கொங்கை என்றால் மார்பகமா ? ( கம்பராமாயணத்தில் கொங்கை )

1,520 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 27, 2017, 5:13:26 AM2/27/17
to mintamil

கொங்கை என்பது மார்பகமா என்ற புதிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கம்பராமாயணத்தில் கொங்கை பயிலும் இடங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளன.
படித்துவிட்டுக் கருத்து கூறலாம்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Feb 27, 2017, 10:02:55 AM2/27/17
to mintamil
3. இராமன் பார்த்தது மார்பகமா?

நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்இழை நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள் சுடர்மணி தடங்கள் கண்டாள் - கம்ப.ஆரண்.5/4

இதன்பொருள்: தண்டுடைய தாமரைமலர் போன்ற தனது கண்களையும் சக்கரவாளங்கள் தோன்றும் தனது கொங்கைகளையும் நெடிய வில்லினையுடைய இராமன் நோக்கவும் அவனது தோள்களை நோக்கினாள் சீதை.

இப்பாடலில் சீதையின் கொங்கைகளை இராமன் பார்ப்பதாகக் கூறுகிறார் கம்பர். கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், இராமன் சீதையின் மார்பகங்களை நோக்கினான் என்று பொருள்படும். இப்படி ஒரு பொருளில் கூறினால் அது இராமனுக்கும் அழகல்ல; கம்பருக்கும் அழகல்ல. இராமனை இழிவுசெய்யும் நோக்கம் கம்பருக்கு இல்லை என்பதால் இப்பாடலில் வரும் கொங்கை என்பது மார்பகத்தினைக் குறித்து வந்திருக்காது என்பது உறுதி.


------------------



நாமெல்லாம் அந்த வயதை கடந்துதான் வந்திருக்கிறோம் சரவணன் அவர்களே. :-). இப்படியெல்லாம் ராமனை துறவியாக்கிவிடாதீர்கள். 

Innamburan S.Soundararajan

unread,
Feb 27, 2017, 10:06:46 AM2/27/17
to mintamil
அதே! அதே! சபாபதே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Feb 27, 2017, 10:10:49 AM2/27/17
to min tamil
2017-02-27 20:32 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இப்பாடலில் சீதையின் கொங்கைகளை இராமன் பார்ப்பதாகக் கூறுகிறார் கம்பர். கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், இராமன் சீதையின் மார்பகங்களை நோக்கினான் என்று பொருள்படும். இப்படி ஒரு பொருளில் கூறினால் அது இராமனுக்கும் அழகல்ல; கம்பருக்கும் அழகல்ல. இராமனை இழிவுசெய்யும் நோக்கம் கம்பருக்கு இல்லை என்பதால் இப்பாடலில் வரும் கொங்கை என்பது மார்பகத்தினைக் குறித்து வந்திருக்காது என்பது உறுதி.


------------------



நாமெல்லாம் அந்த வயதை கடந்துதான் வந்திருக்கிறோம் சரவணன் அவர்களே. :-). இப்படியெல்லாம் ராமனை துறவியாக்கிவிடாதீர்கள்.

அது மார்பகம்தான்.


இது ஆரண்ய காண்டத்தில்.  திருமணமாகிய பல வருடங்களுக்குப் பிறகு.  மிதிலையில் நுழையும்போதே


நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.

என்று முதல் சந்திப்பிலேயே கம்பர் செய்திருக்கிறார்  (மூலத்தில் இல்லை). 

கொங்கைக்கு வேறுபொருள் இருந்தால், தனத்துக்கும் வேறு பொருள் இருக்கத்தானே வேண்டும்?  புருவம், இமை, மீசை....தாடி...  இல்லாட்டி காசு பணம் துட்டு மனி மனி...
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Feb 27, 2017, 11:01:41 AM2/27/17
to mintamil
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - கம்ப.பால.13/51

இதன் பொருள்: காமன் எய்த அம்பினைப் போல எனது உள்ளத்தில் காமநோய் தோன்றுமாறு எங்கிருந்து எழுந்தது இந்த நிலவு ?. பொலிந்து தோன்றும் இந்த கொங்கையின் மேல் விடம்போலக் கருமை இருப்பினும் இரவில் தோன்றும் நிலவு இல்லை இது; ஏனென்றால் இதில் களங்கம் ஏதுமில்லை. 

இப்பாடலில் கொங்கையினை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர். காமனின் அம்புகளைப் போல இந்த கொங்கை ஆகிய நிலவும் ஒளிவீசி காமநோயினை உண்டாக்கியதாம். இரவிலே தோன்றும் நிலவில் களங்கம் உண்டு. ஆனால் இந்த மங்கையின் கொங்கை ஆகிய நிலவில் களங்கம் ஏதுமில்லை என்கிறார். இப்பாடலில் வரும் கொங்கை என்ற சொல்லுக்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், மார்பகத்தினை நிலவுடன் ஒப்பிடுவதாகப் பொருள்வரும். ஆனால் இந்த ஒப்புமை பொருந்தாத ஒன்றாகும். காரணம், நிலவு ஒளிவீசும் தன்மையது; ஆனால் மார்பகம் ஒளிவீசாது. ஒப்புமை பொருந்தாமல் போவதுடன் பாடலின் நயமும் பொருளும் பொருத்தமற்றுப் போவதால் இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு ' மார்பகம் ' என்ற பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது. 

-------------------------------------------


அக்காலத்தில் மனமானது இதயத்தில் இருப்பதாக கருதபட்டதால் தான் இதயத்தை துளைத்து செல்லும் அம்பு காதலின் சின்னமாக கருதபட்டது

ஆக சீதையின் இதயத்தை மன்மதன் அம்பு துளைத்ததாக இங்கெ கருதலாம்

இங்கே குறிப்பிடப்படுவதும் மார்பு தானே ஒழிய கண்கள் அல்ல

செல்வன்

unread,
Feb 27, 2017, 11:03:48 AM2/27/17
to mintamil
2. கண்ணீர் கோக்குமா மார்பகத்தில்?

வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப
உண்டுகொலாம் அருள் என்கண் உன்கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் - கம்ப.அயோ.3/10

இதன் பொருள்: வண்டுகள் ஒலிக்கும் மாலையணிந்த தசரதனின் வாய்மொழி கேட்ட கைகேயி தனது அகன்ற கண்கள் ஆர்ப்பரித்துக் கொங்கைகளில் நீர்கோத்திட என்மேல் உங்கள் அன்பு இருந்தால் அன்று நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன வரங்களை இன்று எனக்குக் கொடுங்கள் என்றாள்.

இப்பாடலில் கைகேயின் கண்கள் ஆர்ப்பரித்துக் கொங்கைகளில் கண்ணீர் கோப்பதாகச் சொல்கிறார் கம்பர். இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், கைகேயியின் கண்ணீர் அவளது மார்பகத்தில் கோப்பதாகப் பொருள்வரும். இது தவறான பொருளென்று அனைவரும் அறிவோம். காரணம், யாருக்கும் கண்ணீர் கண்களில்தான் கோக்குமே அன்றி அவரது மார்பகங்களில் கோப்பதில்லை. எனவே இப்பாடலில் வரும் கொங்கை என்ற சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது.


----------------------------------------------------------------------


கண்ணில் பெருகிய நீர் வடிந்து மார்பில் வீழ்ந்ததாக குறிப்பிடுகிறார் கம்பர். மார்பில் கண்ணீர் கோர்த்ததாக கூறவில்லை

Oru Arizonan

unread,
Feb 27, 2017, 12:45:38 PM2/27/17
to mintamil
2017-02-27 3:13 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

//கொங்கை என்பது மார்பகமா என்ற புதிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கம்பராமாயணத்தில் கொங்கை பயிலும் இடங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளன.
படித்துவிட்டுக் கருத்து கூறலாம்.//
 
நல்லதொரு விளக்கம்.
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 27, 2017, 11:49:18 PM2/27/17
to mintamil
2017-02-27 20:32 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நாமெல்லாம் அந்த வயதை கடந்துதான் வந்திருக்கிறோம் சரவணன் அவர்களே. :-). இப்படியெல்லாம் ராமனை துறவியாக்கிவிடாதீர்கள். 

செல்வன், எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக எழுதக்கூடாது.

ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவரது கண்களைப் பார்ப்பதுதான் பண்பாடு.

அதைவிடுத்து, அவரது மார்பகம், இடுப்பு, அல்குல் என்று பார்ப்பது காமுகனின் செயல்.

இராமன் கண்ணியவானா இல்லை காமுகனா?

ஒரு கேள்வி.

நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசும்போது அவரது முகத்தைப் பார்த்துப் பேசுவீர்களா இல்லை

அவரது மார்பகம், இடுப்பு, அல்குல் என்று பார்த்துப் பேசுவீர்களா?

ட்ராக் மாற்றாமல் நேர்மையாகப் பதில் கூறுங்கள்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 27, 2017, 11:54:29 PM2/27/17
to mintamil

2017-02-27 20:40 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.

என்று முதல் சந்திப்பிலேயே கம்பர் செய்திருக்கிறார்  (மூலத்தில் இல்லை). 

கொங்கைக்கு வேறுபொருள் இருந்தால், தனத்துக்கும் வேறு பொருள் இருக்கத்தானே வேண்டும்?  புருவம், இமை, மீசை....தாடி...  இல்லாட்டி காசு பணம் துட்டு மனி மனி...

கொங்கைக்கு என்ன பொருளோ அதேதான் தனத்துக்கும். கட்டுரையில் வந்திருக்கிறதே. :))

சீதை ராமனின் கண்களை நோக்குகிறாள். அதேபோல்
ராமன் சீதையின் கண்களை நோக்குகிறான்.

தாக்கு அணங்கு என்ற சொல்லே இதற்குச் சாட்சியாக இருக்கிறதே.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 27, 2017, 11:58:52 PM2/27/17
to mintamil

2017-02-27 23:15 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
நல்லதொரு விளக்கம்.
அன்புடன்,
ஒரு அரிசோனன்

மிக்க நன்றி அரிசோனன் ஐயா. :)))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 12:05:53 AM2/28/17
to mintamil

2017-02-27 21:33 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கண்ணில் பெருகிய நீர் வடிந்து மார்பில் வீழ்ந்ததாக குறிப்பிடுகிறார் கம்பர்.

கோத்தல் என்பதற்கு வடிதல், வீழ்தல் என்ற பொருள் அகராதிகளில் இருக்கிறதா காட்டுங்கள்.

மறுப்பு கூறும்முன்னால் தயவுசெய்து கொஞ்சம் ஹோம்வொர்க் செய்யுங்கள் செல்வன்.

யாரோ சொன்னாங்கனு போடக்கூடாது. அத எல்லாம் படிச்சுட்டுத்தான் இத எழுதுறேன்.


--
அன்புடன்,

செல்வன்

unread,
Feb 28, 2017, 12:08:32 AM2/28/17
to mintamil

2017-02-27 22:49 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
செல்வன், எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக எழுதக்கூடாது.

ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவரது கண்களைப் பார்ப்பதுதான் பண்பாடு.

அதைவிடுத்து, அவரது மார்பகம், இடுப்பு, அல்குல் என்று பார்ப்பது காமுகனின் செயல்.

இராமன் கண்ணியவானா இல்லை காமுகனா?


காமுகர்கள் எல்லாம் கண்ணியவான்களாக தாராளமா இருக்கலாம் சரவணன் ஜி

ஆனாலும் இப்படி அநியாயம் பண்னகூடாது, சரியா? :-)

கல்யாணம் ஆகாத வயதில், நீங்கள் இளங்கலை வகுப்புகளுக்கு சென்ற சமயத்தை நினைவு கூருங்கள். அப்போது நீங்கள் எப்படி இருந்தீர்கள்? சன்யாசியாகவா, சராசரி மாணவராகவா? :-)

அதுபோல தான் இளமைபருவத்தில் ராமன் அழகான சீதையை கண்டவுடன் என்ன நடந்தது என்பதை கம்பர் விளக்குகிறார்....அதை ரசிக்கவேண்டுமே ஒழிய இப்படி ஆராய்ச்சி செய்யகூடாது :-)

ஒரு கேள்வி.

நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசும்போது அவரது முகத்தைப் பார்த்துப் பேசுவீர்களா இல்லை

அவரது மார்பகம், இடுப்பு, அல்குல் என்று பார்த்துப் பேசுவீர்களா?


ராமன் ஒன்றும் அப்போது சீதையை பார்த்து பேசவெல்லாம் இல்லை சரவணரே

சீதை மாடியில் நிற்க கீழிருந்தபடி அவளை காண்கிறான். அவ்வளவுதான்

ஒருவரிடம் நேருக்கு நேர் பேசுகையில் நான் மட்டுமல்ல, எல்லாரும் கண்ணியமாக தான் உரையாடுவார்கள்.

ஆனால் ராமன் இங்கே நேருக்கு நேர் உரையாடவில்லையே? சும்மா சைட் தான் அடிக்கிறான்

நீங்கள் காலேஜில் சைட் அடித்தது , ஜொள்ளுவிட்டது எல்லாம் கிடையாதா? :-)



--

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 1:31:54 AM2/28/17
to min tamil

2017-02-28 10:24 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
கொங்கைக்கு என்ன பொருளோ அதேதான் தனத்துக்கும். கட்டுரையில் வந்திருக்கிறதே. :))

மிக்க நன்று.  அப்படியெல்லாம் பொருள் சொல்வது தங்களுடைய விருப்பம்.  கட்டுரையில் வந்திருக்கிறது என்ற ஒரே தகுதி மட்டுமே அந்தக் கருத்தை ஏற்கப் போதுமானதன்று. 




--
அன்புடன்,

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 1:33:15 AM2/28/17
to min tamil

2017-02-28 10:38 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அதைவிடுத்து, அவரது மார்பகம், இடுப்பு, அல்குல் என்று பார்ப்பது காமுகனின் செயல்.

இராமன் கண்ணியவானா இல்லை காமுகனா?


காமுகர்கள் எல்லாம் கண்ணியவான்களாக தாராளமா இருக்கலாம் சரவணன் ஜி

ஆனாலும் இப்படி அநியாயம் பண்னகூடாது, சரியா? :-)

கல்யாணம் ஆகாத வயதில், நீங்கள் இளங்கலை வகுப்புகளுக்கு சென்ற சமயத்தை நினைவு கூருங்கள். அப்போது நீங்கள் எப்படி இருந்தீர்கள்? சன்யாசியாகவா, சராசரி மாணவராகவா? :-)

தன் மனைவியின் மார்பகத்தைப் பார்ப்பவன் காமுகன் என்ற பேருண்மையை அறிந்துகொண்டேன். 

திருமதி திருத்தம் இதை ஒப்புக்கொள்வாரேயாயின் சம்மதமே.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 1:42:50 AM2/28/17
to mintamil

2017-02-28 12:01 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
மிக்க நன்று.  அப்படியெல்லாம் பொருள் சொல்வது தங்களுடைய விருப்பம்.  கட்டுரையில் வந்திருக்கிறது என்ற ஒரே தகுதி மட்டுமே அந்தக் கருத்தை ஏற்கப் போதுமானதன்று. 

ராமன் கொங்கையைப் பார்த்தான் என்று கூறும் நீங்கள் இதற்கும் பதில் கூறுங்கள்.

1. சீதையின் மார்பகம் மறைக்கப்பட்டிருந்ததா இல்லையா?

2. மறைக்கப்பட்டிருந்தால் அதில் பார்க்க என்ன இருக்கிறது?

3. திறந்திருந்தது என்று நீங்கள் சொன்னால் மேற்கொண்டு பேசலாம்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 1:46:00 AM2/28/17
to mintamil

2017-02-28 12:03 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தன் மனைவியின் மார்பகத்தைப் பார்ப்பவன் காமுகன் என்ற பேருண்மையை அறிந்துகொண்டேன். 

மனைவியின் மார்பகத்தைப் பார்ப்பவன் காமுகன் அல்ல. ஆனால்

அப்படிப் பார்த்ததை எல்லோருக்கும் கூறுபவன் ஒழுக்கம் கெட்டவன்.

இங்கே ராமன் மார்பகத்தைப் பார்த்தான் என்று கூறும் நீங்கள் அதில் சக்கரவாளங்கள் எப்படி வந்தன என்பதையும் விளக்குங்களேன்.
--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 1:52:51 AM2/28/17
to min tamil

2017-02-28 12:15 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
மனைவியின் மார்பகத்தைப் பார்ப்பவன் காமுகன் அல்ல. ஆனால்

அப்படிப் பார்த்ததை எல்லோருக்கும் கூறுபவன் ஒழுக்கம் கெட்டவன்.

இங்கே ராமன் மார்பகத்தைப் பார்த்தான் என்று கூறும் நீங்கள் அதில் சக்கரவாளங்கள் எப்படி வந்தன என்பதையும் விளக்குங்களேன்.

உங்களுக்கு விளக்கத் தேவையே இல்லை.  நீங்கள் சொல்வது மட்டும்தான் சரி.  எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே மடையர்கள். 


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 1:56:11 AM2/28/17
to mintamil

2017-02-28 12:22 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
உங்களுக்கு விளக்கத் தேவையே இல்லை.  நீங்கள் சொல்வது மட்டும்தான் சரி.  எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே மடையர்கள். 

ஹரியண்ணா, எந்த ஆசிரியரும் மடையரல்ல. அவர்க்கு என்ன தெரியுமோ அதைச் சொல்லித் தருகிறார். அதற்காக அது எல்லாம் உண்மையாகி விடாது.

மார்பகத்திற்கும் சக்கரவாளத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரிந்துகொள்ளவே விரும்புகிறேன்.

சினம் தணிந்து அருள் கூர்க. :))

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 2:09:44 AM2/28/17
to min tamil

2017-02-28 12:26 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஹரியண்ணா, எந்த ஆசிரியரும் மடையரல்ல. அவர்க்கு என்ன தெரியுமோ அதைச் சொல்லித் தருகிறார். அதற்காக அது எல்லாம் உண்மையாகி விடாது.

மார்பகத்திற்கும் சக்கரவாளத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரிந்துகொள்ளவே விரும்புகிறேன்.

அந்தக் காட்சியை முழுக்கப் படித்திருந்தால் பொருள் விளங்கியிருக்கும்.  யானை நடப்பதைப் பார்த்த சீதை ராமனுடைய நடையைப் பார்க்கிறாள்; அன்னம் நடப்பதைப் பார்த்த ராமன் சீதையின் நடையைப் பார்க்கிறான்.  இரண்டு சக்கரவாளப் பறவைகள் வந்தமர்வதைப் பார்த்த ராமன் சீதையின் மார்பகத்தைப் பார்க்கிறான்.  அவ்வளவேதான்.  அவை கச்சணிந்தவைதான்.  கச்சணிந்த மார்புக்கும் வெறும் மார்புக்கும் வேறுபடுத்தப்பட்ட தனித்தனிச் சொற்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.  கவி இங்கே சொல்வதை வைத்துப் பார்த்தால் அவை கச்சணிந்த மார்புகள்தாம்.  இதில் ஐயத்துக்கிடமில்லை.

இதற்கான வைமுகோ உரை மூன்றாம் தொகுதி, சூர்ப்பணகைப் படலம் 163ம் பக்கத்தில் உள்ளது.  இணையப் பிரச்சினையால் என்னால் இணைக்க முடியவில்லை. 

குறிப்பிட்ட பாடலுக்கு வைமுகோ உ. 




வைமுகோ தனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறார்.  சரவணருக்குத் தெரிந்தது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன்.  தங்களுடைய அறிவுத்திறத்தை எடுத்துச் சொல்லியமைக்கு மிக்க நன்றி.
--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 2:25:09 AM2/28/17
to mintamil

2017-02-28 12:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இரண்டு சக்கரவாளப் பறவைகள் வந்தமர்வதைப் பார்த்த ராமன் சீதையின் மார்பகத்தைப் பார்க்கிறான்.  அவ்வளவேதான். 

ஹரியண்ணா, வைமுகோவோ வைகோவோ யாரையும் நாம் இழுக்கவேண்டாம். நாமாகப் பேசுவோம்.

முதல்வரியில் தாமரை போன்ற சீதையின் கண்களைக் காணும் இராமன்

உடனே சக்கரவாளப் பறவைகளைப் பார்க்கிறானா அடுத்து சீதையின் மார்புகளைப் பார்க்கிறானா?

என்ன இது ஒரு தொடர்பே இல்லாமல் ?. உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது?

சீதையின் அழகிய கண்களை இராமனுக்குப் பிடிக்கவில்லையா என்ன?

தோள் கண்டார் தோளே கண்டார் என்பது தானே உண்மை.?

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 2:31:17 AM2/28/17
to min tamil

2017-02-28 12:55 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஹரியண்ணா, வைமுகோவோ வைகோவோ யாரையும் நாம் இழுக்கவேண்டாம். நாமாகப் பேசுவோம்.

முதல்வரியில் தாமரை போன்ற சீதையின் கண்களைக் காணும் இராமன்

உடனே சக்கரவாளப் பறவைகளைப் பார்க்கிறானா அடுத்து சீதையின் மார்புகளைப் பார்க்கிறானா?

என்ன இது ஒரு தொடர்பே இல்லாமல் ?. உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது?

சீதையின் அழகிய கண்களை இராமனுக்குப் பிடிக்கவில்லையா என்ன?

தோள் கண்டார் தோளே கண்டார் என்பது தானே உண்மை.?

உயர்திரு சரவணன் அவர்களே,

அம்பிகாபதியைப் பறிகொடுத்த கம்பனாய என்னுடைய மனநிலையில் இதற்குள் நுழைந்ததே தவறு. 

மன்னித்துவிடுங்கள்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 2:51:12 AM2/28/17
to mintamil
2017-02-28 13:01 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
உயர்திரு சரவணன் அவர்களே,

அம்பிகாபதியைப் பறிகொடுத்த கம்பனாய என்னுடைய மனநிலையில் இதற்குள் நுழைந்ததே தவறு. 

மன்னித்துவிடுங்கள்.

அன்பின் ஹரியண்ணா

உங்களை ஒத்துக்கொள்ளச் செய்வதற்காக இதை எழுதவில்லை.

உங்களைத் தொந்திரவு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 2:51:56 AM2/28/17
to min tamil

2017-02-28 13:01 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
உயர்திரு சரவணன் அவர்களே,

அம்பிகாபதியைப் பறிகொடுத்த கம்பனாய என்னுடைய மனநிலையில் இதற்குள் நுழைந்ததே தவறு. 

மன்னித்துவிடுங்கள்.

Inline images 1

இதற்கிடையில் இணையச் சிக்கல் தீர்ந்து குறிப்பிட்ட பக்கத்தை இணைக்க முடிந்தது.

வைமுகோ சொல்லும் உரை இது. 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 4:07:09 AM2/28/17
to mintamil
2017-02-28 13:21 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இதற்கிடையில் இணையச் சிக்கல் தீர்ந்து குறிப்பிட்ட பக்கத்தை இணைக்க முடிந்தது.

வைமுகோ சொல்லும் உரை இது. 

இணைப்பிற்கு நன்றி ஹரியண்ணா. வைமுகோ அவர்கள் :

கண்களைப் போல இரட்டையாக உள்ள சக்கரவாகப் பறவைகள் தாமரை மலரில் உறைவதைக் கண்டு....

என்று கூறுகிறார். அப்படியென்றால், சக்கரவாகங்களைக் கண்டதும் இணையாக உள்ள கண்கள் தானே இராமனுக்கு நினைவுக்கு வரவேண்டும். ஏன் சீதையின் மார்பகங்கள் நினைவுக்கு வருகிறது?

நெருடலாக இல்லையா?. ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். அப்புறம் உங்கள் பாடு.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 9:08:57 AM2/28/17
to mintamil
ஹரியண்ணா

கம்பராமாயணத்தில்
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி

என்று தான் இருப்பதாக அறிகிறேன். ஆனால் வைமுகோ ஐயா அவர்களின் உரையில்

நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அனைய நேமி

என்று வருகிறது. ஒரு எழுத்தால் பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள். இது என்ன பாடபேதமா?

சத்தியமா நான் திருத்தலீங்கணா. விட்ருங்கோ. :)))

Hari Krishnan

unread,
Feb 28, 2017, 9:25:54 AM2/28/17
to min tamil
2017-02-28 19:38 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அனைய நேமி

என்று வருகிறது. ஒரு எழுத்தால் பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள். இது என்ன பாடபேதமா?

இரண்டு பாடங்களும் இருக்கின்றன.  அசஞா பதிப்பிலும், ஜெர்மனியின் யூனிகெல்ன் (தட்டச்சுத் தேடலுக்கானது) பதிப்பிலும் 'அமைய' என்ற பாடம் இருக்கிறது; வைமுகோ பதிப்பில் அனைய என்ற பாடம் இருக்கிறது.

கம்பனில் பாடபேதம் யாரும் அறியாத ஒன்றன்று.  பாடபேதம் இல்லாத பாடல் ஒன்றே ஒன்றைக்கூட என்னால் காணவியலவில்லை என்று வ சுப மாணிக்கம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  ஏதோ வைமுகோ அவர்கள் திருத்தியிருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துவது சரியில்லை.

சத்தியமா நான் திருத்தலீங்கணா. விட்ருங்கோ. :)))

விட்டுவிட்டேன்.


--
அன்புடன்,

துரை.ந.உ

unread,
Feb 28, 2017, 9:56:28 AM2/28/17
to Groups



2017-02-27 15:43 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:


--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 10:03:21 AM2/28/17
to mintamil
துரை ஐயா

படம் சூப்பரு. :)) ஆனா ஒன்னுமே புரியல. :((

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

செல்வன்

unread,
Feb 28, 2017, 10:06:03 AM2/28/17
to mintamil

2017-02-28 0:45 GMT-06:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
மனைவியின் மார்பகத்தைப் பார்ப்பவன் காமுகன் அல்ல. ஆனால்

அப்படிப் பார்த்ததை எல்லோருக்கும் கூறுபவன் ஒழுக்கம் கெட்டவன்.


கம்பராமாயணத்தை எழுதியது ராமன் அல்ல

கம்பன் :-)

சரவணன் அவர்களே,

கம்பன் பரமபாகவதன். ஆனால் அவன் பக்தியை எல்லாம் தான்டி ராமாயணத்தை ஒரு காவியமாகவும், ராமனை காப்பியநாயகனாகவும், சீதையை காப்பியநாயகியாகவும் உருவகித்தே கம்பன் இக்காவியத்தை இயற்றினான்.

அதனால் தான் தான் தாயாக கருதிய சீதையின் அழகை ஒரு எழுத்தாளனாக வர்ணிக்க அவனால் இயன்றது.

கம்பன் என்ற எழுத்தாளனை தாண்டி கம்பன் என்ற ராமபக்தனின் பக்தி காப்பியம் நெடுக எட்டிபார்க்கவே செய்கிறது. ஆனால் அதில் பக்தியை விட இலக்கியமும், கவிதையழகுமே நம் மனதை அதிகம் கொள்ளை கொள்கின்றன

இதை உனர்ந்தால் இப்படி எல்லாம் கேள்விகள் வராது


--

Maravanpulavu K. Sachithananthan

unread,
Feb 28, 2017, 5:24:00 PM2/28/17
to மின்தமிழ், minT...@googlegroups.com
1700 ஆண்டுகளுக்கு முன்னர்
பேயுருக் கொண்ட காரைக்காலம்மையார் தன் கொங்கை வற்றியதாகச் சொல்கிறார், 
கொங்கை திரங்கி 11002001. 

1400 ஆண்டுகளுக்கு முன்னர்
திருஞானசம்பந்தர் ஆகக் குறைந்தது 19 இடங்களில், 
திருநாவுக்கரசர் ஆகக் குறைந்தது 8 இடங்களில், 

1200 ஆண்டுகளுக்கு முன்னர்
சுந்தரர் ஆகக் குறைந்தது 6 இடங்களில், 

1100 ஆண்டுகளுக்கு முன்னர்
மாணிக்கவாசகர் ஆகக் குறைந்தது 26 இடங்களில், 
9ஆம் திருமுறையில் ஆகக் குறைந்தது 3 இடங்களில், 
திருமூலர் ஆகக் குறைந்தது 9 இடங்களில், 

1000 ஆண்டுகளுக்கு முன்னர்
11ஆம் திருமுறையில் ஆகக் குறைந்தது 40 இடங்களில், 

800 ஆண்டுகளுக்கு முன்னர்
சேக்கிழார் ஆகக் குறைந்தது 10 இடங்களில் 
எனப் பன்னிரு திருமுறையில் ஆகக் குறைந்தது 117 இடங்களில் கொங்கை என்ற சொல் காரைக்காலம்மையாரை அடியொற்றி வந்ததைக் காணவும் வேண்டுகிறேன். 

500 ஆண்டுகளுக்கு முன்னர் 
சிவஞான சித்தியார் 003 பரபக்கம் உலகாயதன் மதம் பாடல் 19 இலும் கூறியதை நோக்குக.

முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் சொன்னவை, 
சந்தள றேறுத டங்கொள்கொங்கை 01004005
வாரார் கொங்கை 01025002, 01072002
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கை 01046002
வாரொடுங்குங் கொங்கை 01050008
நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை 01126002
ஏந்து கொங்கையாள் 01090006
சூதகஞ்சேர் கொங்கை = சூது ஆடு கருவி போன்ற தனபாரங்கள் 01066002
வாருறு கொங்கை 01107004

இவ்வாறாகக் காலந் தோறும் கொங்கை என்ற சொல்லுக்குப் பொருள் கொண்டவாறு பார்க்க.

On Monday, 27 February 2017 15:43:26 UTC+5:30, திருத்தம் பொன். சரவணன் wrote:

கொங்கை என்பது மார்பகமா என்ற புதிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கம்பராமாயணத்தில் கொங்கை பயிலும் இடங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளன.
படித்துவிட்டுக் கருத்து கூறலாம்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Feb 28, 2017, 5:42:34 PM2/28/17
to மின்தமிழ், minT...@googlegroups.com
பன்னிரு திருமுறையில் எங்கெல்லாம் கொங்கை என்ற சொல் வருகின்ற இடங்கைளக் குறிக்கும் பாட்டு முதற் குறிப்புத் தந்தேன். 
வை ஆகக் குறைந்த இடங்கள். 
வேறு இடங்கலிலும் வரலாம். 
இறுதி வரி சிவஞானசித்தியார் பாட்டு முதற்குறிப்பு.
திருமுறை எண், பதிக அல்லது பாடற்தொகுதி எண், தலைப்பு, பாடல் எண் என்பன தந்தேன். 
தவறுகள் என்னுடையன. நன்றி

1 . 004 திருப்புகலியும் திருவீழிமிழலையும் 5 . சந்தள றேறுத  
1 . 025 திருச்செம்பொன்பள்ளி 2 . வாரார் கொங்கை  
1 . 046 திருவதிகைவீரட்டானம் 2 . அரும்புங் குரும்பையு  
1 . 050 திருவலிவலம் 8 . நீரொடுங்குஞ் செஞ்சடையாய்  
1 . 126 திருக்கழுமலம் 2 . பிச்சைக்கே யிச்சித்துப்  
1 . 072 திருக்குடந்தைக்காரோணம் 1 . வாரார்கொங்கை மாதோர்பாக  
1 . 090 திருப்பிரமபுரம் 6 . பாந்த ளார்சடைப்  
1 . 066 திருச்சண்பைநகர் 2 . சூதகஞ்சேர் கொங்கையாளோர்  
1 . 107 திருக்கொடிமாடச்செங்குன்றூர் 4 . வாருறு கொங்கைநல்ல  
2 . 004 திருவான்மியூர் 6 . போது லாவிய  
2 . 101 திருவாரூர் 4 . அஞ்சுமொன்றி யாறுவீசி  
2 . 109 திருக்கோட்டூர் 2 . பங்க யம்மலர்ச்  
2 . 058 திருக்குடவாயில் 1 . கலைவாழு மங்கையீர்  
2 . 095 திருவரசிலி 3 . கங்கை நீர்சடை    
3 . 024 திருக்கழுமலம் 11 . கருந்தடந் தேன்மல்கு  
3 . 075 திருச்சண்பைநகர் 11 . வாரின்மலி கொங்கையுமை  
3 . 106 திருவலஞ்சுழி 2 . காரணி வெள்ளை  
3 . 074 திருத்தேவூர் 2 . கோளரவு கொன்றைநகு  
3 . 100 திருத்தோணிபுரம் 1 . கரும்பமர் வில்லியைக்  
4 . 024 திருவதிகைவீரட்டானம் 6 . வணங்குகொப் பளித்த  
4 . 055 திருவலம்புரம் 7 . செங்கயல் சேல்கள்  
4 . 064 திருவீழிமிழலை 7 . சந்தணி கொங்கை  
4 . 066 திருநாகேச்சரம் 8 . போகமார் மோடி  
4 . 100 திருவின்னம்பர் 3 . சுணங்குநின் றார்கொங்கை  
5 . 022 திருக்குடமூக்கு 3 . நங்கை யாளுமை   
6 . 004 திரு அதிகை வீரட்டானம் 10 . எழுந்ததிரை நதித்திவலை  
6 . 098 பொது 3 . வாராண்ட கொங்கையர்சேர்  
7 . 006 திருவெண்காடு 5 . குடமெ டுத்து  
7 . 006 திருவெண்காடு 8 . குரவு கொன்றை  
7 . 024 திருமழபாடி 10 . ஏரார் முப்புரமும்  
7 . 025 திருமுதுகுன்றம் 4 . மங்கையொர் கூறமர்ந்தீர்  
7 . 069 வடதிருமுல்லைவாயில் 7 . மணிகெழு செவ்வாய்  
7 . 087 திருப்பனையூர் 5 . கொங்கை யார்பல  
8 . 02 திருவாசகம்-கீர்த்தித் திருவகவல் 1 . தில்லை மூதூர்  
8 . 05 திருச்சதகம் 75 . வணங்கும் நின்னை  
8 . 06 நீத்தல் விண்ணப்பம் 2 . கொள்ளேர் பிளவக  
8 . 06 நீத்தல் விண்ணப்பம் 27 . கொழுமணி யேர்நகை  
8 . 06 நீத்தல் விண்ணப்பம் 46 . உழைதரு நோக்கியர்  
8 . 07 திருவெம்பாவை 13 . பைங்குவளைக் கார்மலரால்  
8 . 07 திருவெம்பாவை 19 . உங்கையிற் பிள்ளை  
8 . 09 திருப்பொற்சுண்ணம் 8 . வாள்தடங் கண்மட  
8 . 09 திருப்பொற்சுண்ணம் 10 . முத்தணி கொங்கைகள்  
8 . 09 திருப்பொற்சுண்ணம் 14 . சங்கம் அரற்றச்  
8 . 14 திருவுந்தியார் 11 . ஆட்டின் தலையை  
8 . 01 இயற்கைப் புணர்ச்சி 4 . அகல்கின்ற வல்குற்  
8 . 01 இயற்கைப் புணர்ச்சி 10 . அளவியை யார்க்கு  
8 . 01 இயற்கைப் புணர்ச்சி 13 . கோங்கிற் பொலியரும்  
8 . 02 பாங்கற்கூட்டம் 5 . சேணிற் பொலிசெம்பொன்  
8 . 02 பாங்கற்கூட்டம் 27 . கோலத் தனிக்கொம்ப  
8 . 02 பாங்கற்கூட்டம் 28 . நீங்கரும் பொற்கழற்  
8 . 08 நாணநாட்டம் 3 . செந்நிற மேனிவெண்  
8 . 12 சேட்படை 19 . குவவின கொங்கை  
8 . 16 உடன்போக்கு 8 . மெல்லியல் கொங்கை  
8 . 18 வரைபொருட்பிரிதல் 18 . சுணங்குற்ற கொங்கைகள்  
8 . 24 பொருள் வயிற்பிரிவு 20 . மயின்மன்னு சாயலிம்  
8 . 25 பரத்தையிற் பிரிவு 3 . அப்புற்ற சென்னியன்  
8 . 25 பரத்தையிற் பிரிவு 8 . தணியுறப் பொங்குமிக்  
8 . 25 பரத்தையிற் பிரிவு 29 . தேன்வண் டுறைதரு   
9 . 007 திருவிடைக்கழி 2 . இவளைவார் இளமென்  
9 . 013 கங்கைகொண்ட சோளேச்சரம் 10 . அங்கைகொண் டமரர்  
9 . 029 கோயில் 8 . சேலும் கயலும்  
10 . 209 இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி 22 . வாரணி கொங்கை  
10 . 319 மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம் 7 . பரியங்க யோகத்துப்  
10 . 405 நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் 5 . தாளணி நூபுரம்  
10 . 408 நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் 37 . மங்கையும் மாரனுந்  
10 . 413 நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 51 . வைத்திடும் பொன்னுடன்  
10 . 413 நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 58 . பரந்த கரம்இரு  
10 . 413 நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 75 . உகந்தனள் பொன்முடி  
10 . 413 நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் 76 . பச்சை இவளுக்குப்  
10 . 721 ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம் 9 . பார்த்திட்டு வையப்   
11 . 006 பொன்வண்ணத் தந்தாதி 32 . மங்கைகொங் கைத்தடத்   
11 . 002 காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம் 1 . கொங்கை திரங்கி  
11 . 006 பொன்வண்ணத் தந்தாதி 16 . காரணன் காமரம்  
11 . 006 பொன்வண்ணத் தந்தாதி 49 . செப்பன கொங்கைக்குத்  
11 . 007 சேரமான்பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக்கோவை 1 . விரிகடல் பருகி  
11 . 007 திருவாரூர் மும்மணிக்கோவை 10 . இருள்புரி கூந்தலும்  
11 . 007 திருவாரூர் மும்மணிக்கோவை 22 . அழகுறு கிண்கிணி  
11 . 007 திருவாரூர் மும்மணிக்கோவை 16 . பட்டோர் பெயரும்  
11 . 007 திருவாரூர் மும்மணிக்கோவை 29 . ஆயினஅன் பாரே  
11 . 008 திருக்கைலாய ஞானஉலா 65 . கொங்கைமாப் பொங்கக்  
11 . 008 திருக்கைலாய ஞானஉலா 101 . அங்கை கமலம்  
11 . 008 திருக்கைலாய ஞானஉலா 116 . கொங்கையும் வாண்முகமு  
11 . 008 திருக்கைலாய ஞானஉலா 178 . கொங்கையாள் கோலங்கட்  
11 . 010 திருஈங்கோய்மலை எழுபது 37 . கோங்கின் அரும்பழித்த  
11 . 010 திருஈங்கோய்மலை எழுபது 45 . தடங்குடைந்த கொங்கைக்  
11 . 010 திருஈங்கோய்மலை எழுபது 67 . வளர்ந்த இளங்கன்னி  
11 . 011 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 13 . நெறிதரு குழலி  
11 . 016 போற்றித் திருக்கலிவெண்பா 8 . வெற்பன் மடப்பாவை  
11 . 022 சிவபெருமான் திருவந்தாதி 88 . குருகிளவேய்த் தோள்மெலியக்  
11 . 023 சிவபெருமான் திருவந்தாதி 43 . மலையார் கலையோட  
11 . 023 சிவபெருமான் திருவந்தாதி 54 . வாரணிந்த கொங்கை  
11 . 024 சிவபெருமான் திருமும்மணிக்கோவை 24 . தாரிளங் கொன்றைநல்  
11 . 024 சிவபெருமான் திருமும்மணிக்கோவை 8 . உடைதலையின் கோவை  
11 . 029 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 16 . வையார் மழுப்படை  
11 . 029 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 54 . தேடுற் றிலகள்ள  
11 . 029 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 88 . வரங்கொண் டிமையோர்  
11 . 029 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 73 . துணையொத்த கோவையும்  
11 . 034 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 19 . பந்தார் அணிவிரற்  
11 . 034 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 56 . புனத்தெழு கைம்மதக்  
11 . 034 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 60 . கார்அங்(கு) அணைபொழிற்  
11 . 035 ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 10 . விடந்திளைக் கும்அர  
11 . 036 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 28 . கதிர்மதி நுழையும்  
11 . 036 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 30 . குருந்தும் தரளமும்  
11 . 037 ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை 119 . பேரிளம்பெண் ஈறாகப்  
11 . 038 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 15 . மங்கை யிடத்தர  
11 . 038 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 30 . மாறி லாத  
11 . 039 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 1 . பூவார் திருநுதல்மேல்   
12 . 00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் 282 . பிள்ளைமைப் பருவ  
12 . 00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் 277 . இதற்குமுன் எல்லை  
12 . 00 திருமலைச் சருக்கம் 2. திருநாட்டுச் சிறப்பு 58 . வாச நீர்குடை  
12 . 24 காரைக்காலம்மையார் புராணம் 63 . ஆலங்கா டதனில்  
12 . 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 150 . இழைத்த டங்கொங்கை  
12 . 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 154 . பொங்கு கொங்கையிற்  
12 . 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 969 . சீரின் மன்னிய  
12 . 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 1103 . ஏர்கெழு மார்பிற்  
12 . 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 1104 . காமவேள் என்னும்  
12 . 33 சோமாசிமாற நாயனார் புராணம் 6 . பணையும் தடமும்  
சிவஞான சித்தியார் பரபக்கம் - உலகாயதன் மதம் 19 . மதிநிலா நுதலா  

Oru Arizonan

unread,
Feb 28, 2017, 10:59:50 PM2/28/17
to mintamil
நீண்ட நாள்களுக்குப்பிறகு தங்கள் ஓடுபடத்தைக்கண்டு மகிழ்ந்தேன், துரை அவர்களே!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 28, 2017, 11:26:10 PM2/28/17
to mintamil

2017-03-01 3:54 GMT+05:30 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
1700 ஆண்டுகளுக்கு முன்னர்
பேயுருக் கொண்ட காரைக்காலம்மையார் தன் கொங்கை வற்றியதாகச் சொல்கிறார், 
கொங்கை திரங்கி 11002001. 

மறவன்புலவு ஐயா அவர்களுக்கு

வணக்கம். தாங்கள் மிகவும் மெனக்கெட்டு நிறைய பாடல்வரிகளை பக்தி இலக்கியங்களில் இருந்து எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

ஆனால், நீங்கள் எனது ஆய்வுக் கட்டுரைகளை நன்கு கவனித்திருப்பீர்கள் என்றால் ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனது கட்டுரைகளில் பக்தி இலக்கியங்களில் இருந்து எதனையும் மேற்கோள் காட்டி இருக்க மாட்டேன்.

காரணம், பக்தி இலக்கியம் என்பது மதம் சார்ந்தது; மனித நம்பிக்கை சார்ந்தது. பலர் இறைவனை நம்புவதில்லை; பலருக்கு இறைவனே வேறு.

இதனால் தான் நான் எனது கட்டுரைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த கருத்துக்களையும் ஆதாரங்களாகக் காட்டுவதில்லை. அனைவருக்கும் பொதுவாக உள்ள இலக்கியங்களையே இலக்கிய இடங்களையே பெரிதும் காட்டுவேன்.

சிவனுக்கு மூன்று கண், நெற்றிக்கண், எட்டு தோள், பன்னிரெண்டு கை முருகனுக்கு, விட்டுணுவுக்கு நீலமேனி என்று இதுபோல பலவித கற்பிதங்கள் பக்தி இலக்கியங்களில் உண்டு. இவை அனைத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும் தனிப்பட்ட முறையில். ஆனால் ஆய்வு என்று வரும்போது இவற்றைத் தவிர்த்து விடுவதே என் வழக்கம்.

மீண்டும் நன்றி ஐயா உங்கள் உழைப்புக்கு.
Reply all
Reply to author
Forward
0 new messages