பழமொழி விளக்கம்

2,536 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2010, 9:37:31 AM6/13/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com
நண்பர்களுக்கு

தமிழில் காணக்கிடைக்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தேவைப்படுகிறது

மொத்தமாக கிடைக்குமா?

அல்லது என்னிடம் பழமொழி மட்டும் உள்ளது. அதன் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கிடைக்குமா?

தினம் ஒன்று வைத்து ஆராந்தால் போதுமானது

இன்று

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

பதில் எதிர்பார்த்து.......

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

நண்பன்

unread,
Jun 14, 2010, 2:12:30 AM6/14/10
to mint...@googlegroups.com
அகல இருந்தால் நிகழும்  உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அசலூர்  என்று  வெளியூர்  நபர்களை  குறிப்பிட்டு  சொல்கிறார்களே

அயல்  அன்று  சொல்   மாறி  அசல்  ஆகி விட்டது
2010/6/13 வினோத்-VINOTH <vino...@gmail.com>

நண்பர்களுக்கு

--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

ananda rasa thiruma

unread,
Jun 14, 2010, 2:32:10 AM6/14/10
to mint...@googlegroups.com
அகலம் என்பதன் எதிர்ச்சொல் நீளம். அதனைப் பேச்சுவழக்கில் நிகளம் என்பர். எட்டி இருந்தால் உறவு நீண்டிருக்கும் என்றும். நெருங்கி இருந்தால் முட்டிக்கொள்ளும் அளவிற்குப் பகை ஏற்படும் என்றும் இந்தப் பழமொழி கருத்துத் தெரிவிக்கிறது. அகலாது அணுகாது தீக்காய்வாற் போல என்பதும் அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சி இக்கருத்தை வலியுறுத்தும் மற்றொரு மரபுத் தொடர்.
அன்புடன்
ஆராதி

2010/6/14 நண்பன் <naz...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ananda rasa thiruma

unread,
Jun 14, 2010, 2:33:52 AM6/14/10
to mint...@googlegroups.com
அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும் எனத் தட்டச்சு செய்தது இடைத்தடங்கலால் மாறியுள்ளது.
அன்புடன்
ஆராதி

2010/6/14 ananda rasa thiruma <aara...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 2:47:00 AM6/14/10
to mint...@googlegroups.com

2010/6/14 நண்பன் <naz...@gmail.com>

அகல இருந்தால் நிகழும்  உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அசலூர்  என்று  வெளியூர்  நபர்களை  குறிப்பிட்டு  சொல்கிறார்களே

அயல்  அன்று  சொல்   மாறி  அசல்  ஆகி விட்டது

நன்றி நண்பா

நண்பன்

unread,
Jun 14, 2010, 2:47:45 AM6/14/10
to mint...@googlegroups.com
அய்யா  நீங்கள்  சொனது சரிதான் . சில  பேர்  அப்படி பேசி  பார்த்து  இருக்கிறேன்  ( நிகளம்)

2010/6/14 ananda rasa thiruma <aara...@gmail.com>
அகலம் என்பதன் எதிர்ச்சொல் நீளம். அதனைப் பேச்சுவழக்கில் நிகளம் என்பர். எட்டி இருந்தால் உறவு நீண்டிருக்கும் என்றும். நெருங்கி இருந்தால் முட்டிக்கொள்ளும் அளவிற்குப் பகை ஏற்படும் என்றும் இந்தப் பழமொழி கருத்துத் தெரிவிக்கிறது. அகலாது அணுகாது தீக்காய்வாற் போல என்பதும் அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சி இக்கருத்தை வலியுறுத்தும் மற்றொரு மரபுத் தொடர்.

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 2:47:34 AM6/14/10
to mint...@googlegroups.com
2010/6/14 ananda rasa thiruma <aara...@gmail.com>
அகலம் என்பதன் எதிர்ச்சொல் நீளம். அதனைப் பேச்சுவழக்கில் நிகளம் என்பர். எட்டி இருந்தால் உறவு நீண்டிருக்கும் என்றும். நெருங்கி இருந்தால் முட்டிக்கொள்ளும் அளவிற்குப் பகை ஏற்படும் என்றும் இந்தப் பழமொழி கருத்துத் தெரிவிக்கிறது. அகலாது அணுகாது தீக்காய்வாற் போல என்பதும் அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு இக்கருத்தை வலியுறுத்தும் மற்றொரு மரபுத் தொடர்.

நன்றி

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 3:07:00 AM6/14/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com
விளக்கம் அழித்தவர்களுக்கு மிக்க நன்றி

இன்றைய பழமொழி

அகல் வட்டம் பகல் மழை.

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 3:07:25 AM6/14/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

2010/6/14 வினோத்-VINOTH <vino...@gmail.com>
விளக்கம் அளித்தவர்களுக்கு மிக்க நன்றி

--

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 3:11:51 AM6/14/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com
இணையத்தில் தேடிய போது கிடைத்த விளக்கம்

சில நாட்களில் சூரியனை மையமாகவைத்துச் சுற்றிலும் சிறிது  தூரத்தில் ஏழுநிறங்கள் கொண்ட வட்டம் தெரியும். இதனை பரிசேடம்,  பரிசேஷம், அகல்வட்டம் என்று சொல்வார்கள்.
இவ்வாறு தோன்றினால், அன்று பகலில் மேகம் அதிகமில்லாமலேயே
மழை வந்துவிடும்.

இதற்கும் வானவில்லுக்கும் இடையே உள்ள வித்தியாசம்
இதுதான். வானவில்லோ, மாலை நேரத்தில் மழைத் தூறல் அல்லது சாரல்
விழும்போது, சூரிய ஒளியும் இருந்தால் தோன்றும். பரிசேடமோ பட்டப்
பகலில் மேகமில்லாமலும் மழைத்தூறலில்லாதபோதும் தோன்றும்.
மழை பெய்யும் தோற்றமே அறவே இல்லாதபோதிலும்கூட, பரிசேடம்
தெரிந்ததானால் கட்டாயம் சில மணி நேரங்களில் மழை பெய்யும்.
பரிசேடம் என்பது பூரணச்சந்திரனைச் சுற்றிலும்கூட தெரியக்கூடும்.
ஆனால் இது ஓர் அசாதாரண நிகழ்வு.
வானிலை முன்னறிப்புக்கென பல அறிகுறிகளை நம்ம ஆட்கள்
வைத்திருந்தார்கள்.

பட்டினத்தார் பாடல் ஒன்றில் பார்த்திருப்பீர்களே?

உடை கோவணம் உண்டு; உறங்கப் புறந்திண்ணை உண்டு;
அடைகாய் இலையுண்டு; அருந்தத் தண்ணீர் உண்டு; அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு; இந்த மேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன? தென்கோடு சாய்ந்தென்ன, வான்பிறைக்கே?

Care a damn என்று சொல்வார்களே, அந்த தொனியில்
பட்டினத்தார் பாடியிருக்கிறார். அவருக்கென்ன, பாடுவதற்கு?
கொடுத்துவைத்தவர். 20, 21-ஆம் நூற்றாண்டில் பிறக்காமல் வேறு
ஆட்களை
வடகோடு தென்கோடு சாய்வது உயர்வது எல்லாம் வானிலை
அறிகுறிகள்தாம். மகவோட்டம் என்றும் ஒன்று இருக்கிறது. அடுத்த
மாதத்தில் அடுத்த பௌர்ணமியில் அதனைக் காணலாம்.
--
ஜெயபாரதி

gurunathan vignesh

unread,
Jun 14, 2010, 3:15:13 AM6/14/10
to mint...@googlegroups.com
in simple words you can say this...... detach attachment is the best.... this is the meaning......  one more tamil proverb means the same.... " virundhum marandhum moondru nalaikuthan"  ......

வினோத்-VINOTH

unread,
Jun 14, 2010, 12:32:21 PM6/14/10
to mint...@googlegroups.com

2010/6/14 gurunathan vignesh <guruvig...@gmail.com>

in simple words you can say this...... detach attachment is the best.... this is the meaning......  one more tamil proverb means the same.... " virundhum marandhum moondru nalaikuthan"  ......

நன்றிங்க

வினோத்-VINOTH

unread,
Jun 15, 2010, 1:03:38 PM6/15/10
to mint...@googlegroups.com
விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றி

இன்றைய பழமொழி

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 1:54:38 PM6/15/10
to mint...@googlegroups.com
2010/6/15 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றி

இன்றைய பழமொழி

திருமணம் ஒன்றை நடத்துவதையும்,வீடு ஒன்று கட்டுவதையும் இணைத்தும் ஒரு பழமொழி சொல்வார்கள்.

அது வெவ்வேறு வடிவங்களில் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

வீட்டைக்கட்டிப்பார் கல்யாணத்தை நடத்திப்பார் என்றும், பெண் கொடுப்படும் வீடு கட்டுவதும் ஒன்றுதான் என்றும் ஒரே கருத்துப்பட வெவ்வேறு வடிவங்களில் இப்படியான அர்த்தமுள்ள பழமொழிகள் காணப்படுகின்றன.

பழைய பணக்காரர்கள் சேர்ந்து, புதுப் பணக்காரருக்கு குட்டி யானை ஒன்றைப் பரிசாகக் கொடுப்பார்கள் என்று ஒரு கதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனவே,அவர் அந்த யானையைப் பராமரித்து வளர்ப்பதிலேயே பணத்தை விரயமாக்கி அழிந்துவிடுவார் என்ற எண்ணம் இக்கதையில் காட்டப்படுகிறது.

எனவே, யானையை வளர்ப்பதும் வீடு கட்டுவதும் இங்கு ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

--
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

வினோத்-VINOTH

unread,
Jun 15, 2010, 2:57:56 PM6/15/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

2010/6/15 Kandavel Rajan <kandav...@gmail.com>

யானையை வளர்ப்பதும் வீடு கட்டுவதும் இங்கு ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

நன்றி ஜி

venkatachalam Dotthathri

unread,
Jun 15, 2010, 7:47:42 PM6/15/10
to mint...@googlegroups.com

 அகலம் என்பதன் எதிர்ச்சொல் நீளம். அதனைப் பேச்சுவழக்கில் நிகளம் என்பர்.

ஓம்
ஸ்ரீ லலிதா நவத்தினமாலையில்: “நிகளம் துகளாக்”
என்று வருகிறது.

வலையொத்தவினை கலை யொத்த மனம்
            மருளப் பறையா றொலி யொத்த விதால்
நிலை யற்றெளியேன் முடியத் தகுமோ
           நிகளம் துகளா கவரம் தருவாய்
அலை யற்ற சைவற்ற நுபூதி பெறும்
           அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
           மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

வெ.சுப்பிரமணியன் ஓம்

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2010, 9:09:35 AM6/16/10
to mint...@googlegroups.com
யானையைக் கவனித்துப் பாருங்கள்
அசைந்து கொண்டே இருக்கும்
 
அந்த யானையின் உருவ அமைப்பு ,அதன் கனம் தாங்காமல்  அந்த யானையின்
காலகள்  வலிக்க ஆரம்பிக்கும், அந்த வலியைப் போக்கவும் , அந்தன் யானை  உண்ணும் உணவு  செரிமானம் ஆகவும்  யானை அசைந்துகொண்டே இருக்கும்
 
ஆனால் நாம் கட்டும் வீடுகள் அப்படியல்ல
 
அஸ்திவாரம்  பலமாகப் போடுவதால், அந்த அஸ்திவாரம் வலிமையாக மேலே எழும்பி இருக்கும்  கட்டிடத்தை  தாங்கிக் கொண்டே இருக்கும்
 
ஆனால்  நாம் எவ்வளவு செலவழித்து  அலங்காரம் செய்தாலும் அவ்வளவு செலவையும் வாங்கிக் கொண்டு  அசையாமல்   அது வரை நாம் செலவழித்தது எவ்வளவானாலும்  அது வெளியே தெரியாமல்
அது பாட்டுக்கு  அசையாமல்  நின்று தாங்கிக் கொண்டே  இருக்கும்
 
எவ்வளவு  செலவழித்தாலும்  அசையாமல்  இருக்கும் வீடுகள்
இதற்குதான்
 
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு என்று கூறுவார்கள்
 
பழமொழிகள்  விளக்கம் என்று நான்  ஒவ்வொரு பழமொழியாக எடுத்துக்கொண்டு  ஆராய்ச்சி செய்து எழுதி வருகிறேன்  அவற்றைப் படிக்க  http://thamizthenee.blogspo.com   என்னும்  பிளாகில் படிக்கலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
15-6-10 அன்று, Kandavel Rajan <kandav...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

நண்பன்

unread,
Jun 16, 2010, 9:12:46 AM6/16/10
to mint...@googlegroups.com
யானை  இருந்தாலும்  , இறந்தாலும் ஆயிரம் பொன்
வீடு  இருந்தாலும்  ஆயிரம் பொன் , இடிந்தாலும் ஆயிரம் பொன்

நண்பன்

unread,
Jun 16, 2010, 9:18:51 AM6/16/10
to mint...@googlegroups.com

குந்தி  தின்றால்  குன்றும் குறையும்

அசையாமல் தின்கிறது வீடு

இந்த இரண்டு  பழ மொழிகளுக்கும்  எதாவது  முடிச்சு  உண்டா ?
--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2010, 9:23:35 AM6/16/10
to mint...@googlegroups.com
எறும்பூறக் கல்லும் தேயும் என்னும் பழமொழிக்கும்
 
குன்றித்தின்றால்  குன்றும் தேயும்  என்னும் பழமொழிக்கும் தொடர்புண்டு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
16-6-10 அன்று, நண்பன் <naz...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

நண்பன்

unread,
Jun 16, 2010, 9:26:00 AM6/16/10
to mint...@googlegroups.com
ஆஹா . பலே . சரியான  உதாரணம்

2010/6/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

எறும்பூறக் கல்லும் தேயும் என்னும் பழமொழிக்கும்
 
குன்றித்தின்றால்  குன்றும் தேயும்  என்னும் பழமொழிக்கும் தொடர்புண்டு
 
venkatachalam Dotthathri

unread,
Jun 16, 2010, 1:28:47 PM6/16/10
to mint...@googlegroups.com
ஓம்
கொட்டி திரும்ப வாரி எடுக்கும் போது முதலில் இருந்த தானியம் அளவு குறையும்.
அதனின்றும் கொட்டிக் கொடுத்தால் குறையும் என்ற முது மொழி வந்தது.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.;
கரைக்கக் கரைக்க கல்லும் கரையும்;
ஓம்

2010/6/16 நண்பன் <naz...@gmail.com>
--

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 11:48:21 PM6/16/10
to mint...@googlegroups.com

2010/6/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

யானையைக் கவனித்துப் பாருங்கள்
அசைந்து கொண்டே இருக்கும்

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

அவற்றைப் படிக்க  http://thamizthenee.blogspot.com   என்னும்  பிளாகில் படிக்கலாம்

கண்டிப்பாக படிக்கிறேன்.

--

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 11:49:22 PM6/16/10
to mint...@googlegroups.com

2010/6/16 நண்பன் <naz...@gmail.com>

வீடு  இருந்தாலும்  ஆயிரம் பொன் , இடிந்தாலும் ஆயிரம் பொன்

இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே. புதியமொழியா?

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 11:50:11 PM6/16/10
to mint...@googlegroups.com

2010/6/16 நண்பன் <naz...@gmail.com>

குந்தி  தின்றால்  குன்றும் குறையும்

பையத்தின்னா பனையும் தின்னாம்

பைய - மெதுவாக..

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 11:50:52 PM6/16/10
to mint...@googlegroups.com

2010/6/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

எறும்பூறக் கல்லும் தேயும் என்னும் பழமொழிக்கும்
 
குன்றித்தின்றால்  குன்றும் தேயும்  என்னும் பழமொழிக்கும் தொடர்புண்டு

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்???

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 11:51:38 PM6/16/10
to mint...@googlegroups.com

2010/6/16 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

ஓம்
கொட்டி திரும்ப வாரி எடுக்கும் போது முதலில் இருந்த தானியம் அளவு குறையும்.
அதனின்றும் கொட்டிக் கொடுத்தால் குறையும் என்ற முது மொழி வந்தது.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.;
கரைக்கக் கரைக்க கல்லும் கரையும்;
ஓம்

மேலும் பழமொழிகளுக்கு நன்றி

வினோத்-VINOTH

unread,
Jun 16, 2010, 11:56:27 PM6/16/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்
அசைந்து தின்றது யானை அசையாமல் தின்கிறது வீடு

இப்பழமொழியில் வீடு என்பதை வீட்டில் உள்ளவர்கள் எனவும்

அசைதலை ஓடியாடி உழைப்பதையும் எனப்பொருள் கொண்டால்,

அதாவது

எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் ஒடியாடி உழைக்கால் இருக்கிற சொத்தினால் உண்ண ஆரம்பித்து விட்டால் அது யானை எவ்வளவு சீக்கிரம் உண்டு பொருளை தீர்க்குமோ அதே போல நம் பொருள் தீர்ந்து விடும்..
மேலும் நிறைய சொத்து இருந்தால் நம் கூட சேர்ந்து உண்ண நிறைய பேர் இருப்பார்கள் என்பதை கவனிக்கவும். எனவே சொத்து மிக விரைவில் தீர ஆரம்பித்துவிடும்.

என்பது சரியான விளக்கமாக இருக்குமா?

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 17, 2010, 12:47:02 AM6/17/10
to mint...@googlegroups.com
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் - இதற்கு விளக்கததை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.

http://thiruththam.blogspot.com/2009/05/blog-post_27.html

அன்புடன்,

தி.பொ.ச.

2010/6/17 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லவை செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லவை செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழில் திருத்தங்களைக் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

ananda rasa thiruma

unread,
Jun 17, 2010, 12:55:48 AM6/17/10
to mint...@googlegroups.com
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது எனக்குத் தெரிந்தவரை இப்பழமொழியின் வடிவம். அடிமேல் அடிவைத்தால் என்பது திரு பொன்சரவணன் திருத்தமோ?
அன்புடன்
ஆராதி

2010/6/17 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 17, 2010, 12:56:38 AM6/17/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

2010/6/17 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் - இதற்கு விளக்கததை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.

ஐயா
விளக்கத்திற்கு நன்றி

ஆனால்

"'நகரும்' என்ற சொல்லிற்குப் பதிலாகத் 'தகரும்' என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் 'உடையும், சிதறும்' என்று பொருள்படும்."

என்று சொல் மாற்றி விளக்கம் கூறுவது இந்த பழமொழியில் சரியாக வருமா என சந்தேகம்..

அடிமேல் அடி வைத்தால் என்று தான் கூறப்பட்டுள்ளது.

அடிமேல் அடி அடித்தால் என்றில்லை.

சிறுபிள்ளைகளையோ பெண்களையோ நடப்பதை உவமை கூறும் போது அடிமேல் அடி வைத்து என்பார்கள்.

இதையும்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

என்பதையும் இங்கே பொருத்தினால் வேறு நல்ல வளக்கம் கிடைக்ககூடும்.

அதிக திருமணம் செய்துகொண்டால்.........

சரியான விளக்கத்திற்கு அறிஞர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்..

பதில் எதிர்பார்த்து.....

--

Hari Krishnan

unread,
Jun 17, 2010, 1:09:56 AM6/17/10
to mint...@googlegroups.com

2010/6/17 ananda rasa thiruma <aara...@gmail.com>

அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது எனக்குத் தெரிந்தவரை இப்பழமொழியின் வடிவம். அடிமேல் அடிவைத்தால் என்பது திரு பொன்சரவணன் திருத்தமோ?
அன்புடன்
ஆராதி

ஐயா,

 அடிமேல் அடிவைத்தால் என்ற வடிவமும் உண்டு.  அடிவிழும் அப்படின்னு சொல்றதில்லையா?  அந்தப் பொருளில் ‘அடிமேல் அடி அடித்தால்’ என்பது, அடிமேல் அடிவைத்தால் என்று மாறியது. அடிவைத்தல் என்பது அறைதல், அடித்தல் என்ற பொருளில்தான் பயன்பட்டிருக்கிறது. 

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு

என்ற குறளின் பொருள்தான் எனக்கு இந்தப் பழமொழியில் தெரிகிறது.  தி பொ ச அவர்களுக்கு நிலாவுக்குள்ள நெருப்பு தெரியும்.  நெருப்புக்குள்ள நீலநதியே தெரியும்.

தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதையே என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கத் தொடங்கினா.....ஐயா, வேணாம்....நாம பாட்டுக்கு கம்முன்னு கிடப்போம்.  Incorrigible தெரியுமில்லையா....திருத்த முடியாதது அப்படின்னும் சொல்லலாம்.  திருத்தம் தேவையில்லாதது அப்படின்னும் சொல்லலாம்.  நாமளே இன்காரிஜிபிளா இருந்துட்டுப் போவோம்.  உட்ருங்க.:))

--
அன்புடன்,
ஹரிகி.

நண்பன்

unread,
Jun 17, 2010, 1:27:25 AM6/17/10
to mint...@googlegroups.com
அடியாத  மாடு  படியாது

இதற்கு  வேறு  எதாவது  வித்தியாசமான  விளக்கங்கள்  உண்டா

2010/6/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 17, 2010, 1:33:40 AM6/17/10
to mint...@googlegroups.com
நண்பர் ஆராதி,

அடிமேல் அடிவைத்தல் அல்லது அடிமேல் அடியடித்தல் - இவற்றில் எது உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த இருவகையான பழமொழிகளையும் நீங்கள் இணையதளங்களில் காணலாம். நான் எதையும் திருத்தவில்லை.

நான் சொன்னதெல்லாம் நகரும் என்ற சொல்லுக்குப் பதிலாக தகரும் என்று வரவேண்டும் என்பதே. அடிமேல் அடி வைப்பதாலோ அடிப்பதாலோ அம்மிக்கல் நகரப் போவதில்லை; தகரத்தான் செய்யும் இல்லையா?

அன்புடன்,

2010/6/17 ananda rasa thiruma <aara...@gmail.com>
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது எனக்குத் தெரிந்தவரை இப்பழமொழியின் வடிவம். அடிமேல் அடிவைத்தால் என்பது திரு பொன்சரவணன் திருத்தமோ?

Hari Krishnan

unread,
Jun 17, 2010, 1:38:12 AM6/17/10
to mint...@googlegroups.com

2010/6/17 நண்பன் <naz...@gmail.com>

அடியாத  மாடு  படியாது

இதற்கு  வேறு  எதாவது  வித்தியாசமான  விளக்கங்கள்  உண்டா

முருங்கைய ஒடிச்சு வளக்கணும்; புள்ளய அடிச்சு வளக்கணும். (இதில் உள்ள பிள்ளை என்பதற்கு son என்பது பொருள்.  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மகள் என்ற பொருளில் இந்தச் சொல் பயன்படுவதால் இதை விளக்க நேர்ந்தது.)

நண்பன்

unread,
Jun 17, 2010, 1:38:51 AM6/17/10
to mint...@googlegroups.com
அடி  உதவுற  மாதிரி  அண்ணன்  தம்பி  உதவ  மாட்டான்

2010/6/17 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jun 17, 2010, 9:44:28 PM6/17/10
to mint...@googlegroups.com
திரு ஹரிகி சொல்வதுபோல் பல இழைகளில் நடப்பதைப் பார்த்து ‘சும்மா இருக்கும் சுகத்தை‘ அனுபவித்து வருகிறேன். இருந்தாலும் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போலச் சில சமயங்களில் நடந்துவிடுகிறது.

தொல்காப்பிய மரபியலில் ஒரு நூற்பா.
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
என்பது அதன் முதல் அடி. இதற்கு உரை எழுதும்போது பேராசிரியர்க்கு ஒரு சந்தேகம் வந்தது. நண்டுக்கு ஏது மூக்கு என்பதே அந்தச் சந்தேகம். நண்டுக்கு மூக்கு இல்லை என்பது பேராசிரியர் எண்ணம். ஆனால் ‘நூலாசிரியர் சொல்லி இருக்கிறாரே அவர் தெரியாமலா சொல்லியிருப்பார்‘ எனவும் திகைக்கிறார். இறுதியில் அவர், ‘நண்டிற்கு மூக்குண்டோ எனின் ஆசிரியன் (தொல்காப்பியர்) கூறலான் உண்டென்பது பெற்றாம்’ எனத் தான் தெளிவு பெற்றதை உரையாகப் பதிவு செய்தார். அன்று அவர் தொல்காப்பியத்தைத் திருத்தி இருந்தால் நண்டைப் பற்றிய தொல்காப்பியர் காலச் சிந்தனை நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியரே பேராசிரியர் உரையைப் பெரிதும் பாராட்டுவார். அந்த அளவிற்குக் கல்விப் பெருக்கும் ஆராய்ச்சி மனப் பான்மையும் உடையவர் பேராசிரியர். மற்றவர் அனைவரும் இச்சிறப்புக்களினாலேயே அவர் இயற்பெயரைக் குறிப்பிடாது, பேராசிரியர் என்றே அழைத்தனர். இது நம் உரை மரபு. பேராசிரியர் நூலாசிரியரை மறுக்காமல், திருத்தாமல் தம் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்த நுட்பம் அறிந்து அறிந்து மகிழத்தக்கது.

பழைய இலக்கியங்கள், பழமொழி போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்க முயலும்போது இந்த  உரைமரபைப் பின்பற்ற வேண்டியது தேவை என்பது என் எண்ணம். ஏனெனில் அப்படைப்புக்கள் எழுத்தக் காலச் சூழலும், கருத்துப் பின்னணியும் இன்று நமக்குத் தெரியாது. அவற்றை முயன்று அறியாமல், ஒவ்வொருவரும் அவரவர் கருத்துச் சரியென்று படைப்பை மாற்றினால் மூலமே  உருமாறி அழிந்துபோய்விடும். மேலும் அப்படைப்புக்களின் உண்மையான பொருளைத் தேடும் முயற்சியும் தடைப்படும்.

இப்படிச் சொல்வதால் புதிய கருத்தைக் கூற வேண்டாம் எனக் கூறவில்லை. ஒரு முறைக்கு நூறு முறை நன்கு சிந்தித்துத், தக்கவர்களைக் கேட்டறிந்து சரியென உறுதிசெய்துகொண்ட பிறகு மாற்றுக் கருத்தைத் தெரிவிப்பது பொருத்தமாகும். அப்பொழுதும் மூலத்தைத் திருவதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்பொழுது ‘அடிமேல் அடிவைத்தால்/அடித்தால்  அம்மியும் நகரும்’ என்னும் பழமொழிக்கு வருவோம். அம்மி என்று  சொல்லும்போது, அதனோடு இணைந்து நினைவுக்கு வருவது குழவிக்கல். ஏன் குழவிக்கல்லை விட்டுவிட்டு அம்மியைச் சொன்னார்கள்?
குழவிக்கல் நகரக்கூடியது. அம்மிக்கல் நகராதது. அப்படி நகராத ஒன்றையும் நகர்த்தும் முயற்சி இங்கே வற்புறுத்தப்படுகிறது.  விடா முயற்சியோடு ஈடுபட்டால் முடியாததையும் முடித்துக்காட்டலாம் என்பது இதன் கருத்து. அம்மிக்கல்லைத் தகர்த்தல் என்பதன் நோக்கம் என்ன? தகர்த்தபின் அந்த  அம்மிக்கல் பயன்படுமா?
ஒன்றைச் செய்துமுடிப்பது, சாதித்துக் காட்டுவது, செம்மையாக்குவது என்பதே இப்பழமொழியின் நோக்கம். மாறாக, அதனை அழிப்பது, பயனற்றது ஆக்குவது இப்பழமொழியின் நோக்கம் அன்று என நினைக்கிறேன்.

அன்புடன்
ஆராதி

2010/6/17 நண்பன் <naz...@gmail.com>
--

வினோத்-VINOTH

unread,
Jun 17, 2010, 11:34:23 PM6/17/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

2010/6/18 ananda rasa thiruma <>

பழைய இலக்கியங்கள், பழமொழி போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்க முயலும்போது இந்த  உரைமரபைப் பின்பற்ற வேண்டியது தேவை என்பது என் எண்ணம். ஏனெனில் அப்படைப்புக்கள் எழுத்தக் காலச் சூழலும், கருத்துப் பின்னணியும் இன்று நமக்குத் தெரியாது. அவற்றை முயன்று அறியாமல், ஒவ்வொருவரும் அவரவர் கருத்துச் சரியென்று படைப்பை மாற்றினால் மூலமே  உருமாறி அழிந்துபோய்விடும். மேலும் அப்படைப்புக்களின் உண்மையான பொருளைத் தேடும் முயற்சியும் தடைப்படும்.

இந்த கருத்திற்கு நான் உடன்படுகிறேன்.
இருந்தாலும் மூல  அமைப்பை திருத்துவதற்கு எதிர்ப்பில்லை. ஆனால் அவ்வாறு திருத்தும் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவை. உதாரணமாத ஒரு சொல் மருவி வேறுசொல்லாக வழக்கத்தில் இருந்தால் அதே போல மருவிவிட்டதாக கூறுவதில் உடன் படலாம் என நினைக்கிறேன்.

இப்பொழுது ‘அடிமேல் அடிவைத்தால்/அடித்தால்  அம்மியும் நகரும்’ என்னும் பழமொழிக்கு வருவோம். அம்மி என்று  சொல்லும்போது, அதனோடு இணைந்து நினைவுக்கு வருவது குழவிக்கல். ஏன் குழவிக்கல்லை விட்டுவிட்டு அம்மியைச் சொன்னார்கள்?
குழவிக்கல் நகரக்கூடியது. அம்மிக்கல் நகராதது. அப்படி நகராத ஒன்றையும் நகர்த்தும் முயற்சி இங்கே வற்புறுத்தப்படுகிறது.  விடா முயற்சியோடு ஈடுபட்டால் முடியாததையும் முடித்துக்காட்டலாம் என்பது இதன் கருத்து. அம்மிக்கல்லைத் தகர்த்தல் என்பதன் நோக்கம் என்ன? தகர்த்தபின் அந்த  அம்மிக்கல் பயன்படுமா?
ஒன்றைச் செய்துமுடிப்பது, சாதித்துக் காட்டுவது, செம்மையாக்குவது என்பதே இப்பழமொழியின் நோக்கம். மாறாக, அதனை அழிப்பது, பயனற்றது ஆக்குவது இப்பழமொழியின் நோக்கம் அன்று என நினைக்கிறேன்.

விளக்கத்திற்கு நன்றி

நீங்கள் கூறுவதுபோல இருந்தாலும் என் சந்தேகம் என்ன வென்றால்....

அடி என்ற சொல் வருவதால் இணையாக அம்மி என்ற சொல் வந்ததா?

அம்மியை விட கடினமான பொருட்கள் அல்லது உலோகம் இருந்தாலும் அம்மியை சொல்ல காரணம் ஏதாவது உள்ளதா?

இங்கே மேலும் கவனிக்க வேண்டியது,
அம்மி கொத்துதல். வழவழப்பாக இருந்தால் பொருட்கள் அரையாது.. அதனால் அரைக்கும் போது எளிதாக இருக்க அல்லது உராய்ப்பு கிடைக்க அம்மி கொத்துவார்கள்.

அம்மியின் மேல் பாகத்தை சின்ன உளியால் சிறுசிறு புள்ளி போல கொத்தி விடுவார்கள், அரைத்து அரைத்து அது புள்ளி மறைந்து மழுங்கி விடும். அப்போது மேலும் கொத்திவிட்டால் நன்றாக அரைக்க இயலும்.

ஆனால் அதிக அளவு அல்லது அடிக்கடி  கொத்த ஆரம்பித்து விட்டால் உடைய ஆரம்பித்து விடும்....

இந்த வகையிலும் சிந்திக்கலாம்.

--

Hari Krishnan

unread,
Jun 17, 2010, 11:53:38 PM6/17/10
to mint...@googlegroups.com

2010/6/18 வினோத்-VINOTH <vino...@gmail.com>

2010/6/18 ananda rasa thiruma <>

பழைய இலக்கியங்கள், பழமொழி போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்க முயலும்போது இந்த  உரைமரபைப் பின்பற்ற வேண்டியது தேவை என்பது என் எண்ணம். ஏனெனில் அப்படைப்புக்கள் எழுத்தக் காலச் சூழலும், கருத்துப் பின்னணியும் இன்று நமக்குத் தெரியாது. அவற்றை முயன்று அறியாமல், ஒவ்வொருவரும் அவரவர் கருத்துச் சரியென்று படைப்பை மாற்றினால் மூலமே  உருமாறி அழிந்துபோய்விடும். மேலும் அப்படைப்புக்களின் உண்மையான பொருளைத் தேடும் முயற்சியும் தடைப்படும்.

இந்த கருத்திற்கு நான் உடன்படுகிறேன்.
இருந்தாலும் மூல  அமைப்பை திருத்துவதற்கு எதிர்ப்பில்லை.

மூல அமைப்பைத் திருத்துவது என்றால், மூல அமைப்பு என்று எது சொல்லப்படுகிறது என்பதற்கான வரையறை தேவை.  நான் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் திருத்தி அமைக்கிறேன் என்பது இனி நடவாத செயல்.  வலுவான புலவர் குழுக்கள் அமர்ந்து, பல சுவடிகளை ஒப்பு நோக்கி, பாடபேதங்களை விவாதித்து, அவற்றுள் ஒன்றைத் தேர்ந்து, மற்றவற்றை மிக கவனமாக, பாடபேதம் என்ற அடிக்குறிப்புடன் வெளியிட்டு வந்துள்ளனர்.  (தற்போது அந்தப் பதிப்பு நாகரிகம் நின்றுபோய்விட்டது.)  ஆகவே, மூலபாடத்தில் கைவைக்க வேண்டுமானால், நான் திருவள்ளுவனை விடவும் பெரியவனாக இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு திருத்தும் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவை. உதாரணமாத ஒரு சொல் மருவி வேறுசொல்லாக வழக்கத்தில் இருந்தால் அதே போல மருவிவிட்டதாக கூறுவதில் உடன் படலாம் என நினைக்கிறேன்.

மிகத் தொடக்க காலத்திலேயே உரை எழுதப்பட்ட திருக்குறள் போன்ற நூல்களின் மூலபாடம் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது.  It has already been standardised.  அப்புறம் என்ன திருத்தம்?  
அம்மியை விட கடினமான பொருட்கள் அல்லது உலோகம் இருந்தாலும் அம்மியை சொல்ல காரணம் ஏதாவது உள்ளதா?

இங்கே மேலும் கவனிக்க வேண்டியது,
அம்மி கொத்துதல். வழவழப்பாக இருந்தால் பொருட்கள் அரையாது.. அதனால் அரைக்கும் போது எளிதாக இருக்க அல்லது உராய்ப்பு கிடைக்க அம்மி கொத்துவார்கள்.

அம்மி என்பது உறுதியின் அடையாளம்.  பாரம்பரியமாக அம்மியைத்தான் உறுதிக்கு அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள்.  திருமணத்தின்போது அம்மி மிதித்தல் என்று ஒரு வழக்கம் இருக்கிறதல்லவா?  கற்பு வரம் என்று சொல்வார்கள்.  இரும்பாக இருந்தால் வளைந்து கொடுக்கும்.  அம்மி வளைந்து கொடுக்காது.  ‘எப்படிப்பட்ட அழுத்தம் ஏற்பட்டாலும், நான் உடைந்துபோனாலும் போவேனே ஒழிய, வளைந்து கொடுக்கமாட்டேன்’ என்று வரம் தருகிறாள் மணப்பெண்.  

உறுதியின் அடையாளமாக விளங்கும் அம்மியைக்கூட அடிமேலடி நகர்த்தும் என்றார்கள்.  கற்பு வரத்தோடு தகர்த்தலைப் பொருத்துங்கள்.  எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அடிமேல் அடியடித்து நான் தகர்க்கத்தான் செய்வேன் என்றால்.... ஙே...:)))
--
அன்புடன்,
ஹரிகி.

வினோத்-VINOTH

unread,
Jun 18, 2010, 12:02:06 AM6/18/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

2010/6/18 Hari Krishnan <>

ஆகவே, மூலபாடத்தில் கைவைக்க வேண்டுமானால், நான் திருவள்ளுவனை விடவும் பெரியவனாக இருக்க வேண்டும்.

சரியான கருத்து.
 
ஆனால் அவ்வாறு திருத்தும் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவை. உதாரணமாத ஒரு சொல் மருவி வேறுசொல்லாக வழக்கத்தில் இருந்தால் அதே போல மருவிவிட்டதாக கூறுவதில் உடன் படலாம் என நினைக்கிறேன்.

மிகத் தொடக்க காலத்திலேயே உரை எழுதப்பட்ட திருக்குறள் போன்ற நூல்களின் மூலபாடம் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது.  It has already been standardised.  அப்புறம் என்ன திருத்தம்?  

ஐயா, இங்கே பழமொழிகளைத்தான் குறிப்பிடுகிறோம். நிலைபெற்றுவிட்ட படைப்புகளை மூலமாற்றம் செய்வது என்பது நீங்கள் குறிப்பிட்ட படி உரிமைமீறல்.

அம்மி என்பது உறுதியின் அடையாளம்.  பாரம்பரியமாக அம்மியைத்தான் உறுதிக்கு அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள்.  திருமணத்தின்போது அம்மி மிதித்தல் என்று ஒரு வழக்கம் இருக்கிறதல்லவா?  கற்பு வரம் என்று சொல்வார்கள்.  இரும்பாக இருந்தால் வளைந்து கொடுக்கும்.  அம்மி வளைந்து கொடுக்காது.  ‘எப்படிப்பட்ட அழுத்தம் ஏற்பட்டாலும், நான் உடைந்துபோனாலும் போவேனே ஒழிய, வளைந்து கொடுக்கமாட்டேன்’ என்று வரம் தருகிறாள் மணப்பெண்.  

இப்போது விளக்கம் சரியாக வருகிறது ..

மிக்க நன்றி ஐயா
 
வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 2:10:23 AM6/19/10
to தமிழ்நண்பர்கள், mint...@googlegroups.com
விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

வினோத்-VINOTH

unread,
Jun 19, 2010, 2:31:00 PM6/19/10
to தமிழ்நண்பர்கள், mint...@googlegroups.com

2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அம்பலம் என்பது கோவில்

ஏறுவான் என்பது 'படியேறுதல்' போல கோவிலுக்குப்போவான் என்பது

அன்பு இருக்கும் இடத்தில் அச்சம் இருக்காது
ஆனால் பயபத்தி என்பது ஒருவித மரியாதை.

தவறுசெய்தவன் தான் கோவிலுக்குப்போக பயப்பட வேண்டும்.

இது என் விளக்கம்.

சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

Hari Krishnan

unread,
Jun 20, 2010, 12:19:06 AM6/20/10
to mint...@googlegroups.com

2010/6/20 வினோத்-VINOTH <vino...@gmail.com>

2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அம்பலம் என்பது கோவில்

அம்பலம் என்பது சபை.  அறையில் நடந்தது அம்பலத்துக்கு வந்தது என்றால், மற்றவர்களுக்குத் தெரியாமல் அறைக்குள் நடந்த செய்தி, மக்கள் மத்தியில் (சபையில்) பரவிவிட்டது என்று பொருள்.  

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்

(கண்ணன்-என் சேவகன்)

வீட்டுக்குள்ள நடந்ததையெல்லாம் இந்த வேலைக்காரர்கள் ஊர்ப்பொதுவில், (சபையில்) சொல்லிவிடுகிறார்கள்.

சிற்றம்பலம் என்பது சிற்சபை ஆகிறது.  பொன்னம்பலம், மின்னம்பலம் எல்லாமே, பலரும் கூடியிருக்கும், பெரிய அளவில் மக்கள் ஒன்று திரண்டிருக்கும் எல்லோருடைய பார்வையிலும், செவியிலும் படக்கூடிய இடம் என்ற பொருளில் ‘அம்பலம்’ என்ற சொல் பயன்படுவதைக் காட்டுகிறது.

அப்ப, அச்சமில்லாதவன் அம்பலமேறுவான் என்றால், வாதங்களுக்கு பயப்படாதவன்தான் மேடை ஏறுவான் என்று பொருள்படும்.  அவையேறுபவனுக்கு முதல் தகுதி அச்சமின்மை.  வள்ளுவர் சொல்கிறார்:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். 

சபையைப் பார்த்து பயப்படறவன் கற்ற நூலும், போர்முகத்தில் அஞ்சி நடுங்குபவன் கையில் உள்ள வாளும் ஒன்றுபோல் பயனற்றவை.  (பேடி என்ற சொல்லுக்கு, அஞ்சுபவன் என்ற பொருளையே நான் பொருத்தமாகக் காண்கிறேன்.  பேடி என்பதற்கு ‘அச்சம்’ என்ற பொருள் தமிழ் லெக்சிகனிலும் உள்ளது; இன்றளவும் மலையாளத்தில் பேடிச்சுப் பேடிச்சு நோக்கி என்று அஞ்சி அஞ்சி விழிப்பவனைச் சொல்கிறார்கள்.  அப்படியில்லாமல் திருமங்கையரைக் குறிப்பதாகக் கொள்வது சரி என்று எனக்குப் படவில்லை.  போரில் தலைமையேற்று வழிநடத்திய, நாடாண்ட திருமங்கையர் உண்டு. என்சைக்ளோபீடியாவில் அப்படி ஒரு நுழைவைப் பார்த்திருக்கிறேன்.)

எனவே, அவையச்சம் கொள்ளாதவனே, அவைறேத் தகுதிபடைத்தவன் என்று பொருள்படுகிறது.  

வினோத்-VINOTH

unread,
Jun 20, 2010, 12:31:28 AM6/20/10
to mint...@googlegroups.com

2010/6/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
எனவே, அவையச்சம் கொள்ளாதவனே, அவைறேத் தகுதிபடைத்தவன் என்று பொருள்படுகிறது. 

ஐயா தங்கள் விளக்கம் மிகச்சரியாகப்படுகிறது

மிக்க நன்றி

senthil

unread,
Jun 20, 2010, 12:42:03 AM6/20/10
to mint...@googlegroups.com
சிறந்த விளக்கம்.

2010/6/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
செந்தில்

Innamburan Innamburan

unread,
Jun 21, 2010, 12:38:02 PM6/21/10
to mint...@googlegroups.com
'...பழைய இலக்கியங்கள், பழமொழி போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்க

முயலும்போது இந்த உரைமரபைப் பின்பற்ற வேண்டியது தேவை என்பது என்
எண்ணம்...'

திரு ஆராதி அவர்களின் இந்த சொற்றொடருக்கு மட்டும் மதிப்புக்கொடுத்தால்,
இலக்கியத்திற்கு நலம். சுருங்கச்சொல்லின், நேர்மை தான் நமக்கு அரண்.
இன்னம்பூரான்

2010/6/18 ananda rasa thiruma <aara...@gmail.com>:

வினோத்-VINOTH

unread,
Jun 21, 2010, 12:40:27 PM6/21/10
to தமிழ்நண்பர்கள், mint...@googlegroups.com
பழமொழி விளக்கம் அளித்து வருபவர்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்

இதற்கு என்னால் ஆன விளக்கம்...

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்

நாம் பிறரிடம் பேசும் போது உள்மனதில் வஞ்சகம், பொறாமை, கோபம், காழ்ப்புணர்ச்சி போன்றவை இருப்பினும்அவரிடம் நல்லமுறையில் இனிப்பாக பேசி பழகுவோம். அல்லது காரியத்தை சாதித்துக்கொள்வோம்.

இதை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்பர்.

விஷம் போன்று தாக்கும் கொடுமையான சொற்களை உள்ளேயே அடக்கிக்கொண்டு நல்ல இனிப்பான சொற்களை மட்டும் எல்லோரிடமும் பேச வேண்டும். இந்த மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை.

இதை குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதில் இருந்தும் வள்ளுவ பெருந்தகை கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் சொல்லாடலிலும் அறியலாம்.

இதைத்தவிர மேலும் ஒரு வெளிப்படையான விளக்கம் இப்பழமொழி கூறுகிறது

நாக்கு பார்ப்பதற்கு ஒன்றாகவே இருந்தாலும் அதில் பல பாகங்கள் உள்ளது.
இன்றைய மருத்துவ அறிஞர்கள் நாக்கை பகுத்தாய்ந்து கூறுவது இனிப்புச்சுவையை உணரும் சுவை அரும்புகள் நாக்கின் நுனிப்பகுதியில் உள்ளது. கசப்புச்சுவையை அறியும் சுவை அரும்புகள் நாக்கின் கடைசி தொண்டைப்பகுதியி்ல் உள்ளது என்பதாகும்.

இதையே வெளிப்படையாக இப்பழமொழி அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் என்று எடுத்து முதியோர்களின் மருத்துவ அறிவையும் விளக்குகிறது.

இது சரியான விளக்கமா சொல்லுங்கள்

venkatachalam Dotthathri

unread,
Jun 22, 2010, 1:35:44 AM6/22/10
to mint...@googlegroups.com
ஓம்.
பழமொழிகள் இழை என்பதால் முன்னர் வந்தபதிவு மீள் பதிவு

ஓம்
சல்லித் தனம்: ஒரு வரையறை,
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
பெண்களிடை இரகசியம் நிற்காது
ஆறிலும் சாவு நூறிலும் சாவு,
பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு.
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய்.தீர விசாரிப்பதே மெய்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சல்லித் தனம்: ஒரு வரையறை,
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
பெண்களிடை இரகசியம் நிற்காது
ஆறிலும் சாவு நூறிலும் சாவு,
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சல்லியன் ஒரு மகாரதன். உடற்கட்டுடன் திகழ்ந்த ஒரு புகழ்பெற்ற போர்த்தளபதி. பாண்டுவின் மனைவி மாதுரியின் தமையன். பாரதப் போரினில் பாண்டவரின் தாய்மாமன்(நகுல சகாதேவகளுக்கு சொந்தத் தாய்மாமன்) தன் பெரும் படையுடன் பாண்டவருக்கு உதவிக் கரம் கொடுக்க வந்து கொண்டிருதான்.

எவருக்கும் அசைந்து கொடுக்காத மலையனைய வீரமும் அருள்சார்ந்த கருணை உள்ளமும் கொண்டவன். அறத்தின் வழி நிற்பவன். யதேச்சதிகாரமும் சூதும் வஞ்சனையும் கொண்ட கௌரவ கூட்டத்தினை அழிப்பதும் பாண்டவர்க்கு பக்கபலமாயிருந்து வாகைசூடுவதும் நல் நெறியினைக் கடைப்பிடிப்பதும் நோக்கமாக வேகமாக வந்துகொண்டிருந்தான்.

