கண்ணீர் அஞ்சலி

130 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Aug 23, 2010, 3:02:10 AM8/23/10
to mint...@googlegroups.com

சிறு வயதிலே ஏற்பட்ட விபத்தின் காரணமாய் இடுப்புக்குக் கிழேயுள்ள உடலில் பாகங்கள் எவையும் இயங்காது ஒரு கை மட்டும் செயல்படும் நிலையில் இருந்த போதிலும் தன் இறுதி மூச்சுள்ளவரை உழைதே வாழ வேண்டும் எனும் உறுதியுடன் செயல்பட்டு வந்த நம் இனிய நண்பர் அந்தோனி முத்து சிறிது நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்தார் எனும் துயரமான செய்தியை கனத்த இதயத்துடன் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

சில மாதங்களாக என்னால் நிர்வகிக்கப்படும் இணையதளங்களான மழலைகள்.காம் http://www.mazhalaigal.com/ , ப்ராமின் டுடே http://www.brahmintoday.org/ , எடுகேஷனல் சர்வீஸ்.நெட் http://www.educationalservice.net/ ஆகியவற்றின் செய்தித் தொகுப்பைத் தயாரிக்கும் பணியை அவர் செய்து வந்தார். அவர் ப்ளாக் எனும் வலைத்தள அமைப்பில் மிகவும் சிறந்து விளங்கியதையறிந்து, என்னைத் தொடர்பு கொண்ட ஹரண் எனும் கிருத்தவ அன்பர் ஒருவர் தயாரித்த
கீர்த்தனை இசைத் தட்டிலுள்ள ஒலி ஒளி வடிவப் பாடல் தொகுப்பை வெளியிடவென்று கேட்டதற்கிணங்க அப்பணியை அந்தோனி முத்துவிடம் ஒப்புவித்தேன். அவரும் தளத்தை மிகவும் சிறப்புடன் அமைத்துவிட்டார். அத்தளம் கீழே:

http://keerthanaiharann.blogspot.com/

அந்தோனி முத்துவின் வலைத்தளம்:

http://positiveanthonytamil.blogspot.com/p/positive-anthony-ve-anthony.html

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவரது மருத்துவச் செலவுக்கு உதவிகளைப் பெறும் நோக்குடன் எனது சில நண்பர்களை அணுகிய நிலையில் அவர் இறைவனடி சேர்ந்தார். தன் இறுதி வேண்டுதலாக இனிமேல் அவருக்கு உதவ விரும்புபவர்கள் அவரைப் போல் உடல் ஊனமுற்ற பிறருக்கு அவ்வுதவியைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் இறக்கும் தருவாயிலும் பிற உயிர்களுக்காக இரங்கும் இறைக்குணம்
நிறைந்த நம் அன்பர் அந்தோனி முத்துவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவரது நினைவாக உடல் ஊனமுற்றோருக்கு நம்மால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்வோம்.

ஆகிரா




Madhurabharathi

unread,
Aug 23, 2010, 3:13:18 AM8/23/10
to mint...@googlegroups.com
அதிர்ச்சியாக இருக்கிறது. சொற்கள் வழியிலேயே அடைத்து நிற்கின்றன.
 
இந்த ஆண்டு ஜனவரி தென்றல் இதழில் அவரைப் பேட்டி கண்டு எழுதியிருந்தோம்.
 
அவரது தன்னம்பிக்கையும் புதியனவற்றைச் செய்யவும், கற்கவும் அவர் காட்டிய உற்சாகமும் எங்களை அசர வைத்தன.
 
நாம் எந்த வகையிலேனும் குறைந்தவர் என்பதாகத் தாழ்வு மனப்பான்மை கொண்ட எவரும் அவரது நேர்காணலை வாசிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அது ஒரு டானிக்தான்.
 
அந்த உயர்ந்த மனிதருக்கு, மனித நேயருக்கு, நல்ல ஆன்மாவுக்கு என் அஞ்சலி.
 
அவரைப் பற்றிய தென்றல் கட்டுரை இதோ: பாசிடிவ் அந்தோனி
 
அன்புடன்
மதுரபாரதி

2010/8/23 AKR Consultants <akrcons...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

jmms

unread,
Aug 23, 2010, 3:30:15 AM8/23/10
to mint...@googlegroups.com


வாழ்க்கையில் கடினமாக போராடினாலும் சிரித்த முகத்தோடு  மற்றவருக்கு முன்னுதாரணமாய் இருந்தவர் .

அந்தோணியின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்...


கண்ணீரோடு

--
சாந்தி

 Forgive everyone everything.

http://punnagaithesam.blogspot.com/ =============================

‎"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader." ~ John Quincy Adams


venkatachalam Dotthathri

unread,
Aug 23, 2010, 5:52:36 AM8/23/10
to mint...@googlegroups.com
ஓம்
மறைந்த மேதை அந்தோணி அவர்களின் இழப்பினைத் தாங்கவொண்ணா , அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் தம் ஆன்மா இறவனிடம் சாந்தி பெறுவதாகுக.
வெ.சுப்பிரமணியன், ஓம்.

2010/8/23 jmms <jmms...@gmail.com>

ஆராதி

unread,
Aug 23, 2010, 7:33:46 PM8/23/10
to mintamil
மறைந்த அந்தோணியின் குடும்பத்தார்க்கும், அவர்தம் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆராதி

2010/8/23 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 23, 2010, 8:38:30 PM8/23/10
to mint...@googlegroups.com
அவரின் குடும்பத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இன்னம்பூரான்

2010/8/24 ஆராதி <aara...@gmail.com>

N. Ganesan

unread,
Aug 23, 2010, 9:33:35 PM8/23/10
to மின்தமிழ்

On Aug 23, 4:52 am, venkatachalam Dotthathri <v.dotthat...@gmail.com>
wrote:


> ஓம்
> மறைந்த மேதை அந்தோணி அவர்களின் இழப்பினைத் தாங்கவொண்ணா , அவர் தம்
> குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் தம் ஆன்மா இறவனிடம் சாந்தி
> பெறுவதாகுக.
> வெ.சுப்பிரமணியன், ஓம்.
>

என்னால் ஆன சிறு உதவியைச் செய்துள்ளேன்.

நண். அந்தோணி முத்து காலமாகிவிட்டார் என்பது
சோகமயமான செய்தி.

நா. கணேசன்

> 2010/8/23 jmms <jmmsan...@gmail.com>


>
>
>
>
>
> > வாழ்க்கையில் கடினமாக போராடினாலும் சிரித்த முகத்தோடு  மற்றவருக்கு
> > முன்னுதாரணமாய் இருந்தவர் .
>
> > அந்தோணியின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்...
>
> > கண்ணீரோடு
>
> > --
> > சாந்தி
>
> >  Forgive everyone everything.
>
> >http://punnagaithesam.blogspot.com/=============================
>
> > ‎"If your actions inspire others to dream more, learn more, do more and
> > become more, you are a leader." ~ John Quincy Adams
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages