaka)
पार्टी(pārṭī)
भाग घेणारा(bhāga ghēṇārā)
भागीदार(bhāgīdāra)
संबंधीत व्यक्ति(sambandhīta vyakti)

Telugu
---------
కక్షి(Kakṣi)
జట్టు(jaṭṭu)
తండా(taṇḍā)
తరఫు(taraphu)
దళం(daḷaṁ)
పక్షం(pakṣaṁ)
పెళ్లివారు(peḷlivāru)
బలగం(balagaṁ)
బృందం(br̥ndaṁ)
మేళం(mēḷaṁ)
విందు(vindu)
వేడుక(vēḍuka)
వైపు(vaipu)

ஐயா,

தெலுங்கை தவிர வேறெந்த இந்திய மொழிகளில் Kakṣi என்ற சொல் இருப்பதாக தெரியவில்லையே.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jun 30, 2017, 9:41:59 AM6/30/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு”

”எல் படு பொழுதின் இனம் தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல் ஏறு”

கட்சி = refuge, shelter.

---------------

அரசியற் கக்ஷிகள் என்ற இடத்தில் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை,
கக்ஷி இந்தியா முழுதும் பயன்பாட்டில் உள்ளது. உ-ம்: ஜனதா கக்‌ஷி, காங்கிரஸ் கக்‌ஷி, ...
பெரியார், அண்ணா காலத்தில் வடசொல்லை அப்படியே பத்திரிகைகள் பயன்படுத்தின.

2015 ஓர் பழைய மடல்:

On Tuesday, February 17, 2015 at 8:32:45 AM UTC-8, oruarizonan wrote:
காணும் உறுப்பு: கண்:  காணும் தொழிலைச் செய்வதால் கண்ணென்று பெயர் பெற்றது.
காண்பது காட்சி.

இரண்டும் தூய தமிழ்ச் சொற்களே!

ஆம். கட்சி என்ற தூய தமிழ்ச் சொல்லும் சங்க காலத்தில் இருந்தே தமிழில் உண்டு.

ஆனால், பார்ட்டி என்ற பொருளில் வடசொல் கக்‌ஷி. இதனை அண்மைக்காலம்
வரை தமிழ்நாட்டில் உபயோகித்தனர். உ-ம்:  ராஜாஜியின் தமிழிசை பற்றிய கட்டுரை.

பாரதியார் ஒரே பாராவில் எத்தனைமுறை கக்ஷி என்கிறார் பாருங்கள்.
த்ராவிட கக்ஷிகளின் ஆட்சி வந்தபிறகு கக்‌ஷி > கட்சி பிரபலம் ஆகிவிட்டது.
கக்ஷி என்ற சொல் பத்திரிகை, ரிவி தமிழில் மறைந்துவிட்டது.

காக்காய்ப் பார்லிமெண்ட

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. "நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?" என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. "போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: "மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

நா. கணேசன்

On Tue, Feb 17, 2015 at 9:14 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
hmm; my post again in English!

Mr ganesan has used திராவிடக் கக்ஷிகளின் ஆட்சி and திராவிட கட்சிகளின் தலைமை  within the post; so I donot think he had intended to show the Sanskrit origin of the word;  later he has been invited to do that!

for me சாக்ஷி  சாட்சி  காட்சி  காக்ஷி all are equal and part of the tamil lingo! (just the use of extended tamil alphabet does not make them Sanskrit words; yes they might have originated probably in Sanskrit or Indo-Germanic languages.)
Leaving that aside, I am still not clear about the meaning of original post ஒற்றுமை என்பது இறையாண்மை அடிப்படையிலும் பிரிவு என்பது அரசாண்மை ; does it reflect the current political situation?

again I am reminded of my erstwhile posting on advantages and disadvantages of a Tamil Nationhood! (ie if tamilnadu separates from India)

regards
rnkantan

Raju Saravanan

unread,
Jun 30, 2017, 9:46:28 AM6/30/17
to mint...@googlegroups.com
//இது ஆர்ய மொழிகளின் வார்த்தை. கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

கட்சி (Party) என்ற சொல்லுக்கு வேறு எந்த இந்திய மொழிகளிலும் (தெலுங்கை தவிர) இந்தோ-ஐரோப்பியச் சொல்  Kakṣi அல்லது கக்ஷி என்ற சாயலில் சொற்கள் இருப்பது போல் தெரியவில்லை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jun 30, 2017, 10:09:40 AM6/30/17
to மின்தமிழ்

On Friday, June 30, 2017 at 6:46:28 AM UTC-7, இராசு சரவணன் wrote:
//இது ஆர்ய மொழிகளின் வார்த்தை. கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

கட்சி (Party) என்ற சொல்லுக்கு வேறு எந்த இந்திய மொழிகளிலும் (தெலுங்கை தவிர) இந்தோ-ஐரோப்பியச் சொல்  Kakṣi அல்லது கக்ஷி என்ற சாயலில் சொற்கள் இருப்பது போல் தெரியவில்லை.

மலையாளம்:

കക്ഷം kakšam S. Hiding place, armpit; side, flank. കക്ഷി M. 1. opposite side or party. 2. peril ക. പിണഞ്ഞു was endangered ക. ആയ്പോ യി = അബദ്ധം.

കക്ഷിക്കാരന്‍ 1. party — ഉടന്പടി ചെയ്ത കക്ഷി ക്കാര്‍ (jud.). ഇരുകക്ഷിക്കാരും MR. എതിര്‍ക. the opponent. 2. a cunning, dangerous man.

കക്ഷ്യ 1. girdle, enclosure. 2. = കക്ഷ്യം— പ്രഥമ കക്ഷ്യയില്‍ കടന്നു KR.

-- 0189 --

കക്ഷ്യം S. wall & the court enclosed നൃപഗൃഹ ത്തിന്‍റെ ദ്വിതീയ ക'ത്തില്‍ KR. മദ്ധ്യ ക. പ്രവേശിച്ചു AR.

N. Ganesan

unread,
Jun 30, 2017, 10:32:48 AM6/30/17

கிட்டல் அகராதியில் இருந்து:

கன்னடம்
ಕಕಷಿ kakṣi. one party as opposed to another; objection, contention (My.).

ಕಕಷಿಗಾ/?/ kakṣi-gār̤a. a party (in a civil or criminal case); one who maintains or defends a claim or wrong at issue (My.).

ಕಕಷ kakṣa. = ಕಚಚ 1, ಕಚಚೆ the hem of a garment tucked into the waist-band (ಕಚಚೆ Mr. 491). 2, a piece of cloth worn over the privities (ಕೌಪು Nn. 117). 3, a girdle, a string or zone for fastening a cloth round the waist (ಉಡಿನೂಲ, ಉಡಿದಾರ 117; ಕಾಂಚಿ 491). 4, grass. 5. a climbing plant. 6, a court in a palace, etc. (ಪರಾಂಗಣ, ಅಂಗಣ 117; ಮನದಿರದ ಮುಮಭಾಗ 491). 7, the arm- pit (ಕಂಕು/?/ 117; ಕಂಕು/?/ Mr. 321. 486, o. r. ಕ೉ಂಕ/?/). 8, a forest, a wild (ಕಾನತಾರ, ಅಡವಿ 117; ಅಟವಿ, ವಿಪಿನ etc. Mr. 151). 9, an objection or reply in argument. 1, the side or flank. see Prv. s. ಪರಸತ.

Raju Saravanan

unread,
Jun 30, 2017, 10:33:16 AM6/30/17
to mint...@googlegroups.com

இந்திய மொழிகளில் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு நெருங்கிய தொடர்புடைய வட இந்திய மொழிகளில்  Party என்ற சொல் தொடர்புடைய எந்த ஒரு சொல்லிலும் Kakṣi அல்லது கக்ஷி என்ற சொற்கள்  இல்லை.

எனவே 

//கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

என்பது தவறு எனலாம்.

மேலும் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் கட்சி என்ற சொல்லே அங்கு  Kakṣi அல்லது கக்ஷி என்று பயன்படுத்தபடுகிறது என்று சொல்வதே சரியாக இருக்கும்.

--

N. Ganesan

unread,
Jun 30, 2017, 10:38:22 AM6/30/17
to மின்தமிழ்

On Friday, June 30, 2017 at 7:33:16 AM UTC-7, இராசு சரவணன் wrote:

இந்திய மொழிகளில் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு நெருங்கிய தொடர்புடைய வட இந்திய மொழிகளில்  Party என்ற சொல் தொடர்புடைய எந்த ஒரு சொல்லிலும் Kakṣi அல்லது கக்ஷி என்ற சொற்கள்  இல்லை.

எனவே 

//கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

என்பது தவறு எனலாம்.

கக்ஷி - ஸம்ஸ்கிருதச் சொல். எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள சொல்.
 
மேலும் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் கட்சி என்ற சொல்லே அங்கு  Kakṣi அல்லது கக்ஷி என்று பயன்படுத்தபடுகிறது என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இல்லை. கக்ஷி - ஸம்ஸ்கிருதச் சொல் (from Indo-European). Not a Tamil word in origin. In all Indian languages, kaksh- words of IE/Sanskrit exist. kaksh-initial words are not from Dravidian/Tamil.

N. Ganesan, PhD
 
On 30 June 2017 at 18:09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Friday, June 30, 2017 at 6:46:28 AM UTC-7, இராசு சரவணன் wrote:
//இது ஆர்ய மொழிகளின் வார்த்தை. கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

கட்சி (Party) என்ற சொல்லுக்கு வேறு எந்த இந்திய மொழிகளிலும் (தெலுங்கை தவிர) இந்தோ-ஐரோப்பியச் சொல்  Kakṣi அல்லது கக்ஷி என்ற சாயலில் சொற்கள் இருப்பது போல் தெரியவில்லை.

மலையாளம்:

കക്ഷം kakšam S. Hiding place, armpit; side, flank. കക്ഷി M. 1. opposite side or party. 2. peril ക. പിണഞ്ഞു was endangered ക. ആയ്പോ യി = അബദ്ധം.

കക്ഷിക്കാരന്‍ 1. party — ഉടന്പടി ചെയ്ത കക്ഷി ക്കാര്‍ (jud.). ഇരുകക്ഷിക്കാരും MR. എതിര്‍ക. the opponent. 2. a cunning, dangerous man.

കക്ഷ്യ 1. girdle, enclosure. 2. = കക്ഷ്യം— പ്രഥമ കക്ഷ്യയില്‍ കടന്നു KR.

-- 0189 --

കക്ഷ്യം S. wall & the court enclosed നൃപഗൃഹ ത്തിന്‍റെ ദ്വിതീയ ക'ത്തില്‍ KR. മദ്ധ്യ ക. പ്രവേശിച്ചു AR.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 30, 2017, 10:41:35 AM6/30/17
to மின்தமிழ்

On Friday, June 30, 2017 at 7:33:16 AM UTC-7, இராசு சரவணன் wrote:

இந்திய மொழிகளில் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு நெருங்கிய தொடர்புடைய வட இந்திய மொழிகளில்  Party என்ற சொல் தொடர்புடைய எந்த ஒரு சொல்லிலும் Kakṣi அல்லது கக்ஷி என்ற சொற்கள்  இல்லை.

North Indian languages have lots of Arabic-Persian words now due to long Islamic rule.

But all North Indian languages do have kaksha, kakshi and kash-derived words.

N. Ganesan
 
எனவே 

//கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

என்பது தவறு எனலாம்.

மேலும் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் கட்சி என்ற சொல்லே அங்கு  Kakṣi அல்லது கக்ஷி என்று பயன்படுத்தபடுகிறது என்று சொல்வதே சரியாக இருக்கும்.

On 30 June 2017 at 18:09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Friday, June 30, 2017 at 6:46:28 AM UTC-7, இராசு சரவணன் wrote:
//இது ஆர்ய மொழிகளின் வார்த்தை. கக்ஷி என எல்லா இந்திய மொழிகளிலும் உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் இது.//

கட்சி (Party) என்ற சொல்லுக்கு வேறு எந்த இந்திய மொழிகளிலும் (தெலுங்கை தவிர) இந்தோ-ஐரோப்பியச் சொல்  Kakṣi அல்லது கக்ஷி என்ற சாயலில் சொற்கள் இருப்பது போல் தெரியவில்லை.

மலையாளம்:

കക്ഷം kakšam S. Hiding place, armpit; side, flank. കക്ഷി M. 1. opposite side or party. 2. peril ക. പിണഞ്ഞു was endangered ക. ആയ്പോ യി = അബദ്ധം.

കക്ഷിക്കാരന്‍ 1. party — ഉടന്പടി ചെയ്ത കക്ഷി ക്കാര്‍ (jud.). ഇരുകക്ഷിക്കാരും MR. എതിര്‍ക. the opponent. 2. a cunning, dangerous man.

കക്ഷ്യ 1. girdle, enclosure. 2. = കക്ഷ്യം— പ്രഥമ കക്ഷ്യയില്‍ കടന്നു KR.

-- 0189 --

കക്ഷ്യം S. wall & the court enclosed നൃപഗൃഹ ത്തിന്‍റെ ദ്വിതീയ ക'ത്തില്‍ KR. മദ്ധ്യ ക. പ്രവേശിച്ചു AR.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Raju Saravanan

unread,
Jun 30, 2017, 11:18:49 AM6/30/17
to mint...@googlegroups.com
//North Indian languages have lots of Arabic-Persian words now due to long Islamic rule.

But all North Indian languages do have kaksha, kakshi and kash-derived words.
//

No equivalent word available for party like  kaksha, kakshi and kash in any one of the North indian languages. 

Thanks

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jun 30, 2017, 11:21:51 AM6/30/17
to vallamai, மின்தமிழ்
 இனம் தலை மயங்கிக்
கட்சி காணாக்"

இந்த வரிகளால் கட்சியில் தன் இனம் இருக்கிறது என பொருள். அதைக்காணாத ஏறு.

கட்சி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதுக்கு நாங்கள் மக்கள் கூட்டம் என்ற ஒரு பொருளையும் கூட்டிக்கொள்வோம். சும்மா அது கக்‌ஷி என வம்பு பண்ணாதீர்.
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Raju Saravanan

unread,
Jun 30, 2017, 11:44:01 AM6/30/17
to mint...@googlegroups.com
Party என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 

தமிழில் 

கட்சி
கட்டுப்பாடு
கன்னை
குமுக்கு
கூட்டத்தார்
கூட்டம்
கை
சார்பு
சேகரத்தார்
பகல்
பக்கம்

சொற்கள் உள்ளன.

மேலும் Party என்ற ஆங்கிலச்சொல்லே

பாத்தி pātti 

n. < பாத்து-. 1. Division, section, classification; பகுதி. மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே (தொல். எழுத். 172). 2. [K. pāti, M. pātti.] Parterre, pan, small field; சிறு செய். வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று (குறள், 718). 3. Part, portion, share; பங்கு. (W.) 4. House, dwelling, abode; வீடு. (பிங்.)

என்ற தமிழ் சொல்லிலிருந்து சென்றிருக்குமோ என்ற ஐயமும் தோன்றுகிறது. 

இது உண்மையானால், பெரும்பாலான வட இந்திய மொழிகளில் Party என்ற சொல்லுக்கு நிகராக வழங்கப்படும் 

পার্টি(Pārṭi)
पार्टी(paartee)
पार्टी(pārṭī)

போன்ற சொற்கள் பாத்தி என்ற தமிழ் சொல்லின் மூலங்களே என்றும் கூறலாம்.

நன்றி 

--

N. Ganesan

unread,
Jun 30, 2017, 12:03:40 PM6/30/17
to மின்தமிழ்
2017-06-30 8:21 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
 இனம் தலை மயங்கிக்
கட்சி காணாக்"

இந்த வரிகளால் கட்சியில் தன் இனம் இருக்கிறது என பொருள். அதைக்காணாத ஏறு.

கட்சி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதுக்கு நாங்கள் மக்கள் கூட்டம் என்ற ஒரு பொருளையும் கூட்டிக்கொள்வோம். சும்மா அது கக்‌ஷி என வம்பு பண்ணாதீர்.
 
சங்கத் தமிழில் உள்ள கட்சி தமிழ்ச் சொல்.

கக்ஷி (> கட்சி) தமிழ்ச் சொல் அல்ல. kakSa, kakSi ... kakS- are Indo-European & Sanskrit and the derived words are IE.

NG
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--

N. Ganesan

unread,
Jun 30, 2017, 12:13:48 PM6/30/17
to மின்தமிழ், vallamai

On Friday, June 30, 2017 at 8:18:49 AM UTC-7, இராசு சரவணன் wrote:
//North Indian languages have lots of Arabic-Persian words now due to long Islamic rule.

But all North Indian languages do have kaksha, kakshi and kash-derived words.
//

No equivalent word available for party like  kaksha, kakshi and kash in any one of the North indian languages. 

North Indian languages have the original Indo-European word, kakSa for example in Rgveda.
North Indian languages do have the meaning for kaksha as "side, armpit, side of the body, edge"
for 1000s of years. left or right part of the body, waist, armpit is kaksha-. North Indian and Tamil languages
do have kaccha, kacchu "belt, the covering cloth of breasts" < kaksha.

All south Indian languages have the modern political party names, opponents in the court case
derived from this Sanskrit/IE kaksh-. This comes from 1000s of years of Veda competion,
called "srauta kaksha". That is employed by Tamil papers in 20th century, from veda competition.
will write on a separate thread how Sanskrit (IE) word gets to become a word for politcal or
court-case paries. This is from long history of Veda recital and competing parties, called as kaksha-s.

Thanks,
N. Ganesan
 
iraamaki

unread,
Jun 30, 2017, 7:18:36 PM6/30/17
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
திரு. நா.க.
 
உங்களுக்குக் கொஞ்சங்கூட வெட்கம் வராதா?
 
சங்கத்தமிழில் கட்சி என்ற சொல் இருக்கிறதென்று இங்கு முதலிற் சொன்னதே இராசம் அம்மா தான்.  (நான் சிலம்பில் என்று சொன்னேன்) அதை ஒத்துக்கொள்ளாமல் ஏதோ நீங்கள் கண்டுபிடித்தது போல இப்பொழுது சொல்லிக்கொள்கிறீர்கள். அம்மாவின் பெயரைச் சொல்லிவிட்டால் அவர்களின் புலமையை நீர் ஏற்றதாய் ஆகிவிடுமோ? இதுகாறும் கக்ஷ என்று நீர் எழுதவேயில்லை. அதை கக்ஷி என்றே எழுதிவந்தீர். நான் மோனியர் வில்லியம்சு பார்த்து கக்ஷ என்ற வடிவம் தான் அங்கு இருக்கிறதென்று சொன்னேன். அது கக்கத்திலிருந்து வந்திருக்கலாமென்றுஞ் சொன்னேன். அதையும் நீர் கண்டுகொள்ளவில்லை. நான் காட்டிய சிலம்புப் பயன்பாட்டையும் கண்டுகொள்ளவில்லை. சங்க இலக்கியச் சான்றுகளை  நூ.த.லோ.சு. இங்கு பட்டியல் இட்டார். அதையும் புறந்தள்ளிவிட்டீர். மோனியர் வில்லிம்சே, கக்ஷ என்ற சொல்லின் முதற்பயன்பாடு, கூட்டற்பொருளில் சர்வதர்ஷண சங்க்ரஹ என்ற நூலில் வருவதாய்க் குறிப்பிட்டிருக்கிறது என்றுங் கூறினேன். நீர் கண்டுகொள்ளவில்லை. நூதலோசு ள்+சி = ட்சி என்று புணர்ச்சியில் ஆகுமென்ற  தமிழ்ச்சான்றுகளைத் தந்தார். க்ஷி என்று சங்கதத்திலிருந்து சங்ககாலத்தில் தமிழில் வந்தால் க்கி என்றுதானே வந்திருக்குமென்று வேந்தன் அரசு கேட்டார். நீர் மறுமொழி கூறவில்லை. கூட்டப்பொருளில் பழைய சங்கத நூலிலிருந்து ஒரு சான்றும் நீர் கொடுக்கவில்லை. இதேபோல் வட இந்தியமொழிகள், வெளிநாட்டில் உள்ள மற்றை இந்தியிரோப்பிய மொழிகளிலிருந்தும் ஒரு சான்றும் நீர் கொடுக்கவில்லை. rashlac தெலுங்கில் இருக்கிறதென்று காட்டியபிறகு நீர் மலையாளத்தையும் கன்னடத்தையும் காட்டினீர். இப்படித் திராவிட மொழிகளிலிருந்து மட்டுஞ் சான்றுகாட்டி என்ன பயன்? மற்ற மொழிகளில் எங்கே?
தன்னைச்சுற்றி இவ்வளவுபேர் இத்தனைசெய்தும், அவற்றை அவர்களின் பெயர்சொல்லி ஏற்புத் தராமல், ”ஏதுமே டக்கவில்லை” என்றபாவனையில்  இருந்துகொண்டு, தான் சொன்னதையே கீறல்விழுந்த தட்டுப்போல் திருப்பிச்சொல்வதற்கும் ஓர் அடம், அகப்பாடு (ego)  வேண்டுமையா! அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. சுற்றியிருப்பவரைத் துச்சமாய் மதிப்பதில் நீர் உண்மையிலேயே வல்லாள கண்டன்.  நீர் பிடித்த முயலுக்கு மூன்று கால்.
 