இடர் ஒன்று பேருருக்கொண்டு இடம் பெயர்ந்து தன்னை அழிக்க முற்பட்டு வருவதை ஒற்றர்கள் வாயிலாக அறிந்த துரியோதனன் அவசர ஆலோசனைக் குழுவினைக் கூட்டினான்.  கதிகலங்கவைக்க வரும், கண்ணெதிரில் தோன்றும் கூற்றுவனை வீழ்த்த திட்டம் ஒன்றை சகுனி வகுத்துத் தந்தான். திகைப்பூண்டை மிதித்தவன் எண்ணம் சிதறி மாற்று வழி செல்வதைப்போல் வழியில் சல்லியனைச் சந்தித்து ராஜ உபசாரங்கள் செய்ய உயர் அதிகாரிகளை அனுப்பி, மலர் தூவி முகமன் கூறி வரவேற்று, தங்குவதற்கு நெடுகிலும் இடம் அளித்து, பூம்பொழில் உருவாக்கி, அரசு மரியாதையுடன் ஆங்காங்கே மாமன் அமர்ந்து உல்லாசமாக பொழுது போக்கத் தக்க கவலையற்ற ஒரு விசேட சூழலையைப் பலவந்தமாகத்  திணித்து, அளவிறந்த பக்தியும் அன்பும் கொண்டவனாக சேவைகள் செய்ய வைத்தான் துரியோதனன்.. சல்லியன் மனதில் சேவை இயற்றுவோர் எவர் எனத் தெரியாதவாறு நடந்துகொண்டான். ’பாண்டவர்கள் தாம்  பெயர் சொல்லாமலேயே பவ்யமாக, இத்துணை சாதுரியமாக வரவேற்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருந்த சல்லியனுக்குப் பின்னர் தெரிய வந்தது வஞ்சக துரியோதனன் தன்னை அடுத்துக் கெடுத்துவிட்டான் என்பதை.

  உளமாறத் தந்த வரவேற்பினைக் கண்டு மகிழ்ந்து உபசாரம் செய்தோருக்கு பக்க பலமாக இருப்பதாக  வாக்களித்தவனுக்கு நிலை தடுமாற ஆரம்பித்தது. உதவி பெற உரிமையுடையோரை எதிரி ஓரங்கட்டிவிட்டான். வாக்கினைக் காக்கத் தன்னைத் தியாகம் செய்யுமாறு நிர்பந்தம் உண்டாக்கிவிட்டான் என்பதை உணர்ந்து வேறு வழி  இல்லாமல் தன் படைகளை பாண்டவர்க்கு அளித்து தான் மட்டும் கௌரவர் பக்கம் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியதை . மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் சதியாலோசனையால் தன்னைப் படையினின்றும் பாண்டவரினின்றும் பிரித்த துரியோதனனின் வஞ்சம் நெஞ்சை குமுற வைத்தது.

இயல்பாகவே   கர்ணனின் மீது வெறுப்புக் கொண்ட சல்லியனை, போர்ப்பேரவையும் விழியிழந்த மூத்த அரசனும்  விரும்பி வேண்டிக்கொண்டதாலும், கர்ணனுக்கு உற்ற துணையாக, தக்க வழிகாட்டியாக பொறுப்பேற்கும் தகுதி சல்லியனத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதாகப் பலரும் பலபடப் பேசியதாலும், இறுதியில் கர்ணனுக்கு தேரோட்டியாக  களமிரங்க வேண்டா வெறுப்பாக சல்லியன் அமர்ந்தான். தேரோட்டியாக வந்தாலும் தன்னிலும் மிதமானவனுக்கு- தரம் புரியாதவனுக்கு ஒத்துழைக்க உள்ளம் கூசினான்.

கர்ணனிடன் குந்தி பெற்ற வரத்தால் ஒருமுறை தவிர்த்து மறுமுறை நாகாஸ்திரம் பயன்படுத்தக்கூடாது எனவும் அர்ச்சுனனைத் தவிற வேறு பாண்டவரைத் தாக்கக் கூடாது எனவும் கர்ணனின் கைகள் கட்டப் பட்டிருந்தன.இச்செய்தி பிறர் அறியாதவை.

தக்க தருணம் எனக்கருதி நாகாஸ்திரத்தைஅர்ச்சுனனின் தலையை இலக்காக வைத்து கர்ணன் தொடுக்க துவங்கும் போது சல்லியன் அர்ச்சுனனின் மார்பினை இலக்காக்கிக் கொள்ளுமாறு அறிவுரை பகன்றான்.

எனக்கு எல்லாம் தெரியும் நீ உனக்கு இட்ட பணியைமட்டும் செய்தால் போதும் என சினந்தான் கர்ணன்.

நடந்தது என்ன நாகாஸ்த்திரம் சீறிப் பாய்ந்து வருங்கால் கண்ணன் அர்ச்சுனனைக்காக்க தேர்த் தட்டினைக் கால் பெருவிரலால் அழுத்தியபோது  தலையைக் கொய்ய வந்த  அஸ்திரம் தலைப்பாகையைக் கிழித்துக்  கீழே உருட்டியது.தலைகொய்யப்படவேண்டிய நிலையில் தலைப்பாகை அழிந்தது.

எனவேதான் இந்தச் செய்தியைச் சொல்ல வந்த பழமொழி,”தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு” என்பதாகும்.

  சல்லியன் கர்ணனின் செய்கைக்கு சினந்து மறுமுறையும் நாகாஸ்திரத்தைத் தொடுத்து அர்ச்சுனனை இருகூறாக்கக் கூறினான். கர்ணனிடம் கோரிய வரம் மறுபிரயோகத்தைத்  தடுத்தது என்பதையும் கண்ணனின் சங்கல்பம் அர்ச்சுனனை எப்படியும் காக்கும் என்பதையும் மனதில் கொண்டு சல்லியனின் வார்த்தைக்கு செவிகொடுக்காது இருந்த கர்ணனை தூஷித்து கடும் வார்த்தைகள் பேசி எதிரியை அழிக்காமைக்குக் காரணம் கேட்டான் சல்லியன்.

ஏதும் சரியான பதில் பேசாமலும், மகாரதன் ஆன தன் வார்த்தைகளுக்கு மதிப்புத்தந்து செவி சாய்க்காமலும் தன்போக்கில் இருக்கும் கர்ணனைவிட்டு விலக நினைத்தான் சல்லியன்.. ஆனாலும், உலகம் என்ன பேசிப் பழிக்கும் என்பதையும் தன்னைப்  பொறுப்பேற்க வைத்தோர்க்கு என்ன காரணம் காட்டமுடியும் என்பதையும் நினைந்து மனம் குமைந்தான்.

இந்நிலையில் வாளாவிருந்த சால்லியன் தேரில் அமர்ந்திருக்க தேரின் சக்கரம் ஒரு குழியில் இறங்கியது. அந்தச் சக்கரத்தை வெளியே இழுத்தெடுத்து விரைந்து அர்ச்சுனன் இருக்கும் இடத்தில் நெருங்கிச் செல்லுமாறு கர்ணன் பதைத்துக் கூறினான். வெறுப்பின் உச்சத்தில் கொதித்துக் கொண்டிருந்த சல்லியன்,
” சுயபுத்தியுமில்லை; சொல்புத்தியும் எடுபடவில்லை. உன்னுடன் நான் இருந்தும் நீ தோல்வியடைவதைக் கண்டால் உலகம் என்னை ஏளனம் செய்யும்; உனக்கு சரி எனப்பட்டதை நீ செய்கிறாய்;. என் வயதுக்கும் அனுபவ முதிர்ச்சிக்கும் உன்னிடம் தேரோட்டியாக உடன்பட்டு நான் வந்தது என் இழிந்த நிலையாகும். மேலும் உன்னுடன் இருக்க என் மனம் இசையவில்லை. உன்னைவிட்டு நான் இந்தக் கணமே விலகுகிறேன்” என்று கூறிவிட்டுத் தேரினின்றும் குதித்துக் கீழிறங்கி வெளியேறினான். தவித்த வேளையில் தன்னை தனியேவிட்டு விலகும் சல்லியனை அற்பமாக மனதில் கொண்டு தானே கீழ்இறங்கி சக்கரத்தை வெளியிழுக்க ஆரம்பித்தான் கர்ணன்..

இவ்வாறு ஆபத்துக் காலத்தில் காக்கக் கடமைப் பட்டவர்கள் வழியிருந்தும், வாய்ப்பு அறிந்தும் செயற்படாமல் விலகிச் செல்லும் இயல்பபினை சல்லியன் பெயரால் “சல்லித்தனம்” என வறையறை செய்யப்பட்டு புழக்கத்தில் வந்தது.

ஆயுதத்தைத் தொடாமல் சக்கரத்தை முண்டிமுயன்று தூக்கி வெளிக்கொணரும் கருத்துடன் கர்ணன் இருக்கையில் எதிரிகள் பல திக்கிலும் தாக்கினர்; குற்றுயிரும் குலையுமாக கர்ணன் மலை சாய்ந்ததெனச் சாய்ந்தான்.

கர்ணனிடம் தந்த வாக்குறுதிப்படி குந்திவந்து மகனே என்று மடியில் கிடத்தி வாய்விட்டு உலகறியத் தன்மகன்தான் கர்ணன் என்பதைப் பறைசாற்றினாள். வாயடைத்து நின்ற பாண்டவர் குந்தியைப் பணிந்து உண்மை அறிந்து கர்ணன் தன் மூத்த சகோதரன் என்பதைத் தெரிந்தவுடன் மிகவும்   மனம் நொந்தனர்.

தருமன், “தாயே நீங்கள் கர்ணனை முன்னமேயே உங்கள் மகன் என்று அறிவீர்களா? என்னிடம் நீங்கள் கூறியிருந்தால் அண்னனின் வழிகாட்டலில் இந்தப் போரின் போக்கே மாறியிருந்திருக்குமே! எங்களைத் தர்மசங்கடமான நிலையில் தத்தளிக்க வைத்துவிட்டீர்களே? இதுபோன்று எத்தனை உண்மைகள் இரகசியமாகக் காத்து வைக்கப்பட்டனவோ!?  தாயே மறைத்துவிடும் அளவுக்கு நாங்கள் பாபிகளாகிவிட்டோம். உங்களுக்கெ இந்நிலை என்றால் பிற பெண்டிரைச் சொல்ல ஏதுமில்லை.இன்று முதல் பெண்டிரிடம் இரகசியங்கள் தங்கக் கூடாது, என்ற நிபந்தனை விதிக்கிறேன் ” என்றான்.

கர்ணனுடைய பலம்வாய்ந்த உறவும் தங்களுக்கு கிடைத்திருந்தால் மிக எளிதில் எதிரிகளை முற்றிலும் முறியடித்திருக்கலாம். மாறாக அன்னையின் வயிற்றில் எங்களோடு பிறந்த மூத்தவனை என் கையினால்  அயர்ந்த நேரத்தில் அழிக்க நான், உடன் பிறந்த  தம்பியே அறியாமையால் காரணமானேனே என அர்ச்சுனன் எண்னினான்.

அப்போது கர்ணனைப் பற்றி கண்ணன் கூறுகையில், இந்திரன் கவசகுண்டலத்தைப் பறித்தான்; குந்தி வரம் கேட்டு அவனுடைய வீரத்தைக் குறைத்தாள். துரியன் அன்பைக் காட்டித் தீமையை வளர்த்தான்; சகுனி எதிர்வகையில் கொண்டு செலுத்தினான்.  சல்லியன் உடன் இருந்து கைவிட்டான். எது எவ்வாறாயினிம் பாண்டவருடன் சேர்ந்த ஆறாவது பாண்டவராகக் கர்ணன்  இருந்தாலும் சரி, கௌரவருடன் நூற்றுவரில் ஒருவனாக இருந்தாலும் கர்ணனுக்கு மரணமே விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று கண்னன் விளக்கம் தந்து விதிவலிது என போதித்தான்; ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற பழமொழி அங்கு உதயமாயிற்று.
-=-=-=-=-=-=-=-=-=-=-=

  மரியாதை நிமித்தம் தன் அரண்மனைக்கு வருகை தந்த கௌரவர் தலைவன் முற்றத்தில் நீர்போன்று தோற்றமளித்த மாய அமைப்பில் முழங்கால்வரை உடையை உயர்த்திக்கொண்டு கடக்க முயலுகையில் உப்பரிகையில் இருந்த துரௌபதி பரிகாசப் புன்னகை செய்யவும், அகஸ்மாத்தாய் அதைப் பார்க்க நேர்ந்த துரியோதனன் கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளாமல் நெஞ்சில் ஒரு முள் பாய்ந்தாற்போல் வன்மம் கொண்டு பாண்டவரை எவ்வித்தாலாவது அழிக்கவும் பதிலுக்குப் பதில் அவளைப் பழிதீர்க்கவும் உறுதிகொண்டான்.

எளிய சிறிய ஒரு செயல் அரசையே கவிழ்க்கும் நிலைக்கு உருவெடுத்தது.அந்தப் பெண்ணின் சிரிப்பு ஆயிற்று.
பெண் சிரிச்சாப் போச்சு; புகையிலை விரித்தாற்போச்சு. பழமொழி உருவாகியது.
புகையிலையின் ஒரு வடிவம் கருப்பட்டியுடன் சேர்த்து வாயில் மெல்லும் பழக்கம். விரித்து வெகு நேரம் திறந்ததிருந்தால் வீரியம் கெடும் என உண்டவர்கள் தின்றவர்கள் சொல்லிப் போனார்கள்.

-=-=-=-
கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய்.

கதிரவன் உதித்து மாலையில் அடைகிறான். கண்னால் காணும் காட்சி பொய். நடப்பது வேறு செயல். பூமி சுழல ஆதவன் நிலைத்து நிற்கிறான்

நண்பகல்
கர்ணனும் துரியோதனனும் உப்பரிகையில் வெளி மாடத்தில் நின்று உரையாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் கண்ணபிரான் தூரத்தே வந்து கொண்டிருப்பதையும் எதிர்ப்புறத்திலிருந்து வந்த அஸ்வத்தாமனுடன் சந்தித்துப் பேசுவதையும் கண்டனர்.
பேசுவதைத் தவிர்த்துவிட்டு கண்ணனையும் து.அஸ்வத்தாமனையும் வைத்த விழி வாங்காமல் பார்த்தனர்; என்ன காரணத்தால் சந்திக்கின்றனர்? என்ன பேசத் தலைப்பட்டனர்? என்பதை அறிந்துகொள்ள இயலாத அளவு தூரத்தே அவர்கள் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

கண்ணன் கையை மேலே தூக்கிக் காட்டினான். அஸ்வத்தாமனும் மேலே பார்த்தான். உடன் அஸ்வத்தாமன் கீழே குனிந்து கண்னனின் கையினைத் தொட்டான். இதுதான் தொலைவிலிருந்து துரியனும் கர்ணனும்  கண்ட காட்சி.

கர்ணன் துரியனுக்கு தான் கண்ட காட்சியைப் பற்றி தன் அனுமானத்தை விளக்கமாக அளித்தான்.
”கண்ணன் எப்போதும் ஒரு சார்பு மிக்கவன். பாண்டவருக்காக மட்டுமே உதவும் கள்ள நோக்கம் கொண்டவன். வருகின்ற பாரதப் போரினில் நமது தரப்பு நல்லவர்களைப் பாண்டவர்கள் பக்கம் ஈர்க்க முயன்று வருகிறான். அஸ்வத்தாமனும் கள்ளன் கிருட்டினனின் மாய வலையில் வீழ்ந்துவிட்டான் என்றே  கருத இடமிருக்கின்றது.  பூமி சாட்சியாக, சூரியன் சாட்சியாகப் பாண்டவர்க்கே உதவுவேன்  என்று கண்ணனின் கையில் அடித்து சத்தியம் செய்துள்ளான்”. கர்ணன் பேசப் பேச துரியனின் கன்நெஞ்சில் உளிபாய்ந்து இறங்கினால் போல் வன்மமும் காழ்ப்பும் உருவாயிற்று.

நடந்தது தான்  என்ன?

கண்ணனும் து.அஸ்வத்தாமனும் எதேச்சையாகச் சந்தித்தனர். என்ன கடும் வெயிலில் கால் நடையாக கிளம்பிவிட்டீர்கள் என்று கேட்டவனிடம், கண்ணன் ஆம்! அஸ்வத்தாமா! இன்று வெயில் மிகவும் ’சுள்’ என்று எரிக்கின்றது என்று கூறிக்கொண்டே தலைக்கு உயரே ஒளிரும் ஆதவனைப் பார்த்தான். அஸ்வத்தாமனும் பார்த்தான். அப்போது கண்னன் கையினின்றும் ஒரு கனையாழி கழன்று தரையில் விழுந்தது. அதனைக் கவனித்த அஸ்வத்தாமன் எடுத்து கண்னணன் கையில் கொடுத்தான். அவரவர் பணிக்கு அவரவர் பிரிந்து சென்றனர். இங்கே கண்ணால் கண்டது ஒன்று. அவர்களின் கருத்தும் பேச்சும் பொய்.
-=-=-=-=-=
  சாபம் பெற்ற போது மகிழ்ந்தான் இராமயணத்தில் தசரதன் .

சிரவணன் காவடியின் இரு தட்டுகளில் விழிபொய்த்த பெற்றோரைச் சுமந்து தீர்த்த யாத்திரைக்கு எடுத்துச் சென்றவன் கூரம்பு தைக்க துடிதுடித்து வீழ்ந்தான், தசரதனின் கணைக்கு இரையாகித் தன் நிலை குலைந்தான். யானை நீர் குடிக்கின்றது எனக் காதால் கேட்ட ஒலிக்கு இலக்காகி வாய்குவிந்த கலையத்தில் உள்புகும் நீரின் ஓசையில் பாணம் தைத்தான். அன்பு மகன் வீழ்ந்தான் அலறலுடன் மரண ஓலத்தில். தசரதனின் மனம் பதைத்து நினைத்தது ஒன்றிருக்க நடந்தது வேறு ஒன்றாக இருக்க.  சிரவணனை விரைந்து சென்று நேரில் கண்டபோது இளம் பாலகனை அவசியமின்றி குறையொன்றும் இல்லாதவனைக் குற்றுயிருடன் பார்த்த தசரதன் நெருப்பில் வீழ்ந்த புழுவைப்போல் உணர்ந்து செய்வதறியாது பாபச் சுமை பற்றிய தன் இழிசெயலைஎண்ணிப் பாலகனிடம் உண்மையில் நிகழ்ந்தது என்னவெனக்கூறி தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். அந்த நிலையிலும் தன் பெற்றோரின் தாகம் தணிக்க விரைந்து தண்ணீர் கொண்டு கொடுக்குமாறு தசரதனிடம் அவன் மரண வேண்டுகோள் வைத்துப் புகழுடம்பு எய்தினான். கையிலே நீர்க் குவளை ஏந்தி கை சோர மெய் சோர  தளர் நடையுடன் சென்று காலை ஓசையில் மகனை ஆசிர்வதித்து புளகம் எய்திய தந்தையும் தாயையும் கை நீட்டிக் குவளை நீரைக் கேட்டு தாகவிடாய் தீர்த்து”என்ன சிரவணா! ஏன் மௌனமாக இருக்கிறாய் மகனே? என விழியிழந்த மாமேதைகள் இருவர் கேட்டபோது எப்படி இவர்களிடம் உங்கள் கொழுகொம்பை உடைத்தெறிந்தேன் என்று சொல்வேன் என்று மேலும் துடித்தான்.” பயமும் ஆதங்கமும் மீதூர பெரிய இதயங்கள் முனகிப் பேசும் தசரதன் வாயிலாக உண்மை அறிந்தபோது, ‘இறந்த எங்கள் பிள்ளையோடு எங்களையும் ஒரு சேர அனுப்பிவிடு’ என்று பேசும் துன்பம் துய்க்கும் தம்பதியரின் கால்களைப் பிடித்துக்கொண்டு என்னை உங்கள் மகனாக்குங்கள். செய்த தவறை மன்னித்து என்னுடன் வாருங்கள் தொடர்ந்து உங்கள் தீர்த்த யாத்திரைக்கு நான் பொறுப்பேற்ரு அனைத்து வசதிகளும் செய்கிறேன் என்ற தசரதனிடம் அவர்கள் உடன் வருவதற்கு எங்கள் உயிர் எங்கள் உடலில் இன்னும் சில நேரமே நிற்கும்.  குழவிக் கூட்டில் கல் எறிந்த மன்னனே நீயும் புத்திர சோகம் என்பதைக் கண்டறிவாயாக! எனச் சாபமிட்டு புகழுடம்பெய்தினர். பெரியோர் இருவரையும், அன்பே உருவான ஒரு தீர்க்க தரிசி மைந்தனையும் ஒருசேர அழித்த வேதனையிலும் ஒருமகிழ்ச்சி ரேகைப் புனிதர்கள் வாயினின்றும் உதிர்ந்த சொற்கள் அடிப்படையில் இனித்தன. பலவாறாகப் புகழ்பெற்றிருந்தாலும் இதுவரை புத்திரபாக்கியம் பற்றி விடைகிடைக்காதபோது ஒரு இளஞ்சூரியன் உதிக்கிறான் என்ற உத்தம வாக்கு சித்திக்கும் என்ற அனுபவ உண்மையில் மகிழ்ந்தான். அதன் பின்னர் தொடர்ந்து நிற்கும் தூமகேதுவான சாபம் நிறம் தெரியாமல் நின்றதும் அவன் உணரத்தான் செய்தான்.

-=-=
மகாபாரதத்தில்.

துரோணரின் அம்பு மழையில், அஸ்திரப் பிரயோகத்தில் பிரளயம் போல் போர்க்களம் தென்பட்டது. கற்றுக்கொடுத்த குரு, அரச பரம்பரை வழுத்தும் உன்னத புருஷர், ஆவேசத்தில் துரியோதனின் விஷமச்சொற்களால் மனம் புண்பட்டு இரண்டில் ஒன்று- வாழ்வு அன்றேல் சாவு என்று கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அட்டகாசமான மதயானைகள் பேரிரைச்சலுடன்  மோதும் பிளிறல் போர்க்களத்தில் கேட்க்கும் போதே இரு புறங்களிலும் மட மட வென போர் வீரர்கள் மாய்ந்தனர். அசாத்திய வெறியுடன் துரோணர் முன்னேறி பெரும் பெரும் ரதர்களை துடைத்துத் தள்ளினார். அவருக்குமுன்னர் ஒரு வெட்ட வெளி வட்டம் தொடர்ந்து பின் நோக்கிச் சென்றுகொண்டே இருக்க துரோணரின் ரதம் அதனை ஊடுருவிப் பாய்ந்து எண்ணவொண்ணா சேதாரங்களை விளைவித்தது. ஆங்கு ஒரு ஒலி காதுகளில் விழுந்தது,”அஸ்வத்தாமன் இறந்தான்” குலக்கொழுந்து ஒரே ஒரு வழித் தோன்றல், சர்வ வல்லமையுடையவன், சாவுக்கு அஞ்சாத மாவீரன் அவ்வளவு சுலபமாக மரித்துவிடமாட்டான் என்று அவரது உள்ளம் பேசினாலும், சந்தேகமும் பயமும் துக்கமும் ஒருசேர அவரைச் சிதைக்க ஆரம்பித்தன. “தர்மா! இந்தச் செய்தி உண்மையா?” என விளித்த குருவின் குரலுக்கு மறு மொழியாக அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துபட்டது” என்றான் தருமன். மாயனின் பாஞ்சஸன்யம் பகுதியில் ஒலிக்க யானை இறந்தது என்ற சொற்றொடர் காதுகளுக்குப் புலப்படாமல் நலிந்து  போயிற்று. இமயம் சரிந்தது போன்று துரோணர் கவனம் திரிகையில் தாக்கப்பட்டு வீழ்ந்தார்.

காதால் கேட்டதும் பொய் ஆயிற்று.
-=-=-=-=
வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

வியாசர் எழுதிய மகாபாரதத்தில் காலப்போக்கில் இடைச் செருகலாக நிறையக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படி வரும் கதைகளில் அரவாணிகளைப்பற்றி செய்திகள் உண்டு. திரௌபதிக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் சிகண்டி. பெண்ணாக இருந்தபோதும், ஆண் மாதிரி நினைத்து சிகண்டியை வளர்த்தனர் பெற்றோர். இளவரசன் போன்று உடை அணிவித்து, போர்ப் பயிற்சியும் கொடுத்தார்கள். கிட்டத்தட்டஆணாகவே வளர்க்கப்பட்ட       சிகண்டிக்கு கடைசியில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். உண்மை வெளிப்பட்டுவிடும் என்று பயந்து முதலிரவு சமயத்தில் ஓடிவிட, யாரோ ஒரு கந்தர்வன் தனது ஆண் தன்மையை சிகண்டிக்குக் கொடுத்ததாக ஒரு கதையில் இருக்கிறது. பகவான் கிருஷ்ணர்தான் சிகண்டி மீது பரிதாபப் ப்ட்டு அறுவை சிகிச்சை செய்யவைத்து ஆணாக மாற்றியதாகவும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கதையில் உண்மை இருக்கின்றதோ இல்லையோ அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பழக்கம் அப்போதே இருந்தது என்பதை உணரமுடிகிறது.
    குருக்ஷேத்திரப் போர் ஆரம்பிக்கவேண்டிய நேரம் பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன், ஜோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவன்,"முப்பத்தி இரண்டு லக்ஷணங்களும் பொருந்திய ஒரு ஆண்மகனை அவனது பரிபூர்ண விருப்பத்துடன் களப்பலி கொடுத்துவிட்டு யுத்தத்தை ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்" என்று உரைத்தான்.

    பாண்டவர் தரப்பில் பார்த்தால், மூன்றே மூன்று பேர்தான் இப்படி சர்வ லட்சணங்களும் பொருந்தியவர்களாக இருந்தனர்.
ஒருத்தர் கிருஷ்ணர்... போருக்கு ஆணிவேர். வியூகங்களை வகுத்துத் தரும் பகவானை பலியிட முடியாது. இன்னொருத்தர் அர்ஜுனன். பாண்டவர் படைக்குத் தளபதியே அவன்தான். அவனைப் பலியிட்டுவிட்டுப் போர்நடத்த முடியாது. இவர்களன்றி மூன்றாவது நபர் அரவான். அர்ஜுனனுக்கும், நாக கன்னிகைக்கும் பிறந்த மகன். அவனைக் கண்டு பேச கிருஷ்ணர் எழுந்து புறப்பட்டார்.

    மதியம் நல்ல சுட்டெரிக்கும் வெயில். ஒரு மலைப்பாங்கான இடத்தில் தனிவழியே கிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார். அங்கு திடீரென கர்ஜனை போன்று ஒரு குரல் கேட்டது.

" மாமா! நலமா?. உங்களைத்தான் காண வேண்டும் என நினைத்திருந்தேன்." அரவான் பளிச்சென ஒரு குகையிலிருந்து வெளிப்பட்டான்.

"ஆச்சரியம்!ஆச்சரியம்! உன்னை நாடித்தான் நான் வந்து கொண்டிருக்கின்றேன்" கிருஷ்ணன் கூறினார்.

"ஒருவாராக பாரதப் போரை நிர்ணயித்துவிட்டீர்களே மாமா! என் தோள்கள் தினவெடுக்கின்றன. நான் யாருடன் மோதவேண்டும்?" அதற்கு முன்னர் பாரதப்போரை ஏன் நடத்த விரும்புகின்றீர்கள் என்ற காரணத்தை உங்கள் வாயால் நான் தெரிந்துகொள்ள  ஆசைப்படுகிறேன் மாமா?"  அரவானின் கேள்விக்கு பகவான்    கிருஷ்ணர்  சிரித்தார்.
   
    "' ஏன், தேவரகஸியார்த்தங்கள்' உனக்கும் புலப்பட்டிருக்க வேண்டுமே அரவான்?"

    "அதிருக்கட்டும், மாமா! நீங்கள் என்னை நாடிவந்த   விவரத்தைக் கூறினால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்."

    "உன் விருப்பம் அறிந்து சுத்த வீரனான உன்னை களபலியாக்க விழைகிறேன். அதற்குத் தகுதிபெற்றவரில் நீ சிறந்தவன்." நிஷ்காமிய கர்மத்தை அனுஷ்டிப்பவன் உன்னைத் தவிற வேறு யார் இதற்குத் தகுதி பெற்றவர்?" பகவான் கூறினார்.

    "மாமா! உங்களது வாக்கில் இந்தப் பேறு பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? சங்கல்பம் உங்களுடையது நான் நிறைவேற்றக் கடமைப் பட்டவன். தங்கள் சித்தம் என் பாக்கியம்."  அரவான் கள பலியாக ஒப்புக் கொண்டான்.

    "சரி. இன்னமும் செய்து முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் நிறைய உள்ளன. நான் வருகிறேன்" கிருஷ்ண பகவான் கூறினார்.

    "ஆனால், எனக்கு தங்களிடமிருந்து வரம் ஒன்று பெறத் தடையுளதோ மாமா?" கேட்டான் அரவான்.

    "மிக்க நல்லது. கேள் மகனே!" பகவான்.

    " களபலியாக்கப்பட்ட பின்னர் என் சிரசினைத்  தாங்கும்  வாள் எல்லோராலும் பார்க்கப்படவேண்டும். என் கண்களிலே ஜீவன் இருக்கவேண்டும். பாரதப் போர் முடிவடையும் வரை நான் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க அருள்புரியவேண்டும்." அரவானின் வேண்டு கோளை ஏற்று பகவான் ஆசீர்வதித்து அருள்புரிந்தார்.

    பதினெண் தினங்கள் போர் தொடர்ந்து யுத்த பூமி செம்மை நிறமாய் உதிரப் போர்வை போர்த்து பிணக்குவியலாய்க் காட்சியளித்தது. பூமிபாரம் குறைந்தாற்போல் எங்கும் மயானான அமைதியினைப் போக்கும் இறப்போரின் கூக்குரல்களும் முனகலும் அழுகையும் மிருகங்களின் பேரொலியும் கேட்டன. முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டநாயகன் இப்போரில் யாவர்? எவரின் பேராற்றல் இப்போரினை இறுதியாக முடித்தது? என்பது போன்ற சர்ச்சை பாண்டவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. கண்ணனை நடுவராகவைத்து இந்தப் போரின் நடு நாயகம், வெற்றியின் காவலன் என யாரைக் கொள்ளலாம் எனத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்தனர்.
கண்ணனிடம் கேட்டபோது, அவர் சொன்னார்,
   
     "நான் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தேன்.  என் முழுக்கவனமும் அவனையும் அவனைத் தாக்கியவர்களைப் பற்றியும் மட்டுமே இருந்தது. எனவே முழுமையையும் பார்த்த ஒருவரால் தான் இதற்கு சரியான முகாந்திரம் கூறமுடியும். எனவே கண்விழித்துக் காணும் பாக்கியம் பெற்ற களபலியான சிரேட்டன் அரவானுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவனைக் கேட்கலாம்" என்று தன் கருத்தினைப் பகவான் மெதுவாக முன்வைத்தார்.

    அதிவீர பராக்கிரம வீரர் பெருமக்கள் அரவானின் சிரசின் பக்கம் அழைத்து வரப்பட்டு, பகவானிடம் கேட்கப் பட்ட அந்தக் கேள்வியை அவனிடம் கூறினர். அர்த புஷ்டியாய் அச்சிரசு பலங் கொண்டமட்டும் சிரித்து, " இப்பாரதப் போரில் பங்கு பெற்றோர் பலர். அவரவர் அஸ்திரப் பிரயோகம் அவர்களின் ஆசானின் ஆசிகளுடன் அரங்கேற்றம் பெற்றன. விடுவிக்கப் பட்ட அஸ்திரங்கள் கண்ணுக்குப் புலனாகவில்லை. சக்கரம் ஒன்று ஆடி ஓடி சுழன்றுகொண்டிருக்க, ஒவ்வொரு ஜீவனாக அதை நெருங்கி அதனதன் கபாலத்தை சக்கரத்தில் ஏந்திக்கொண்டிருப்பதைத் தான் .
ஓம்
 
வேறு சில பழமொழிகள்

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
தனிமரம் தோப்பாகாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
தனிமரம் தோப்பாகாது.
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
வாக்கற்றவனுக்கு வாத்தியர் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ்வேலை.