என்ன? நீர் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடவேண்டியது தான். 
வாழ்க நீவீர்.
 
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jun 30, 2017, 7:21:58 PM6/30/17
to மின்தமிழ்
திரு. இராம. கி.,

சங்க இலக்கியத்தில் கட்சி இருப்பதை மின் தமிழில் ஏற்கெனவே பேசியுள்ளோம். அப்போது நீங்கள் எழுதுவதில்லை இங்கே.

கக்‌ஷி என்று பாரதியார், பெரியார் போன்றவர்கள் பயன்படுத்தும் இந்தோ-ஐரோப்பியச் சொல் என்று விளக்குவதில்
எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை.

நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Jul 1, 2017, 3:24:52 AM7/1/17
to மின்தமிழ்
When bharathi used (brahmanical Sanskrit) word கக்‌ஷி கக்ஷி with grantha letters he did not use it in the meaning or sense of கட்சி in old Tamil literature. If he meant the meaning of கூட்டம், he would have used கட்சி itself. He would not have sanskritised கட்சி.

To my limited understanding கக்ஷி means (a class or group from the whole, a subset.) This also matches with party which presumably has 'part', a division or grouping as its base. Essentially party or கக்ஷி means a group, which is part of the whole with a distinction or difference. An enlarged version of கோஷ்டி.

But with tamilisation of கக்ஷி as கட்சி (அக்‌ஷ்ய அட்சய), we are moving away from a Tamil derivative to a long used Tamil word of Tamil origin.

Bottom line:if we are looking கட்சி _as derived from கக்ஷி by Bharati it is Sanskrit. If we go by examples given by Tamil scholars here where கட்சி was shown used in old tamil literature to mean group or கூட்டம், we can now say and use கட்சி as a real Tamil word with long tradition without borrowing or trans-tamilizing கக்ஷி.

It may be noted that bharathi used grantha letters very comfortably probably identifying his origin and indicating his desire to show Tamil as dynamic, encompassing and accepting changes to grow. (He used
பாரத ஸமுதாயம், ஜீவ வாக்கு, ஜகதீச சந்த்ரவஸு, இந்த ஸமயத்தில்ஹி ந்துக்கள் பிரிவு பேசலாமோ? ஹிந்துக்கள் பிரிந்து கிடந்தால், ஹிந்து தர்மத்தின் மஹிமையை உலகத்தார் காண்பதெப்படி?”,இன்னுமொரு கக்ஷி: “இந்த ஜகத்திற்குள் ஓராத்மாவுண்டு. அது ஸர்வ சக்தி மயமானது,, etc............)

Rnk
Reply all
Reply to author
Forward
0 new messages