வினோத்-VINOTH

unread,
Jun 22, 2010, 10:08:32 AM6/22/10
to mint...@googlegroups.com

2010/6/22 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

ஓம்.
பழமொழிகள் இழை என்பதால் முன்னர் வந்தபதிவு மீள் பதிவு

நிறைய பழமொழிகளை தெரிந்துகொண்டோம்

மீள்பதிவிற்கு மிக்க நன்றி

வினோத்-VINOTH

unread,
Jun 23, 2010, 12:35:27 PM6/23/10
to mint...@googlegroups.com

venkatachalam Dotthathri

unread,
Jun 23, 2010, 1:46:42 PM6/23/10
to mint...@googlegroups.com
ஓம்இதே பொருளில் வந்தது;

கறந்தபால் மடிப்புகாது.

பள்ளம் நோக்கி வெள்ளம் பாய்கின்றது. கீழ்நோக்கி வீழும் தன்மையுடைய நீரைக் கதிரவன் மேல் நோக்கி இழுக்கிறான்.
ஓம்.
வெ.சுப்பிரமணியன்

2010/6/23 வினோத்-VINOTH <vino...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 23, 2010, 10:17:03 PM6/23/10
to mint...@googlegroups.com

2010/6/23 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

ஓம்இதே பொருளில் வந்தது;

கறந்தபால் மடிப்புகாது.

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்நதுபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாய் மீண்டுபோய் மரம்புகா
இறந்துபோன வன்பிறப்ப தில்லையில்லை இல்லையே.

--சிவவாக்கியர்.

வினோத்-VINOTH

unread,
Jun 24, 2010, 12:36:37 AM6/24/10
to mint...@googlegroups.com

2010/6/23 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

ஓம்இதே பொருளில் வந்தது;

கறந்தபால் மடிப்புகாது.

பள்ளம் நோக்கி வெள்ளம் பாய்கின்றது. கீழ்நோக்கி வீழும் தன்மையுடைய நீரைக் கதிரவன் மேல் நோக்கி இழுக்கிறான்.
ஓம்.
வெ.சுப்பிரமணியன்

நன்றி ஐயா

வினோத்-VINOTH

unread,
Jun 24, 2010, 12:40:22 AM6/24/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்
விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

Hari Krishnan

unread,
Jun 24, 2010, 12:57:50 AM6/24/10
to mint...@googlegroups.com

2010/6/24 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

The Moving Finger writes; and, having writ, 
Moves on: nor all your Piety nor Wit 
Shall lure it back to cancel half a Line, 
Nor all your Tears wash out a Word of it.

RubaiyatOmar Khayyam  

எழுதிச் செல்லும் விதியின்கை
     எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
     சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
     அபயம் அபயம் என்றாலும்
வழுவிப் பின்னால் ஏகியொரு
     வார்த்தை மாற்றம் செய்திடுமோ ?

--கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பு (மேற்படி பாடலுக்கு)

வினோத்-VINOTH

unread,
Jun 24, 2010, 1:25:10 AM6/24/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

2010/6/24 Hari Krishnan <>

2010/6/24 வினோத்-VINOTH <>
விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

The Moving Finger writes; and, having writ, 
Moves on: nor all your Piety nor Wit 
Shall lure it back to cancel half a Line, 
Nor all your Tears wash out a Word of it.

RubaiyatOmar Khayyam  

எழுதிச் செல்லும் விதியின்கை
     எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
     சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
     அபயம் அபயம் என்றாலும்
வழுவிப் பின்னால் ஏகியொரு
     வார்த்தை மாற்றம் செய்திடுமோ ?

--கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பு (மேற்படி பாடலுக்கு)
விளக்கத்திற்கு நன்றி

வினோத்-VINOTH

unread,
Jun 24, 2010, 2:04:47 AM6/24/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்
விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

வினோத்-VINOTH

unread,
Jun 24, 2010, 4:10:00 AM6/24/10
to tamil2...@googlegroups.com, minT...@googlegroups.com

2010/6/24 raja rajan <esena...@gmail.com>
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா...
தீட்டிய  மரத்தில்  பதம் பார்த்தாது போல..  
 
இப்பழமொழிகளுக்கு இணையானது அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

சுவற்றில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு, கன்னமிடுதல் என்று சொல்வதுண்டு..
மின்னல்,வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..
 
நன்றி  மறக்கலாகாது ..என்பதை உணர்த்துவதே , இந்த பழமொழியின் பொருள்.. 

நல்ல விளக்கம்.

வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..

இது புதிய செய்தி
நன்றி ஐயா

Innamburan Innamburan

unread,
Jun 24, 2010, 6:57:47 AM6/24/10
to mint...@googlegroups.com
திரு. ஹரிகி அவர்களின் விளக்கம் பிரமாதம். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இன்னம்பூரான்.

2010/6/24 வினோத்-VINOTH <vino...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 24, 2010, 7:04:43 AM6/24/10
to mint...@googlegroups.com
2010/6/24 வினோத்-VINOTH <vino...@gmail.com>
2010/6/24 raja rajan <esena...@gmail.com>
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா...
தீட்டிய  மரத்தில்  பதம் பார்த்தாது போல..  
 
இப்பழமொழிகளுக்கு இணையானது அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

சுவற்றில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு, கன்னமிடுதல் என்று சொல்வதுண்டு.

எழுதியது யாரா இருந்தாலும் என்ன மன்னிச்சுக்குங்க.  என் புத்தி எடிட்டர் புத்தி.  நைநை என்று பிடுங்கிக்கொண்டே இருக்கும்.  பொறுத்துக் கொள்ளுங்கள்.

‘சுவற்றில்‘  என்ற தவறான வடிவம் எப்படியோ நம் பேச்சிலும் எழுத்திலும் நுழைந்துவிட்டது.  சுவர் என்பது வேர்.  இதை நினைவில் கொண்டால் இல் என்ற உருபைக் கூட்டும்போது சுவரில் என்று ஆகும்.  சுவரில் ஓட்டையிடுவது.  சுவரிருந்தால்தான் சித்திரம்; சுவரின்மேல் சாத்தி வைத்தல்; சுவரை, சுவரால், சுவருக்கு, சுவரின், சுவருடைய....இவை இந்த சொல் எடுக்கக்கூடிய வடிவங்களுள் சில.

மறுபடியும் மன்னிச்சுக்குங்க. :-).

venkatachalam Dotthathri

unread,
Jun 24, 2010, 7:30:51 PM6/24/10
to mint...@googlegroups.com
ஓம்
அன்பார்ந்த ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல.நல்ல தொண்டு.
வாழ்க.
அன்புடன் வெ. சுப்பிரமணியன் ஓம்

2010/6/24 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

வினோத்-VINOTH

unread,
Jun 25, 2010, 4:00:05 AM6/25/10
to tamil2...@googlegroups.com, minT...@googlegroups.com
விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

வினோத்-VINOTH

unread,
Jun 26, 2010, 11:16:31 AM6/26/10
to tamil2...@googlegroups.com, minT...@googlegroups.com

விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

  1. அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  2. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  3. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  4. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

என்ற பல பழமொழிகள் இருக்கும் போது அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
இவ்வாறான பழமொழி ஏன் என்று ரொம்ப யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.

ஏன்.. ஏன்.. ஏன்...

அந்த பழமொழிக்கும் "அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்."
இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth

வினோத்-VINOTH

unread,
Jun 30, 2010, 7:45:09 AM6/30/10
to tamil2...@googlegroups.com, minT...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Jun 30, 2010, 8:17:00 AM6/30/10
to mint...@googlegroups.com
அதாவது, பெண்கள் அறிஞர்கள், ஆண்கள் கல்லார் என்க!
இன்னம்பூரான்

2010/6/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jun 30, 2010, 8:19:39 AM6/30/10
to mint...@googlegroups.com

2010/6/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

அதாவது, பெண்கள் அறிஞர்கள், ஆண்கள் கல்லார் என்க!
இன்னம்பூரான்

இங்கே ஆணாதிக்க வாதிகள் யாருமே இல்லையா
ஐயகோ ஓ ஓ

--

shylaja

unread,
Jun 30, 2010, 8:19:52 AM6/30/10
to mint...@googlegroups.com

2010/6/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

அதாவது, பெண்கள் அறிஞர்கள், ஆண்கள் கல்லார் என்க!
 
இன்னம்பூரான்>>>>>>::):)    குறும்பூரார்!!!!!

2010/6/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விளக்கங்களுக்கு நன்றி

அடுத்து சில  எளிய பழமொழிகள்

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

--
வினோத் கன்னியாகுமரி

http://tamil2friends.com/friends/vinoth

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
***    *******************      *******************
ஷைலஜா

////  

நிலத்தினும் பெரிதே;வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப்பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!

குறுந்தொகை....

நண்பன்

unread,
Jun 30, 2010, 8:23:40 AM6/30/10
to mint...@googlegroups.com
சே - என்ன  ஒரு விளக்கம் , சரியாகச்  சொன்னிர்கள்  அய்யா

2010/6/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
குற்றம் சொல்லின்

சுற்றம் இல்லை

Sathish S

unread,
Jun 30, 2010, 7:57:23 AM6/30/10
to mint...@googlegroups.com, tamil2...@googlegroups.com
நண்பரே...  இதையும் சேர்த்துக்கங்க....

ஆடை பாதி அழகு பாதி

ஆண் தாக்ஷிண்யப் பட்டால் கடன்
பெண் தாக்ஷிண்யப் பட்டால் விபசாரம்

ஆண் பிள்ளை அழுதால் போச்சு; பெண் பிள்ளை சிரிச்சால் போச்சு

ஆடு பகை, குட்டி உறவா

ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்

ஆடிச்சேர் தேடி வரும்

அரைக்கசை ஆயிரம் பொன்னாக்குபவளும் பெண்சாதி
ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குபவளும் பெண்சாதி

Sathish....
sangkavi.blogspot.com

2010/6/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Sathish.....

வினோத்-VINOTH

unread,
Jun 30, 2010, 8:52:37 AM6/30/10
to mint...@googlegroups.com, tamil2...@googlegroups.com
நன்றி நன்றி

2010/6/30 Sathish S <sat1...@gmail.com>

நண்பரே...  இதையும் சேர்த்துக்கங்க....

ஆடை பாதி அழகு பாதி

ஆண் தாக்ஷிண்யப் பட்டால் கடன்
பெண் தாக்ஷிண்யப் பட்டால் விபசாரம்

ஆண் பிள்ளை அழுதால் போச்சு; பெண் பிள்ளை சிரிச்சால் போச்சு

ஆடு பகை, குட்டி உறவா

ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்

ஆடிச்சேர் தேடி வரும்

அரைக்கசை ஆயிரம் பொன்னாக்குபவளும் பெண்சாதி
ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குபவளும் பெண்சாதி

--

Innamburan Innamburan

unread,
Jun 30, 2010, 9:04:44 AM6/30/10
to mint...@googlegroups.com
யான் மெளனம். சொன்னால் விரோதமல்ல. அடிதடி. இருந்தும்:

1. ஆடை குறைந்தாலும், அழகு குறைவதில்லை.

2. ஆண் வி.... பார்த்திருக்கிறீர்களோ?

3. அழுத பிள்ளை பால் குடிக்கும்; பெண்களுக்கு நகையும் நகையே!

4. சிலேடையிலா 'குட்டி'! முதல் அடி உமக்கு!

5.  இது என்ன எறும்பு கர்ப்பமா! யாமறிந்தது கஜகர்ப்பம்!

6. ஆடிச்சேர் அப்றம் ஆப்பு வைக்கும்!

7. சாதி என்ன சாதி? ஆட்டி வைப்பவளை பெண்டாட்டி என்க.

இன்னம்பூரான்

.

2010/6/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>
நன்றி நன்றி

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2010, 9:28:15 AM6/30/10
to mint...@googlegroups.com
கற்றறிந்து அடங்கல் ஆணுக்கும் பெண்னுக்கும் அழகு
பெண்னியல் வாதிகள்
Woman includes man
She includes he
Female in includes male
என்று தெளிந்த ஞானச் செருக்குடன் கூறிவருகிறார்கள்.
நாகராசன்

2010/6/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Hari Krishnan

unread,
Jun 30, 2010, 9:52:54 AM6/30/10
to mint...@googlegroups.com

2010/6/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

யான் மெளனம். சொன்னால் விரோதமல்ல. அடிதடி. இருந்தும்:

1. ஆடை குறைந்தாலும், அழகு குறைவதில்லை.

2. ஆண் வி.... பார்த்திருக்கிறீர்களோ?

ஆண்கள் மறுவிவாகம் செய்துகொள்வதில்லை என்று தீர்மானித்துக்கொண்டால், நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை குறையும் என்று காந்தியடிகள் எழுதியிருந்தார்.  இதைக் கண்டித்து எழுதினான் பாரதி: ஸ்திரி விதவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வழிகேட்டால், புருஷ விதவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார் ஸ்ரீமான் காந்தி’ என்று.  (நினைவிலிருந்து சொல்லப்படுவது - இந்தியாவில் விதவைகளின் பரிதாபமான நினை என்ற தலைப்பிலுள்ள கட்டுரை--இதுவும் நினைவுதான்.)

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

என்று தொல்காப்பியம் சூத்திரமே பேசுகிறது.  மனைவியை இழந்த நிலை தபுதார நிலை.  கணவனை இழந்த நிலை தாபத நிலை.  

(அது சரி....உங்களுடைய வி.... இந்த வி...தானே?   ஏதானும் டான் ஜுவான் (ஹரி, அது டான்வான் அப்படின்னு திருத்தம் வந்ததுன்னா இதை ரெகா படிக்கிறார்னு அர்த்தம்:D), காஸனோவா, கிகாலோ சமாசாரம் ஒண்ணும் இல்லையே...:X)

(இந்த இழையில் ஏகப்பட்ட இழையா இழைகிறது என்பீரேயானால், எழுதறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்வேனாக்கும்.:)) )

வினோத்-VINOTH

unread,
Jun 30, 2010, 11:44:33 AM6/30/10
to mint...@googlegroups.com
நன்றி ஐயா

ஒவ்வொன்றிற்கும் சிறிது விளக்கம் தந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்

2010/6/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

யான் மெளனம். சொன்னால் விரோதமல்ல. அடிதடி. இருந்தும்:

1. ஆடை குறைந்தாலும், அழகு குறைவதில்லை.

2. ஆண் வி.... பார்த்திருக்கிறீர்களோ?

3. அழுத பிள்ளை பால் குடிக்கும்; பெண்களுக்கு நகையும் நகையே!

4. சிலேடையிலா 'குட்டி'! முதல் அடி உமக்கு!

5.  இது என்ன எறும்பு கர்ப்பமா! யாமறிந்தது கஜகர்ப்பம்!

6. ஆடிச்சேர் அப்றம் ஆப்பு வைக்கும்!

7. சாதி என்ன சாதி? ஆட்டி வைப்பவளை பெண்டாட்டி என்க.

இன்னம்பூரான்

வினோத்-VINOTH

unread,
Jul 3, 2010, 1:47:10 AM7/3/10
to mint...@googlegroups.com
அறிஞர்களின் விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

வினோத்-VINOTH

unread,
Jul 3, 2010, 1:47:54 AM7/3/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்
அறிஞர்களின் விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

வினோத்-VINOTH

unread,
Jul 11, 2010, 8:33:39 AM7/11/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

2010/7/3 வினோத்-VINOTH <vino...@gmail.com>

அறிஞர்களின் விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

இந்த பழமொழிக்கும்

உள்ளூரான் பேய்க்கு அஞ்சான், வெளியூரான் தண்ணீருக்கு அஞ்சான்.

இந்த பழமொழிக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா?

எல்லா ஊரிலும் ஏதாவது ஒர மரத்தை பேய் இருக்கிறது என பயம் காட்டி வைத்திருப்பார்கள். அந்த கதைகள் தெரிந்த உள்ளூர்க்காரன் அம்மரத்தின் பக்கத்தில் போக பயப்படுவான்.

இதைப்பற்றி தெரியாத வெளியூர்க்காரனுக்கு எந்த பயமும் இருக்காது..

வெளி ஊரில் இருட்டில்  வரும் போது மயானம் பக்கத்தில் இருந்தாலும் அதைப்பற்றி தெரியாதவருக்கு எந்த பயமும் இருக்காது. அதைப்பற்றி தெரிந்தவருக்கு கொஞ்சம் பயம் தானாகவே வந்துவிடும்.

ஆற்றோரம் பயம் என்பதற்கு என்ன காரணம்? காட்டாறு எப்போது வேண்டும் என்றாலும் தண்ணீர் வரலாம் என்பதாலா?

அவ்வாறு என்றால்
உள்ளூரான் பேய்க்கு அஞ்சான், வெளியூரான் தண்ணீருக்கு அஞ்சான்.

இப்பழமொழி நேர் மாறி அல்லவா இருக்க வேண்டும்.

--

venkatachalam Dotthathri

unread,
Jul 11, 2010, 12:16:08 PM7/11/10
to mint...@googlegroups.com
ஓம்.
”இருந்தால் எழாத ஆணும், படுத்தால் எழாத பெண்ணும்’’

அவையில்  ஒரு சொற்பொழிவு நிகழ்கின்றது; ஒவ்வொருவராகவும் கூட்டமாகவும் வருகிறார்கள். அமரும் போது  பிறருக்கு இடைஞ்சல் இன்றி, வரிசை வரிசையாக அமர்ந்தால் பலரும் பயன்பெறமுடியும். நட்ட நடுவில் ஒருவன் அமர்ந்தால் பின்னர் அவனை எழுந்து மாறி உட்காருமாறு அறிவுறுத்துவர். பெருந்தனக்காரர், முதியவர் என்றால் மரியாதை நிமித்தம் பிறர் அவர்களிடம் பேசக் கூச்சப்படுவர்.எனவே இதைக் கருத்தில் கொண்டு ஆண் உட்காரவேண்டும். உட்கார்ந்த பின்னர் பிறர் வேண்டியபின் எழுந்து உட்காருதல் நாகரிகம் அன்று.இது ஆணுக்கு மட்டுமின்றி மனிதருக்கு என்று பொருள் கொள்ளவேண்டும்.

குலமகள் தன் வீட்டுக் கடமைகள் அனைத்ததையும் செவ்வனே முடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லவேண்டும். வாயில் கதவு பூட்டப்பட்டுள்ளதா, அடுப்பின் நெருப்பு அணைக்கப்பட்டுள்ளதா; மோர் உறை ஊற்றப்பட்டுவிட்டதா போன்றவற்றை படுக்கைக்குச் சென்றபின் நினைந்து எழமாட்டாள்.

 ஒரு பாடல் உண்டு. கீழே தரப்பட்டுள்ளது.

அகல உழுவதில் ஆழ உழுவதே மேல்.
 துல்லியமாகக் கணக்கிட வரவு செலவுகளை எழுதிக் கணக்கிடவேண்டும். எண்சுவடி வாய்பாடுகள் இராகத்துடன் பள்ளிகளில் போதிப்பர். அந்த வாய்பாடுகள் சூத்திர வடிவினதாய் பிறழ்ச்சியின்றி பின்னத்தின் கூறுகள் தொட்டு ஒன்று, பத்து, நூறு என பதின்மங்களாய் கணக்கிட துணை நிற்கும். இன்று கணினியும் கால்குலேட்டரும் வந்துவிட்டன. எனினும் உள்ளீடு செய்ய தக்க அனுபவப் பழக்கம் இருக்கவேண்டும்.

இல்லத்தரசி எதற்கெடுத்தாலும் மாறுபட்ட கருத்துக் கொண்டு அழுது புரண்டு தன் கருத்தை அவள் நிலைநாட்டினால் சாத்தியக் கூறுகள் அலசப் படாமல் இழப்பு நேரலாம்.

உழுது விதையாப் பயிரும்
எழுதிப் பாரான் கணக்கும்,
அழுது பிறண்ட மனையாளும்
கழுதை பிறண்ட களம்.

  நெல் மணிகளை  அறுவடைக் காலத்தில் வைக்கோலில் இருந்து பிரித்து எடுப்பதற்கு முதலில் தலை அடியாகவும், பின்னர் மாடுகளை வரிசையாகப் பிணைத்து மிதிக்கவிடுவார்கள். அது சூட்டடி என்று அழைக்கப்படும். பின்னர் பிரிந்த மணிகளைத் தூற்றுவார்கள். மேலும் முறம் கொண்டு வீசி மெலிதான குப்பை ஒதுங்க நெல் மணிகள் சேகரம் ஆகும். அந்த இடம் களமாகும். கற்பாறை அமைந்த இடங்களில் நெல்மணி மிகவும் சுத்தமாகக் கிடைக்கும்.  பாறை இல்லாத இடங்களில் மண்தரையில் சாணநீர் தெளித்து உலரவிட்டுப் பயன்படுத்துவர்.
அந்தக் களத்தில் க்ழுதை தன் தினவு நீங்க பிறண்டு எழுந்தால் தூய்மை கெட்டு, தரை உதிர்ந்துவிடும். பயன்படாது.

Innamburan Innamburan

unread,
Jul 11, 2010, 7:16:45 PM7/11/10
to mint...@googlegroups.com
பழமொழிகளெல்லாம் முதுமொழிகளலன்று. முதுமொழிகளெல்லாம் நல்மொழிகளன்று. சான்றாக, " ஆண்மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.". ஓம் ஐயா அவர்கள் கூறிய விளக்கத்தின் ஒரு பகுதியில் ஆணவம் பெண்ணியத்தை அடிமையாக்க முயல்கிறது. குலமகளின் கடமை குலமகனுக்குக் கிடையதா? வாயில் கதவு பூட்டப்பட்டதா என்பதை, அந்த வீரயுகப்புருஷனல்லவா பார்க்கவேண்டும்! அழுத புரளும் நிலைக்கு குலமகளை தள்ளி விட்டு, ( பரத்தையர் நோக்கிப் பிரிவது தமிழ் ஆண்மகனின் உரிமை, அதுவும் தலைவியின் பேறு காலத்தில்!), எதுகை மோனைக்காக, அவளை கழுதைக்கு உவமையாகக் கொணரவது, ஆணுக்கு இழுக்கு (பாட்டு இயற்றியதால்), பெண்ணுக்கு இழுக்கு ( குறை கூறுவதால்), கழுதைக்கு இழுக்கு (அந்த விலங்கிற்கு, தன் தினவு நீக்க உரிமை உண்டு, என்பதால்).

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான் 

2010/7/11 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>
--

வினோத்-VINOTH

unread,
Jul 12, 2010, 1:36:37 AM7/12/10
to mint...@googlegroups.com

2010/7/12 Innamburan Innamburan <innam...@googlemail.com>

பழமொழிகளெல்லாம் முதுமொழிகளலன்று. முதுமொழிகளெல்லாம் நல்மொழிகளன்று. சான்றாக, " ஆண்மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.". ஓம் ஐயா அவர்கள் கூறிய விளக்கத்தின் ஒரு பகுதியில் ஆணவம் பெண்ணியத்தை அடிமையாக்க முயல்கிறது. குலமகளின் கடமை குலமகனுக்குக் கிடையதா? வாயில் கதவு பூட்டப்பட்டதா என்பதை, அந்த வீரயுகப்புருஷனல்லவா பார்க்கவேண்டும்! அழுத புரளும் நிலைக்கு குலமகளை தள்ளி விட்டு, ( பரத்தையர் நோக்கிப் பிரிவது தமிழ் ஆண்மகனின் உரிமை, அதுவும் தலைவியின் பேறு காலத்தில்!), எதுகை மோனைக்காக, அவளை கழுதைக்கு உவமையாகக் கொணரவது, ஆணுக்கு இழுக்கு (பாட்டு இயற்றியதால்), பெண்ணுக்கு இழுக்கு ( குறை கூறுவதால்), கழுதைக்கு இழுக்கு (அந்த விலங்கிற்கு, தன் தினவு நீக்க உரிமை உண்டு, என்பதால்).

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான் 

நல்ல கருத்துகள்

பெண்களை மையப்படுத்தி புகழ்வதும் ஆண்கள் தான், தவறை சுட்டுவதும் ஆண்கள் தான்.

கழுதைகளுக்கு மட்டுமல்ல

இரவில் தூங்கும் நாயும் பகலில் தூங்கும் பெண்ணும்

என்பது மற்றொரு ஒப்பிடல்

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 12, 2010, 2:18:42 AM7/12/10
to mint...@googlegroups.com
வினோத்,
 
இப்பழமொழிக்கு ஒரு பாதி பொருள் நீங்கள் கூறுவதுபோல் சரிதான். ஆற்றோரம் பயம் என்பதன் பொருள் தான் வேறாகும்.
 
ஆறு என்பது இங்கே வழியைக் குறிக்கும். அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளைகள் அதிகம். தான் திரும்பிச் செல்லும் வழியில் உள்ள வழிப்பறிக் கொள்ளையர்களை நினைத்து அசலூர்க்காரன் மனதில் பயப்படுவதாகக் கூறுகிறது இப் பழமொழி. ஆற்றோரம் என்பது செல்லும் வழியின் இடது ஓரத்தைக் குறிக்கும்.
 
அன்புடன்,
 
தி.பொ.ச.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லவை செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லவை செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழில் திருத்தங்களைக் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

வினோத்-VINOTH

unread,
Jul 12, 2010, 2:22:27 AM7/12/10
to mint...@googlegroups.com

2010/7/12 திருத்தம் பொன்.சரவணன்
வினோத்,
 
இப்பழமொழிக்கு ஒரு பாதி பொருள் நீங்கள் கூறுவதுபோல் சரிதான். ஆற்றோரம் பயம் என்பதன் பொருள் தான் வேறாகும்.
 
ஆறு என்பது இங்கே வழியைக் குறிக்கும். அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளைகள் அதிகம். தான் திரும்பிச் செல்லும் வழியில் உள்ள வழிப்பறிக் கொள்ளையர்களை நினைத்து அசலூர்க்காரன் மனதில் பயப்படுவதாகக் கூறுகிறது இப் பழமொழி. ஆற்றோரம் என்பது செல்லும் வழியின் இடது ஓரத்தைக் குறிக்கும்.
 
அன்புடன்,
தி.பொ.ச.

சரியான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.
 
அதே சமயம்
உள்ளூரான் பேய்க்கு அஞ்சான், வெளியூரான் தண்ணீருக்கு அஞ்சான்.

இந்த பழமொழி கருத்தில் வேறுபட்டு நிற்கிறதே

--

venkatachalam Dotthathri

unread,
Jul 12, 2010, 6:48:59 PM7/12/10
to mint...@googlegroups.com
ஓம்
உண்மை தான்.உங்கள் கருத்து நன்று.பழமொழிகள் அனைத்தும் சிறந்தவை என்று கொள்ளமுடியாதுதான்.
கேட்டை நட்சத்திரம் ச்ரேஷ்டனுகு ஆகாது,
ஆயில்யத்து மாமியார் ஆசந்தியிலே.
பூசம் நாசம்.
மூலத்து மாமியார் மூலையிலே
என்பன போன்ற பிற்காலத்தில் ஜ்யோதிஷத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் போலும்..

விலங்குகள் தினவு நீக்கிக் கொள்ள பல உத்திகளைக் கொண்டுள்ளன.மின் கம்பத்தில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்
ஸ்டே கம்பியுனூடே எருமை தன் தலையை நுழைத்து கொம்புகளுக்கிடையே உராய்ந்து கொள்ளும்.
வணக்கம்
வெ.சுப்பிரமணியன்,
ஓம்

2010/7/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>

வினோத்-VINOTH

unread,
Jul 29, 2010, 10:39:09 AM7/29/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

ananda rasa thiruma

unread,
Jul 29, 2010, 8:31:00 PM7/29/10
to mintamil
அறப்படித்தவன் என்பதில் ஒரு சொல் விட்டுப் போய் உள்ளது. ஐயம் அறப் படித்தவன் என்பது தொடர். ஐயம் என்னும் சொல் விட்டுப் போயிற்று. இது ஏதோ எழுதியவர் தவறால் நடந்தது அன்று. இது ஓர் இலக்கிய மரபு. அனைத்தையும் சொல்லத் தேவையில்லை. படித்தால் விளங்கிக் கொள்வார்கள் என்பதால் சிலவற்றைச்  சொல்லாமல் விட்டுவிடுவார்கள். இதனைச் சொல்லெச்சம் என்பார்கள்.
பழமொழி விளக்கத்தைக் காணலாம்.
ஒருவன் சந்தைக்குப் (அங்காடி)போகிறான் என்றால் ஒன்று பொருள் வாங்கப் போக வேண்டும் அல்லது விற்கப் போக வேண்டும். அப்படிப் போகிறவன் மிகப் படித்தவனாக இருந்தால் சட்டம் பேசிக் கொண்டு, அல்லது தேவையற்ற விளக்கம் கேட்டுக் கொண்டு தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற மாட்டான்  என்னும் பொருளில் இப்பழ மொழி சொல்லப்படுகிறது.
ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அன்புடன்
ஆராதி

2010/7/29 வினோத்-VINOTH <vino...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jul 30, 2010, 12:13:03 AM7/30/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

---------- Forwarded message ----------
From: ananda rasa thiruma <aara...@gmail.com>
Date: 2010/7/30
Subject: Re: [MinTamil] பழமொழி விளக்கம்
To: mintamil <mint...@googlegroups.com>

அறப்படித்தவன் என்பதில் ஒரு சொல் விட்டுப் போய் உள்ளது. ஐயம் அறப் படித்தவன் என்பது தொடர். ஐயம் என்னும் சொல் விட்டுப் போயிற்று. இது ஏதோ எழுதியவர் தவறால் நடந்தது அன்று. இது ஓர் இலக்கிய மரபு. அனைத்தையும் சொல்லத் தேவையில்லை. படித்தால் விளங்கிக் கொள்வார்கள் என்பதால் சிலவற்றைச்  சொல்லாமல் விட்டுவிடுவார்கள். இதனைச் சொல்லெச்சம் என்பார்கள்.
பழமொழி விளக்கத்தைக் காணலாம்.
ஒருவன் சந்தைக்குப் (அங்காடி)போகிறான் என்றால் ஒன்று பொருள் வாங்கப் போக வேண்டும் அல்லது விற்கப் போக வேண்டும். அப்படிப் போகிறவன் மிகப் படித்தவனாக இருந்தால் சட்டம் பேசிக் கொண்டு, அல்லது தேவையற்ற விளக்கம் கேட்டுக் கொண்டு தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற மாட்டான்  என்னும் பொருளில் இப்பழ மொழி சொல்லப்படுகிறது.
ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அன்புடன்
ஆராதி

venkatachalam Dotthathri

unread,
Jul 30, 2010, 1:21:35 AM7/30/10
to mint...@googlegroups.com
ஓம்

ஓம்.
இணையானா மொழிகள்.
’பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.’

மரங்களின் தன்மை, குணம்  நன்கு தெரிந்தவர்கள் அனுபவத்தாலும் ஆய்வினாலும் சிறந்தவர்கள். ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு மரம் சிறந்த பயன்பாடு. சாதாரண வேலைகளுக்கு சாதாரண மரம் போதுமானது. நுணுக்கமான மரச் சிற்பத்திற்கு தேக்கு.உயர்ந்தது. பண்டரிபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருத்தேர் தயாரித்து விழா எடுக்கும் போது தக்க மரத்தைத் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள். நீரில் நனையும் தன்மை கொண்ட படகுக்குஎனத் தனி மரங்கள் உள்ளன. ’உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு’ என்று ஒரு பழமொழி, படுப்பதற்கான  கட்டில் கடம்ப மரத்தில் செய்தால் நன்கு என்பது அனுபவம்.

இத்தகைய அனுபவ சாலிகளைக் கொண்டு ஏதேனும் சிறிய வேலைகளைச் செய்யச் சொன்னால் அதில் குறைகண்டு எவ்விதப் பணியும் முடிவுறாதுஎன்பது பொருள்.

’ அதிகப் படிச்ச மூஞ்சுறு கழனிப் பானையில் விழும்’
அதிகப் படிச்ச வேட்டை நாய் நீ அடி நான் கடிக்கிறேன் என்னுமாம்.
வேட்டை இருவருடைய பணிக் குறிக்கோள். விலங்கை வேட்டையாடுவதற்கு என்னை விரட்டிச் சூக் காட்டுவதற்குப் பதிலாக முதலின் நீ உன் நீண்ட தடியால் அடி, பின்னர் நான் கடிக்கிறேன் என்னுமாம்.

வெ.சுப்பிரமணியன்
ஓம்

வினோத்-VINOTH

unread,
Jul 30, 2010, 1:33:39 AM7/30/10
to தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com
விளக்கத்தோடு பல புதிய பழமொழிகளையும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி

---------- Forwarded message ----------
From: venkatachalam Dotthathri
Date: 2010/7/30
Subject: Re: [MinTamil] பழமொழி விளக்கம்

Madhurabharathi

unread,
Jul 30, 2010, 1:50:36 AM7/30/10
to mint...@googlegroups.com

2010/7/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விளக்கத்தோடு பல புதிய பழமொழிகளையும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
இதுக்குப் பேர்தாங்க oxymoron. :-)
 
அன்புடன்
மதுரபாரதி

வினோத்-VINOTH

unread,
Jul 30, 2010, 2:10:33 AM7/30/10
to mint...@googlegroups.com

2010/7/30 Madhurabharathi <madhura...@gmail.com>

2010/7/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>
விளக்கத்தோடு பல புதிய பழமொழிகளையும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
இதுக்குப் பேர்தாங்க oxymoron. :-)

எழுதும் போதே கவனித்தேன்.
எனக்கு+இந்த இழைக்கு  அவைகள் புதியவைகள் தானே :)

அதான் புதிய பழமொழி
 
--

venkatachalam Dotthathri

unread,
Aug 1, 2010, 9:30:36 PM8/1/10
to mint...@googlegroups.com
ஓம்
அன்புடையீர்! நலமே நாடுகிறேன்.
நீங்கள் சொல்லும் பொருள்தான் அந்த பழமொழிக்குப் பொருந்தும். சிப்பில் என்னும் வடிகட்டியிலிருந்து நுழைந்த அல்லது தப்பிய சாதம் காடிப்பானையில் சேரும் என்பதுதான் அதன் பொருள்.
காடி என்பது பலநாட்கள் சேகரிக்கப்பட்ட நீராகாரத்தின் தொகுப்பு என்பர். அநேகமாக அனைவர் வீட்டிலும் அந்தக் காடி வைத்திருப்பார்கள். வயிற்றுவலி, நீர் சுருக்கு போன்றவற்றிற்கு ஒரு குவளை காடியுடன் நீர்த்த மோர் சேர்த்து அருந்தக் குணம் கிடைக்கும்.
மேலும் இந்தப் பதிவை அந்தப் பழமொழி விளக்க இடுகையிலேயே இடலாமே.
நன்றி

வெ.சுப்பிரமணியன்
ஓம்
2010/8/1 sharadha subramanian <shara...@yahoo.co.in>

----- Forwarded Message ----
From: sharadha subramanian <shara...@yahoo.co.in>
To: v.dot...@gmail.com
Sent: Sun, 1 August, 2010 4:43:49 PM
Subject: ப்ழ்மொழி விள்க்கம்

வ்ணக்கம் த்ங்கள் மினஞ்சலில் "அதிகம் ப்டித்த் மூஞ்ச்சூறூ காடிப்பானையில் விழுந்த்ததாம்.என்ற்ப்ழமொழிக்கு ம்ற்றோர பொருள்.அதிக்ம் வ்டித்த முன் சேஈறூ காடிப்பானயில் விழும்.அதாவ்து அந்த்க்காலத்தில் சாதம் பானயில் வ்டிப்பாரக்ள்.அப்பொழுது அதிக்மாக் வ்ட்த்த் சாத்ம் மேலே பொங்கி முன்னால் பொங்கி வ்ரும் அதுவே கஞ்சியாக் காடிப்பானைகுள் கொடடிவிடுவரக்ள் இத்ன் திரிபுதான் அந்த் பழ்மொழிமூஞ்சூறு ப்டிக்குமா?

2010/7/29 வினோத்-VINOTH <vino...@gmail.com>

20

--

Aa raa thi

unread,
Aug 2, 2010, 1:28:32 AM8/2/10
to mint...@googlegroups.com
திரு ஓம்
‘அதிகம் படிச்ச மூஞ்சூறு கழனிப் பானையில் விழுமாம்‘
என்பதுதானே பழமொழி, அது காடிப் பானையில் என விளக்கத்தில் மாறியுள்ளதே. கழனிப் பானையும் காடிப் பானையும் வெவ்வேறு அல்லவா? கழனிப் பானை, அரிசி முதலியவற்றைக் கழுவிய தண்ணீரை ஊற்றி வைக்கப்பயன்படும் பானை. இக்கழனித் தண்ணீரைக் கால்நடைகளுக்குக் காலை, மாலையில் புண்ணாக்கு முதலிய வற்றுடன் கலந்து குடிக்கச் செய்வார்கள். காடிப் பானை என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் பொருந்தும்.
அன்புடன்
ஆராதி

2010/8/2 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

venkatachalam Dotthathri

unread,
Aug 3, 2010, 12:15:38 AM8/3/10
to mint...@googlegroups.com
ஓம்
’அதிகப் படிச்ச மூஞ்சூறு கழனிப்பானையில் விழுமாம்’ அது ஒரு சொற்றொடர்.
மூஞ்சுறு பயம் இன்றித்திரியும். மற்றைய எலிகளைப் போன்று விரைந்து மறைந்து ஓடாது. அது விரைந்து ஓடுமானால் அதனைக் கொல்வோரும் இலர். தேவையின்றி, கரவாது இங்கும் அங்கும் ஓடும் மூஞ்சுறு கழனிப்பானையில் விழுவது சாத்தியம். கழனிப்பானை திறந்த வாயுடன் மூடாமல் இருக்கும்.

தற்பெருமைபேசுவோர் (அதிகம் படித்தவர்) விரைவில் தடங்கலில், துன்பத்தில் சிக்குவர் என்பது அதன் பயன்பாடு.

அதிகம் வடித்த முன்சோறு காடிப்பானையில் விழும் என்பது அனுபவ மொழியாகும். சாதம் வடிக்கும் போது பிதுங்கி சிப்பிலில் வழியும் குழைந்த மேற்பரப்பில் அமைந்த வெளி வழிந்த கஞ்சியுடனான சோறு நீராகாரத்துடன் சேகரம் செய்யப்பட்டு காடி என்னும் பெயருடைய மருந்தாகும். தினமும் சேகரம் செய்யப்படும் பலநாள் நீராகாரம் நொதித்தலுடன் இல் அடுகள் போன்று புளித்த சுவையுடன் இருக்கும். அந்தக் காடி வைத்திருக்கும் பானையில் இதரப் பொருள் சேர்வதில்லை. அருந்தும் போதுதான் சற்று உப்பு தேவைப்படின் சேர்த்துக்கொள்வர். கண்ணாடி குப்பியில் சூடாக்கப்பட்ட காடியை ஊற்றி மூடி ஒத்தடம் தந்தால்  உடல் வலி தீரும் மூத்திரம் பிரியும். மலம் இளகும்.

மீந்த அனைத்து உணவுப்பொருள்களும், பருத்திவிதை, பிண்ணாக்கு, தவிடு, கழுநீர் ஆகியவையும் கடைசியாக அடைக்கலம் புகும் இடம் தொழுவத்திலுள்ள காடி என்ற பெயர் கொண்ட அசையாத் தொட்டி.
அன்புடன் வணக்கம்
ஓம். வெ.சுப்பிரமணியன்.

2010/8/1 Aa raa thi <aara...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Aug 8, 2010, 3:42:44 AM8/8/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

நடப்பது நோயற்ற நீண்ட ஆயுளைக்கொடுக்கும் மிகச்சிறந்த உடற்பயிற்சி. அவ்வாறு சிறந்த நலத்துடன் இருப்போர்களுக்கு நாடெங்கும் உள்ள நிறைய பேர்களின் நட்பும் உறவாய் கிடைக்கும். நிறைய இடங்களை சுற்றிப்பார்ப்பதால் நிறைய நண்பர்களும் அனுபவங்களும் கிடைக்கும்.

நடந்தால் என்பதற்கு "நல்ல செயல்கள் நடக்க வேண்டும்" என்றும் பொருள் கொள்ளலாம். நல்ல செயல் நடந்தால் (செய்தால்) நிறைய உறவுகளை சம்பாதிக்க முடியும். அவ்வாறானவர்களை எல்லோரும் உறவுகொண்டாடுவார்கள்.

அதே சமயம் நோயில் படுத்து விட்டால் தாழ்விற்காகக் காத்திருக்கும் பகைவர்களும் நம்மீது பாய்வதோடு மட்டுமல்லாமல் நம் உறவுகளே பகையாகி சுமையாக நினைக்க ஆரம்பித்து விடும்.

மற்றொரு விளக்கம், ஒருவர் சோம்பிப்படுத்துவிட்டாலோ, அல்லது நோயில் அதிகநாள் வீழ்ந்து வி்ட்டாலோ அந்தப்படுக்கையே ( பாய்) அவருக்குப்பகையாகி "படுக்கை காயங்களை" ஏற்படுத்திவிடும். அது பின் முதுகுப்புறம் இரணமாய் வலியைக் கொடுக்கும்.

எனவே,
நடப்போம், நல்ல ஆரோய்க்கியத்தை அடைவோம், நல்ல செயல்களை நடக்க வைப்போம். எந்த கெட்டது நடப்பினும் நம்பிக்கையின்றி சோம்பிப்படுத்துவிட வேண்டாம், வீறுகொண்டு எழுந்து நடப்போம்

வினோத்-VINOTH

unread,
Aug 11, 2010, 10:39:48 AM8/11/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்
பழமொழி விளக்கங்களுக்கு நன்றி

அடுத்த பழமொழி

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்

அது என்ன 64 கணக்கு?
விளக்குங்களேன்

venkatachalam Dotthathri

unread,
Aug 12, 2010, 9:20:17 PM8/12/10
to mint...@googlegroups.com
ஓம்.
இதே வகையில் பொருள் கொண்ட மற்றுமொரு பழமொழி:
“ இருந்தவன் எழுமுன் நடந்தவன் காதம்”

--

வினோத்-VINOTH

unread,
Aug 13, 2010, 3:44:18 AM8/13/10
to mint...@googlegroups.com

13 ஆகஸ்ட், 2010 6:50 am அன்று, venkatachalam Dotthathri <v.dott...@gmail.com> எழுதியது:

ஓம்.
இதே வகையில் பொருள் கொண்ட மற்றுமொரு பழமொழி:
“ இருந்தவன் எழுமுன் நடந்தவன் காதம்”

நன்றி ஐயா
 
--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 13, 2010, 7:26:10 AM8/13/10
to mint...@googlegroups.com
64 அடிகள் = 64 கலைகள்

ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவனாக இருந்தாலும் பொது மக்களிடத்தில் பணிவையே கைக்கொள்ள வேண்டும். சரியா?

அன்புடன்,

தி.பொ.ச.

2010/8/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

வினோத்-VINOTH

unread,
Aug 13, 2010, 9:57:16 AM8/13/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்

13 ஆகஸ்ட், 2010 4:56 pm அன்று, திருத்தம் பொன்.சரவணன் எழுதியது:

64 அடிகள் = 64 கலைகள்

ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவனாக இருந்தாலும் பொது மக்களிடத்தில் பணிவையே கைக்கொள்ள வேண்டும். சரியா?

ஐயா  நானே ஒரு ABCD :)

எனக்குத் தோன்றுவது
1. களைக்கூத்தாடிகள் எத்தனை அடி உயரத்தில் கம்பின் மீது நின்று கூத்தாடினாலும்( சாகசம் செய்தாலும் - Circus )  அதற்குப்பலனான யாசகம்/பரிசுப்பொருளைப்பெற கீழே இறங்கி வந்து தான் ஆகவேண்டும்.

2. எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பணிவுதான் தக்க பலன் தரும்.

3. எந்த உயர்ந்த யோகம் செய்தாலும் கடைசியில் சாந்தியோகம் செய்து முடித்தால் தான் பலன். (முதுகுத்தண்டை ஒப்புநோக்கலாமா? )

ஆனால் இந்த 64 கணக்கு நீங்கள் கூறியபடி 64 கலைகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

--

Hari Krishnan

unread,
Aug 13, 2010, 10:06:53 AM8/13/10
to mint...@googlegroups.com

2010/8/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>

எவள்வுதான் உயரமுள்ள கம்பத்தின்மேல் ஏறிநின்றுகொண்டு வித்தை காட்டினாலும், அப்பா, ஒண்ணை நினைவில் வச்சுக்கோ.  நீ வித்தையில் தேர்ந்தவன்தான்; யாராலும் செய்யமுடியாத காரியத்தைச் செய்பவன்தான்.  எட்ட முடியாத உயரத்தில் நின்று கழைக்கூத்து ஆடுபவன்தான்.  Your acrobatic skills are unmatched.  இருந்தால்கூட, நீ இத்தனைக் காரியத்தையும் செய்வது எதெற்கென்றால் மக்கள் போடறாங்களே காசு, அதற்காகத்தான்.  என்னதான் வித்தை படிச்சவனா இருந்தாலும், பிச்சை (சரி வேணாம், சன்மானம்) வாங்க, பூமிக்கு இறங்கி வந்துதான் ஆகணும்.

கழைக்கூத்தாடிக்கு மட்டுமில்லை.  எல்லாருக்கும் பொருந்தும்.  கலைமகள் அருள் நிரம்பியிருந்தாலும், சபைக்கு வந்தால் சபையின் அளவுக்குத் தக மேலேறியோ கீழிறங்கியோதான் அவையின் அங்கீகாரத்தைப் பெறமுடியும்.  இதைத்தான் அவையறிதல் அதிகாரத்தில் ‘செலச்சொல்லுதல்’என்ற வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

மத்தபடி அறுவத்தி நாலு அடி என்பது, அதிக உயரம் என்பதற்கான குறிப்பே தவிர, அதற்கென்று தனிப்பொருளில்லை.

செலவு தந்தைக்கோர் ஆயிரஞ் சென்றது;
தீது எனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன
நலமோர் எட்டுணையும் கண்டிலேன் இதை
நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்!

என்றான் பாரதி.  ஏன் நாற்பதாயிரம்?  நானூறு போதாதா, நாலு போதாதா இல்ல ஒண்ணு போதாதா?  எங்க வேண்ணாலும் சொல்வேன் அப்படின்னு சொல்லவந்தான்.  எத்தனைக் கோவிலில் வேணுமானாலும் சொல்வேன்னான்.  நாற்பதாயிரம் கோவிலில் சொல்வேன் அப்படின்னு ஒரு வார்த்தையைப் போட்டான்.  ‘நானும் ஆயிரம் வாட்டி சொல்லிட்டேன’ ‘லட்சம் தடவ சொன்னாலும் புரியாத ஒனக்கு’ மாதிரி இந்த அறுவத்துநாலு.  இதுக்குன்னு தனி அர்த்தமில்லை.  கவனமிருக்க வேண்டியது, பூமியில் இறங்கி வந்தாகணும்.  உன்னுடைய பயிற்சி, திறமை, கலை எல்லாவற்றின் உயரமும் ஆகாயத்தைத் தொட்டாலும், உனக்கு அங்கீகாரம் வேண்டுமானால், நீ மக்களுடைய உயரத்துக்கு இறங்கி வந்தாக வேண்டும்....  அவ்ளதான்.  

--
அன்புடன்,
ஹரிகி.
It is loading more messages.
0 new messages